தனது ஆபிஸில் இருந்து கிளம்பிய உதையா நேராக ஹாஸ்பிடலுக்கு சென்று ஆதவனை மட்டும் தனியாக அழைத்து விஷயத்தை சொன்னான்.
உடனே ஆதவன் சதீஷுக்கு கால் செய்து அவனை ஹாஸ்பிடலுக்கு வரச்சொல்ல,
அவனும் இத்தனை நாட்களாக தேன்மொழியை தேடிக் கொண்டு இருந்ததற்கு அவளைப் பற்றி ஒரு தகவல் கிடைத்திருப்பதால் அதை தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில் ஹாஸ்பிடலுக்கு வந்தான்.
தேன்மொழி அனுப்பிய வாய்ஸ் மெசேஜ் மற்றும் போட்டோக்களை சதீஷிடம் காட்டி,
“எப்படியாவது நம்ம அவளை அங்க இருந்து காப்பாத்தி கூட்டிட்டு வந்துடனும் ப்ரோ.
இதுக்கு மேல என்னால ஒரு செகண்ட் கூட அவ இல்லாம இருக்க முடியாது.
நீங்க எப்படியாவது அவள கண்டுபிடிக்க எனக்கு ஹெல்ப் பண்ணுங்க ப்ளீஸ்." என்று உதையா அழுது கொண்டே சொல்ல,
அவனுக்கு பதில் சொல்லாமல் அவள் அனுப்பிய வாய்ஸ் நோட்டையும், ஃபோட்டோக்களையும் உற்று கவனித்தான் இன்ஸ்பெக்டர் சதீஷ்.
அவன் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்த ஆதவன் சரியாக “உங்களுக்கும் அவளுக்கு கல்யாணம் ஆயிடுச்சுன்னு தோணுதா?” என்று தன் கண்ணீரை துடைத்து விட்டு கேட்க,
ஆமாம் என்று தலையாட்டிய சதீஷ் உதையாவிடம் அவனது மொபைல் ஃபோனை திரும்ப கொடுத்து,
“நான் ஏற்கனவே கெஸ் பண்ண மாதிரி, ஒரு விஷயம் மட்டும் கிளியரா தெரியுது.
தேன்மொழி இப்ப இந்தியாவுல இல்ல.
அண்ட் இரண்டாவது விஷயம், நம்ம எதிர்பாக்காத ஒரு நல்லது நடந்திருக்கு.
இங்க இருந்து அவளை எதுக்கு, யார் கடத்திட்டு போனாங்கன்னு தெரியல.
ஆனா அங்க அவள நல்லாதான் வச்சிருக்காங்க.
யாரோ ஒரு பெரிய வெளிநாட்டு பணக்காரன் அவள கல்யாணம் பண்ணி இருக்கணும்.
மேபி அவங்க தமிழ் ஃபேமிலியா இருக்கலாம்.
தேன்மொழிய அவ கூட இருக்கிற சின்ன பொண்ணு மம்மின்னு கூப்பிடுது.
அவளும் நல்லவிதமா அந்த பொண்ணு கூட பேசி இருக்கா.
இந்த ஃபோட்டோல கூட பாருங்க, நெஜமான அம்மா பொண்ணு மாதிரி அவங்க ரெண்டு பேரும் ரொம்ப க்ளோசா இருக்காங்க.
அவங்க ரெண்டு பேரோட முக ஜாடை கூட ஒத்துப் போகுது.
ஆல்ரெடி அவ வாய்ஸ் நோட்ல சொல்லிருக்க மாதிரி, யாரோ ஒரு பெரிய பணக்காரனுக்கு பொண்டாட்டியா அவ இந்த உலகத்தோட ஏதோ ஒரு மூலையில நல்லா தான் இருக்கா.
சோ இனிமே நம்ம அவள பத்தி யோசிக்கிறத விட்டுட்டு அவ சொன்ன மாதிரி வேற வேலைய பாக்குறது நல்லது.
இனிமே அவளை தேடி டைம் வேஸ்ட் பண்ணாதீங்க. நான் கிளம்புறேன்.” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து செல்ல முற்பட்டான்.
கண்ணீருடன் அவன் கையைப் பிடித்து தடுத்து நிறுத்திய உதையா “என்ன பேசிட்டு இருக்கீங்க சதீஷ்?
அவளை எப்படி நம்மளால அப்படியே விட முடியும்? தேன்மொழி இதுவரைக்கும் யாரையும் லவ் பண்ணதே இல்ல.
அவ எப்படி இவ்ளோ பெரிய பொண்ணு இருக்கிறவனை கல்யாணம் பண்ணி அவன் கூட சந்தோஷமா இருக்க முடியும்?
கண்டிப்பா அவனுங்க என் தேன்மொழியை டார்ச்சர் பண்ணிட்டு தான் இருப்பானுங்க.
நம்ம தான் எப்படியாவது அங்க போய் அவளை காப்பாத்தணும்.
ப்ளீஸ் நான் சொல்றத கேளுங்க.. எனக்கு என்னமோ இந்த மெசேஜ் எங்க இருந்து வந்துச்சுன்னு கண்டுபிடிச்சா,
அவளை ஈசியா கண்டுபிடிச்சிடலாம்னு தோணுது.
ப்ளீஸ் லாஸ்ட்டா எங்களுக்கு இந்த ஒரு ஹெல்ப் மட்டும் பண்ணுங்க!
உங்களுக்கு தேன்மொழிய பத்தி தெரியாது.
அவ எவ்ளோ கஷ்டப்பட்டாலும் மத்தவங்க நல்லா இருக்கணும்னு நினைப்பா.
நாங்க அவளை நினைச்சு வருத்தப்படக் கூடாதுன்னு தான் அவ பொய் சொல்லி இருக்கா.
நீங்க இதையெல்லாம் நம்பி அவளை தேடாம இருக்காதீங்க.” என்று கெஞ்சினான்.
அவன் தோள்களில் ஆறுதலாக கை வைத்த சதீஷ்,
“நான் போலீஸ்காரன் உதையா. எனக்கு அந்த பொண்ண பத்தி எதுவும் தெரியாம இருக்கலாம்.
ஆனா எது உண்மை, எது பொய்யின்னு எனக்கு நல்லா தெரியும்.
நான் இந்த மாதிரி நிறைய கேஸை பாத்திருக்கேன். எவனாவது ஆசைக்கு கடத்திட்டு போற பொண்ண இப்படி தாலி கட்டி பொண்டாட்டியா வச்சுகுவானா?
அந்த ஃபோட்டோவ நல்லா பாருங்க. அதுல அந்த பொண்ண பாத்தா ரொம்ப நாளா சாப்பிடாம கஷ்டத்துல இருந்து அடி, உதைன்னு வாங்கி ஏதாவது டார்ச்சரை அனுபவிச்ச மாதிரி உங்களுக்கு தெரியுதா?
அவளே நல்லா ஹேப்பியா நார்மலா தான் இருக்கா.
அந்த வீட்ல இருக்கிறவங்க மேபி ஏதோ ஒரு பொண்ணுங்கள சேல் பண்ற மார்க்கெட்ல அவள வாங்கி, அப்புறம் அவ கேரக்டர் புடிச்சு போய் அவங்க வீட்டு பையனுக்கு இரண்டாவதா கல்யாணம் பண்ணி வச்சிருக்கலாம்.
அவ ஹஸ்பண்டோட குழந்தைய தேன்மொழி நல்லபடியா பார்த்துக்கிறதுனால, அவங்க வீட்ல இருக்குறவங்க அவளை நல்லா ட்ரீட் பண்ணலாம்.
இதெல்லாம் நடக்குறதுக்கு நிறைய பாசிபிலிட்டிஸ் இருக்கு.
அண்ட் தேன்மொழியும், அவ கூட இருக்கிற பொண்ணும் எந்த இடத்துல ஒக்காந்து இருக்காங்கன்னு நல்லா பாருங்க முதல்ல...
அது காஸ்ட்லியான ப்ளே ஸ்டேஷன். தேன்மொழி நார்மலா இருக்கிறத பார்த்தா அவங்க ரெண்டு பேரும் எங்கயும் ரெடியாகி வெளிய போகல.
இது இந்தியால எல்லாம் கிடைக்காது. யாரோ வெளிநாட்டில இருக்கிற பரம்பரை பணக்காரன் வீட்ல லேட்டஸ்ட் வெர்ஷன் ப்ளே ஸ்டேஷன்ல உட்கார்ந்துட்டு ஜாலியா கேம் விளையாடிட்டு இருக்கும்போது அவ இந்த வாய்ஸ் மெசேஜை அனுப்பி இருக்கா.
அவ கழுத்துல இருக்கிற தாலி, அவ போட்டு இருக்கிற ஜுவல்லரிஸ் சிம்பிளா இருந்தாலும், அது எல்லாமே பிளாட்டினம்.
அவ போட்டிருக்க தோடுல இருந்து பிரேஸ்லெட் வரைக்கும் எல்லாத்துலையும் டைமண்ட்ஸ் இருக்கு.
அவ கூட இருக்கிற சின்ன பொண்ணு கைல ஒரு வாட்ச் கட்டி இருக்காளே.. அது மட்டுமே நம்ம ஊரு காசுக்கு பல கோடி போகும்.
இப்படி ஒரு குடும்பத்துல கல்யாணமாகி போனவள, நம்ம தேடி என்ன பண்ண போறோம்?
உங்களுக்கு இத ஏத்துக்கிறதுக்கு கஷ்டமா இருந்தாலும், இதுதான் உண்மை.
தேன்மொழி அங்க நல்லாதான் இருக்கா.
நீங்க ஒன் சைடா அவளை லவ் பண்றீங்கன்னு எனக்கு தெரியும்..
இனிமேலாவது உங்க lifeஐ பாருங்க.” என்று சொல்லிவிட்டு ஆதவனை திரும்பிப் பார்த்து,
“நீதான் இனிமே உங்க அம்மாவை பார்த்துக்கணும்.
அவங்க கொஞ்சம் நார்மலாகி டிஸ்டார்ஜ் பண்ணி வீட்டுக்கு கூட்டிட்டு போனதுக்கு அப்புறமா அவங்க கிட்ட தேன்மொழியை பத்தி சொல்லிரு.
நான் சொல்றது உங்களுக்கு புரியலைனாலும், அவ ஃபோட்டோவ பார்த்தா இப்ப அவ நல்லா இருக்காளா இல்லையான்னு உங்க அம்மாவுக்கு புரியும்.
பாத்துக்கோ.. நான் கிளம்புறேன்.” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பி சென்று விட்டான்.
அவன் சொன்ன அனைத்தையும் மனதில் வைத்து இப்போது தேன்மொழியின் புகைப்படத்தை பார்த்தான் உதையா.
இங்கே இருந்ததை விட அங்கே சென்ற பிறகு அவள் இன்னும் அழகாக இருப்பதைப் போல அவனுக்கு தோன்றியது.
அப்படி என்றால் சதீஷ் சொல்வது உண்மையாகத்தான் இருக்கும் என்று நினைத்த உதையாவிற்கு என்னதான் தேன்மொழி நன்றாக இருக்கிறாள் என்று ஒரு பக்கம் ஆறுதலாக இருந்தாலும்,
இன்னொரு பக்கம் அவளுக்கு திருமணமாகி வேறொரு வாழ்க்கையையே அவள் வாழ தொடங்கி விட்டாளா?
இனி தன்னால் அவளை தனது வாழ்நாளில் எப்போதும் பார்க்கவே முடியாதா? என்றெல்லாம் யோசித்து வருத்தப்பட தொடங்கினான்.
இரவு அர்ஜுனும், ஆகாஷும் வீட்டிற்கு வந்தவுடன் அனைவரும் ஒன்றாக அமர்ந்து டைனிங் டேபிளில் சாப்பிட தொடங்கினார்கள்.
அப்போது ஜானகி “அர்ஜுன் அடுத்த வாரம் உனக்கு பர்த்டே வருதுல்ல!
அன்னைக்கு நாள் ரொம்ப நல்லா இருக்குன்னு ஜோசியர் சொன்னாரு.
உங்களுக்கு கல்யாணமாகி மூணு மாசத்துக்கு மேல ஆகப்போகுது.
தேன்மொழிக்கு இன்னும் தாலி பிரிச்சு கோக்கல. சோ அன்னைக்கு உன் பர்த்டே செலிப்ரேஷனோட சேர்த்து,
தாலி பிரிச்சு கோக்குற ஃபங்ஷனையும் வச்சுக்கலாமா?
உங்களுக்கு கல்யாணம் ஆகும்போது நீ அவ கழுத்துல தாலி கட்ட முடியாம போயிடுச்சு.
அதனால இதை நம்ம இன்னொரு மேரேஜ் மாதிரி கூட வச்சுக்கலாம்.
நீ என்னப்பா சொல்ற.. உனக்கு ஓகேவா?
நான் எல்லாத்தையும் இப்போல இருந்து அரேஞ்ச் பண்ண ஸ்டார்ட் பண்ணிடட்டுமா?" என்று கேட்க,
தேன்மொழி எப்போதும் அவனிடம் “நமக்கு நடந்ததெல்லாம் முதல்ல கல்யாணமே இல்லை.
இதுல நான் எப்படி உங்களை ஏத்துக்கிட்டு உங்க கூட சேர்ந்து வாழ்வேன்னு நினைக்கிறீங்க?” என்று கேட்பது இப்போது அர்ஜுனுக்கு ஞாபகம் வர,
“ஓகே மாம், நானே இவளை again properஆ மேரேஜ் பண்ணிக்கலாம்னு நினைச்சேன்.
நீங்களே சொல்லிட்டீங்க! நீங்க எல்லாமே அரேஞ்ச் பண்ணிடுங்க.
அபிஷியலா எல்லாருக்கும் தேன்மொழி தான் என் வைஃப்ன்னு அனௌன்ஸ் பண்ண வேண்டிய டைம் வந்துருச்சு.”
என்று சொல்லிவிட்டு தேன்மொழியை பார்த்து லேசாக புன்னகைத்தான்.
சாப்பிட்டுக் கொண்டு இருந்த தேன்மொழி “இனிமே இவர் தான் எனக்கு ஹஸ்பண்ட்.
இதுதான் என் வீடு. இங்க எப்படி சந்தோஷமா வாழ்றதுன்னு இதுக்கு மேலயாவது நான் யோசிச்சு தான் ஆகணும்.
எல்லாருக்கும் ஒரே வாழ்க்கை தான். இதுக்கு மேலயும் இது ஏன் அப்படி இருக்கு இப்படி இருக்குன்னு கேள்வி கேட்டு என்னால அதை வேஸ்ட் பண்ண முடியாது.
இந்த விதி என் வாழ்க்கை அர்ஜுனோட தான்னு முடிவு பண்ணிடுச்சு.
இனிமே நான் அத ஏத்துக்காம தப்பிச்சு ஓட முடியாது.” என்று நினைத்த தேன்மொழி தானும் அவனைப் பார்த்து அழகாக புன்னகைத்தாள்.
தூரத்தில் இருந்து நடப்பதை பார்த்துக் கொண்டு இருந்த மகேஷுக்கு கோபம் பற்றி கொண்டு வந்தது.
இருப்பினும் தேன்மொழி நல்லபடியாக அர்ஜுனுடன் சேர்ந்து வாழ்ந்தால் அதுவே போதும்.
அவள் பட்ட கஷ்டத்திற்கு அவள் எப்போதும் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைத்து தன் மனதை தேற்றிக்கொண்டான்.
சில நிமிடங்களுக்கு பிறகு அனைவரும் சாப்பிட்டு முடித்துவிட்டு அவரவர் அறையை நோக்கி செல்ல,
ஜானகியிடம் ஏதோ பேச வேண்டும் என்று சொல்லி அவளை தனியாக அழைத்த நான்சி,
அர்ஜூனை பார்த்து “நான் உங்க கிட்டயும் தான் பேசணும்.
நீங்களும் எங்க கூட வாங்களேன் ப்ளீஸ்!” என்று மரியாதையுடன் சொன்னாள்.
ஏற்கனவே தூங்கும் நேரம் ஆகிவிட்டதால் கொஞ்ச நேரமாவது தேன்மொழியுடன் டைம் ஸ்பென்ட் பண்ணலாம் என்று நினைத்த அர்ஜுன்,
“நீ எதுவா இருந்தாலும் எங்க அம்மாகிட்டயே சொல்லு.
எனக்கு தேவைப்படுற விஷயமா இருந்தா அதை அப்புறமா அவங்க என்கிட்ட சொல்லுவாங்க.
நான் தூங்க போறேன் பாய்.” என்று சொல்லிவிட்டு சென்றான்.
அப்போதும் விடாமல் ஒரு நிமிஷம் என்று சொல்லி அவனை அழைத்த நான்சி,
“நான் அவங்க கிட்ட பேச போறதே உங்கள பத்தி தான் மிஸ்டர் அர்ஜுன்.
அப்புறம் நீங்க இல்லாம நான் எப்படி பேசுறது?” என்று பயந்த குரலில் கேட்டாள்.
அர்ஜுன் கோமாவில் இருக்கும்போது அவனை கவனித்துக் கொண்டதில் பெரும் பங்கு அவளுக்கும் இருக்கிறது என்பதால்,
அவன் உடல் நலத்தைப் பற்றி இவள் ஏதோ சொல்ல போகிறாள் என்று நினைத்த ஜானகி,
“அதான் அந்த பொண்ணு அவ்ளோ தூரம் சொல்றால்ல!
அப்புறம் ஒரு பத்து நிமிஷம் இருந்து கேட்டுட்டு போனா தான் உனக்கு என்ன?
நீ நார்மல் ஆயிட்டதனால மெடிக்கல் டீம்ல இருக்கிறவங்க எல்லாத்தையும் நான் கிளம்ப சொல்லிட்டேன்.
அதான் அந்த பொண்ணு லாஸ்ட்டா உன் ஹெல்த்த பத்தி ஏதோ சொல்லிட்டு கிளம்பலாம்னு நினைக்கிறா போல.
எவ்ளோ நேரம் ஆகிட போகுது நீ வா.”
என்று சொல்லி அர்ஜுனை அழைத்துக் கொண்டு நான்சியுடன் தனது அறைக்கு சென்றாள்.
- மீண்டும் வருவாள் ❤️

Author: thenaruvitamilnovels
Article Title: Chapter-47
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.