பாகம் -50


ஜோசியரை பார்க்க சென்றிருந்த சரண்யா...

அம்மாடி நங்க நாளைக்கு நாள் நல்லா இருக்காம்.


நாளைக்கே சாந்தி முகூர்த்தத்த வட்சிக்களாம்ன்னு சொல்லி நேரம் குறிச்சி கொடுத்து இருக்காரு.

தயாரா இரு நங்க என்று கன்னத்தை கிள்ளி முத்தம் ஒன்றை வைத்து சென்றார் சரண்யா.

சரண்யா அம்மா ஏன் இப்படி பண்றாங்க.

நான் எப்படி மாறன் சார் கூட

என்னால எப்படி 🥺

அடுத்த நாள்

என்ன நங்க என்னாட்சீ

என்னவோ போலே இருக்க.

ஆமாம்.

ச்ச இல்ல.

😄 என்ன நங்க என்று சிரிக்க

நங்கையும் சிரித்தாள்.

ஒரு காஃபி கிடைக்குமா?

இதோ ஒரு நிமிசம்.

இந்தாங்க மாறன் சார்.

காஃபியை வாங்கி அறுந்தியவன் முகம் சுழித்தான்.

என்னங்க என்னாச்சு.

ஹே அத நான் கேக்கணும்.

என்ன சொல்றிங்க?

இந்தா இந்த காஃபி ய குடிச்சி பாரு என்றவன் கைகளில் இருந்து வாங்கி பருகினால்

ஐயோ உப்பு...என்று அவளும் முகம் சுழித்தால்.

சாரி சார் ஏதோ நியாபகத்துல

உனக்கு என்ன ஆட்சி நங்க

ஒன்னும் இல்லே மாறன் சார்.


எதுவா இருந்தாலும் சொல்லு நங்க

அப்படி எல்லாம் ஒன்னும் இல்லே சார்.

நான் நல்லாதான் இருக்கேன்.

ம்ம்....

சரி அப்போ நான் ஆஃபீஸ் கிளம்பறேன்.

ம்ம் என்று தலையை ஆட்டினாள் நங்கை.

தம்பி நீங்க இன்னைக்கு கொஞ்சம் சீக்கிரமா வீட்டுக்கு வந்துருங்க.

ஏன் மா.

ஷ்யாம் தம்பி சொல்லளையா?

இல்லையே?

அவரு வந்து என்ன விசயமன்னு சொல்லுவாரு மாறன் தம்பி

சரி அப்போ நான் கிளம்புறேன்.

ம்ம் போய்ட்டு வாங்க தம்பி.

மாறன் வாசலை விட்டு இறங்க

சத்யாவும் அங்கே வந்தாள்.

ஹாய் மாறன் மாம்ஸ்....

ஹாய் குட்டி சாத்தான்.😈

என்ன ஒரே குஷி யோ....

ஏன் என்ன ஆட்சி.

சும்மா தெரியாத மாதிரி நடிக்காதிங்க மாமா.

ஷ்யாம் உங்க கிட்ட சொல்லல.

இல்லையே.

ஹே என்ன ஆளுக்கு ஆளு ஷ்யாம் மாமா சொல்வாருண்ணு சொல்றிங்க

ஆனா அவர் எதும் சொல்லலையே?

சஸ்பென்ஸ் வைக்காம

மொத விசயத்த சொல்லுங்க பிளீஸ்

அப்படியா ?

சரி நானே சொல்றேன்.

இன்னைக்கு உங்களுக்கும் நங்கை அக்காக்கும் ஃபர்ஸ்ட் நைட்ங்கோ.

என்ன?

ஆமாம் மாமா .

ஜோசியர் இன்னைக்கு நாள் நல்லா இருக்குன்னு இன்னைக்கு நைட்டு சாந்தி முகூர்த்ததுக்கு டைம் குறிச்சி கொடுத்து இருக்காரு.

ஓஹோ...


இது நங்கைக்கு தெரியுமா.

ம்ம் நேத்தே தெரியும்.

ஓ அதனாலே தான் மேடம் பிரம்ம பிடிட்சது போலே சுத்திட்டு இருக்காள.

என்று நினைத்துக்கொண்டவன்.

ஹே மாமா என்னாட்சி அதுக்குள்ள கனவா.

என்ற சத்யாவை பார்த்து புன்னகைத்தான் மாறன்.

சரி சத்யா.

ஆஃபீஸ் க்கு டைம் ஆட்சி.

நீ நங்கையைப் போய் பாரு என்றவன் காரை எடுத்து சென்றான்.

நங்க அக்கா.....

வா சத்யா.....

என்ன அக்கா எல்லாம் ஓகே தானே.

என்றிட சத்யாவை கட்டிக் கொண்டு அழுதாள் நங்கை.

ஹே அக்கா என்ன ஆட்சி ஏன் அழுகரிங்க.

எதும் பிரட்சனையா?

இல்லே சத்யா.

அப்பறம் என்ன.

மௌனம் ....

அட சொல்லுக்கா

பயமா இருக்கு.
😄

அக்கா என்ன சொல்ற....

இதுக்கெல்லாம் யாராச்சும் பய படுவாங்களா?

சொல்லப் போனால் நீங்க என்ன விட பெரியவங்க.

நீங்களே இப்படி பயப்படலாமா.

இதெல்லாம் ஒரு பொண்ணு வாழ்க்கைல நார்மல் தானே அக்கா.

ம்ம் என்று தலை அசைத்தாள்.

பின்ன என்ன?

இப்போ இருக்க சூல் நிலையில இதெல்லாம் ...

ஏன் நீங்க மாறன் மாமாவை உண்மையா நேசிக்களையா.

அப்போ அவர் மேல நீங்க காட்ற அன்பு வெறும் அனுதாபம் மட்டும் தானா .

கோபத்தில் நங்கை சத்தமாக

சத்யா ....

என்ன பேசுற...

பின்ன என்ன அக்கா.

மாறன் மாமாவ நீங்க உண்மையா நேசிகரதா இருந்தா இதுக்காக ஏன் பயப்படனும் தயங்கனும்.

அது அது அது வந்து சத்யா.

சொல்லுங்க அக்கா.

மெளனம்....

என்ன பதில் சொல்ல மாட்ரிங்க

மாமாவை லவ் பண்றீங்களா?

இல்லையா?

பாவம் கா மாமா ஏற்கனவே வாழ்க்கைல ரொம்ப கஷ்டப்பட்டு இருக்காரு.

நீங்களும் இப்போ கஸ்டபடுத்திராதிங்க.

கண்ணீரோடு

ம்ம்....என்று தலை அசைத்தாள் நங்கை.

சத்யா வா மா....

எப்போ வந்த...

இப்போ தான் வந்தேன் ஆன்டி.

சத்யா எனக்கு ஒரு உதவி செய்றியா?

சொல்லுங்க ஆன்டி

ஆர்டர் கொடுத்த பூவெல்லாம் இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துடும்.

மாறன் தம்பி ரூம மட்டும் கொஞ்சம் நேரத்தோட அழகரிட்சிரியா சத்யா.

சரிங்க சரண்யா ஆன்டி
நான் பாத்துக்கிறேன்.

ஷ்யாம் எங்க சரண்யா ஆன்டி அவர் காலையிலேயே கிளம்பி போனாரு மா.

ஆனா எங்கன்னு தான் தெரியல.

ஓஹோ ஓகே ஆன்டி என்றவள் ஆழ்ந்து சிந்தித்தால்.

எங்க போயிட்டாரு ஃபோனும் பிக் அப் பண்ணல.

மெஸேஜ்க்கும் ஆன்சர் இல்லே.

வரட்டும் பேசுகிறேன்.

மெல்ல மெல்ல நேரம் கடக்க

நங்கைக்கோ இங்கு வயிற்றில் புளியை கரைத்தது.

நேரம் மதியம் மூன்று மணியை தாண்ட

ஷ்யாம் வந்தான்.

ஹாலில் அமர்ந்து இருந்தவளை கண்ட ஷ்யாம்.

ஹாய் சத்யா.

முகத்தை திருப்பிக் கொள்ள

ஓய் என்ன டி.

ஏன் உனக்கு தெரியாதா?

ஹே ட்ரைவ் பண்ணிட்டு இருந்தேன் சோ உன் கால அட்டென்ட் பண்ண முடியல.

சரி எப்படி இருந்தாலும் நீ இங்க தான் வந்து இருப்பேன்னு தெரியும்.

சோ நேரா இங்கேயே வந்து பார்த்துக்கலாம்ன்னு

வந்துட்டேன்.

ஒன்னும் விளக்கம் சொல்ல வேண்டாம் போ என்று செல்லமாக கோபிக்க.

ஹே சாரி டி ராட்சஸி.

என்ன?😳

நான் உங்களுக்கு ராட்சஸியா....

ஆமாம் என் அழகான ராட்சஸி.

மெல்ல இதழ் ஓரம் புன்கைக்க.☺️

அப்பாடி சிரிட்சிட்டா.

சரி சரி வாங்க ஷ்யாம் உங்களை தான் எதிர் பார்த்திட்டு இருந்தேன்.

எங்க

ரூம்க்கு....

ஹே லூசு 🤫 அதுக்கெல்லாம் இன்னும் டைம் இருக்கு.

கல்யாணத்துக்கு அப்புறம் பார்த்துக்கலாம்.🤗

அட ச் சை...🤨

நான் மாறன் மாமா ரூம்ம ரெடி பண்ண வர சொன்னேன்.

😄 அப்படி வெளக்கம்மா சொல்லு புள்ள

மாமாக்கு கன்பியூஸ் ஆகுதா இல்லையா.

என்று சத்யாவை பார்த்து சொக்கி கண்ணடித்தான் ஷ்யாம்.

இருவரும் மாறன் அறைக்கு சென்று படுக்கையை பூவினால் அலகரித்தனர்.

மலர்களை ஒவ்வொன்றாக எடுத்து சத்யா மீது எறிந்தான் ஷ்யாம்.

பிட்ச்.....என்று உட்சி கொட்டி அந்த பூவை எல்லாம் எடுத்து எடுத்து எறிந்தால் சத்யா.

ஹே சத்யா....

ம்ம்..



எப்போ நமக்கு...இதே போலே...நடக்கும்

சத்யா வெக்கத்தில் முகம் சிவக்க

ஓய் என்ன டி ஒரு டிரயல் பார்க்கலாமா.

ச்சீ போயா ..☺️ என்று எழுந்தவளை


பிடித்து இழுக்க கால் இடறி ஷ்யாம் படுக்கையில் விழ அவன் மேலே விழுந்தாள் சத்யா.

இருவர் கண்களும் காதல் கதை பேசிக் கொண்டு இருக்க கதவு திறக்கப்பட்டது.

ஓசைக்கேட்டு சுதாரித்த இருவரும்

எழுந்து தங்களை ஒழுங்கு படுத்திக் கொண்டனர்.

என்ன சத்யா எல்லாம் ரெடி பண்ணிட்டீங்க போலே இருக்கு.

என்று உள்ளே வந்தார் சரண்யா.

ம்ம் பரவா இல்லையே ரெண்டு பேரும் சேர்ந்து

ரொம்ப நல்லா அலங்காரம் பண்ணி இருகிங்களே.

😊☺️

இன்னும் கொஞ்ச நேரம் கழிச்சி வந்திருந்திங்கன்னா

நாங்களே அலங்கோலம் பண்ணி இருப்போம் என்று அடக்கப்பட்ட குரலில் சொல்ல

காலை ஓங்கி மிதித்தாள் சத்யா.

ஆ...

என்ன தம்பி என்ன ஆட்சி.

ஒன்னும் இல்லே மா.கொசு கொசு

கொசுவா...?

ஆமாம் ஆன்டி ஐயோ அப்போ சிக்கிரம் அந்த ஆல் அவுட் போடுங்க

என்றதும் ஷ்யாம்மும் சத்யாவும் சிரிக்க

சரண்யா என்னவென்று புரியாமல் தானும் சேர்ந்து சிரித்தாள் 😅.

💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕

நங்க அக்கா மணி 6 ஆட்சீ.

போய் குளிச்சிட்டு தலைய காய வைங்க.

ம்ம்....

என்றவள் குளியல் அறை புகுந்துக்கொண்டு.

சவரை திறந்து விட்டு தண்ணீரில் நனைந்தவள்

ஐயோ இப்போ எப்படி நான்.

என்ன செய்றதுன்னே தெரியலையே.

மாறன் சார் என்ன மன்னிச்சிடுங்க.

உங்களை நான் உண்மையாவே விரும்புகிறேன்.

ஆனால் என்னால உங்க கூட சேர்ந்து வாழ முடியாது.

என் விதி....

என்று அழுது தீர்த்தாள்.

நங்க அக்கா சிக்கிரம் வாங்க.

இதோ இப்போ வந்தரேன் சத்யா.

தொடரும்....
Shahiabi. Writer ✍🏻
 

Author: shahiabi தனிமையின் காதலி
Article Title: Chapter -50
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.