தொடர்ச்சி 👉🏻

ஹலோ பிரதாப்..... ப்

சொல்லு வித்யா

கொஞ்சம் சீக்கிரம் நாம எப்பவும் போற பப்க்கு வா.

ஏன் வித்யா என்னாட்சி.

ஐயோ என் கிட்ட இப்போ எதும் கேக்காத உடனே கிளம்பி வா பிரதாப்.

அவள் அழைப்பில் பதட்டம் தோன்றியது.

ஜஸ்ட் 15 மினிட்ஸ் ல அங்கே இருப்பேன்.

என்றவன் வித்யாவின் அழைப்பில் தன் இருசக்கர வாகனத்தை எடுத்துக் கொண்டு அவசரமாக

வித்யா கூறிய அந்த இடத்தை சென்று அடைந்தான்.

😳
ஹே வித்யா.

உனக்கு என்ன ஆட்சி?

தெரியல பிரதாப்

எனக்கு ரொம்ப வயிறு வலிக்குது பிரதாப்.

வலி தாங்க முடியல.

என்ன சொல்ற வித்யா.

சரி மெல்ல எழுந்திரு ஹாஸ்பிட்டல் போகலாம்.

வேண்டாம் பிரதாப் வீட்டுக்கு கூட்டிட்டு போ.

அங்க கொஞ்சம் *********"(பெயர் சொல்ல கூடாதா பொருள்) இருக்கு

(போதை பொருள் உபயோகித்தல் மிக மோசமான 🥂🍻🍺🍾விளைவுகளை ஏற்படுத்தும் சில சமயங்களில் உயிர் இழப்பு கூட நிகழலாம்.)
🫀🫀🧠🧠🩸🩸🫁🫁🫁🫁🫀🫀🧠🧠

அதை நான் இன்ஜெக்ட் 💉பண்ணிக் கிட்டா கொஞ்ச நேரத்துல எனக்கு இந்த வலி போய்டும் பிரதாப்.

பிளீஸ் என்னை கூட்டிட்டு போ.

இல்லே வித்யா

சொன்ன கேளு பிரதாப் என் நிலமைய புறிஜிக்கோ.

சரி வா வித்யா.

என்றவன் அவளை அவன் வண்டியில் பின் இருக்கையில் அமர்த்திக் கொண்டு விரைந்தான்.

ஆனால் அவன் ஒன்றும் வித்யா சொன்னதை போலே வீட்டுக்கு கூட்டி செல்லவில்லை

ஹாஸ்பிடலுக்கு தான் கூட்டி சென்றான்.

ஆனால் போகும் வழியிலேயே அவள் மயங்கி சுய நினைவை இழந்தால் .

வித்யா வித்யா உனக்கு என்ன ஆட்சி என்றவன் வண்டியின் வேகத்தை மேலும் கூட்டினான்.

ஹாஸ்பிடல் சென்றவுடன் அவசர சிகிச்சை பிரிவில் கொண்டு சென்று

சிறிது நேரத்திற்குப் பின்

இந்த பேசன்ட் கூட வந்த வங்க

யாரு?

சார் நான்தான் என்று பிரதாப் கூற.

இவங்களுக்கு போதைப் பழக்கம் இருக்குதா.

ஆமாம் சார்.

எத்தனை முறை டிவில ரேடியோல குடிகாதிங்கன்னு பிரசங்கம் பண்ணினாலும் யாரும் திருந்தறது கிடையாது.

கடைசியில இது மாதிரி வரும் பொழுது தான் தெரியும் செஞ்ச தப்பு .

அப்போ எல்லாமே கையை மீறி போய் இருக்கும்

ஏன் இப்படி சின்ன வயசுலயே போதைக்கு அடிமையாகி வாழ்க்கையை தொலைச்சிக்கிறீங்களோ.

சார் நீங்க என்ன சொல்றீங்க.

வித்யாவுக்கு ஸ்டொமக்ல கேன்சர் சார்.

என்ன வித்யாவுக்கு வயிற்று புற்று நோயா.

ஆமாம் சார்

அவங்களுக்கு இது லாஸ்ட் ஸ்டேஜ்.

மிஞ்சி மிஞ்சி போனால் அதிக பட்சம் ஒரு 8 மன்ந்த்

சார் எதும் பண்ண முடியாதா.

இனி சான்ஸ் குறைவு தான் சார்.

குடி ,போதை பழக்கத்தை நிப்பாட்னா
சரி ஆக சான்ஸ் இருக்குமா சார்.


கண்ணு கெட்டு போனத்துக்கு அப்பறம் சூரிய நமஸ்காரம் செய்து என்ன புண்ணியம் சார்.

இது அவங்க லாஸ்ட் ஸ்டேஜ் மேபி இதுக்கு முன்னால கூட்டிட்டு வந்து இருந்திங்கனா கூட ஏதாவது பாத்து பண்ணிக் இருக்கலாம்.


இல்லே டாக்டர் வித்யா இன்னைக்கு தான் ஃபர்ஸ்ட் டைம் வயிறு வலிக்குதுன்னு சொன்னா டாக்டர்.

இதுக்கு முன்னாடி அவ சொன்னதே இல்லே.

இல்லே சார். அவங்களுக்கு பயங்கரமான வயிறு வலி குமட்டல் அப்பறம் சம் டைம் பிளட் கூட வாமிட் பண்ணி இருப்பாங்க.

அவங்க உங்க கிட்ட சொல்லாம கூட இருந்து இருக்கலாம்.

ஓகே சார் பாத்துக்கோங்க

அவங்க கண் முளிட்சதும் கூட்டிட்டு போகலாம்.

என்றபடி மருத்துவர் அங்கிருந்து செல்ல

பிரதாப் மெல்ல அவசர சிகிச்சை பிரிவு அறைக்குள் சென்றான்.

வித்யா

ஹே பிரதாப் என்று குரல் எழுப்பக் கூட முடியாதவலாய் அழைத்தாள்.

பிரதாப் கண்கள் கலங்கி இருக்க.

என்ன பிரதாப் எல்லா உண்மையும் தெரிஜிருட்சா

😳

அப்போ இது உனக்கு முதவே தெரியுமா.

ம் தெரியும்.

அப்பறம் ஏன் சொல்லல.

சொல்லி மட்டும்.

இதோ பாரு பிரதாப் நான் ஒன்னும் நல்லவ கிடையாது.

செஞ்ச தப்புக்கு தண்டனை அவ்ளோ தான் புரியுதா.

இதுக்காக எல்லாம் நீ ஃபீல் பண்ணாத.

இந்த உலகத்துல ரொம்ப நாள் வாழ்ந்து என்ன பண்ண போறேன்.

போதுன்ற அளவு சந்தோசத்தை அனுபவிட்சிட்டேன்.

அதற்கு பலனா இப்போ இந்த வேதனையும் அனுபவிட்சிட்டு போறேன்.

நான் எல்லாம் வாழலன்னு யார் வருத்தப்பட போறா

வித்யா என்ன பேசற நீ.

பார்ரா

என்ன சென்டிமென்ட் சீன் ன்னா.

இதெல்லாம் எனக்கு பிடிக்காது பிரதாப் அது உனக்கே தெரியும்.

சரி வா போகலாம்

ஹாஸ்பிட்டல் bill க் கு எவ்ளோ கட்டின.

இந்தா பணம் எவ்ளோ பார்த்து கட்டிட்டு மீதி நீயே வட்சிக்கோ.

வித்யாவை ஆழப்பார்தான் பிரதாப்


என்ன பாக்குற.

நான் செத்துப் போறது யாருக்கு கஷ்டமோ இல்லையோ

உனக்கு தான் கண்டிப்பா நஷ்டம் பிரதாப்.

கேட்கிற நேரம் எல்லாம் பணம் கொடுக்க யாரும் இருக்க மாட்டாங்க என்னை போலே 😄😏.

என்று வாய் விட்டு சிரித்தாள் வித்யா.

கண்ணை துடைத்த பிரதாப் சரி வா உன்ன வீட்டுல இறக்கி விடறேன்.

என்று கை தாங்களாக தூக்க

வேண்டாம் வேண்டாம் எனக்கு ஒன்னும் இல்லே பிரதாப்

நானே வந்துக்கரேன்.

என்று முடியாத பொழுதிலும் தானாக கம்பீரமாக நடந்து வந்தாள்.

வித்யாவை பொருத்தவரை அவள் செய்த தவறுக்கு அவளே பொறுப்பு ஏற்றுக்கொள்வாள் .

யாரையும் குற்ற படுத்தமாட்டாள்

அதை நியாயப்படுத்தவும் மாட்டாள்.

தன் உயிரை கொள்ளும் எமன் இது தான் என்று தெரிந்தும் அதை விரும்பி ஏற்றால்.

என்ன செய்வது

அவள் தான் யார் சொன்னாலும் கேட்கும் ஆள் இல்லையே.

அப்போ அனுபவித்து தான் ஆகவேண்டும்.
🤷🏻‍♀️

நங்க இங்க வா மா

இதோ வரேன் சரண்யா அம்மா.

சொல்லுங்க மா.

அம்மாடி இந்த உருளை கிழங்கை பொரியலுக்கு நறுக்கு மா.

சரிங்க மா. கொடுங்க

நங்கை உருளையை நறுக்கி கொண்டு இருக்க

நான் ஒன்னு கேட்ட தப்பா நினைக்க மாட்டியே நங்க.

என்ன மா நீங்க

நான் ஏன் தப்பா நினைக்கப் போறேன்

எதுவாயிருந்தாலும் சொல்லுங்க மா.

இல்லம்மா கல்யாணமாகி இத்தனை நாள் ஆச்சு

மாறன் தம்பியும் நீங்களும் தாம்பத்ய வாழ்க்கையை ஆரம்பிச்சிட்டீங்களா ?

பார்த்தா அப்படி ஒன்னும் தெரியலையே மா.

அது அது வந்து.

ஏன்மா என்னாச்சு.

நான் உங்க அம்மா மாதிரி

எதுவா இருந்தாலும் தயங்காம சொல்லுமா.

அது வந்து இல்லம்மா.

ஏன்.

மௌனம்.....

அப்படியெல்லாம் இருக்கக் கூடாது நங்க.

அது அது அந்த அந்த காலத்துல நடந்தருனும் இப்படி தள்ளி போடுறது தப்பு நங்க

இனி மாறன் தான் உன்னோட புருஷன்.

அவருக்கு தகுந்த மாதிரி நீ நடந்துக்கணும் அதுதான் ஒரு பொண்ணோட கடமை.

இந்த குடும்பத்துக்கு சீக்கிரமா வாரிசு வரணும் மா..

அப்படி வந்துட்டா மாறன் தம்பியும் சிக்கிரம் குணம் ஆய்ருவாரு.


நீ இத பத்தி யோசி.

நான் ஜோசியர பார்த்து ஒரு நல்ல நாளாக குறிட்சிட்டு வந்துடறேன்.

கல்யாணம் தான் அவசர அவசரமா எந்த முறையும் செய்யாமல் நடந்து போச்சு

சாந்தி முகூர்த்தம் ஆச்சும் நம்ம முறைப்படி நடக்கட்டும்.

அது வந்து மா...

என்னம்மா நீ வந்து போய்ன்னு.

இத பெரியவங்க நாங்க தான் பார்த்து ஏற்ப்பாடு பண்ணி இருக்கணும்.


ஆனா நம்ம அப்போ சூழ்நிலை அப்படி இருந்தது அதனால எதுவும் செய்ய முடியாமல் போச்சு.

ஆனா இப்போதான் எல்லாம் சரியாயிடுச்சு இல்ல.

இனியும் இந்த விஷயத்தை தள்ளி போடுறது சரியில்லம்மா.

நீ மனசு அளவுல தயாராகணும் தான் முன்கூட்டியே இத உன்கிட்ட தெரியப்படுத்தினேன்.


ஐயோ இப்போ நான் என்ன பண்ணுவேன்.😳

தொடரும்...
Shahiabi. Writer ✍🏻
 

Author: shahiabi தனிமையின் காதலி
Article Title: Chapter -49
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.