Chapter-9

thenaruvitamilnovels

The World of Words
Staff member
Dec 25, 2024
163
0
16
www.amazon.com
சிரித்த முகமாக விஷ்ணு “நான் சுடு தண்ணி போட்டுட்டேன்.

சட்னி அரைச்சு வச்சிட்டேன். நான் குளிச்சிட்டு வர்றதுக்குள்ள எனக்கு 3 தோசை மட்டும் ஊத்தி வைக்கிறியா செல்லம் ப்ளீஸ்?” என்று கெஞ்சலாக ஷாலினி இடம் கேட்க,

“ம்ம்.. போனா போகுதுன்னு இன்னைக்கு ஒரு நாள் உனக்கு தோசை ஊத்தி தரேன்.

அதுக்குன்னு இனிமே இப்படி எல்லாம் என்கிட்ட வேலை சொல்லிட்டு இருக்க கூடாது புரிஞ்சுதா?” என்று கேட்டாள் அவள்.

அவள் குடித்துவிட்டு கையில் காலியாக வைத்திருந்த டீக்கப்பை வாங்கிய விஷ்ணு அவள் கன்னத்தில் செல்லமாக கிள்ளிவிட்டு,

“என் ராணி டி நீ! உன்கிட்ட நான் வேலை வாங்கணும்னு நினைப்பேனா செல்லம்?

இன்னைக்கு மட்டும் மாமாவுக்கு கொஞ்சம் கருணை காட்டுவியாம்.

லஞ்ச் நம்ம வெளிய சாப்பிட்டுக்கலாம் ஓகேவா?” என்று கேட்க,

சரி என்ற ஷாலினி எழுந்து ரெப்ரெஷ் ஆகிவிட்டு அவனுக்கு தோசை ஊற்றுவதற்காக கிச்சனுக்கு சென்றாள்.

அங்கே தோசை ரெடியாவதற்குள் குளித்துவிட்டு வந்த விஷ்ணு தலைத் துவட்டியபடி இருக்க,

தோசை சுட்டு தட்டில் போட்டு கொண்டு வந்த ஷாலினி அதை பிய்த்து ஏற்கனவே அவன் அடைத்து வைத்திருந்த தேங்காய் சட்டினியில் தொட்டு அவனுக்கு ஊட்டி விட்டாள்.

அதை தன் வாயில் வாங்கிய விஷ்ணு “நான் சாப்பிட்டுகிறேன் நீ போய் குளி.

உனக்கு கிளினிக் ஒரு ஐடியா இல்லையா?” என்று கேட்க,

“நீதான் வேற ஒருத்தர்கிட்ட வேலை செய்ற.. சோ நீ டைமுக்கு போலனா உன்ன மேனேஜர் திட்டுவாரு.

ஆனா அது என்னோட ஹாஸ்பிடல். குட்டியா இருந்தாலும் அதுக்கு நான் தான் ஓனர்.

இங்க சுத்தி இருக்கிற அத்தனை கிராமத்துக்கும் ஒரே ஒரு ஹாஸ்பிட்டல் நான் மட்டும்தான் வச்சிருக்கேன்.

யாருக்கு எப்ப எமர்ஜென்சின்னு கூப்பிட்டாலும் டைம் பாக்காம நான் எல்லாருக்கும் ட்ரீட்மெண்ட் பண்றேன் இல்ல!

சோ என்னால காலையில மத்தவங்க மாதிரி பத்து மணிக்கெல்லாம் அங்க போய் உட்கார முடியாது.

நானா பொறுமையா கிளம்பி 11-க்கு தான் போவேன்.

என்ன பத்தி இங்க இருக்கிறவங்க எல்லாருக்கும் தெரியும்.

சோ அவங்களே லேட்டா தான் வருவாங்க.

நீ முதல்ல சாப்பிட்டுட்டு கிளம்பு." என்ற ஷாலினி தொடர்ந்து அவனுக்கு ஊட்டி விட்டாள்.

“உன்னை எல்லாம் திருத்தவே முடியாதுடி!” என்ற விஷ்ணு அவசர அவசரமாக கிளம்பிவிட்டு,

அவள் ஊட்டிய தோசையையும் அரைகுறையாக மென்று முழுங்கிவிட்டு தனது பல்சர் பைக் ஸ்டார்ட் செய்து அவன் வேலை பார்க்கும் தேயிலை தோட்டத்தை நோக்கி செல்ல தொடங்கினான்.‌

அவனை அந்த பக்கம் அனுப்பிவிட்டு மெதுவாக குளித்து கிளம்பிய ஷாலினி தானும் தோசை சுட்டு சாப்பிட்டுவிட்டு அருகில் உள்ள அவரது கிளினிக்கை நோக்கி நடக்க தொடங்கினாள்.

அவள் அங்கே சென்றடையும் போது கிட்டதட்ட மணி 11:30 ஆகிவிட்டது.

அவள் வருவதற்காக காத்திருந்த ஏராளமானவர்கள் அவளை பார்த்தவுடன் சந்தோஷத்தில் எழுந்து நின்று அவளை வரவேற்றார்களே தவிர,

யாருக்கும் அவள் தாமதமாக வந்ததில் அவள் மீது கோபம் இருப்பதாக தெரியவில்லை.

அங்கே ரெகுலராக பிரஷர் செக் பண்ண வரும் பாட்டியின் கன்னத்தைப் பிடித்து கிள்ளிய ஷாலினி,

“எனக்கு குமுதா.. நான் வர்றதுக்கு லேட் ஆயிடுச்சுன்னு இவ்வளவு நேரம் என்ன கண்ட மேணிக்கு திட்டிட்டு இருந்துட்டு என்னை ஆள கண்ட உடனே அப்படியே சைலண்டாகி நடிக்கிறியா?” என்று விளையாட்டாக கேட்க,

“அடி போடி இவளே! உன்ன பத்தி எங்களுக்கு தெரியாதாக்கும்?

நீ நேரமா வந்தாதான் நாங்க ஆச்சரியப்படனும். நீ 12:00 மணிக்கு தான் வருவேன்னு நினைச்சேன்.

பரவால்ல இன்னைக்கு ஏதோ அதிசயமா சீக்கிரம் வந்துட்ட..!!” என்றார் குமுதா பாட்டி.

“என் டார்லிங் என்ன பாக்க தான் சீக்கிரமா வந்திருக்கா இன்னைக்கு!” என்று குமுதா பாட்டியின் கணவர் சொல்ல,

“பார்றா.. முருகேசா கரெக்டா கண்டுபிடிச்சிட்ட!

உனக்காக தான் நான் வந்தேன். நேத்து உனக்குன்னே ஒரு சுகர் ஃப்ரீ சாக்லேட் ஆர்டர் போட்டு வாங்கினேன்.

நல்லவேளை நீ பேசின உடனே எனக்கு கரெக்டா ஞாபகம் வந்துருச்சு.

இல்லனா உன்கிட்ட கொடுக்கவே மறந்திருப்பேன்.” என்ற ஷாலினி அவளது வெள்ளை நிற கோட்டில் இருந்த இரண்டு சாகட்டுகளை எடுத்து முருகேசன் தாத்தாவிடம் கொடுத்தாள்.

அதை வாங்கி தனது சட்டை பைக்குள் ஒளித்து வைத்துக் கொண்ட முருகேசன் தாத்தா குமுதா பாட்டியை பார்த்து

“என்னடி அப்படி குறுகுறுன்னு பாக்குறவ?

என் டார்லிங் இந்த சாக்லேட்டை எனக்காக வாங்கி குடுத்து இருக்கா..

நீ எப்படிப் பார்த்தாலும் நான் இதுல இருந்து எல்லாம் உனக்கு பங்கு குடுக்க மாட்டேன்.” என்று சொல்லிவிட்டு தன் சட்டை பாக்கெட்டை அவரது இரு கைகளாலும் மறைத்துக் கொண்டார்.

“அட போடா பொசகெட்ட மனுசா.. கட்டையில போற வயசுல இந்த ஆளுக்கு சாக்லேட் கேக்குது சாக்லேட்..!!” என்ற குமுதா பாட்டி தன் முகத்தை திருப்பிக் கொள்ள,

அந்த வயதானவர்களுக்கு நடுவில் இருக்கும் அழகிய காதலை பார்த்து தனக்கு சிரித்தபடி உள்ளே சென்று தன் சேரில் அமர்ந்த ஷாலினி,

“எனக்கும் விஷ்ணுவுக்கும் வயசானதுக்கு அப்புறமும் நாங்களும் இதே மாதிரி எப்பயும் ஒரே லவ்ஸ் பண்ணிக்கிட்டு ஜாலியா இருக்கணும்.

நாங்க ஒருவேளை சென்னையில கல்யாணம் பண்ணி செட்டில் ஆகி இருந்தா கூட,

அங்க இவ்வளவு சந்தோஷமா நிம்மதியா இருந்துருப்போமான்னு தெரியல.

இங்க இருக்கிற நல்ல மனுஷங்க, சுத்தமான காற்று, எங்க பார்த்தாலும் பசுமையான இடம் இது எல்லாமே மனசுக்கு நிறைவா இருக்கு.” என்று நினைத்து பார்த்தாள்.

அப்போது அவளுக்கு கூடவே தனது கடந்த கால ஞாபகங்களும் வந்து செல்ல,

உடனே அவள் முகம் சோகத்தை தத்தெடுத்துக் கொண்டது.

அதனால் “இல்ல ஷாலினி நடந்ததை பத்தி எப்பயும் யோசிச்சு வருத்தப்படாம ஹாப்பியா இருக்கணும்னு விஷ்ணு சொல்லி இருக்கான்ல!

உனக்கு உன் விஷ்ணுவும், இந்த அன்பான கிராமத்து மக்களும் இருக்கிற வரைக்கும் நீ எதுக்காக எப்பயோ நடந்ததையெல்லாம் நெனச்சு வருத்தப்படணும்?

உனக்கு இது போதும். நீ மக்களுக்கு சேவை செய்யணும்னு நினைச்சு தானே மெடிசன் படிச்ச!

நீ இப்ப அதுதான் செஞ்சுட்டு இருக்க. அப்புறம் வேற என்ன வேணும்?

எதை நெனச்சும் வருத்தப்படாம வேலையை பாரு.” என்று தனக்குத்தானே சொல்லிக் கொண்டு தன் மனதை கேற்றிய ஷாலினி அங்கே வந்திருக்கும் நோயாளிகளை கவனிக்க தொடங்கினாள்.

அங்கே மோனிஷா கொடுத்த டிரீட்மென்ட்னால் கொஞ்சம் நார்மலாகி அவனுடைய பங்களா வீட்டில் உள்ள தனி அறையில் பால்கனி ஓரமாக நின்று கொண்டிருந்த விக்ராந்த் ஷாலினியின் போட்டோவை கையில் வைத்துக் கொண்டு அவளைப் பற்றி யோசித்து கொண்டு இருந்தான்.

“நான் மோனிக்கா கிட்ட ரொம்ப ஈஸியா உங்க அண்ணி இங்க சீக்கிரம் வந்துருவான்னு சொல்லிட்டேன்.

ஆனா நீ எங்க இருக்கன்னு தெரியாம என்னால எப்படி உன்ன கண்டுபிடிக்க முடியும் ஷாலினி?

உனக்கு என்ன ஆச்சு? அந்த இன்சிடென்ட் நடந்திருக்கக்கூடாது தான்.

நான் உன் பக்கத்துல இருந்திருந்தா கண்டிப்பா இப்படி எல்லாம் நடக்க விட்டிருக்கவே மாட்டேன்.

ஆனா அதுக்கப்புறம் நீ எங்க போனன்னு மட்டும் ஏன் என்னால கண்டுபிடிக்கவே முடியல?

அன்னைக்கு நான் உன் கூட இல்லாததுனால நீ என்ன இன்னும் பழி வாங்குறியா?

என் மனசு முழுக்க நீ தாண்டி இருக்க..

ப்ளீஸ் ஷாலு.. நீ எங்க இருக்கன்னு ஏதாச்சு ஒரு சின்ன க்ளு குடு..

எனக்கு நீ இருக்கிற இடம் மட்டும் தெரிஞ்சிருச்சுன்னா, உடனே ஓடி வந்து உன்ன தூக்கிக்கிட்டு இங்க வந்துருவேன்.

இன்னும் நான் எத்தனை நாள் உனக்காக வெயிட் பண்ணனும்?
உன்னோட
என்ன பாத்தா உனக்கு பாவமா இல்லையாடி?” என்று விக்ராந்த் ஷாலினியின் ஃபோட்டோவை பார்த்து புலம்பிக் கொண்டிருக்க,

அப்போது அவனைத் தேடிக் கொண்டு அங்கே வந்த அஜய்,

“டேய் மச்சான் இன்னும் எத்தனை நாள் தாண்டா இந்த பொண்ணோட போட்டோவ பார்த்து தனியா பேசிட்டு நிப்ப?

நானும் உனக்காக இத்தனை வருஷமா அவள எங்கையோ தேடி பாத்துட்டேன்.

உன் தம்பி கிட்ட சொல்லி கூட அந்த பொண்ணு கண்டுபிடிக்க ட்ரை பண்ணேன்.

நமக்கு தெரிஞ்ச ஆளுங்கள்ள இருந்து, டிடெக்டிவ் ஏஜென்சி வரைக்கும் எல்லாரையும் வச்சு அந்த பொண்ண தேடி பாத்தாச்சு.

அவ எங்க இருக்கா, இருக்காளா இல்லையான்னு கூட தெரியல.

அவளுக்காக கண்ணு முன்னாடியே இருக்கிற நம்ம சோனியாவை நீ அழ வைப்பாயா?

அந்த பொண்ணு பாவம்டா. எனக்கு நம்ம மோனி எப்படியோ சோனியாவும் அப்படித்தான்.

உனக்கு மட்டும் ஏன் அவளை பார்த்தா பாவமாவே தெரிய மாட்டேங்குது?

பேசாம இந்த ஷாலினி பத்தி யோசிக்கிறதை எல்லாம் விட்டுட்டு நீ நம்ம சோனியாவை கல்யாணம் பண்ணி செட்டில் ஆகுற வழிய பாரு.

அப்படியே துருவுக்கும் மோனிஷாவுக்கும் கல்யாணம் பண்ணி வச்சிட்டினா, எல்லாரும் குடும்பமா செட்டில் ஆயிடலாம்." என்று அவன் பாட்டிற்கு பேசிக்கொண்டே போனான்.

அதனால் வந்த கடுப்பில் அவனது டி-ஷர்ட்டை தன் ஒற்றை கையால் பிடித்து அவனை தன் பக்கம் இழுத்து,

தனது மற்றொரு கையால் அவன் முகத்தில் குத்துவதைப் போல ஆக்ரோஷமான முகத்துடன் சென்ற விக்ராந்த்,

பின் அப்படியே அவனை தாக்காமல் தன் கையை காற்றில் நிறுத்தி,

“பேசுனது நீயா இருக்கறதுனால தான் உன்னை எதுவும் பண்ணாம உயிரோடு விடுறேன்.

ஒழுங்கு மரியாதையா இங்க இருந்து ஓடிப்போயிரு.

உனக்கு என் ஷாலினிய தேடி கண்டுபிடிக்க துப்பில்லேன்னா மூடிட்டு இரு.

அவள எப்படி கண்டுபிடிக்கிறதுன்னு எனக்கு தெரியும்.

என்னைக்கா இருந்தாலும் அவள் எனக்கானவ.

தானாவே அவ என்கிட்ட வந்து சேறுவான்னு எனக்கு நம்பிக்கை இருக்கு.

நீ என்ன அபசகுனமா அவ இருப்பாளோ, மாட்டாளோனு பேசுற?

உனக்கு சோனியா மேல அவ்ளோ அக்கறை இருந்தா, நீ வேணும்னா அவளை கல்யாணம் பண்ணிக்கோ.

நானே உங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணி வைக்கிறேன்.

ஆனா தேவையில்லாம என்னையும் அவளையும் சேர்த்து வச்சு பேசுற வேலை வெச்சுக்காத." என்று சொல்லி மிரட்டிவிட்டு அவனை கீழே தள்ளினான்.

உடனே எழுந்து நின்ற அஜய் “டேய் உனக்கு என்ன பைத்தியம் புடிச்சிருக்கா டா?

நான் எனக்கு சோனியா மோனிஷா மாதிரி அவளும் எனக்கு தங்கச்சி தான்னு சொல்லிட்டு இருக்கேன்.‌.

என்ன போய் அவளை கல்யாணம் பண்ணிக்க சொல்ற?

அவ உன்ன தான் லவ் பண்றாளா இடியட்..!!” ‌ என்று சொல்ல,

அவனைப் பார்த்து முறைத்த விக்ராந்த் “ம்ம்.. எனக்கு சோனியாவும், மோனிஷாவும் ஒன்னு தான் போதுமா?

என்னால என் தங்கச்சிய எல்லாம் கல்யாணம் பண்ணிக்க முடியாது.

போய் அவகிட்ட சொல்லு. இதை எத்தனையோ தடவை நான் டைரக்டா அவ கிட்டையே சொல்லிட்டேன்.

அவ கேக்க மாட்டேன்னு பிடிவாதமா இருந்தா அதுக்கு நான் ஒன்னும் பண்ண முடியாது.

காலையில இருந்து ஒவ்வொருத்தரா வந்து இதையே சொல்லி என இரிடேட் பண்ணனும்னே இருக்கீங்களா?

நானே என் ஷாலினி எங்க இருக்கான்னு தெரியாம பைத்தியம் பிடிச்சு திரிச்சிட்டு இருக்கேன்.

நீங்களும் வேற என்ன படுத்தாதீங்க.. இங்க பாரு நல்லா கேட்டுக்கோ..

இனிமே தானா என் ரூம் டோரை ஓப்பன் பண்ணி வெளிய வர்ற வரைக்கும், யாரும் இந்த பக்கமே வரக்கூடாது.

அதை மீறி வந்தீங்க, நான் மனுசனாவே இருக்க மாட்டேன் பார்த்துக்கோங்க!” என்று அவனை எச்சரிக்கும் தோரணையில் சொன்னான்.

இதே வேறு யாராவது சொல்லி இருந்தால் அவர்கள் ஒரு பேச்சுக்கு சொல்கிறார்கள் என்று நினைத்துக் கொள்ளலாம்.

ஆனால் விக்ராந்திடம் பேச்சிருக்கு வேலையே இல்லை.

அவனிடம் எல்லாமே வீ
ச்சுதான் என்று நன்றாக அறிந்திருந்த அஜய்க்கு அவனிடம் மேலும் பேசி தன் உயிரை அவன் கையில் காவு கொடுக்க விருப்பமில்லை.

அதனால் அவனிடம் பாய் கூட சொல்லாமல் வேகமாக அந்த அறையை விட்டு வெளியேறினான்.
- மீண்டும் வருவான் 💕
 

Author: thenaruvitamilnovels
Article Title: Chapter-9
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.