Chapter-9

thenaruvitamilnovels

The World of Words
Staff member
Dec 25, 2024
164
0
16
www.amazon.com
அத்தியாயம்: 9



“ஐ லவ் யூ டா புருஷா..!!" என்றவிட்டு அன்புடன் விக்ரமின் கன்னத்தில் பச்சாக் என்று முத்தம் கொடுத்தாள் ரதி. அதனால் கள்ளத்தனமாக அவளை பார்த்து புன்னகைத்த விக்ரம் “எனக்கு இதெல்லாம் பத்தாதுடி." என்று கொஞ்சலாக செல்ல, “சாருக்கு வேற என்ன வேணும்?" என்று கேட்டுவிட்டு செல்லமாக அவனது கன்னங்களை பிடித்து கிள்ளினாள் ரதி. அவளது நெற்றியின் மீது தன் நெற்றியை வைத்து முட்டிய விக்ரம் “எனக்கு என்ன வேணுமோ அத நானே எடுத்துக்குவேன்." என்றவன் அவளைத் தூக்கிக் கொண்டு மாடியில் இருந்த அவர்களது அதற்கு சென்றான்.

அந்த வெள்ளை நிற அரண்மனையில் அவர்களது அறையில் உள்ள பஞ்சு மெத்தையில் பூப்போல அவளை கடத்தினான் விக்ரம். அவளைப் பார்த்த அவனது கண்களில் காதலும் காமமும் ஒரு சேர எரிந்து கொண்டிருக்க, அடுத்து தன் கணவன் என்ன செய்யப் போகிறான் என்று உணர்ந்த ரதி வெட்கத்தில் வேறு புறமாக திரும்பிப் படுத்து தன் தலைவரை போர்வையை இழுத்து போர்த்திக் கொண்டாள்.

“என்னடி நீ இப்படி இழுத்து போர்த்திட்டு படுத்தா நான் உன்னை விட்டுடுவேனா?" என்று அவளைப் பார்த்து குறும்பாக கேட்ட விக்ரம், தன் ஆடைகளை கழட்டி எறிந்துவிட்டு அவள் மீது பாய்ந்தான். அங்கே ஒரு அழகான, ஆழமான கூடல் அரங்கேறியது.

அது கனவாக இருந்தாலும் உண்மை போலவே உணர்ந்த ரதி, அந்த கனவு தந்த தாக்கத்தினால் பயந்து போய் தன் உடல் முழுவதும் வியர்த்துவடிய மூச்சு வாங்க எழுந்து அமர்ந்தாள். அவள் கண்களை திறந்து தான் இருந்த இடத்தை பார்த்த பின்பு தான் அவளுக்கு வந்தது கனவு என்றே அவளுக்கு புரிந்தது. அதனால் வேகமாக எழுந்து பாத்ரூம்-க்கு சென்று நன்றாக தண்ணீரை தன் முகத்தில் அடித்து கழுவியவள் “அட.. ச்சீ..!! எனக்கு ஏன் இந்த மாதிரி எல்லாம் கனவு வருது? பொதுவா நம்ம மனசுல என்ன நினைக்கிறோமோ அது தான் கனவா வரும் என்று சொல்லுவாங்களே.. ஆனா நான் எப்ப அப்படி எல்லாம் நெனச்சேன்? அதுவும் அவன் கூட.. ஆஆ... நினைச்சாலே ஒரு மாதிரி இருக்கு. இந்நேரம் அவன் என்ன ஆனான் உயிரோட இருக்கிறானா இல்லையா என்று கூட தெரியல. இப்போ இந்த கனவு ஒன்று தான் குறைச்சலா?" என்று வாய்விட்டு புலம்பியவள் தன் இரண்டு கைகளாலும் தன் கன்னத்தில் தட்டிவிட்டு “இனிமே நீ அவன பத்தி யோசிக்காத ரதி." என்று தனக்குள் சொல்லிக் கொண்டாள்.

“என்ன உளறிட்டு இருக்கா இவ? என்ன பத்தி தான் பேசுறாளா?" என்று நினைத்த விக்ரம் அவள் அருகில் செல்ல, ரதியின் முன்னே இருந்த சிறிய கண்ணாடியில் அவனது ஆத்மா தெரிந்தது. திடீரென கண்ணாடியில் தெரிந்த அவனது உருவத்தை பார்த்து பயந்து போன ரதி ஆ..ஆ.. என்று கத்தியவள், பின் தானும் பயந்து தன் வீட்டில் உள்ளவர்களையும் இந்த நேரத்தில் பயமுறுத்த வேண்டாம் என்று நினைத்து தன் கையை வைத்து வாயை இறுக்கமாக பொத்திக் கொண்டாள்.

“என்ன இவ... ஓவர் நைட்ல இவளுக்கு பைத்தியம் பிடித்துவிட்டதா? எதுக்கு இப்படி கத்துறா?" என்று நினைத்த விக்ரம் குழப்பமாக அவளை பார்த்தான். இன்னும் கண்ணாடியில் தெரிந்த உருவம் மறையாமல் இருந்ததால் இது தனது கற்பனை இல்லை உண்மை தான் என்று உறுதியாக நம்பிய ரதி, பயத்தில் அவளது உடம்பெல்லாம் நடுங்க தனது வாயை பொத்தியபடி அப்படியே வேகமாக பாத்ரூமில் இருந்து வெளியே வந்தாள். அப்போது தான் அவள் கண்ணாடியை பார்த்து பயப்படுவதை கவனித்த விக்ரம், தன்னைப் பார்த்துத்தான் அவள் பயப்படுகிறாள் என்று உணர்ந்தான்.

அவனுக்கு அவளை பார்த்த உடனே பிடித்து விட்டது. இதுவரை அவனது வாழ்நாளில் அவனுக்கு எந்த பெண்ணின் மீதும் இப்படி ஒரு ஈர்ப்பு ஏற்பட்டது இல்லை. ஏற்கனவே தான் இறந்த பின்பு தான் இந்த மாதிரி காதல் உணர்வுகள் எல்லாம் தனக்குள் வர வேண்டுமா என்று நினைத்து தன்னையே நொந்து கொண்டு இருந்த விக்ரம், இப்போது அவள் தன்னைக் கண்டு வேறு பயப்படுவதால் “நீ என்ன பாத்து பயப்படுற அளவுக்கு நான் உன்னை என்னடி பண்ணேன்?" என்று அவளைப் பார்த்து சோகமாக கேட்டவன், அவளது பயந்த முகத்தை பார்க்க முடியாமல் அவளது அறையை விட்டு வெளியேறினான்.

பயத்தில் தன் அறைக்கு வந்து ஓரமாக அமர்ந்து நடுங்கிக் கொண்டு இருந்த ரதி “ஒருவேளை அந்த விக்ரம் செத்துப் போயிட்டானா? அவன் தான் ஆவியா இப்ப என் கூட சுத்திகிட்டு இருக்கானா? அப்படி பாத்தாலும் அவன் எவ்ளோ அழகா இருக்கான்....!! ஊர் உலகத்துல எவ்வளவோ அழகான பொண்ணுங்க இருக்காங்கல்ல.. அவங்க எல்லாரையும் விட்டுட்டு இவன் எதுக்கு என் பின்னாடி சுத்திக்கிட்டு இருக்கான்? ஐயோ கடவுளே பேய்ன்னு நினைச்சாலே பயமா இருக்கே..!!" என்று நினைத்தவள் வேகமாக பூஜை அறைக்கு சென்று அங்கிருந்த அனைத்து சாமிகளையும் பார்த்து “செல்லாத்தா, மாரியாத்தா, காளியாத்தா, முருகா.... பரமேஸ்வரா.. ஈஸ்வரா...!! பிள்ளையாரப்பா...!!! எல்லா சாமியம் தயவு செஞ்சு என்னை காப்பாத்துங்க." என்று வேண்டிக் கொண்டவள் தீப ஆராதனை தட்டில் இருந்த திருநீரை தன் பெரிய கை முழுவதும் எடுத்து தன் நெற்றியில் பட்டை போட்டுவிட்டு குங்குமம், சந்தனம், செந்தூரம் என தன் கைக்கு கிடைத்த அனைத்தையும் எடுத்து தன் முகம் முழுவதும் அப்பிக் கொண்டாள்.

மீண்டும் அவளது அறைக்கு சென்று தூங்கவே அவளுக்கு பயமாக இருந்தது. அதனால் தன் வீட்டில் உள்ளவர்களிடமும் இது பற்றி சொல்ல முடியாமல் என்ன செய்வது என்று யோசித்து குழம்பினாள் ரதி. பின் தனது தோழி மீராவிற்கு கால் செய்தாள். ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த மீரா, ரதியிடம் இருந்து வந்த தொலைபேசி அழைப்பால் தூக்கத்திலிருந்து கண்விழித்தவள் தனது மொபைல் போனை எடுத்துப் பார்த்தாள். ஸ்கிரீனில் ரதியின் பெயர் தெரிய “இவ எதுக்கு இந்த நேரத்துல கால் பண்றா?" என்று நினைத்த மீரா, அவளது காலை அட்டென்ட் செய்து “என்னடி ஏதாவது எமர்ஜென்சியா? இந்த நேரத்தில கால் பண்ணிருக்க..!!" என்று பதட்டமாக கேட்டாள்.

எடுத்த எடுப்பில் “எனக்கு ரொம்ப பயமா இருக்கு மீரா. என்ன பண்றதுன்னு தெரியல." என்று விட்டால் அழுது விடுவேன் என்ற தோரணையில் ரதி சொல்ல, அதிர்ந்த மீரா “ஏதாவது ப்ராப்ளமா? ஏன்டி பயப்படுற?" என்று கேட்க, நேற்று காலையில் இருந்து அவளை சுற்றி நடந்த விசித்திரமான சம்பவங்களை பற்றி எல்லாம் அவளிடம் சொன்ன ரதி “நான் கண்ணாடியில பார்த்தது அவனே தாண்டி. அதே வெள்ளை சட்டையில நான் அவன எப்படி பார்த்தனோ அப்படியே இருந்தான். அவன் போட்டிருந்த சட்டையில் ரத்தம் கூட காஞ்சி போய் இருந்துச்சு. அது விக்ரம் குருமூர்த்தி தான். எனக்கு ரொம்ப பயமா இருக்கு மீரா. அவன் தான் என்ன பேயா வந்து துரத்துறான்னு நினைக்கிறேன்." என்று பயந்த குரலில் சொன்னாள் ரதி.

ரதி இப்படி எதற்கு எடுத்தாலும் பயப்பட கூடியவள் இல்லை என்பதால் அவள் இவ்வளவு தூரம் ஒரு விஷயத்தை சொல்கிறாள் என்பதால் அது உண்மையாகத்தான் இருக்கும் என்று நினைத்த மீரா “நீ சொல்றத கேட்க எனக்கும் லைட்டா பயமா தான்டி இருக்கு. இதெல்லாம் நம்ம சாதாரணமா விடக்கூடாது. பக்கத்து ஊர்ல இருக்கிற சிவன் கோயிலுக்கு ஒரு சாமியார் வந்திருக்கிறார் என்று எங்க அம்மா சொல்லிக்கிட்டு இருந்தாங்க. நம்ம வேனா அவர்கிட்ட போய் இந்த பிரச்சனையை பத்தி சொல்லி என்ன பண்றதுன்னு கேட்கலாமா?" என்று கேட்டாள்.

“போலாம் மீரா. But நம்ம மேனேஜரை நினைச்சா தான் கொஞ்சம் பயமா இருக்கு. நேத்து நான் சொல்லாம கொள்ளாம பர்மிஷன் போட்டதுக்கே அந்த ஆள் என்ன அந்த பேச்சு பேசினான். இன்னைக்கு அதுவும் நம்ம ரெண்டு பேரும் சேர்ந்து போய் பர்மிஷன் கேட்டா குடுப்பானா அவன்? எப்படியும் நம்ம அங்க போயிட்டு ஆபீஸ் போக மத்தியானம் ஆயிடும் இல்ல?" என்று ரதி சோகமாக கேட்க, “நீ நேத்து அந்த ஆளுக்கு ஹெல்ப் பண்ணதிலயே அவனுக்கு உன் மேல எப்படியும் ஒரு Soft கார்னர் வந்திருக்கும். நீ உங்க பாட்டிக்கு உடம்பு சரியில்லை என்று சொல்லி பர்மிஷன் கேளு. நான் எனக்கு உடம்பு சரியில்லைன்னு சொல்லி அவர்கிட்ட பர்மிஷன் கேட்கிறேன். நம்ம தான் அந்த ப்ளூ ஸ்டார் கம்பெனி ப்ராஜெக்ட்ட ஆல்மோஸ்ட் முடிக்க போறோமே... அதனால அவன் பெருசா எதுவும் கேட்க மாட்டான். நீ பர்மிஷன் கேட்டு பாரு. நானும் கேட்கிறேன்." என்றாள் மீரா.

“ஓகே கேட்டு பார்க்கலாம். இப்ப மணி ஆறு தான் ஆகுது. கொஞ்ச நேரம் ஆகட்டும் அப்புறமா கால் பண்ணி பேசலாம்." என்றவள் எதையோ யோசித்தவிட்டு “இல்ல.. இல்ல... நான் கால் பண்றேன். நீ அவருக்கு மெசேஜ் பண்ணு. ரெண்டு பேரும் ஒரே மாதிரி பண்ணி மாட்டிக்க வேணாம்." என்றாாள் ரதி. “அட போடி. நம்ம ரெண்டு பேரும் சேர்ந்து ப்ளான் பண்ணி என்ன எங்கேயாவது Bomb வைக்கவா போறோம்? மாட்டிக்குவோம்னு பயப்படுவதற்கு...!! விடு பாத்துக்கலாம். நீ பயப்படாத. அந்த சாமியார போய் பார்த்தா எல்லாம் சரியாயிடும்ன்னு எனக்கு நம்பிக்கை இருக்கு. நீ மேனேஜர் கிட்ட பேசிட்டு எனக்கு கால் பண்ணு. Bye" என்றுவிட்டு அந்த அழைப்பை துண்டித்தாள் மீரா.

பயத்தை விட ரதிக்கு இப்போது தொடர்ந்து கடந்த சில நாட்களாகவே அவள் சரியாக தூங்காததால் சோர்வாக இருக்க, பூஜை அறையின் முன்னே ஹாலிலேயே படுத்து உறங்கி விட்டாள் ரதி. அவள் வீட்டு வாசலில் அமர்ந்திருந்த விக்ரமின் அருகே சிம்ரன் கிளி பறந்து வந்து அமர்ந்தது. அதைப் பார்த்தவுடன் “நேத்து நான் அவ கூட ஸ்கூட்டில இங்க வந்துட்டு இருந்தப்ப அந்த Dog என்ன பாத்து பயந்து ஓடுச்சு. ஆனா இந்த கிளி மட்டும் ஏன் என்னை பார்த்து பயப்படவில்லை? ஒருவேளை இதால என்ன பாக்க முடியலையா?" என்று நினைத்த விக்ரம் அந்தக் கிளியை உற்றுப் பார்த்தான்.

அந்த கிளியும் அவனை தான் உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தது. அதனால் கண்டிப்பாக இந்த கிளியால் தன்னை பார்க்க முடிகிறது என்று உறுதி செய்த விக்ரமிற்கு திடீரென ஒரு ஐடியா தோன்றியது. அதனால் சந்தோஷமாக சட்டென எழுந்து அமர்ந்தவன் அந்த கிளியை பார்த்து “தேங்க்ஸ் சிம்ரன். நீ எனக்கு பெரிய ஹெல்ப் பண்ணிருக்க. இனிமே என் ரதி என்ன பார்த்து பயப்பட மாட்டா." என்றவன் பறந்து அந்த கிளியின்
உடலுக்குள் சென்று விட்டான்.

தொடரும்...

அமேசானில் படிக்க..

 

Author: thenaruvitamilnovels
Article Title: Chapter-9
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.