Home அவனின் மஞ்சத்தில் தேன்மொழிஅவனின் மஞ்சத்தில் தேன்மொழி CH 131

அவனின் மஞ்சத்தில் தேன்மொழி CH 131

by Thenaruvi Tamil Novels

அத்தியாயம் 131

அலாரம் அடிக்கும் சத்தத்தை கேட்டு தேன்மொழியின் அனைப்பில் நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்த அர்ஜுன் ஒரு முக சுழிப்புடன் கண் விழித்தான். ஆனால் அந்த சத்தத்தை கொஞ்சம் கூட காதில் வாங்காமல் தேன்மொழி அப்போதும் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்க, அவளை தொந்தரவு செய்யாமல் அலாரத்தை ஆஃப் செய்துவிட்டு ரெப்ரஷ் ஆகி ஜாக்கிங் செல்வதற்காக வெளியில் சென்றான் அர்ஜுன்.

அவன் திரும்பி வந்து பார்க்கும்போதும் தேன்மொழி உறங்கிக் கொண்டு தான் இருந்தாள்‌. முதலில் “பேசாம நம்ம இவள டிஸ்டர்ப் பண்ணாம ரெடி ஆகி கிளம்பி போய்டலாமா?” என்று யோசித்தவன், “இல்லை இல்லை வேண்டாம். அப்புறம் இவ கிட்ட சொல்லாம இவ தூங்கி எந்திரிக்கறதுக்கு முன்னாடியே நான் கிளம்பி போயிட்டேன்னு ‌ சொல்லி சண்டை போடுவா. இன்னும் கொஞ்ச நேரத்துல மணி 8 ஆயிடும். ரொம்ப நேரமா தூங்கிட்டு இருக்கிறதுக்கு இவளும் எந்திரிச்சு டைமுக்கு ப்ரேக்பாஸ்ட் சாப்பிடுறது நல்லது தான்.” என்று நினைத்த அர்ஜுன் அவளது கைகளில் தட்டினான்.

அதில் கொஞ்சம் டிஸ்டர்ப் ஆன தேன்மொழி வேறுபுறமாக திரும்பி படுத்து தனது தூக்கத்தை கண்டின்யூ செய்ய தொடங்கினாள். “இவளை எல்லாம் சிம்பிளா எழுப்ப முடியாது.” என்று நினைத்த அர்ஜுன் அவள் கன்னத்தில் தட்டி “ஓய்.. இந்தாடி.. ஆல்ரெடி டைம் 8 ஆக போகுது. எனக்கு ஆபீஸ் போக டைம் ஆயிடுச்சு. நீ நான் கிளம்பறதுக்குள்ள தூங்கி எந்திரிச்சு வந்தின்னா, நம்ம சேர்ந்து இன்னிக்கி பிரேக்ஃபாஸ்ட் சாப்பிடலாம். அடியேய் தேன்மொழி எந்திரி டி!” என்று சொல்லி அவளை எழுப்ப முயற்சி செய்தான்.

அவன் உரத்த குரலில் அப்படி பேசிய பிறகு தான் தூக்கம் கலைந்து தன் கண்களை திறந்து பார்த்த தேன்மொழி ”அதுக்குள்ள விடிஞ்சிடுச்சா?” என்று கொட்டாவி விட்டபடி கேட்டாள். “எங்களுக்கு எல்லாம் விடிஞ்சிருச்சு. உனக்கு எப்படி? மேடம் யூஸ்புல்லா ஆப்டர்நூன் தானே தூங்கி எழுந்திருப்பீங்க! இப்ப என்ன தூங்கி எந்திரிக்க போறீங்களா? இல்ல அகைன் தூக்கத்தை கண்டினியூ பண்ண போறீங்களா?” என்று அர்ஜுன் கேட்க, அருகில் கிடந்த தலையணையை தூக்கி அவன் முகத்தில் அடித்த தேன்மொழி “என்ன நக்கலா உனக்கு? எப்பயும் என்னை எங்க அம்மா எழுப்பி விடுவாங்க. உன்ன கல்யாணம் பண்ணிக்கிட்டு வந்ததுக்கு அப்புறமா என்னை யாருமே எழுப்பி விடவே மாட்டேங்கிறாங்க. அதான் டைம் போறது தெரியாம ஏதோ கொஞ்ச நேரம் எக்ஸ்ட்ரா தூங்கிட்டேன். அதுக்குன்னு ஓவரா பேசுவுயா நீ?” என்று கேட்டபடி எழுந்து அமர்ந்தாள்.

“உங்க கிட்ட எல்லாம் பேச முடியுமா மேடம்? நீங்க எவ்ளோ பெரிய ஆளு!” என்று கேட்டுவிட்டு அர்ஜுன் சிரிக்க, “ஆமா நான் பெரிய ஆள் தான். மிஸ்ஸஸ் அர்ஜுன்னா சும்மாவா? மிஸ்டர் அர்ஜுனுக்கு இருக்கிற பவர்ல பாதியாவது எனக்கும் இருக்கும்ல!” என்று பெருமையுடன் கேட்ட தேன்மொழி தனது ஆம்ர்ஸ்களை அவனுக்கு தட்டி காண்பித்தாள். “மிஸ்டர் அர்ஜுனோட டோடல் ஸ்ட்ரென்த்தே நீங்க தான் மேடம்.” என்ற அர்ஜூன் விளையாட்டாக அவள் கன்னங்கள் இரண்டையும் பிடித்து விளையாட்டாக கிள்ள, அவன் கையைப் பிடித்து தட்டிவிட்ட தேன்மொழி “மிஸ்டர் அர்ஜுனுக்கு வர வர கை ரொம்ப நீளுது. சும்மா சும்மா என்ன புடிச்சி இப்படி கிள்ளி வைக்கிற வேலையெல்லாம் வேண்டாம்.” என்று சொல்லிவிட்டு தன் உதட்டை சுழித்தவள், ரெபெரென்ஸ் ஆவதற்காக எழுந்தாள்.

“அப்படியே வலிச்ச மாதிரியே நடிக்காத டி!” என்ற அர்ஜூன் நேற்று இரவு அவன் டெகரேட் செய்வதற்காக பயன்படுத்தி இருந்த இதய வடிவிலான பலூன் ஒன்றை எடுத்து அவள் மீது தூக்கி எறிந்தான். அதை கேட்ச் பிடித்த தேன்மொழி “எனக்கு வலிக்குதா இல்லையான்னு எனக்கு தானே தெரியும். நீங்க என்னமோ எனக்குள்ள பூந்து பார்த்த மாதிரி சொல்றீங்க!” என்று கேட்டுவிட்டு அந்த பலூனை அவன் மீதே  தூக்கி எறிந்தாள்.

பலூனை பிடித்த அர்ஜுன் “ஆமா பூந்து தான் பார்த்தேன். உன் ஹார்டுல நான் தானே இருக்கேன்! அங்க என்ன நடக்குதுன்னு எனக்கு தெரியாதா?” என்று கேட்டுவிட்டு சிரிக்க, ஆங்காங்கே இதய வடிவில் இருந்த சிறிய தலையணைகளை எல்லாம் எடுத்து அவன் மீது அடித்த  தேன்மொழி  “இப்படி எல்லாம் cringe-ஆ பேசுறது எப்படின்னு உங்க கிட்ட தான் கத்துக்கணும் மிஸ்டர் அர்ஜுன்! உங்க ஆபீஸ்லயும் போய் இப்படி எல்லாம் உளறிட்டு இருக்காதீங்க. அப்புறம் அவங்க பாஸுக்கு ஏதோ நட்டு கழண்டுச்சின்னு உங்கள கிண்டல் பண்ண ஆரம்பிச்சிடுவாங்க!” என்று சொல்லிவிட்டு சிரித்தாள்.

“ஏன்ன டி என்னையே ஓட்டுரியா? இரு டி வரேன்!” என்ற அர்ஜுன் எழுந்து அவளை நோக்கி செல்ல, அவள் ரெஸ்ட் ரூமை நோக்கி ஓடினாள். தான் துரத்தி சென்று அவள் வேகமாக ஓடி ஏதேனும் தவறாக நடந்துவிட்டால் என்ன செய்வது என்று நினைத்து பயந்த அர்ஜுன் அப்படியே நின்று, “ஏய் இந்த டைம்ல இப்படி ஓடிப் பிடிச்சு விளையாடுறது எல்லாம் தேவையா உனக்கு? பார்த்து பொறுமையா போ. நான் உன்னை தொரத்தல.” என்றான்‌. உடனே நின்று அவனை திரும்பிப் பார்த்த தேன்மொழி “போ டா பயந்தாங்கோலி!” என்றாள்.

உடனே அர்ஜுன் “அடிங்க.. நீ தைரியமான ஆளா இருந்தா அங்கேயே நில்லு டி.” என்றபடி வேகமாக அவள் அருகில் செல்ல, “எனக்கு தைரியம் எல்லாம் இல்லைங்க. நான் பாவம். சோ என்னை விட்டுருங்க.” என்று சொல்லிவிட்டு சிரித்த தேன்மொழி ரெஸ்ட் ரூமிற்குள் புகுந்து கொண்டாள்.‌

செல்பவளை பார்த்து தனக்குள் புன்னகைத்துக் கொண்ட அர்ஜுன், “இவ இன்னும் சின்ன பொண்ணாவே இருக்கா. இதுல இவளுக்கே குழந்தை பிறக்கப்போகுது. அதை எப்படி இவ பெத்து என் கைல கொடுக்க போறாளோ  தெரியல!” என்று நினைத்தான். பின் தேன்மொழி குளித்துவிட்டு கிளம்பி வருவதற்குள் தானும் கிளம்ப வேண்டும் என்று நினைத்து வேறொரு ரெஸ்ட் ரூமிற்கு சென்று குளிக்க சென்று விட்டான்.  ‌

சில நிமிடங்களுக்கு பிறகு அர்ஜுன், தேன்மொழி இருவரும் மற்ற குடும்ப உறுப்பினர்களுடன் டைனிங் டேபிளில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். அப்போது ஜூலியை வில் சாரில் வைத்து தள்ளிக் கொண்டு உள்ளே வந்தாள் லிண்டா. அனைவரும் அந்த காட்சியை ஆச்சரியத்துடன் பார்க்க, அவர்களை பின் தொடர்ந்து ஒரு டாக்டரும் இரண்டு நர்சுகளும் வந்தார்கள்.

அதுவரை தேன் மொழியுடன் சிறிது பேசி சாப்பிட்டுக் கொண்டு இருந்த அர்ஜூன் சட்டென்று எழுந்து அவர்கள் அருகில் சென்றான். அவனைப் பார்த்தவுடன் கண்கள் குளமாக உடைந்த குரலில் ஜூலி “அர்ஜுன்” என்று அவன் பெயரை சொல்லி அழைக்க, “what’s happening Linda? இவளுக்கு அவ்ளோ பெரிய மேஜர் சர்ஜரி நடந்து முடிஞ்சு ஒன் வீக் கூட ஆகல. அதுக்குள்ள இவள எதுக்கு ஹாஸ்பிடல்ல இருந்து கூட்டிட்டு வந்த? முதல்ல இவளை எப்படி டிஸ்டார்ஜ் பண்ணாங்க? நீ இத பத்தி என் கிட்ட எதுவுமே சொல்லல!” என்று ஜூலியை புறக்கணித்துவிட்டு லிண்டாவை பார்த்து கேட்டான் அர்ஜுன்.

“ஏன் நான் இங்க வந்தது உனக்கு பிடிக்கலையா அர்ஜுன்? அப்படி இருந்தா சொல்லிரு. நான் வெளியே ஹோட்டல்ல ஸ்டே பண்ணிக்கிறேன். எவ்ளோ செலவானாலும் பரவால்ல. என்னோட மெடிக்கல் எக்ஸ்பென்சஸ் எல்லாத்தையும் நானே பாத்துக்கிறேன். உங்க எல்லாரையும் பாக்கணும். ஹாஸ்பிடல்லயே இருந்து கஷ்டப்படறதுக்கு இங்க உங்க எல்லார் கூடையும் இருந்தா சீக்கிரம் சரியாயிடும்னு நினைச்சு  நான் வந்தது தப்பு தான்.  ‌ யாருக்கும் நான் burden-ஆ இருக்க விரும்பல.” என்ற ஜூலி உடனே லிண்டாவை பார்த்து “நான் கேட்டதுக்காக என்னை இவ்வளவு தூரம் கூட்டிட்டு வந்ததுக்கு தேங்க்ஸ் லிண்டா. நான் ஸ்டே பண்றதுக்கு எனக்கு ஒரு பிளேஸ் மட்டும் அரேஞ்ச் பண்ணி குடுத்துடுங்க. நான் இப்பவே இங்க இருந்து கிளம்புறேன்.” என்று சொல்லிவிட்டு பாவமாக தன் முகத்தை வைத்துக் கொண்டாள்.

எதுவும் பேச முடியாத நிலையில் அங்கே நின்று கொண்டு இருந்த லிண்டா பாவமாக அர்ஜுனனை பார்க்க, “நான் உன் ஹெல்த் கண்டிசனை பத்தி பேசிட்டு இருக்கேன் ஜூலி. அத புரிஞ்சுக்காம லூசுத் தனமா என்ன பேசிட்டு இருக்க நீ?” என்று கேட்ட அர்ஜுன் அவர்களுக்கு பின்னே நின்று கொண்டிருந்த டாக்டரை இங்கே என்ன நடக்கிறது? என்று கேட்பதைப் போல பார்த்தான்.

“இந்த சுச்சுவேஷன்ல பேஷண்டை ஹாஸ்பிடல்ல இருந்து ஷிஃப்ட் பண்றது ரிஸ்க் தான் சார். நாங்களும் எவ்வளவோ ஜூலி மேடம் கிட்ட சொல்லி பார்த்தோம். பட் அவங்க கேட்கவே இல்லை. எங்க ட்ரீட்மென்ட்க்கு கூட பிராப்பரா ரெஸ்பாண்ட் பண்ண மாட்டேன்னு அடம் பிடிச்சாங்க. அதான் வேற வழி இல்லாம வீட்டிலேயே வச்சு அவங்களுக்கு ட்ரீட்மென்ட் கொடுக்குறதுக்காக லிண்டா மேடம் எல்லாத்தையும் அரேஞ்ச் பண்ணிட்டு இருக்காங்க. எங்களையும் இங்க வந்து ஜூலி மேடம் கூட இருந்து அவங்களுக்கு ட்ரீட்மென்ட் பண்ண சொன்னாங்க.” என்று டாக்டர் சொல்ல, “ஓஹோ அர்ஜுன் இவளை பார்க்க ஹாஸ்பிடல் போகலைன்னு, உடனே அடம் பிடித்து ஹாஸ்பிடல்ல இருந்து லிண்டாவை டார்ச்சர் பண்ணி இவளே டிஸ்டார்ஜ் ஆகி இங்கே வந்திருக்கா. இவ சரியான ஆளா இருப்பா போலையே! இனிமே என் புருஷனை இவகிட்ட இருந்து காப்பாத்துறதுக்கு நான் தான் பாடா படனும் போல இருக்கு.” என்று நினைத்த தேன்மொழி நடக்கும் அனைத்தையும் தன் முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு பார்த்துக் கொண்டிருந்தாள்.

இவ்வளவு தூரம் வந்த பிறகு ஜூலியை திருப்பி அனுப்ப முடியாது என்பதால் அவள் வீட்டிலேயே டிரீட்மென்ட் எடுப்பதற்கு தேவையான அனைத்தையும் தனது ஆட்களை வைத்து அரேஞ்ச் செய்து கொடுத்த அர்ஜுன் லிண்டா கூட்டி வந்த டாக்டரையும், நர்சையும் அவளை கவனித்துக் கொள்வதற்காக பணி அமர்த்தினான்.  ஒரு வழியாக அவளுக்கான அறையில் அவளை செட்டில் செய்துவிட்டு அர்ஜுன் உடன் அங்கிருந்து வெளியில் வந்த லிண்டா “சாரி ப்ரோ! இந்த ஜூலியை எப்படி ஹாண்டில் பண்றதுன்னே எனக்கு தெரியல. டாக்டர்ஸ் என்ன சொன்னாலும் கேட்கவே மாட்டேன்டாங்க. ஒரு மெடிசன் குடுத்தா கூட சாப்பிட மாட்டேங்கிறாங்க. நேத்து நைட்ல இருந்து சாப்பிடாம உங்கள பாக்கணும்னு அடம் பிடிச்சுக்கிட்டே இருந்தாங்க.

நானும் எவ்வளவோ நீங்க பிசியா இருக்கீங்கன்னு சொல்லி பார்த்தேன். அதுக்கு நீங்க பிஸியா இருந்தா என்ன பரவால்ல. நான் இங்க வெட்டியா தானே இருக்கேன்.. இப்படி ஹாஸ்பிடல்ல ரெஸ்ட் எடுக்குறதுக்கு பதிலா நான் வீட்ல ரெஸ்ட் எடுக்கிறேன். என்ன வீட்டுக்கு கூட்டிட்டு போங்கன்னு ஸ்ட்ராங்கா சொல்லிட்டாங்க. என்னால அவங்களை கன்வின்ஸ் பண்ணவே முடியல. அதான் உங்க கிட்ட கூட கேட்காம அவங்கள வேற வழி இல்லாம வீட்டுக்கு கூட்டிட்டு வந்துட்டேன்.” என்று சோகமாக சொல்லிவிட்டு தலை குனிந்தாள்.

“அட பரவாயில்ல விடு மா. இதுக்கு எதுக்கு நீ சாரி கேக்குற? இவ்வளவு தூரம் நீ எனக்காக ஜூலிக்கு support-ஆ இருந்து அவளை பார்த்துக்கிட்டதுக்கு நான் தான் உனக்கு தேங்க்ஸ் சொல்லணும். அவன் அப்படித் தான். சரியான பிடிவாதக்காரி. அவ ஏதாவது ஒன்னு நினைச்சுட்டா, அதை செய்வதற்காக என்ன வேணாலும் பண்ணுவா.‌ நீ விடு, இனிமேல் நான் அவளை பாத்துக்குறேன்.” என்று லிண்டாவிடம் சொல்லிவிட்டு வந்த அர்ஜூன் சாப்பிட்டுக் கொண்டிருந்த தேன்மொழியிடம் பாய் சொல்லிவிட்டு வெளியில் கிளம்பி விட்டான்.

  • மீண்டும் வருவாள் 💕

(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் நன்றி 🙏)

You may also like

Leave a Comment

About Me

Featured