CHAPTER-45

Oviya Blessy

Member
Jan 4, 2025
45
0
6
ச‌ந்ரா : ந‌ம‌க்கு க‌ல்யாணோ ஆகும்போது நா உன்ன‌ வெறுத்திட்டிருந்த‌து உண்ம‌தா. ஆனா இப்போ இல்ல‌.

அர்ஜுன் அதிர்ச்சியுட‌ன் க‌ல‌ந்த‌ எதிர்ப்பார்ப்புட‌ன்,

அர்ஜுன் : இதுக்கு என்ன‌ அர்த்தோ?

ச‌ந்ரா க‌ண்க‌ளில் க‌ண்ணீருட‌ன்,

ச‌ந்ரா : என்னால‌ உன்ன‌ ரொம்ப‌ நாள் வெறுக்க‌ முடிய‌ல‌ அர்ஜுன். உன்னோட‌ காத‌ல் என்ன‌ மாத்திரிச்சு.

அர்ஜுன் இன்னும் எதிர்ப்பார்ப்புட‌ன்,

அர்ஜுன் : அப்பிடின்ன‌, நீ என்ன‌ சொல்ல‌ வ‌ர்ற‌?

ச‌ந்ரா : (க‌ண்ணீருட‌ன்) நீ எங்கிட்ட‌ பேசாம‌ போனா என‌க்கு எவ்ளோ க‌ஷ்ட்ட‌மா இருக்குன்னு தெரியுமா? என‌க்கு ஜாலியா இருக்குற‌ அர்ஜுன‌தா புடிச்சிருக்கு. இப்பிடி சிடுசிடுனு இருக்கிற‌ அர்ஜுன‌ புடிக்க‌வே இல்ல‌.

அர்ஜுன், ச‌ந்ராவின் அருகில் மெதுவாக‌ வ‌ந்தான். வ‌ந்து, அவ‌ளின் க‌ண்ணீரை துடைக்க வந்தான். இந்த முறை கையை இறக்கவில்லை. கண்ணீரை துடைத்து, அவ‌ளுடைய‌ முக‌த்தில் கை வைத்து,

அர்ஜுன் : எங்கிட்ட‌ இப்பிடி சுத்தி வ‌ளைக்காம‌ நேராவே சொல்லு. இதுக்கெல்லா என்ன‌ அர்த்தோ?

ச‌ந்ரா : அத‌ ம‌ட்டு எங்கிட்ட‌ கேக்காத‌ அர்ஜுன். அதுக்கான‌ நேரோ இன்னு வ‌ர‌ல‌. என்னால‌ இப்ப‌ அத‌ சொல்ல‌ முடியாது.

அர்ஜுன் எதிர்ப்பார்ப்பு நிறைந்த‌ க‌ண்க‌ளுட‌ன்,

அர்ஜுன் : எதுக்கான‌ நேரோ வ‌ர‌ல‌? எத‌ சொல்ல‌ முடியாது?

ச‌ந்ரா : அது நா உன்ன‌ கா...

ச‌ந்ரா அப்ப‌டியே நிறுத்திவிட்டாள்.

அர்ஜுன் : (எதிர்ப்பார்ப்புட‌ன்) பிலீஸ் அத‌ முழுசா சொல்லு.

ச‌ந்ரா : இப்ப‌ வேண்டா அர்ஜுன் பிலீஸ்.

அர்ஜுன் : ச‌ந்ரா நீ ஏ இப்பிடி ப‌ண்ற‌? நீ என்ன‌ காத‌லிக்க‌ மாட்டியான்னு ஏங்கி ஏங்கி நா எத்த‌ன‌ நாள் காத்துகிட்டு இருக்க‌ன்னு தெரியுமா? சொல்ல‌ போனா பூர்வ‌ ஜென்ம‌த்துல‌ இருந்து காத்துகிட்டிருக்கே. ஆனா உன‌க்கு என்ன‌தா பிர‌ச்ச‌ன‌? எங்கிட்ட‌ சொல்லு.

ச‌ந்ரா : இல்ல‌ அர்ஜுன். அத‌ உன்னால‌ புரிஞ்சுக்க‌ முடியாது.

அர்ஜுன் : செரி நீ சொல்ல‌ வேண்டா. ஆனா நா இத்த‌ன‌ நாள் காத்துகிட்டு இருந்த‌துக்கு ப‌தில் சொல்லு.

ச‌ந்ரா : என்ன‌?

அர்ஜுன் : உன‌க்கு என்மேல‌ காத‌ல் வ‌ந்திரிச்சா இல்லையா? அத‌ ம‌ட்டு சொல்லு பிலீஸ். அது போதும்.

ச‌ந்ரா : இங்க‌ பாரு அர்ஜுன், என்னோட‌ கேள்விக்கான‌ ப‌தில் எப்ப‌ என‌க்கு கெடைக்குதோ, அப்ப‌தா உன்னோட‌ கேள்விக்கான‌ ப‌திலும் உன‌க்கு கெடைக்கும்.

அர்ஜுன் : உன்னோட‌ கேள்விக்கான‌ ப‌திலா? அது எப்ப‌ கெடைக்கும்?

ச‌ந்ரா : கூடிய‌ சீக்கிரோ.

அர்ஜுன் : செரி உனக்காக. நா இத்த‌ன‌ நாள் காத்துகிட்டிருந்தே, இன்னு கொஞ்ச‌ நாள் காத்துகிட்டிருக்கே.

ச‌ந்ரா : இப்போ உன‌க்கு என்மேல‌ கோவோ இல்லையில்ல‌?

அர்ஜுன் : (சிரிப்புட‌ன்) இல்ல‌. க‌ண்டிப்பா இல்ல‌.

ச‌ந்ரா க‌ண்க‌ளில் நீருட‌ன்,

ச‌ந்ரா : தேங்க் யூ அர்ஜுன்.

அர்ஜுன் : தேங்க் யூ ம‌ட்டு போதாது ச‌ந்ரா.

ச‌ந்ரா : வேற‌ என்ன‌ ப‌ண்ண‌னும்?

அர்ஜுன் : இப்ப‌ நா கேக்குற‌த‌ நீ குடுத்தே ஆக‌னும்.

ச‌ந்ரா ப‌ய‌த்துட‌ன்,

ச‌ந்ரா : என்ன‌ குடுக்க‌னும்?

அர்ஜுன் மெதுவாக‌ ச‌ந்ராவின் அருகில் வ‌ந்தான்.

ச‌ந்ரா ப‌ய‌த்தில் மெதுவாக‌ பின்னே சென்றாள். அப்ப‌டியே அர்ஜுன் அருகில் வ‌ந்து கொண்டே இருந்தான். ச‌ந்ரா பின்னால் சென்று கொண்டே இருந்தாள். அர்ஜுன் காத‌லுட‌ன் அருகில் வ‌ந்தான். ச‌ந்ரா ப‌ய‌த்துட‌ன் பின்னால் சென்றாள். அப்ப‌டியே செல்லும்போது, ச‌ந்ரா திடீரென‌ நின்றுவிட்டாள். பின்னால் பார்த்தாள் சுவ‌ர் இருந்த‌து.

அர்ஜுன் : இப்ப‌ எப்பிடி த‌ப்பிக்க‌ போற‌?

ச‌ந்ரா ப‌ய‌த்தில் செல்ல‌ முய‌ன்றாள். அர்ஜுன் திடீரென‌ சுவ‌ரில் கை வைத்து வ‌ழியை ம‌றைத்தான். ச‌ந்ரா இன்னொரு புரறம் த‌ப்ப‌ முய‌ன்றாள். ஆனால் அர்ஜுன் இன்னொரு கையை வைத்து ம‌றைத்தான். ச‌ந்ரா இன்னும் ப‌ய‌த்துட‌ன் அர்ஜுனை பார்த்தாள். அர்ஜுன் அவ‌ள் அருகில் வ‌ந்தான்.

அர்ஜுன் ச‌ந்ராவின் முடியை வில‌க்கிவிட்டான். ச‌ந்ரா ப‌ய‌த்தில் க‌ண்ணை மூடிக்கொண்டாள். அர்ஜுன் ச‌ந்ராவின் அருகில் மெதுவாக‌ வ‌ந்து,

அர்ஜுன் : Smile.

ச‌ந்ரா திடீரென‌ க‌ண்ணை திற‌ந்து,

ச‌ந்ரா : என்ன‌?

அர்ஜுன் : என‌க்காக‌ Smile ப‌ண்ணு ச‌ந்ரா.

ச‌ந்ரா : Smile ஆ?

அர்ஜுன் : ஆமா.

ச‌ந்ரா பெரு மூச்சிவிட்டாள்.

அர்ஜுன் : உன‌க்கு ஏ இப்பிடி வேர்க்குது?

ச‌ந்ரா வேர்வையை துடைத்த‌ப‌டி,

ச‌ந்ரா : ஒன்னு இல்ல‌.

அர்ஜுன் : அப்பிடியா? ஒன்னு இல்லையா?

ச‌ந்ரா : ஹா. ஒன்னு இல்ல‌.

அர்ஜுன் : உன‌க்கு ஏ வேர்க்குதுன்னு என‌க்கு தெரியும்.

ச‌ந்ரா ப‌ய‌த்துட‌ன், ப‌த‌ட்ட‌மாக‌,

ச‌ந்ரா : எ எ என்ன‌?

அர்ஜுன் : அது என்ன‌ன்னா...

என்று கூறிக்கொண்டே அர்ஜுன் ச‌ந்ராவின் முக‌த்தின் அருகே வ‌ந்தான். ச‌ந்ரா மிக‌வும் ப‌ய‌ந்தாள். அர்ஜுன் ச‌ந்ராவின் காதின் அருகில் வ‌ந்தான். ச‌ந்ரா மீண்டும் க‌ண்க‌ளை மூடிக்கொண்டாள். அர்ஜுன், அவ‌ளுடைய‌ காதின் முடியை வில‌க்கி,

அர்ஜுன் : ரொம்ப‌ லேட் ஆயிரிச்சு. தூங்க‌ போலாமா?

க‌ண்ணை திற‌ந்து,

ச‌ந்ரா : ம்ம்.

அர்ஜுன் சிரித்துக்கொண்டே Sofaவிற்க்கு சென்று ப‌டுத்துவிட்டான்.

ச‌ந்ரா பெட்டில் உக்கார்ந்து, த‌ல‌காணியை எடுத்து, செரி செய்துக்கொண்டிருந்தாள்.

அப்ப‌டியே அர்ஜுனை பார்த்து சிரித்தாள்.
அதை அர்ஜுன் பார்த்துவிட்டான். ச‌ந்ரா உட‌னே திரும்பிவிட்டாள். அர்ஜுன் ச‌ந்ராவை பார்த்து, கையை நீட்டி,

அர்ஜுன் : உன்னோட‌ சிரிப்பு ஒளிஞ்சுகிச்சு.

ச‌ந்ரா அதை கேட்ட‌தும் சிரித்துவிட்டு, ப‌டுத்துக்கொண்டாள். அர்ஜுனும் ப‌டுத்து கொண்டான். ஆனால் அர்ஜுன் ச‌ந்ராவையே பார்த்து கொண்டிருந்தான். அதை பார்த்த‌ ச‌ந்ரா, உட‌னே முக‌த்தை மூடி ப‌டுத்து ப‌டுத்துக்கொண்டாள்.

அதை பார்த்த‌ அர்ஜுன்,

அர்ஜுன் : அட‌டா...

என்று கூறிவிட்டு, ப‌டுத்துவிட்டான். மீண்டும் அர்ஜுன் எழுந்து ச‌ந்ராவை பார்த்தான். ச‌ந்ரா முக‌த்தை மூடிய‌ப‌டி தூங்கி கொண்டிருந்தாள். அதை பார்த்த‌ பிற‌கு அர்ஜுன் தூங்கிவிட்டான்.

அர்ஜுன் தூங்கிய‌தும் ச‌ந்ராவின் போர்வை மெதுவாக‌ வில‌கிய‌து. வில‌கிய‌ போர்வையில் இருந்து, ச‌ந்ரா அர்ஜுனை எட்டி பார்த்தாள். அர்ஜுன் தூங்கிவிட்டான்.

ச‌ந்ரா : அதுக்குள்ள‌ அர்ஜுன் தூங்கிட்டானா?

என்று கூறிவிட்டு, ச‌ந்ரா அர்ஜுனை பார்த்துக்கொண்டே தூங்கிவிட்டாள்.

காலை வ‌ந்த‌து. ச‌ந்ரா எழுந்தாள். அர்ஜுனை பார்த்தாள். அவ‌ன் இன்னும் தூங்கி கொண்டிருந்தான். அதை பார்த்த‌ ச‌ந்ரா,

ச‌ந்ரா : அர்ஜுன் இன்னு தூங்கிகிட்டு இருக்கான‌?

ச‌ந்ரா நேற்று இர‌வு ந‌ட‌ந்த‌தை நினைத்து பார்த்தாள். அவ‌ள் முக‌த்தில் புன்ன‌கை ம‌ல‌ர்ந்த‌து. அதை நினைத்து சிரித்து கொண்டே ச‌ந்ரா Sofaவுக்கு வ‌ந்து, அர்ஜுனின் அருகில் அம‌ர்ந்தாள். அர்ஜுனை பார்த்து கொண்டே இருந்தாள். அர்ஜுனை பார்த்துக்கொண்டிருந்த‌ ச‌ந்ராவுக்கு நேற்று காலை ந‌ட‌ந்த‌து நினைவிற்க்கு வ‌ருகிற‌து.

.....பிளாஷ் பேக்.....
ச‌ந்ரா அர்ஜுனை பார்த்துக்கொண்டே அவ‌ன் அருகில் வ‌ந்தாள். மெதுவாக‌ அப்ப‌டியே அவ‌ன் நெற்றியின் அருகில் வ‌ந்து, அவ‌னுடைய‌ நெற்றியில் முத்த‌ம் கொடுத்தாள்.
.... பிளாஷ் பேக் முடிந்த‌து....

அதை நினைத்து பார்த்த‌ ச‌ந்ரா, மீண்டும் புன்ன‌கைத்தாள்.

ச‌ந்ரா : ம‌றுப‌டியு அர்ஜுனுக்கு முத்தோ குடுக்க‌லாமா?

ச‌ந்ரா யோசித்தாள்.

ச‌ந்ரா : குடுத்தா என்ன? என்னோட‌ அர்ஜுனுக்கு நா முத்தோ குத்தா என்ன‌ த‌ப்பு? இப்ப‌வும் தூங்கிட்டுதான‌ இருக்கா?குடுத்தா அவ‌னுக்கென்ன‌ தெரிய‌வா போகுது? குடுத்திட்டு அப்பிடியே ஓடிர‌வேண்டிய‌துதா.

ச‌ந்ரா மெதுவாக‌ அவ‌ன் நெற்றியின் அருகில் வ‌ந்தாள்.

மெதுவாக‌ வ‌ந்து அவ‌ன் நெற்றியில் முத்த‌ம் கொடுத்தாள். உட‌னே அர்ஜுன் க‌ண்க‌ளை திற‌ந்துவிட்டான்.

ச‌ந்ரா ப‌ய‌ந்து எழுந்து உக்காந்துவிட்டாள்.

தொட‌ரும்...
 

Author: Oviya Blessy
Article Title: CHAPTER-45
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.