தொடர்ச்சி 👉🏻

வா சத்யா நம்ம போய் தேடலாம்
நங்க எங்க போவாங்கன்னு உனக்கு தெரியுமா.

அவங்க வேற எங்கேயும் போக மாட்டாங்க ஷியாம்.

சரி சத்யா நீ ஒன்னும் கவலைப்படாத நம்ம போய் தேடிப் பார்க்கலாம்

ப்ளீஸ் அழுகாத என்றபடி ஷ்யாம்மும் சத்யாவும் காரை எடுத்துக் கொண்டு நங்கையை தேட கிளம்பினர்.

அவர்கள் சென்றதும் மாறன் கார் எடுத்தவன் வேறு எங்கேயும் தேடவில்லை நேரே அவள் வழக்கமாக செல்லும் அதே தோட்டத்திற்கு சென்றடைந்தான்.

சுற்றி முற்றி பார்த்தவன் மலர்வணத்தின் நடுவில் அன்றவிழ்ந்த மலர் போல

தன் கால் முட்டியை மடித்து தலை வைத்தபடி அழுது கொண்டிருந்த தன்னவளை கண்டு நிம்மதி அடைந்தான் மாறன்.

நங்க

என்ற மாறனின் அழைப்பில் நிமிர்ந்தவள்.

மாறன் சார் வந்துட்டீங்களா என்றபடி அவனை நோக்கி ஓடி வந்தவளை

அங்கே நில்லு நங்கை.

🥺

இங்க எதுக்கு வந்த

அங்க எல்லாரும் நீ காணாமல் போய்ட்டன்னு பதறிப்போய் தேடிட்டு இருக்காங்க நீ என்ன நா இங்க வந்து எனக்கெண்ணன்னு இருக்க.

நீ சத்யா வீட்டுக்கு போயிடு நங்க.

நான் அங்க போக மாட்டேன் மாறன் சார்.

ஏன்

ஏன்னா ?

நான் உங்க பொண்டாட்டி.

என்று அவன் கட்டிய தாலியை அவன் முன்னே நீட்டினாள்.

இது நீங்க கட்டின தாலி இது இருக்கற வர

ஒன்னு நான் உங்க கூட உங்க வீட்ல வாழனும் இல்லனா இப்படியே இருந்து சாகணும்.

சும்மா லூசு மாதிரி பேசாத நங்க

நான் உங்க கூட வாழனும் மாறன் சார்.

என்றவள் மாறனை அணைத்துக் கட்டிக்கொண்டாள்.🫂

தன்னிலிருந்து நங்கையை பிரித்தவன்

என்ன நங்க சொல்ற


ஆமாம் மாறன் சார் நான் முடிவு பண்ணிட்டேன் இனி நீங்கதான் என் வாழ்க்கை

வாழ்ந்தால் உங்க கூட மட்டும் தான் வாழ்வேன்.

என்ன உங்களுக்கு பிடிச்சி இருந்தா இங்க இருந்து என்ன உங்க பொண்டாட்டியா கூட்டிட்டு போங்க இல்லேன்னா என்ன இப்படியே விட்டுடுங்க.

செத்துப்போறேன்.

ஏன் மா என்ன புறிஜிக்க மாற்ற

நங்க நான் ஒரு என்றவன் அடுத்த வார்த்தை சொல்ல விடாமல்

அவன் இதழ்களில் ஒற்றை ஆள்காட்டி விரலை வைத்தவள்

ஸ்சூ......🤫

அவன் கண்களைப் பார்த்து எதுவும் பேசாதீங்க

நீங்க எனக்கு வேணும்.

எப்படி இருந்தாலும் நீங்க எனக்கு வேணும் மாறன் சார்

நான் உங்கள உண்மையாவே நேசிக்கிறேன் என்றவள் கண்களில் காதல் கதை படித்தாள்.

நங்க நீ உண்மையா தான் சொல்றியா.

என்ன உனக்கு நிஜமாவே பிடிச்சி இருக்கா.

இல்ல என் கதை தெரிஞ்ச பின்னால என் மேல உனக்கு வந்த அனுதாபமா?

என்று மாறன் கூறிய அடுத்த நொடி பெண்ணவள் தன் காலை சற்று எக்கி மாறன் இதழில் தன் இதழை💋 பதித்தால்.

மெல்ல தன் கண்களை மூடி அவளின் முத்தத்தில் கரைந்த மாறன்

தன்னவளின் அன்பை புரிந்துக் கொண்டான்.

நங்கையின் கொடியிடையை பிடித்து தன் உடலோடு சேர்த்து வளைத்தனைத்து கொள்ள நங்கையும் அதற்கு உடன் பட்டாள்.

முழுவதுமாக முத்தத்தில் இருவரும் கரைய ஒருவருக்கொருவர் இதழின் 💋 வழியே தன் காதலை தேடிக்கொண்டு இருந்தனர் 💕

அந்த மலர்வனத்தின் பூக்களின் சுகந்தமும், அந்திநேர வாடைக்காற்றும் இருவர்க்கும் தாபத்தை ஏற்படுத்த இடைவிடாத முத்த யுத்தத்தில் திளைத்து நிகழ் உலகம் மறந்தனர்.

வானில் தனிமையில் காய்ந்து கொண்டு இருக்கும் வெண்ணிலவும் , கூடு கொண்ட பறவை என இவர்களின் காதலை பார்த்து அனைத்தும் ஏக்கம் கொண்டது.

தன் அன்பை இருவரும் ஆத்மார்த்தமாக பகிர்ந்து கொள்ள

சில நிமிடங்களுக்கு முத்தம் தொடர்ந்தது.


முத்தத்தின் வேகத்தில் மூச்சு திணற மெல்ல தன் இதழை தன்னவன்னின் 💋 இதழில் இருந்து பிரித்தாள் நங்கை.

மாறனை விட்டு விலகியவளின் நிலை அறிந்து

மெல்ல அவன் பிடியை அவளிடம் இருந்து தளர்த்தி இலகுவாகினான் மாறன்.

தலையை குனிந்த படி வெக்கத்தில் நங்கையின் வெண் தாமரை கன்னங்கள் செந்தாமறையாக சிவக்க

ஐ .....ஐ ....தரைப்பார்த்து

என்னனு சொல்லு நங்க என்று ஆவலாய் கேட்க.

ஐ லவ் யூ மாறன் சார் என்று கூறி தன் கைகளால் அவள் முகத்தை மூடிக்கொண்டாள்.

அவள் வெக்கம் என்னவோ அத்துணை அழகு.

மாறன் இந்த தருணத்தை தன் நினைவுகளின் பக்கத்தில் பதித்து கொண்டான்.

மாறன் இத்தனை நாள் காத்துக்கொண்டிருந்த தருணம் இதுவே.

அவன் சந்தோஷத்திற்கு அளவே இல்லை.

ஆனால் அந்த சந்தோஷத்தையும் மீறின பயம் அவன் மனதில் இருக்கத்தான் செய்தது.

தேங்க்ஸ் நங்க

ரொம்ப தேங்க்ஸ்

என்று அவள் கையை பற்றி தன் தலையை அவள் கையில் வைத்து கண்கள் கலங்க கூறிய மாறனை.

வியக்க பார்த்தாள் நங்கை.

பயம்மா இருக்கு நங்கை...

என்றவனை அங்கு ஒரு திண்டின் மேல் அமர்த்தி

தன் மடியில் கிடத்திக் கொண்டாள்.

மாறன் தலையை நங்கையின்

கைகளால் கொதிக்கொண்டே...

மென்மையான குரலில்

ஏன் மாறன் சார்?

எதுக்கு பயம்.

உன்ன காயப்படுத்திருவேன்னோ

என்னையும் மீறி 🥺

மெல்லிய புன்னகை பூத்தாள் நங்கை.

உன்ன என் அம்மா ஸ்தானத்துள்ள வச்சி இருக்கேன் உனக்கு எதும் ஆட்சினா என்னால தாங்க முடியாது மா.

நீ என்னை விட்டு போயிடு நங்க என்று மடியில் புதைந்து அழுக.

அவன் தலை வருடி கன்னத்தை பற்றி நிமிர்த்தியவள்

இதோ பாருங்க மாறன் சார்
இப்போ தானே சொன்னீங்க என்ன உங்க அம்மா ஸ்தானத்துல வச்சு இருக்கேன்ன்னு அப்போ உங்க

அம்மா உயிரோட இருந்திருந்தால் இந்த நிலைமைல உங்கள விட்டுட்டு போய் இருப்பாங்களா?

இல்லை என்று தலை ஆட்டினான் மாறன்.

அப்பறம் நான் மட்டும் எப்படி போவேன்.

ஆனா என்னால உனக்கு

ஐயோ மாறன் சார்.

உங்களால எனக்கு எந்த பிரட்சனையும் ஆபத்தும் வராது.

அப்படியே வந்தாலும் உங்க கையால சாகுறத கூட நான் சந்தோஷமா ஏத்துப்பேன்.

என்ற நங்கை மாறனின் வேதனைக்கு நெற்றி முத்தத்தை மருந்தாக்கினாள்.

அம்முத்தம் தன் அன்னையை நினைவுக்கு கொண்டு வந்தது மாறனுக்கு.

அப்படியே கண்கள் மூடி கரைந்தான் .

மாறனின் கண்கள் அவனையும் அறியாமல் விழி நீரை வடிக்க.

நங்கை அவன் விழி நீரை துடைத்த படி.

நெஞ்சோடு கலந்திடு.. உறவாலே
காலங்கள் மறந்திடு.. அன்பே

நிலவோ..டு தென்றலும்.. வரும் வேளை

கா..யங்கள் மறந்திடு.. அன்பே

ஒரு பார்வை.. பார்த்து நான் நின்றால்

சிறு பூவாக நீ மலர்வா..யே.

ஒரு வார்த்தை இங்கு நான் சொன்னால்

வலி போகும் என் அன்பே அன்பே...

மாறனை எழுப்பியவள் மாறன் கையை பிடித்து தன் தோழில் போட்டுக்கொண்டு

🎵🎵🎵

கண்ணாடி என்றும் உடைந்தாலும் கூட
பிம்பங்கள் காட்டும் பா..ர்க்கின்றே..ன்


புயல் போன பின்னும் புது பூக்கள் பூக்கும்🌻
இளவேனில் வரை நான் இரு..க்கின்றேன்

முகமூ..டி அணிகின்ற உலகிது..

உன் முகம் என்று ஒன்றிங்கு என்னது

நதி நீ..ரிலே அட விழுந்தா..லுமே

அந்த நிலவென்றும் 🌕 நனையா..தே வா நண்பா..

மாறன் அவளிடம் இருந்து சற்று விலகி கண்களை துடைத்தபடி

காலங்கள் ஓடும் இது கதையாகிப் போகும்

என் கண்.ணீர். துளியின் ஈ..ரம் வாழும்

அவள் மடியில் படுத்துக்கொண்டு

தாயாக நீதான். தலை கோத வந்தா.லும்

ம.டி.மீது மீண்டும் ஜன.னம் வேண்டும்

நங்கையின் முகம் பார்த்து

என் வாழ்க்கை நீ இங்கு தந்த.து..
அடி உன் நாட்கள் நான் இங்கு வாழ்வ..து..

காதல் இல்லை..

இது காமம் இல்லை..

இந்த உறவுக்கு. உலகத்தில்

பெயரில்.லை..

🎵🎵🎵

இருவரும் ஒருவருக்கு ஒருவர் கைகளை பற்றி பிடித்து நடந்து காரின் அருகே வந்தனர்.

தொடரும்...
Shahiabi. Writer ✍🏻
 

Author: shahiabi தனிமையின் காதலி
Article Title: Chapter -46
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.