தொடர்ச்சி.......


மாறன் காரை எடுத்துக்கொண்டு 🚗🚗 அதிவேகமாக கிளம்பினான் ... இதைக் கண்ட அசோக் மற்றும் அன்பரசு வருத்தம் கொண்டனர்.....

மாறனை சம்மதிக்க வைக்க வேண்டியது என்னுடைய பொறுப்பு நீங்க எதுக்கும் கவலை படாதீங்க அன்பு என்று அசோக் சமாதானப்படுத்தினார்....

தன்னறைக்கு வந்த வித்யாவோ மிகுந்த கோபத்துடன் புடவையை கழட்டி வீசி எறிந்தால்.....

இது வேற டாமிட் என்ற படி வேகமாக

குளிர் சாதனப் பெட்டியை திறந்து அதில் இருந்த மதுவை எடுத்து மூச்சு விடாமல் பருகினாள் ஆண்களின் தோரணையில்.....

வித்யாவுக்கு மாறனின் செயலை எண்ணி எண்ணி பொத்துக் கொண்டு வந்தது.

டேய் மாறா.என்ன உனக்கு ரொம்ப அழகா இருக்குறேங்கர திமிரா.
உனக்கு எவ்வளவு தைரியம் இருந்தா

என்னையே தள்ளி விட்டுட்டு போவ இதுக்கெல்லாம் உனக்கு இருக்கு மாறா ,

நல்லா அனுபவிக்க போறே... உன்ன விட மாட்டேன். நீ யாரு டா என்ன ரிஜெக்ட் பண்றதுக்கு நான் யாருன்னு உனக்கு காட்டுறேன் அப்போ தெரியும் இந்த வித்யா யாருன்னு என்று கண்கள் சிவக்க கூறி மீண்டும்...

மது பாட்டில்களை வாயில் வைத்து அருந்த துவங்கினாள் வித்யா....😡

கோபத்தோடு மாறன் வண்டியை அதிவேகத்தில் செல்ல

மாறனின் நினைவுகளை நங்கையே.. ஆக்கிரமித்திருந்தால்.....🤍💕 முழுமையாக....

கார் சிறிது தூரம் செல்லவும் மாறன் காரில் உள்ள எஃப் எம் ஐ ஆன் செய்தான் அப்பொழுது ஒலித்தது.... வைர முத்து அவர்களின்... வரிகள்...

சின்ன சின்னக் கிளியே🦜 பஞ்சவர்ணக் 🦜கிளியே
பால் சொட்டும் ⭐நட்சத்திரம் பார்த்தாயா ?
தேன் முட்டும் 🍯முல்லை மொட்டு🌷 பார்ப்பாயா ?
களவாடும் ,⚡மின்னல் ஒன்றைப் பார்த்தாயா?
கண்ணால் கண்டால் 👀 நீ சொல்
உன் காலில் விழுவேன்,🙇🏼‍♂️ நீ சொல்லு

நிலா நிலா காதல் நிலா 🌕
அவள் வாழ்வது உள்ளூரிலா 🏞️
உலா உலா வா வெண்ணிலா கண்வாழ்வது.. 👀கண்ணீரிலா🥺
பாதை கொண்ட மண்ணே
அவளின் பாதச்சுவடு 👣பார்த்தாயா? தோகை கொண்ட மயிலே 🦚 அவளின் துப்பட்டாவை பார்த்தாயா ஊஞ்சலாடும் மூகிலே அவளின் உச்சந்தலையை பார்த்தாயா,? ஓடுகின்ற நதியே 🌅அவளின் உள்ளங்கையை 🤌🏻பார்த்தாயா? கண்ணால் கண்டால் நீ சொல்லு.
உன் காலில் 🙇🏼‍♂️ விழுவேன் நீ சொல்லு




எங்கே எங்கே விண்மீன் ⭐
எங்கே பகல் ☀️வானிலே
நான் தேடினேன்
அங்கே இங்கே
காணோம் என்று
அடிவானிலே ☁️🌌நான் ஏறினேன்.

கூடு தேடும் கிளியே🦜
அவளின் வீடு🏘️ எங்கே பார்த்தாயா? உள்ளாடும் காற்றே அவளின்
❤️ உள்ளம் சென்று பார்த்தாயா?
தூறல் போடும் 💧துளியே
உயிரைத் தொட்டு போனவள் பார்த்தாயா ?
பஞ்சு போல நெஞ்சை 🤍
தீயில் 🔥 விட்டுப் போனவள் பார்த்தாயா?
கண்ணால் கண்டால் நீ சொல்லு
உன் காலில் விழுவேன் 🙇🏼‍♂️நீ சொல்....

தனக்காகவே எழுதப்பட்ட வரிகளாக தோன்றியது....மாறனுக்கு...

பெண்ணவலை பார்க்க மேலும் ஆவலானான்....மாறன்.

பாடலை தொடர்ந்து விளம்பரம் வரவே சலித்து கொண்டு...வானொலியை நிறுத்தி விட்டு.... காரை, இயக்க தொடங்கினான் மாறன்.....

எப்படியாவது நங்கையை சந்தித்து ஆகவேண்டும்.அவள் இல்லாது வாழ்வில்லை என்று தோன்றியது.நொடிக்கு நொடி மாறனின் தவிப்பு அதிகரித்தது.அவளை காணா ஒவ்வொரு நொடியும் நரகமென உணர்ந்தான்.எப்படியாவது அவளை இன்றி கண்டு பிடித்தாக வேண்டும் என்று எண்ணி அச்சோலைக்கு செல்ல முடிவெடுத்தான் மாறன்.

மெல்ல அந்தி மாலை கதிரவன் மறைய ஆரம்பிக்கும் நேரம் என்பதால்

ஆதவனின் செவ்வண்ண கைகள் பூமி தொட அங்கு சோலைகலில் இலைகள் பூக்கள் யாவும் தங்கமுலாம் பூசிக் கொண்டது.

வீசும் வாடைக் காற்றும் அதில் கலந்து வரும் பல மலர்களின் வாசனையும் இதமான அந்த மாலை பொழுதும்....
மாறனுக்கு இன்னும் அதிகமாக நங்கையின் நினைவை வரவழைத்தது.மாறன் முதல் முறை விரக தாபத்தில் அவதியுறுகிரான்.

மோகினி... எங்கே டி இருக்க....🥺
இன்னும் எத்தனை நாளைக்கு இந்த கண்ணா மூச்சு ஆட்டம் ஆட போற.
போதும் டி.என் கண்ணு முன்னாடி வந்துடு.

இப்படியே போச்சுன்னா இன்னும் சில நாளைக்குள்ள நான் கொஞ்சம் கொஞ்சமா செத்து போயிடுவேன் டி.

மனசு ஃபுல்லா நீ நீ தான் இருக்க.இப்படி எங்கையோ போய் மறைவன்னு தெரிஞ்சி இருந்தா உன்ன முதல் வாட்டி பார்த்த அன்னைக்கே என்னை விட்டு போக விட்டு இருக்க மாட்டேன்.

மாறனின் மனது முழுவதும் நங்கை அவள் பூ முகம் தோன்றி மறைய
காதல் நோயால்....அவனுக்கு இதயம் வலிக்க துவங்கியது...

இனியும் பொறுக்க முடியாது என்று நினைத்தவன்


நங்கையை சந்தித்த அதே இடத்திற்கு சென்றான்.

தன் கண்களை மூடி கொண்டு நின்று கொண்டான்... மூச்சை நன்கு இழுத்து
இந்த காற்றோடு உன் சுவாசகாற்றும்..
கலந்து இருக்கு. டி எனக்கு தெரியும் நீ இங்க எங்கையோ தான் இருக்க கண்டிப்பா உன்ன தேடி பிடிப்பேன்.

நீ எப்படி இந்த இரும்பு நெஞ்சுக்குள்ள வந்த ,யாரு டி நீ,என்னை போட்டு இப்படி வதைக்குற ஒரு வார்த்தை கூட பேசல ஆனா என்னோட அத்தனை வார்த்தையும் உன்னை பத்தி தான் டி கதை படிக்குது
என்றபடி... சற்றே கலங்கினான் மாறன்...🥺

கண்களை துடைத்தபடி

எதிர்ச்சியாக திரும்பி பார்த்தவன் கண்களை அகன்று விரித்தான்.

மோகினி என்றவாறு ஆனந்த அதிர்ச்சியில் அசையாது கண்கள் கலங்க நின்றான்.
ஆம் அது நம் நங்கையே தான்
அங்கே ஓங்கி உயர்ந்த மரம் ஒன்றின் அடியில் கண்களை மூடி மரத்தின் மீது சாய்ந்த படி அமர்ந்திருந்தால் மாறனின் நங்கை....



நங்கையை கண்டவுடன் மாறனுக்கோ எண்ணிலடங்கா மகிழ்ச்சி..
வெயிலும் மழையும் ஒருசேர எப்படி அழகு நிறையுமோ

அதே போல மாறன் புன்னகைக்கின்றான், அழுகிறான்....
இவ்வாறாக மாறனின் மனநிலை தடுமாற்றம் கொண்டது.



தாயை தொலைத்த.....பிள்ளை மீண்டும் தன் தாயிடம் சேர என்ன மன நிலை இருக்குமோ .... அதே போன்ற மன நிலையில் தவித்தான் மாறன்....🥺..

சந்தோசமும் தவிப்பும்... ஒரு சேர நிறைந்து இருந்தது....அவன் மனது முழுவதும்.

அவளை கண்டதும் பிரமித்தவன் பின் நிலைக்கு வந்து

அவளது அருகில் ஓடி விரைந்து சென்றவன் அவளை அள்ளித் தூக்க போக இரண்டு அடிகள் பின் வாங்கினான் மாறன்..

நல்ல வேலையாக சுதாரித்துக் கொண்டேன் என்று எண்ணி கொண்டு

தன் குரலை சற்று மிருதுவாக்கி

அவன் மோகினி என்று அழைக்க கண்களை அதிர்ந்து திறந்தால் சடார் என்று👀

கண்கள் விரிய ஆச்சரியத்தோடு மாறனை பார்த்த நங்கைக்கோ... இதயம் படபடத்தது.

இவங்க எங்க இங்க வந்தாங்க என்று மனதிற்குள் எண்ணி

அடுத்த நொடி அங்கிருந்து நங்கை எழுந்து செல்ல முயல கைகளை பற்றிக் கொண்டான் மாறன் மீண்டும்...🤝🏻

மோகினி நீ உண்மையா ,பொய்யா
என் கனவா, நினைவா இல்ல நீ என் கற்பனையா சொல்லு....?
என்று மிகவும் வலியுடன் கேட்டான் மாறன்.

அவன் கேட்ட விதத்திலேயே அவன் உள்ளத்தின் வலி நன்றாக புரிந்தது..💔 நங்கைக்கு.

நங்கை வழக்கம் போல் ஏதும் பேசவில்லை அமைதியை மட்டுமே கையாண்டாள்.

சொல்லு மோகினி யார் நீ உன் உண்மையான பேரு என்ன.

சொல்லு டி பிளீஸ் என்றிட அவன் கைகளை அவன் இடம் இருந்து பிரிக்க போராடி உதறி விட்டு சென்றால் நங்கை.....🥺🤌🏻...

மாறன் வருத்தத்துடன் நிற்க,

சற்று தூரம் சென்று திரும்பி பார்த்தாள் . அவள் பார்ப்பதை உணர்ந்து கொண்ட மாறன்...

நிமிர்ந்து அவளை பார்க்க, அவனைக் கண்டு ஒரு புன்னகை ஒன்றை பரிசளித்துச் செல்ல


ஹே உன் பெயர் என்ன.... என்று கேட்ட உடன் திரும்பி மாறனை பார்த்தாள் நங்கை பெயர் சொல்லாமல் மீண்டும் அங்கிருந்து செல்ல உன் பேரு என்னவா வேணாலும் இருந்துட்டு போகட்டும் ...

ஆனா நீ எனக்கு எப்பவும் மதி
மயக்கும் மோகினி தான்.... என்று கூறிவிட்டு ... அவள் காதில் விழாத படி....

இந்த மாறனின் 💕மோகினி....💕 என்று தலையை அழுந்த கோதினான் ....கள்வன்.....

தொடரும்...

அன்புடன்
Shahiabi.writter ✍🏻
 

Author: shahiabi தனிமையின் காதலி
Article Title: Chapter -6
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.