Chapter-8

thenaruvitamilnovels

The World of Words
Staff member
Dec 25, 2024
163
0
16
www.amazon.com
அத்தியாயம் 8: நீ எங்கே என் அன்பே



நிகழ்காலத்தில் ஒரு வங்கியில் கொள்ளையடித்துவிட்டு வரும்போது குண்டடிப்பட்டு மயங்கிய விக்ராந்த் கண் விழித்துப் பார்த்தான். இப்போது அவன் அவனது அரண்மனை போன்ற பங்களா வீட்டில் உள்ள அவனது அறையில் இருந்தான். கையில் சில பொருட்களை எடுத்துக் கொண்டு சோனியாவுடன் அங்கே வந்த மோனிஷா “எமர்ஜென்சிக்கு ‌ அண்ணாவுக்கு ‌ ட்ரிப்ஸ் போட்டுவிட்டு இருக்கேன். இந்நேரம் அது முடிந்திருக்கும். நீ அவருக்கு blood குடுக்க ரெடியா இருக்கியா? உனக்கு ஓகேன்னா, இப்பவே நம்ம அவருக்கு blood ஏத்திடலாம்.” என்று அவளிடம் சொன்னபடி விக்ராந்தின் அருகில் சென்றாள்.



“நான் தான் அப்பவே என் பாடில இருந்து எவ்ளோ பிளட் வேணும்னாலும் எடுத்துக்கோன்னு சொன்னனே! அப்புறம் என்ன நான் ரெடியா இலையான்னு பர்மிஷன் எல்லாம் கேட்கிற நீ? நான் நம்ம பாஸ காப்பாத்துறதுக்காக என்ன வேணாலும் பண்ணுவேன் மோனி.” என்று சோனியா உரிமையுடன் உறுதியாக சொல்ல, அப்போதுதான் அரைகுறையாக தன் கண்களை திறந்திருந்த விக்ராந்த் அவர்கள் பேசியதை கவனித்து விட்டு “இந்த உடம்பு, மனசு இரண்டுமே என் ஷாலினிக்கு மட்டும் தான் சொந்தம். அவளோட இரத்தம் கலந்து இருக்கிற இந்த உடம்புல எந்த சுச்சுவேஷன்லயும் நான் இன்னொருத்தியோட ரத்தத்தை கலக்க விட மாட்டேன்.” என்று நினைத்து அவர்களைப் பார்த்து “பிளட் ஏத்துற அளவுக்கு எல்லாம் என் கண்டிஷன் ஒன்னும் க்ரிட்டிகளா இல்ல. அதான் ட்ரிப்ஸ் போட்டு இருக்கீங்கள்ல அதுவே போதும்.” என்று உறுதியாக சொன்னான்.



அவன் குரலைக் கேட்டு சந்தோஷப்பட்ட மோனிஷா வேகமாக அவன் அருகில் சென்று அமர்ந்து “Thank God, நல்லவேளை அண்ணா.. சீக்கிரம் உங்களுக்கு மயக்கம் தெளிஞ்சிருச்சு. இன்னும் ஏன் நீங்க unconsciousஆவே இருக்கீங்கன்னு யோசிச்சு யோசிச்சு உங்களுக்கு ஏதாவது ஆயிடுமோன்னு நினைச்சு பயந்து நான் ஒரு வழி ஆயிட்டேன்.” என்று சொல்ல, இறுக்கமான முகத்துடன் அவனைப் பார்த்த சோனியா “உங்களுக்கு இப்ப பிளட் ஏத்துறதுல விருப்பம் இல்லையா? இல்ல அது என்னோட ப்ளட்டா இருக்குறதுனால விருப்பம் இல்லையா?” என்று உடைந்த குரலில் கேட்டாள்.



அவளை அலட்சியமாக பார்த்த விக்ராந்த் “என் ஆன்சர் என்னன்னு உனக்கே நல்லா தெரியும் சோனியா. அதை நான் வேற என் வாயால சொல்லனும்னு நீ ஏன் ஆசைப்படுற?" என்று கேட்க, “ஏதோ ஒரு நாள் அவ உங்க கூட இருந்து உங்கள பாத்துக்கிட்டான்றதுக்காக நீங்க இன்னும் அவளையே நெனச்சிட்டு இருக்கீங்க இல்ல! அப்ப ஒவ்வொரு செகண்டும் உங்க கூடயே இருந்து உங்களுக்கு எதுவும் ஆகாம பாத்துக்குற நான் எப்பயும் உங்களுக்கு ஒரு ஆளவே தெரிய மாட்டேங்குறனா? ஒருவேளை நான் உங்கள பாஸ் பாஸ்னு கூப்பிடுறதுனால என்னை நீங்க ஜஸ்ட் ஒரு வேலைக்காரியா நினைச்சிட்டீங்க இல்ல விக்ராந்த்?” என்று நினைத்து மனம் உடைந்த சோனியா “தப்புதான் பாஸ். இனிமே இந்த மாதிரி உங்க கிட்ட எதுவும் unwantedஆ கேட்க மாட்டேன். I am sorry. Take care. நல்லா ரெஸ்ட் எடுங்க. நான் உங்கள அப்புறமா வந்து பார்க்கிறேன்.” என்று சொல்லிவிட்டு அவன் அறையை விட்டு வெளியேறினாள்.



தனது தோழி அப்படி சோகமாக வெளியே செல்வதை பார்த்து தானும் சோகமான மோனிஷா விக்ராந்தைக் குழப்பமாக பார்த்து “ஏன் அண்ணா சோனியா கிட்ட மட்டும் எப்பயும் இப்படி harshஆ behave பண்றீங்க? அவ உங்கள லவ் பண்றான்னு எங்க எல்லாருக்குமே தெரியும். உங்களுக்கு அது புரியலையா? ஏன் அவளை கஷ்டப்படுத்திட்டே இருக்கீங்க?” என்று கேட்க, “அவ என்ன லவ் பண்றான்னு எனக்கு நல்லாவே தெரியும். அதான் நான் அவளை என்ன விட்டு தள்ளி வைக்கிறேன்.” என்ற விக்ராந்த் எழுந்து அமர முயற்சித்தான்.



அவன் நேராக அமர உதவிய மோனிஷா “அது தெரிஞ்சும் ஏன் இப்படி பண்றீங்க? எனக்கு அது தான் புரியல. நீங்க வேற யாரையாவது லவ் பண்றீங்களா? எனக்கு தெரிஞ்சு நீங்க எந்த பொண்ணு கூடயும் பேசி பழகுனது இல்ல. அப்புறம் ஏன் சோனியா வேண்டாம்னு நினைக்கிறீங்க?” என்று கேட்க, “என்ன பத்தி யோசிக்கிறத விட்டுட்டு உன் லைஃப்ல அடுத்து என்ன பண்றதுன்னு யோசி. இன்னும் எத்தனை நாள் தான் நீயும் அவனும் லவ் பண்றேன்னு இப்படியே சுத்திட்டு இருப்பீங்க? ஒழுங்கா கல்யாணம் பண்ணிக்கிட்டு செட்டில் ஆகுற வழிய பாரு‌. இதுக்கு மேல, நான் என்ன பண்ணாலும், உன்னையும் அங்க கூட்டிட்டு போய் அதுல include பண்ண மாட்டேன். இனிமே நீ எப்பவும் இந்த பங்களாக்குள்ள பத்திரமா வீட்டோட இரு. அது போதும்.” என்றான் விக்ராந்த்.



“இப்போ என் மேரேஜுக்கு என்ன அவசரம் வந்துச்சு? எனக்கு துருவ் இருக்கான் அண்ணா. நாங்க மேரேஜ் பண்ணிக் கிட்டாலும், பண்ணாமலே இருந்தாலும், எனக்காக எப்பயும் அவன் இருப்பான். நாங்க இப்பயும் ஒண்ணா தான் இருக்கோம்‌. ஆனா அப்படி உங்களுக்குன்னு ஒரு பொண்ணு வேணாமா? நான் ஏற்கனவே சொன்னது தான் அண்ணா. எனக்கு மனோஜ பத்தி எல்லாம் கவலை இல்லை. அவன் எப்படியோ அவனுக்கு புடிச்ச மாதிரி சந்தோஷமா வாழ்ந்துட்டு இருக்கான். இன்னும் கொஞ்ச நாள்ல அவன் கல்யாணம் பண்ணி செட்டில் ஆகிடுவான்.

ஆனா உங்கள நெனச்சா தான் எனக்கு பயமா இருக்கு. நானும் கல்யாணம் பண்ணிக்கிட்டா, நீங்க உங்க கல்யாணத்தை பத்தி எப்பயும் யோசிக்கவே மாட்டீங்க. முதல்ல நீங்கதான் மேரேஜ் பண்ணனும். உங்களுக்கு சோனியா மேல இன்ட்ரஸ்ட் இல்லனா கூட பரவால்ல. உங்களுக்கு பிடிச்ச மாதிரி ஒரு பொண்ண தேடி கண்டுபிடிங்க. என் அண்ணிய சீக்கிரம் இந்த வீட்டுக்கு கூட்டிட்டு வாங்க. உங்களுக்கு மேரேஜ் ஆன அடுத்த நாளே, நானும் துருவும் மேரேஜ் பண்ணிக்கிறோம் ப்ராமிஸ். அப்புறம் நீங்க சொன்ன மாதிரி, நீங்க பண்ற எந்த illegalளான வேலையிலையும் நான் interfere பண்ண மாட்டேன்.” என்று மோனிஷா உறுதியாக சொல்ல, “அப்ப உன் மேரேஜ்க்கு ரெடியா இரு. சீக்கிரம் உங்க அண்ணி இந்த வீட்டுக்கு வந்துருவா.” என்று சாதாரணமாக சொன்ன விக்ராந்த் எழுந்து பால்கனி பக்கமாக சென்றான்.


அவன் சொன்ன பதிலில் ஷாக்கான மோனிஷா வேகமாக எழுந்து அவன் அருகில் சென்று “அப்போ நிஜமாவே நீங்க ஒரு பொண்ண லவ் பண்றீங்களா? யார் அவங்க? எனக்கு தெரியுமா அவங்கள? ஏன் அவங்கள பத்தி நீங்க என் கிட்ட இத்தனை நாளா எதுவுமே சொல்லல?” என்று அடுக்கடுக்காக கேள்விகள் கேட்க, அவளை திரும்பிப் பார்த்த விக்ராந்த் “நீ இப்படி மாறி மாறி இத்தனை கொஸ்டின் கேட்பன்னு நான் உன் கிட்ட சொல்லல.‌ மறுபடியும் அவளை பார்க்க முடியும் என்ற நம்பிக்கையில ஈஸியா அவள விட்டுட்டு வந்துட்டேன். இப்ப அவள தொலைச்சுட்டு பல வருஷமா அவள தேடிட்டு இருக்கேன். இருந்தாலும் சீக்கிரம் அவ கிடைச்சிடுவான்னு எனக்கு நம்பிக்கை இருக்கு. அவ இங்க வரும்போது, அவ யாருன்னு நீ பார்த்து தெரிஞ்சுக்கோ. அதுவரைக்கும் அவள பத்தி நீ எதுவும் என் கிட்ட கேட்காத. நீ கேட்டாலும் நான் சொல்ல மாட்டேன். எனக்காக நீ ஏதாவது பண்ணனும்னு நினைச்சேனா, போய் உன் friend கிட்ட பேசு. நான் ஷாலினிய தான் லவ் பண்றேன்னு தெரிஞ்சும்‌ தேவை இல்லாம என் மேல அவளாவே பீலிங்ஸை டெவலப் பண்ணிட்டு சுத்திட்டு இருக்கா. நானும் பேசி பாத்துட்டேன். திட்டி பாத்துட்டேன். ஏன் மிரட்டி கூட பாத்துட்டேன். அவளுக்கு அறிவு வரமாட்டேங்குது.” என்றான்.


“நீங்க அவள விடுங்க. நான் அவள பாத்துக்கிறேன். உங்களை யாருக்கு பிடிச்சு இருக்கின்றத விட, உங்களுக்கு யாரை பிடிச்சிருக்குன்றது தான் எனக்கு முக்கியம். எப்படியோ எங்க அண்ணி பேரு ஷாலினின்னு எனக்கு தெரிஞ்சிருச்சு. எனக்கு இப்போதைக்கு அதுவே போதும். I'm so happy.” என்ற மோனிஷா விக்ராந்தை அணைத்துக் கொண்டாள். அவளுக்குள் இப்போதே அவன் அண்ணனின் இரும்பு இதயத்தை முதல் முறையாக காதலிக்காக ஏங்கி துடிக்க வைத்த அந்த ஷாலினியை பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் அதிகமானது.


ஒரு சிறிய வீட்டில் உள்ள பழைய இரும்பு கட்டிலில் தனது முகம் வரை இழுத்து போர்த்திக் கொண்டு நன்றாக உறங்கிக் கொண்டு இருந்தாள் ஷாலினி. அவர்கள் இருந்த இடம் இயற்கை எழில் சூழ்ந்த எப்போதும் பறவைகளின் ஓசை கேட்கும் படியாக ரம்யமானதாக இருக்க, கிச்சனில் இருந்த ஜன்னல் வழியாக வழக்கம் போல அந்த காலை நேரத்தின் அழகிய காட்சியை பார்த்து ரசித்தபடி சுட சுட டீ போட்டுக் கொண்டிருந்தான் ஒரு இளைஞன். அவனது அந்த சூடான தேனீரின் மனம் அந்த வீடு முழுவதும் பரவியது. டீ போட்டு முடித்தபின் ஆவி பறக்க அதை இரண்டு கப்பில் ஊற்றிய அந்த இளைஞன் “ஷாலு.. ஷாலு மா.. டைம் என்ன தெரியுமா? ஆல்ரெடி எனக்கு லேட் ஆயிடுச்சு டி. சீக்கிரம் எந்திரி. நான் போய் சுடுதண்ணி போடுறேன்.” என்றபடி அவர்களது ரூமிற்குள் நுழைந்தான்.


வழக்கம்போல அவனது சுவையான தேநீரின் நறுமணத்தை உள் இழுத்தவாறு அவள் முகத்தில் இருந்த போர்வையை அகற்றிய ஷாலினி தனது கலைந்த கூந்தலை கொண்டை போட்டவாறு எழுந்து அமர்ந்து “உன்ன யாரு விஷ்ணு சீக்கிரமா எந்திரிக்க சொல்றா? நீ டெய்லியும் சீக்கிரம் எந்திரிச்சுட்டு, என்னமோ என்னால தான் லேட் ஆகிற மாதிரி என்னை திட்டுற!” என்றாள். அவள் கையில் ஒரு கப்பு டீயை கொடுத்துவிட்டு, தானும் தனக்கான டீ கப்பை எடுத்துக் கொண்டு அவள் அருகில் அமர்ந்த விஷ்ணு “மகாராணிக்கு ஒரு நாள் கூட சீக்கிரமா தூங்கி எந்திரிச்சு பழக்கமே இல்லை. இப்ப நீ லேட்டா எழுந்திருக்கிறது உனக்கு பரவால்ல. நான் சீக்கிரமா எந்திரிச்சது தான் தப்பா?” என்று கேட்டான்.



அவன் கொடுத்த டீயை ரசித்து ருசித்து குடிக்க தொடங்கிய ஷாலினி “ஆமா, பின்ன இல்லையா? நீ சீக்கிரமா எந்திருக்கிறதுனால தானே, நான் லேட் ஆ எந்திரிக்கிற மாதிரி உனக்கு தெரியுது! இனிமே நீயும் என் கூடவே தூங்கி, நான் எந்திரிக்கற டைமுக்கு தான் எந்திரிக்கணும்.” என்று அன்பு கட்டளை இட, “ம்ம்.. சொல்லுவ டி சொல்லுவ.. உன் இஷ்டத்துக்கு நீ என்ன வேணாலும் சொல்லுவ. உன்னால டெய்லி டேட்டா வேலைக்கு போய் மேனேஜர் கிட்ட திட்டு வாங்குறது நான் தானே!” என்று கேட்டான் விஷ்ணு. “ஏன் எனக்காக கொஞ்சம் திட்டு கூட வாங்க மாட்டியா நீ? அவர் சளி இருமல்ன்னு நேத்து கூட என் கிட்ட தான் ட்ரீட்மென்ட்காக வந்தாரு. ‌ இன்னொரு தடவை அவர் உன்னை திட்டினாருன்னா சொல்லு, அவருக்கு ஒன்னுக்கு ரெண்டு இன்ஜெக்ஷனா சேர்த்து போட்டு விட்டுடறேன். இனிமே உன்ன திட்டினா, அவர் ஃபேமிலில யாருக்கும் டிரீட்மென்ட் பாக்க மாட்டேன்னு மிரட்டி வைக்கிறேன்.” என்று விளையாட்டாக ஷாலினி சொல்ல, “ஆஹான்.. நீ நடத்துமா.. உன்னை யார் கேட்க போறா? இந்த ஊருக்குள்ள இருக்கிற ஒரே டாக்டர் நீதான். நீ சொல்றத கேட்காம இருப்பாரா அவரு? இப்படித்தானே எல்லாரையும் மேடம் மிரட்டுறீங்க! எனக்கே சில சமயம் உன்ன பார்த்தா பயமா இருக்கு.” என்று சொல்லிவிட்டு சிரித்த விஷ்ணு “நான் சுடு தண்ணி போட்டுட்டேன். சட்னி அரைச்சு வச்சிட்டேன். நான் குளிச்சிட்டு வர்றதுக்குள்ள எனக்கு 3 தோசை மட்டும் ஊத்தி வைக்கிறியா செல்லம் ப்ளீஸ்?” எனறு கெஞ்சலாக கேட்டான்.

- மீண்டும் வருவான்...

எங்களது பேஸ்புக் குரூப்பில் இணைய இந்த லிங்கை கிளிக் செய்யவும்:

 

Author: thenaruvitamilnovels
Article Title: Chapter-8
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.