“எங்களுடைய ஊர் தேவதையே அவ தான்…. அவள இழந்துட்டோம்… அந்த இடத்துக்கு யாரும் ஈடு இனையே இல்ல…. ஆனா, கடவுளா பார்த்து உன்ன அனுப்பி இருக்காருன்னு நாங்க நம்புறோம்” என்று பாட்டி கூற, சனந்தா புன்னகைத்து அபர்ணாவின் புகைப்படத்தை பார்க்க, அவள் மனதில் ஆயிரம் எண்ண ஓட்டங்கள் வந்து தலையை பிடித்துக் கொண்டு மயங்கி சரியவும் விக்ரம் ஓடி வந்து அவளை தாங்கினான்.
“இதுக்கு தான் நான் வேணான்னு சொன்னேன்…. என் பேச்சை எங்கேயாவது கேட்டீங்களா நீங்க ரெண்டு பேரும்…. பாரு இப்ப, வந்த முதல் நாளே என்ன ஆச்சுன்னு தெரியல அவளுக்கு” என்று சரவணன் விக்ரம் மற்றும் அபிலாஷை திட்டி தீர்க்க, “கத்தாத டா அவளுக்கு இந்த இடமும் புதுசு அதுவும் இல்லாம அவ அபர்ணாவோட ஃபோட்டோ பார்த்து தானே மயங்கி விழுந்தா….. அவளுக்கு அந்த அதிர்ச்சியும் இருக்கும்… எந்திரிச்சா நம்ம கேட்டுக்கலாம் நீ சும்மா கத்திட்டு இருக்காத” என்று அபிலாஷ் கூறினான்.
ஆனால் விக்ரமோ சனந்தாவை படுக்க வைத்து இருக்கும் பெட்டின் அருகில் சேர் போட்டு அதன் மீது அமர்ந்து கொண்டு அவளேயே பார்த்துக் கொண்டிருந்தான். “ஆமா, இவனுக்கு என்ன ஆச்சு அவ வந்ததிலிருந்து இவன் சரி இல்லையே” என்று அபிலாஷ் கேட்க, “அதான் ஒரு வாட்டி நாங்க ஊட்டுக்கு போனப்போ ஒரு பொண்ண பார்த்து தெருத் தெருவா சுத்தினான்னு வந்து சொன்னேன்ல அந்த பொண்ணு இவ தான்” என்று சரவணன் கூற, “ஓ கதை அப்படி போதா…. இப்ப என்ன அந்த பொண்ணு வந்து உடனே இவனுக்கு மனச அப்படியே கரைஞ்சிருச்சா” என்று அபிலாஷ் கேட்டான்.
“நீ லூசு மாதிரி பேசாதடா…. அவன் என்ன நிலைமையில இருக்கான்னு கொஞ்சம் யோசிச்சு பாரு… அப்பு இல்ல…. அப்பு போனதுக்கு காரணம் இவ தான்னு நமக்கு தெரியும்…. விக்கி எப்பவோ இந்த பொண்ண பார்த்து தெரு தெருவா சுத்தினான் இவள கண்டு பிடிக்க…. இன்னொரு வாட்டி பார்டில பார்த்தான் அங்கேயும் ரொம்ப தேடினான்… ஏன்னே தெரியல ஒரு ஆளை பார்த்ததும் புடிச்சு போய் அப்படி தேடினான்…. அவன் ஒரு பொண்ணுக்காக தேடி அலைஞ்சான்னா அது இவ மட்டும் தான்…. அவள கோயம்புத்தூர்ல ஹாஸ்பிடல்ல பார்த்தான்றதுக்காக அங்க போன மாசம் ஃபுல்லா அப்படி தேடினான்…. யோசிச்சு பாரு அவனுக்கு எவ்வளவு புடிச்சி இருக்கும் இந்த பொண்ணன்னு…. ஆனா, அந்த பொண்ணு தான் இவன் வெறுக்குற ஒரு பொண்ணா வந்து இங்க இருக்கான்னும் போது என்ன பண்ணனும்னு அவனுக்கே தெரியாம இருக்கான்டா…. நீ வேற ஏன் டா இப்படி பேசுற சும்மா இரு” என்று சரவணன் கூற, “அது என்ன வேணா இருக்கட்டும் இவளை வெச்சு செஞ்சு தான் அனுப்புறோம் நம்ம, சரியா…. அவனுக்கு புடிச்சிருச்சுன்றதனால எல்லாம் சும்மா இருக்க முடியாது” என்று அபிலாஷ் பேசவும் சனந்தா மெதுவாக கண் முழித்தாள்.
சரவணன் அதை பார்த்ததும், “முதல்ல அவள பாரு அதுக்கு அப்புறமா பேசிக்கலாம்” என்று சரவணன் பல்லை கடித்துக் கொண்டு கூறினான். அபிலாஷ் சனந்தாவிடம் சென்று, “தல வலிக்குதா… எப்படி இருக்கு இப்போ உங்களுக்கு” என்று விசாரிக்க, “எனக்கு எதுவும் இல்ல நான் நல்லா தான் இருக்கேன்” என்று சனந்தா எழுந்து அமர்ந்து கொண்டு கூறினாள்.
“ஏன் திடீர்னு இப்படி மயக்கம் வந்துருச்சு?” என்று சரவணன் கேட்க, “தெரியல எனக்கு… அங்க… அவங்க ஃபோட்டோவ பார்த்ததும் என்னென்னவோ யோசனை எல்லாம் வந்தது… அதான் ஒரு மாதிரி ஆயிட்டேன்” என்று சனந்தா கூறினாள்.
“ஒரு நிமிஷம் இருங்க…. அபர்ணா யாருன்னு உங்களுக்கு தெரியாதா?” என்று அபிலாஷ் கேட்க, “அவங்க பேர் அபர்ணாவா?? அவங்கள பார்த்த மாதிரி ஞாபகம் இல்ல…. ஆனா, ஏதோ ஒரு மாதிரி இருந்துது” என்று சனந்தா கூறினாள்.
“ஆமா, உங்க கிட்ட ஒன்னு கேட்கலாமா??? உங்க மெடிக்கல் ஹிஸ்டரிய நான் பார்த்த வரைக்கும் உங்களுக்கு ரீசன்டா தான் ஆக்சிடென்ட் ஆச்சுன்னு இருந்தது…. எங்க ஆச்சுன்னு தெரிஞ்சுக்கலாமா??” என்று கேட்க அபிலாஷ் கேட்க, “நான் ஊட்டில ஒரு ஸ்கூல்ல இன்ஸ்பெக்ஷனுக்கு வந்துட்டு போகும் போது ஆக்சிடென்ட் ஆச்சு” என்று சனந்தா கூறினாள்.
“அப்போ நீங்க…..” என்று சரவணன் பேச ஆரம்பிக்கவும், அபிலாஷ் சரவணனின் கையை பிடித்து, “நீங்க ரெஸ்ட் எடுத்துக்கோங்க நாங்க இப்ப வர்றோம்” என்று கூறி சரவணனை அழைத்துக் கொண்டு அபிலாஷ் வெளியே சென்றான்.
“என்னை ஏன்டா கூட்டிட்டு வந்த என்ன ஆச்சுன்னு கேட்கலாம்ன்னா” என்று சரவணன் கூற, “அவளுக்கு எதுவுமே ஞாபகம் இல்ல போல டா…. கடைசியா போனது ஊட்டிக்குன்னு சொல்லிட்டு இருக்கா…. ஆனா நம்ம பார்டிக்கு போனது கோயம்புத்தூர்ல…. அதனால தான் அவளுக்கு அபர்ணாவை யாருன்னு தெரியல…. அதான் அபர்ணா ஃபோட்டோவ பார்த்ததும் அவளுக்கு ஒரு வேள அந்த ஞாபகங்கள் வந்திருக்கலாம் போல… அதனால கூட அவளுக்கு தலை வலிச்சிருக்கும் ஒரு பிரஷர் ஆயிருக்கும் அவளுக்கு” என்று அபிலாஷ் கூறினான்.
“டேய் உண்மையா தான் சொல்றியா… இப்படித் தான் நடந்து இருக்குமா? இல்ல அவ போதைல இருந்ததுனால கூட அப்புவ தெரியாம இருக்கலாமே??” என்று சரவணன் ஆச்சரியத்தில் கேட்க, “ஆமா மச்சான்… இவ கொஞ்ச நாள் கோமால வேற இருந்தா… போதைல இருந்தா தான்…. அட்லீஸ்ட் கோயம்புத்தூர்ல தான் ஆக்ஸிடென்ட்னு தெரியனும்ல இவ ஊட்டினு தானே சொல்லுறா” என்று அபிலாஷ் பேசவும், “அது எப்படி உனக்கு தெரியும் அவ கோமால இருந்துது” என்று சரவணன் கேட்டான்.
“அது… அது… வந்து… அவளோட மெடிக்கல் ஹிஸ்டரில பார்த்தேன் டா… இப்ப அதுவா முக்கியம்…. சொல்றத கேளு…. இல்லனா அந்த பொண்ணு இங்க வரர்துக்கு எப்படி ஒத்துகிட்டான்னு நான் கூட யோசிச்சேன்…. எப்படியும் இங்க வராம இருக்க தான் நிறைய பிளான் பண்ணுவாங்கன்னு நினைச்சேன்… அந்த பொண்ணு வருதுன்னதும் எனக்கு ஒரு டவுட்டு இருந்துது….. இப்ப பார்த்தா அந்த பொண்ணுக்கு நடந்தது ஞாபகம் கூட இல்லை….. அந்த ஊட்டிக்கு போயிட்டு வந்தேன்னு சொல்றா பார்த்தியா அதுவரைக்கும் மட்டும் அவளுக்கு ஞாபகம் இருக்கனும்… இல்லேன்னா ஒரு வேள நடிக்க கூட செய்லாமே… எல்லாம் தெரிஞ்சும் தெரியாத மாதிரி காட்டிகலாமே” என்று அபிலாஷ் கூறினான்.
“எனக்கு அப்படி தெரியல அவள பார்த்தா….. ப்ச்… டேய்!!! பாவமா இருக்குடா அவளை பார்த்தா…. அனுப்பிடலாம் டா….. எதுக்குடா இங்க வெச்சுக்கிட்டு” என்று சரவணன் கூறினான்.
“நீ எல்லாருக்கும் பாவம் பார்த்துட்டே இரு” என்று அபிலாஷ கூற, “அவ மேல உனக்கு எவ்வளவு கோபம் இருந்தாலும் உன்னுடைய ப்ரொஃபஷன் டாக்டர்னு வரும் போது நீ இறங்கி வேலை செய்றல அப்படி தான் எனக்கும் இருக்கும்” என்று சரவணன் கூற, “ப்ச்…. சரி வா போய் அவளை பார்க்கலாம்” என்று அபிலாஷ் கூற, இருவரும் உள்ளே சென்றனர்.
விக்ரம் அமைதியாக அவளின் அருகில் அமர்ந்து கொண்டிருக்க, சனந்தா சற்று சங்கடமாக உணர்ந்தாள். அதைப் புரிந்து கொண்ட விக்ரம், “உங்களுக்கு ஏதாவது சாப்பிட வேண்டுமா?? ஏதாவது சாப்பிடுறீங்களா??? இல்ல மருந்து மாத்திரை ஏதாவது சாப்பிடனுமா??” என்று விக்ரம் அக்கறையாக கேட்க, “இல்லை நான் வண்டில வரும் போது தான் கொஞ்சம் சாப்பிட்டேன் எதுவும் வேணாம்… நான் கொஞ்ச நேரம் கழிச்சு சாப்பிடுறேன்” என்று சனந்தா கூறினாள்.
“உங்கள ஒன்னு கேட்கலாமா??” என்று விக்ரம் கேட்க, “ம்ம்…. கேளுங்க சார்” என்று சனந்தா கூற, “இதுக்கு முன்னாடி என்ன ஆச்சு எனக்கு கொஞ்சம் விவரமா சொல்ல முடியுமா?” என்று விக்ரம் கேட்க, “தெரியல நான் திடீர்னு அவங்க ஃபோட்டோ பார்த்ததும் எனக்கு வேற ஏதோ நினைவுகள் எல்லாம் வந்துது என்னன்னு கூட எனக்கு தெரியல புதுசா இருக்கு” என்று சனந்தா கூறினாள்.
“அப்போ நீங்க இதுக்கு முன்னாடி அப்புவ பார்த்ததே இல்லையா?” என்று விக்ரம் கேட்க, இல்லை என்பது போல் தலையை அசைத்து, “இப்ப நடந்த ஆக்ஸிடென்டுக்கு அப்புறம் தான் இப்படி ஆகுது… ஏதேதோ யோசனை வருது” என்று சனந்தா கூறினாள்.
இருவரும் பேசிக் கொண்டிருக்கையில் அபிலாஷ் மற்றும் சரவணன் வந்து சேர்ந்தனர். “உங்களுடைய டீடையில்டு மெடிக்கல் ஹிஸ்டரி இன்னும் எனக்கு வரல… சோ, நீங்க என்ன ஏதுன்னு சொன்னீங்கன்னா அதுக்கேத்த மாதிரி நான் உங்களுக்கு மெடிசன்ஸ் குடுப்பேன்” என்று அபிலாஷ் கூற, “நோ பிராப்ளம் டாக்டர்… என்கிட்டயே மெடிக்கல் கிட் இருக்கு சோ, அந்த மெடிசின்ஸ் எடுத்துக்கிட்டா எனக்கு போதும்” என்று சனந்தா கூறினாள்.
“இல்லன்னா உங்களுக்கு வெறும் வைட்டமின் டிரிப்ஸ் மட்டும் ஏத்தவா” என்று அபிலாஷ் கேட்க, “இல்ல டாக்டர்… ரொம்ப தேங்க்ஸ் கேட்டதுக்கு…. மெடிசன்ஸ் இருக்கு அதை மட்டும் எடுத்துக்கிறேன்” என்று சனந்தா கூறினாள். அபிலாஷ் சைகையில் சரவணனிடம் சனந்தாவை அழைத்துக் கொண்டு செல்லுமாறு கூற, “சரி ஓகே…. வாப்பா நான் உன்னை கூட்டிட்டு போறேன்” என்று சரவணன் அழைக்க, சனந்தா அவனுடன் சென்றாள்.
“அவளுக்கு என்ன ஆச்சு??” என்று விக்ரம் கேட்க, “அவளுக்கு இந்த ஆக்சிடென்ட் நடந்ததெல்லாம் எதுவுமே ஞாபகம் இல்லை போல டா…. ஞாபகம் இருந்திருந்தா முதல்ல வந்திருக்கவே மாட்டா… நம்ம யாரு என்னன்னு கண்டிப்பா தெரிஞ்சிருக்கும்… தெரிஞ்சும் எப்படி வர ஒத்துக்கிட்டான்னு டவுட் இருந்துது கடைசில பார்த்தா அவளுக்கு நடந்த ஆக்சிடென்ட் ஞாபகம் இல்ல…. எங்க நடந்ததுன்னு கேட்டா கூட ஊட்டி ஸ்கூல்ல இன்ஸ்பெக்ஷன் முடிச்சுட்டு போகும் போதுன்னு சொல்றா…. ஒரு வேள எல்லாம் தெரிஞ்சும் நடிக்குறாளோன்னு சந்தேகம் இருக்கு… போக போக கண்டு பிடிக்கலாம்” என்று அபிலாஷ் கூறினான்.
விக்ரம் அமைதியாக இருக்க, “சரி அது இருக்கட்டும் நீ தேடிட்டு இருந்த பொண்ணு இவ தான்னு சரவணன் சொன்னான்… அப்படியா” என்று அபிலாஷ் கேட்க, ஆமாம் என்று தலையை அசைத்தான் விக்ரம். “அப்போ என்ன… அவளை அப்படியே விட்டுடுவியா இல்ல வீட்டுக்கு அனுப்பிடுவியா??” என்று அபிலாஷ் கேட்க, அதற்கும் விக்ரம் அமைதியாக இருந்தான்.
“இங்க பாரு இப்படி அமைதியாக இருந்தனா அவ்வளவு தான் உன்ன… என்ன பண்ணுவதே தெரியாது…. அப்பு போனதுக்கு காரணமே இவ தான்…. இவள பழிவாங்காம விடவே கூடாது…. இவ யார்ன்னு கூட தெரியாது நமக்கு…. அப்புகாக இது கூட பண்ணலன்னா எப்படி… அதுலயும் அவ நடிக்குறாளா என்னென்னு கூட தெரியல” என்று அபிலாஷ் கேட்ட, “எனக்கு இப்போ அவ மேல கோபம் இல்லைன்னு நினைக்கிறாயா அபி” என்று விக்ரம் கேட்டான்.
“அத தெரிஞ்சுக்க தான் உன்னை கேட்கிறேன்” என்று அபிலாஷ் கேட்க, “எனக்கு கோபம் இல்லாம இல்லை…. இப்படி ஒரு நிலைமையில் வந்து நின்னு இருக்கேனேன்னு தான் எனக்கு அதிர்ச்சியா இருக்கு…. மத்தபடி எனக்கு கோபம் எல்லாம் இருக்கு…. என் கோபத்தை தணிக்கனும்னா அதை நான் இவகிட்ட காட்டினா மட்டும் தான் தணிக்கவே முடியும்…. அதுலயும் அவளுக்கு எல்லாம் ஞாபகம் இருந்து எதுவும் தெரியாத மாதிரி நடிக்குறான்னு தெரிஞ்சா அவ்வளவு தான்” என்று விக்ரம் கூற, “இப்படியே இதே போல இரு…. சரவணன் வந்து அவளுக்கு உடம்பு சரியில்ல, இப்படி இருக்கா, பாவம் அவ…. அவளுக்குன்னு நிறைய பேசுவான்… மனசு மாறிடாத சரியா” என்று அபலாஷ் கூற, தலையை அசைத்து சென்றான் விக்ரம்.
சரவணன் சனந்தாவை விக்ரம் வீட்டிற்கு அழைத்து சென்றான். அங்கே வள்ளி, ஸ்ரீனிவாசன் மற்றும் கவிதா காத்துக் கொண்டிருந்தனர். “என்னம்மா வந்ததும் என்ன ஆச்சு உனக்கு” என்று வள்ளி அக்கரையாக கேட்க, “அது தெரியல… ம்ம்… ஆன்ட்டி… ரொம்ப நாள் கழிச்சு ரொம்ப தூரம் டிராவல் பண்றேன் அதனால கூட இருக்கலாம்” என்று சனந்தா கூறவும், “அப்படியா… சரி வந்து சாப்பிடு மா” என்று ஸ்ரீனிவாசன் அழைக்க, மறுக்க மனமின்றி சனந்தா உணவு உண்டு முடித்தாள்.
சிறிது நேரத்தில் அபிலாஷ் மற்றும் விக்ரம் வந்ததும், “மச்சான் லக்கேஜ் எல்லாம் வேற கோயில் கிட்டயே தான் வெச்சிருக்கேன்…. கீழ ரூமுக்கு கொண்டு போயிரவா” என்று சரவணன் கேட்க, “அதெல்லாம் ஒன்னும் வேணாம் பின்னால ரூம் கிளீன் பண்ணிட்டா அங்கேயே தங்கட்டும்” என்று விக்ரம் கறாராக கூறினான்.
“விக்கி என்ன பேசுறன்னு தெரிஞ்சு தான் பேசுறியா…. அங்க எந்த வசதியுமே இல்ல… ஒரே ஒரு ரூம் மட்டும் தான் இருக்கு அங்க எப்படி இந்த பொண்ணு இருப்பா?” என்று சரவணன் விக்ரமின் காதை கடிக்க, “உடம்பு சரியில்லாத பொண்ணுல அதான் கிட்ட இருந்து பார்த்துக்கனும்ல அதனால இங்கேயே இருக்கட்டும்” என்று விக்ரம் கூறவும், “எதுக்கு உங்களுக்கு சிரமம்…. வேணா எங்க வீட்டுக்கு கூட்டிட்டு போறேனே” என்று கவிதா குறுக்கிட, “அதெல்லாம் ஒன்னும் வேணாம் நான் பார்த்துக்குறேன்” என்று விக்ரம் முகத்தில் அரைந்தாற் போல் கூறவும் எவராலும் எதுவும் பேச முடியவில்லை.
“என்ன இவர் இவ்வளவு கோபமா பேசுறாரு திடீர்னு” என்று சனந்தா மனதில் நினைத்துக் கொண்டு, “பரவால்ல சார் எங்க வேணாலும் நான் தங்கிக்குவேன் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை” என்று கூறினாள். “அங்க எதுக்குடா நம்ம வீட்டிலயே ஒரு ரூம் ஃப்ரீயா தானே இருக்கு…. அங்க தங்கட்டுமே” என்று வள்ளி கூற, “யார எங்க தங்க வைக்கணும் எனக்கு தெரியும் மா” என்று விக்ரம் கூறவும் எதுவும் பேசாமல் அமைதியாகி விட்டனர் அனைவரும்.
கருத்துக்கள் எதுவாயினும் வரவேற்கப்படும்
நன்றிகள் பல

Author: Bhavani Varun
Article Title: Chapter 8
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.