Chapter-7

thenaruvitamilnovels

The World of Words
Staff member
Dec 25, 2024
163
0
16
www.amazon.com
அத்தியாயம் 7: உனக்காக வருவேன்

காலை ஆறு மணி அளவில் பிக் பாஸ் இன் ஃபோனிற்க்கு அவன் எங்கே இருக்கிறான் என்று கேட்டு அவனது டீம் மெம்பர்ஸ் இடம் இருந்து தொடர்ந்து மெசேஜ் வந்து கொண்டே இருந்தது. அதன் நோட்டிபிகேஷன் சவுண்ட் கேட்டு கண் விழித்த பிக்பாஸ் உடனே தனது ஃபோனை எடுத்துப் பார்த்தான். அவன் எப்படி இருக்கிறான் என்று தெரியாமல் பயந்து போய் அவனது குழுவினர்கள் அவனுக்கு ஏராளமான மெசேஜ்களை தொடர்ந்து அனுப்பிக் கொண்டே இருக்க, “டேய் கொஞ்ச நேரம் சும்மா இருக்குடா. நல்லா தூங்கிட்டு இருந்தேன். எழுப்பி விட்டுட்டீங்க. நான் safeஆ தான் இருக்கேன். ஏற்கனவே சொன்ன மாதிரி கரெக்டா 7:00 மணிக்கு நம்ம மீட்டிங் ஸ்பாட்டுக்கு வந்துருவேன். அதுவரைக்கும் சும்மா நோய் நோயின்னு மெசேஜ் அனுப்பிட்டே இருக்காதீங்க. இந்த நோட்டிபிகேஷன் சவுண்டை கேட்டாலே எனக்கு இரிடேட் ஆகுது.” என்று அவர்களுக்கு ரிப்ளை அனுப்பினான்.

அதை பார்த்து ஷாக் ஆன மோனிஷா “நம்ம எல்லாரும் நைட்டு ஃபுல்லா அந்த மாஃபியா கும்பல்‌ கிட்ட இருந்து எப்படி தப்பிக்கிறது என்று தெரியாம சுத்திட்டு இருந்துட்டு இப்பதான் இங்க வந்து செட்டில் ஆகி இருக்கோம். என்ன அண்ணா மட்டும் நல்லா நிம்மதியா தூங்கிட்டு இருந்தேன்னு சொல்றாரு! இங்க அவருக்கு மட்டும் தெரிஞ்ச safe place ஏதாவது இருக்கா என்ன?” என்று குழப்பமாக கேட்க, “எனக்கு தெரிஞ்சு இந்த சரவுண்டிங்ல அப்படி எல்லாம் எந்த இடமும் இல்ல.” என்றான் சார்லஸ்.

“அப்படி இருந்திருந்தா நம்மள அங்க போய் பத்திரமா இருக்க சொல்லாம, அவன் எதுக்கு தப்பிச்சு ஓட சொல்ல போறான்?” என்று அஜய் கேட்க, “எப்படியோ அவர் பத்திரமா இருக்காரு. அதுவே போதும். அவரை சீக்கிரம் இங்க வர சொல்லுங்க. முதல்ல இந்த இடத்தை விட்டு கிளம்பனும். நம்ம வீட்டுக்கு போனா தான் எனக்கு நிம்மதியாவே இருக்கும். இன்னும் ரெண்டு மூணு மாசத்துக்கு இந்த மாதிரி எல்லாம் எந்த டென்ஷனும் இல்லாம நிம்மதியா இருக்கலாம். பாஸ் வந்தவுடனே அவர்கிட்ட எல்லாரும் strictஆ இத சொல்லிடுங்க. முக்கியமா நீ தான் முதல்ல சொல்லணும் மோனி. உன் பேச்சைதான் அவர் தட்டாம கேப்பாரு.” என்றாள் சோனியா.

தனது கையில் ட்ரிப்ஸ் ஏறிக் கொண்டு இருப்பதை கவனித்த பிக் பாஸ் அதை பிடுங்கி கீழே போட்டுவிட்டு எழுந்து அமர்ந்தான். அவனது வயிற்றில் ஒரு கூர்மையான வலி ஏற்பட்டது. இருப்பினும் காலையில் இங்கே இருந்து அவன் கண்டிப்பாக சென்று விடுவான் என்று ஷாலினிக்கு வாக்கு கொடுத்திருந்ததால் உடனே கிளம்ப வேண்டிய கட்டாயம் அவனுக்கு இருந்தது. அதனால் தனது சட்டையை எடுத்து மாட்டிக்கொண்டு அந்த அறையை விட்டு வெளியே சென்றான் அவன். அங்கே ஷாலினி கையில் ஏதோ ஒரு புத்தகத்தை வைத்துக்கொண்டு அப்படியே அவளை அறியாமல் சோஃபாவில் சாய்ந்து உறங்கிக் கொண்டிருந்தாள்.

அவளை தொந்தரவு செய்யாமல் அவள் கையில் இருந்த புக்கை எடுத்த விக்ராந்த் அதன் முதல் பக்கத்தில் “thanks for everything ஷாலினி. உன்னையும் நீ எனக்கு செஞ்ச ஹெல்பையும் நான் எப்பவும் மறக்க மாட்டேன்‌.” என்று எழுதி கையெழுத்து போட்டான். “இப்பவே இவளுக்கு ஏதாவது ஸ்பெஷலா குடுத்தா நல்லா இருக்கும்னு தோணுது. ஆனா என்ன குடுக்கிறது?” என்று யோசித்தவனுக்கு அவன் கையில் இருந்த பிரேஸ்லெட் கண்ணுக்கு தெரிந்தது.

அது அவனது அம்மாவின் பிரேஸ்லெட். அவன் அம்மா இறப்பதற்கு முன் அதை அவன் கையில் அணிவித்து “நீதான் விக்ராந்த் உன் தம்பியையும் தங்கச்சியையும் பார்த்துக்கணும். இத உன் கூடவே வச்சுக்கோ. அம்மா உன்னை விட்டு எங்கயும் போகல. கடைசியா அம்மா கிட்ட இருக்கிறது இது மட்டும்தான். இது உன் கூட இருக்கிற வரைக்கும் அம்மாவும் உன் கூட தான் இருப்பேன்.” என்று சொல்லிவிட்டு இறந்தது அவனுக்கு ஞாபகம் வந்தது. அதனால் அவன் கையில் இருந்த தங்க பிரேஸ்லெட்டை தொட்டுப் பார்த்த விக்ராந்த் குழந்தை போல உறங்கிக் கொண்டிருந்த ஷாலினியை பார்த்தான்.

அவன் வாழ்க்கையில் அவனது தாயின் வெற்றிடத்தை நிரப்ப வந்தவள் ஷாலினி தான் என்று அவனது உள்ளுணர்வு அடித்து சொன்னது. அதனால் “அம்மா இப்ப உயிரோட இருந்தாலும், இத கண்டிப்பா அவங்க மூத்த மருமகளுக்கு தான் குடுக்க நினைச்சிருப்பாங்க. அப்ப இது உனக்கு தான் சேரனும். நீ கண்டிப்பா என்கிட்ட ஒரு நாள் வந்து சேருவ. எங்க அம்மாவோட ஆசிர்வாதமா அதுவரைக்கும் இந்த பிரேஸ்லெட் உன் கிட்டயே இருக்கட்டும். கண்டிப்பா உனக்காக நான் திரும்பி வருவேன் ஷாலினி.” என்று நினைத்த விக்ராந்த் மீண்டும் அந்த புத்தகத்தை எடுத்து அதில் “இது எனக்கு ரொம்ப ஸ்பெஷல் ஷாலினி. நீ என் உயிரை காப்பாத்திருக்க. சோ இத உனக்கு குடுக்கனும்ன்னு எனக்கு தோணுது. சோ எனக்காக எப்பயும் இதை பத்திரமா வச்சுக்கோ. என் அம்மா நியாபகமா என் கிட்ட இது மட்டும் தான் இருக்கு.” என்று எழுதிவிட்டு அதற்குள் அந்த பிரேஸ்லெட்டை வைத்து மூடினான்.

இன்றைக்கு பிறகு அவனால் ஷாலினியை எப்போது வந்து சந்திக்க முடியும் என்று அவனுக்கே தெரியவில்லை. அதனால் எப்போதும் அவள் முகத்தை பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் என்ற ஆசையில் அவனது மொபைல் ஃபோனில் அவளை விதவிதமாக ஃபோட்டோ எடுத்துக் கொண்டு “Bye Shalini take care. நான் உன் கிட்ட வர வரைக்கும் பத்திரமா இரு.” என்று மெல்லிய குரலில் சொல்லிவிட்டு அவளுக்கு flying kiss ஒன்றைக் கொடுத்துவிட்டு எப்படி உள்ளே சத்தம் இன்றி வந்தானோ அதேபோல சத்தம் எழுப்பாமல் திருடன் போல வெளியே சென்று விட்டான் விக்ராந்த்.

பின் தன்னை யாராவது கவனிக்கிறார்களா என்று பார்த்தபடி நடக்க தொடங்கினான். அப்போது ஒரு வீட்டின் முன்னே இருந்த கொடியில் hoodie ஒன்று காய்ந்து கொண்டு இருப்பதை கவனித்த விக்ராந்த் அதை எடுத்து அணிந்து கொண்டு தன் முகத்தை மூடியபடி அவனால் முடிந்தவரை நடந்து சென்றான். இப்போதுதான் அவனுக்கு ஆபரேஷன் நடந்து முடிந்திருக்கிறது என்பதால் அவன் மனதில் இருக்கும் வலிமை அவன் உடலில் இல்லாமல் போகவே, சோர்வாக உணர்தான். எனவே ஒரு ஆட்டோவை பிடித்து அவன் செல்ல வேண்டிய இடத்திற்கு சென்றான். அங்கே மறைந்திருந்து அவனுக்காக காத்திருந்த அவனது டீம் மெம்பர்கள் வந்திருப்பது விக்ராந்த் தான் என்று உறுதி செய்த பிறகு அங்கே வந்து அவனிடம் பேசினார்கள்.

அப்போது அவன் உடனே டிராவல் செய்து வந்ததால் அவனது வயிற்றில் இருந்து லேசாக தையல் பிரிந்து ரத்தக்கசிவு ஏற்படுவதை கவனித்த மோனிஷா பயந்து போய் “அண்ணா என்ன ஆச்சு உங்களுக்கு? அடிபட்டுடுச்சா? ரத்தம் வருது பாருங்க..!!” என்று கேட்க, “அதுவா.. ஒன்னுமில்ல பயப்படாத. நேத்து நைட்டு ஒருத்தன் என்ன கத்தியில குத்திட்டான். அப்புறம் ஹாஸ்பிடல் போய் ஆப்ரேஷன் எல்லாம் பண்ணியாச்சு. இப்ப நான் வேகமா நடந்து வந்ததுனால stitches பிரிந்திருக்கும்.” என்று சாதாரணமாக சொன்னான் அவன். “இவ்வளவு நடந்து இருக்கு என்ன நீங்க எல்லாத்தையும் சாதாரணமா சொல்லிட்டு இருக்கீங்க? இவ்ளோ நடந்து இருக்கு! நேத்தே நீங்க ஏன் எங்க கிட்ட இத பத்தி சொல்லல?” என்று கோபம் கலந்த வருத்தத்துடன் சோனியா கேட்க, “அதெல்லாம் அப்புறம் பேசிக்கலாம் சோனியா. முதல்ல அண்ணாவை கூட்டிக்கிட்டு இங்கிருந்து கிளம்பனும். இல்லனா கண்டிஷன் கிரிட்டிக்கல் ஆயிடும்.” என்ற மோனிஷா தனது ஆட்களுடன் அவனை அழைத்துக் கொண்டு அவர்களுக்கு சொந்தமான பெரிய பங்களா வீட்டிற்கு சென்று விட்டாள்.

காலை 8 மணி அளவில் தூங்கி எழுந்த ஷாலினி “நம்ம எதுக்கு சம்பந்தமே இல்லாம இப்ப சோபால படுத்து தூங்கிட்டு இருக்கோம்?” என்று யோசித்து ஒரு நொடி குழம்பிவிட்டு, பின் நேற்று நடந்த அனைத்தையும் நினைவு கூர்ந்தாள். அதனால் திடுக்கிட்டு எழுந்த ஷாலினி “அவன் இங்க இருந்து கிளம்பி போனானா இல்லையான்னு தெரியலையே!” என்று நினைத்து வேகமாக சென்று தனது அறையில் அவன் இருக்கிறானா என்று பார்த்தள். அங்கே அவன் இல்லாததால் “எப்பா.. நல்ல வேளை அவன் போயிட்டான். இப்பதான் எனக்கு நிம்மதியா இருக்கு. அவன் பார்க்க கொஞ்சம் ஒரு மாதிரி இருந்தாலும், என் கிட்ட சொன்ன மாதிரியே டிசென்டா இங்க இருந்து கிளம்பி போயிட்டான். எது எப்படியோ இனிமே அவனால எந்த பிரச்சனையும் வராம இருந்தா சரி.” என்று நினைத்து ஹாலிற்கு வந்தாள்.

அப்போது அங்கே இருந்த புக் அவள் கண்களில் பட, “இது மேல penஐ நான் வைக்கலையே!” என்று யோசித்தவாறு அதை தன் கையில் எடுத்தாள். அப்போது விக்ராந்த் அவளுக்காக விட்டுச் சென்ற அவனது அம்மாவின் தங்க பிரேஸ்லெட் கீழே விழுந்தது. அதை கவனித்து எடுத்த ஷாலினி “இது யாரோட பிரேஸ்லெட்?” என்று ஒரு நொடி யோசித்துப் பார்த்தாள். நேற்று விக்ராந்தின் கையில் இதை பார்த்தது அவளுக்கு ஞாபகம் வர, “இது அவனோட பிரேஸ்லெட் தானே.. இதை அவன் இங்க மறந்து வச்சிட்டு போயிட்டானா? இல்ல வேணும்னே விட்டுட்டு போயிட்டானா? ஒண்ணுமே புரியலையே!” என்று யோசித்தவாறு அவள் கையில் இருந்த புக்கை திறந்து அதில் இருந்தவற்றை படித்து பார்த்தாள்.

உடனே எமோஷனலான ஷாலினி “யார் இவன் சரியான லூசா இருப்பான் போல! அவன் அம்மாவோட ஞாபகமா அவன்கிட்ட இது மட்டும் தான் இருக்குன்னு எழுதி வச்சிட்டு போயிருக்கான். அப்புறம் இதை எதுக்கு என்கிட்ட கொடுக்கணும்? நான் ஒரு டாக்டர். இந்த மாதிரி எத்தனையோ patientsஸ நான் காப்பாத்தி இருக்கேன். அதே மாதிரி தான் இவனுக்கும் ஹெல்ப் பண்ணேன். இதுல என்ன இருக்கு? இவன் எதுக்கு இதை இவ்வளவு ஸ்பெஷலா நினைக்கிறான்? என்னைக்காவது நம்ம அவன பாத்தா, கண்டிப்பா இதை அவன் கிட்ட திருப்பி கொடுத்துடனும். அதுக்காகவாவது நம்ம இத பத்திரமா வச்சுக்கணும்.” என்று நினைத்து அதை எடுத்துக் கொண்டு போய் தனது கபோர்ட்டில் வைத்து பூட்டினாள். பின் அந்த புத்தகத்தையும் யார் கண்களிலும் படாமல் மறைத்து வைத்தாள்.

நிகழ்காலம்..
குண்டடி பட்டு மயங்கி இருந்த விக்ராந்தை காப்பாற்றி அவர்களது பங்களாவிற்கு அழைத்து வந்திருந்தார்கள். இதற்கு முன் ஷாலினியை அவன் சந்திக்கும்போது நடந்தவை எல்லாம் அவனுக்கு கனவு போல தெரிய, திடீரென மயக்கம் தெளிந்து கண் விழித்தான் விக்ராந்த்.

தொடரும்..

எங்களது பேஸ்புக் குரூப்பில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்..

 

Author: thenaruvitamilnovels
Article Title: Chapter-7
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.