Chapter-50

thenaruvitamilnovels

The World of Words
Staff member
Dec 25, 2024
163
0
16
www.amazon.com
“ச்ச்.. நீ என்ன மீட் பண்ண ஃபர்ஸ்ட் டேல இருந்து நான் இப்படித்தான் இருக்கேன் சங்கர். அது தெரிஞ்சு தானே நீ என்னை கல்யாணம் பண்ணிக்கிட்ட? அப்போ என் கிட்ட புடிச்ச எல்லாமே இப்போ உனக்கு புடிக்காம போயிடுச்சா? அப்படி இருந்தா, தப்பு என் மேல இல்ல. உன் மேல தான். அதுக்கு நான் ஒன்னும் பண்ண முடியாது.” என்று யாழினி திமிராக சொல்ல, வந்த கோபத்தில் மீண்டும் அவளை அடிக்க கை ஓங்கிய சங்கருக்கு இம்முறை அவளது சிவந்திருந்த கன்னங்களை பார்த்த பிறகு அடிக்க மனம் வரவில்லை. அதனால் கலங்கிய கண்களுடன் தன் கையை கீழே போட்டவன் “ஒழுங்கு மரியாதையா இங்க இருந்து போயிடு. எனக்கு உன் மூஞ்சிய பார்க்க கூட பிடிக்கல. நீ பேசப்பேச என்ன ட்ரிகர் பண்ற மாதிரி இருக்கு. கோவத்துல நான் ஏதாவது பண்ணிட போறேன். அப்பயும் அத நெனச்சு கடைசியில நான் தான் வருத்தப்படணும். உன்ன மாதிரி எதையும் தாங்குற இதயம் எல்லாம் எனக்கு இல்ல மா. தயவுசெஞ்சு இங்க இருந்து போயிரு. என் கண்ணு முன்னாடி நிக்காத.” என்று கத்தி சொல்லிவிட்டு அவளை பார்த்து கையெடுத்து கும்பிட்டான்.



“Fine, இனிமே நீயே ஆசைப்பட்டாலும் நான் உன் முன்னாடி வர மாட்டேன்.” என்று கோபமாக சொன்ன யாழினி அவள் கண்கள் ஓரம் வழிந்த கண்ணீரை துடைத்துக் கொண்டு வேகமாக வெளியே சென்று உள்ளே இருந்து லாக் செய்யப்பட்டு இருந்த தினேஷின் அறையின் கதவைத் தட்டினாள். சுவாதியிடம் பேசிக் கொண்டு இருந்த தினேஷ் வந்து கதவை திறந்து அவளிடம் என்னவென்று கேட்க, “நம்ப மும்பைக்கு போறத பத்தி இன்னைக்குள்ள உங்க கிட்ட சொல்றேன்னு சொல்லிருந்தேன்ல.. இப்பவே சொல்லிடறேன். நானும் உங்க கூட மும்பைக்கு வரேன். எனக்கு இங்கே இருக்கவே சுத்தமா பிடிக்கல தினேஷ். ப்ளீஸ் என்னையும் உங்க கூட கூட்டிட்டு போய்டுங்க.” என்றாள் யாழினி.



அவள் அதை சொன்ன விதத்திலேயே அவளுக்கும் சங்கருக்கும் ஏதோ பிரச்சனை என்று அவனுக்கு நன்றாக புரிந்தது. இப்போது அவன் வாழ்க்கையிலேயே பிரச்சினை நடந்து கொண்டு இருப்பதால் யாழினியின் பிரச்சனையில் அவன் தன் தலையை விட விரும்பவில்லை. அதனால் “ஓகே யாழினி. நான் M.D கிட்ட inform பண்ணிட்டு ‌‌ உனக்கும் சேர்த்து டிக்கெட் புக் பண்ணிடறேன். நாளைக்கு ஈவினிங் ஃபிளைட்ன்னு நினைக்கிறேன். நான் கன்பார்ம் பண்ணிட்டு நாளைக்கு மார்னிங் சொல்லிடறேன். நீ உன் திங்க்சை பேக் பண்ணிட்டு ரெடியா இரு.” என்று சொல்லி அவளை அனுப்பி வைத்து விட்டான் தினேஷ்.



யாழினி சென்ற பிறகு கட்டிலில் அமர்ந்து இருந்த ஸ்வாதியின் அருகே சென்று அமர்ந்த தினேஷ் “இப்போ நமக்குள்ள இந்த ப்ராப்ளம் மட்டும் இல்லன்னா, இந்த ப்ராஜெக்ட்டுக்கு என் அசிஸ்டன்ட்டா நான் உன்ன தான் என் கூட கூட்டிட்டு போய் இருப்பேன். இது எவ்வளவு பெரிய opportunity தெரியுமா? இதெல்லாம் Grab or gone மாதிரி தான். லைஃப்ல எப்பயாவது தான் அமையும். அப்போ அதை கெட்டியா பிடிச்சுக்கிட்டு எப்படி முன்னாடி போறதுன்னு தான் யோசிக்கணும். நீ பாட்டுக்கு ஈஸியா இப்ப வேலையை விட்டுட்டு அப்புறமா வேலைக்கு போறேன்னு சொல்றியே.. நீ வேற எந்த ஆபீஸ்க்கு போனாலும் அந்த ஆபீஸ் உனக்கு இந்த ஆபீஸ் மாதிரி இருக்குமா?

அங்க உனக்கு மேல டீம் லீடருன்னு ஒருத்தன் இருப்பான். அவனுக்கு மேல மேனேஜர் ஒருத்தன் இருப்பான். ஆனா அவங்க யாரும் இந்த தினேஷ் மாதிரி உன் கிட்ட பிரண்ட்லியா நடந்துக்க மாட்டாங்க. நான் பண்ண எல்லா பெரிய ப்ராஜக்ட்லையுமே உன்னை என் டீம்ல நான் போட்டிருக்கேன். உன் கரியர் குரோத்துக்காக நான் நிறைய ஆப்பர்சூனிட்டீஸ் கிரியேட் பண்ணி கொடுத்து இருக்கேன். இதெல்லாம் நீ வேற கம்பெனிக்கு போனா கிடைக்குமா? அதுவும் நடுவுல நீ ஒரு கேப் எடுத்துட்டு அதுக்கப்புறம் அகைன் ஜாபுக்கு போனா, உனக்கு நீ இப்ப வாங்குற சேலரில பாதி கூட கிடைக்காது. ‌

உன் கிட்ட இருக்கிற savingsஐ வச்சி உன்னால உன்னையும் உன் குழந்தையையும் வேணா ஒரு ரெண்டு மூணு வருஷத்துக்கு பாததுக்க முடியும். ஆனா லைஃப்ல முன்னேற முடியுமா? போன மாசத்துக்கு முன்னாடி வரைக்கும் இ.எம்.ஐ.ல வீடு வாங்கலாம்னு நம்ம பேசிட்டு இருந்தோமே எப்படி முடியும் அது? அதுக்கு ரெண்டு பேரும் வேலைக்கு போயே ஆகணும் சுவாதி. நான் ஒருத்தன் மட்டும் சம்பாதிச்சு வீடு வாங்கணும்னா என்னைக்கு நடக்கிறது? இது எல்லாத்தையும் யோசிச்சு தான் நான் இப்ப இந்த குழந்தை வேணாம்னு சொன்னேன். அத இப்ப ஏன் எதுக்குன்னு இன்னும் க்ளியராவும் சொல்லிட்டேன். இதுக்கு மேல உன் இஷ்டம்.” என்று நிதானமான குரலில் சொன்னான். இப்படி அவன் கொஞ்சம் பொறுமையாக பேசினால் அவள் கண்டிப்பாக அதை ஏற்றுக் கொள்வாள் என்று அவன் எண்ணம்.



அதுவரை அமைதியாக இருந்த சுவாதி “பேசி முடிச்சிட்டீங்களா இல்ல இன்னும் வேற ஏதாவது இருக்கா?” என்று கேட்க, “ச்ச்... சும்மா சும்மா எனக்கு இதை பத்தி உன் கிட்ட பேசறதுக்கு இரிடேட் ஆகுது சுவாதி. எனக்கு ஆயிரம் பிரச்சனை வர்க் பிரஷர்ன்னு மண்டைக்குள்ள எவ்வளவோ ஓடிட்டு இருக்கு. இதை வேற ஒரு அடிஷனல் டென்ஷனா என்னால சுமக்க முடியாது. Husband and wifeன்னா ஒருத்தர ஒருத்தர் புரிஞ்சுகிட்டு சேர்ந்து வாழணும். கல்யாணமாகி இத்தனை மாசமாகியும் நமக்குள்ள அந்த understanding வந்த மாதிரியே எனக்கு தெரியல. இதுக்கு மேல நான் உன் கிட்ட சொல்றதுக்கு எதுவும் இல்ல.‌ ‌ உன்ன பார்க்கும்போது எனக்கு செட்டாகாத பொண்ணை என்னமோ force பண்ணி நான் அவ கூட சேர்ந்து வாழ்ற மாதிரி எனக்கு ஒரு ஃபீல் வருது. பட் இப்பயும் சொல்றேன் எனக்கு உன்னை பிடிக்கும்.

என் டிசிஷன்ல எந்த சேஞ்சும் இல்ல. நான் அப்ப சொன்னது தான். உனக்கு நான் வேணுமா, இல்லை இந்த குழந்தை வேணுமானு நீயே முடிவு பண்ணிக்கோ. இதுக்கப்புறம் என்ன நடந்தாலும் அதை நான் பாத்துக்குறேன். என்று உறுதியாக அவளிடம் சொல்லிவிட்டான் தினேஷ். இதற்கு மேல் அவளிடம் கெஞ்சிக் கொண்டிருக்க அவன் விரும்பவில்லை.



அவன் பேசி முடித்த பிறகு கலகலவென சத்தமாக கை தட்டி சிரித்த சுவாதி “Good, இப்ப தான் நீ ரொம்ப தெளிவா பேசி இருக்க. நீ இன்னைக்கு பிஹேவ் பண்ணதை வச்சு உனக்கு என்ன வேணும்னு எனக்கு நல்லா புரிஞ்சிருச்சு. கண்டிப்பா அதுக்கான ஆள் நான் இல்ல. நீ சொன்னது கரெக்ட் தான் தினேஷ். நான் உனக்கு செட்டாக மாட்டேன். நான் ஆசைப்பட்டதெல்லாம் ஒரு சாதாரண வாழ்க்கை தான். எனக்கு சொந்த வீடு இருக்கோ இல்லையோ அத பத்தி எல்லாம் எனக்கு கவலை இல்லை. ஆனா இந்த குழந்தை இல்லாம போயிடுச்சுன்னா, இதுக்கப்புறம் எத்தனை குழந்தை பெத்துக்கிட்டாலும் இந்த குழந்தையை நினைச்சு நான் சாகுற வரைக்கும் வருத்தப்பட்டுட்டு தான் இருப்பேன்.

என்னால அந்த கஷ்டத்தை அனுபவிக்க முடியாது. எனக்கு உன் கிட்ட இருந்து எதுவும் வேணாம். நீ சொன்னத நான் ஏத்துக்கிறேன். உனக்கு டிவர்ஸ் குடுத்துட்றேன். உனக்கு புடிச்ச மாதிரி ஒரு லைஃபை நீ சந்தோஷமா வாழு. அது உன் இஷ்டம். நான் எப்பயும் உன்னை டிஸ்டர்ப் பண்ண மாட்டேன். பட் நான் உனக்கு டிவர்ஸ் கொடுக்கணும்னா எனக்கு ஒரு கண்டிஷன் இருக்கு.” என்று சொல்ல, அவள் பேசியதை வைத்தே என்றும் இவள் தனக்கு ஏற்றதைப் போல நடந்து கொள்ள மாட்டாள் என்ற முடிவிற்கு வந்த தினேஷ் “நம்ம வீட்ல இருக்கிறவங்க கொஞ்ச நாள் கோச்சிக்கிட்டு பேசாம இருந்தாலும் அதுக்கப்புறம் எப்படியும் மனசு மாறிடுவாங்க. அவங்களுக்கு நான் ஒரே பையன். என்ன விட்டுட்டு எங்க போயிட போறாங்க? இந்த ஸ்வாதிய இதுக்கு மேல நம்மளால சமாளிக்க முடியாது. அதுக்கு அவ கேட்கிற மாதிரி டிவர்ஸ் பண்ணிட்டு இனிமேலாவது ரெண்டு பேரும் நிம்மதியா இருக்கலாம். உன் கிட்ட அது பிரச்சனை என் கிட்ட இது பிரச்சனைன்னு சொல்லி இரண்டு பேரும் தினமும் சண்டை போட்டுட்டே இருக்கிறதுக்கு அது எவ்வளவோ பெட்டர்.” என்று நினைத்து “என்ன கண்டிஷன்?” என்று அவளிடம் கேட்டான்.



“பெருசா ஒன்னும் இல்ல.. நீ என் குழந்தையை வேணாம்னு சொன்னில.. அதுல எப்பயும் நீ ஸ்ட்ராங்கா இருக்கணும் அதுதான் எனக்கு வேணும். அதுக்காக டிவர்ஸ் அப்ளை பண்ணும் போதே, என் வயிற்றில் வளர்ற குழந்தைக்கும் உனக்கும் எந்த சம்பந்தமும் இல்லைன்னு ‌ ஆபீஸியல்லா எழுதி கொடுத்துடு. அது போதும்.” என்று சுவாதி சொல்லிவிட, தினேஷிற்கும் அதுதான் தேவையாக இருந்தது. அவள் விரும்பி பெற்றுக்கொள்ள போகும் இந்த குழந்தைக்கு அவன் கார்டியனாக இருக்க விரும்பவில்லை. அதனால் ஒரு நொடியும் தாமதிக்காமல் ஓகே என்றான். அதற்கு மேல் அவர்கள் இருவரும் பேசிக் கொள்ளவில்லை. பேச வேண்டிய அவசியமும் இருக்கவில்லை.‌ அவர்கள் தங்களுக்கான பாதையில் தனித்தனியாக செல்ல முடிவெடுத்தார்கள்.



தனது மன வேதனையை தாங்க முடியாமல் எந்த யாழினிக்காக குடியை விட்டிருந்தானோ அதே சங்கர் அவனது யாழினியாலேயே மீண்டும் குடிக்க தொடங்கினான். நேராக ஒயின் ஷாப்பிற்கு சென்று பாட்டில் பாட்டிலாக மதுவை வாங்கிக் கொண்டு வந்து மொட்டை மாடிக்கு சென்று இரவு முழுவதும் குடித்துவிட்டு அங்கேயே விழுந்து கிடந்தான். யாழினி அவனை கண்டு கொள்ளவில்லை. அவனை நினைத்து வருத்தப்பட்ட ஸ்வாதி அவனுக்கு கால் செய்து பார்த்தாள். அவன் எடுக்கவில்லை. அப்படியே நேரம் செல்ல, ஈவினிங் யாழினியம் தினேஷும் ஃபிளைட் பிடித்து மும்பையை நோக்கி பறந்தார்கள். அவர்கள் இருவரும் சென்ற பிறகு யாரும் இல்லாத அந்த வீட்டில் உள்ள சோஃபாவில் அமர்ந்த சுவாதிக்கு அந்த தனிமை கொடுமையாக இருந்தது. அதனால் “எனக்கும் தினசுக்கும் பிரச்சனை இருக்கு ஓகே. அதனால நாங்க பேசாம இருக்கோம். திடீர்னு உங்களுக்கும் யாழினிக்கும் என்ன பிரச்சனை சங்கர்? ஏன் நீங்க அவ மேல கோபப்பட்டு உங்களையே இப்படி கஷ்டப்படுத்துறீங்க? நெஜமாவே நீங்க ரொம்ப நல்ல மனுஷன். உங்கள மாதிரி நல்லவரு‌ இப்படி உங்களையே வருத்திகிட்டு கஷ்டப்படுறதை ‌ பார்க்க உங்களை விட எனக்கு தான் கஷ்டமா இருக்கு.” என்று நினைத்த சுவாதி லிப்டில் மொட்டை மாடிக்கு சென்றாள்.

தொடரும்..

அமேசானில் முழு புத்தகத்தையும் படிக்க:

இதழ் அமுதங்களால் நிறைந்தேன் | Idhal Amuthangalal Nirainthen by SNK Books [Tamil Edition] : Tamil adult Romantic novel https://amzn.in/d/9PbpXaN

எங்களது பேஸ்புக் குரூப்பில் இணைய:

 

Author: thenaruvitamilnovels
Article Title: Chapter-50
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.