CHAPTER-9

Oviya Blessy

Member
Jan 4, 2025
92
1
8
அந்த‌ ம‌லைப்பாம்பு அவ‌ள் க‌ழுத்து துவ‌ங்கி அப்படியே முழுதாய் சுற்றியிருக்க‌, அவ‌ள் மூச்சு அடைத்து, உட‌லெல்லாம் விய‌ர்த்து வ‌லி எடுக்க‌, மூச்சுக்காக‌ அத்த‌னை போராடிய‌வ‌ளின் க‌ண்க‌ளெல்லாம் இருட்டிக் கொண்டு வந்து முழுதாய் ம‌ய‌க்க‌த்திற்கு செல்லும் நேர‌ம், அது த‌ன் அக‌ண்ட‌ வாயை அகல விரித்து அவ‌ளை விழுங்க‌ வ‌ர‌, ச‌ட்டென்று அத‌ன் வாயுக்குள் பாய்ந்திருந்த‌து அவ‌னின் க‌த்தி.

அதில் தெறித்த‌ இர‌த்த‌ம், அவ‌ள் முக‌த்தில் தெளிக்க‌, அதில் திடுக்கிட்டு அவ‌ள் இமைக‌ள் பிரிய‌ முய‌லும் முன், ச‌ட்டென்று அது அவ‌ளை விட்டிருக்க‌, இவ‌ளும் பொத்தென்று அங்கிருந்த‌ குள‌த்தில் விழுந்தாள்.

அடுத்த‌ நொடி ஓடி வ‌ந்து அந்த‌ குள‌த்தை நோக்கி பாய்‌ந்த‌ அவ‌னின் காலில் வேர் சிக்கி பொத்தென்று குள‌த்தின் முன்பே த‌ரையில் விழுந்தான்.

அதில் திடுக்கிட்டு திரும்பி பார்த்த‌வ‌ன், அவ‌ச‌ர‌மாய் த‌ன் காலை உருவ‌ முய‌ல‌, அதுவோ ந‌ன்றாக‌ சிக்கியிருக்க‌வும் வேக‌மாய் திரும்பி அருகில் துடித்துக் கொண்டிருந்த‌ அந்த‌ பாம்பின் வாயிலிருந்து த‌ன் க‌த்தியை ச‌த‌க்கென்று உருவி, ச‌ட்டென்று திரும்பி இந்த‌ வேரை வெட்டிவிட்டு, காலை உருவியெடுத்து, உட‌னே முன்னால் ந‌க‌ர்ந்து குள‌த்திற்குள் க‌ர‌ங்க‌ளை நுழைத்து அவ‌ளை மேலே தூக்கியிருந்தான்.

அதில் த‌ண்ணீரை பிள‌ந்துக் கொண்டு வெளியில் வ‌ந்தவ‌ள், அவ‌ன் மீதே வ‌ந்து விழ‌, அவ‌ளை அப்ப‌டியே அணைத்து த‌ரையோடு புதைந்த‌வ‌ன், அப்ப‌டியே அவ‌ளை பிர‌ட்டி த‌ரையில் கிட‌த்தி, அவ‌ளின் முக‌த்திலிருந்த‌ கூந்த‌லை வில‌க்கி, அவ‌ள் இத‌ழுள் இத‌ழ் புதைந்து த‌ன் மூச்சை அவ‌ளுக்கு கொடுக்க‌, அதில்தான் சுவாச‌ப்பை நிற‌ம்பி இழுத்து மூச்சுவிட்டு அவள் விழிகள் திறக்க, "அம்மு!" என்று பதற்றமாய் கன்னத்தை தட்டியவன், "அம்மு என்ன பாரு. ப்ரீத் பண்ணு." என்று பதறி கூற, அப்போதே அவ‌ள் ஈர‌ இத‌ழ்க‌ள் மெதுவாய் பிரிந்து ஏதோ கூறிய‌து. அதை உண‌ர்ந்த‌வ‌ன், வேக‌மாய் குனிந்து அவ‌ளித‌ழுருகே காதை வைக்க‌, அவ‌ன் காது ம‌ட‌லை உர‌சிய‌ அவ‌ளின் இத‌ழ்க‌ள் மீண்டும் க‌டின‌ப்ப‌ட்டு பிரிந்து, "உன‌க்கும்.. என‌..க்கும் என்ன‌ ச‌ம்ம‌ந்த‌ம்." என்று சோர்வாய் வார்த்தையை உதிர்க்க, அதில் ச‌ட்டென்று விரிந்த‌து இவ‌னின் புருவங்கள்.

அதில் அப்ப‌டியே திரும்பி அவ‌ளித‌ழ்க‌ளை மெதுவாய் சுவைத்த‌வ‌ன், அப்ப‌டியே அவ‌ள் கன்னம் பற்றி, "நீ என் உயிருடி" என்று கூற, அப்ப‌டியே மூடிய‌து அவ‌ளின் விழிக‌ள். அப்போதே அவ‌ள் முக‌த்தில் விழுந்த‌து அவ‌னின் க‌ண்ணீர் துளிகள். அவன் கண்ணீரை அவள் கண்டாளா இல்லையா, அது அவள் மட்டுமே அறிவாள்.

அதே நேர‌ம் இங்கே மெல்ல‌ க‌ண்விழித்த‌ விக்ர‌ம‌னின் விழிக‌ளில் முத‌லில் விழுந்த‌தோ க‌ண்ணீருட‌ன் நின்றிருந்த‌ த‌ன் ம‌னைவியின் முக‌ம். அதில் ப‌ட்டென்று எழுந்து அம‌ர்ந்தவ‌ர், அவ‌ச‌ர‌மாய் சுற்றியும் பார்க்க‌, ம‌ருத்துவ‌ம‌னையில் இருந்தார்.

அதில் புரியாது த‌லையை பிடித்த‌வ‌ருக்கு, அந்த‌ காட்டிற்குள் ந‌ட‌ந்த‌து ஒவ்வொன்றாய் க‌ண்முன் வர‌, "த‌ரையில‌ உக்காந்து எதையோ யோசிச்சு யோசிச்சு ம‌ய‌ங்கி விழுந்துட்டீங்கய்யா." என்றான் அவ‌னின் ஆள் ஒருவ‌ன்.

அதில் திடுக்கிட்டு விழி விரித்த‌வ‌ர், "அ..அவ‌ன் வ‌ந்துட்டான்." என்று ப‌த‌ற்ற‌மாய் த‌லையை பிடிக்க‌, அவ‌ர் க‌ர‌மெல்லாம் ந‌டுங்கிய‌து.

"என்ன‌ ஆச்சுங்க‌? என்ன‌ ப‌ண்ணுது?" என்று ப‌த‌றி அருகில் வ‌ந்தார் விம‌லா.

அதில் வேக‌மாய் க‌ட்டிலைவிட்டு இற‌ங்கிய‌வ‌ர், "விராஜ் எங்க‌?" என்று ப‌த‌றி கேட்க‌, அதில் திடுக்கிட்டு அப்ப‌டியே நின்றார் விம‌லா.

"என்ன‌ ஆச்சு எங்க‌?" என்று அவ‌ர் ப‌த‌றி கேட்க‌, அதில் க‌ண்ணீருட‌ன் த‌லையை தாழ்த்திய‌ விம‌லா, அப்ப‌டியே க‌த‌றி அழ‌ ஆர‌ம்பித்தார்.

இங்கே அமீராவின் ம‌ய‌க்க‌ம் க‌லைந்து, மெல்ல‌ புருவ‌ங்க‌ளை குறுக்க‌, அவ‌ள் உட‌லில் குளுமையான‌ காற்று சுல‌ப‌மாய் ப‌ட‌ர‌வும் புரியாது விழிக‌ளை திற‌க்க‌, அவ‌ள் உட‌லில் சேலையில்லை.

அதில் அவ‌ள் திடுக்கிட்டு எழுந்து த‌ன்னை ம‌றைக்கும் முன், அவ‌ள் ஜேக்கெட்டையும் வெட்டி திற‌ந்திருந்தான் அவ‌ன்.

அதில் அவ‌ள் அதிர்வாய் த‌ன்னை இறுக்கி ம‌றைத்துக்கொண்டு ப‌ய‌ந்து அவ‌னை பார்க்க‌, அவ‌னோ அவ‌ளின் பாவ‌டையையும் க‌ழ‌ற்ற‌ போக‌, ப‌ளாரென்று அவ‌ன் க‌ன்ன‌த்தில் அறைந்தாள் அமீரா.

அதில் ச‌ட்டென்று க‌ன்ன‌த்தை திருப்பிய‌வ‌னின் கோப‌ம் ஏற‌, க‌ர‌த்தை இறுக்கி மூடிய‌வ‌ன், பட்டென்று அவள் பாவடையை உருவி வீசியிருந்தான்.

"அ!" என்று அவ‌ள் அல‌றிய‌ப‌டி கால்க‌ளை ம‌ட‌க்கி பின்னால் ந‌க‌ர‌, அவ‌னோ மெதுவாய் எழுந்து நின்றான்.

அதில் வேக‌மாய் த‌ன்னை குறுக்கி ம‌றைத்த‌ப‌டி குனிந்து பார்த்த‌வ‌ளின் விழிக‌ள் அக‌ல‌ விரிய‌, அவ‌ள் உட‌லெல்லாம் அட்டை பூச்சிகள் ஒட்டிருந்த‌து. காட்டிற்குள் இருக்கும் குள‌த்தில் விழுந்தால் அல்ல‌வா? அதுவும் இர‌வு நேர‌ம் அதில் அட்டைக‌ள் குடியிருக்கும்.

அதில் அதிர்வாய் ப‌ய‌ந்து அல‌றிய‌வ‌ள் உத‌றிய‌ப‌டி எழ‌ போக‌, பொல்லென்று அவ‌ள் மீது ம‌ஞ்ச‌ள் நீரை ஊற்றியிருந்தான் அவ‌ன்.

அதில் திடுக்கிட்டு விழியை இறுக்கி மூடி குறுகிய‌வ‌ள் முழுதாய் ந‌னைந்துவிட‌, அவ‌ள் உட‌லிலிருந்த‌ அட்டைக‌ள் பிடியை த‌ள‌ர்த்திய‌து. ஆனாலும் அது இன்னுமே உட‌லில் ஒட்டியிருக்க‌, அவ‌ள் குனிந்து பார்க்கும் முன் வேக‌மாய் அடுத்த‌ த‌ண்ணீரையும் ஊற்றியிருந்தான் அவ‌ன்.

அதுவோ மிக‌வும் குளிர்ந்த‌ ஐஸ் நீர். உட‌லில் ப‌ட்ட‌ அடுத்த‌ நொடியே அனைத்து அட்டைக‌ளும் உட‌லைவிட்டு விழுந்தது. அதைக்கூட‌ உண‌ராது க‌ண்க‌ளை இறுக்கி மூடியிருந்த‌வ‌ள், வெறும் உட‌லாய் க‌ர‌ங்க‌ளை மார்புக்குள் குறுக்கி குளிரில் ந‌டுங்கிக்கொண்டிருக்க‌, அவ‌ள் மீது ட‌வ‌ளை போர்த்திய‌து அவ‌ன் க‌ர‌ங்க‌ள். அதில் அவ‌ள் வேகமாய் திரும்பி அவ‌ன் மார்புக்குள் புகுந்துக்கொள்ள‌, அவ‌ளை இறுக‌ அணைத்து த‌ன் மார்புக்குள் புதைத்துக் கொண்ட‌வ‌ன், "ஒன்னும் இல்ல‌ ஒன்னும் இல்ல போயிருச்சு." என்று அவ‌ள் முதுகை தேய்த்த‌ப‌டி அவ‌ள் உச்சியில் முத்த‌மிட்டான்.

அவ‌ன் மார்புக்குள் ந‌டுங்கிக் கொண்டிருந்த‌ அவ‌ளோ, ப‌ய‌மும் குளிரும் சேர்ந்து வெகுவாய் ந‌டுங்கிய‌ப‌டி அப்ப‌டியே ம‌ய‌ங்கி ச‌ரிய‌, ப‌த‌றி அவ‌ளை தாங்கி பிடித்த‌வ‌ன், குனிந்து அவ‌ள் க‌ன்ன‌த்தை தாங்கி பிடித்து அவ‌ள் முக‌ம் பார்க்க‌, அவ‌ளோ முழுதாய் ம‌ய‌ங்கியிருக்க‌வும் அப்ப‌டியே அந்த‌ க‌ன்ன‌த்தை த‌ன் மீது சாய்த்துக் கொண்டு அவ‌ளை தூக்கினான்.

அவ‌ளை தூக்கி கையில் ஏந்திக் கொண்ட‌வ‌ன், அப்படியே ந‌ட‌ந்து த‌ங்க‌ள் அறைக்கு சென்றான். அறைக்குள் நுழைந்த‌தும் அங்கிருந்த மெழுகுவர்த்திகள் அணைக்கப்பட்டு லைட் வெளிச்சத்தில் அறை நிரம்பியிருக்க, அதன் நடுவே நடந்து அந்த‌ தாம‌ரை மெத்தையில் அவ‌ளை மெல்ல‌ ப‌டுக்க‌ வைத்தவ‌ன், அவ‌ள் உட‌லை மூடியிருந்த‌ ட‌வ‌ளை மெதுவாய் வில‌க்கினான்.

அவ‌ளோ இன்னுமே ம‌ய‌க்க‌த்திலிருக்க‌, மெதுவாய் டவளை வில‌க்கிவிட்டு, அவ‌ள் உள்ளாடைக‌ளையும் க‌லைத்த‌வ‌ன், அதே ட‌வ‌ளால் அவ‌ள் உட‌ல் முழுக்க‌ சுத்த‌மாய் துடைக்க‌ ஆர‌ம்பித்தான்.

அப்போதே அவ‌ளின் ம‌ய‌க்க‌ம் மெல்ல‌ தெளிய‌, த‌ன் வெற்றுட‌லில் அவ‌ன் க‌ர‌ங்க‌ள் அள‌ந்து ஆராய்ந்துக் கொண்டிருப்ப‌து உண‌ர்ந்து உட‌னே இமைக‌ளை பிரிக்க‌ முய‌ன்ற‌வ‌ள், முடியாம‌ல் சோர்ந்து மெதுவாய் தான் பிரித்தாள். மெல்ல‌ பிரிந்த‌ அவ‌ளின் ஈர‌ இமைக‌ளின் ந‌டுவே அவ‌னின் ச‌ல‌ன‌மில்லா முக‌ம்.

முத‌ல் முறையாய் அவ‌னின் முக‌த்தில் மோக‌மோ கோவ‌மோ இல்லாது த‌விப்பு ம‌ட்டுமே நிறைந்திருக்க‌, த‌ன் உட‌லை அள‌ந்துக் கொண்டிருந்த‌ அவ‌னின் க‌ர‌ங்க‌ளில் ஆசையில்லாது ஒருவித‌ அக்க‌றையை ம‌ட்டுமே உண‌ர்ந்தாள்.

அதை க‌வ‌னிக்காது அவ‌ள் உட‌லை முழுதாய் துடைத்து முடித்த‌வ‌ன், அவ‌ள் உட‌லை ஆராய‌, அட்டைக‌ள் பிடித்திருந்த‌ இட‌மெல்லாம் இன்னுமே இர‌த்த‌ம் க‌சிந்த‌து.

அதில் திரும்பி டேபிள் ட்ராய‌ரை திற‌ந்து ம‌ருந்து பாக்ஸை எடுத்தவ‌ன், அதிலிருந்த‌ ஆன்ட்டிசெப்டிக் க்ரீம் ஒன்றை எடுத்து, அவ‌ள் காய‌த்தில் மெல்ல‌ த‌ட‌வ‌, "ஸ்ஸ்" என்று துடித்த‌சைந்தாள் அவ‌ள்.

அதில் அவ‌ன் திடுக்கிட்டு அவ‌ளை பார்க்க‌, அவ‌ளோ அரை ம‌ய‌க்க‌த்தில் மெல்ல‌ இமைக‌ளை மூடி திற‌க்க‌, மெதுவாய் அவ‌ள் க‌ன்ன‌ம் ப‌ற்றி அவ‌ள் முக‌ம் நெருங்கிய‌வ‌ன், "இப்ப‌ செரியாயிரும்." என்று மெல்லிய‌ குர‌லில் கூறி மென்மையாய் அவ‌ள் நெற்றியில் இத‌ழ் ப‌தித்தான்.

அதில் அவ‌ள் இமைக‌ள் அப்படியே மூடிவிட‌, முத‌ல் முறையாய் அவ‌னின் முத்த‌ம் அவ‌ள் உட‌லெங்கும் சிலிர்க்க‌ வைத்த‌து.

அப்போது மீண்டும் அவ‌ள் காய‌த்தில் ம‌ருந்து ப‌ட‌, "ஸ்ஸ்" என்று திடுக்கிட்டு துடித்தாள்.

அதில் உட‌னே க‌ர‌த்தை வில‌க்கிவிட்ட‌வ‌ன், ப‌த‌றி அவ‌ளை பார்க்க‌, அவ‌ளோ விழி மூடிய‌ப‌டியே வ‌லியில் முக‌த்தை சுருக்க, அதில் த‌ன் கையிலிருந்த‌ ம‌ருந்தை பார்த்த‌வ‌ன், உட‌னே அதை வீசிவிட்டு எழுந்தான்.

அதில் அவ‌ள் மெல்ல‌ இமைக‌ளை பிரிக்க‌, அவ‌னோ அந்த‌ அறையைவிட்டே சென்றிருந்தான். அதில் புரியா சோர்வாய் இமைக‌ளை மெல்ல‌ மூடி திற‌ந்த‌வ‌ள், அப்ப‌டியே விழியை மூடியிருந்தாள்.

அடுத்த‌ ப‌த்தாவது நிமிட‌ம் தீடீரென்று மெத்தையில் ஒரு அழுத்த‌ம், அப்ப‌டியே அவ‌ள் உட‌லை உர‌சிய‌து அவ‌னின் ஆடை. அதில் ச‌ட்டென்று அவ‌ள் இத‌ய‌ம் விழித்துக்கொள்ள‌, மீண்டும் மெல்ல‌ இமைக‌ளை பிரிக்கும் முன், அந்த‌ இமையைவிட‌ மென்மையான‌ ஒன்று அவ‌ள் விழிக‌ளை மெல்ல‌ வ‌ருடி சென்ற‌து.

அதில் சுக‌மாய் அவ‌ள் விழிக‌ள் மூட‌, மெதுவாய் அவ‌ள் முக‌த்தை வ‌ருடி சென்ற‌ அந்த‌ ம‌யில் இற‌கை அப்ப‌டியே தேனில் முக்கி, அவ‌ள் மார்பிலிருந்த‌ காய‌த்தில் மென்மையாய் த‌ட‌வினான். தேனைவிட‌ சிற‌ந்த‌ கிருமிநாசினி (ஆன்ட்டிசெப்டிக்) ஏது?

அதையும் மென்மையான‌ ம‌யிலிற‌கால் மெதுவாய் த‌ட‌வ‌, அதில் சுக‌மாய் சிலிர்த்த‌வ‌ளின் காய‌த்தில் ஜில்லென்று ப‌ர‌விய‌ குளிர் அவ‌ள் உட‌லெங்கும் ப‌ர‌வி உரோம‌ங்க‌ள் புடைக்க‌, அப்ப‌டியே மெல்ல‌ அங்கிருந்த‌ ம‌ற்ற‌ காய‌ங்க‌ளையும் மெதுவாய் அந்த‌ மயிலிற‌கு வ‌ருட‌, கூச்ச‌த்தில் அவ‌ளின் விர‌ல்க‌ள் த‌லைய‌ணை நுனியை சுருட்டி பிடித்த‌து. முதல் முறையாய் அவ‌ன் தீண்ட‌லில் இவ‌ள் உட‌ல் அருவ‌ருப்புக்கு பதில் கூச்ச‌த்தை உண‌ர்ந்த‌து.

அப்ப‌டியே அந்த‌ ம‌யிலிற‌கு அவ‌ளின் மார்பு குழி வ‌ழியே அவ‌ளின் வ‌யிற்றில் வ‌ந்து பட‌ர‌, அவ‌ளின் விர‌ல்க‌ள் அந்த‌ த‌லைய‌ணையை இறுக்கி பிடிக்க‌, கூச்ச‌த்தில் முழுதாய் அத‌னுள் புதைந்தாள்.

அங்கே இருந்த‌ காய‌ங்க‌ளில் தேனை மெல்ல‌ த‌ட‌விய‌வ‌ன், அப்ப‌டியே ஒவ்வொரு அங்க‌மாய் வ‌ருட‌, அவ‌ளின் உண‌ர்வுக‌ளும் ஒவ்வொன்றாய் வெளியில் வர, உட‌ல் குறுகி, புருவ‌ம் குறுகி, சிலிர்த்து நெளிந்து மொத்த‌ கூச்ச‌மும் அவ‌ள் கால் விர‌ல் நுனியில் வ‌ந்து நிற்க‌, அதை குறுக்கி மூடி கூச்ச‌த்தை அட‌க்கினாள் பெண்ண‌வ‌ள்.

அதை உண‌ராது அவ‌ள் காய‌த்தில் ம‌ட்டுமே க‌வ‌ன‌மாய் இருந்த‌வ‌ன், இற‌கை மீண்டும் தேனில் முக்கி அத்த‌னை மென்மையாய் அவ‌ள் உட‌லில் த‌ட‌விக் கொண்டிருக்க‌, அதில் பெண்ண‌வ‌ளின் தேக‌ம்தான் கூச்ச‌த்தை அட‌க்க‌ நெளிந்து குறுகி போராடிக் கொண்டிருந்த‌து.

அப்ப‌டியே அனைத்து இட‌ங்க‌ளிலும் போட்டு முடித்த‌வ‌ன் மெதுவாய் எழுந்து செல்ல‌ போக, உட‌னே அவ‌ன் க‌ர‌ம் ப‌ற்றினாள் அமீரா.

அதில் அவ‌ன் திடுக்கிட்டு திரும்பி பார்க்க‌, அப்போதே எதையோ உணர்ந்து புருவம் குறுகிய‌வ‌ள், மெதுவாய் அவ‌ன் க‌ர‌த்தை திருப்பி பார்க்க‌, அவ‌ன் உள்ளெங்கையெல்லாம் இர‌த்த‌ம். அதில் அதிர்வாய் புருவ‌ம் விரித்த‌வ‌ளுக்கு அப்போதே இவ‌ள் குத்த‌ வ‌ந்த‌ க‌த்தியை அவ‌ன் ச‌ட்டென்று பிடித்து உள்ள‌ங்கை துளைத்த‌து க‌ண்முன் வ‌ர‌, க‌ண்ணீருட‌ன் நிமிர்ந்து அவ‌னை பார்த்தாள்.

அவ‌ள் க‌ண்ணீரில் குற்ற‌ உண‌ர்வும் வ‌லியும் வெகுவாய் மின்ன‌, அப்ப‌டியே அவள‌ருகே அம‌ர்ந்து அவ‌ள் க‌ன்ன‌ம் ப‌ற்றிய‌வ‌ன், ஒன்றும் இல்லை என்று கண்ண‌சைத்துவிட்டு அவ‌ள் க‌ன்ன‌த்தில் முத்த‌மிட்டான்.

அதில் மெதுவாய் விழி முடிய‌வ‌ளின் க‌ர‌ம் அவ‌ன் மார்பில் ப‌திய‌, அங்கே அவ‌ன் பேன்டேஜ் அழுத்த‌வும் திடுக்கிட்டு விழி திற‌ந்து பார்த்தாள். அங்கேயும் அவ‌ள் உருவாக்கிய‌ காய‌ம் மின்ன‌, அவ‌ளின் க‌ண்க‌ள் மேலும் க‌ல‌க்கிய‌து.

அந்த‌ க‌ண்ணீரை இத‌ழால் துடைத்து உறிஞ்சிய‌வ‌ன், அங்கே மென்மையாய் முத்த‌மிட்டு, நிமிர்ந்து அவ‌ள் விழி பார்க்க‌, அப்போதே அவ‌ன் நெற்றியோர‌ம் அவள் அடித்த‌ காய‌ம் சிவ‌ப்பாய் வீங்கியிருந்த‌து. அதில் மேலும் க‌ல‌ங்கிய‌வ‌ளின் விர‌ல்க‌ள் த‌விப்பாய் அதை மெல்ல‌ வ‌ருட‌, அந்த‌ க‌ர‌த்தை மெதுவாய் பிடித்து முத்த‌மிட்டவ‌ன், "ஒன்னும் இல்ல‌டி" என்றான் மெல்லிய‌ குர‌லில்.

அவ‌ளோ அப்போதும் க‌ண்ணீருட‌ன் மெல்ல‌ அவ‌ன் க‌ன்ன‌ம் ப‌ற்ற, அவ‌னும் மெல்ல‌ அவ‌ள் க‌ன்ன‌ம் வ‌ழி கூந்த‌லுள் க‌ர‌ம் நுழைத்து, அப்படியே அவ‌ள் இத‌ழிலோடு இத‌ழ் சேர்த்தான். அதில் மெல்ல‌ அவ‌ள் விழிக‌ள் மூட, மிக‌ மெதுவாய் அவ‌ள் இத‌ழ்க‌ளை சுவைக்க‌ துவ‌ங்கிய‌து அவ‌ன் இத‌ழ்க‌ள்.

அதில் அவ‌ள் க‌ர‌ம் அவ‌ன் க‌ன்ன‌த்திலிருந்து மெதுவாய் இற‌ங்கி அவ‌ன் கால‌ரை இறுக்கி பிடிக்க‌, அவ‌ள் மூடிய‌ விழிக‌ள் க‌ண்ணீரை வெளியேற்றிய‌து. ஆனால் அது பிடித்த‌மின்மையால் வ‌ந்த‌ க‌ண்ணீர‌ல்ல‌, அவ‌னை காய‌ப்ப‌டுத்திய‌தை எண்ணிய‌ வ‌லி.

அதே நேர‌ம் இங்கே ச‌ட்டென்று க‌த‌வை திற‌ந்துக் கொண்டு உள்ளே நுழைந்தார் விக்ர‌ம‌ன்.

அதில் திடுக்கிட்டு திரும்பிய‌ ந‌ர்ஸ், "சார் என்ன‌ ப‌ண்றீங்க‌? இது ஐ.சி.யு.." என்று த‌டுக்க‌ வ‌ர‌, அவ‌ளை த‌ள்ளிவிட்டு விட்டு விராஜை பார்த்தார் விக்ர‌ம‌ன்.

அவ‌னோ அங்கு முழு ம‌ய‌க்க‌மாய் கிட‌க்க‌, அவ‌னுக்கு ஆக்ஸிஜ‌ன் பொருத்த‌ப்ப‌ட்டு, கையில் ட்ரிப்ஸ் ஏறிய‌ப‌டியே, அங்கிருந்த‌ மானிட்ட‌ரில் அவ‌னின் ஹார்ட் ரேட்டிங் காட்டிக் கொண்டிருந்த‌து. அதில் விழி விரித்த‌வ‌ரின் இத‌ய‌ம் துடிப்பையே நிறுத்த‌, க‌டைசியாக‌ அவ‌னை விட்டு செல்லும்போது பார்த்த‌ அவ‌னின் முக‌ம்தான் க‌ண்முன் வ‌ந்து நின்ற‌து.

த‌லையில் க‌ட்டுட்டுட‌ன் விழி அசைத்து, இத‌ழ் பிரித்து ஓர‌ள‌வு பேசிக்கொண்டாவ‌து இருந்தான். ஆனால் இப்போது அசைவே இல்லாது கிட‌க்க‌, புரியா அதிர்வாய் மெதுவாய் அவ‌ன் அருகில் சென்றார்.

"விராஜ்!" என்று அவ‌ர் அவ‌னை தொட‌ போக‌, "சார்!" என்றார் ம‌ருத்துவ‌ர்.

அதில் அவ‌ர் வேக‌மாய் திரும்ப‌, உள்ளே நுழைந்த‌ ம‌ருத்துவ‌ர், "சார் நாங்க‌ உங்க‌ளுக்கு கால் ப‌ண்ண‌ எவ்வ‌ள‌வோ ட்ரை ப‌ண்ணோம். ப‌ட் முடிய‌ல‌. அப்ற‌ம் நீங்க‌ளே அன்கான்சிய‌ஸாதா இங்க‌ வ‌ந்து சேந்தீங்.." என்று கூறும் முன் அவ‌ன் ச‌ட்டையை பிடித்திருந்த‌வ‌ர், "என் பைய‌னுக்கு என்ன‌ ஆச்சு?" என்று க‌த்தினார் விக்ர‌ம‌ன்.

"சார் ப்ளீஸ் கொஞ்ச‌ம் பொறுமையா இருங்க‌." என்று அவ‌ர் கூற‌, மேலும் அவ‌ர் ச‌ட்டையை இழுத்து பிடித்து, "இப்ப‌ சொல்ல‌ போறியா இல்ல‌யா?" என்று க‌த்த‌, "சொல்றேன் சார். விடுங்க‌." என்றார் பொறுமையாக‌.

அதில் அவ‌ரோ க‌ர‌த்தை வில‌க்காது, "சொல்லு." என்று கூற‌, அவ‌ர் க‌ர‌த்தை மெதுவாய் வில‌க்கிவிட்டு, "அவ‌ரு க‌டைசியா உங்க‌கிட்ட‌தா பேசிருக்காரு. காதுல‌ இருந்து இர‌த்த‌ம் வ‌ர்ற‌ அள‌வு ப‌ய‌ங்க‌ர‌மான‌ ச‌வுண்ட் எத‌யோ கேட்டு, மூள ப‌ய‌ங்க‌ர‌மா அதிர்ந்திருக்கு." என்று அவ‌ர் கூற‌, அதில் அதிர்ந்த‌ விக்ர‌ம‌னின் க‌ர‌ம் அவ‌ர் ச‌ட்டையை விட்ட‌து.

"ஏற்க‌ன‌வே இஞ்சூரியான‌ ஹெட்ல‌ இது மாதிரி ந‌ட‌க்குற‌து ரொம்ப‌ பெரிய‌ டெஞ்ச‌ர். சோ..." என்று அவ‌ர் த‌ய‌ங்க‌, "சோ என்ன‌?" என்று இவ‌ர் ப‌த‌றி கேட்க‌, அதில் அவ‌ரும் நிமிர்ந்து அவ‌ர் விழி பார்த்து, "இப்ப‌ அவ‌ரால‌ சுத்தி ந‌ட‌க்குற எதையும் பாக்கவோ, கேக்க‌வோ, ஏ உண‌ர‌க்கூட முடியாது." என்றார் ம‌ருத்துவ‌ர்.

அதில் அதிர்வாய் விழி விரித்த விக்ர‌ம‌ன், "அப்படின்னா?" என்று கேட்க‌, அதில் ஒரு சோர்ந்த‌ பெருமூச்சை விட்ட‌வ‌ர், "ஹீ இஸ் இன் அ கோமா." என்று கூற‌, அதிர்ந்து நெஞ்சை பிடித்துவிட்டார் விக்ர‌ம‌ன்.

அதே நேர‌ம் இங்கே மெல்ல‌ க‌ண்விழித்த‌ அமீரா மெத்தையில் த‌னியாய் கிட‌க்க‌, திடுக்கிட்டு விழி திற‌ந்த‌வ‌ள் அவ‌னை தேட‌, அறையே காலியாக‌தான் இருந்த‌து. அதில் வேக‌மாய் எழ‌ முய‌ற்சிக்க‌, அவ‌ள் உட‌லில் புதிய‌ சேலை க‌ட்ட‌ப்ப‌ட்டிருந்த‌து.

அதில் புரியாம‌ல் த‌ன் மார்பிலிருந்த‌ சேலையை இறுக்கி பிடித்து எழுந்து அம‌ர்ந்த‌வ‌ள், எப்போது ம‌ய‌ங்கினோம், அவ‌ன் எங்கே என்று புரியாது தேட‌, அப்போதே தெரிந்த‌து அவ‌ன் கால்க‌ள்.

அதில் அவ‌ள் திடுக்கிட்டு எட்டி பார்க்க‌, மெத்தைக்கு கீழே விழுந்து கிட‌ந்தான் அவ‌ன். அதில் அவ‌ள் அதிர்வாய் கீழே இற‌ங்கி அவ‌னிட‌ம் செல்ல‌, அந்த‌ த‌ரையெல்லாம் அவ‌னின் இர‌த்த‌ம்.

- நொடிக‌ள் தொட‌ரும்...
 

Author: Oviya Blessy
Article Title: CHAPTER-9
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.