அத்தியாயம் 8: வித்யாசமான ஃபர்ஸ்ட் நைட் (பார்ட் 2)
அர்ஜுனின் தந்தை பிரதாபிடம் “ப்ளீஸ் நீங்களாவது என் நிலைமை புரிஞ்சுக்கோங்க சார். இந்த மேரேஜை என்னால ஏத்துக்க முடியாது.” என்று கண்ணீருடன் சொன்ன தேன்மொழி அவரைப் பார்த்து கையெடுத்து கும்பிட்டு தரையில் மண்டியிட்டு அமர்ந்தாள்.
மீண்டும் தனது குடும்பத்தினரை பார்க்க வேண்டும் என்பதை தவிர அவள் மனதில் வேறு எந்த எண்ணமும் இல்லை.
“எங்க இருந்து இந்த சின்ன பொண்ணுக்கு இவ்ளோ தைரியம் வந்துச்சு? இவங்க பாட்டுக்கு அப்பா முன்னாடி இப்படி பேசுறாங்க!
ஆல்ரெடி இப்படி ஒரு கண்டிஷன்ல அண்ணா இருக்கும்போது நாங்க அவருக்கே தெரியாம அவருக்கு மேரேஜ் பண்ணி வைக்கிறதுல டாடிக்கு இண்டரெஸ்ட் இல்ல.
இப்ப இவங்க சொல்றத கேட்டு டென்ஷனாகி இதெல்லாம் வேண்டாம்னு அவர் ஸ்ட்ராங்கா சொல்லிட்டா என்ன பண்றது?” என்று நினைத்த அர்ஜுன் தேன்மொழியை ஆப் செய்வதற்காக “நீங்க கண் முழிச்சதுக்கு அப்புறம், நான் உங்க கிட்ட சொன்னத மறந்துட்டீங்களா அண்ணி?” என்று கணீர் குரலில் கேட்டான்.
அதனால் உடனே அவன் நினைத்ததை போலவே அவளும் பயந்தாள். ஆனால் கோபத்தோடு சேர்த்து அவளுக்கு அந்த குடும்பத்தினரின் மீது வெறுப்பும் வந்துவிட, உடனே தன் மனதில் இருந்த அனைத்தையும் மறந்துவிட்டு வெகுண்டெழுந்து நின்ற தேன்மொழி “இப்ப என்ன சார் உங்களுக்கு? உங்க அப்பா கிட்ட நான் எதுவும் பேசி அவர கன்வின்ஸ் பண்ணிட கூடாது அதானே!
உங்க இஷ்டத்துக்கு நீங்க எல்லாரும் குடும்பமா சேர்ந்து பிளான் பண்ணி என்ன இங்க கடத்தி கொண்டு வந்து இப்படி கோமாவில இருக்கிற உங்க அண்ணனுக்கு கல்யாணம் பண்ணி வைப்பீங்க.
ஆனா இந்த கல்யாணத்துல எனக்கு விருப்பம் இல்லைன்னு சொல்றதுக்கு கூட எனக்கு உரிமை இல்லல்ல..!! உங்களை எதிர்த்து நான் ரெண்டு வார்த்தை பேசிட்டா.. உடனே நீங்க உங்க கிட்ட இருக்கிற பிஸ்டலை காட்டி என்னை சுட்டு கொன்னுடுவேன்னு மிரட்டுவீங்க..!!
அதுக்கு நான் பயந்து நடுங்கணுமா இப்போ? என்னால முடியாதுங்க. என்னமோ நான் உங்க கையில கிடைச்ச பொம்மை மாதிரி எல்லாரும் என்ன இஷ்டத்துக்கு ஆட்டி வைக்கிறீங்க.. இப்படி ஒரு வாழ்க்கைய வாழ்வதற்கு நான் செத்தே போகலாம்.
நீங்க என்ன சுட்டுக் கூட கொன்னுருங்க பரவால்ல. ஆனா இதுக்கு மேல என்னால இங்க நடக்கிறத எல்லாம் பாத்துட்டு சும்மா இருக்க முடியாது. உங்க எல்லார மாதிரியும் நானும் சாதாரண மனுஷி தான். எனக்கும் ஃப்பீலிங்ஸ் இருக்கு. எனக்கும் ஒரு ஃபேமிலி இருக்கு.
அதை ஏன் நீங்க யாரும் புரிஞ்சுக்க மாட்டேங்கறீங்க?” என்று தனது அடி தொண்டையில் இருந்து கத்தி கேட்டு விட்டு தரையில் அமர்ந்து தன் முகத்தை மூடிக் கொண்டு அவளது உணர்ச்சிகள் அனைத்தையும் கதறி அழுது கண்ணீரில் கரைத்தாள்.
இப்போது அவளது உண்மையான கோபத்திற்கும் கண்ணீருக்கும் முன்னே யாராலும் பேச முடியாமல் போய்விட்டது. பிரதாப்பிற்கு கூட அவளை நினைத்து வருத்தமாக தான் இருந்தது. அதனால் தன் குடும்பத்தினரை முறைத்து பார்த்துவிட்டு தேன்மொழியின் அருகே சென்றார்.
அவர் தன் அருகில் வந்தவுடன் அவரது கால்களை பிடித்துக் கொண்ட தேன்மொழி “சார் இந்த நிமிஷம் நீங்க மட்டும் தான் என்னை காப்பாத்த வந்த கடவுள் மாதிரி என் கண்ணுக்கு தெரியிறீங்க.
தயவு செஞ்சு யார் சொல்றதையும் கேட்காம என்னை எப்படி இங்க கூட்டிட்டு வந்தீங்களா அதே மாதிரி திரும்ப அனுப்பிருங்க ப்ளீஸ்! என்னால இங்க உங்க பையனுக்கு பொண்டாட்டியா எல்லாம் வாழ முடியாது.” என்று கண்ணீருடன் கெஞ்சினாள்.
தேன்மொழியின் தலையில் கை வைத்த பிரதாப் “உன் கஷ்டம் என்னன்னு எனக்கு நல்லா புரியுது மா. நானும் உன் வயசுல இருக்கிற ஒரு பொண்ணுக்கு அப்பா தான்.
அவளுக்கு இப்படி நடந்துன்னா அத என்னால ஏத்துக்க முடியுமா? ஆனா எது எப்படி இருந்தாலும், உனக்கும் என் பையனுக்கும் மேரேஜ் ஆயிடுச்சு. சோ நீ இந்த வீட்டு பொண்ணு ஆயிட்ட.
இதுக்கு மேல அதை மாத்த முடியாது. உனக்கு இங்க எந்த குறையும் இருக்காது. நீயும் எனக்கு பொண்ணு மாதிரி தான். உனக்கு இங்க எந்த பிரச்சனை இருந்தாலும், நீ தாராளமா என் கிட்ட சொல்லலாம்.
நீ இங்க பத்திரமா இருப்ப. நல்லா இருப்ப. அதுக்கு நான் பொறுப்பு. ஐ ப்ராமிஸ் யு. உன் ஃபேமிலில இருக்கிறவங்களை நினைச்சு நீ ஃபீல் பண்ண தேவையில்லை.
நீ அவங்க கூட இருந்தாலும் இல்லைன்னாலும், அவங்களுக்கு வெளிய இருந்து எந்தெந்த விதத்தில சப்போர்ட் பண்ண முடியுமோ அது எல்லாத்தையும் பண்றதுக்கு நான் அரேஞ்ச் பண்றேன்.
இனிமே அவங்க என் ரெஸ்பான்சிபிலிட்டி. பட் இந்த மேரேஜை நீ ஏத்துக்கிறத தவிர உனக்கு வேற ஆப்ஷன் இல்ல மா. அர்ஜுன் நார்மல் ஆனதுக்கு அப்புறம் உன்னை ஏத்துக்குவானான்னு எனக்கு தெரியாது.
பட் நீ அவனோட வைஃப். அதுக்காகவே அவன் உன்ன அவனை விட்டு போக விடமாட்டான். அதை மட்டும் என்னால sureஆ சொல்ல முடியும். இங்க இருக்கிறவங்கள புரிஞ்சுகிட்டு அவங்களோட ஒத்துப்போய் உன் வாழ்க்கைய சந்தோஷமா மாத்திக்கிறது உன் கையில தான் இருக்கு.
இதுக்கு மேல என்ன சொல்றதுன்னு எனக்கு தெரியல.” என்று சொல்லிவிட்டு இதற்கு மேலும் தான் இங்கே இருந்தால் தன்னை குற்ற உணர்ச்சிக்கு ஆளாக்கும் விதமாக அவள் ஏதேனும் சொல்லிவிட்டால் என்ன செய்வது? என்று நினைத்து அங்கே இருந்து வேகமாக வெளியேறி விட்டார்.
அவர் சென்ற பிறகு மீண்டும் அந்த இடம் இயல்பு நிலைக்கு திரும்பியது. தேன்மொழி அப்படி உணர்ச்சிவசப்பட்டு பேசிய பிறகு மீண்டும் அவளை மிரட்டி தன் வழிக்கு கொண்டு வர வேண்டும் என்று ஆகாஷிற்கு நினைக்க தோன்றவில்லை.
அதனால் தன் அம்மாவிடம் “நான் அண்ணாவை அவர் ரூமுக்கு கூட்டிட்டு போறேன். நீங்க அண்ணி கிட்ட பேசுங்க.
அவங்க கிட்ட எல்லாத்தையும் சொல்லி புரிய வைங்க. டின்னர் டைம் ஆகுது. அவங்கள கன்வின்ஸ் பண்ணி சாப்பிட கூட்டிட்டு வாங்க.” என்று சொல்லிவிட்டு பிரிட்டோவின் உதவியுடன் அர்ஜுனை வீல்சேரில் வைத்து தள்ளிக் கொண்டு அவனது ரூமிற்கு சென்றான்.
பிரதாப்பை தனது கடைசி நம்பிக்கையாக நினைத்துக் கொண்டிருந்த தேன்மொழி இப்போது அவராலும் எந்த பயனும் இல்லை என்று தெரிந்த பிறகு, “ஏன் எனக்கு மட்டும் இப்படி எல்லாம் நடக்குது கடவுளே..!! அப்படி நான் யாருக்கு என்ன பாவம் செஞ்சேன்?” என்று கத்தி கேட்டுவிட்டு தனது தலையில் அடித்துக் கொண்டு அழுதாள்.
இப்போது அவளை அப்படி பார்க்க அனைவருக்கும் பாவமாக இருந்தது. தனது குழந்தைகள் இருவரும் தொடர்ந்து அழுது கொண்டே இருந்ததால், “டின்னர் ரெடி ஆனதுக்கு அப்புறம் எனக்கு கால் பண்ணுங்க. நான் சாப்பிட வரேன்.” என்ற ஜனனி குழந்தைகளுடன் அவள் கணவன் சந்தோஷை அழைத்துக் கொண்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்தாள்.
தேன்மொழியின் அருகே சென்ற ஜானகி “நாங்க என்ன சமாதானம் சொன்னாலும் அதை ஏத்துக்கிறது உனக்கு கஷ்டமா தான் இருக்கும்.
அது எங்களுக்கு புரியுது மா. ஆனா நீ எங்க நிலைமையையும் பத்தி யோசித்துப் பாரு. நீ உங்க வீட்ல இல்லைனா, கண்டிப்பா உன் ஃபேமில இருக்கறவங்க கஷ்டப்படுவாங்க.
வெளிய இருந்து அவங்களுக்கு பைனான்சியல் சப்போர்ட், செக்யூரிட்டினு என்னென்ன பண்ண முடியுமோ எல்லாமே நம்ம பண்ணிக்கலாம். உனக்கு தம்பி இருக்கான்ல..
அவனுக்கு நம்மளே யாருக்கும் சந்தேகம் வராத மாதிரி தான் ஒரு நல்ல வேலை அரேஞ்ச் பண்ணி கொடுக்கலாம். இது எல்லாமே எங்களால ஈசியா செய்ய முடியும்.
ஆனா அர்ஜுன் ஒருத்தன் இல்லைன்னா, இத்தனை வருஷமா தலைமுறை தலைமுறையா நாங்க கட்டி காப்பாத்துன ஒரு பெரிய சாம்ராஜ்யமே ஒன்னும் இல்லாம அழிஞ்சு போயிடும் மா.
அதைப்பத்தி தெளிவா நான் உன் கிட்ட சொன்னா கூட அதை நீ புரிஞ்சுக்கிற மனநிலையில இப்ப இல்ல. நீ கடைசியா சாப்பிட்டு எப்படியும் பத்து பன்னெண்டு மணி நேரம் இருக்கும்.
நீ வா, நான் உன்னை உன் ரூமுக்கு கூட்டிட்டு போறேன். ரெஃப்ரெஷ் ஆகிட்டு நம்ம டைனிங் ஏரியாவுக்கு போகலாம்.” என்று சொல்லி தேன்மொழியின் கையைப் பிடித்து அவளை தன்னுடன் வரச் சொன்னாள்.
அவள் கையை உதறிவிட்ட தேன்மொழி “இப்ப நான் சாப்பிடுறது ஒன்னு தான் குறைச்சலா இருக்கா?
என்ன விடுங்க மேடம்.. நான் இப்படியே சாப்பிடாம இருந்து செத்துப்போறேன்.” என்று சொல்லிவிட்டு அழ, “அப்படியெல்லாம் பேசாத மா.
எனக்கு கேட்கவே கஷ்டமா இருக்கு.
இந்த வீட்ல கேமரா இல்லாத இடமே இல்ல. சோ நீயே சாகணும்னு ஆசைப்பட்டாலும் கூட, உன்னால அது முடியாது. என் பையன் கூட வாழறத தவிர உனக்கு வேற ஆப்ஷனே இல்ல.
அத கஷ்டப்பட்டு செய்யணுமா, இல்லை உன் வாழ்க்கை இது தான்னு ஏத்துக்கிட்டு இஷ்டப்பட்டு வாழனும்னு நீ தான் முடிவு பண்ணனும்.” என்ற ஜானகி கிலாராவின் உதவியோடு வலுக்கட்டாயமாக அர்ஜுனின் அறைக்கு அவளை அழைத்துச் சென்றாள் ஜானகி.
கடந்த ஒரு மணி நேரமாக அர்ஜுன் ஆக்சிஜன் மாஸ்க் உதவி இல்லாமல் இருந்ததால் அவனை கட்டிலில் படுக்க வைத்து ஆக்ஸிஜன் மாஸ்க் பொருத்தி, குளுக்கோஸ் டிரிப்ஸ் போட்டுவிட்டு மருத்துவ உபகரணங்களின் கண்காணிப்பிற்கு நடுவில் அவனது அறையில் வைக்கப்பட்டு இருந்தான்.
அங்கே தேன்மொழியை அழைத்துச் சென்ற ஜானகி கிலாராவிடம் “அர்ஜுன பாத்துக்கற நர்ஸ் எப்பயும் போல நைட் இங்கயே ஸ்டே பண்ணிக்கிட்டும்.” என்று சொல்ல, குழப்பமாக அவளை பார்த்தாள் கிளாரா.
அதை கவனித்த ஜானகி “ஏன் அப்படி பாக்குற? எதா இருந்தாலும் மனசுல எதையும் வெச்சிக்காம கேட்டுறு.” என்று சொல்ல, “இல்ல மேடம் தேன்மொழி மேடமுக்கும், அர்ஜுன் சாருக்கும் ஃபர்ஸ்ட் நைட் அரேஞ்ச் பண்ணனும்னு நீங்க தானே சொன்னீங்க..
அதுவே எப்படி நடக்கும்னு தெரியல. இதுல நர்ஸ் வேற இங்க இருந்தாங்கன்னா எப்படி? அதான் யோசிக்கிறேன்.” என்று இழுத்தாள் கிளாரா.
அவர்கள் பேசியதை கேட்டுக் கொண்டு இருந்த தேன்மொழி ஒருவித பீதியுடன் அவர்கள் இருவரையும் பார்த்தாள்.
அர்ஜுனை கவனித்துக் கொள்வதற்காக அப்பாயிண்ட் செய்யப்பட்டிருந்த மெடிக்கல் டீமில் உள்ளவர்களில் ஒருத்தியான வெளிநாட்டு நர்ஸ் நான்சியை திரும்பி பார்த்த ஜானகி “மிஸ் நான்சி.. அர்ஜுனுக்கு இந்த பொண்ணு கூட இன்னைக்கு மேரேஜ் ஆகி இருக்கிறது உங்களுக்கு தெரியும்னு நினைக்கிறேன்.” என்று ஆங்கிலத்தில் சொல்ல, “எஸ் மேம் எனக்கு தெரியும்.” என்றாள் அவள்.
“குட். இன்னைக்கி அவங்களுக்கு இங்க ஃபர்ஸ்ட் நைட் அரேஞ்ச் பண்ண போறோம். அதுல உங்களுக்கு ஏதாவது பிராப்ளம் இருக்கா? இங்க இந்த ரூம்குள்ளயே ஒரு மினி ரூம் இருக்குல்ல..
அங்க கூட நீங்க ஸ்டே பண்ணிக்கலாம்.
தேன்மொழி எப்பயும் அர்ஜுன் கூட இருந்து அவரை பார்த்துப்பாங்க. அவங்க ஏதாவது எமர்ஜென்சின்னு சொன்னா மட்டும், நீங்க வெளிய வந்து அவங்களுக்கு அசிஸ்ட் பண்ணி அர்ஜுனை பார்த்துக்கிட்டா போதும்.
ட்ரிப்ஸ் மட்டும் முடிஞ்ச உடனே அப்பப்ப வந்து சேன்ஜ் பண்ணிடுங்க. Is everything clear?” என்று ஜானகி சரளமான ஆங்கிலத்தில் அந்த வெளிநாட்டு பெண் நர்ஸுடம் கேட்க, அர்ஜுனையும் தேன் மொழியையும் ஒரு பார்வை பார்த்த நான்சி “Yeah, I understand ma'am.” என்றாள்.
கிளாராவிடம் “அவள எப்படியாவது சாப்பிட வச்சிரு.” என்ற ஜானகி நேராக தேன்மொழியின் அருகே சென்று அவளுக்கு மட்டும் கேட்கும் படி மெல்லிய குரலில் “நீயும் வயசு பொண்ணு தான். உனக்கே எல்லாமே தெரியும்.
தெரியலைன்னாலும் இனிமே தெரிஞ்சுக்கோ. அர்ஜுன் கோமால இருந்தாலும், அவனும் ஆம்பள பையன் தான்.
உன் குரலை கேட்டதுக்கே அவன் ரியாக்ட் பண்ணான். சோ நீ அவன் பக்கத்துல இருந்து அவன் கிட்ட பேசிக்கிட்டே இருந்தா, அவனை டச் பண்ணி அவனோட சென்சஸ்சை ட்ரிகர் பண்ணா, அர்ஜுன் நார்மல் ஆகுறதுக்கு நிறைய சேன்ஸஸ் இருக்கு.
அது எல்லாமே உன் கையில தான் இருக்கு தேன்மொழி. உனக்கு எதுவும் தெரியலைன்னா நேரடியா சொல்லிரு. அர்ஜுன்காக அரேஞ்ச் பண்ணி இருக்க மெடிக்கல் டீம்ல ஒரு லேடி டாக்டர் இருக்காங்க.
நான் அவங்கள இங்க அனுப்பி வைக்கிறேன். அவங்க உனக்கு டீடைலா எல்லாமே சொல்லி தருவங்க. இனிமே நீதான் எல்லாத்தையும் பாத்துக்கணும். இப்போதைக்கு வேற வழி இல்ல.” என்றாள்.
- மீண்டும் வருவாள்..
எங்களது பேஸ்புக் குரூப்பில் இணைய இந்த லிங்கை கிளிக் செய்யவும்:
facebook.com

Log in to Facebook
Log in to Facebook to start sharing and connecting with your friends, family and people you know.
Author: thenaruvitamilnovels
Article Title: Chapter-8
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.