அத்தியாயம் 9: என்ன நான் செய்வேன்?
“நீதான் எல்லாத்தையும் பாத்துக்கணும் தேன்மொழி.” என்று ஜானகி அவள் பாட்டிற்கு பேசிக் கொண்டே போக, அவளுக்கு தலை சுற்றாத குறை தான்.
இன்னும் இந்த குடும்பம் தன்னை வைத்து என்னென்ன செய்ய காத்திருக்கிறதோ! என்று நினைத்தாலே அவளுக்கு பயமாக இருந்தது. இருப்பினும் எதுவும் பேச முடியாமல், ஜானகியையும், கிளாராவையும் மாறி மாறி பார்த்துக் கொண்டு நின்றாள் தேன்மொழி.
அவள் முகமே இப்போது அவள் எவ்வளவு பயத்தில் இருக்கிறாள் என்று சொல்லாமல் சொன்னது. அதனால் மேலும் ஏதாவது சொல்லி அவளை பயமுறுத்த வேண்டாம் என்று நினைத்த ஜானகி அங்கிருந்து வெளியேறி விட்டாள்.
தேன்மொழியை எப்படியாவது சாப்பிட வைத்து விட வேண்டும் என்று செல்வதற்கு முன் ஜானகி சொல்லி இருந்ததால், கிச்சனில் உள்ளவர்களுக்கு இன்டர்காமில் கால் செய்த கிளாரா தேன்மொழிக்கான உணவை அந்த அறைக்கே வரவழைத்தாள்.
ஏதோ சுத்து பிரம்மை பிடித்தவளை போல அந்த அறையில் உள்ள ஒரு சோபாவில் நன்றாக சாய்ந்து அமர்ந்து மேலே தெரிந்த சீலிங்கை பார்த்துக் கொண்டு இருந்த தேன் மொழியின் அருகே கையில் சாப்பாடு பிளேட்டுடன் சென்று அமர்ந்தாள் கிளாரா.
தட்டில் ஸ்பூனை வைத்து அவள் முன்னே உணவை நீட்டிய கினாரா “ப்ளீஸ் மேடம் கொஞ்சமாவது சாப்பிடுங்க. உங்களுக்கு ஹீமோகுளோபின் ஆல்ரெடி கம்மியா இருக்குன்னு டாக்டர்ஸ் சொல்லி இருக்காங்க. நீங்க டைமுக்கு கரெக்டா சாப்பிடணும்.” என்றாள்.
உடனே அவளை திரும்பிப் பார்த்து முறைத்த தேன்மொழி “அது எப்படி உங்களுக்கு தெரியும்?” என்று கோபமாக கேட்க, “உங்கள எங்க பிரைவேட் ஜெட்ல ஏத்துன உடனே அங்க இருந்த எங்களோட டாக்டர்ஸ் டீம் top to bottom உங்களை செக் பண்ணிட்டாங்க.
அவங்க தான் உங்களுக்கு ஹீமோகுளோபின் கம்மியா இருக்கிறத பற்றி சொல்லி இனிமே உங்களுக்கு ஸ்பெஷல் டயட் ஃபாலோ பண்ணனும்னு சொன்னாங்க.
இந்த டிஷ் கூட உங்களுக்காக ஸ்பெஷலா ரெடி பண்ணது தான். சோ ப்ளீஸ் மேடம் வேண்டாம்னு சொல்லாம கொஞ்சமாவது சாப்பிடுங்க.” என்று பணிவுடன் சொன்னாள் கிளாரா.
உடனே தன் முகத்தை வேறு புறமாக திருப்பிக் கொண்ட தேன்மொழி “நான் தான் எனக்கு எதுவும் வேண்டாம்னு சொல்றேன்ல! அதைக் கூட கேட்காம மறுபடியும் சாப்பிடு சாப்பிடுன்னு டார்ச்சர் பண்ணா என்ன அர்த்தம்?” என்று கோபமாக கேட்டாள்.
“நீங்க சாப்பிட்டே ஆகணும்னு அர்த்தம்.” என்று நிதானமான குரலில் சொன்ன கிளாரா தட்டில் இருந்த உணவை ஸ்பூனில் எடுத்து “ஜானகி மேடம் எப்படியாவது உங்களை சாப்பிட வைக்கணும்னு சொல்லிட்டு போயிட்டாங்க மேடம்.
சோ எனக்கு வேற ஆப்ஷன் இல்ல. நான் உங்க கிட்ட ஹார்ஷா நடந்துக்கணும்னு நினைக்கல.
பட் நீங்க என்னை அப்படி நடந்துக்க போர்ஸ் பண்ணாதீங்க.” என்று சொல்லிவிட்டு வலுக்கட்டாயமாக தேன்மொழியின் வாயில் உணவை திணித்தாள்.
அவள் வேண்டாம் என்று சொல்லியும் கிளாரா கேட்கவில்லை. தேன்மொழி அங்கே இருந்து எழுந்து செல்ல பார்க்க, “ப்ளீஸ் மேடம் என் பொறுமையை ரொம்ப சோதிக்காதீங்க.
இங்க என் பாஸ் என்ன சொல்றாங்களோ அதை மட்டும் தான் என்னால செய்ய முடியும். நீங்க இப்படியே பண்ணிட்டு இருந்தா, வேற வழி இல்லாம நான் உங்களை கட்டிப்போட்டு உங்கள சாப்பிட வைக்க வேண்டியது இருக்கும்.
நான் அதையெல்லாம் செய்ய வேண்டாம் என்று நினைக்கிறேன். ப்ளீஸ் நீங்களே போர்ஸ் பண்ணி என்ன அப்படி செய்ய வச்சிடாதீங்க.” என்றாள் கிளாரா.
அவள் சொன்னதை நினைத்து பார்த்த தேன்மொழி “அந்த அம்மா சொல்லிட்டு போன மாதிரி இந்த கும்பல் எப்படியும் என்ன சாகவும் விட மாட்டாங்க.
நிம்மதியா வாழவும் விட மாட்டாங்க. இதுக்கு நடுவுல இப்படி நாய் மாதிரி கட்டி வச்சு இவங்க சோறு போட்டு அசிங்கப்படுத்துவதற்கு முன்னாடி நம்மளே பேசாம இவ குடுக்கிறத வாங்கி சாப்பிட்டுடலாம்.” என்று நினைத்து கிளாராவின் கையில் இருந்த தட்டைப் பிடுங்கி “நானே சாப்பிடுறேன். நீங்க முதல்ல இங்க இருந்து வெளிய போங்க. எனக்கு உங்கள பார்த்தாலே டென்ஷன் ஆகுது.” என்று கத்தினாள்.
அவள் தனது சீஃப் அர்ஜுனின் மனைவி என்பதால், அவள் பேச்சுக்கு கட்டுப்பட்ட கிளாரா அங்கிருந்து வெளியேறினாள்.
இப்போது நர்ஸ் உடை அணிந்திருந்த நான்சி தேன் மொழியையே பார்த்தபடி நின்று இருக்க, “இங்க யாருக்கும் தெரியாம நம்ம மூச்சு கூட விட முடியாது போல.
எப்பயும் யாராவது ஒருத்தர் நம்ம என்ன பண்றோம்னு கவனிச்சுக்கிட்டே இருக்காங்க. ச்சே.. இந்த தங்க குண்டுகுள்ள கிளி மாதிரி இருக்கிறதுன்னு சொல்வாங்களே.. அப்படி ஆகிப்போச்சு என் நிலைமை.
இதெல்லாம் எங்க போய் முடியப்போகுதோ தெரியல.” என்று நினைத்து கண்ணீர் சிந்தியபடி சாப்பிட தொடங்கினாள் தேன்மொழி.
அங்கே உதையா தேன்மொழியின் தம்பி ஆதவனையும், அம்மா விஜயாவையும் அழைத்துக் கொண்டு போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று அவளை காணவில்லை என்று கம்ப்ளைன்ட் கொடுத்தான்.
நடந்த அனைத்தையும் விசாரித்து தெரிந்துக் கொண்ட இன்ஸ்பெக்டர் “ஓகே ஓகே. கம்ப்ளைன்ட் குடுத்துட்டீங்க இல்ல.. இனிமே நாங்க பாத்துக்கிறோம். நீங்க வீட்டுக்கு போங்க.
உங்க பொண்ணு காணாம போய் முழுசா இன்னும் 24 மணி நேரம் கூட ஆகல. முதல்ல கடத்திட்டு போனது யாரு, அவனுங்க எதுக்கு உங்க பொண்ண கடத்திட்டு போனாங்கன்னு கண்டுபிடிக்கணும்.
கடத்தல் காரங்க கிட்ட இருந்து ஏதாவது கால் வந்துச்சுன்னா, இங்க வந்து சொல்லுங்க. அப்புறம் என்ன பண்றதுன்னு பார்க்கலாம்.” என்றார்.
“சார் எனக்கு ரொம்ப பயமா இருக்கு சார். எப்படியாவது சீக்கிரம் என் பொண்ண கண்டு பிடிச்சு கொடுத்துடுங்க.” என்று விஜயா இன்ஸ்பெக்டரின் முன்னே கண்ணீருடன் கையெடுத்து கும்பிட்டு கெஞ்சினாள்.
“ம்ம்.. பார்க்கலாம் மா. உங்க பொண்ணோட ஒரு கேஸ் மட்டுமா இந்த போலீஸ் ஸ்டேஷன்ல இருக்கு?
வரிசையா எத்தனை கேஸ் நாங்க பாத்துட்டு இருக்கோம்னு எங்களுக்கு தானே தெரியும்.. உங்க பொண்ண யாராவது கடத்திட்டாங்களோ.. இல்ல, அவளே எவன் கூடயாவது ஓடிப் போயிட்டாளோ என்னமோ..!!
யாருக்கு தெரியும்? அதெல்லாம் பொறுமையா இன்வெஸ்டிகேஷன் பண்ணி பாத்தா தான் தெரியும்.
நீங்க முதல்ல இங்க இருந்து கிளம்புங்க. ஏதாவது தகவல் கிடைச்சா நாங்க கால் பண்ணி சொல்றோம். அப்ப வந்தா போதும்.” என்று இன்ஸ்பெக்டர் மெத்தனமாக பேச, உதையாவிற்கு சுர்ரென்று கோபம் வந்துவிட்டது.
“சார்.. என்ன சார் பேசிட்டு இருக்கீங்க நீங்க? என் ரிலேட்டிவ் பையன் ஒருத்தன் தேன்மொழிய யாரோ நாலு பேர் மயக்கம் மருந்து கொடுத்து கடத்திட்டு போறதை நேர்லயே பார்த்திருக்கான்.
அந்த ஏரியா பக்கம் நிறைய வீட்ல சிசிடிவி கேமரா வச்சிருக்காங்க. அங்க போய் உடனே விசாரிச்சா, கண்டிப்பா தேன் மொழியை பற்றி ஏதாவது தகவல் கிடைக்கும்.
நீங்க உடனே ஆக்சன் எடுங்க. விடியறதுக்குள்ள எப்படியாவது அவளை கண்டு பிடிக்கணும் சார். அண்ட் தேனை பத்தி உங்களுக்கு எதுவும் தெரியாம நீங்களா அவள தப்பா பேசாதீங்க.
குடும்ப கஷ்டத்தை தெரிஞ்சு வளர்ந்த பொண்ணு சார் அவ. அப்படியெல்லாம் யார் கூடையும் ஓடிப் போயிருக்க மாட்டா. யாரையும் எனக்கு தெரிஞ்சு அவ லவ் பண்ணது கூட இல்லை.” என்று கண் கலங்கச் சொன்னான் உதையா.
“இங்கே பாருங்க தம்பி போலீஸ்காரங்கன்னா நாங்க நாலா பக்கமும் தான் யோசிக்கணும். இங்க வந்து ஸ்டேஷன்ல நின்னுகிட்டு அத செய் இத செய்னு எங்க வேலைய எப்படி செய்யணும்னு நீங்க எங்களுக்கு சொல்லிக் கொடுக்காதீங்க.
உங்களுக்கு அந்த பொண்ணு மேல அவ்ளோ அக்கறை இருந்தா, நீங்களே போய் அவளை தேடி கண்டுபிடித்துக் கொள்ள வேண்டியது தானே!
எங்க கிட்ட வந்து எதுக்கு எங்க டைமையும் சேர்த்து வேஸ்ட் பண்றீங்க? நாங்க இறங்கி விசாரிச்சா தான் எல்லா உண்மையும் தெரியும்.
ஏன் நல்லவன் மாதிரி நீ இவங்க கூட கம்ப்ளைன்ட் கொடுக்க வந்துட்டு, யாருக்கும் தெரியாம நீயே கூட அவளை கடத்தி வச்சிருக்கலாம்..!! யாருக்கு தெரியும்? நாங்க பொறுமையா இன்வெஸ்டிகேஷன் பண்ணி அந்த பொண்ண கண்டுபிடிக்கும் போது, இதுக்கு பின்னாடி யார் இருக்காங்கன்னு எல்லாருக்கும் தெரியும்..
இப்ப கொஞ்சம் வெளிய போறீங்களா? எனக்கு வேற வேலை இருக்கு.” என்று மிரட்டும் தோரணையில் சொன்னார் இன்ஸ்பெக்டர்.
அவர் பேசிய வார்த்தைகளை எல்லாம் உதையவால் பொறுத்துக் கொள்ளவே முடியவில்லை. அதனால் அவன் சீறிக் கொண்டு அவரிடம் ஏதோ சொல்ல போக,
அவனை பிடித்து தடுத்த ஆதவன் “இல்ல வேண்டாம் அண்ணா கொஞ்சம் பொறுமையா இருங்க.
அவர் சொன்ன மாதிரி அக்காவை தேடுறதுக்கு நம்ம ஏதாவது பண்ணி பார்க்கலாம். போலீஸ் ஸ்டேஷன்ல நாம்ம சவுண்டு விட்டுட்டு இருந்தா, வேலை நடக்காது.
அப்புறம் அதனால தேனு தானே பாதிக்கப்படுவா... இப்ப தானே கம்ப்ளைன்ட் பண்ணி இருக்கோம்..!! நாளைக்கு காலைல வந்து என்ன ஏதுன்னு விசாரிச்சு பார்க்கலாம். வாங்க முதல்ல இங்கிருந்து கிளம்பலாம்.” என்று சொல்லி அவனை வெளியே அழைத்துச் சென்றான்.
“அந்த தம்பி பேசினத எல்லாம் மனசுல வச்சுக்காம தயவுசெஞ்சு என் பொண்ண எப்படியாவது கண்டுபிடித்து கொடுத்துடுங்க சார்.
அவளை எப்படி காலையில அனுப்பி வச்சனோ, அதே மாதிரி அவ பத்திரமா திரும்பி வந்ததை பாத்தா தான் எனக்கு போன உசுரு திரும்ப வரும்.” என்று விஜயா இன்ஸ்பெக்டரை பார்த்து கண்ணீருடன் அழுது கெஞ்ச,
“இப்ப தானே மா கம்ப்ளைன்ட் குடுத்து இருக்கீங்க.. நாங்க விசாரிச்சு பார்த்தா தான் என்ன நடந்துச்சுன்னு தெரியும். நான் எதாவது தகவல் தெரிஞ்சா சொல்லி அனுப்புறேன்.
இல்லைன்னா உங்களுக்கு கால் பண்ண சொல்றேன். நீங்க போயிட்டு வாங்க பாத்துக்கலாம். உங்க பொண்ணு கிடைச்சிடுவா.” என்று இன்ஸ்பெக்டர் சொல்ல, கலங்கிய கண்களுடன் அவரைப் பார்த்து கையெடுத்து கும்பிட்டு விட்டு வெளியே வந்தாள் விஜயா.
அங்கே இருந்த உதையா வேகமாக அவள் அருகில் சென்று “நீங்க பொறுமையா தானே பேசுனீங்க.. உங்க கிட்ட என்ன சொன்னான் அந்த இன்ஸ்பெக்டர்?
எனக்கு இவன் மேல எல்லாம் நம்பிக்கையே இல்ல மா. இவன் என்ன அவளை கண்டு பிடிக்கிறது? இவனுக்கு முன்னாடி நான் அவளை கண்டு பிடிக்கிறேன்.” என்று தன் குரலை உயர்த்தி சொல்ல,
“என் பொண்ணு கிடைச்சாலே எனக்கு போதும் பா. ஆனா இங்க நின்னு இதெல்லாம் பேசிட்டு இருக்க வேண்டாம். தேன்மொழி காணாம போன இடத்தில ஏதாவது கிடைக்குதான்னு பார்க்கலாம் வா.” என்ற விஜயா அவனுடன் அங்கிருந்து கிளம்பினாள்.
அங்கே அர்ஜுனின் அறையில் அவனுக்கு போடப்பட்டு இருந்த ட்ரிப்சை மாற்றிவிட்ட நான்சி தேன்மொழியின் அருகே சென்று “இன்னும் கொஞ்ச நேரத்துக்கு நான் இந்த பக்கம் வர மாட்டேன் மேடம். மிஸ்ஸஸ் பிரதாப் சொன்ன மாதிரி உள்ள இருக்கிற ரூம்ல நான் ஸ்டே பண்ணிக்கிறேன்.
சாரோட ட்ரிப்சை பத்தி எல்லாம் நீங்க கவலைப்பட வேண்டாம். நான் எப்போ எல்லாம் அதை சேஞ்ச் பண்ணனுமோ அந்த டைமுக்கு அலாரம் வச்சிருக்கேன்.
அந்த டைம் ஆகும்போது நானே வந்து சேஞ்ச் பண்ணிடுவேன். அண்ட் உங்க கிட்ட இத சொல்லலாமான்னு எனக்கு தெரியல.
மிஸ்ஸஸ் பிரதாப் உங்க கிட்ட தமிழ்ல பேசுனதுனால எனக்கு பாதி புரியல. பட் அவங்க உங்க கிட்ட ஏதோ செய்ய சொல்லிட்டு போயிருக்காங்கன்னு மட்டும் என்னால புரிஞ்சுக்க முடிஞ்சது.
அது எதுவா இருந்தாலும், நீங்க செய்ய ட்ரை பண்ணுங்க. ஏன்னா இந்த ரூம்ல ரெஸ்ட் ரூம் தவிர மற்ற எல்லா இடத்திலேயும் ஃபுல்லா கேமரா இருக்கு.
மிஸ்டர் அண்ட் மிஸஸ் பிரதாப் எப்ப வேணா இங்க என்ன நடக்குதுன்னு பார்ப்பாங்க.
சோ அவங்க சொன்ன மாதிரி நீங்க கேட்கலைனா, மேபி அவங்க உங்களுக்கு பனிஷ்மென்ட் கொடுக்க சான்ஸ் இருக்கு.
நான் இத உங்க நல்லதுக்காக தான் சொல்றேன். நீங்க பாத்துக்கோங்க!” என்று ஆங்கிலத்தில் சொல்லிவிட்டு பெரிய வீடு போல இருந்த அந்த விசாலமான அறைக்குள் இருந்த சிறிய அறைக்கு சென்று டோரை லாக் செய்து கொண்டாள்.
பயத்துடன் சுற்றி முற்றி பார்த்த தேன்மொழிக்கு அங்கங்கே இருந்த சிசிடிவி கேமராக்கள் தெளிவாக தெரிந்தது. அதனால் வந்த கடுப்பில் வேகமாக எழுந்து அங்கே இருந்த பெரிய வாட்ரோப் ஒன்றை திறந்தாள்.
அதில் அவள் அணிவதற்கான சில ஆடைகள் இருந்தது. அதை எடுத்துக் கொண்டு போய் டிரெஸ்ஸிங் டேபிள் முன்னே அமர்ந்த தேன்மொழி அவள் அணிந்திருந்த அனைத்து ஆபரணங்களையும் கழட்டி அதன் அருகில் இருந்த டேபிள் டிராயருக்குள் வைத்து பூட்டினாள்.
பின் ரெஸ்ட் ரூமிற்கு சென்றாள். அங்கே விஷாலமாக இருந்த ரெஸ்ட் ரூம் ஏரியாவில் தனித்தனியாக வாஷ் ரூம், பாத்ரூம்ஸ், டாய்லெட், சேஞ்சிங் ரூம் எனறு இருந்தது.
அனைத்தையும் வியப்புடன் பார்த்த தேன்மொழி தனது ஆடைகளுடன் சேஞ்சிங் ரூமிற்குள் நுழைந்தாள்.
- மீண்டும் வருவாள்..
எங்களது பேஸ்புக் குரூப்பில் இணைய இந்த லிங்கை கிளிக் செய்யவும்:
facebook.com

Log in to Facebook
Log in to Facebook to start sharing and connecting with your friends, family and people you know.
Author: thenaruvitamilnovels
Article Title: Chapter-9
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.