அத்தியாயம் 5: இவன் என்ன கொலை பண்ண பாக்கிறான்.!!!
“ஏன்னா... நான் மறுபடியும் என் யாழினிய இழக்கிறதுக்கு ரெடியா இல்ல." என்று உறுதியான குரலில் இசை சொல்ல,
“நான் சொல்றத நீ நல்லா தெளிவா கேட்டுக்கோ இசை. நான் உன் யாழினி இல்ல.
என்னால யாழினியாகவும் முடியாது.
நான் பிரியா.
முதல்ல என்னோட முகத்துக்குள்ள அந்த யாழினிய தேடுறத நிறுத்து.
நீ இங்க தேடுனா உனக்கு அவ கிடைக்க மாட்டா." என்று உறுதியான குரலில் சொன்னாள் பிரியா.
அவளுடைய கண்களுக்குள் தனது கண்களை கலக்க விட்ட இசை, “நான் உன்ன ஒன்னும் யாழினியோட சப்ஸ்டியூட்டா நினைக்கல பிரியா.
யாழினி ஆக்சிடென்ட்ல இறந்து போனப்ப என்னால அவ கூட இருந்து அவளை காப்பாத்த முடியலன்ற குற்ற உணர்ச்சியில நான் இத்தனை நாளா தவிச்சுக்கிட்டு இருந்தேன்.
அவள நான் ரொம்ப மிஸ் பண்ணேன்.
அவள மாதிரியே இருக்கிற உன்ன பாத்த உடனே அந்த கடவுள் என் கஷ்டத்தை போக்குறதுக்கு ஏதோ ஒரு தேவதைய அனுப்பி வச்ச மாதிரி இருந்துச்சு.
என்னால என் யாழினிக்கு தான் எதுவும் செய்ய முடியல.
அட்லீஸ்ட் அவள மாதிரி இருக்கிற உன்னயும் நான் மிஸ் பண்ண கூடாதுன்னு நினைக்கிறேன்.
அதான் நான் உன்ன பாத்த உடனே, நீ என்ன கல்யாணம் பண்ணிக்கிறியான்னு கேட்டேன்.
அண்ட் நான் உனக்கு எந்த ஃபேவரும் செய்யல பிரியா.
திடீர்னு பெய்கிற மழை மாதிரி நீதான் என் லைஃப்குள்ள வந்து எனக்கு பெரிய ஃபேவர் பண்ணிருக்க.
உன்ன நான் பாக்குற வரைக்கும் நான் அரை உசுரா நடமடிட்டு இருந்தேன் பிரியா.
ஆனா இப்ப எனக்கு வாழனும்ன்னு ஆசையா இருக்கு.
உன்னை உன் கூட இருந்து நல்லா பாத்துக்கணும்னு தோணுது." என்று உருக்கமாக பேசியவன் தனக்குள்,
“எனக்கு உன் கூட வாழனும்னு ஆசையா இருக்கு" என்று சொல்லிக் கொண்டான்.
இசை சொன்ன காரணத்தை கேட்ட பிரியா அமைதி ஆகிவிட்டாள்.
காதலின் பிரிவு தரும் வலி எவ்வாறு இருக்கும் என்று அவளும் நன்கு அறிந்து வைத்து இருந்தாள்.
அதனால், இசையை எந்த விதத்திலும் அவளால் குறை சொல்லவோ, தவறாக நினைக்கவோ, முடியவில்லை.
அதனால் சில நிமிடங்கள் எதையோ யோசித்துப் பார்த்தவள் பின் இசையை பார்த்து, “ஓகே Fine. நான் உங்களோட ஆப்பரை அக்செப்ட் பண்றேன்.
அண்ட் ஐ ப்ராமிஸ் யூ, இனிமே இந்த ரெஸ்டாரன்ட் என் ரெஸ்பான்சிபிலிட்டி.
ஒன் மந்துல நான் இதோட ப்ராஃபிட் ஐ இன்க்ரீஸ் பண்ணி காமிக்கிறேன்.
ஒருவேளை என்னால அப்படி செய்யய முடியலன்னா, நீங்க எனக்கு அந்த மன்தோட சேலரிய கூட தர வேண்டாம்." என்று தீர்க்கமான குரலில் சொன்னாள்.
தங்களுக்கு கிடைக்கும் அனைத்து வாய்ப்புகளிலும் தனக்கு லாபம் எவ்வாறு கிடைக்கும் என்றே யோசிக்கும் பெரும்பாலான மக்கள் வாழும் இவ்வுலகில், இப்படியும் ஒரு பெண்ணா? என்பது போல் பிரியாவை இசையும், ஜீவாவும், ஆச்சரியமாக பார்த்தனர்.
அவர்கள் இருவருக்கும் பிரியாவின் ஒவ்வொரு செய்கைகளாலும் பார்த்து அவள் மேல் ஒரு பெரிய மரியாதையே வந்தது.
இசையின் இதயம் கொஞ்சம் கொஞ்சமாக பிரியாவை பற்றி யோசித்து அவளுக்காக துடிக்க தொடங்கியது.
இப்படியே சிறிது நேரம் அவர்கள் அடுத்து ரெஸ்டாரண்டில் செய்யப் போகும் வேலைகளை பற்றி பேசியபடியே சாப்பிட்டு முடித்தனர்.
பிரியாவும், இசையும் சிறிது நேரம் தனியாக நேரம் செலவிட்டால் அவர்கள் இருவரும் தங்களைப் பற்றி ஒருவருடன் ஒருவர் பேசி தெரிந்து கொள்ள இது ஒரு வாய்ப்பாக இருக்கும் என்று நினைத்த ஜீவா பிரியாவை பார்த்து,
“நீ மொபைல் ஃபோன் வாங்கனும்னு சொன்னில மா...!!
நீயும், இசையும், கடைக்கு போய் ஃபோனும், உங்களுக்கு தேவையான வேற ஏதாவது திங்ஸ் வாங்கணும்ன்னா அதையும் வாங்கிட்டு வந்துருங்க.
நான் நீங்க வர்றதுக்குள்ள மேல் வீட்டை கிளீன் பண்ணி வச்சுடறேன்." என்றான்.
இதைப் பற்றி எல்லாம் பெரிதாக யோசிக்காமல், “ஓகே அண்ணா." என்றாள் பிரியா.
கண்களாலேயே தனது நண்பனுக்கு “தேங்க்ஸ்" சொன்ன இசை, அவனுடைய மனதிற்குள் பிரியாவோடு வெளியே செல்வதை நினைத்து மகிழ்ச்சியில் குத்தாட்டம் போட்டான்.
“ஷாப் ரொம்ப தூரமா..?? நம்ம அங்க எப்டி போக போறோம்..??" என்று பிரியா இசையை பார்த்து கேட்க,
“பஸ் ஸ்டாண்ட் கிட்ட என் ஃபிரண்டு ஒரு மொபைல் ஷாப் ஷோரூம் வச்சிருக்கான்.
நம்ம அங்கயே போய் வாங்கிக்கலாம்.
ஹோல் சேல் பிரைஸ்லையே ஃபோன் கிடைக்கும்.
என் பைக் இருக்கு. அதிலயே நம்ம போயிடலாம்." என்று இசை அவன் பிரியாவோடு முதன் முதலில் பைக்கில் செல்ல போவதால் உற்சாகமாக சொன்னான்.
அதற்கு அவளும் கேஸ்வலாக “ஓகே" என்றாள்.
இசையோடு பிரியா பைக்கில் செல்வது ராகுலுக்கு பிடிக்கவில்லை. அதனால் அவர்களுடைய பேச்சில் குறுக்கிட்டு, “எப்டி பிரியா பைக்ல மூணு பேர் போக முடியும்..??" என்றான் அவசரமான குரலில்...
இசை அவன் சொன்னதைக் கேட்டு ஷாக்காகி, “அப்ப நீயும் எங்க கூட வரியா..??" என்று கேட்க,
“பின்ன என் அக்காவ உங்கள நம்பி தனியா அனுப்ப முடியுமா..??" என்று பொறுப்பான தம்பியாக கேள்வி கேட்டான் ராகுல்.
“என்ன ராகுல் சார்.. இப்ப தானே கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி நம்ம சாப்பிட்டுக்கிட்டு இருக்கும் போது நாங்க எல்லாம் உங்க அக்காவுக்கு ஒரு ஆளே இல்ல..
எங்கள மாதிரி பத்து பேர் வந்தாலும் உங்க அக்கா தனியா சமாளிப்பானு சொன்னீங்க..!!!
இப்ப என்ன உங்க அக்காவுக்கு நீங்க பாடிகார்ட் ஆ வரப் போறீங்களா..??" என்று நக்கலாக இசை கேட்க,
அவன் சொன்னதைக் கேட்டு கடுப்பான ராகுல், “ஆமா நான் என் அக்காவுக்கு பாடிகார்ட் தான்.
அதனால உங்களுக்கு என்ன...??" என்று சீறினான்.
“ஐயோ..சார்.. நான் உங்கள தப்பா எதுவும் சொல்லல.
நான் ஜஸ்ட் நீங்க சொன்னத உங்களுக்கு ஞாபகப்படுத்தினேன்." என்று இசை சொல்லிவிட்டு சிரிக்க,
ராகுல் அவனுக்கு ஏதோ பதில் சொல்ல வந்தான்.
அதற்குள் அவன் கையைப் பிடித்து அவனை தடுத்த பிரியா, “போதும்.. இப்படியே நீங்க ரெண்டு பேரும் சும்மா சண்டை போட்டுக்கிட்டே இருக்காதீங்க." என்றவள் ஜீவாவை பார்த்து,
“அண்ணா உங்க கிட்ட பைக் இருக்கா..??" என்று கேட்டாள்.
“ம்ம்ம்.. இருக்கு மா.” என்று அவன் சொல்ல,
“ஓகே குட்..
அப்ப நீங்க உங்க பைக் கீய குடுங்க.
இசை அவரோட பைக்ல முன்னாடி டிரைவ் பண்ணிட்டு போட்டும்.
நாங்க அவர ஃபாலோ பண்ணி அவர் பின்னாடியே போறோம்.” என்றாள் பிரியா.
“ஆனா நீங்க எப்படி மா ஓட்டிட்டு போவீங்க..??" என்று தயககத்துடன் அவசரமான குரலில் உடனே ஜீவா கேட்க,
“ஓ புரியுது... நம்ம ஒருத்தர ஒருத்தர் மீட் பண்ணி முழுசா ஒரு மணி நேரம் கூட ஆகல.
அதுக்குள்ள எங்கள நம்பி எப்படி உங்க பைக்கை குடுக்கிறதுன்னு நீங்க யோசிக்கிறதுல ஒன்னும் தப்பில்ல.
நீங்களும் வேணா எங்க கூட வாங்க.
நான் இசை கூட போறேன். ராகுல் உங்க கூட வரட்டும்." என்றாள் பிரியா.
“அட.. அப்படி எல்லாம் இல்ல மா..
ராகுல் சின்ன பையனா இருக்கானே..
அவன் கிட்ட டிரைவிங் லைசன்ஸ் இருக்கான்னு கூட தெரியல.
அதான் நீங்க எப்படி ட்ரை பண்ணிட்டு போவீங்கன்னு யோசிச்சேன்.
மத்தபடி உங்க மேல நம்பிக்கை இல்லாம எல்லாம் இல்ல மா." என்று வேகமாக ஜீவா சொல்ல,
“ஆமா அவனுக்கு 17 வயசு தான் ஆகுது.
ஆனா என் கிட்ட டிரைவிங் லைசன்ஸ் இருக்கு.
சோ, ஒன்னும் பிரச்சனை இல்ல அண்ணா.” என்றாள் பிரியா.
“டிரைவிங் லைசன்ஸ் இருக்கு ஓகே.
பட் உனக்கு பைக் ஓட்ட தெரியுமா..??” என்று சந்தேகமாக அவன் கேட்க,
“ம்ம்ம்... தெரியுமே...!!!" என்று கேஷுவலாக சொன்னாள் அவள்.
அவள் சொன்னதை நம்ப முடியாமல், “ஆர் யூ Sure..??
அந்த ரோடு எப்பயுமே ரொம்ப ட்ராஃப்பிக்கா இருக்கும்.
நீ மேனேஜ் பண்ணுவியா..??" என்று கேட்டான் இசை.
ராகுல் வழக்கம்போல பிரியா பதில் சொல்வதற்குள் முந்திக் கொண்டு “அவ பைக் ரேஸ்லையே ஸ்போர்ட்ஸ் பைக்கை அசால்டா ஓட்டுவா.
இந்த ஊரு டிராபிக் எல்லாம் ஒரு மேட்டரா..??
அதெல்லாம் ஒன்னும் ஆகாது பயப்படாம வாயா" என்று என்றான்.
ஜீவாவும், இசையும், பிரியாவை வியந்து பார்த்தனர்.
ஒருவேளை இவன் அவனது அக்காவை பற்றி தங்களிடம் பெரிதாக பில்டப் செய்வதற்காக இப்படி எல்லாம் கதை அழைக்கிறானோ? என்று கூட அவர்களுக்கு தோன்றியது.
ஆனால், அவர்கள் பிரியாவை பற்றி தெரிந்து கொள்ளும் ஒவ்வொரு விஷயமும் அவர்களுக்கு ஆச்சரியமாக இருந்தது.
ஜீவா தனது பைக் சாவியை பிரியாவிடம் கொடுத்து
“சரி மா. அப்ப நீங்க பாத்து போயிட்டு வந்துருங்க." என்றான்.
பிரியா அந்த சாவியை பெற்றுக்கொள்ள, பிரியாவையும் ராகுலையும் அழைத்துக் கொண்டு வெளியே வந்த இசை, தன்னை ஃபாலோ செய்யுமாறு பிரியாவிடம் சொல்லிவிட்டு, அவனது பைக்கை ஸ்டார்ட் செய்து கிளம்பினான்.
பிரியா தன்னை பின் தொடர்வதற்கு ஏதுவாக மிதமான வேகத்தில் சென்று கொண்டு இருந்தான் இசை.
ராகுலை தன் பின்னே அமர வைத்தபடி பிரியா, இசையின் பைக்கை ஃபாலோ செய்து கொண்டு இருந்தாள்.
நம்முடைய ஊரில் பெண்கள் பைக் ஓட்டுவது எல்லாம் சாதாரணமான விஷயம் இல்லையே...!!
அதனால், பிரியாவை கடந்து செல்லும் ஒவ்வொருவரும் அவளை நோட்டமிட்டபடி சென்றனர்.
இசையும் அதை கவனிக்கத்தான் செய்தான்.
பிரியா தன்னுடன் பைக்கில் வரவில்லை என்றாலும், அவள் தன்னை ஃபாலோ செய்து தனக்கு பின்னே வருவது கூட இசையை மகிழ்விக்க போதுமானதாக இருந்தது.
அதனால் அவன் மகிழ்ச்சியில் சாலையில் கவனம் செலுத்தாமல் சைடு மிரரில் தெரிந்த தன்னைப் பின் தொடர்ந்து வரும் பிரியாவை சைட் அடித்துக் கொண்டு இருந்தான்.
மேயாத மான் திரைப்படத்தின் ஹீரோ வைபவ் தனது நண்பனிடம் அவருடைய காதலியை அவர், “அவ எப்டி இருந்தா தெரியுமா மச்சான்...?? காத்துல பறக்கிற அவ முடி..
அவ கண்ணு, மூக்கு, வாய்னு..
அப்படியே துண்டு... துண்டா... அவள பாத்து ரசிச்சேன் டா" என்று சொல்வது போல, இசையும் பிரியாவை துண்டு துண்டாக பார்த்து ரசித்துக் கொண்டிருந்தான்.
இப்படி அவன் கடமையே கண்ணாக பிரியாவையே பார்த்துக் கொண்டு இருந்ததால்,
தனக்கு எதிரே சாலையை கடந்து சென்ற ஒரு பாட்டியை அவன் கவனிக்கவில்லை.
இசை தன் மீது பைக்கை ஏற்றி தன்னை தாக்கி விட போவதை போல் தன் அருகில் வந்ததால்..
அதைக் கண்டு பயந்த அந்த பாட்டி, “ஐயோ..!! என்ன காப்பாத்துங்க.
இந்த பையன் என்ன வண்டிய ஏத்தி கொள்ள பாக்குறான்." என்று சத்தமாக கத்தினார்.
அந்த மூதாட்டியின் அலறலால் சுதரித்து கொண்ட இசை, க்ரிட்ச்... என்ற சத்தத்துடன் சடன் பிரேக் போட்டு அவனது பைக்கை நிறுத்தினான்.
இசையை பின் தொடர்ந்து வந்து கொண்டு இருந்த பிரியாவிற்கும் அந்த மூதாட்டியின் அலறல் சத்தம் கேட்டது.
அதனால் என்ன ஆனதோ என்று பதறியவள், தனது பைக்கின் வேகத்தை கூட்டி விரைந்து வந்து இசையின் அருகே கொண்டு வந்து அவளது பைக்கை நிறுத்தினாள்.
பிரியா அவன் அருகே வரும்போது இசை அந்த பாட்டியிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டு இருந்தான்.
“ஐயோ.. சாரி பாட்டிமா. நான் ஏதோ யோசனையில தெரியாம உங்க மேல இடிக்கிற மாதிரி வந்துட்டேன்.
உங்களுக்கு ஏதாவது அடிபட்டுருச்சா..??" என்று அவர்களுக்கு ஏதாவது அடிபட்டு இருக்கிறதா என்று தெரிந்து கொள்ள கண்களால் அந்த பாட்டியை ஸ்கேன் செய்தான்.
இசையை எரித்து விடும் பார்வை பார்த்த அந்த பாட்டி,
“ஏப்பா ஏய்..!! வண்டியில போறப்ப தான் நீ கண்டதை எல்லாம் யோசிச்சிட்டு இருப்பியா..??
ஏதோ கடவுள் புண்ணியத்துல எனக்கு எதுவும் ஆகல.
எனக்கு மட்டும் ஏதாவது ஆயீருந்துச்சுன்னா என் பெரிய பையன் போலீஸ்ல எஸ்.ஐ. ஆ இருக்கானாக்கும்.
அவன் உன்ன சும்மாவே விட்டிருக்க மாட்டான்.
அப்படியே உன்ன சுட்டு தள்ளிருப்பான்..!!
இந்த காலத்து பிள்ளைங்களுக்லு எல்லாம் நினைப்பு எங்க இருக்குன்னே தெரியல.
வர வர ரோட்ல போறதுக்கே பயமா இருக்கு." என்று தனது ஆதங்கத்தை கோபமாக சொல்லி புலம்ப,
அதைக் கேட்டு இசையை பார்த்து நக்கலாக சிரித்த ராகுல்,
“அப்படி நல்லா கேளுங்க பாட்டி. டிரைவ் பண்ணும்போது ரோட்டை பாத்து போகணும்.
அத விட்டுட்டு, சைடு மிரர்ல என் அக்காவை பாத்து சைட் அடிச்சுகிட்டே வந்தா இப்படி தான் நடக்கும்.
நல்லவேளை இவர் ஆக்சிடென்ட் பண்ணி கொலை கேஸ்ல உள்ள போல." என்றான்.
ராகுல் சொன்னதை கேட்டு இசையை பார்த்து முறைத்த அந்த பாட்டி, “கலி முத்தி போயிடுச்சு.
இந்த பொசகெட்ட பயலுங்க ரோட்ல போற ஒரு பொண்ணையும் விட்டு வைக்க மாட்டேங்குறானுங்க.
இவனுங்களோட கொல்லி கண்ணை வச்சுக்கிட்டு போற வர எல்லா பொண்ணுங்களையும் அப்டியே முழுங்கற மாதிரி பாக்குறானுங்க.
இவனுங்களை எல்லாம் என்னாத்த சொல்றது..!!" என்று புலம்பியபடியே தன் தலையில் அடித்துக் கொண்டு அங்கு இருந்து நகர்ந்தாள்.
அந்தப் பாட்டி சென்றவுடன் பிரியாவும், ராகுலும், இசையை பார்த்து சிரித்தனர்.
அவர்களைப் பார்த்து முறைத்த இசை, “அதான் அந்த பாட்டி போய்ட்டாங்கல்ல...
நீங்க தான் உங்களால என்ன முடியுமோ அதை தரமா பண்ணிட்டீங்களே..!!
அப்புறம் என்ன வாங்க போலாம்." என்றான்.
பின் இசை தனது பைக்கை ஸ்டார்ட் செய்து கிளம்ப, பிரியாவும் அவளுடைய பைக்கை ஸ்டார்ட் செய்து அவனை ஃபாலோ செய்ய தொடங்கினாள். .
இருவரும் தங்களுக்கான ஒரு புதிய பாதையில் தங்களுடைய காதல் பயணத்தை தொடங்கினார்கள்.
எங்கேயோ இருந்த இவர்கள் இருவரும், இன்று விதிவசத்தால் இணைந்து இருக்கின்றனர்.
காலம் நமக்காக வைத்து இருக்கும் ஆச்சரியங்களை, ஒருபோதும் நம்மால் கணிக்க முடியாது.
எங்களது பேஸ்புக் குரூப்பில் இணைய இந்த லிங்கை கிளிக் செய்யவும்.
facebook.com

Log in to Facebook
Log in to Facebook to start sharing and connecting with your friends, family and people you know.
Author: thenaruvitamilnovels
Article Title: Chapter-5
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.