Chapter-46

thenaruvitamilnovels

The World of Words
Staff member
Dec 25, 2024
163
0
16
www.amazon.com
தேன்மொழியிடம் பேசிவிட்டு ஆருத்ரா நேராக கீழே சென்று ஜானகியிடம் “பாட்டி எனக்கு உங்க ஃபோன் வேணும் குடுங்க.

நான் கேம் விளையாடிட்டு குடுக்கிறேன்.” என்று சொல்ல,

“கேம் விளையாடுறதுக்கு உனக்கு எதுக்கு ஃபோன்?

அதான் மாடில ப்ளே ஸ்டேஷன் இருக்குல்ல... அங்க போய் உங்க அண்ணா கூட கேம் விளையாடு.

என் ஃபோன் எல்லாம் தர முடியாது.” என்று சொல்லி விட்டாள் ஜானகி.

அப்போதும் ஆருத்ரா விடாமல் “ப்ளீஸ் பாட்டி ப்ளீஸ்.. கொஞ்ச நேரம் குடுங்களேன்..!!

ஜஸ்ட் 30 மினிட்ஸ்.. உடனே கொண்டு வந்து குடுத்துடறேன்.” என்று கேட்டு எவ்வளவோ அழுது அடம்பிடித்தாலும் கூட,

“நீ எப்படி கேட்டாலும் நான் உனக்கு ஃபோன் தர மாட்டேன் ஆரு.

உங்க அப்பா உங்க கிட்ட மொபைல் ஃபோனை குடுத்து உங்கள கெடுக்க கூடாதுன்னு என்கிட்ட ஸ்ட்ரிக்ட்டா சொல்லி இருக்காரு.

உனக்கு கேம் விளையாட ஃபோன் வேணும்னா, உங்க அப்பா வந்ததுக்கு அப்புறம் நீயே கேளு.

அவர் குடுத்தா நீ வாங்கிக்கோ." என்று பிடிவாதமாக சொல்லி விட்டாள் ஜானகி.

அதனால் வேறு வழியில்லாமல் அழுது கொண்டே ஜனனியை காண அவளது அறைக்கு ஓடினாள் ஆருத்ரா.

அங்கே தன் குழந்தைகள் இருவரையும் போராடி தூங்க வைத்துக் கொண்டு இருந்த ஜனனியிடம் அவள்,

“அத்தை எனக்கு கேம் விளையாட உங்க ஃபோன் வேணும் குடுங்க!

ப்ளீஸ்.. நீங்களும் பாட்டி மாதிரி நோ சொல்லிடாதீங்க.

அப்புறம் எதுவுமே சாப்பிடாம டாடி வர்ற வரைக்கும் நான் அழுதுட்டே இருப்பேன்.

அப்புறம் எனக்கு அழுது அழுது காய்ச்சல் வந்தா அதுக்கு நீங்க தான் ரீசன் பாத்துக்கோங்க!”

என்று சொல்லிவிட்டு அவள் அருகில் தன் முகத்தை மூடிக் கொண்டு ஹைபிச்சில் கதறி கதறி அழுதாள்.

அதனால் தூங்கிக் கொண்டிருந்த அவளது இரண்டு குழந்தைகளும் சேர்ந்து போட்டிப் போட்டு ‌ஆருத்ராவுடன் அழ தொடங்கி விட,

இவர்கள் மூவரும் மாறி மாறி அழும் சத்தம் அந்த அறை முழுவதும் எதிரொலித்தது.

அவர்களில் யாரை முதலில் சமாளிப்பது என்று தெரியாமல் குழம்பி தவித்த ஜனனி,

“அடியேய்.. நீயும் ஏண்டி இப்படி பண்ற? இங்க பாரு உன்னால இவங்க ரெண்டு பேரும் சேர்ந்து அழுகிறாங்க.

அவங்க தான் குழந்தைங்க அவங்களுக்கு எதுவும் தெரியாது..

நீ ஏன் இந்த சின்ன விஷயத்துக்கு இப்படி அடம் பிடிச்சு அழுகிற?

நீ கேட்டு அழுகிறன்னு நான் உனக்கு ஃபோன் குடுத்தா, அப்புறம் அண்ணா வந்து என்னை திட்டுவாரு.

என்னால அவர்கிட்ட எல்லாம் இந்த வயசுல திட்டு வாங்க முடியாது ஆருத்ரா.

நீ உங்க டாடி வந்தவுடனே பர்மிஷன் கேளு. அவர் ஓகே சொன்னா நான் குடுக்கிறேன்.”

என்று சொல்லி ஆருத்ராவிடம் எவ்வளவோ கெஞ்சிப் பார்த்தாள்.‌

ஆனால் அவள் சமாதானப்படுத்த என்னென்னவோ சொல்லிப் பார்த்தாலும் அதை எல்லாம் கேட்காமல்,

“எனக்கு இப்ப ஃபோன் வேணும். நீங்க குடுப்பீங்களா மாட்டீங்களா?

நான் கேம் விளையாடிட்டு 10 மினிட்ஸ்ல கொண்டு வந்து குடுத்துடறேன் பிராமிஸ்!

ப்ளீஸ் குடுங்களேன்..

நீங்க எனக்கு ஃபோன் குடுத்தீங்கன்னு நான் யார்கிட்டயும் சொல்லவே மாட்டேன் அத்தை ப்ளீஸ்..!!”

என்று சொல்லி தொடர்ந்து ஆருத்ரா அவளிடம் அழுது அடம் பிடித்துக் கொண்டே இருந்ததால்,

ஏற்கனவே தனது இரு குழந்தைகளும் மாறி மாறி அழுவதை சகிக்க முடியாமல் அமர்ந்திருந்த ஜனனி,

இப்போது ஆருத்ரா வேறு அழுவதால் “முதல்ல இவள இந்த ரூம்ல இருந்து அனுப்பி வைக்கணும்.” என்று நினைத்து தன் மொபைல் ஃபோனை அவளிடம் கொடுத்து,

“இந்தா.. பத்திரமா எடுத்துட்டு போய் யாருக்கும் தெரியாம விளையாடு.

நான் தான் உனக்கு ஃபோன் குடுத்தேன்னு யார் கிட்டயும் என்னை மாட்டி விடக்கூடாது ஓகேவா?”

என்ற ஜனனி தனது மொபைல் ஃபோனை அன்லாக் செய்து அவளிடம் கொடுத்து அனுப்பினாள்.

அதை வாங்கிக் கொண்டு தேன்மொழியிடம் ஓடிச்சென்று கொடுத்த ஆருத்ரா,

“இந்தாங்க.. இதுல சீக்கிரம் அந்த கேமை டவுன்லோட் பண்ணுங்க மம்மி.

நான் வெளிய போய் யாராவது வராங்களானு பார்க்கிறேன்.

ஜனனி அத்தை அவங்க எனக்கு ஃபோன் குடுத்ததை யார் கிட்டயும் சொல்ல கூடாதுன்னு சொன்னாங்க.

யாருக்கும் தெரியாம விளையாட சொன்னாங்க‌‌. நீங்களும் சொல்லிடாதீங்க.”

என்று சொல்லிவிட்டு குடுகுடுவென்று ஓடிச்சென்று அந்த அறையின் வாசலில் நின்று கொண்டாள்.

“என்ன டா இது.. நம்ம ஏதாவது சொல்லி இவள நைசா வெளிய அனுப்பலாம்னு பார்த்தா..

இவளே தானா வெளிய போய் நின்னுக்கிட்டா..

என் லைஃப்ல for the first time, இன்னைக்கு தான் எனக்கு கடவுள் ஹெல்ப் பண்றாரு போல..!!” என்று நினைத்த தேன்மொழி ஜனனியின் மொபைல் ஃபோனில் ப்ரவுசர் எங்கே இருக்கிறது என்று தேடினாள்.

அது வேற கண்டறியை சேர்ந்த மொபைல் ஃபோன் என்பதால் அதை எப்படி பயன்படுத்துவது என்று உடனே அவளால் கண்டுபிடிக்க முடியவில்லை.

இருப்பினும் அவள் கண்களில் facebook தென்பட, “அதான் இந்த வேர்ல்ட் ஃபுல்லா எல்லாரும் facebook யூஸ் பண்றாங்களே...

இது போதும் நமக்கு.” என்று நினைத்தவள் அதற்குள் சென்று login to another account optionஐ பயன்படுத்தி தனது ஐடியை லாகின் செய்தாள்.

அவள் தன் தம்பியின் பிறந்த நாளையும், தனது பிறந்தநாளையும் சேர்த்து போட்டு எளிமையாக ஒரு பாஸ்வேர்ட் வைத்திருந்தாள்.

அதனால் அதை பயன்படுத்தி உடனே லாகின் செய்ய அவளுக்கு சுலபமாக இருந்தது.

தனது facebook அக்கௌன்ட் லாகின் ஆனவுடன் அதில் தனக்கு வந்து குவிந்த ஏராளமான மெசேஜ்களை ‌ ஓரங்கட்டிய தேன்மொழி,

“இப்ப நம்ம யாருக்கு மெசேஜ் பண்றது? உதையாவுக்கு மெசேஜ் பண்ணலாமா?

இல்ல ஆதவனுக்கு மெசேஜ் பண்ணலாமா?” என்று ஒரு நொடி யோசித்துக் குழம்பினாள்.

ஆனால் அதற்கெல்லாம் இப்போது நேரம் இல்லை என்று உணர்ந்து தனது இன்பாக்ஸை ஓப்பன் செய்து பார்த்தாள்.

லாஸ்ட்டாக அவள் காணாமல் போன தேதி அன்று மாலை உதையா அவளுக்கு குட் ஈவினிங் என்று அனுப்பி இருந்த மெசேஜ் முன்னே வந்து நின்றது.

அதை பார்த்தவுடன் என்னவோ அவனையே நேரில் பார்த்ததை போல அவளுக்கு அப்படி ஒரு சந்தோஷம்.

அதனால் உடனே அதை ஓப்பன் செய்து அவளுக்கு எதையும் டைப் செய்ய நேரமில்லை என்பதால் மெல்லிய குரலில்,

“ஹே உதையா நான் தான் தேன்மொழி..

வேற ஒருத்தரோட மொபைல் ஃபோனை அவங்களுக்கே தெரியாம எடுத்து என்னோட facebook அக்கவுண்ட்டை லாகின் பண்ணி இப்ப நான் உனக்கு வாய்ஸ் மெசேஜ் பண்றேன்.

அங்க அம்மாவும் ஆதவனும் என்ன நெனச்சு எவ்ளோ கஷ்டப்பட்டுட்டு இருப்பாங்கன்னு எனக்கு தெரியும்.

பட் அவங்க கிட்ட நான் நல்லா இருக்கேன்னு நீ சொல்லிடு.

நீங்க என்ன தேடி டைம் வேஸ்ட் பண்ணிட்டு இருக்காதீங்க.

நீங்க எவ்ளோ தேடினாலும், உங்களால என்னை கண்டுபிடிக்க முடியாது.

அண்ட் நீங்க நினைக்கிற அளவுக்கு எல்லாம் நான் இங்க கஷ்டப்பட்டுட்டு இருக்கல.‌

அம்மா மேல சத்தியமா நான் இங்க நல்லா தான் இருக்கேன்.

இங்க இருக்கிறவங்க என்ன நல்லா பாத்துக்கிறாங்க.

ஆனா என்ன ஆனாலும் என்னை திருப்பி மட்டும் அனுப்ப மாட்டாங்க.

இந்த வாழ்க்கையை இங்க இருந்து நான் வாழப் பழகிக்கிட்டேன்.

இங்க எனக்கு வேற எந்த பிரச்சனையும் இல்ல.

சோ என்ன பத்தி யோசிச்சு வருத்தப்படாம, ஆதியை அம்மாவ நல்லா பாத்துக்க சொல்லு.”

‌ என்று தேன்மொழி வாய்ஸ் மெசேஜில் பேசிக் கொண்டிருந்தாள்.

அப்போது குடுகுடுவென்று உள்ளே ஓடி வந்த ஆருத்ரா ‌“என்ன மம்மி கேம் டவுன்லோட் பண்ணிட்டீங்களா?" என்று ஆவலுடன் கேட்க,

“இல்ல டியர்... இங்க நெட் கனெக்சன் ஸ்லோவா இருக்கு.

லோட் ஆகிட்டு இருக்கு. நீ வெளியே போய் யாராவது வராங்களான்னு பாரு.

மம்மி டவுன்லோட் ஆனதும் உன்ன கூப்பிடுறேன்.

யாராவது வர்ற மாதிரி இருந்தா என்கிட்ட சொல்லு." என்று தேன்மொழி அன்புடன் சொல்ல,

“ஓகே மம்மி” என்ற ஆருத்ரா மீண்டும் ஓடி சென்று வாசலில் நின்று யாரேனும் வருகிறார்களா என்று சுற்றி முற்றி பார்க்க தொடங்கினாள்.

அதனால் நிம்மதி பெருமூச்சு விட்ட தேன்மொழி கட் செய்யாமல் அவள் வைத்திருந்த வாய்ஸ் ரெக்கார்டிங்கில் மீண்டும்,

“என்னால உங்கள மறுபடியும் காண்டாக்ட் பண்ண முடியாம கூட போகலாம்.

இப்ப ரொம்ப தெளிவா என்னால எல்லாத்தையும் உங்ககிட்ட பேசி சொல்லவும் முடியாது.‌

நீங்க என்ன பண்ணாலும் நான் உங்களுக்கு கிடைக்க மாட்டேன்.

நான் இங்க நல்லா தான் இருக்கேன். நீங்க நல்லா இருந்தா எனக்கு அது போதும்.

நீங்க எங்கயோ தூரத்துல நல்லா இருக்கீங்கன்னு நெனச்சு நான் நிம்மதியா வாழ்ந்துருவேன்.

அத சொல்றதுக்கு தான் மெசேஜ் பண்ணேன்.

நீ எனக்கு ரிப்ளை பண்ணா கூட என்னால பார்க்க முடியாது.

நான் எல்லாரையும் கேட்டதா சொல்லு.

நான் உங்களை யாரையும் மறக்க மாட்டேன்.

ஆனா தேன்மொழின்னு ஒருத்தி உங்க லைஃப்ல இருந்தத மறந்துட்டு,

அவ எங்கயோ நல்லா இருக்கான்னு நினைச்சுகிட்டு நீங்களும் சந்தோஷமா வாழுற வழிய பாருங்க. பாய்! ‍

I miss you all, and I love you guys.

டேய் ஆதவா..‌ அம்மாவ பத்தி யோசிக்கும்போது எல்லாம் நீ அங்க இருக்கிற தைரியத்துல தான் நான் நிம்மதியா இருக்கேன்.

அம்மாவ நல்லா பாத்துக்கோ.” என்று சொல்லி உடனே அந்த வாய்ஸ் மெசேஜை அனுப்பினாள்.

அப்போது அவள் மனதிற்குள் “நான் என்னதான் நல்லா இருக்கேன்னு சொல்லி வாய்ஸ் மெசேஜ் அனுப்பினாலும் கூட, அவங்க அதை நம்புவாங்களான்னு தெரியலையே..

பேசாம ஒரு ஃபோட்டோ எடுத்து அனுப்பிடுவோம்.” என்று நினைத்த தேன்மொழி,

என்னதான் அவள் தனியாக செல்ஃபி எடுத்து அனுப்பிவிட்டு பிறகு அதை டெலிட் செய்தாலும் கூட,

எப்போதாவது ஜனனி டெலிட் செய்த போட்டோக்களை மீண்டும் ரெக்கவர் செய்தால் தேவையில்லாத பிரச்சினைகள் வரும் என்று நினைத்து உஷாராக ஆருத்ராவை அழைத்து,

“நான் செல்ஃபி எடுத்து ரொம்ப நாள் ஆயிடுச்சு.

வா நீயும் நானும் சேர்ந்து ஃபோட்டோ எடுத்துக்கலாம்.” என்று சொல்லி இரண்டு மூன்று போட்டோக்களை அவளுடன் சேர்ந்து எடுத்துக் கொண்டாள்.

இதில் அவள் ஆருத்ராவுடன் இருப்பதால் மற்றவர்கள் பார்த்தாலும் ஃபோட்டோ எடுத்தது ஆருத்ரா தான் ‌ என்பதால் எந்த பிரச்சனையும் வராது என்று நினைத்து அதை வேகமாக ‌ உதையாவிற்கு facebook-ல் அனுப்பினாள்.

பின் எதற்கும் இருக்கட்டுமே என்று நினைத்து இன்டர்நெல் ஸ்டோரேஜில் இருந்து அதை டெலிட் செய்துவிட்டு,

அவள் பேஸ்புக்கை பயன்படுத்திய தடையைமே தெரியக்கூடாது என்பதற்காக தனது ஐடியை அவளது மொபைல் ஃபோனில் இருந்து logout செய்து டெலிட் செய்து விட்டாள்.

பின் ஆருத்ராவிற்காக அவள் கேட்ட ஆங்கிரி பேர்ட் கேமை இன்ஸ்டால் செய்து அவளுடன் சேர்ந்து சிறிது நேரம் அதை விளையாடினாள்.‌

இப்போது அவள் நினைத்த அனைத்தையும் செய்து முடித்து விட்டதால் அவள் மனதிற்குள் அப்படி ஒரு நிம்மதி பரவியது.

‌ தன் ஆபீஸில் அமர்ந்து முமரமாக சிஸ்டமில் வேலை செய்து கொண்டிருந்த உதையா தன் மொபைல் ஃபோனிற்க்கு ஏதோ மெசேஜ் வந்திருப்பதற்கான நோட்டிபிகேஷனை கவனித்தான்.

அவன் தேன்மொழியிடம் இருந்து மெசேஜ் வந்தால் தெரிய வேண்டும் என்பதற்காகத்தான் அதை ஆஃப் செய்யாமல் வைத்திருந்தான்.

ஆனால் இப்போது அவளே எங்கே இருக்கிறாள் என்று அவனுக்கு தெரியவில்லை.

இந்நிலையில் அதை ஆன் செய்து வைத்து இந்த நோட்டிபிகேஷன்களின் தொல்லைகளை ஏன் அனுபவிக்க வேண்டும்?

என்று நினைத்து அவன் சலிப்புடன் தனது மொபைல் ஃபோனை எடுத்து நோட்டிபிகேஷனை ஆஃப் செய்வதற்காக வந்திருக்கும் மெசேஜை அழுத்தி ஹோல்டு செய்தான்.

அப்போது அவன் கண்கள் அணிச்சையாக மெசேஜ் வந்திருந்த honey bee என்ற ஐடி நேமை பார்த்தது.

அதை பார்த்தவுடன் அவனால் அவன் கண்களை நம்பவே முடியவில்லை.

உடனே பதட்டமாக தனது facebook அப்ளிகேஷனை ஓப்பன் செய்து ‌ நிஜமாகவே அவனுக்கு தேன்மொழியிடம் இருந்து ஏதேனும் மெசேஜ் வந்திருக்கிறதா என்று பார்த்தான்.

அவனது இதயம் படபடவென்று வேகமாக துடிக்க, அவனது நினைப்பை ஏமாற்றாமல் தேன்மொழியிடம் இருந்து அவனுக்கு மெசேஜ் வந்திருந்தது.

அதை பார்த்தவுடன் அவனுக்கு கையும் ஓடவில்லை. காலும் ஓடவில்லை. உடனே அதை ஓப்பன் செய்து அவள் அனுப்பிய வாய்ஸ் மெசேஜை கேட்டான்.

அவளது புகைப்படங்களையும் பார்த்தான். உடனே அவனு
க்கு கத்தி அழ வேண்டும் போல இருந்தது.

அதனால் யாரிடமும் எதுவும் சொல்லாமல் அப்படியே தன் பைக் சாவியை மட்டும் எடுத்துக் கொண்டு தேன்மொழியின் குடும்பத்தினரிடம் விஷயத்தை சொல்வதற்காக பைக்கில் வேகமாக சென்றான் உதையா.

- மீண்டும் வருவாள் 💕
 

Author: thenaruvitamilnovels
Article Title: Chapter-46
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.