அத்தியாயம் 9: நீ என்னோட லக்கி சார்ம்
இசையின் உணவகத்தில்...
ஏற்கனவே அவர்கள் இரவு உணவை தயாராக வைத்து இருந்ததாலும், அங்கு பெரியதாக கூட்டம் இல்லாததாலும், கவிதாவும், ஜீவாவுமே, அங்கு சாப்பிட வந்தவர்களை கவனித்துக் கொண்டு இருந்தனர்.
இது இசை தினமும் பார்க்கும் காட்சி என்பதால், இதை அவன் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.
ஆனால் பிரியாவோ அங்கு இருந்த ஒவ்வொருவரையும் நுணுக்கமாக கவனித்துக் கொண்டு இருந்தாள்.
அவர்கள் உள்ளே வருவதை கவனித்த ஜீவா,
“வா மா. நீங்களும் வந்து சாப்பிடுங்க." என்று அவர்களை பாசமாக சாப்பிட அழைத்தான்.
இன்று அவர்கள் நிறைய நேரம் வெளியில் சுத்தி விட்டு வந்ததால், அவர்கள் அனைவருக்குமே மிகவும் பசியாக தான் இருந்தது.
ராகுல் சாப்பிடுவதற்காக டைனிங் டேபிளில் அமர சென்றான்.
அதை கவனித்த பிரியா, கண்களாலேயே வேண்டாம் என்று அவனைப் பார்த்து சைகை செய்தாள்.
இவள் ஏன் சாப்பிட செல்பவனை சாப்பிட வேண்டாம் என்று தடுக்கிறாள் என்று ஜீவாவும், இசையும், அவளையே குறு குறுவென்று பார்த்துக் கொண்டு இருந்தனர்.
இசையின் அருகே சென்ற பிரியா, “நம்ப வர வழியில ஒரு ரெஸ்டாரன்ட்ல கூட்டமா இருந்துச்சுல்ல..
நானும், ராகுலும், அங்க போய் சாப்பிடுறோம்." என்று மெல்லிய குரலில் அவனுக்கு மட்டும் கேட்கும் படி சொன்னாள்.
அதைக் கேட்டவுடன், இசையின் மனம் வலித்தது.
இங்கு ஒருவேளை உணவு சாப்பிட்ட பின்பு இவளுக்கே இங்கு மீண்டும் உணவு உண்ண பிடிக்கவில்லை என்றால், மற்றவர்களை தனது உணவகத்தை தேடி எப்படி வரவழைப்பது என்று நினைத்து அவன் வருத்தப்பட்டான்.
இன்னொரு பக்கம் மதியான உணவு நேரத்தில் பிரியா சாப்பிட்ட உணவுகள் அனைத்தையும் அவன் சமைத்ததே.
அதனால், “அப்ப நான் சமைச்சத உனக்கு சாப்பிட பிடிக்கலையா பிரியா..??" என்று நினைத்து வருத்தப்பட்டான்.
பிரியா இப்போது அவன் தன் மனதில் என்ன நினைத்துக் கொண்டு இருக்கிறான் என்பதை புரிந்து கொண்டு,
“இப்ப எதுக்கு உடனே முகத்த இப்படி வச்சுக்கிற.??
நான் தான் இங்க ஏற்கனவே சாப்பிட்டுடனே..!!
இங்க என்ன பிரச்சனை, ஏன் சேல்ஸ் கம்மியா இருக்குன்னு எனக்கு தெரியும்.
பட் அங்க மட்டும் ஏன் சேல்ஸ் அதிகமா ஆகுது..
கஸ்டமர்ஸ்க்கு பிடிக்கிற மாதிரி அங்க அப்படி என்ன இருக்குன்னு நம்ம தெரிஞ்சுக்கணும் இல்ல..
அப்ப தான் நம்ம எங்க தப்பு பண்றோம்னு ஐடென்டிஃபை பண்ணி இந்த ரெஸ்டாரண்டை அப்கிரேட் பண்ண முடியும்.
எப்ப பாத்தாலும் எமோஷனலா, செண்டிமெண்டலாவே, இருந்தா பிசினஸ் பண்ண முடியாது இசை.
ஒரு பிசினஸ்மேனுக்கு பாக்கிற எல்லாமே பிசினஸா தான் தெரியணும்.
இம்ப்ரூவ் யுவர் செல்ஃப் ஃபர்ஸ்ட்." என்று ஆளுமை நிறைந்த குரலில் அவனுக்கு மட்டும் கேட்கும்படி சொல்லிவிட்டு ராகுலை அழைத்துக் கொண்டு வெளியே சென்றாள் பிரியா.
பிரியா இசையிடம் என்ன சொன்னாள் என்று அறிந்து இருக்காததால், ஒருவேளை இவர்கள் இருவரும் ஏதோ சண்டை போட்டுக் கொண்டதால் தான் பிரியா கோபித்துக் கொண்டு செல்கிறாள் போல என்று நினைத்த ஜீவா,
அவன் அருகே சென்று என்ன ஆனது என்று இசையிலும் விசாரித்தான்.
இசை, பிரியா தன்னிடம் சொல்லிவிட்டு சென்றதை ஜீவாவிடம் சொன்னான்.
அதைக் கேட்ட ஜீவா ஆச்சரியத்துடன் புன்னகைத்துடன்,
“சூப்பர் மச்சான்.. நம்ம பிரியா வேற லெவல் டா.
இத்தன நாளா நமக்கு இது தோணவே இல்ல பாரேன்..
அவ சொன்னது கரெக்டு தான்.
நம்ப இன்னும் வளர வேண்டியது நிறைய இருக்கு.
நமக்கு பிசினஸ் senseஏ இல்ல.
பிரியா, நம்ம லக்கி charmஆ இருப்பான்னு எனக்கு தோணுது." என்று மகிழ்ச்சியாக சொன்னான்.
“ஆமா. இவ என் வாழ்க்கைய மாத்த வந்த தேவதை டா." என்று ஒரு மாதிரி ஃபீலாகி சிறு வெட்கத்துடன் சொன்னான் இசை.
உடனே அவனை பார்த்து சிரித்த ஜீவா, “போதும் வழியிது. போய் தொடச்சிட்டு, கஸ்டமர கவனி டா." என்றான் கிண்டலாக.
ராகுலை கூட்டிக் கொண்டு கூட்டமாக இருந்த அந்த ஆடம்பரமான ரெஸ்டாரண்டிற்கு சென்று சேர்ந்தாள் பிரியா.
அங்கு இருந்த ஒவ்வொரு சிறிய விஷயங்கள் கூட அவளுடைய பார்வையில் இருந்து தப்பவில்லை.
அந்த உணவகம் பிரம்மாண்டமாக இருந்தது.
அங்கு அதிக கூட்டம் வருவதால், நிறைய வேலையாட்கள் பணிக்கு அமர்த்தப்பட்டு இருந்தனர்.
பிரியாவும், ராகலும், உள்ளே சென்ற பின் அவர்களுக்கு வெல்கம் டிரிங்க் காம்ப்ளிமென்ட்ரியாக கொடுத்து அவர்களை உள்ளே வரவேர்த்தனர்.
அதைப் பெற்றுக் கொண்டு வந்து ராகுலுடன் ஒரு டேபிளில் அமர்ந்தாள் பிரியா.
காம்ப்ளிமென்ட்ரி ட்ரிங்க்காக அவர்கள் கொடுத்து இருந்தது சாதாரண லெமன் ஜூஸ் தான்.
பிரியா அதை ஒரு சீப் குடித்து பார்த்தாள்.
அதற்கு பின் அவளால் அதை அடுத்த சிப் கொடுக்க முடியாத அளவிற்கு அது மோசமாக இருந்தது.
ஆனால் அதை அவர்கள் இலவசமாக கொடுப்பதால், மற்றவர்கள் யாரும் அதை கண்டிப்பாக குறை சொல்ல போவதில்லை என்று நினைத்துக் கொண்டாள் அவள்.
பின் அந்த டேபிளில் கிடந்த மெனு கார்டை புரட்டி பார்த்து அதில் இருந்த ஒவ்வொரு சிறிய விஷயங்களையும் தன் மூளையில் சேவ் செய்து கொண்டாள் பிரியா.
ராகுல் வெறுமனே அந்த இடத்தை அப்படியே சேரில் அமர்ந்தவாறு சுற்றி பார்த்துக் கொண்டிருந்தான்
ஒரு வெயிட்டர் அவளிடம் வந்து பிரியாவிடம் அவர்களது ஆர்டர் பற்றி கேட்க,
அந்த மெனு கார்டில் அவள் முக்கியமான உணவுகள் என்று எதை எல்லாம் நினைத்தாளோ அது அனைத்தையும் சாம்பிளுக்கு ஆர்டர் செய்தாள்.
அவை அனைத்தும் கிட்டத்தட்ட ஐந்து நிமிடங்கள் முடிவதற்குள் அவர்களுடைய டேபிளுக்கு சுடச்சுட வந்து சேர்ந்தது.
அதை வைத்தே சமைப்பதற்கு என்று அங்கு ஏராளமான ஆட்கள் இருப்பதை புரிந்து கொண்டாள் பிரியா.
அவளுக்கு உணவுகளைப் பற்றிய ஆழ்ந்த ஞானம் இல்லை என்றால், அதன் சுவையை வைத்து இது நன்றாக இருக்கிறது என்று மொத்தமாக ஒரு முடிவிற்கு வந்து இருப்பாள்.
ஆனால் இந்த உணவுகளை அவளால் ரசித்து சாப்பிட முடியவில்லை.
அதில் ஏராளமான ஆர்டிபிசியல் ஃபுட் கலர்களும், உணவின் சுவையை அதிகப்படுத்துவதற்காக தேவை இல்லாத ஏராளமான மசாலாக்களும் சேர்க்க பட்டு இருந்தன.
ராகுல் அவனுக்கு இருந்த பசியில் இது எதையும் கவனிக்காமல், அவன் பாட்டுக்கு அந்த உணவுகளை தன் இஷ்டம் போல் சாப்பிட்டு மகிழ்ந்தான்.
பிரியா பொறுமையாக அந்த உணவுகளை ஆராய்ந்தபடி சாப்பிட்டவள், அந்த உணவகத்தின் ஒவ்வொரு மூலை, முடுக்குகளையும், தன் கண்களால் ஸ்கேன் செய்தாள்.
அந்த உணவகத்தின் ஆம்பியன்ஸ் நேர்த்தியாகவும், பிரம்மாண்டமாகவும், இருந்தது.
அளவில் இசையின் உணவகமும் இதுவும் ஒரே மாதிரி இருந்தாலும், அமைப்பில் இரண்டும் வேறு வேறு விதமாக இருந்தது.
அந்த உணவகத்தின் ஒரு பகுதியில் அனைவரும் பார்க்கும் வண்ணம் ஒரு பெரிய எல்.இ.டி. டிவி கூட வைக்கப்பட்டு அதில் பாடல்கள் ஓடி கொண்டு இருந்தது.
இரண்டு உணவகங்களும் ஒரே ஏரியாவில் இருந்தாலும், இந்த உணவகம் ஏன் முன்னிலையில் இருக்கிறது என்பதை பிரியாவால் ஓரளவு கணிக்க முடிந்தது.
ஒரு வழியாக ராகுலும், பிரியாவும், சாப்பிட்டு முடித்து விட்ட பின் வெயிட்டர் அவர்கள் சாப்பிட்ட உணவிற்கான பில்லை கொண்டு வந்து மெனு கார்டில் வைத்தான்.
அதைப் பார்த்த பிரியா மர்மமாக புன்னகைத்தாள்.
அந்த பில்லில்...
அவர்கள் சாப்பிட்டதற்கான பணம்: 2000 ரூபாய்
சர்வீஸ் சார்ஜ்: 100 ரூபாய்
ஜி.எஸ்.டி. : 360 ரூபாய்.
மொத்தம்: 2460 ரூபாய் என்று போட்டு இருந்தது.
வெயிட்டர் பிரியா வெகு நேரமாக அந்த பில்லையை பார்த்துக் கொண்டு இருந்ததால்,
“மேடம் கேஷா, இல்ல கார்டா..??" என்று கேட்க,
பிரியா “இந்த பில்லுல நிறைய மிஸ்டேக் இருக்கு.
இத நீங்க சரியா செக் பண்ணாம பிரிண்ட் பண்ணி இருக்கீங்கன்னு நினைக்கிறேன்.
இத நீங்க கரெக்ஷன் பண்ணி குடுத்தீங்கன்னா, நான் பே பண்ணிட்டு கிளம்புவேன்." என்று நிதானமான குரலில் சொன்னாள்.
அதனால் உடனே அந்த வெயிட்டர் பிரியாவின் கையில் இருந்து அந்த பில்லை வாங்கி செக் செய்தவன்,
“எல்லாமே கேரக்ட்டா தானே மேடம் இருக்கு..
இதுல நீங்க என்ன மிஸ்டேக்னு சொல்றீங்கன்னு எனக்கு புரியல." என்று அமைதியான குரலில் சொன்னான்.
“உங்களுக்கு புரியலைன்னா பரவால்ல.
இந்த ரெஸ்டாரன்ட்டோட மேனேஜரை வர சொல்லுங்க. நான் அவர் கிட்ட பேசிக்கிறேன்." என்று அவளும் நிதானமான குரலில் பொறுமையாக பதில் சொன்னாள்.
பிரச்சனையை வளர்க்கக் கூடாது என்பதற்காக வெயிட்டர்
“மேடம் அவரு உள்ள ரொம்ப பிசியா இருப்பாரு.
நீங்க எதுவா இருந்தாலும் என் கிட்டயே சொல்லுங்க.
நான் போய் அவர் கிட்ட சொல்றேன்." என்று பணிவான குரலில் சொன்னான்.
“அதான் நீங்க ஆல்ரெடி புரியலன்னு சொல்லிட்டீங்களே..
அப்புறம் நான் உங்க கிட்ட சொல்லி புரிய வைக்கிறதுக்கு எல்லாம் ஏன் என் டைம்ம வேஸ்ட் பண்ணனும்..??
போய் உங்க மேனேஜர வர சொல்லுங்க." என்று உறுதியான குரலில் சொன்னாள் பிரியா.
தான் என்ன சமாதானம் சொன்னாலும் இவள் கேட்கப் போவதில்லை என்று புரிந்து கொண்ட அந்த வெயிட்டர்,
அந்த பில்லை மீண்டும் பிரியாவிடமே கொடுத்துவிட்டு, அந்த உணவகத்தின் மேனேஜரை அழைப்பதற்காக சென்றான்.
கிச்சன் கிரராசரி ஐட்டங்கள் எல்லாம் சரியாக இருக்கிறதா என்று செக் செய்து கொண்டு இருந்த மேனேஜரிடம் அந்த வெயிட்டர், பில்லில் ஏதோ தவறு இருப்பதாக சொல்லி ஒரு பெண் பிரச்சனை செய்வதாக அவனிடம் சொன்னான்.
அதை கேட்டு கடுப்பான மேனேஜர், “எப்ப பாத்தாலும், என் இனவெடுக்கிறதுக்குன்னே யாராவது இப்படி தான் ஒருத்தர் வந்து சேர்ராங்க..
இப்ப என்னவாம் அவளுக்கு..??
கம்முனு பில்லில போட்டு இருக்கிற அமௌன்ட்ட அவ குடுத்துட்டு போக மாட்டாளாமா...???" என்று எரிச்சலான குரலில் கேட்டான்.
“நானும் எவ்வளவோ சொல்லி பாத்துட்டேன் சார்.
அந்த பொண்ணு நான் மேனேஜரை பாத்தே ஆகணும்னு ஒத்த கால்ல நிக்குது.” என்று வெயிட்டர் சொல்ல,
“அது சரி. பாக்க அவ ஆள் எப்படி இருக்கா..??
பில் அமௌன்ட் எவ்ளோ..??” என்று கேட்டான் மேனேஜர்.
“அந்த பொண்ணு பாக்குறதுக்கு நல்லா படிச்ச டீசன்ட்டானா பொண்ணு மாதிரி தான் இருக்கு.
அவங்க சாப்பிட்டது 2000 ரூபாய்க்கு தான்.
டேக்ஸ் எல்லாத்தையும் சேத்து 2460 ரூபாய் வருது சார்.” என்று வெயிட் சொல்ல,
“நம்ப டாக்ஸ் அதிகமா போட்டு இருக்கிறத பாத்துட்டு தான் அவ பொங்குறா போல.
கொஞ்சம் படிச்சிட்டாலே எல்லாருக்கும் திமிரு ஏறி போயிடுது.
இந்த நெட்ல வேற கண்டதை படிச்சுட்டு, நம்ம கிட்ட வந்து சட்டம் பேசி உயிரை வாங்குறது..
என்ன பண்ணி தொலயறது..
வா போவோம்." என்ற மேனேஜர் சலித்துக் கொண்டே வெயிட்டருடன் பிரியாவின் டேபிளுக்கு சென்றான்.
அவன்பிரியாவை பார்த்து ஃபார்மாலிட்டிக்காக புன்னகைத்து,
“ஹலோ மேடம்...
நான் தான் இந்த ரெஸ்டாரன்ட் ஓட மேனேஜர்.
நீங்க பில்லுல ஏதோ மிஸ்டேக்ஸ் இருக்குன்னு சொன்னீங்களாம்...
என்னான்னு சொல்லுங்க மேடம்.
நான் அதை கரெக்ட் பண்றேன்." என்று பவ்யமான குரலில் சொன்னான்.
தன்னிடம் இருந்த பில்லை அந்த மேனேஜரிடம் கொடுத்த பிரியா
“உங்களுக்கு சர்வீஸ் சார்ஜ் பே பண்றதுல எனக்கு இஷ்டம் இல்ல.
சோ அத ரிமூவ் பண்ணுங்க.
அண்ட் நீங்க ஜி.எஸ்.டி.யும் அதிகமா சார்ஜ் பண்ணி இருக்கீங்க.
இந்த மாதிரி ஏரியால இருக்கிற ரெஸ்டாரன்ட்ல நீங்க 18% ஜி.எஸ்.டி. சார்ஜ் பண்ண முடியாது." என்று உறுதியான குரலில் சொன்னாள்.
மேனேஜர் அவள் பேசிய விதத்திலேயே அனைத்து சட்ட திட்டங்களையும் அறிந்து வைத்து இருக்கிறாள் இவள் என்று புரிந்து கொண்டு
“சாரி மேடம் உங்களுக்கு எங்களோட சர்வீஸ்ல சேட்டிஸ்ஃபேக்ஷன் இல்லைனா,
நீங்க சர்வீஸ் சார்ஜ் பே பண்ண வேண்டாம்.
பட் ஜி.எஸ்.டி. கரெக்டா தான் போட்டு இருக்கோம்.
இத்தனை வருஷமா இங்க ரெஸ்டாரன்ட் நடத்திக்கிட்டு இருக்கோம்.
எங்களுக்கு எத்தன பர்சன்ட் ஜிஎஸ்டி போடறதுன்னு கூட தெரியாதா..??" என்று நக்கலாக கேட்க,
“So sad.. அப்போ இத்தன வருஷம் ஆகியும் நீங்க இத பத்தி தெரிஞ்சுக்காமயே இருக்கீங்க..
நீங்க இந்த ரெஸ்டாரன்ட் ஓட ஜி.எஸ்.டி பின் நம்பரை மட்டும் குடுங்க.
நீங்க கரெக்டா எத்தன பர்சன்ட் ஜி.எஸ்.டி. போடனும்னு நானே பாத்து சொல்றேன்." என்று அவளும் நக்கலான குரலில் சொன்னாள்.
எப்படியும் பிரியா அவனை தனியாக சமாளித்து விடுவாள் என்று நினைத்த ராகுல் அவர்களது கான்வர்சேஷனை ஏதோ டிவியில் படம் பார்ப்பது போல அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தான்.
அவனோடு சேர்ந்து அந்த ரெஸ்டாரண்டில் சாப்பிட்டுக் கொண்டு இருந்த ஒவ்வொருவரும் அவர்களுடைய வாக்குவாதத்தை தான் கவனித்துக் கொண்டு இருந்தனர்.
அதை கவனித்த மேனேஜர் இப்போது தான் அந்த பில்லில் பிரிண்ட்டாகி இருக்கும் அமௌன்ட்டை தெளிவாக பார்ப்பவன் போல பாவாளா செய்து,
“சாரி மேடம்...
நான் இப்ப தான் இத செக் பண்ணினேன்.
எங்க சைடுல தான் மிஸ்டேக் நடந்து இருக்கு.
நான் இப்பவே இத கரெக்ட் பண்ண சொல்றேன்.” என்று சொல்லி அந்த பில்லை வெயிட்ரிடம் கொடுத்து, அவன் காதில் எதையோ சொல்லி அனுப்பினான்.
சில நிமிடங்களிலேயே அந்த வெயிட்டர் தன் கையில் வேறொரு பில்லுடன் அங்கே வந்தான்.
அந்த பில்லில் மேனேஜர் அவனிடம் சொல்லி அனுப்பிய தொகை பிரிண்ட் செய்ய பட்டு இருந்தது.
அதை சரி பார்த்த மேனேஜர் பின் பிரியாவிடம் கொடுத்து,
“இப்ப அமௌன்ட் கரெக்டா இருக்கு பாருங்க மேடம்." என்றான்.
அதில் டோட்டல் அமௌன்ட்: 2100 ரூபாய் என்று போட்டு இருந்தது.
அதைப் பார்த்து திருப்தியாக புன்னகைத்த பிரியா,
“ஓகே.. இப்ப கரெக்டா இருக்கு.
நான் பே பண்றேன்." என்றவள் தன் ஹேண்ட் பேக்கில் இருந்து பணத்தை எடுத்து மெனு கார்டில் வைத்து வெயிட்டரிடம் கொடுத்தாள்.
பின் பிரியாவும் ராகுலும் அந்த டேபிளில் இருந்து எழுந்து வெளியே செல்ல திரும்ப அவர்களை தடுத்து நிறுத்திய மேனேஜர்,
“நாங்க பண்ண மிஸ்டேக்கால நீங்க சிரமப்பட்டுதுக்காக எங்கள மன்னிக்கணும்.
அத சரி பண்றதுக்காக எங்க சைடுல இருந்து இத நாங்க காம்பலிமண்ட்ரியா குடுக்கிறோம்." என்று சொன்னவன் ஒரு ஸ்வீட் பாக்ஸை பிரியாவிடம் நீட்டினான்.
ஓசியில் வருவதை தான் ஏன் வேண்டாம் என்று சொல்ல வேண்டும்? என்று நினைத்த பிரியா,
“இதுவாது நல்லா இருக்குமான்னு சாப்பிட்டு பார்க்கலாம்." என்று நினைத்து அதை பெற்று கொண்டு ராகுளுடன் அங்கு இருந்து கிளம்பினாள்.
நேரம் இரவு 10:00 மணியை கடந்து இருந்தது...
இசையின் உணவகத்தில்....
இப்போது அந்த உணவகமே வெறிச்சோடி போய் இருந்தது.
கவிதாவும் தன் வீட்டிற்கு சென்று இருந்தாள்.
இசையும், ஜீவாவும், தங்களுக்கென அவர்கள் எடுத்து வைத்து இருந்த உணவுகளை சாப்பிட்டு கொண்டு இருந்தனர்.
அப்போது தன் தட்டில் இருந்த உணவை கோழி போல் கொத்திக் கொண்டு இருந்த இசை,
“என்ன டா அப்ப போனவங்கள இன்னும் காணோம்..
நான் வேணா போய் அவங்க என்ன பண்றாங்கன்னு பாத்துட்டு வரட்டுமா..??" என்று கேட்க,
“எதுக்கு அங்க போய் அசிங்க படுறதுக்கா..??
நம்ப அந்த பக்கம் சும்மா போனாலே அங்க வேல செய்யுற வெயிட்டர்ல இருந்து, மேனேஜர் வரைக்கும், நம்மளை கேவலமா ஒரு லுக் விடுவானுங்க.
இதுல நீ வாலண்டியரா அங்க போய் வாங்கி கட்டிக்க போறியா..??
பக்கத்துல தானே போயிருக்காங்க..
அவங்களே வந்துருவாங்க.
நீ கம்முன்னு தின்னு டா." என்றான் ஜீவா அதட்டலாக.
அதனால் வேறு வழி இன்றி இசை வாசலை பார்த்த படியே, அமைதியாக சாப்பிட்டு கொண்டு இருந்தான்.
அப்போது பிரியாவும், ராகுலும், உள்ளே வருவதை கவனித்தவனின் கண்கள் பிரகாசித்தன.
அதை கவனித்த ஜீவா, “டேய் ஓவரா பண்ணாத.
நீ இப்படி எல்லாம் பண்ணா, அவ உன்னை கேவலமா நினைப்பா." என்று சொல்ல,
அவனைப் பார்த்த இசை, “உனக்கு பொறாமை டா." என்றான்.
இத்தனை நாள் தேவதாசை போல் எதிலும் நாட்டம் இல்லாமல், சரியாக சாப்பிடாமல், குடித்துக் கொண்டு சுற்றிக் கொண்டு இருந்த இசையை இப்படி பார்க்க ஜீவாவிற்கு மகிழ்ச்சியாக தான் இருந்தது.
அதனால் அவனைப் பார்த்து லேசாக புன்னகைத்தவன்,
“நான் எதுக்கு டா பொறாமைப்படணும்..??
எங்களுக்கும் ஆள் இருக்கு.
நாங்களும் பாப்போம்.
நான் நாளைக்கே அவளை இங்க வர சொல்றேன் பாரு." என்று கிண்டலாக சொன்னான் ஜீவா.
“சொல்லு.. சொல்லு.. அவளும் இங்க வந்து ரொம்ப நாளாச்சு.
இப்ப பிரியா வேற இங்க இருக்காள்ல..
அவ வந்தா, இவங்க ரெண்டு பேரும் பேசி பழகி நம்மள மாதிரி அவங்களும் ஃபிரண்ட்ஸ் ஆகட்டும்.
நம்மள மாதிரி நம்ம பொண்டாட்டிகளும் ஃபிரண்டா இருந்தா நல்லா இருக்கும்ல்ல..!!" என்று சிரித்துக் கொண்டே சொன்னான் இசை.
“ஆமா ஆமா..!!" என்ற ஜீவா அவனுடன் சேர்ந்து நக்கலாக சிரித்தான்.
அவர்கள் பேசுவதை கவனித்தபடியே அங்கு வந்த பிரியா,
“இப்ப நீங்க யாரோட பொண்டாட்டிய பத்தி பேசிட்டு இருக்கீங்க..??" என்று சாதாரணமாக கேட்டாள்.
“இவனோட பொண்டாட்டிய பத்தி தான் பேசிட்டு இருந்தோம்." என்று சொல்லி ஜீவாவை பிரியாவிடம் கோர்த்து விட்டான் இசை.
அதனால் பிரியா ஜீவாவை ஆச்சரியமாக பார்த்து
“உங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சா அண்ணா?
நீங்க இத பத்தி சொல்லவே இல்ல.." என்று கேட்டாள்.
“என் லவ்வர தான் மா இவன் அப்படி சொல்றான்.
எங்களுக்கு இன்னும் கல்யாணம் ஆகல." என்றான் ஜீவா அவசரமான குரலில்.
அப்போது, “லவ்வர்னாளும் ஒய்ஃப் மாதிரி தானே..
அவங்கள கல்யாணம் பண்ணிக்கனும்னு நினைச்சு தானே லவ்வே பண்ணுகிறோம்!" என்று இசையும் பிரியாவும் கோரசாக ஒரே மாதிரி ஒரு வார்த்தை கூட மாறாமல் ஒன்றைப் போல் சொன்னார்கள்.
அவர்களுக்குமே அது ஆச்சரியமாக தான் இருந்தது.
பிரியா இசையை திரும்பிப் பார்க்க, இசை ஏற்கனவே அவளை தான் வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டு இருந்தான்.
ராகுலும், ஜீவாவும், அவர்களை “எப்படி டா?" என்பது போல பார்த்துக் கொண்டு இருந்தனர்.
ஜீவா அவர்களை பார்த்து லேசாக புன்னகைத்து
“இந்த வேவ் லென்த், வேவ் லென்தன்னு சொல்லுவாங்கல்ல..
அது இது தானா டா.??" என்று கிண்டலாக கேட்டான்.
இசையையே உற்று பார்த்துக் கொண்டு இருந்த பிரியா சட்டென்று அவன் மீது இருந்த தன் பார்வையை விளக்கி அவர்களைப் பார்த்து,
“நீங்க சாப்பிட்டுட்டு மேல வாங்க. நமக்கு ஒரு மீட்டிங் இருக்கு." என்றாள்.
“ஏதாச்சும் பேசணும்னா பேசணும்னு சொல்லு.
அது என்ன மீட்டிங்..??
அதுவும் இவங்க கூட, இந்த டைம்ல.." என்று நக்கலாக சொல்லி சிரித்தான் ராகுல்.
“ஆபீஸியலா பேசினா அத குரூப் டிஸ்கஷன் இல்லைனா மீட்டிங்ன்னு தான் சொல்லுவாங்க.
அத இந்த டைம்ல தான் பண்ணனும்னு எந்த ரெஸ்ட்ரிக்ஷனும் இல்ல.
அதான் சாப்டில நீ போய் தூங்கு." என்று ராகுலை பார்த்து ஸ்டிரிக்டான குரலில் சொன்னாள் பிரியா.
ராகுல் “சரி போ. நீங்க என்னமோ பண்ணுங்க...
எனக்கு டயர்டா இருக்கு.
நான் போய் தூங்குறேன்.
குட் நைட்." என்றவன் பிரியாவிடம் அவர்கள் தங்கி இருக்கும் வீட்டின் சாவியை வாங்கி கொண்டு மேலே சென்று விட்டான்.
பிரியாவின் கையில் இருந்த ஸ்வீட் பாக்ஸை கவனித்த ஜீவா,
“என்ன மா கையில ஸ்வீட் பாக்ஸா..??
உனக்கு வேலை கிடைச்சத செலிப்ரேட் பண்றதுக்காக வாங்கிட்டு வந்தியா..??" என்று கேட்டான்.
“இல்ல அண்ணா. இத காம்ப்ளிமெண்ட்டா குடுத்தாங்க.
இந்தாங்க எடுத்துக்கோங்க." என்று சொல்லி கொண்டே ஒரு சேரை எடுத்து போட்டு அமர்ந்த பிரியா கவருக்குள் இருந்த ஸ்வீட் பாக்ஸை திறந்து அவர்கள் முன் வைத்தாள்.
அதில் இருந்த கடையின் பெயரை படித்த ஜீவா,
“அந்த ரெஸ்டாரன்ட்லையா காம்ப்ளிமென்ட்ரியா ஸ்வீட்ஸ் எல்லாம் குடுக்குறானுங்க..??
வாய்ப்பில்லையே..!!!
அவனுங்க முடிஞ்ச வரைக்கும் மக்கள் கிட்ட இருந்து காச கொள்ளை அடிக்க தானே பாப்பானுங்க...
இப்படி ஃப்ரீயா எல்லாம் எதுவும் தர்ற அளவுக்கு அவனுங்க ஒன்னும் நல்லவங்க இல்லையே..
இது எதுக்கும் கெட்டுப் போயிருக்கான்னு செக் பண்ணிட்டு சாப்பிடு மா." என்றான் அக்கரையாக.
பிரியா அதில் இருந்த ஒரு பால்கோவாவை எடுத்து தன் வாயில் போட்டு சாப்பிட்டு பார்த்தவள்,
“நல்லா தான் இருக்கு. தைரியமா சாப்பிடுங்க." என்றாள்.
இசை பிரியாவை குழப்பமாக அவளை பார்த்து,
“ஆனா அவங்க ஏன் உனக்கு ஃப்ரீயா ஸ்வீட்ஸ் குடுக்கணும்..??
ஒருவேளை நீ அழகா இருக்கறதுனால, அந்த இத்துப்போன மேனேஜர் டவரவாயன் உன்ன கரெக்ட் பண்ணண பார்க்கிறானா.??" என்று கடுப்பான குரலில் கேட்டான்.
அவன் சொன்னதை கேட்டு சிரித்த பிரியா, அங்கு நடந்தவற்றை அவர்களிடம் தெளிவாக சொன்னாள்.
அவள் சொன்னதை கேட்ட அவர்கள் இருவருக்கும் அப்படியே நெஞ்சமெல்லாம் குளிர்ந்ததைப் போல இருந்தது.
இத்தனை நாட்களில் அந்த ரெஸ்டாரண்டை சேர்ந்தவர்கள் இவர்களுக்கு எவ்வளவோ தொல்லைகள் கொடுத்து இருக்கின்றனர்.
ஆனால் இவர்களால் அவர்களை ஒன்றுமே செய்ய முடியவில்லை.
பிரியா செய்தது அப்படி ஒன்றும் பெரிய காரியம் இல்லை என்றாலும்,
வந்த முதல் நாளே அவர்களுக்கு சரியான பாடத்தை இவள் கற்றுக் கொடுத்து விட்டாள் என்று நினைத்து இசையும் ஜீவாவும் மகிழ்ந்தனர்.
“நீ வேற லெவல் மா பிரியா.
அந்த ஹோட்டல் காரணங்களுக்கு எல்லா ஊர்லயும் பிரான்ச் இருக்கு.
சோ இந்த இண்டஸ்ட்ரிலயே அவங்க தான் ரொம்ப பெரிய ஆளுங்கன்ற மாதிரி ரொம்ப ஆடுவானுங்க.
அநியாயமா மக்கள் கிட்ட இருந்து கொள்ளையடிக்கிறானுங்க.
ஆனா பாரேன் நம்ப அஃபார்டபிள் ப்ரைஸ்ல சேல் பண்றோம்.
நம்ம கிட்ட அதிக பேர் வாங்கி சாப்பிட மாட்டேன்றாங்க.
அதான் எனக்கு கடுப்பா இருக்கு." என்று சோகமான குரலில் ஜீவா சொல்ல,
அவர்களை தீர்க்கமாக பார்த்த பிரியா,
“எல்லாமே மாறும். இன்னும் நான் ஒன் மந்த்ல எல்லாத்தையும் மாத்தி காட்றேன்." என்று உறுதியாக சொன்னாள்.
இசை “எங்களுக்கு உன் மேல நம்பிக்கை இருக்கு பிரியா.
நீ தான் எங்க லக்கி சார்ம்." என்று சிறு புன்னகையுடன் சொன்னான்.
அவனை எந்த உணர்ச்சிகளும் இன்றி கேஷுவலாக பார்த்த பிரியா,
“சரி சரி சீக்கிரம் சாப்பிட்டு, லேப் டாப் இருந்துச்சுன்னா அதை எடுத்துட்டு மேலே வாங்க." என்று உணர்ச்சியற்ற குரலில் சொன்னாள்.
அவளை ஆர்வமாக பார்த்த இசை தன் தட்டில் மீதம் இருந்த உணவையும் வேகமாக தன் வாய்க்குள் துணித்தவன்
“நான் அவ்ளோ தான் சாப்பிட்டேன்.
இரு உன் கூடவே வரேன்." என்று அவற்றை மென்றபடியே சொன்னான்.
அவனைப் பார்த்து சிரித்த பிரியா,
“நான் என்ன உன்ன விட்டுட்டு வெளியூருக்கா போக போறேன்..??
பொறுமையா சாப்பிடு. பொறையேற போது." என்றாள்.
“பார்றா?. அவளுக்கும் நம்ம மேல கொஞ்சம் அக்கறை இருக்கு போல.." என்று நினைத்து மகிழ்ந்த இசை விரைவில் அவற்றை சாப்பிட்டு முடித்து, கேஷ் கவுண்டரில் இருக்கும் டிராவில் உள்ள ஒரு லேப்டாப்பை வேகமாக எடுத்துக் கொண்டு வந்து பிரியாவிடம் கொடுத்தான்.
அதைப் பெற்றுக் கொண்ட பிரியா, “இங்க டேட்டா கனெக்சன் இருக்கா..??
வைஃபை ஏதாவது போட்டு இருக்கீங்களா...??' என்று கேட்டாள்.
இசை “அதெல்லாம் இருக்கு.
இங்க தான் டி.வி. இல்லல்ல..
சோ, நாங்க ஏதாவது படம் பாக்கணும்னா, வைஃபைல கனெக்ட் பண்ணி லேப்டாப்ல தான் பாப்போம்." என்றவன் வைஃபை பாஸ்வேர்டை பிரியாவிடம் சொன்னான்.
பிரியா அந்த லேப்டாப்பை எடுத்து கொண்டு மேலே செல்வதற்காக எழுந்திருக்க; இசையும் அவள் பின்னே செல்ல தயாரானான்.
அதை கவனித்த ஜீவா அவர்கள் இருவரும் தனியாக நேரம் செலவிடடும் என்று நினைத்து,
“பிரியா.. நீ இந்த ரெஸ்டாரன்ட் பத்தி எது கேட்கணும்னாலும் அவன் கிட்டயே கேளு மா.
எனக்கு இன்னைக்கு ரொம்ப டயர்டா இருக்கு.
ஃபீவர் வர்ற மாதிரி இருக்கு.
சோ, என்னால மீட்டிங்கு வர முடியாது.
நான் ரெஸ்ட் எடுக்கிறேன்.
சாரி மா நான் இப்படி சொல்றன்னு என்ன தப்பா நினைச்சுக்காத." என்று அப்பாவி போல் தன் முகத்தை வைத்து கொண்டு பாவமாக சொன்னான்.
பிரியா “ஓகே அண்ணா பரவால்ல.
நீங்க ரெஸ்ட் எடுங்க.
நாங்க பார்த்துக்கிறோம்.
குட் நைட்." என்று சொன்னவள், லேப்டாப்புடன் படியில் ஏற தொடங்கி விட்டாள்.
பிரியாவுடன் தான் தனியாக நேரம் செலவிட தன் நண்பன் தனக்கு ஏற்படுத்திக் கொடுத்த வாய்ப்பை நினைத்து மகிழ்ந்த இசை,
வேகமாக ஜீவாவின் அருகே ஓடிச் சென்று அவனை கட்டிப்பிடித்து அவன் கன்னத்தில் ஒரு முத்தம் கொடுத்து “தேங்க்ஸ் டா மச்சான்". என்றான்.
தொடரும்..
எங்களது பேஸ்புக் குரூப்பில் இணைய இந்த லிங்கை கிளிக் செய்யவும்.
facebook.com

Log in to Facebook
Log in to Facebook to start sharing and connecting with your friends, family and people you know.
Author: thenaruvitamilnovels
Article Title: Chapter-9
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.