Chapter 50

Bhavani Varun

Member
Jan 23, 2025
118
0
16
“என்னடா சொல்ற???? நிஜமாவா??? அந்த கிராமத்துக்கு வந்து இருக்குற வாலன்டியர் டீச்சர் தான் அந்த பொண்ணா???” என்று காளி கேட்க,

“ஆமா அண்ணா இன்னிக்கு அந்த பொண்ண பார்த்தேன்… அந்த பொண்ணு தான் அன்னிக்கு கார் ஓட்டிட்டு போனது…. எனக்கு அது உறுதியா தெரியும் அதனால அந்த பொண்ண பார்த்ததும் கண்டு பிடிச்சிட்டேன்….. அந்த பொண்ணு அந்த வண்ணம் கிராமம் பசங்களோட போனா…. சரி என்னன்னு அவ ஏதோ வாங்க போன கடையில விசாரிச்சா அவங்க தான் சொன்னாங்க அந்த பொண்ணு புதுசா வந்திருக்குற டீச்சர்னு” என்று காளியிடம் வேலை செய்யும் அடியாள் ஒருவன் கூறினான்.

“அப்ப முதல்ல அந்த பொண்ணு மேல ஒரு கண்ண வை… அந்த கிராமத்தில என்ன வேலை வந்தாலும் நம்மாளு ஒருத்தனை போக சொல்லு… அந்த பொண்ணு என்ன பண்றா ஏது பண்றான்னு எல்லாம் கவனிச்சிட்டே இருங்க…. அவ மட்டும் வாய தொறந்தான்னா நம்ம காலி தெரியுமில்ல” என்று காளி கூறவும்,

“ஆமா அண்ணா… ஆனா, அவள பத்தி பெருசா விவரம் எதுவும் ஹாஸ்பிடல் இருந்து எடுக்க முடியல… என்னென்னு விசாரிக்க பார்க்கிறேன்” என்று அடியாள் கூறினான்.

“இன்னும் விசாரணை பண்ணிட்டே தான் இருக்க மூணு மாசம் ஆயிருச்சு” என்று காளி கூறவும், “இல்ல நான் இந்த வாட்டி கொஞ்சம் ஸ்ட்ராங்காவே விசாரிக்கிறேன் அண்ணா” என்று அடியாள் கூறவும், “கொஞ்சம் சீக்கிரமா பண்ணு அபர்ணா விஷயத்துல அசால்ட்டா இருந்த மாதிரி இவ விஷயத்துல இருக்க கூடாது” என்று காளி கறாராக கூறினார்.

“அவங்க கிராமத்துல விநாயகர் பூஜை பண்ணுவாங்கல வருஷா வருஷமும்…. ஒரு நாலஞ்சு நாள் பண்ணுவாங்க அப்ப நான் நம்ம ஆளுங்கள உள்ளே இறக்கிடுறேன்” என்று உறுதியாக அடியாள் கூறவும், “அதை செய் முதல்ல…. இல்லனா நானே ஒரு நாள் போய் அவள நேர்ல பார்க்கிறேன்… மிரட்டி வேணா வெப்போம் வாயை திறக்க கூடாதுன்னு இல்லேன்னா அவளுக்கும் அபர்ணா மாதிரி செஞ்சிட வேண்டியது தான்” என்று காளி கூறவும், சரி என்றான் அடியாள்.



“என்னது அந்த ரெண்டு பேரும் இன்னும் ஊட்டில தான் சுத்திட்டு இருக்காங்களா???? ஏற்கனவே எனக்கு காண்ட்ராக் இருந்த ஸ்கூல் எல்லாம் பிடிச்சது போதாதா…. இன்னும் பறிக்க வந்துட்டாங்களா???…. எவ்வளவு தான் நான் அவங்கள மிரட்டுறது…. அப்படி மிரட்டி தான் அவங்க டீம்ல இருக்குற பாதி பேர வேலைய விட்டு போக வெச்சேன்… இப்ப இன்னும் என்ன தான் வேணுமாம் அவங்களுக்கு” என்று வேலுமணி கோபத்தில் கொந்தளித்தார்.

“சரி, ரொம்ப உறுதியா தெரியுமா அந்த பொண்ணும் அந்த பையனும் தானா அது” என்று வேலுமணி மேலும் உறுதி செய்து கொள்ள, “ஆமா அண்ணா… இங்க அந்த வண்ணம் கிராமம் இருக்குல அவங்க கூட போயிட்டு இருந்தாங்க ரெண்டு பேரும்” என்று கூறினான் வேலையாள்.

“அவங்களுக்கும் அந்த கிராமத்துக்கும் என்ன சம்மந்தம்??” என்று வேலுமணி கேட்க, “அது என்னன்னு தெரியல அண்ணா…. நம்ம காண்ட்ராக்ட் எடுத்த ஒரு ஸ்கூலோட பொண்ணையும் சேர்த்து கூட்டிட்டு போனாங்க…. அந்த பொண்ணு அந்த கிராமத்துல இருந்து வர பொண்ணு அதனால கூட்டிட்டு போவாங்க அப்பப்போ பார்த்து இருக்கேன்…. ஆனா, இவங்க ரெண்டு பேரும் ஏன் கூட போனாங்கன்னு தெரியல” என்று வேலையாள் கூறினான்.

“இந்த பொண்ணு பேரு என்ன??? ஆனந்த?? என்ன?? என்று வேலுமணி கேட்க, “சனந்தா…. அந்த பையன் பேரு கௌதம் அண்ணா” என்றான் வேலையாள்.

“சரி என்ன ஏதுன்னு கொஞ்சம் சீக்கிரம் விசாரிச்சு சொல்லு…. இப்ப தான் ஒரு மூணு மாசமா எந்த தொல்லையும் இல்லாம இந்த ஸ்கூல் காண்ட்ராக்ட் வேலை போய்கிட்டு இருக்கு திருப்பி அவங்க வந்து குளறுபடி பண்ணி, வீடியோ எடுத்து போட்டு, கவர்மெண்ட் வரைக்கும் எடுத்துட்டு போய் அசிங்கப்படுவாங்க நம்மள… அது நடக்கவே கூடாது” என்று வேலுமணி கறாராக கூறினார்.

“சரிங்க அண்ணா, நான் என்னன்னு விசாரிச்சுட்டு வந்து உங்க கிட்ட சொல்றேன்” என்று வேலையாள் உறுதி அளித்து சென்றான்.



மறுநாள் சனந்தா பள்ளிக்கு சென்று குழந்தைகளுக்கு பாடம் எடுக்கவும், ரம்யா, கௌதம் மற்றும் கார்த்திக் மூவரும் அவளுடன் சேர்ந்து பிள்ளைகளுக்கு பாடம் எடுக்க உதவினர்.

என்ன தான் விக்ரம் கௌதமிடம் இயல்பாக நடந்து கொள்ள முயற்சி செய்தாலும் அவனுடைய பொறாமை அவன் முகத்தில் காட்டி விடுகிறது தான். அதை உணர்ந்த கௌதம், “இவர் கிட்ட நம்மளாவது பேசணும் இல்லனா அவர் கோபத்துலயே எரிச்சிடுவாரு போல என்னை” என்று கௌதம் மனதிற்க்குள் நினைத்துக் கொண்டான் விக்ரமை பற்றி.

சரவணன், விக்ரம், அபிலாஷ், கௌதம் மற்றும் சனந்தா கீழே ஆஃபீஸில் பேசிக் கொண்டிருந்தனர். “ஏய் எப்படி டி இந்த எக்யூப்மென்ட் எல்லாம் இங்க வர வெச்ச நீ” என்று கௌதம் கேட்க, “நான் ஊருக்கு போனப்போ சீனியர் கிட்ட கேட்டு இருந்தேன் டா அவர் தான் அனுப்பி வெச்சாரு… அத தான் நேத்து உன்னை பிக்கப் பண்றதுக்கு முன்னாடி நான் கலெக்ட் பண்ணிக்கிட்டேன்” என்று சனந்தா கூறினாள்.

“யாரு மகேஷ் தானே??” என்று கௌதம் குறும்பாக புன்னகைக்க, சனந்தா கௌதமின் தலையில் தட்டி, “சும்மா இரு” என்று சனந்தா கூறினாள்.

“கௌதம்!!! என்ன சொல்லுங்க…. இவளை பத்தி நிறைய சீக்ரெட் உங்க கிட்ட தெரிஞ்சுக்கலாம் போலயே” என்று அபிலாஷ் கேட்க, “ஆமா டாக்டர் ஆமா… இவளுக்கு எங்க சீனியர் அண்ணா மேல ஒரு தனி பாசம்… ஏன் ஒரு க்ரஷ்னு கூட சொல்லலாம்” என்று கௌதம் கூறவும், “ப்ச்… ஐயோ! அப்படி எல்லாம் இல்ல அவர் மேல எனக்கு ஒரு தனி மரியாதை எப்பவுமே உண்டு க்ரஷ் எல்லாம் கிடையாது” என்று சனந்தா கூறினாள்.

“க்ரஷ் இருக்குறதுல தப்பில்லையே” என்று அபிலாஷ் கூற, “க்ரஷ் இருக்குறதுல தப்பு இல்ல… அது க்ரஷா இருந்தா சொல்லப் போறேன்… அவன் என்னை கலாய்க்குறதுக்காக சொல்றான் டாக்டர்… நீங்களும் சேர்ந்து ஏன் இப்படி பண்றீங்க” என்று சனந்தா கூறினாள்.

“அப்போ அவரை அண்ணான்னு கூப்பிடலாம் தானே…. அப்படி கூப்பிடவே மாட்டா…. அது ஏன்னு எனக்கும் தெரியாது, அவ கிட்ட கேட்டாலும் அவளுக்கும் தெரியாதுன்னு தான் சொல்லுவா” என்று கௌதம் சனந்தாவை கோர்த்து விட, “ஐயோ கௌதம்!!!! ஏன்டா இப்படி பண்ற” என்று சனந்தா கூறினாள்.

“பார்த்திங்களா!!! அவர பத்தி பேசின உடனே எவ்வளவு வெட்கம் வருது இவளுக்கு” என்று கௌதம் கூறினான்.

“அப்படி எல்லாம் ஒன்னும் இல்ல இவன் சொல்றான்னு நீங்களும் நம்பாதீங்க…. அவர் தான் இப்போ நாங்க இருக்குற டீமோட ஹெட்…. நான் காலேஜ் படிக்கிற டைம்ல இருந்து, அவர் இந்த மாதிரி நிறைய விஷயம் பண்ணி இருக்காரு அத பத்தி எல்லாம் தெரிஞ்சதும் எனக்கு அவர் மேல உண்மைலேயே ஒரு பெரிய மரியாதை வந்துது…. அப்படி தான் நான் அவங்க பண்ணுற விஷயங்கள ஃபாலோ பண்ண ஆரம்பிச்சு, நானும் அந்த டீம்குள்ள எப்படி சேரனும் என்ன ஏதுன்னு எல்லாம் தெரிஞ்சுக்கிட்டேன்” என்று சனந்தா கூறினாள்.

“பார்த்தீங்களா அவருக்காக தான் அந்த டீம்லயே அவ சேர்ந்தா…. அவ சேர்ந்தது இல்லாம என்னையும் வேற கூட சேர்த்து விட்டா” என்று கௌதம் கூறவும், “இதுக்கு மேல பேசினா நீ அடி வாங்குவ அவ்வளவு தான் உனக்கு” என்று சனந்தா கூறவும்,

“சரி சரி கோபப்படாத…. சும்மா அவளை கலாய்க்க தான் சொன்னேன் டாக்டர்… எப்பவுமே அவர் கூட இவள சேர்த்து வெச்சு கலாய்ப்போம்…. அத தான் இங்க பண்ணேன் வேற எதுவும் இல்லை…. அதுவும் இல்லாம இப்ப அவருக்கு கல்யாணம் கூட ஃபிக்ஸ் ஆயிருச்சு” என்று கௌதம் சரண்டர் ஆனான்.

இவை அனைத்தும் விக்ரம் கேட்டுக் கொண்டே, சனந்தா மற்றும் விக்ரம் ஒரு நாள் மகேஷை பற்றி பேசியது நினைவுக்கு வந்தது. “அன்னிக்கும் இப்படித் தான் பேசினா… இன்னிக்கும் கௌதம் வேற அந்த சீனியர பத்தி பேசுறாரு…. ஒரு வேள….” என்று விக்ரம் மனதில் யோசித்துக் கொண்டிருக்க,

“டேய் ஒன்னும் இல்ல சரியா…. நீ இதுக்கே யோசிக்காத அவங்க ரெண்டு பேரும் காலேஜ்மெட்ஸ் டீம்மெட்ஸ் அதனால அவங்க அப்படித் தான் கிண்டல் பண்ணி இருப்பாங்க… நீ கற்பனை குதிரையை ஓட்டாத” என்று சரவணன் கூறவும், விக்ரம் அமைதியாகி விட்டான்.

“நீ இங்க இருந்தா ஏதாவது ஒன்னு பேசி என் மானத்தை வாங்கிட்டு இருப்ப, வா நம்ம போலாம்…. இந்த ரீசர்ச் கிட் எல்லாம் எடுத்துக்கோ வீட்டுல போய் வெச்சுட்டு நீயும் நானும் ஆத்து கிட்ட போலாம் வா” என்று சனந்தா கௌதமை அழைத்துக் கொண்டு சென்றாள்.

“இவ்வளவு நேரம் நடந்த உரையாடலில் கௌதம் விக்ரமை தான் பார்த்துக் கொண்டிருந்தான். சனந்தா மற்றும் கௌதம் வீட்டிற்கு சென்று அவர்களின் உடைமைகளை வைத்து விட்டு ஆத்துக்கு சென்றனர். கௌதம் மற்றும் சனந்தா சிறிது நேரம் புகைப்படங்களை எடுத்து விட்டு இருவரும் அமர்ந்து கொண்டனர்.

“சரி ஓகே இனிமே கொஞ்சம் சீரியஸா பேசலாம் வா… உன்கிட்ட நிறைய பேசணும்” என்று கௌதம் கூறினான். “என்ன பேசணும் உனக்கு சொல்லு??” என்று சனந்தா கேட்க, கௌதம் சனந்தாவுக்கு தெரியாமல் சரவணனுக்கு ஃபோன் செய்து அதையை சனந்தாவுக்கு தெரியாமல் மறைத்துக் கொண்டான்.

“என்ன??? கௌதம் ஃபோன் பண்றாரு” என்று சரவணன் எடுக்க, “இல்ல விகாஷ் சொன்னான் என்ன நடந்ததுன்னு… அவனுக்கும் முழுசா தெரியல இருந்தாலும் அவனுக்கு தெரிஞ்சத என்கிட்ட சொன்னான்…. நீ சொல்லு என்ன ஆச்சு சனா??” என்று கௌதம் அக்கறையுடன் கேட்டான்.

“மச்சான் மச்சான் இங்க பாரு கௌதம் ஃபோன் பண்ணி இருக்காரு…. ஆனா, சனா கூட பேசிட்டு இருக்காரு…. ரெண்டு பேரும் பேசுறாங்க….. அதுக்கு ஏன்னு தெரியல ஃபோன் பண்ணிருக்காரு…. அப்போ இத நம்ம கேட்கணும்னு பண்ணி இருக்காரு போல டா விக்கி… உன் நம்பர் இல்ல அவர் கிட்ட அதனால எனக்கு பண்ணாருடா… அப்படித் தான்னு நினைக்கிறேன்…. ஏன்னா உங்க ரெண்டு பேர பத்தி அவருக்கும் தெரியும்” என்று சரவணன் கூற, “சரி நீ ஸ்பீக்கரில போடு” என்ற விக்ரம் கூறவும், அதன் படி செய்தான் சரவணன்.

“என்ன சொல்றது கௌதம்??” என்று சனந்தா விரக்தியுடன் கேட்க, “நிறைய இருக்கு ஒன்னு ஒன்னா சொல்லு” என்று கௌதம் கேட்கவும்,

“இங்க நிறைய குழப்பத்தோட தான் டா வந்தேன்…. உன் கிட்ட கேட்ட கேள்விக்கு எனக்கு இப்ப வரைக்கும் பதில் வரல… ஏன்னு கேட்டா அப்பாவே உன்கிட்ட எதுவும் சொல்றது இல்லன்னு சொல்லி சமாளிக்குற…. அதனால, நானும் சரி என்ன நடக்குதோ நடக்கட்டும்னு அமைதியாயிட்டேன்”.

“இந்த குழப்பத்துக்கு நடுவுல எனக்கு ஆறுதலா இருந்தா சில விஷயங்கனு பார்த்தா, ஸ்கூல், ஆன்ட்டி அங்கிள் அப்புறம் இங்க பாட்டி இருக்காங்க அவங்க…. அது போக இங்க செய்ற ப்ராடக்ட்ஸுக்கு எல்லாம் நான் ஹெல்ப் பண்ணிட்டு இருக்கேன் இது மட்டும் தான்…. இதுல தான் நான் நிறைய டைம் ஸ்பென்ட் பண்ணிட்டு இருப்பேன்” என்று சனந்தா கூறினாள்.

“இதெல்லாம் யாரு கேட்டா உன்ன??? நான் கேட்டதுக்கு எனக்கு நேரடியா பதில் சொல்லு” என்று கௌதம் கேட்டான்.

கருத்துக்கள் எதுவாயினும் வரவேற்கப்படும்
நன்றிகள் பல
 

Author: Bhavani Varun
Article Title: Chapter 50
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.