அத்தியாயம்: 8
ரதி மீண்டும் தன் மொபைலில் இருந்த போட்டோவை பார்த்து பேப்பரில் பென்சில் ஸ்கெட்ச் செய்ய தொடங்கினாள். அப்போது அவள் தோள்களில் பறந்து வந்து அமர்ந்து கொண்ட சிம்ரன் கிளி கீ... கீ... என்று கத்தியது. அதனால் சிம்ரனை எடுத்து தன் கையில் வைத்துக் கொண்டு அதன் முகத்தை உற்றுப் பார்த்த ரதி “ஓய் நீ இன்னும் தூங்க போகலையா? முதல்ல ஒரு குண்டு வாங்கி உன்ன அதுக்குள்ள போட்டு அடைக்கணும்டி. உன்ன வீட்டுக்குள்ள Freeஆ விட்டதினால நீ அங்கேயும் இங்கேயும் சுத்திட்டு இருக்கியா? உன்னை யாராவது பிடிச்சிட்டு போய்ட்டா நாங்க எங்க போய் உன்னை தேடுறது?" என்று கேட்க, சிம்ரன் மீண்டும் அவளை பார்த்து கீ... கீ.... என்று கத்தியது.
அதனால் குறுகுறுவென்று அந்த கிளியின் முகத்தை பார்த்த ரதி “சாப்டியாடி?" என்று கேட்க, சாப்பிட்டேன் என்று சொல்வதைப் போல தன் தலையை ஆட்டிவிட்டு கீ... கீ.. என்று கத்தியது சிம்ரன். “சரி ஓகே நீ போ. எனக்கு நிறைய வேலை இருக்கு." என்ற ரதி தன் கையை விரிக்க, அவளை டிஸ்டர்ப் செய்யாமல் அங்கிருந்து பறந்து சென்று விட்டது சிம்ரன். மீண்டும் தன் Phoneஐ பார்த்து வரைய தொடங்கினாள் ரதி. அப்படியே அவள் வெகு நேரமாக வரைந்து கொண்டே இருக்க, அவள் அருகில் அமர்ந்து இருந்த விக்ரம் அவளது ஒவ்வொரு அசைவுகளையும் பார்த்து ரசித்துக் கொண்டு இருந்தான்.
அவள் ஒரு டி-ஷர்ட்டும் நைட் பேன்டும் அணிந்து இருந்தாள். அதனால் அவளது பப்லியான தேகத்தை அவனது கண்கள் எளிதாக அளவெடுத்தது. தன் பார்வையால் அவளை ஸ்கேன் செய்து கொண்டு இருந்த விக்ரம் அவளது பெரிய தொப்பையை பார்த்துவிட்டு தனக்குள் சிரித்தவன், “நல்ல புச்சுக்கு புச்சுக்குன்னு டெடி பியர் மாதிரி இருக்கடி நீ. அப்படியே அந்த கெளு.. கெளு பிங்கி பிங்கி கன்னத்தை பிடிச்சு நறுக்குன்னு கிள்ளி... உன்னை கொஞ்சம் போல இருக்கு... அச்சோ... செம க்யூட்டா இருக்கப் போ..!!" என்றுவிட்டு அவளை அப்படியே பக்கவாட்டில் இருந்து அனைத்து கொண்டு தன் மற்றொரு கையால் அவளது புசுபுசு கண்ணனத்தை பிடித்து கிள்ளினான்.
அதனால் சட்டென தன் மீது ஏதோ மின்சாரம் பாய்ந்ததை போல உணர்ந்த ரதி விருக்கென பயந்து சுற்றி முற்றி பார்த்தாள். பயதில் உடனே அவளுக்கு வியர்த்து கொட்டியது. அவளது பதட்டமான முகத்தை பார்த்து சிரித்த விக்ரம், அவள் அருகில் கட்டலில் தன் ஒரு கையை தலைக்கு முட்டுக் கொடுத்து படித்துக் கொண்டு அவளைப் பார்த்து கள்ளத்தனமாக புன்னகைத்தான்.
“என்ன இது எல்லாமே இன்னிக்கி ரொம்ப விசித்திரமா நடக்குது? எனக்கு இந்த மாதிரி எல்லாம் ஆனதே இல்லையே..!! ஏன் எப்பவும் என் கூட யாராே இருக்கிற மாதிரியே இருக்கு..!!" என்று நினைத்து குழம்பியவள் அப்போது தான் அவள் வரைந்து வைத்திருந்த ஓவியத்தை பார்த்தாள். அப்படியே விக்ரமின் உருவத்தை அட்சு பிசறாமல் வரைந்து வைத்திருந்தாள் ரதி. முதலில் அந்த ஓவியத்தை பார்த்து “இது யாரு? நான் வரைந்தவன்.. இந்த போட்டோல இருக்கிறவன் மாதிரியே இல்லையே..!!" என்று நினைத்து குழம்பினாள். அவள் இப்படி மண்டையை சொரிந்து கொண்டு அமர்ந்திருப்பதை கவனித்த விக்ரம் அவள் அப்படி என்ன வரைந்து வைத்திருக்கிறாள் என்று எட்டிப் பார்த்துவிட்டு சத்தமாக சிரித்தவன் அவளது காதோரம் கிடந்த முடி கட்றைகளை ஒதுக்கிவிட்டு அவள் காது மடல்களை தன் இதழ்களை வைத்து உரசியபடி அவள் அருகில் சென்று குனிந்து “என்ன ஒரு தடவை பார்த்த உடனே அப்படியே வரைஞ்சு வச்சிருக்க..!! அந்த அளவுக்கு நான் உன் மனசுல பதிஞ்ச்சுட்டனாடி என் குண்டு பேபி?" என்று கேட்க, கூச்சத்தில் ரதியின் உடல் சிலிர்த்து அடங்கியது.
ஆனால் அவளுக்கு ஏன் இப்படி நடக்கிறது என்று அவளுக்கே தெரியவில்லை. அதனால் தன் கையில் இருந்த Padஜ இறுக்கமாக பிடித்துக் கொண்ட ரதி, “அடச்சே... அந்த விக்ரம பாத்ததுல இருந்து எனக்கு அவன் ஞாபகமாவே இருக்கு..!! அதான் எவனையோ வரைய போய் அவனை வரைந்து வச்சிருக்கேன். இதெல்லாம் எங்க போய் முடிய போகுதோ கடவுளே...!!!" என்று சத்தமாக வாய்விட்டு புலம்பினாள். அதை கேட்டுக் கொண்டிருந்த விக்ரம் தான் இறந்து விட்டதை நினைத்து பார்த்து “இதெல்லாம் எங்க போய் முடிய போகுதுன்னு எனக்கும் தெரியல ரதி. But உன் கூட இருக்கும்போது நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன். இதுக்கு முன்னாடி நான் எப்பவும் இப்படி இருந்தது இல்லைடி. பொதுவா எல்லாமே செத்துப் போகிற வரைக்கும் தான்னு சொல்லுவாங்க. ஆனா நான் செத்து போனதுக்கு அப்புறம் என்னோட லைஃப்ல ஃபர்ஸ்ட் டைமா எனக்கு ஒரு பொண்ணு மேல இப்படி ஒரு feel வருது. இப்போ இதை நினைச்சு நான் சந்தோஷப்படனுமா? இல்ல இத முழுசா அனுபவிக்க முடியாம நான் செத்து போயிட்டேன்னு நெனச்சு வருத்தப்படணுமா?" என்று அவள் முகத்தை பார்த்து சோகமாக கேட்டான் விக்ரம்.
அப்போது வேறு ஒரு பேப்பரை விக்ரமின் டிராயிங் மீது வைத்த ரதி, “எதா இருந்தாலும் எல்லாமே நல்லதா நடக்கும். நம்ம பாசிட்டிவாவே நினைப்போம். கண்டதை நினைத்து Feel பண்ண வேண்டாம்." என்றவள், இப்போது தனது மொபைல் போனில் இருந்த reference போட்டோவை தெளிவாக பார்த்து அதில் இருந்தவனைப் போல அப்படியே பேப்பரில் வரைந்தாள். அவள் அதை வரைந்து முடிப்பதற்கு கிட்டத்தட்ட இரண்டு மணி நேரத்திற்கு மேல் ஆனது.
வரைந்து முடித்துவிட்டு அவள் வரைந்த ஓவியத்தை பார்த்து திருப்தியாக புன்னகைத்த ரதி, “சப்பா... வேலை முடிஞ்சிடுச்சு. மணி இப்பவே இரண்டறைக்கு மேல ஆயிடுச்சு. போய் தூங்கலாம். காலையில ஆஃபீஸ் வேற போகணும்." என்று நினைத்தவள் அப்படியே தன் கையில் இருந்த Padஜ அருகில் உள்ள மேஜையில் வைத்துவிட்டு அப்படியே அவள் கட்டிலில் விழ, அவள் விழுந்த வேகத்தில் டங் என்று சத்தம் எழும்பியது.
ஆனால் அதை எல்லாம் கண்டுகொள்ளாத ரதி அங்கே கிடந்த இரண்டு மூன்று தலையணைகளை எடுத்து அது அதற்கான சரியான இடத்தில் போட்டவள் ஒரு தலைவானியின் மீது காலை போட்டுவிட்டு, மற்றொரு தலைவாணியை கட்டிப்பிடித்துக் கொண்டு படுத்தாள். இப்போது அந்த தலையணைகள் கிடக்கும் இடத்தில் தான் விக்ரம் படுத்திருந்தான். ரதி இப்போது தலையணை என்று நினைத்து அவன் மீது தான் தன் கையையும் காலையும் போட்டுக் கொண்டு படுத்திருந்தாள்.
ஆத்மாவாக இருந்தாலும் அவளது அணைப்பை மனதார உணர்ந்த விக்ரம், அவள் தன் அருகில் மிகவும் நெருக்கமாக படுத்திருந்ததால் ஒருவித தயக்கத்துடன் அவளது முகத்தை பார்த்தான். வந்து படித்த பத்தாவது நொடியில் அவள் தன் கண்களை மூடி குறட்டை விட்டு தூங்க தொடங்கி இருந்தாள். அவளது தலைக்கு மேலே சுற்றிக்கொண்டு இருந்த Fan வேகமாக ஓடுவதற்கு பதிலாக அதற்கு மிகவும் வயதாகி இருந்ததால் லேசான சத்தத்துடன் சிரமப்பட்டு நடந்து கொண்டு இருந்தது.
அதனால் ரதியின் அங்கம் எங்கும் அங்கங்கே வியர்வை துளிகள் பூத்திருந்தது. அந்த வியர்வையின் வாசம் அவளது பஞ்சு போன்ற மலர் மேனின் நறுமணத்தோடு கலந்து, ஒரு புதுவித ஆளை மயக்கும் நறுமணத்தை உண்டாக்கி இருக்க, அது அவனை பித்து பிடிக்க செய்தது. அவனது உயிரற்ற ஆத்மா இன்னும் உயிர்ப்புடன் இருந்து, அவளை நெருங்கச் சொல்லி அவனை உசுப்பேத்திக் கொண்டிருந்தது. நாம் ஒருத்தியை காதலித்தாலே அவளது விருப்பம் இன்றி அவளை நெருங்குவது தவறு என்று நினைப்பவன் அவன்.
இப்போது இவர்களது விஷயத்தில், இப்படி ஒருவன் அவள் அருகில் இருப்பதே அவளுக்கு தெரியாது. இதில் அவளிடம் அத்துமீற துடிப்பது எல்லாம் அபத்தமானது என்று நினைத்த விக்ரம், தனது உணர்ச்சிகளை கட்டுப்படுத்திக் கொண்டு அவளது குழந்தை போல க்யூட்டாக இருந்த முகத்தை பார்த்து அவளை ஒரு குழந்தையாகவே நினைத்து அவளை இறுக்கமாக கட்டிப்பிடித்துக் கொண்டு படுத்தான்.
ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த ரதிக்கு திடீரென தன்னை யாரோ போட்டு அழுத்துவதை போல இருந்தது. அதனால் அவளுக்கு மூச்சு விடவே சிரமமாக இருப்பதைப் போல இருக்க, சட்டென மூச்சு வாங்கியபடி தன் நெஞ்சை பிடித்துக் கொண்டு எழுந்து அமர்ந்தாள் ரதி. பயத்தில் அவளது உடல் வியர்வையில் நனைந்திருந்தது. இப்போது அவளுக்கு என்ன நடந்தது என்று அவளுக்கே புரியவில்லை. ஆனால் உள்ளுக்குள் அவளுக்கு உதறலாக இருந்தது.
அதனால் “போய் அம்மாவ எழுப்பி இப்படி எல்லாம் இருக்குன்னு சொல்லலாமா?" என்று நினைத்தவளுக்கு “வேண்டாம் வேண்டாம் இதெல்லாம் சொன்னா அம்மா பயந்துடும். சரியா தூங்காததுனால தான் ஒரு வேலை இப்படி எல்லாம் இருக்குதோ.. என்னமோ... எதா இருந்தாலும் அந்த கருமாரி ஆத்தா பாத்துக்குவா." என்று நினைத்த ரதி, சிறிதளவு தண்ணீரை குடித்துவிட்டு மீண்டும் தலையணையை கட்டிப்பிடித்து படுத்தவள்
“செல்லாத்தா...
செல்ல மாரியாத்தா...
எந்தன் சிந்தையில் வந்து அருகில் ஆடி நில்லாத்தா..!!!" என்று மெல்லிய குரலில் பாடினாள். பின் அப்படியே அந்த மாரியம்மனை நினைத்து மீண்டும் தன் கண்களை மூடி உறங்கினாள்.
அப்போது அவளுக்கு ஒரு கனவு வந்தது.
அதில்...
ஒரு மாளிகை போன்ற வீட்டின் விசாலமான ஹாலில் உள்ள பெரிய உயர்தர வெள்ளை நிற சோபாவில் கால் மேல் கால் போட்டு அமர்ந்து ஒரு பெரிய ஆள் உயர டிவியில்
“உன் தலை முடி உதிர்வதைக் கூட தாங்க முடியாது அன்பே..!!
கண் இமைகளில் உன்னை நான் தாங்குவேன்." என்ற ரொமான்டிக் பாடலை பார்த்துக் கொண்டு இருந்த ரதி, தானும் அந்த பாடலை மெல்லிய குரலில் முணுமுணுத்து கொண்டு இருந்தாள். அப்போது ஆபீஸில் இருந்து வீடு திரும்பிய விக்ரம் தன் கையில் இருந்த Bagஜ ஓரமாக தூக்கி போட்டுவிட்டு வேகமாக ரதியின் அருகே சென்றவன் அவளை அசால்டாக தன் இரு கைகளிலும் ஏந்திக்கொண்டு வேகமாக சுற்றி “ஒய்... பப்ளிமாஸ்.. நான் உன்னை எவ்வளவு மிஸ் பண்ணேன் தெரியுமா?" என்று காதலுடன் கேட்க, அவனது தோள்களில் தன் இரு கைகளையும் மாலையாக போட்ட ரதி “நானும் தான் உன்ன ரொம்ப மிஸ் பண்ணினேன் விக்கி. இந்த பாட்டை கேட்கும் போது கூட எனக்கு உன் ஞாபகம் தான் வந்துச்சு. நீ எப்ப வருவேனு நான் யோசிச்சிட்டே இருந்தேன். கரெக்டா நீ வந்துட்ட. ஐ லவ் யூ டா புருஷா..!!" என்றவிட்டு அன்புடன்
அவனது கன்னத்தில் பச்சாக் என்று முத்தம் கொடுத்தாள்.
தொடரும்..
amazon-ல் படிக்க...

Author: thenaruvitamilnovels
Article Title: Chapter-8
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.