Chapter-7

thenaruvitamilnovels

The World of Words
Staff member
Dec 25, 2024
164
0
16
www.amazon.com
அதனால் வாடிய முகத்துடன் தினேஷை பார்த்த சுவாதி “இவ்ளோ நேரம் யாழினியும் ஷங்கரும் ஒண்ணா டான்ஸ் ஆடிட்டு இருந்தாங்க! அவங்கள மட்டும் ஏன் யாருமே எதுவும் கேட்கல? அப்ப கல்யாணம் ஆகிட்டா மட்டும் என்ன வேணாலும் பண்ணலாமா? எனக்குன்னு மட்டும் இப்படி யாராவது வந்து ஏதாவது பண்ணிவிட்டுட்டு போயிடறாங்க. ச்சே! நம்ம சந்தோஷமா இருந்தாலே யாருக்கும் பிடிக்க மாட்டேங்குது. எங்களுக்கு கல்யாணம் ஆனதுக்கு அப்புறம் எல்லார் முன்னாடியும் நாங்களும் சங்கர் யாழினி மாதிரி ஹாப்பியா இருப்போம். அப்ப மட்டும் என்னை யாராவது கொஸ்டின் பண்ணட்டும்.. அன்னைக்கு இருக்கு இவங்களுக்கு!” என்று நினைத்து புலம்பியபடி சாப்பிட சென்று விட்டாள்.



நாளை தான் திருமணம் என்பதால், அந்த பெரிய திருமண மண்டபத்தில் ஏராளமான அறைகள் காலியாக இருந்தது. அதனால் சங்கரும் யாழினியும் தங்களுக்கு என்று ஒரு தனி அறையை எடுத்துக் கொண்டார்கள். அனைவரும் ஒன்றாக சாப்பிட்டு முடித்த பிறகு “சீக்கிரம் போய் தூங்கு. நல்லா தூங்குனா தான் நாளைக்கு மேரேஜ்ல freshஆ இருப்ப.” என்று சொல்லி வலுக்கட்டாயமாக அனைவரும் ஸ்வாதியை அழைத்துக் கொண்டு போய் அவளது ரூமில் விட்டு கதவை சாத்தினார்கள்.



உள்ளே வந்து படுத்த சுவாதிக்கு தூக்கம் வரவில்லை. அவள் ஆசையாக தினேஷ் உடன் பேசிக்கொண்டு இருக்கும்போது நடுவில் அந்த கிழவி வந்து கெடுத்து விட்டதால் அவளுக்கு இப்போதே அவனிடம் பேச வேண்டும் என்று இருந்தது. “நானும் எங்களுக்கு மேரேஜ் ஆகுறதுக்கு முன்னாடி என் மனசுல இருக்குற லவ்வை அவர் கிட்ட சொல்லி அவர் மனசுல என்ன இருக்குன்னு தெரிஞ்சுக்கலாம்னு பார்க்கிறேன். அவரும் அதை புரிஞ்சிக்க மாட்டேங்கிறாரு. மத்தவங்களும் அதை புரிஞ்சிக்க மாட்டேங்குறாங்க.” என்று நினைத்து சோகமாக இருந்தாள்.



அப்போது “ஒருவேளை நம்மள மாதிரி அவரும் நம்மகிட்ட பேசணும்னு நினைச்சிட்டு இருந்தாருன்னா நமக்கு எப்படி தெரியும்? நான் தூங்கி இருப்பேன்னு கூட அவர் நினைச்சி இருக்கலாம்.” என்று நினைத்து உடனே தனது மொபைல் ஃபோனை எடுத்து அவனுக்கு ஹாய் என்று மெசேஜ் அனுப்பினாள். அந்த மெசேஜ் சென்ற பின் double tick வர, “பரவாலையே.. அப்ப அவரும் ஆன்லைன்ல தான் இருக்காரு. நமக்கு ரிப்ளை பண்றாரான்னு பார்க்கலாம்.” என்று நினைத்து மொபைல் ஸ்கிரீனையே பார்த்தபடி படுத்திருந்தாள். நேரம் தான் சென்று கொண்டே இருந்ததே தவிர, அவனிடம் இருந்து ரிப்ளை வந்த பாடில்லை.



காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதடி என்ற பாடலில் வருவதைப் போல ஒரு கட்டத்திற்கு மேல் அவனது மெசேஜ்காக காத்திருந்து அது வராமல் போனதால் கடுப்பாகி “இன்னும் கொஞ்ச நேரத்துல அவர் என் ஹஸ்பண்ட். எனக்கு அவரைப் பாக்கணும்னு தோணுச்சுன்னா, அவர் கிட்ட பேசணும்னு தோணுச்சுன்னா, நான் போய் பேசக் கூடாதா? அதுல என்ன தப்பு இருக்கு? நான் இப்பவே போய் அவர் என்ன பண்றாருனு பார்க்கிறேன்.” என்று நினைத்த சுவாதி ஏதோ ஒரு தைரியத்தில் அங்கே இருந்து பூனை போல பதுங்கி பதுங்கி யாருக்கும் தெரியாமல் தினேஷின் அறையை நோக்கி சென்றாள்.



அங்கே சென்று அவள் கதவை லேசாக தட்ட, அவன் திறக்கவில்லை. வெளியில் இருந்து சுவாதி அவனுக்கு கால் செய்தாள். அதையும் அவன் எடுக்கவில்லை. அதனால் வந்த கோபத்தில் அவள் அந்த கதவை கொஞ்சம் வேகமாக தட்ட, அது திறந்து கொண்டது. “அட கருமமே! டோர் ஓப்பன்ல தான் இருக்கா? அது தெரியாம இவ்ளோ நேரமா போட்டு தட்டிட்டு இருந்திருக்கேன்.” என்று நினைத்து மானசிகமாக தன் தலையில் அடித்துக் கொண்ட சுவாதி தன்னை யாரும் பார்க்கவில்லை என்பதை உறுதி செய்து கொண்டு அவனது அறைக்குள் நுழைந்தாள்.



அவனது மொபைல் ஃபோன் சைலண்ட் மோடில் போடப்பட்டு சார்ஜரில் சொருகி வைக்கப்பட்டு இருந்தது. ‌ அதை பார்த்த சுவாதி “phoneஐ இங்க வச்சுட்டு எங்க போனான் அவன்?” என்று நினைத்து தன் கண்களை சுழல விட்டு அந்த அறை முழுவதும் தினேஷை தேடினாள். தன் முகத்தில் ஏதோ ஒரு face packஐ போட்டுக் கொண்டு பாத்ரூமில் இருந்து வெளியே வந்த தினேஷ் ஸ்வாதியை கவனிக்காமல் டிரெஸ்ஸிங் டேபிள் கண்ணாடியின் முன்னே சென்று நின்று அவன் சரியாக அந்த பேஸ்ட்டை தன் முகத்தில் அப்ளை செய்திருக்கிறானா என்று பார்த்துக் கொண்டிருந்தான்.



இதை பார்த்துவிட்டு உள்ளுக்குள் சிரித்துக் கொண்ட சுவாதி “இவர் என்ன பொண்ணுங்க மாதிரி face mask எல்லாம் வாங்கி போட்டுட்டு இருக்காரு? நான் கூட இதையெல்லாம் போட்டதில்லையே!” என்று நினைத்தவாறு அவனுக்கு சர்ப்ரைஸ் கொடுக்க நினைத்து மெல்ல நடந்து அவன் தன்னை கவனிப்பதற்குள் அவனை பின்னே இருந்து அணைத்துக் கொண்டு “நீங்க இதெல்லாம் கூட பண்ணுவீங்களா?” என்று கேட்டுவிட்டு சிரித்தாள். அந்த நேரத்தில் அவளை அங்கே எதிர்பார்த்து இருக்காத தினேஷ் தன் மீது இருந்த அவள் கைகளை எடுத்துவிட்டு “ஓய்.. இப்ப இங்க எதுக்கு வந்த நீ? யாராவது உன்ன பாத்தா எவ்ளோ பிரச்சனை ஆகும் தெரியுமா? உன்ன போய் தூங்கி ரெஸ்ட் எடுக்க தானே சொன்னேன்? யாரைக் கேட்டு இப்ப இங்க வந்த நீ?” என்று கோபமாக கேட்டான்.



“நான் உங்க கிட்ட நம்ம மேரேஜ் முன்னாடி ப்ரொபோஸ் பண்ணி நான் உங்கள லவ் பண்றேன்னு சொல்லலாம்னு எவ்ளோ ஆசையா வந்தேன் தெரியுமா? நீங்க என்னன்னா, நான் எதுக்காக வந்தேன்னு கேட்டு இப்படி கோவப்படுறீங்க? நீங்களா வந்து என்ன பாக்கவும் மாட்டேங்கறீங்க. என் கிட்ட ரெண்டு வார்த்தை மனசு விட்டு பேசவும் மாட்டேங்கறீங்க. இப்படி நானே வந்து உங்க கிட்ட பேசினாலும், கோச்சுக்கிறீங்க! உண்மைய சொல்லுங்க தினேஷ். நெஜமாவே உங்களுக்கு என்ன புடிச்சிருக்கா இல்லையா? நீங்க விருப்பப்பட்டு தானே என்னை கல்யாணம் பண்ணிக்கிறீங்க?” என்று
கண்கள் கலங்க கேட்டாள் சுவாதி.

தொடரும்..
அமேசானில் முழு புத்தகத்தையும் படிக்க:

இதழ் அமுதங்களால் நிறைந்தேன் | Idhal Amuthangalal Nirainthen by SNK Books [Tamil Edition] : Tamil adult Romantic novel https://amzn.in/d/9PbpXaN

எங்களது பேஸ்புக் குரூப்பில் இணைய:

 

Author: thenaruvitamilnovels
Article Title: Chapter-7
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.