CHAPTER-44

Oviya Blessy

Member
Jan 4, 2025
45
0
6
ச‌ந்ரா : நீ ஏ என்னோட‌ மொக‌த்த‌ பாக்க‌ மாட்டிங்குற‌? என்மேல‌ இன்னும் கோவ‌மா இருக்கியா?

அர்ஜுன் திரும்ப‌வேவில்லை. ச‌ந்ரா, அர்ஜுன் மீது கை வைத்தாள். அர்ஜுனிட‌ம் எந்த‌ அசைவும் இல்லை. ச‌ந்ரா மிக‌வும் ப‌ய‌ந்துவிட்டாள். உட‌னே ச‌ந்ரா, அர்ஜுனுடைய‌ முன் புற‌மாக‌ வ‌ந்து பார்த்தாள். அப்போது, அர்ஜுன் சுவ‌ரில் சாய்ந்த‌ப‌டி தூங்கி கொண்டிருந்தான்🤭.

அதை பார்த்த‌ ச‌ந்ரா,

ச‌ந்ரா : நா ப‌ய‌ந்தே போய்ட்டே. அர்ஜுன் ரொம்ப‌ டயர்டா இருப்பாம்போல‌. அதுனால‌தா செவுத்துல‌ சாஞ்சிட்டிருக்கும்போதே, அவ‌னுக்கு தூக்கோ வ‌ந்திருக்கு.

ச‌ந்ரா அவனை க‌ட்டிலில் ப‌டுக்க‌ வைத்தாள்.

ச‌ந்ரா : நா இவ‌ன‌ க‌ட்டில்ல‌ ப‌டுக்க‌ வெக்க‌ற‌து கூட‌ தெறியாம‌ தூங்கிக்கிட்டு இருக்கா. அந்த‌ அள‌வு டயர்டா இருக்கா.

ச‌ந்ரா அவ‌னுடைய‌ அருகில் அம‌ர்ந்து, அவ‌னை பார்த்துக்கொண்டே,

ச‌ந்ரா : என‌க்கு இப்பெல்லா உன்ன‌ பாக்கும்போது, நீ என‌க்கு சொந்த‌மான‌வ‌ன்னு தோனுது. என‌க்கு ம‌ட்டுந்தா சொந்தோ. ஆனா உங்கிட்ட‌ காத‌ல‌ சொல்ல‌ வ‌ரும்போது, என‌க்குள்ள‌ ஒரு வித‌மான‌ ப‌யோ உண்டாகுது. அந்த‌ ப‌ய‌த்தால‌ என்னால‌ உங்கிட்ட‌ ஒன்னுமே சொல்ல‌ முடிய‌ல‌. அது ஏன்னு என‌க்கே தெரிய‌ல‌. என‌க்குள்ள‌ நெறைய‌ கொழ‌ப்போ ந‌ட‌க்குது. ஆனா பூர்வ‌ ஜென்ம‌துல‌ நா ஏ உன்ன‌ வெறுத்தே? இந்த‌ ஜென்ம‌த்துல‌ ஏ உன்ன‌ நா க‌ல்யாணோ ப‌ண்ணே? அவ்ளோ வெறுத்த‌ உன்ன‌யே நா ஏ காத‌லிச்சே? இதுக்கெல்லா ப‌தில் கெடைக்காம‌ என்னால‌ நிம்ம‌தியா இருக்க‌ முடிய‌ல‌. அதுனால‌தா உங்கிட்ட‌ காத‌ல‌ சொல்ல‌ முடியாம‌ நா த‌விக்கிறே.

தூக்க‌த்தில் அர்ஜுன் புல‌ம்பினான்.

அர்ஜுன் : ஏ ச‌ந்ரா என்ன‌ காத‌லிக்க‌ மாட்டிங்குற‌? பூர்வ‌ ஜென்ம‌த்துல‌யும் உன‌க்கு என்மேல‌ காத‌ல் வ‌ர‌ல. இந்த‌ ஜென்ம‌த்துலையும் உன‌க்கு என்மேல‌ காத‌ல் வ‌ராதா?

என்று புல‌ம்பினான். அதை கேட்ட‌
ச‌ந்ரா, அர்ஜுனின் த‌லையை நீவிவிட்டு,

ச‌ந்ரா : என‌க்கு உன்மேல‌ எப்ப‌வோ காத‌ல் வ‌ந்திரிச்சு அர்ஜுன். நா உன்ன‌ முழு ம‌ன‌சோட‌ காத‌லிக்கிறே. ஆனா அத‌ என்னால‌ உங்கிட்ட‌ முழு ம‌ன‌சோட‌ சொல்ல‌ முடிய‌ல‌. என்னோட‌ பிற‌ப்புக்கான‌ காரணோ தெரியாம‌ என்னால‌ எந்த‌ முடிவும் எடுக்க‌ முடியாது. பூர்வ‌ ஜென்ம‌த்துல‌ நா வேற‌ ஒருத்த‌னுக்கு சொந்தமா இருந்தே. ஆனா இந்த‌ ஜென்ம‌த்துல‌ ஏ உன‌க்கு சொந்த‌மான‌ன்னு என‌க்கு தெரிய‌னும். இதுக்கான‌ விடை என‌க்கு கெடைக்காம‌, என்னால‌ உன்கூட‌ சேந்து வாழ‌ முடியாது. இத‌ நா மீரா அக்காகிட்ட‌ கூட‌ சொல்ல‌ முடிய‌ல‌. அத‌ அவ‌ங்க‌ளால‌ புரிஞ்சுக்க‌ முடியாது.

பிறகு, ச‌ந்ரா சென்று Sofaவில் ப‌டுத்துக்கொண்டாள்.

காலை வ‌ந்த‌து. விடிந்த‌தும் ச‌ந்ரா எழுந்து, Cofee போட்டு கொண்டுவ‌ந்தாள். அர்ஜுன் இன்னும் தூங்கி கொண்டே இருந்தான்.

ச‌ந்ரா, அர்ஜுனின் அருகில் வ‌ந்தாள். அர்ஜுன் ந‌ன்றாக‌ தூங்கி கொண்டிருந்தான். ச‌ந்ரா அதை பார்த்த‌ப‌டியே அம‌ர்ந்திருந்தாள்.

ச‌ந்ரா : எவ்ளோ அழ‌கா தூங்குறா என்னோட‌ அர்ஜுன். என‌க்கு எழுப்ப‌ ம‌ன‌சே இல்ல‌.

அர்ஜுனை பார்த்த‌ப‌டியே, அவ‌னோடு ந‌ட‌ந்த‌ அழ‌கான‌ நினைவுக‌ளை நினைத்து பார்த்தாள்.

ச‌ந்ரா : நீ என்ன‌ எவ்ளோ காத‌லிக்கிற‌ன்னு யோசிக்க‌ யோசிக்க‌ என‌க்கு ரொம்ப‌ புடிச்சிருக்கு. நீ ஒவ்வொரு தெட‌வ‌யும் உன்னோட‌ உயிர‌ ப‌னையோ வெச்சு என்ன‌ காப்பாத்தும் போதெல்லா, நா உன்ன‌ கொஞ்ச கொஞ்சமா காத‌லிக்க‌ ஆர‌ம்பிச்சே. நீ சின்ன‌ வ‌ய‌சுல‌ இருந்து இப்ப‌வ‌ரிக்கும் என்னோட‌ உயிர‌ காப்பாத்தியிருக்க‌. அதுதா உன்ன‌ காத‌லிக்க‌ வெச்ச‌து அர்ஜுன்.

ச‌ந்ரா திரும்ப‌ அர்ஜுனை பார்த்துக்கொண்டே இருந்தாள். மெதுவாக‌ அர்ஜுன் அருகில் வ‌ந்தாள். மெதுவாக‌ மெதுவாக‌ தூங்கி கொண்டிருக்கும் அர்ஜுனின் அருகில் வ‌ந்தாள். இன்னும் ந‌ன்றாக‌ அவ‌னுட‌ைய‌ நெற்றியின் அருகில் வ‌ந்து, அர்ஜுனின் நெற்றியில் முத்த‌ம் கொடுத்தாள்.



அர்ஜுன் அதுக்கூட‌ தெரியாம‌ல் தூங்கி கொண்டிருந்தாள். தூங்கிய‌ப‌டி, தூக்க‌த்தில்,

அர்ஜுன் : க‌ன‌வுல‌ம‌ட்டு முத்தோ குடுக்குற‌, ஆனா நெஜ‌த்துல‌ ஏ என்ன‌விட்டு வெல‌கி வெல‌கி போற‌?

அதை கேட்ட ச‌ந்ரா சிரித்தாள்.

ச‌ந்ரா : அர்ஜுன் ! எந்திரி விடிஞ்சிருச்சு. அர்ஜுன்!

அர்ஜுன் மெதுவாக‌ க‌ண்க‌ளை திற‌ந்தான்.

அர்ஜுன் : Good morning....

ச‌ந்ரா : Good morning... இந்தா Cofee.

அர்ஜுன் ந‌ன்றாக‌ க‌ண்க‌ளை திற‌ந்து பார்த்தான்.

அர்ஜுன் : நா எப்பிடி பெட்டுக்கு வ‌ந்தே? நேத்து என்ன‌ ஆச்சு?

ச‌ந்ரா : அத‌தா நானும் கேக்குறே. நேத்து என்ன‌ ஆச்சு? நீ எதுக்காக‌ செவுத்துல‌ சாஞ்சு தூங்கிட்டு இருந்த‌? தூக்கோ வ‌ந்தா, பெட்டுல‌யோ Sofaலையோ ப‌டுத்து தூங்க‌வேண்டிய‌துதான‌?

அர்ஜுன் : என்ன‌? நா அப்பிடியே தூங்கிட்ட‌னா?

ச‌ந்ரா : ஆமா.

அர்ஜுன் : அப்றோ எப்பிடி பெட்டுக்கு வ‌ந்தே?

ச‌ந்ரா : நாந்தா உன்ன‌ பெட்ல‌ ப‌டுக்க‌ வெச்சே.

அர்ஜுன் : ஓ... அப்பிடியா, செரி. அது... நா அங்க‌ நின்னு யோசிச்சுகிட்டே இருந்தே. அப்பிடியே தூங்கிட்டே போல‌. என‌க்கு நா எப்ப‌ தூங்குன‌ன்னே ஞாபகம் இல்ல.

ச‌ந்ரா : அப்பிடி என்ன‌ யோசிச்ச‌?

அர்ஜுன் : அது...

அர்ஜுன் ந‌ட‌ந்த‌வ‌ற்றை யோசித்தான்.

....பிளாஷ் பேக்....
அர்ஜுன் சுவ‌ற்றில் சாய்ந்து,

அர்ஜுன் : செரி நா உன்னோட‌ அனும‌தி இல்லாம‌ உன்ன‌ தொட‌மாட்டே. பிலீஸ் நீ இந்த‌ மாதிரி அழாத‌.

என்று கூறியதை நினைத்து பார்த்து அழுதுக்கொண்டிருந்தான். மிகுந்த‌ வேத‌னையுட‌ன் அதை யோசித்து கொண்டிருந்தான்.
.... பிளாஷ் பேக் முடிந்த‌து....

அதை நினைவு கூர்ந்த அர்ஜுன்,

அர்ஜுன் : (வ‌ருத்த‌மாக‌) அது ஒன்னு இல்ல‌ விடு.

ச‌ந்ரா : செரி இந்தா Cofee குடி.

அர்ஜுன் வேக‌மாக‌ Cofee குடித்துவிட்டு, முக‌த்தை வருத்தமாகவே, ,

அர்ஜுன் : தேங்க்ஸ்.

என்று கூறிவிட்டு எழுந்து, குளிக்க‌ சென்றான். ச‌ந்ரா கிச்ச‌னுக்கு சென்று ச‌மைய‌ல் வேலையை பாத்தாள். சாப்பாடு செய்து முடித்த‌தும், அவ‌ற்றை டைனிங் டேபிளுக்கு எடுத்து கொண்டுவ‌ந்து வெய்த்தாள். மீரா அவ‌ளுக்கு உத‌வி செய்தாள். அப்போது அர்ஜுன் ரூமிலிருந்து வெளியே வ‌ந்தான். கீழே ப‌டிக்க‌ட்டில் இற‌ங்கி வ‌ந்தான். அப்போது அவ‌னை பார்த்த‌ ச‌ந்ரா,

ச‌ந்ரா : அர்ஜுன் நீ ஆப்பீஸ் போறியா?

அர்ஜுன் : ஆமா.

ச‌ந்ரா : ஆனா நீ ரெஸ்ட் எடுக்க‌னு.

அர்ஜுன் : (வ‌ருத்த‌மாக‌வே) இல்ல‌ நா இப்போ ந‌ல்லாதா இருக்கே. நா ஆப்பீஸ் போறே.

மீரா : என்ன‌ அர்ஜுன்? ரெஸ்ட் எடுக்க‌லால்ல‌?

அர்ஜுன் : இல்ல‌ இன்னிக்கு நா போயே ஆக‌னு. முக்கியமான மீட்டிங் இருக்கு.

ச‌ந்ரா : செரி சாப்பிட்டாவ‌து போ.

அர்ஜுன் : செரி.

அர்ஜுன் அமர்ந்து வேக‌மாக‌ சாப்பிட்டுவிட்டு எழுந்தான்.

ச‌ந்ரா : என்ன‌ அதுக்குள்ள‌ எந்திரிச்சிட்ட‌?

அர்ஜுன் : என‌க்கு போது.

ச‌ந்ரா : (ம‌ன‌திற்க்குள்) அர்ஜுன் சோக‌மா இருக்கிற‌ மாதிரி இருக்கு? இன்னு அதையே நென‌ச்சிட்டிருக்கானா?

அர்ஜுன் கையை க‌ழுவிவிட்டு, ஆப்பீஸ்க்கு சென்றுவிட்டான்.

மீரா : என்ன‌ ச‌ந்ரா, அர்ஜுன் ஒரு மாதிரி ந‌ட‌ந்துக்குறா?

ச‌ந்ரா : ஒன்னு இல்ல‌ மீரா அக்கா. அவ‌ன‌ நா பாத்துக்குறே. நீங்க‌ விடுங்க‌.

மீரா : செரி.

இர‌வு வ‌ந்த‌து. அர்ஜுனுக்காக‌ ச‌ந்ரா வெளியே காத்துக்கொண்டிருந்தாள். அர்ஜுன் வ‌ந்தான். ச‌ந்ராவை பார்த்து,

அர்ஜுன் : நீ எதுக்காக‌ இங்க‌ நிக்கிற‌?

ச‌ந்ரா : உன‌க்காக‌தா.

அர்ஜுன் : செரி என‌க்கு ரொம்ப‌ த‌ல‌வ‌லிக்குது, நா ரூமுக்கு போறே.

ச‌ந்ரா : த‌ல‌ வ‌லிக்குதா? செரி நா உன‌க்கு Cofee கொண்டுவ‌ர்றே.

அர்ஜுன் : இல்ல‌ அதெல்லா வேண்டா. நா போய் குளிச்சிட்டு தூங்குறே.

ச‌ந்ரா : (ம‌ன‌திற்க்குள்) எதுக்காக‌ அர்ஜுன் என்ன‌ avoid ப‌ண்றா? அந்த‌ விஷிய‌த்த‌ ப‌த்தி அவ‌ த‌ப்பா புரிஞ்சுகிட்டு, இப்பிடியெல்லா ப‌ண்றானா? அவ‌னுக்கு புரிய‌வெச்சே ஆக‌னும்.

ச‌ந்ரா ரூமுக்கு சென்றாள். அங்கு அர்ஜுன் எதையோ யோசித்துக்கொண்டு பெட்டில் அம‌ர்ந்திருந்தான்.

ச‌ந்ரா : அர்ஜுன்!

அர்ஜுன் : என‌க்கு தூக்கோ வ‌ருது நா தூங்க போறே.

அர்ஜுன் எழுந்து Sofaவில் ப‌டுத்துக்கொண்டான்.

ச‌ந்ரா : இல்ல‌ நா உங்கிட்ட‌ ஒன்னு சொல்ல‌னும்.

அர்ஜுன் : என்ன‌?

ச‌ந்ரா : நேத்து, நா அழுத‌துக்கு கார‌ணோ, நீ நெனைக்கிற‌ ம‌திரி இல்ல‌.

அர்ஜுன் : நா அத‌ ப‌த்தி பேச‌ விரும்ப‌ல‌. ரொம்ப‌ லேட் ஆயிரிச்சு நீ தூங்கு.

ச‌ந்ரா : அர்ஜுன் பிலீஸ். நா சொல்ற‌த‌ ஒரு தெட‌வ‌ கேளு. நீ தேவ‌யில்லாம‌ வ‌ருத்த‌ப்ப‌ட்டுகிட்டு இருக்க‌.

அர்ஜுன் : நா ஒன்னு வ‌ருத்த‌மா இல்ல‌.

ச‌ந்ரா : உன்னோட‌ வாய்தா அப்பிடி சொல்லுது. ஆனா உன்னோட‌ மொக‌மே காட்டிகுடுக்குது, நீ வ‌ருத்த‌மா இருக்க‌ன்னு.

அர்ஜுன் Sofaவிலிருந்து எழுந்து,

அர்ஜுன் : ஆமா நா வ‌ருத்த‌மாதா இருக்கே. அத‌னால‌ என்ன‌?

ச‌ந்ரா : என்ன‌ எதுக்கு avoid ப‌ண்ற‌?

அர்ஜுன் : உன‌க்கு நா உன்ன‌ தொட‌ற‌து புடிக்க‌ல‌. அத‌னால‌தா நா உன்னோட‌ ச‌ந்தோஷ‌த்துக்காக‌, உன்னவிட்டு வெல‌கி இருக்க‌ முய‌ற்ச்சி ப‌ண்றே.

ச‌ந்ரா : இல்ல‌ அதுக்கு அவ‌சிய‌மே இல்ல‌. நீ த‌ப்பா புரிஞ்சுகிட்டு இருக்க‌. ஏன்னா, நேத்து நா அதுக்காக‌ அழ‌ல‌. நா,

அர்ஜுன் : ஒரு நிமிஷோ.

ச‌ந்ரா பேசுவ‌தை நிறுத்திவிட்டு, அர்ஜுனை பார்த்தாள்.

அர்ஜுன் : நீ எதுக்காக‌ இப்பிடி என்ன‌ ச‌மாதான‌ ப‌டுத்த‌ முய‌ற்ச்சி ப‌ண்ற‌? அதுக்கெல்லா அவ‌சிய‌மே இல்ல‌.

ச‌ந்ரா : நா சாமாத‌ன‌ப்ப‌டுத்த அப்பிடி சொல்ல‌ல‌. உண்மையாவே நேத்து நா அதுக்காக‌ அழ‌ல‌.

அர்ஜுன் : எதுக்கு நீ திரும்ப‌ திரும்ப‌ பொய் சொல்ற‌ ச‌ந்ரா? நேத்து நா உன்னோட‌ கைய‌ புடிச்ச‌ப்ப‌ நீ எவ்ளோ கோவ‌மா என்னோட‌ கைய‌ விடுன்னு சொன்ன‌. அதுக்கு என்ன‌ அர்த்தோ?

ச‌ந்ரா : அது நா,

அர்ஜுன் : நா உன்னோட‌ புருஷ‌. என‌க்கு உன்னோட‌ கைய‌ புடிக்க‌ எல்லா உரிமையும் இருக்கு. ஆனாலும் நா உன்னோட‌ கைய‌ புடிக்க‌ற‌த‌ நீ விரும்ப‌ல‌. நீ என்ன‌ அந்த‌ அள‌வு வெறுக்குற‌.

ச‌ந்ரா : இல்ல‌ அது உண்மை இல்ல‌.

அர்ஜுன் : எதுக்காக மறுபடியும் மறுபடியும் பொய் சொல்ற சந்ரா? நீ என்ன வெறுக்குறன்னு எனக்கு நல்லா தெரியும். நீயே எங்கிட்ட சொல்லியிருக்க.

சந்ரா : (சத்தமாக) நா உன்ன‌ வெறுக்க‌ல‌.



அர்ஜுன் : (அதிர்ச்சியாக‌ எதிர்ப்பார்ப்புடன்) என்ன‌?

ச‌ந்ரா : நம‌க்கு க‌ல்யாணோ ஆகும்போது, நா உன்ன‌ வெறுத்த‌து உண்ம‌தா. ஆனா இப்போ நா உன்ன‌ கொஞ்ச‌ங்கூட‌ வெறுக்க‌ல‌.

தொட‌ரும்...
 

Author: Oviya Blessy
Article Title: CHAPTER-44
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.