Chapter 44

Bhavani Varun

Member
Jan 23, 2025
44
0
6
“நீங்க சொன்னதுக்கு ரொம்ப தேங்க்ஸ் ஆன்ட்டி…. நான் கிளம்புறேன்” என்று சனந்தா கூறி, சரவணனை பார்த்து, “நான் ஃபோன் பண்றேன் உங்களுக்கு அப்புறமா” என்று கூறி பாட்டியுடன் சென்றாள்.

“என்னமா நடக்குது??? திடீர்னு ஏன் இப்படி ஆச்சு??” என்று சரவணன் வள்ளியை கேட்க, “எனக்கும் தெரியலப்பா பாட்டி வந்தாங்க… நான் அவங்களை எதார்த்தமா பார்த்தேன்…. பார்த்தா, சனா அழுதுட்டே பாட்டிய கட்டிப்புடிச்சுக்கிட்டா…. எனக்கு ரொம்ப கஷ்டமா போச்சு”.

“என்னன்னு கேட்க போலாம்னு நினைச்சேன்… ஆனா, ரொம்ப தேம்பி தேம்பி அழுகவும் எனக்கு ரொம்ப பயம் வந்துச்சு… அதான் நான் விக்ரமுக்கு ஃபோன் பண்ணேன்… நான் ஃபோன் பண்ணிட்டு வரர்துக்குள்ள ஏதோ பேசி இருக்கா போல…. அதுக்கப்புறம் பாட்டி வீட்டுக்கு வான்னு கூப்பிட்டாங்க… அவளும் சரின்னு சொன்னா அதுக்கப்புறம்” என்று வள்ளி கூறினார்.

விக்ரம் வெளியில் இருக்கும் திண்ணையில் அமர்ந்து தலையை குனிந்து கொண்டு, “சனந்தா என்ன பேசினான்னு சொல்லுங்க மா” என்று விக்ரம் வள்ளியை கேட்க, “சனாக்கு யாரையோ புடிச்சிருக்காம்” என்று ஆரம்பித்து அவர் கேட்ட அனைத்தையும் கூறி முடித்தார் வள்ளி.

“நான் சொன்னேன்ல மச்சான்… ஏதோ தப்பு நடந்திருக்கன்னு…. இப்ப பாரு அவ எப்படி யோசிக்கிறான்னு” என்று விக்ரம் சரவணனிடம் கூறினான்.

“என்னடா நடந்துது இப்பயாவது என்கிட்ட முழுசா சொல்லி தொலைங்களேன் டா…. உங்களுக்குள்ளையே வெச்சு இருந்திட்டு…. இப்ப பாரு அவ இங்க இருந்து போற அளவுக்கு அவ அவ்வளவு வருத்தப்படுறா” என்று வள்ளி கோபத்துடன் பேசினார்.

“மா… இவனுக்கு சனாவ ரொம்ப பிடிக்கும்…. இப்போ கிடையாது அவளை எப்பயோ பார்த்தான் ஊட்டில, அப்போலிருந்து இவனுக்கு சனான்னா புடிக்கும்”.

“அவ இங்க வாலன்டியர் டீச்சரா வருவான்னு அவன் எதிர்பார்க்கல…. வந்ததுக்கப்புறம் நிறைய குழப்பங்கள் நிறைய பிரச்சனைகள் இருந்துது…. அது எல்லாத்தையும் தாண்டி அவனும் சனாவும் பேச ஆரம்பிச்சாங்க… நல்லா தான் போய்கிட்டு இருந்தது”.

“ஆனா, திடீர்னு நடுவுல கவிதாவும் அவங்க அப்பாவும் ஏதோ குழப்பி விட்டிருக்காங்க… அப்போலிருந்து தான் சனா சுத்தமா இவன் கிட்ட பேசுறதில்ல… பேசுறது என்ன முகத்தை கூட பார்க்குறது இல்ல…. எவ்வளவு தடவ ஃபோன் பண்ணாலும் எவ்வளவு மெசேஜ் பண்ணாலும் கூட எதுக்குமே அவ அசரவே மாட்டேங்குறா…. என்கிட்ட கூட என்னன்னா என்னன்னு தான் பேசுறா” என்று கூறி முடித்தான் சரவணன்.

“என்ன விக்ரம் இதெல்லாம்” என்று வள்ளி கேட்க, “எல்லா சுமூகமா நடந்து இருந்தா நானே வந்து உங்க கிட்ட சொல்லி இருப்பேன்மா…. நானும் நிறைய குழப்பத்தில இருந்துட்டேன்… அதுல இருந்து கொஞ்சம் கொஞ்சமா வெளியில வந்து தான் நான் அவகிட்ட பேசினேன்… அவளும் என்கிட்ட பேசினா…. அவளுக்கும் என்னை உண்மையிலேயே ரொம்ப புடிச்சிருக்கு மா”.

“எதார்த்தமான, கலப்படமே இல்லாத அன்பு அவ கிட்ட நான் பார்த்தேன் மா…. ரொம்ப வெகுளியா தான் என்கிட்ட பேசினா…. அந்த மாதிரி அவ யார் கிட்டயும் இது வரைக்கும் பேசினதில்லன்னு நான் தெரிஞ்சுகிட்டேன்”.

“ஆனா, இப்ப இந்த மாற்றத்துக்கு காரணம், என்ன நடந்ததுன்னு தெரியல என்கிட்ட சொல்ல மாட்டேன்றா…. நான் எவ்வளவு பேச முயற்சி பண்ணாலும் என்னால அவ கிட்ட நெருங்க கூட முடியல…. காலையில சீக்கிரம் போயிடுறா…. சரின்னு சீக்கிரம் எந்திரிச்சு நான் ரெடியா இருந்தா லேட்டா போறா…. இல்லன்னா அப்பா கூட போறா…. இப்படி நிறைய நடக்குது… எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்குமா” என்று விக்ரம் கண்ணீருடன் கூறினான்.

வள்ளி விக்ரமின் தோளை தட்டி, “விக்ரம், நான் கூட உனக்கும் கவிதாவுக்கும் கல்யாணம் பண்ணி வைக்கணும்னு யோசிச்சு இருக்கேன்…. ஏன்னா ரெண்டு பேரும் ஒன்னா வளர்ந்தவங்க... உங்க ரெண்டு பேருக்கும் இந்த ஊரை பத்தி தெரியும்…. அதனால ஒருத்தருக்கு ஒருத்தர் அன்பாவும் இருப்பீங்கனு நம்பி நானும் அப்படி யோசிச்சு இருக்கேன் டா”.

“ஆனா, நீ வளர வளர உனக்கென்ன பிடிக்குமோ அது தான் எங்களுடைய பிரதானமா மாறிடுச்சு…. அதுலயும் அப்பு போனதுக்கு அப்புறம் முழுக்க நீ மட்டும் தான் இருக்க எங்களுக்குன்னு…. அப்படி இருக்கும் போது உன்னோட விருப்பம் மட்டும் தான் எங்களுக்கும் முக்கியம் விக்ரம்” என்று வள்ளி கூறினார்.

“நீங்க அப்பு இருக்கும் போதும் இப்படி தான்மா இருந்தீங்க….. எங்களுக்கு என்ன வேணும், எங்களுக்கு எது சரியா இருக்கும், எங்களுக்கு எது புடிக்கும்னு கேட்டு கேட்டு எல்லாமே பண்ணீங்க…. அதனால தான், நான் எல்லாம் சரியானதுக்கு அப்புறம் தான் உங்க கிட்ட சொல்லலாம்னு இருந்தேன்…. அதுக்குள்ள இங்க என்ன என்னமோ நடக்குது” என்று விக்ரம் வருத்தத்துடன் கூறினான்.

“நீ எதுவும் வருத்தப்படாதப்பா எல்லாம் சரியாகும்…. நீ பேசு அவ கிட்ட…. அதே மாதிரி நானும் அப்பா கிட்ட பேசுறேன்… கவிதா, அவங்க அப்பாவ பத்தி நீ எதுவும் வருத்தப்படாத” என்று வள்ளி கூற, சரி என்றான் விக்ரம்.

“நான் இப்ப போய் அவள பார்த்திட்டு வரேன் மா” என்று விக்ரம் கூற, சரி என்று வள்ளி கூறவும், “நீ போயிட்டே இரு டா நானும் உன் கூட வரேன்” என்று சரவணன் கூற, விக்ரம் முதலில் சென்றான்.

“அம்மா உங்களுக்கு உண்மையிலேயே இதுல சம்மதம் தானா” என்று சரவணன் குழப்பத்துடன் கேட்க,

“விக்ரமுக்கு யாரை பிடிச்சிருந்தாலும் எங்களுக்கு சம்மதம் தான்… எனக்கு சனந்தா வந்த முதல் நாளே எனக்கு அவளை பிடிச்சிருந்துது… எனக்கு புடிச்சிருக்குன்றதுக்காக நான் விக்ரமுக்கும் பிடிக்கனும்னு சொல்ல முடியாதுல…. அவ்வளவு ஏன் எனக்கு கவிதாவ கூட தான் பிடிக்கும் அதுக்காக கவிதாவ கல்யாணம் பண்ணிக்கோன்னு சொல்ல முடியாது…. அவனுக்கு என்ன விருப்பம் என்றது தான் நாங்க பார்க்கணும்” என்று வள்ளி கூறினார். “ம்ம்… சரி மா நான் விக்ரம் கூட போயிட்டு வரேன்” என்று சரவணன் சென்றான்.

சனந்தா பாட்டி வீட்டிற்கு சென்று அங்கே அவளது உடைமைகளை வைத்து விட்டு சிறிது நேரம் பாட்டி வீட்டின் வெளியே இருக்கும் மரத்தடியில் அமர்ந்து கொண்டிருந்தாள்.

“என்னம்மா இங்க வந்து இருக்கா??” என்று முத்து, கவிதாவிடம் சனந்தாவை பார்த்து கேட்ட, “அதான் சொன்னேன்ல பேக் எடுத்துட்டு பாட்டி கூட போனான்னு… அதனால தான் உங்களை கூட்டிட்டு வந்தேன்” என்று கவிதா கூறினாள்.

“பரவால்ல நம்ம கொடுத்த டோஸ் நல்லா தான் வேலை செய்யுது போல” என்று முத்து கூற, “எனக்கு என்னமோ இதெல்லாம் செய்றதுனால விக்ரமுக்கு என்னை இன்னும் சுத்தமா பிடிக்காம போயிருமோன்னு பயமா இருக்குப்பா” என்று கவிதா கூற, “அதெல்லாம் ஒன்னும் ஆகாது நான் தான் சொன்னேன்ல கல்யாணம் பண்ணி வெச்சா எல்லாம் சரியாயிடும்…. நீ எதுவும் யோசிக்காத” என்று முத்து கூறினார்.

“எனக்கு அப்படி எதுவும் வேணாம் பா…. எனக்கு விக்ரம புடிக்கும் அதுக்காக அவன் சந்தோஷமா இல்லைன்னா எப்படிப்பா??” என்று கவிதா கேட்க, “நீ சும்மா இரு எல்லா நான் பார்த்துக்குறேன்” என்று முத்து கூறினார்.

“என்னமா இங்க வந்து உட்கார்ந்துட்டு இருக்க?” என்று முத்து கேலியாக கேட்க, “ஒன்னும் இல்ல சும்மா தான் உட்கார்ந்து இருக்கேன்” என்று சனந்தா பட்டும் படாமலும் பதில் கூறினாள்.

“இதுக்கு தான் நம்ம இடம் எதுன்னு தெரிஞ்சுகிட்டு இருந்தா அது நிரந்தரமான இடமா மாறும்…. இல்லனா இப்படித்தான் போக்கு இடம் இல்லாம எங்க வேணாலும் உட்கார மாதிரி ஆயிடும்” என்று முத்து கூறவும், சனந்தா என்ன பதில் பேசுவது என்று தெரியாமல் அமைதியாகிவிட்டாள்.

“அப்பா என்னப்பா இப்படி பேசுறீங்க??? வேண்டாம் பா வாங்க” என்று கவிதா கூற, “சனா உள்ளவா!!” என்று பாட்டி குரல் கொடுக்க சனந்தா அமைதியாக உள்ளே சென்றுவிட்டாள்.

“அப்பா என்ன பண்றீங்க??? நான் இந்த நிலைமைல இருந்தா உங்களுக்கு எவ்ளோ கஷ்டமா இருக்கும்” என்று கவிதா கேட்க, “நீ இந்த நிலைமைக்கு போய் விடக்கூடாது என்றதுனால தான் நான் இவ்ளோ பேசிட்டு இருக்கேன்” என்று முத்து கூறினார்.

“நீங்க என்ன சொன்னாலும் சரி இப்படி பேசுறத என்னால ஏத்துக்கவே முடியல பா” என்று கவிதா சலித்துக் கொண்டு வீட்டிற்கு புறப்பட்டாள்.

“என்ன இவ இப்படி பேசுறா இவளுக்காக தானே இதெல்லாம் பண்றேன்” என்று முத்து நினைத்துக் கொண்டு, “இருமா நானும் வரேன்” என்று முத்துவும் கவிதா உடன் சென்றார்.

விக்ரம் மற்றும் சரவணன் வந்து கொண்டிருக்க, முத்து மற்றும் கவிதா அவர்களுக்கு எதிரே வரவும் விக்ரம் அவர்களை முறைத்து எதுவும் பேசாமல் வேறு பக்கமாக முகத்தை திருப்பி நடந்து சென்றனர்.

“இங்க பாருங்க விக்ரம் எவ்வளவு கோபமா போறானோ…. எல்லா உங்களால தான் பா” என்று கவிதா கூற, “இப்ப அப்படித்தாமா இருக்கும் …போக போக எல்லாம் சரியாயிடும் நீ சும்மா இரு” என்று முத்து கவிதாவை அதற்றினார்.

“இவங்க ரெண்டு பேரும் என்னடா இந்த வழியா வராங்க ஒரு வேளை சனா கிட்ட பேசி இருப்பாங்களோ??” என்று சரவணன் கேட்க, “எனக்கும் அது தான் தோணுது” என்று விக்ரம் கூறினான்.

“மச்சான் நீ பேசும் போது தெளிவா இருடா” என்று சரவணன் அறிவுரை கூற, “நான் உண்மையிலே ரொம்ப அவஸ்தைப்படுறேன் டா சரவணா…. எனக்குள்ள ரொம்ப தாக்கத்தை ஏற்படுத்திய பொண்ணு தான் சனந்தா”.

“அவளை தேடி நான் சுத்தும் போதும் அவஸ்தப்பட்டேன்… அவள இங்க பார்த்து சந்தோஷப்படுற நிலைமைலயே இல்லாம அவஸ்தைப்பட்டேன்…. அதுக்கப்புறம் கொஞ்சம் கொஞ்சமா சில விஷயங்கள் தெரிய வர அவ மேல தப்பு இருக்காதுன்னு நம்பிக்கையில நான் அவ கிட்ட நெருங்கினேன்”.

“அப்ப அப்ப என் மண்டைக்குள்ள ஒரு வேள அவ மேல தப்பு இருந்தா என்ன பண்ணுவேன்னு பதில் இல்லாம அவஸ்த பட்டுட்டு தான் இருக்கேன்…. இருக்காதுன்ற நம்பிக்கையில தான் அவகிட்ட பழக ஆரம்பிச்சேன்… அவளும் என்கிட்ட நல்லா பழகுனா… இப்போ என்னன்னே தெரியாம என்கிட்ட பேசறது கூட இல்ல… என் மூஞ்சிய கூட பார்க்க மாட்டேங்குறா அது எனக்கு இன்னும் அவஸ்தையா இருக்கு டா” என்று மிகவும் மன வலியுடன் கூறினான் விக்ரம்.

“புரியுது மச்சான் நீ ஒன்னும் வருத்தப்படாதே… அவளுக்கும் ரொம்ப நாள் உன் மேல இருக்குற ஆசையை கட்டு படுத்த முடியாது” என்று சரவணன் ஆறுதல் கூறினான்.

“என்ன சனா அவங்க வந்து அவ்வளவு பேசிட்டு இருக்காங்க திரும்பி ஒரு வார்த்தை கூட பேசாம அமைதியாக இருக்க நீ??” என்று பாட்டி முறையிட, “எனக்கு திருப்பி பேச வராம எல்லாம் இல்ல பாட்டி… என்னாலையும் திருப்பி பேச முடியும் தான்... ஆனா, நான் அப்படி பேசி அவங்கள காயப்படுத்திட்டேன்னா அதனால விக்ரம் சங்கடப்படுவாருன்னு தான் எனக்கு கஷ்டமா இருக்கு” என்று சனந்தா கூறினாள்.

“அப்போ உனக்கு புடிச்ச பையன் விக்ரமா??” என்று பாட்டி கேட்க, “ம்ம் ஆமாம் பாட்டி!!!” என்றாள் சனந்தா.

“கவிதாவும் அவங்க அப்பாவும் அவ்ளோ பேசுறாங்க…. அதெல்லாம் தெரிஞ்சா விக்ரம் அவங்க மேல தான கோபப்படுவான்” என்று பாட்டி கேட்க,

“அப்படி இல்ல பாட்டி இவங்க எல்லாம் இத்தன வருஷமா ஒன்னா இருக்குறவங்க…. ஆயிரம் இருந்தாலும் நான் இப்ப வந்தவ தானே… இன்னிக்கு ஆன்ட்டி சொன்ன மாதிரி நான் இப்ப இருப்பேன் நாளைக்கு போயிருவேன்…. அப்படி இருக்கும் போது நான் அவங்கள கஷ்டப்படுத்திட்டேன்னா அது விக்ரமுக்கு கோபமும் வரலாம்… இல்ல சங்கடமாவும் இருக்கலாம் அதான் பாட்டி… அவங்க என்ன பேசினாலும் நான் அமைதியா இருக்கேன்” என்று சனந்தா கூறினாள்.

“ம்ம்… உன் குழப்பத்துக்கு காரணம் புரிஞ்சுது… சரி அதெல்லாம் விடு, என்கிட்ட கேட்ட இல்ல இந்த பூவெல்லாம் எப்படி அள்ளுறதுன்னு, வா நான் உனக்கு சொல்லி தரேன்” என்று பாட்டி சனந்தாவின் கவனத்தை மாற்றுவதற்காக கூறவும், சனந்தாவும் வேலையில் ஈடுபட்டாள்.

சனந்தா மற்றும் பாட்டி பேசிய அனைத்தும் விக்ரம் மற்றும் சரவணன் கேட்டுக் கொண்டிருந்தனர்.

கருத்துக்கள் எதுவாயினும் வரவேற்கப்படும்
நன்றிகள் பல
 

Author: Bhavani Varun
Article Title: Chapter 44
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.