Chapter-6

thenaruvitamilnovels

The World of Words
Staff member
Dec 25, 2024
163
0
16
www.amazon.com
அத்தியாயம் 6: அவளுக்கென புதிதாய் மாறினேன்

பிக் பாஸ் காலையில் சென்று விடுவதாக ஷாலினிக்கு சத்தியம் செய்தான். அதனால் அவனுக்கு உதவ தயாரான ஷாலினி “சரி நீங்க இங்கயே இருங்க. நான் ஒர்க் பண்ற ஹாஸ்பிடல் பக்கத்துல தான் இருக்கு. அங்க போய் உங்க சர்ஜரிக்கு தேவையான திங்ஸ் எல்லாத்தையும் நான் எடுத்துட்டு வந்துடறேன். ப்ளீஸ் அது வரைக்கும் நீங்களும் வெளிய போக கூடாது. வெளியே இருக்கிறவங்க யாரும் இந்த வீட்டுக்குள்ளயும் வரக் கூடாது. நீங்க safeஆ இங்க இருந்து போகணும்னு நான் நினைக்கிறது எனக்கு எந்த அளவுக்கு முக்கியமோ, அதே அளவுக்கு எனக்கு என் safetyம் முக்கியம். நான் சொல்றது உங்களுக்கு புரியும்ன்னு நினைக்கிறேன்.” என்று அவனிடம் சொல்ல, மழையில் நனைந்ததால் ஈரமாக இருந்த அவளது ஆடைகள் அவளை இன்னும் கவர்ச்சியாக காட்டிக் கொண்டு இருக்க, அவளை மேலும் கீழும் பார்த்த பிக் பாஸ் “என் மேல நம்பிக்கை இல்லைன்னா நீ வெளிய போகும்போது வீட்டை பூட்டிட்டு போ. But late ஆனாலும் பரவால்ல‌.. இப்படியே வெளில போகாத. முதல்ல போய் dress change பண்ணு.” என்று அவளை பார்க்க முடியாமல் எங்கேயோ பார்த்தபடி சொன்னான்.


அவன் சொன்ன பிறகு தான் தனது ஆடைகள் இருந்த நிலையை கவனித்த ஷாலினி “அட கடவுளே.. ஷாலினி உனக்கு கொஞ்சம் கூட அறிவே இல்ல டி. நீ இப்ப இருக்கிற லட்சணத்தை பார்த்துட்டு அவனே வெளியே போகும்போது dress மாதிட்டு போன்னு சொல்றான். இப்படியே அவன் முன்னாடி இவ்வளவு நேரமா இருந்து இருக்கியே.. சே.. எல்லாம் என் நேரம். முதல்ல இவனுக்கு ட்ரீட்மென்ட் கொடுத்து இவனை இங்கிருந்து அனுப்பி விடணும். அப்ப தான் நம்மளால நிம்மதியா இருக்க முடியும்.” என்று நினைத்து வேகமாக தனது ரூமிற்கு ஓடியவள், அவசர அவசரமாக தனது ஆடைகளை மாற்றி கொண்டு அவனிடம் ஒரு வார்த்தை சொல்லிவிட்டு வெளியே கதவை பூட்டிவிட்டு அருகில் உள்ள அவள் வேலை பார்க்கும் மருத்துவமனைக்கு சென்றாள்.


அந்த பெரிய மருத்துவமனையில் pharmacy-ம் இருந்ததால் அவனுக்கு சர்ஜரி செய்ய தேவையான அனைத்து பொருட்களையும் வாங்கிக் கொண்டு தன் வீட்டிற்கு வந்த ஷாலினி முதலில் சோஃபாவில் அமர்ந்திருந்த பிக் பாஸை தான் கண்டாள். அவன் அப்படியே மயங்கி சரிந்து கிடக்க, “ஐயையோ bleeding அதிகமாகி இவன் unconscious ஆயிட்டானா?” என்று நினைத்து பதறி அடித்துக் கொண்டு அவன் முகத்தில் தட்டி “ஹலோ சார்.. நான் பேசுறது உங்களுக்கு கேக்குதா? கண்ணை திறந்து என்னை பாருங்க.” என்றாள். அதில் கண்களைத் திறந்த பிக் பாஸ் அரை மயக்கத்தில் “வந்துட்டியா ஷாலு?” என்று கேட்க, “ஆமா, உங்க சர்ஜரிக்கு தேவையானது எல்லாத்தையும் வாங்கிட்டு வந்துட்டேன். நீங்க என் கூட வாங்க சீக்கிரம் உங்களுக்கு சர்ஜரி பண்ணனும்.” என்று சொல்லி கைத்தாங்களாக அவனை அழைத்துக் கொண்டு போய் தன் அறையில் உள்ள கட்டிலில் படுக்க வைத்தாள்.


அவன் வெகு நேரமாக கடுமையான வலியை பொறுத்துக் கொண்டு இருக்கிறான் என்பதால் முதலில் அவனுக்கு மயக்க மருந்து கொடுக்க நினைத்து ஷாலினி அதை ஒரு சிரஞ்சில் எடுக்க, அதை கவனித்த பிக் பாஸ் “என்ன அனஸ்தீசியா போடப் போறியா?” என்று மெல்லிய குரலில் கேட்டான். “ஆமா மயக்க மருந்து கொடுக்காம எப்படி உங்களுக்கு சர்ஜரி பண்றது? எவ்வளவு நேரம் தான் கஷ்டப்பட்டு இந்த வலியை தாங்கிட்டு இருப்பீங்க?” என்று ஷாலினி கேட்க, அவளைப் பார்த்து லேசாக புன்னகைத்த பிக் பாஸ் “அதெல்லாம் எவ்வளவோ தங்கியாச்சு. இந்த வலி என்ன ஒன்னும் பண்ணிடாது. நீ மயக்கம் மருந்து கொடுத்தா, சர்ஜரி முடிஞ்சு மயக்கம் தெளிஞ்சு நான் நார்மல் ஆக ரொம்ப நேரம் ஆகும். அப்புறம் எப்படி நான் காலையில இங்கிருந்து போகிறது? நீ பெயிண் தெரியாம இருக்குறதுக்கு ஏதாவது இன்ஜெக்ஷன் இருந்தா போடு. இல்லைனா கூட பரவால்ல. எனக்கு வலி ரொம்ப பிடிக்கும். அது என்ன இன்னும் ஸ்ட்ராங்காக்கும். என்னால முடியாதது எதுவுமே இல்லைன்னு மறுபடியும் மறுபடியும் எனக்கு சொல்லிக்கிட்டே இருக்குற மாதிரி இருக்கும்.” என்றான்.


அவன் பேசிய பேச்சில் “நெஜமாவே இவன் நட்டு கழுண்ட கேஸ் தான். எனக்கு பெயிண் ரொம்ப பிடிக்கும்னு ஒருத்தன் சொல்லி நான் இப்ப தான் என் லைஃப்ல ஃபர்ஸ்ட் டைம் கேட்கிறேன்.” என்று நினைத்த ஷாலினி அவனுக்கு சர்ஜரி செய்யத் தொடங்கினாள். அப்போது அவன் கண்களில் இருந்து அவனையும் மீறி கண்ணீர் அருவி போல கொட்டிக் கொண்டே இருந்ததே தவிர, அவன் வாயை திறந்து வலியில் ஐயோ அம்மா என்று தெரியாமல் கூட சத்தம் போடவே இல்லை.‌


அதனால் ஒவ்வொரு நொடியும் அவனை ஆச்சரியமாக பார்த்த ஷாலினி சில நிமிடங்களுக்கு பிறகு சிரமப்பட்டு அவனது சர்ஜரியை ஒரு வழியாக செய்து முடித்தாள். பின் அவனது blood ஐ அவள் testக்கு கொடுத்து இருந்த labற்க்கு கால் செய்து “என்ன blood குரூப்னு check பண்ணீங்களா?” என்று கேட்டாள். அவர்களும் உடனே பிக் பாஸுன் ரிப்போர்ட்டை பார்த்துவிட்டு அவனது blood group என்னவென்று சொல்லிவிட்டு “ஆமா patient name என்ன டாக்டர்? அவசரத்துல நானும் உங்க கிட்ட கேக்காம விட்டுட்டேன். நீங்களும் சொல்லவே இல்ல!” என்று கேட்டாள் lab technician பெண். அப்போது தான் அவள் இன்னும் அவனது பெயர் என்னவென்று கூட கேட்கவில்லை என்று அவளுக்கு ஞாபகம் வர, “ஒரு நிமிஷம் இருங்க.” என்று சொல்லிவிட்டு அவன் அருகில் சென்று “உங்க பேர் என்ன?” என்று கேட்டாள்.‌


முதலில் அவள் பேசியது அவனுக்கு கேட்கவில்லை. அதனால் என்ன என்பதைப் போல அவன் அவளை பார்க்க, “உங்க பேர் என்னன்னு கேட்டேன்!” என்று ஷாலினி மீண்டும் சொன்னாள். அதனால் மெல்லிய குரலில் “விக்ராந்த்.” என்றான் அவன். உடனே அதை phoneல் சொல்லிவிட்டு அந்த அழைப்பை துண்டித்த ஷாலினி, “நல்லவேளை இவனுக்கும் எனக்கும் ஒரே blood group. இல்லைனா இவனுக்கு blood தேடி வேற இந்த நைட் டைம்ல நான் அலைஞ்சிருக்கணும்.” என்று நினைத்து நிம்மதி பெரு மூச்சை விட்டு ஏற்கனவே இரத்தம் ஏற்றுவதற்காக அவள் வாங்கி வந்த அனைத்து பொருட்களையும் பயன்படுத்தி அவளாகவே அவள் உடம்பில் இருந்த ரத்தத்தை அவன் உடம்பில் ஏற்றினாள். அங்கே தனித்தனியாக கட்டில் இல்லை என்பதால் அவள் வேறு வழியில்லாமல் அவன் அருகில் படுக்க வேண்டியதாகி விட்டது.


நடக்கும் அனைத்தையும் அரை மயக்க நிலையில் கவனித்துக் கொண்டு இருந்த விக்ராந்திற்கு “என்னமோ தெரியல ஷாலினி. உன்ன பார்க்கும்போது எங்க அம்மாவ பாக்கற மாதிரியே இருக்கு. எங்க அம்மாவுக்கு அப்புறம் என் தங்கச்சியை தவிர இப்ப வரைக்கும் உன்ன மாதிரி ஒரு பொண்ணை நான் பார்த்ததே இல்லை. நீ ரொம்ப ஸ்பெஷல்னு எனக்கு தோணுது. இப்போ உன் இரத்தத்தை கொடுத்து நீ என்னை காப்பாத்தி இருக்க. அதனாலையோ என்னமோ லவ் பண்ற லூசு பயலுங்க எல்லாம் ஈருடல் ஒரு உயிர் அந்த மாதிரி எல்லாம் சொல்லுவாங்களே.. நம்மளும் அப்படி ஒன்றாயிட்ட மாதிரி இருக்கு. நான் எப்பயும் இப்படி எல்லாம் யோசிச்சதே இல்ல. ஒரு பொண்ணு என்ன இப்படி எல்லாம் யோசிக்க வைப்பான்னு நான் நினைச்சு கூட பார்த்தது இல்ல. என் life-ல இதுக்கு மேல எத்தனை பொண்ணுங்க என்னை கடந்து போனாலும் சரி. நான் எப்பயும் உன்னை மறக்க மாட்டேன்‌ டி‌. கண்டிப்பா உனக்காக நான் திரும்பி வருவேன். உன்ன disturb பண்றதுக்காக இல்ல. உன்ன நீ என்ன இன்னைக்கு பாத்துக்கிட்ட மாதிரி என் ஆயில் முடியிற வரைக்கும் பத்திரமா பாத்துக்கறதுக்காக.. இன்னைக்கு நான் உனக்கு promise பண்றேன்.

இந்த உயிர் நீ கொடுத்தது. இது உனக்காக தான். நீ என்ன நெனச்சாலும் அதை பத்தி எனக்கு கவலை இல்லை. நீ எனக்கு மட்டும்தான் ஷாலினி. தெரிஞ்சோ தெரியாமலோ நான் இப்படி என் மனசுல strong-கா நினைச்சுட்டேன். இனிமே அதை யார் நினைச்சாலும் மாத்த முடியாது. நீயே நினைச்சாலும் முடியாது.” என்று நினைத்து தன் அருகில் படித்திருந்தவளை கண்களில் காதல் பொங்க பார்த்தான்.


அவளை பார்க்கும் வரை அவனுக்கு love at first sightன் மீது எல்லாம் நம்பிக்கை இல்லை என்று சொல்வதை விட, காதலின் மீதே ஒருபோதும் அவனுக்கு நம்பிக்கையோ ஆசையோ இருந்தது இல்லை என்று சொல்லலாம். இப்போது அவன் ஷாலினியை பார்த்து முழுதாக 24 மணி நேரம் கூட கடந்து இருக்காத நிலையில், அவன் வாழ்வின் மொத்த அடையாளமும் அவள் தான் என்று அவனுக்கு தோன்றியது. இதுவரை எங்கெங்கோ சென்று எதையெதையோ கொள்ளையடித்தவன், முதல் முறையாக ஒரு பெண்ணின் இதயத்தை கொள்ளையடிக்க வேண்டும் என்று ஆசைப்பட தொடங்கினான். ஆனால் விதி அவன் வசம் இருக்குமா? என்று போகப்போகத் தான் தெரியும்.


அவனுக்கு இரத்தம் ஏற்றிய பிறகு சோர்வாக உணர்ந்த ஷாலினி நீடிலை கழட்டி கீழே போட்டுவிட்டு “நல்லவேளை மகா அவ friend-க்கு கல்யாணம்ன்னு கிளம்பி ஊருக்கு போய்ட்டா. அவளும் இங்க இருந்திருந்தான்னா, எனக்கு அவளை சமாளிக்கிறதே பெரிய வேலையா இருந்திருக்கும். அப்புறம் எப்படி இவனை சமாளிக்கிறது?” என்று நினைத்தவள், “எனக்கு பசிக்குது நான் போய் சாப்பிடுறேன். நீங்க ரெஸ்ட் எடுங்க. உங்களுக்கு பெயிண் கில்லர் கொடுத்திருக்கேன். தூக்கம் வந்தா தூங்குங்க. நாளைக்கு மார்னிங் நானே உங்களை எழுப்பி விடுறேன்.” என்று சொல்லிவிட்டு கிச்சனுக்கு சென்றாள்.


மருந்துகளின் விளைவால் விக்ராந்த் அவனையும் மீறி தூங்கி விட, சாப்பிட்டு முடித்துவிட்டு வந்து அவன் அருகில் அமர்ந்த ஷாலினி “என்ன தான் இவன் பாக்குறதுக்கு பைத்தியக்காரன் மாதிரி இருந்தாலும், ரொம்ப தைரியசாலி தான்.‌ இவன பாக்குற ஒவ்வொரு செகண்டும் இந்த மாதிரி கூட மனுஷங்க எல்லாம் இருப்பாங்களான்னு எனக்கு ஆச்சரியமா இருக்கு.” என்று நினைத்து தூங்காமல் விடிய விடிய அவன் அருகிலேயே அமர்ந்து இருந்தாள். பின் ரத்தம் கொடுத்த களைப்பில் தன்னை அறியாமல் அவள் தூங்கி விட, தூங்கிக் கொண்டிருந்த விக்ராந்தின் phone-ற்க்கு காலை 6:00 மணி அளவில் “பாஸ் நீங்க சொன்ன இடத்துக்கு நாங்க எல்லாரும் இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துருவோம். நீங்க என்ன பண்றிங்க? Safeஆ இருக்கீங்களா? நேத்து நைட்டுல இருந்து நாங்க உங்கள reach பண்ண try பண்றோம்.. But எங்களால இருந்த அவசரத்துல உங்க லொகேஷன trace பண்ண முடியல.” என்று அவர்களுக்கான தனி குரூப்பில் மெசேஜ் அனுப்பி இருநதார்கள்.

- மீண்டும் வருவான்..

எங்களது பேஸ்புக் குரூப்பில் இணைய இந்த லிங்கை கிளிக் செய்யவும்:

 

Author: thenaruvitamilnovels
Article Title: Chapter-6
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.