தொடர்ச்சி........
உன் பெயர் என்ன வேனாலும் இருந்துட்டு போகட்டும் ஆனால் நீ எனக்கு என்றும் மதி மயக்கும் மோகினி தான் இந்த மாறனின் மோகினி என்று தலையை அழுந்த கோதினான் மாறன்.
அவள் செல்லும் திசையை பின் தொடர்ந்தான் அவன்
கொஞ்சம் இருளாக இருக்கவே ஒரு கல் இடறி தடுக்கிய வேகத்தில் சற்று நிலை தடுமாற குனித்தவன் ஒரு நொடி நிமிர்ந்து பார்க்கும் இடைவெளியில் கண்களை விட்டு மறைந்தாள் மாறனின் மோகினி.
தலையை வல இடப்புறம் மெதுவாக அசைத்தவன் கண்கள் மின்ன உண்மையாகவே நீ மோகினி தான்
உன் பேரு கூட சொல்லாம போய்ட்டியே ,இப்போ உன்ன எங்க எப்படி தேடி கண்டு பிடிக்க.
ஆனா ஒன்னு மோகினி நீ இந்த உலகத்துல எந்த மூலையில் ஒழிஞ்சு இருந்தாலும் உன்னை கங்கையும் தேடி வருவேன் மறந்துறாதா என்னைக்காவது ஒரு நாள் உன்னை வந்து சேர்வேன்.இனி உன்னால இந்த மாறனின் கூண்டை விட்டு உன்னால எங்கேயும் பறக்க முடியாது.என்னைக்கும் என் மனசு என்னும் தங்க கூண்டுல மாட்டிகிட்ட கிளி நீ என்னோட கூண்டு கிளி என்று சிரித்துக் கொண்டே அங்கிருந்து காரை எடுத்து புறப்பட்டான் .
மாறன் செல்வதை சற்று தொலைவில் மறைந்து நின்று பார்த்துக் கொண்டிருந்தாள் நங்கை மாறனின் கார் சற்று தூரம் கண்ணை விட்டு மறைந்து சென்றதும் தான் ஒழிந்து கொண்டு இருந்த இடத்தை விட்டு வெளியே வந்து சில நிமிடங்கள் அவன் சென்ற சாலையை வெறித்து பார்த்து விறக்தியோடு ஒரு மெல்லிய புன்னகை புறிந்தவள் வீட்டிற்கு புறப்பட்டாள்.
மாறன் வீட்டுக்குச் செல்லும் முன்னரே அசோக் வீட்டில் காத்திருந்தார்....
மாறன் அசோக்கை சற்றும் கண்டு கொள்ளாமல் தன்னறைக்கு செல்ல,
எங்க போயிட்டு வர மாற என்று கேட்டார் அசோக்.
மாடியில் இரண்டு படிகளை கடந்த மாறன் ஒரு நொடி நின்று அசோக்கை முறைத்து பார்த்துவிட்டு விறுவிறுவென மாடி ஏறினான்.
இதை அசோக் பெரிதாக கண்டு கொள்ளவில்லை ஏனென்றால் மாறன் இந்த அளவிற்கு மரியாதை கொடுப்பதே அசோக்கிற்கு பெரியதாகத் தோன்றியது.
கோகிலா நங்கைக்காக வாசலிலேயே காத்திருக்க நங்கை வேக எட்டுக்களாக வருவதைக் கண்டு சற்று நிம்மதி அடைந்தாள்
என்ன நங்க எத்தனை வாட்டி சொல்லி இருக்கேன் இருட்டின நேரத்துல தோட்டத்து பக்கம் போகாதன்னு இனி நீ பூவெல்லாம் பறிக்க போக வேண்டாம்
என அதட்ட நங்கையோ அக்கா எனக்கு இருக்கிற ஒரே சந்தோஷம் இந்த தோட்டம் தான் உங்களுக்கே தெரியும்ல கா என்றால் நங்கை
அதைக் கேட்ட கோகிலாவும் சரி சரி மா போக வேண்டான்னு சொல்லல இருட்டுற நேரத்துல போகாதம்மா ரொம்ப நாளா தோட்டத்தை பராமரிக்காததுனால காடு மாதிரி செடி கொடிங்க அடர்ந்திருக்கு பூச்சி பொட்டு இருக்கும் ஏதாவது காட்டு விலங்குகள் வரவும் சாத்தியதை இருக்கு நங்க அதுக்கு தான் சொல்றேன் என்றார் கோகிலா.
நங்கை சரிங்க அக்கா என்றிட
சரி வா சாப்பிடலாம் உனக்காக தான் காத்துகிட்டு இருக்கேன் என்றாள் கோகிலா இருவரும் பின் ஒன்றாக அமர்ந்து பல கதைகள் பேசி சிரித்து கொண்டு உணவருந்தினார்கள்.பாவம் இத்தனை சோகமான வாழ்வுக்கு மத்தியில் நங்கைகான சிறு சிறு சந்தோசங்கள் இது தான்.
மாறனுக்கு காதல் நோயின் தாக்கம் சற்று அதிகமாக தோன்ற இரவெல்லாம் கன்னி அவளின் நினைவில் உறங்காமல் விழித்திருந்தான்.
நொடி பொழுதும் தன் மோகினியின் நினைவு வராமல் இல்லை.ஒவ்வொரு முறை கண்களை இமைக்கும் போதும்,இதயம் துடிக்கும் போதும் அவள் முகம் தோன்றி மறைய பாவம் அவனும் என்ன தான் செய்வான்.
இங்கே நங்கைக்கும் மாறனை குறித்த சிந்தனை தான் யார் அவர்,நல்லா பேசுறாங்க என்று தனிமையில் சிரித்துக் கொண்டாள்.
மாறனை நங்கைக்கு பிடித்திருந்தது அது பாவம் நங்கைக்கு தான் தெரியவில்லை.
அப்படியாக அந்த இரவும் கடக்க
மெல்ல காலை புலர்ந்தது.
அதிகாலை எழுந்து குளித்துவிட்டு கிருஷ்ணருக்கு ஒரு பூஜையை போட்டுவிட்டு தன் அன்றாட வேலைகளை கவனிக்க தொடங்கினால் நங்கை.
அப்போது அங்கே வந்த அன்பரசு அம்மாடி நங்க நேத்து நீ எங்க போயிருந்த வித்யாவை பொண்ணு பார்க்க மாப்பிள்ளை வீட்டிலிருந்து வந்திருந்தாங்க உன்ன கண்ணுளையே பார்க்க முடியலையே என்றார். இல்லை சார் கொஞ்சம் உடம்பு சரியில்ல அதுதான் ரூமிலேயே ஓய்வெடுத்துட்டு இருந்தேன் என்றால் நங்கை.
ஓ ! அப்படியா! என்னாச்சி? உடம்புக்கு இப்ப உடம்பு பரவாயில்லையா டாக்டர் ஏதும் வர சொல்லட்டா என்று கேட்டுக் கொண்டிருக்க இதையெல்லாம் அமைதியாக நின்று பார்த்துக் கொண்டிருந்த மாதங்கி படி இறங்கி கீழே வந்து அவள் அருகே வந்தார்.
க் கூ ம் என்று குரலை செரும இருவரும் மாதங்கியை அப்போது தான் கவனித்து நிமிர்ந்து பார்த்தனர்.
என்ன காலையிலேயே பேச்சு நடந்துட்டு இருக்கு வேலைக்காரி மேல இவ்வளவு அக்கறையா சற்று அன்பரசை முறைத்து கொண்டே
அவ நம்ம வீட்டு வேலைக்காரி அது ஞாபகம் இருக்கட்டும் என்று கூறவே
அது ஒன்னும் இல்லம்மா காபி கேட்டேன் என்றார் அன்பரசு.
ஓ அப்படியா என்று மாதங்கி நக்கலாக கேட்க.
ஃபிளாஷ்க்கில் இருந்த காஃபியை ஒரு கப்பில் ஊற்றி எடுத்து கொடுத்தால் நங்கை
அன்பரசு கையில் அதை வாங்கிக்கொண்டு ஒரு மிடறு பருகி அவ்விடம் விட்டு சென்றுவிட்டார்.....
நங்கையை முறைத்து விட்டு வேலையை பாரு என்று அதிகார தோரனையில் சொல்லிவிட்டு அங்கிருந்து வித்யாவின் அறைக்கு சென்றால் மாதங்கி.
சரண்யா மா டிபன் எடுத்துட்டு வாங்க ஒரு ஆட் சூட் விஷயமா கிலைன்ட் ட மீட் பண்ணனும் ஆபீஸ்ல எல்லாரும் வெயிட் பண்ணுவாங்க
கொஞ்சம் சீக்கிரம் எடுத்துட்டு வாங்க என்று கூறி டேபிளின் இருக்கையில் அமர்ந்தான் மாறன்.
இதோ வந்துட்டேன் தம்பி என்றதும்
சரண்யா எனக்கும் டிபன் எடுத்துட்டு வாங்க என்று எதிர் இருக்கையில் அமர்ந்தார் அசோக்.
மாறன் ஏதும் பேசாமல் தட்டில் இட்லியை சரண்யா வைக்க சாப்பிட்டுக் கொண்டிருந்தான் அப்போது அசோக் என்ன மாறா. நேத்து விஷயம் என்ன ஆச்சு அடுத்த வாரம் என்கேஜ்மென்ட் வைக்கலாமுன்னு முடிவு எடுத்திருக்கோம் சீக்கிரம் அதுக்கான ஏற்பாடுகளை எல்லாம் பாக்கணும் என்றதும் வாய்வரை கொண்டு வந்த இட்லியை தன் தட்டில் உதறினான் மாறன்.
இத பாருங்க இது ஒன்னும் உங்க பிசினஸ் இல்லை இது என்னோட வாழ்க்கை ஏதோ நீங்க அன்னைக்கு வாக்கு கொடுத்துட்டீங்க அப்படின்னு சொன்னதாலையும் சீதா மா "அப்பாவை எந்த காரணத்தினாலும் தலைகுனிய வைக்க கூடாது"ன்னு சொன்னதுனாலயும் தான் நான் அங்கே வந்தேன்.
அது மட்டும் இல்ல அந்த பொண்ண எனக்கு பிடிக்கல என்றான் மாறன்.
அசோக்குக்கும் தான் பிடிக்கவில்லை என்ன செய்வது காண்ட்ராக்ட் வேணுமே.அதற்காக தன் சொந்த மகனையே அடமானம் வைக்க துணிந்துவிட்டார் அவர்.அப்போதும் அதை எதையும் காட்டிக் கொள்ளாமல்
ஏண்டா பிடிக்கல பொண்ணு அழகா தானே இருக்கா பல கோடிக்கு அதிபதி வேற என்றார் அசோக்.
அழகு இருந்தால் மட்டும் போதுமா பண்பு வேண்டாமா ,சுத்தமா அடக்கம்ன்னா என்னன்னு தெரியாது போலே எனக்கு பிடிக்கல அவ்வளவுதான் என்றான் மாறன்.
ஏன் பிடிக்கல என்று அசோக் கேட்க
உங்களுக்கு புரிய வாய்ப்பே இல்லப்பா என் மனசு எங்க அம்மாவுக்கு மட்டும் தான் புரியும்🤰🏻 என்றான் மாறன்.
அம்மா அம்மா எப்ப பாத்தாலும் அம்மா ச்சை என்று சாப்பிட்டுக் கொண்டிருந்த தட்டை வீசி எரிந்து அங்கிருந்து சென்றார் அசோக்.
அதை சற்றும் பொருட்படுத்தாமல் சரண்யா மா நீங்க இட்லி வையுங்க என்றான் மாறன் சாப்பிட்டுக் கொண்டே.
சரண்யா இட்லி வைக்க.
சீதா மா இப்போ இருந்திருந்தால் எனக்கு எப்படிப்பட்ட பொண்ணு பார்த்து இருப்பாங்க என்று மாறன் கேட்க சரன்யாவோடு கேக்க
அது எனக்கு தெரியலப்பா ..ஆனா சீதா அம்மா கண்டிப்பா நல்ல குணமான பொண்ணா தான் பாத்திருப்பாங்க.
அப்போ நீங்க அது மாதிரி பொண்ணு இருந்தா சொல்லுங்க மா
எப்பயாச்சும் அது மாதிரியான பொண்ண பாத்தா நான் கையோட தூக்கிக்கிட்டு வந்திட மாட்டேன். என்று சரண்யா கூற சிரித்து விட்டு சரி அப்ப நான் ஆபீஸ் கிளம்புறேன் என்று கூறி சென்றான் மாறன்.
போயிட்டு வாங்க தம்பி என்று சரண்யா தன் வேலைகளை மீண்டும் தொடர்ந்தாள்.
வித்யாவிற்கு சற்றே போதை தெளியவே அன்னையைக் கண்டதும் குட் மார்னிங்.......இங்.... என்றால்
வித்யா
மாதங்கிக்கோ கோபம் 😡கொப்பளிக்க அடியே எத்தனை வாட்டி உனக்கு படிச்சு படிச்சு சொன்னேன் கண்ட கருமத்தை குடிட்சி தொலட்சிராதனு அவ்வளவு சொல்லியும் இப்படி பண்ணியிருக்க.
இந்த சம்பந்தமும் போச்சுன்னா என்ன பண்றது என்று கூறியபடி வித்யாவின் தலையில் ரெண்டு போடு போட்டால் மாதங்கி.
தலையை தடவி கொடுத்தபடியே அடிக்காதம்மா அவன் என்ன யோக்கியமா பணத்துக்காக தானே கல்யாணம் பண்றான் .அதனால நீ பயப்படாதம்மா என்றதும்
அடியே பணத்துக்காக ஒரு காரணமாய் இருக்கலாம் ஆனா மாறனுக்கோ அவங்க அப்பாவுக்கும் உன்கிட்ட இருக்கிற குறை தெரிஞ்சா கண்டிப்பா ஒத்துக்க மாட்டாங்க அசோக் மாறன் அப்பாவுக்கு காண்ட்ராக்ட் விட அவர் பையன் வாழ்க்கை தான் ரொம்ப முக்கியம் என்றாள்..மாதங்கி
அட போம்மா நீ வேற தன் சொந்த பொண்டாட்டி செத்ததுக்கே கவலைப்படாத ஆள் அசோக் அங்கிள். எல்லாத்தையும் பிசினஸா தான் பார்ப்பாரு...என்றால் வித்யா...
என்னவோ எனக்கும் உங்க அப்பாவுக்கும் இந்த கல்யாணம் ஒழுங்கா நடந்தால் சரி என்றால் மாதங்கி......
தொடரும்........
அன்புடன்
Shahiabi.writter ✍🏻

Author: shahiabi தனிமையின் காதலி
Article Title: Chapter -7
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.