Home அவனின் மஞ்சத்தில் தேன்மொழிஅவனின் மஞ்சத்தில் தேன்மொழி CH 132

அவனின் மஞ்சத்தில் தேன்மொழி CH 132

by Thenaruvi Tamil Novels

அத்தியாயம் 132 ‌

அர்ஜுன் கிளம்பி சென்றவுடன் கொஞ்சம் இறுக்கமான முகத்துடன் டைனிங் டேபிளில் அமர்ந்து சாப்பிட்டு கொண்டு இருந்த தேன்மொழி. அதை கவனித்த விஜயா “ஏன் ஒரு மாதிரி இருக்க? மாசமா இருக்க புள்ள நல்லா சாப்பிட வேணாமா? கண்டதை யோசிக்காம சாப்பிடறதுல கவனத்தை வைத்து சாப்பிடு.” என்று தன் மகளுக்கு அட்வைஸ் வழங்க, அனைத்தையும் கவனித்துக் கொண்டு இருந்த ஜானகி “உனக்கு ஜூலி இங்க இருக்கிறதுனால uncomfortable-ஆ இருக்கா மா? அப்படி ஏதாவது இருந்தா சொல்லு. அந்த பொண்ணை பக்கத்துல எதாவது வீடு பார்த்து தங்க வச்சுக்கலாம். அவள பாத்துக்குறதுக்கு ஆளுங்க இருக்காங்களே.. அவங்க இங்க இருந்து பாத்துக்குறதுக்கு  அதுக்கு அங்கேயே போய் பாத்துக்கட்டும். அதுல என்ன டிஃபரென்ஸ் இருக்க போகுது?” என்று கேட்டாள்.

உடனே சாப்பிடுவதை நிறுத்திவிட்டு ஜானகியை நிமிர்ந்து பார்த்த தேன்மொழி “சேச்சே‌… அப்படி எல்லாம் ஒன்னும் இல்ல அத்தை. அவங்க இங்க இருக்கிறதுனால எனக்கு ஏன் uncomfortable-ஆ இருக்க போகுது? அன்னைக்கு அவங்க மட்டும் அர்ஜுனை காப்பாத்தலைனா, அவருக்கு என்ன ஆயிருக்கும்னு யோசிச்சா எனக்கு இப்ப கூட பயமா இருக்கு. அவங்க நமக்கு எவ்வளவு பெரிய ஹெல்ப் பண்ணிருக்காங்க! இந்த சிச்சுவேஷன்ல அவங்கள நம்ம தனியா விடுறது ரொம்ப தப்பு. என்னால முடிஞ்ச அளவுக்கு நானும் அவங்க கூட இருந்து அவங்கள பாத்துக்கணும்னு தான் நான் நினைக்கிறேன்.‌” என்றாள்.

“பரவால்ல, ஜூலி அர்ஜுன் கூட பழகுறது புடிக்கலைன்னா கூட, தேனு பொறுப்பா பொறுமையா இருக்கா.” என்று நினைத்து சந்தோஷப்பட்ட ஜானகி “உனக்கு எந்த பிராப்ளமும் இல்லைன்னா ஓகே தான் மா‌. என் ஃபிரண்டு ஒருத்தி gynecologist-ஆ இருக்கா. நான் அவ கிட்ட உன்ன பத்தி சொன்னேன்.

அவ பிரக்னண்டா இருக்குற பொண்ணுங்க ஒவ்வொரு மாசமும் எப்படி இருக்கணும், எந்த மாதிரி டிரஸ் பண்ணனும், குழந்தையோட குரோத் நல்லா இருக்குறதுக்கு எந்த மாதிரி மியூசிக் கேட்கணும்ன்னு ஒரு பெரிய லிஸ்ட்டே பிரிப்பேர் பண்ணி வச்சிருக்கா. இதுக்கு முன்னாடி நம்ம வீட்ல லிண்டா, ஜனனி, சியா எல்லாருமே அதை ஃபாலோ பண்ணாங்க. அதான் இப்ப வளர்ந்ததுக்கு அப்புறம் ‌குழந்தைங்க ரொம்ப ஆக்டிவா இருக்காங்க. நீ அப்புறமா ஃப்ரீயா இருக்கும்போது என் ரூமுக்கு வா. நான் உனக்கு அந்த நோட்ஸ் கொடுக்கிறேன். உனக்கு ஏதாவது டவுட்னா என் கிட்ட கேளு.” என்றாள்.

“ஓகே அத்தை, ஜூலி கிட்ட இப்ப வரைக்கும் நான் எதுவுமே பேசல. நான் அவங்கள போய் பாத்துட்டு அப்புறமா வரேன்.” என்று தேன்மொழி ஜானகியிடம் சொல்லிக் கொண்டு இருக்க, நடக்கும் அனைத்தையும் கவனித்துக் கொண்டிருந்த விஜயா “நானெல்லாம் மாசமா இருக்கும்போது ஒன்பதாவது மாசம் வரைக்குமே வெளிய போய் எல்லா கஷ்டமான வேலையையும் செஞ்சிட்டு தான் இருந்தேன்.  ஆனா இந்த பணக்கார வீட்ல எந்த அளவுக்கு தாங்கு தாங்குன்னு தங்குறாங்க! என் பொண்ணு இப்படித் தான் வாழணும்னு ஆசைப்பட்டேன். அந்த கடவுள் என் ஆசையை நிறைவேத்தி வச்சிட்டாரு. எந்த கஷ்டமும் இல்லாம என் பிள்ளைங்க எப்பயும் சந்தோஷமா இருக்கணும்.” என்று நினைத்தாள்.

நான் சொன்னதைப்போல சாப்பிட்டு முடித்துவிட்டு ஜூலி தங்கி இருக்கும் ரூமிற்கு கதவை தட்டிவிட்டு உள்ளே சென்றாள் தேன்மொழி. இங்கே இருந்து அவளை கவனித்துக் கொள்வது மட்டும் தான் தங்களுடைய வேலை என்பதால் அங்கே ஒரு பெண் டாக்டரும், இரண்டு செவிலியர்களும் இருந்தார்கள். தேன்மொழியை பார்த்தவுடன் நக்கலாக புன்னகைத்த ஜூலி “நான் இங்க வந்த உடனே முதல் வேலையா கண்டிப்பா நீங்க என்னை பார்க்க வருவீங்கன்னு நினைச்சேன் தேன்மொழி. நான் Expect பண்ண மாதிரியே கரெக்டா வந்துட்டீங்க. Nice to meet you!” என்றாள்.

“nice to meet you too Miss Julie! பட் நான் உங்கள இந்த கண்டிஷன்ல பார்ப்பேன்னு கொஞ்சம் கூட எதிர்பார்க்கல. I hope everything will be alright soon.” என்று அவளைப் பார்த்து சொன்ன தேன்மொழி டாக்டரை பார்த்து “இங்க இவங்களுக்கு தேவையானது எல்லாத்தையும் அரேஞ்ச் பண்ணிட்டீங்களா? எல்லாம் கரெக்டா இருக்கா? ஏதாவது வேணும்னா நீங்க தாராளமா என் கிட்ட கேட்கலாம். நான் உங்களுக்கு அரேஞ்ச் பண்ணி கொடுக்கிறேன்.”  என்று சொன்னால்.

“Thanks for asking Mrs Arjun. Already லிண்டா மேடமும், அர்ஜுன் சாரும் எல்லாத்தையும் அரேஞ்ச் பண்ணி கொடுத்துட்டாங்க. Further-ஆ ஏதாவது தேவைப்பட்டா கண்டிப்பா நாங்க உங்ககிட்ட கேட்கிறோம்.” என்று அந்த டாக்டர் பெண்மணி சொல்ல, “ஓகே டாக்டர், இங்க பக்கத்துல இருக்க கெஸ்ட் ரூம்ல நீங்க ஸ்டே பண்ணிக்கோங்க. நைட் டைம்ல நடுவுல ஒரு தடவ ஜூலி எப்படி இருக்காங்கன்னு வந்து செக் பண்ணிக்கோங்க. ஜூலி கூட பக்கத்துல இங்க ஒரு பெட் அரேஞ்ச் பண்றேன். யாராவது ஒரு நர்ஸ் மட்டும் இங்க அவங்க கூட நைட் ஸ்டே பண்ணிக்கோங்க. நீங்க உங்களுக்குள்ள shift டைமிங்ஸ் என்னன்னு டிஸ்கஸ் பண்ணிகோங்க.” என்றாள் தேன்மொழி.

டாக்டரும் அங்கிருந்த இரண்டு செவிலியர்களும் உடனே கோரசாக மரியாதையுடன் “ஓகே மேம், தேங்க்ஸ்!” என்றார்கள். “நீங்க என்ன நினைச்சு வந்தாலும், உன்னால அர்ஜுன் கிட்ட ஒட்டிக்க முடியாது. இப்பயும் எப்பயும் நான் தான் மிஸ்ஸஸ் அர்ஜுன்.” என்று சொல்லாமல் சொல்வதைப்போல தேன்மொழி பெருமையுடன் ஜூலியை பார்க்க, “ரொம்ப ஆடாத தேன்மொழி. நீ ஒரு சாதாரண லோ கிளாஸ் பொண்ணு.‌ உனக்கே இவ்ளோ இருக்குன்னா, நான் born with golden spoon. உனக்கு எல்லாம் அர்ஜுன் பக்கத்துல சும்மா நிக்கிறதுக்கு கூட தகுதி இல்ல. நீ மிஸஸ் அர்ஜுனா இருக்கிறத பெருமைப்படுறியா? அந்த பொசிஷன்ல உன்னால ரொம்ப நாளைக்கு இருக்க முடியாது.

Maybe அர்ஜுனுக்கு ‌என் மேல ஃபீலிங்ஸ் இல்லாம கூட இருக்கலாம். பட் இப்ப நான் என் உயிர  பனையம் வச்சு அவனை காப்பாத்திருக்கேன். அதை அவன் எப்பயும் மறக்க மாட்டான். அட்லீஸ்ட் அதுக்காகவாவது அவன் என் கிட்ட நார்மலா பேச ட்ரை பண்ணுவான். அந்த ஒரு சின்ன கேப் போதும். சிம்பதி கிரியேட் பண்ணி உனக்கும் அவனுக்கும் நடுவுல நான் வந்துருவேன்.” என்று நினைத்த ஜூலி வில்லத்தனமாக அவளைப் பார்த்து புன்னகைத்தாள்.

இவளிடம் பேச வந்துவிட்டு உடனே வெளியில் சென்றால் நன்றாக இருக்காது என்று நினைத்த தேன்மொழி அவளுக்கு அருகில் இருந்த சேரில் சென்று அமர, உடனே மற்றவர்களை பார்த்த ஜூலி “நான் இவங்க கிட்ட பர்சனலா பேசணும். If you don’t mind, நீங்க எல்லாரும் வெளிய வெயிட் பண்றீங்களா?” என்று கேட்டாள். “Sure mam!” என்று சொல்லிவிட்டு டாக்டர் வெளியேற, அவளைத் தொடர்ந்து இரண்டு செவிலியர்களும் கூட வெளியில் சென்றார்கள்.

“என் கிட்ட நீங்க ஏதாவது பேசணும் இல்ல கேட்கணும்னு நினைக்கிறீங்களா தேன்மொழி?” என்று ஒரு அர்த்தத்துடன் ஜூலி அவளைப் பார்த்து கேட்க, “Oh.. yeah! நான் ஆக்சுவலி உங்களுக்கு தேங்க்ஸ் சொல்ல தான் இங்கே வந்தேன். அர்ஜுன் மேல அந்த giant size chandelier light விழுக்க போறதை பாக்கும்போது எனக்கு ஒரு செகண்ட் என்ன பண்றதுனே தெரியல.

அவருக்கு ஏதாவது ஆயிடுமோன்னு ரொம்ப பயந்துட்டேன். நீங்க திடீர்னு எப்படியோ நல்ல வேலையா நடுவுல போய் அர்ஜுன காப்பாத்திட்டீங்க. காப்பாத்த போன உங்களுக்கே இவ்ளோ அடி. அர்ஜுன் மேல மட்டும் அந்த chandelier ஸ்ட்ரைட்டா விழுந்திருந்தா, கடவுளே.. என்னால அதை நினைச்சு கூட பாக்க முடியல. நீங்க என் ஹஸ்பண்ட்டை காப்பாத்தி எங்களுக்கு பெரிய ஹெல்ப் பண்ணிருக்கீங்க. உங்களுக்கு கண்டிப்பா ஸ்பெஷலா ஏதாவது பண்ணி தேங்க்ஸ் சொல்லனும்னு எனக்கு தோணுது. உங்களுக்கு என்ன வேணும்னு கேளுங்க! கண்டிப்பா நான் உங்களுக்கு உடனே அரேஞ்ச் பண்ணி கொடுக்கிறேன். பட் உங்களுக்கு நாங்க என்ன செஞ்சாலும், எத்தனை தடவை தேங்க்ஸ் சொன்னாலும் நீங்க எங்களுக்கு பண்ண ஹெல்ப்புக்கு அது கண்டிப்பா ஈடாகாது.” என்று தேன்மொழி உணர்ச்சிவசப்பட்டு சொன்னாள்.

உடனே அவளைப் பார்த்து நக்கலாக சிரித்த ஜூலி “உங்களால அப்படி ஸ்பெஷலா எனக்காக என்ன பண்ண முடியும் தேன்மொழி? அப்படியே பண்ணாலும் அதுக்கு நீங்க அர்ஜுனோட மணியை தானே யூஸ் பண்ணுவீங்க! சோ பெட்டர்.. எனக்கு என்ன வேணுமோ அதை நான் அர்ஜுன் கிட்டயே கேட்டுக்குறேன். Basically, எனக்கு என்ன வேணும்னு அர்ஜுனுக்கு நல்லா தெரியும்.

And moreover, எனக்கு அந்த டைம்ல அர்ஜுன தவிர வேற எதுவுமே மைண்ட்ல இல்ல. நீங்க அர்ஜுன் பக்கத்துல நான் இருந்த இடத்துல இருந்து இருந்தா என்ன பண்ணி இருக்கீங்கன்னு எனக்கு தெரியல. I can do anything for him. I mean, அர்ஜுனுக்காக என்னால என்ன வேணாலும் பண்ண முடியும். He is very special to me!” என்று தன் முகத்தை ஒரு மாதிரி வைத்துக் கொண்டு வெட்கப்பட்டுக் கொண்டே சொன்னாள்.

அவள் பேசியது எதுவுமே தேன்மொழிக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. இதில் வெட்கப்படுகிறேன் என்ற பெயரில் அவள் செய்த கன்றாவியை எல்லாம் தன் கண்களால் பார்த்து தொலைக்க வேண்டியதாக இருந்ததால் வந்த கோபத்தை கட்டுப்படுத்திக் கொண்டு அமர்ந்திருந்த தேன்மொழி ஜூலியை பார்த்து லேசாக புன்னகைத்து “நீங்க சொல்றது கரெக்ட் தான். நான் என் ஹஸ்பண்ட்டோட money-ஐ தான் செலவு பண்ணிட்டு இருக்கேன். நீங்க ரஷ்யாலயே இருந்ததுனால maybe இத கேள்விப்பட்டிருக்க மாட்டீங்கன்னு நினைக்கிறேன்.

எங்க ஊர்ல எல்லாம் உத்தியோகம் புருஷ லட்சணம்ன்னு சொல்லுவாங்க. உங்களுக்கு புரியுற மாதிரி சொல்லணும்னா, தன்னோட ஹார்டுவொர்க்னால நிறைய சம்பாரிச்சு பொண்டாட்டியா ஹாப்பியா வச்சுக்கிறவன் தான் நல்ல புருஷன். அதுவும் என்னோட ஹஸ்பண்ட் கொஞ்சம் அன்லிமிடெட்டாவே earn பண்றாரு. சோ நான் செலவு பண்றத பாத்தி எல்லாம் கவலையே பண்றது இல்ல. His money is my money. And he is strictly mine. So whatever related to him, it’s all belongs to me.

உங்களுக்கு என்ன வேணும்னு நீங்க டைரக்டா அர்ஜுன் கிட்ட கேட்டாலும், அதையெல்லாம் பார்த்து செஞ்சு குடுக்கிறதுக்கு பாவம் அவருக்கு டைம் இருக்காது. சோ பெட்டர் நீங்க எதுவா இருந்தாலும் என் கிட்டயே சொல்லுங்க. I can handle you well.” என்று சொல்லிவிட்டு எழுந்து நின்றாள்.

– மீண்டும் வருவாள் 💕

(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் நன்றி 🙏)

You may also like

Leave a Comment

About Me

Featured