Chapter-7

thenaruvitamilnovels

The World of Words
Staff member
Dec 25, 2024
163
0
16
www.amazon.com
அத்தியாயம் 7: வித்யாசமான ஃபர்ஸ்ட் நைட்

தேன்மொழி மற்றும் அர்ஜுனனின் திருமணம் முடிந்து விட, அவர்களது குடும்பத்தினர் அனைவரும் இப்போது சந்தோஷமாக இருந்தார்கள். அவர்கள் அனைவருக்குள்ளும் அர்ஜுன் குணமடைந்து விடுவான் என்ற நம்பிக்கை ஒளி தேன் மொழியின் வடிவில் இப்போது வந்திருந்தது.

நடந்த திருமணத்தை சட்டப்படி அங்கீகரிக்க வேண்டும் என்பதற்காக அர்ஜுனின் கண்களில் கூலிங் கிளாஸ்ஸை மாட்டி அவனை வீல் சாரில் அழைத்துச் சென்று ஏற்கனவே தயாராக இருந்த ரிசெப்ஷன் மேடையில் தூக்கி சென்று நிற்க வைத்தான் ஆகாஷ்.

அர்ஜூனுக்கு பின்னே இருந்து பிரிட்டோவும் அவனைப் பிடித்துக் கொள்ள, தேன்மொழியை அர்ஜுனின் அருகில் நிற்க வைத்து மற்ற குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் சேர்ந்து ஒன்றாக நின்று ஒரு ஃபேமிலி போட்டோ எடுத்துக் கொண்டார்கள்.

அதில் சித்தார்த்தும், ஆருத்ராவும் தேன்மொழி மற்றும் அர்ஜுனின் அருகில் நின்று கொண்டு இருக்க, கலங்கிய கண்களுடன் இருந்த தேன்மொழி கேமராவை பார்க்காமல் தன் தலையை தொங்க போட்டுக் கொண்டு இருந்தாள்.

அதை கவனித்த ஆகாஷ் உடனே “கேமராவை பார்த்து நல்லா சிரிங்க அண்ணி. அண்ணா கைய புடிச்சுகிட்டு போஸ் குடுங்க.

உங்க மேரேஜ் தான் எங்களோட final trum card. இதை வச்சுத் தான் சில பேருக்கு அண்ணாவோட ஹெல்த் கண்டிஷன் நல்லா தான் இருக்குன்னு நாங்க ப்ரூவ் பண்ண வேண்டியது இருக்கு.” என்றான்.

அதனால் வந்த கோபத்தையும், கண்ணீரையும் சிரமப்பட்டு கட்டுப்படுத்திய தேன்மொழி வராத புன்னகையை வரவழைத்து இழித்து வைத்தாள்.

அங்கே வெளியூருக்கு கபடி மேட்ச்சிற்க்காக சென்றிருந்த தேன்மொழியின் தம்பி ஆதவன் அரக்க பறக்க பஸ் பிடித்து சென்னையில் உள்ள தனது வீட்டிற்கு வந்து சேர்ந்தான்.

அவனுக்காக ஹாலிலேயே அமர்ந்து கண்ணீருடன் காத்துக் கொண்டிருந்த அவன் அம்மா விஜயா தன் மகனை கண்டவுடன் ஓடிச் சென்று அவனை அணைத்துக் கொண்டு “டேய் ஆதி.. தேனு எங்க போனா.. அவளுக்கு என்ன ஆச்சுன்னே தெரியல டா.

நானும் எங்கெங்கயோ போய் எனக்கு தெரிஞ்சவங்க கிட்ட எல்லாம் அவளை பத்தி விசாரிச்சு பாத்துட்டேன். இப்ப வரைக்கும் எந்த தகவலும் தெரியல. எனக்கு ரொம்ப பயமா இருக்கு டா. நம்ம தேனுக்கு ஒன்னும் ஆகிருக்காதுல?” என்று அழுது கதறினாள்‌.

“எனக்கும் பயமா தான் அம்மா இருக்கு. அதான் உடனே கிளம்பி வந்தேன். ஆனா அவளுக்கு எதுவும் ஆகிருக்காதுன்னு எனக்கு நம்பிக்கை இருக்கு.

இதுக்கு மேல நம்ம டைம் வேஸ்ட் பண்ண கூடாது மா. நான் உதையா அண்ணா கிட்ட பேசிட்டேன். அவர் இங்க தான் கிளம்பி வந்துட்டு இருக்காரு.

நம்ம மூணு பேரும் போய் பக்கத்துல இருக்குற போலீஸ் ஸ்டேஷன்ல தேனை காணோம்னு ஒரு கம்ப்ளைன்ட் கொடுத்துட்டு வந்துடலாம்.‌” என்று கண்ணீருடன் ஆதவன் சொல்ல, பதறிப் போனாள் விஜயா.

“என்ன டா சொல்ற.. போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுக்கணுமா? அப்ப என் பொண்ணுக்கு நெஜமாவே ஏதோ ஆயிடுச்சா! சொல்லு.. அவளை பத்தி உனக்கு ஏதாவது தெரிஞ்சுதா?” என்று தன் மகனின் சட்டையை பிடித்து விஜயா விசாரிக்க, அப்போது அந்த வீட்டு வாசலில் தன் பைக்கில் வந்து இறங்கினான் உதையா என்கின்ற உதயகுமார்.

அவன் பதட்டத்துடன் உள்ளே செல்ல, விஜயா பேசுவதை கேட்டுவிட்டு “நானும் சாயங்காலம் ஆதவன் எனக்கு கால் பண்ணி தேனை காணோம்னு சொன்னதுல இருந்து அவளை தான் தேடிட்டு இருக்கேன்.

என்னால எதுவும் கண்டு பிடிக்க முடியல மா. பஸ் ஸ்டாப் பக்கத்துல தான் எங்க அத்தை வீடு இருக்கு. எதுக்கும் அவங்க கிட்ட ஒரு தடவை விசாரிச்சு பார்க்கலாமேன்னு இப்ப தான் அங்க போயிட்டு வந்தேன்.

நான் அவங்க கிட்ட தேன் மொழியை பத்தி விசாரிக்கும் போது தான், யாரோ நாலு பேர் தேன் மொழிய ஒரு கருப்பு கலர் பெரிய கார்ல கூட்டிட்டு போனதை வெளிய விளையாடிட்டு இருக்கும்போது பார்த்ததா திவ்யாவோட பையன் சொன்னான்‌.

அவன் அவங்க எல்லாம் சேர்ந்து தேன்மொழிக்கு ஏதோ உடம்பு சரியில்ல அதான் அவளை ஹாஸ்பிடலுக்கு கார்ல தூக்கிட்டு போறாங்கன்னு நினைச்சுக்கிட்டானாம்.

ஆனா அவன் சொன்னத வச்சு பார்த்தா, யாரோ நாலு பேர் அவளை மயக்க மருந்து கொடுத்து கடத்திட்டு போயிருக்காங்கன்னு எனக்கு தோணுது மா. இதுக்கு மேலையும் நம்ம கம்ப்ளைன்ட் கொடுக்காம இருந்தா ரொம்ப தப்பாயிடும்.

எவ்ளோ சீக்கிரம் முடியுமோ, அவ்ளோ சீக்கிரம் நம்ம தேன்மொழிய கண்டுபிடிச்சே ஆகணும். நீங்க இப்பவே வாங்க.. நம்ம போலீஸ் ஸ்டேஷனுக்கு போகலாம்.” என்றான் உதையா.

அவன் சொன்னதைக் கேட்டு மேலும் அதிர்ந்த விஜயா ”என்ன தம்பி சொல்றீங்க? தேன்மொழியை கடத்திட்டாங்களா? நாங்க யாருக்கு என்ன பாவம் பண்ணோம்?

எதுக்கு என் பொண்ணை கடத்திட்டு போனானுங்க படுபாவிங்க! இப்ப நான் எங்க போய் அவளை தேடுவேன்?

ஐயோ தேன்மொழி.. எங்க டி இருக்க? உன்ன எந்த நாசமா போனவனுங்க கடத்திட்டு போனானுங்கன்னு தெரியலையே..!! இப்போ எப்படி தான் உன்னை காப்பாத்தி வீடு கொண்டு வந்து சேர்ப்பேன்?” என்று கேட்டுவிட்டு பீறிட்டு அழுது தனது தலையில் அடித்துக் கொண்டாள்.

உடனே தன் அம்மாவின் அருகே சென்ற ஆதவன் அவள் கையை பிடித்துக் கொண்டு “அம்மா தயவு செஞ்சு அழுகாத மா. நம்ம லேட் பண்ற ஒவ்வொரு செகண்டும் அக்காவுக்கு தான் ஆபத்து.

அந்த பையன் சாயங்காலமே அக்காவை யாரோ கடத்திட்டு போறத பாத்துருக்கான். இவ்வளவு நேரம் அது தெரியாம நம்ம அவளை தேடிட்டு இருந்து டைம் வேஸ்ட் பண்ணதே தப்பு.

முதல்ல போய் போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுக்கலாம். நம்ம ஏரியால அந்த பக்கம் நிறைய சிசிடிவி கேமரா இருக்கு. அதுல எதுலயாவது கண்டிப்பா அந்த கார் கிராஸ் ஆனது ரெக்கார்டு ஆகி இருக்கும். அத வச்சு ஈஸியா தேனை கடத்திட்டு போனது யாருன்னு நம்ம கண்டுபிடிச்சிடலாம்.

நீ பயப்படாத. உதை அண்ணா சொன்ன மாதிரி இப்பவே நம்ம போலீஸ் ஸ்டேஷன்ல கம்ப்ளைன்ட் கொடுத்துட்டு வந்துடலாம். நீ வேணா பாரு.. அவங்க நாளைக்குள்ள தேனு எங்க இருக்கான்னு கண்டுபிடிச்சு சொல்லிடுவாங்க.” என்று சொல்லி சமாதானப்படுத்த முயற்சி செய்தான்.

“டேய் ஆதவா.. எனக்கு ரொம்ப பயமா இருக்கு டா. அவ பொம்பள புள்ள டா. நாலு பொறுக்கி பசங்க அவளை கடத்திட்டு போயிருக்காங்கன்னு சொல்றாங்களே..!! அவளுக்கு என்ன ஆச்சுன்னு தெரியலையே டா..!!

இந்த மாதிரி பொண்ணுங்கள கடத்தி என்னென்னமோ பண்றாங்கன்னு தினமும் நம்ம எத்தனை நியூஸ் பார்க்கிறோம்.. இப்ப நம்ம வீட்டு பொண்ணையே கடத்திட்டு போய்ட்டாங்களே டா..

அவளுக்கு என்ன ஆகிருக்கும்னு நெனச்சாலே எனக்கு நெஞ்செல்லாம் பதறுது. என் பொண்ணு பத்திரமா வந்துருவாளா டா?” என்று துக்கம் தொண்டையை அடைக்க கலங்கிய கண்களுடன் கேட்ட விஜயா ஆதவன் அவளுக்கு பதில் சொல்வதற்குள் மயங்கி கீழே விழுந்தாள்.

அதனால் பதறிப்போன உதையாவும், ஆதவனும் சேர்ந்து விஜயாவின் முகத்தில் தண்ணீர் தெளித்து அவளை எழுப்பினார்கள்.

அப்போதும் விஜயா “ஐயோ எங்க டி இருக்க..!! என்‌ புள்ள.. இந்நேரம் எங்க இருக்கோ என்ன பண்ணிட்டு இருக்கோ தெரியலயே..!!” என்று மீண்டும் மீண்டும் அதையே சொல்லி தொடர்ந்து அழுது புலம்ப, அவளை பேசி சமாதானப்படுத்தி போலீஸ் ஸ்டேஷனில் கம்ப்ளைன்ட் கொடுப்பதற்காக ஆதவனும், உதயாவும் அழைத்து சென்றார்கள்.

அர்ஜுனின் பேலசில் குடும்ப ஃபோட்டோ எடுத்து முடித்த பிறகு, தேன் மொழியை தனியாக நிற்க வைத்து ஒரு சில போட்டோ எடுத்தார்கள்.

அதற்கெல்லாம் வேண்டா வெறுப்பாக தேன்மொழி போஸ் கொடுத்து கொண்டு இருக்க, மற்றவர்கள் அனைவரும் அவளுடன் சேர்ந்து மாறி மாறி சந்தோஷமாக போட்டோ எடுத்து குவித்தார்கள்.

அங்கே நடந்த கூத்தை எல்லாம் வெளியில் இருந்து பார்த்தபடி உள்ளே ஒரு 70 வயதுமிக்க ஆண் ஒருவர் வந்தார். அவர் வேக எட்டுக்கள் வைத்து அங்கே வர, அந்த இடத்தில் இருந்த கலகலப்பான சத்தங்களையும் தாண்டி அவரது காலடியின் சத்தம் அந்த இடம் முழுவதும் எதிரொலித்தது.

அதனால் பாட்டி, ஜானகி, ஆகாஷ் உட்பட அனைவரும் திரும்பி வாசலை பார்க்க, உள்ளே வந்த அர்ஜுனின் அப்பா பிரதாப் சத்தமாக நான்கு முறை கை தட்டினார்.

அவர் உள்ளே நுழைந்தவுடன் அனைவரும் அமைதியாகி விட்டதால், அவரது கை தட்டல் அந்த விசாலமான இடம் முழுவதும் எதிரொலித்தது.

மெல்ல நடந்து தனது குடும்பத்தினர்களின் அருகில் சென்று நின்ற பிரதாப் “நல்லா இருக்கு..‌ இதெல்லாம் பாக்குறதுக்கு ரொம்ப நல்லா இருக்கு.

நான் அத்தனை தடவை இது தப்பு. வேண்டாம் பியூச்சர்ல அர்ஜுனுக்கு சரியானதுக்கு அப்புறம் அவனே இதை எல்லாம் ஏத்துக்க மாட்டான்னு அத்தனை தடவை சொல்லியும், நீங்க எல்லாரும் உங்க இஷ்டப்படி நீங்க நினைச்ச மாதிரியே என் பையனுக்கு கல்யாணம்னு எதையோ ஒன்ன பண்ணி வச்சிட்டீங்க இல்ல!” என்று தனது கணீர் குரலில் கேட்டார்.

அவரை எதிர்த்து பேச தைரியம் வராமல் அனைவரும் அமைதியாக இருக்க, யாராவது ஒருத்தர் நடந்த அனைத்திற்கும் பொறுப்பேற்றுக் கொண்டு தானே ஆக வேண்டும்! என்று நினைத்த ஆகாஷ் முன்னே சென்று “நீங்களும் நானும் சேர்ந்து நமக்கு தெரிஞ்ச எல்லா sourceஐயும் யூஸ் பண்ணி அண்ணனை சரி பண்ண ட்ரை பண்ணி பாத்துட்டோம்.

அம்மாவும், பாட்டியும் இப்படி பண்றதுனால அவர் cure ஆயிடுவாருன்னு நம்புறாங்க. அத ட்ரை பண்ணி பாக்குறதுல என்ன தப்பு இருக்கு டாடி?

ஒருவேளை அவங்க சொன்ன மாதிரியே, அண்ணி வந்த நேரம் அண்ணாவுக்கு சரியாகிட்ட.. நமக்கு வேற என்ன வேணும் சொல்லுங்க?” என்று கேட்டான்.

தனக்காக யோசிக்கவும் யாரோ ஒருவர் இருக்கிறார் இங்கே என்று நினைத்து சந்தோஷத்தில் கண்ணீருடன் பிரதாப்பை பார்த்த தேன்மொழி “சார்.. நீங்களாவது தயவு செய்து என் இடத்தில இருந்து யோசிச்சு பாருங்க.

நான் ஒரு சாதாரண பொண்ணு. எனக்கும் இந்த குடும்பத்துக்கும் என்ன சம்பந்தம் இருக்கு சொல்லுங்க? தேவை இல்லாம இந்த கல்யாணத்துல என்ன எதுக்கு கொண்டு வந்து மாட்டி விடணும்?

இந்த வீட்ல இருக்கிறவங்களுக்கு உங்க வீட்டு பையன் ரொம்ப முக்கியமா தெரியுறாருல்ல.. அதே மாதிரி தானே நானும் ஒருத்தங்களுக்கு பொண்ணு!

இந்நேரம் நான் இவ்ளோ நேரமா வீட்டுக்கு வர்றதுனால எங்க அம்மாவும் தம்பியும் என்னை காணோம்னு எப்படி எல்லாம் பதறி போயிருப்பாங்க! எனக்கு அதை நினைச்சாலே உங்க எல்லாரையும் பார்த்து பயத்திலையும், நீங்க குடுக்குற மெண்டல் பிரஷர்ளையும் பைத்தியம் பிடிக்கிற மாதிரி இருக்கு.

இதுல மனசாட்சியே இல்லாம நான் சந்தோஷமா உங்க பையன் கூட சேர்ந்து வாழணும்னு இவங்க எல்லாரும் ஆசைப்படுறாங்க. அது எப்படி சார் நடக்கும்?

நீங்க எடுத்த இந்த முடிவு உங்க பையனோட வாழ்க்கையையும் சரி, என்னோட வாழ்க்கையையும் சரி டோட்டலா ஸ்பாயில் பண்ண தான் போகுது. நீங்களாவது அத புரிஞ்சிக்க ட்ரை பண்ணுங்க சார் ப்ளீஸ்..!!” என்று கையெடுத்து கும்பிட்டு கெஞ்சி தரையில் அமர்ந்து கதறி அழுதாள்.

தேன்மொழி பேச தொடங்கிய உடனேயே குழந்தைகள் அதையெல்லாம் கேட்டு தேவை இல்லாமல் மீண்டும் கன்ஃபியூஸ் ஆக வேண்டாம் என்று நினைத்த லிண்ட வலுக்கட்டாயமாக அவர்கள் அனைவரையும் அங்கே இருந்து அழைத்துச் சென்று விட்டாள்.

- மீண்டும் வருவாள்

எங்களது பேஸ்புக் குரூப்பில் இணைய இந்த லிங்கை கிளிக் செய்யவும்:


 

Author: thenaruvitamilnovels
Article Title: Chapter-7
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.