Chapter-44

thenaruvitamilnovels

The World of Words
Staff member
Dec 25, 2024
163
0
16
www.amazon.com
நிரஞ்சனை பற்றி தேன்மொழி கேட்டதால் சில நிமிடங்கள் சொல்லலாமா வேண்டாமா என்று யோசித்த அர்ஜுன்,

“இவ்ளோ சொல்லியாச்சு.. இதுக்கு அப்புறம் அதை மட்டும் மறைச்சு என்ன பண்ண போறோம்?” என்று நினைத்து,

“நீ எதுவா இருந்தாலும் தெளிவா சொல்லணும்னு சொன்னில... சொல்றேன்.

ஓப்பனா எல்லாருக்கும் தெரியிற மாதிரி அவன கொல்ல போறேன்னு அவன்கிட்டையே சொன்னேன்.

அவன் பயந்து சைனாவுக்கு தப்பிச்சு போக பார்த்தான்.

அப்ப அவனையும், அவன் கூட இருந்தவர்களையும் மொத்தமா தூக்கிட்டு வந்து,

என் ஆத்திரம் அடங்கற வரைக்கும் கொஞ்சம் கொஞ்சமா கத்தியால என் கையாலயே குத்தி குத்தி அவங்க உடம்புல இருந்து உசுரு போற வரைக்கும் என் கண்ணு முன்னாடி அவங்க அழுது கதர்றத பார்த்து சந்தோஷப்பட்டு கொஞ்சம் கொஞ்சமா டார்ச்சர் பண்ணி

அப்படியே ஒரு நாள் முழுக்க அவங்களை உயிரோட வச்சிருந்து, அவங்க சாகப் போற டைம்ல எரிச்சிட்டேன்.

அவங்களோட டெட் பாடி தான் நான் என் சிியாவுக்கு குடுத்த லாஸ்ட் கிஃப்ட்.

அவ சமாதிக்கு பக்கத்திலேயே அவனுங்களையும் புதைச்சிட்டேன்.” என்று வந்த கோபத்தில் தன் பற்களை கடித்துக் கொண்டு சொன்னான்.

அவன் செய்த ஒவ்வொன்றையும் அவன் சொல்லிக் காட்டும்போது,

அவனது கண்கள் முதல் காது வரை அவன் உடல் முழுவதும் கோபத்தினால் சிவந்தது.

ஒரு நொடி அவனை அப்படி பார்த்த தேன்மொழி “ஒரு பக்கம் ரொம்ப பாசக்காரனா இருக்கான்.

இவன் குடும்பத்துக்காக என்ன வேணாலும் செய்ய ரெடியா இருக்கான்.

ஆனா இன்னொரு பக்கம் கொடூரமான கூலிப்படை கொலைகாரன் மாதிரி இருக்கானே!

பொதுவாவே எல்லாருக்கும் இரண்டு பக்கம் இருக்கும்னு சொல்லுவாங்க.

ஆனா ஒருத்தனால எப்படி ரெண்டு டிஃபரண்ட் எக்ஸ்ட்ரீம்ளையும் இருக்க முடியும்?

Arjun is just unbelievable!” என்று நினைத்து அவனை பயம் கலந்த ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டிருந்தாள்.

இவனுக்குள் ஒரு கொடூரன் இருக்கிறான் என்று மட்டும் இன்று அவள் தன் மனதிற்குள் பதித்து வைத்துக் கொள்ள வேண்டிய முக்கிய விஷயமாக இருந்தது.

இவனை எதிர்த்து ஏதேனும் ஒன்று செய்வதற்காக மகேஷ் எப்படி பயந்தான் என்று யோசித்துப் பார்த்த தேன்மொழிக்கு இப்போது அதன் காரணம் புரிந்தது.

இப்படியே அவனைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்த தேன்மொழிக்கு திடீரென சியா மற்றும் ஜனனியின் தோழியான நிரஞ்சனின் தங்கை ஸ்ருதியை பற்றிய ஞாபகம் வர,

“ஆமா.. நீங்க நிரஞ்சன் ஃபேமிலில இருந்தவங்களை என்ன பண்ணுங்க?

அவன் தங்கச்சி ஸ்ருதிய கூட உங்களுக்கு ரொம்ப பிடிக்கும்னு சொன்னிங்களே!” என்று பதட்டமான முகத்துடன் கேட்க,

“கொன்னுட்டேன். என்ன ஒரு வித்தியாசம்ன்னா..

என் சியாவை கொன்னவங்கள கொடூரமா கொன்னேன்.

நிரஞ்சன் ஃபேமிலில இருந்தவங்கள ‌ பாய்சன் குடுத்து சிம்பிளா கொன்னுட்டேன்.

இதுவே நான் அவங்களுக்கு காமிச்ச பெரிய கருணை தான்.” என்று சாதாரணமாக சொன்ன அர்ஜுன் எழுந்து நின்று அவன் கோட்டில் ஒட்டி இருந்த மண்ணை தட்டினான்.

“நெஜமாவே மனுஷனா இல்ல சைத்தானா இவன்?” என்ற ரீதியில் அவனை மேலும் கீழும் பயத்துடன் பார்த்த தேன்மொழி,

“உங்களுக்கு ஸ்ருதியும் ஜனனி மாதிரி தான்னு சொன்னீங்க..!!

அப்புறம் எப்படி உங்களுக்கு அவங்களை கொல்ல மனசு வந்துச்சு?" என்று ஆற்றாமையுடன் கேட்க,

“ஜனனி மாதிரின்னு தானே சொன்னேன்..

அவ ஒன்னும் ஜனனி இல்லையே..

அவ கண்ணு முன்னாடியே அவ ஃபேமிலில இருக்கிறவங்க எல்லாரையும் நான் கொன்னுட்டா, அவ மட்டும் உயிரோட இருக்கும்போது, அவளுக்கு என்ன பழிவாங்கணும்னு தோணாதா?

ஃபியூச்சர்ல அவளால எனக்கோ, என் ஃபேமிலிக்கோ ஏதாவது ஆனா நான் என்ன பண்றது?

ஒரு தப்பை தெரியாம ஒரு தடவை தான் செய்யணும் தேன்மொழி.

என் எனிமியா இருக்கிறவங்க யாருக்கும் இந்த உலகத்துல வாழத் தகுதியில்லை.

இங்க ரொம்ப பணி பெய்து. இப்படியே இன்னும் கொஞ்ச நேரம் இங்க உட்கார்ந்து பேசிட்டு இருந்தா,

நாளைக்கு இரண்டு பேரும் குளிர் காய்ச்சல் வந்து படுத்துக்க வேண்டியது தான்..

வா உள்ள போலாம்." என்ற அர்ஜுன் அவள் கையை பிடித்து அழைத்துக் கொண்டு உள்ளே சென்றான்.

இப்படியும் கூட இந்த உலகில் மனிதர்கள் இருக்கிறார்களா? என்று நினைத்து வியப்புடன் அவனைப் பார்த்தபடி அவனுடன் சென்றாள் தேன்மொழி.

அவளுடன் தனது ரூமிற்கு சென்ற அர்ஜுன் ரெப்ரெஷ் ஆகிவிட்டு இரவு உடையை அணிந்து கொண்டு சென்று கட்டிலில் படுத்தான்.

தானும் நைட் டிரஸ்க்கு மாறியிருந்த தேன்மொழி, “இப்ப நம்ம இவன் பக்கத்துல தான் போய் படுக்கணுமா?” என்று யோசித்தபடி தயங்கி நின்றாள்.

அப்போது “அவன் இனிமே என்ன விட்டுட்டு போக மாட்டிலன்னு கேட்கும்போது,

அப்படியே வேகமா அவன் மேல அன்பும் பாசமும் பொங்குற மாதிரி போக மாட்டேன்.. போக மாட்டேன்னு அத்தனை தடவ சொன்ன..

இப்ப என்ன அவன் பக்கத்துல போகுறதுக்கே இப்படி பயப்படுற?

நீங்க தான் ரொம்ப தைரியமான ஆளாச்சே மிஸ்ஸஸ் அர்ஜுன்..

போங்க.. போய் உங்க ஹஸ்பண்ட் பக்கத்துல படுத்து தூங்குங்க...!!” என்று அவள் மனசாட்சி அவளிடம் சொல்ல,

தேன்மொழி அதற்கு பதில் சொல்லி ஆஃப் செய்வதற்குள்

“வந்து படுக்குற ஐடியா இல்லையா உனக்கு?

எனக்கு தூக்கம் வருதுடி. சீக்கிரம் வந்து படுத்துட்டு லைட்டை ஆப் பண்ணு.” என்று சோர்வான குரலில் சொன்னான் அர்ஜுன்.

அவன் குரலைக் கேட்டவுடன் எஜமானின் சொல்லுக்கு வாலாட்டும் நாய்க் குட்டியை போல “இதோ வந்துட்டேன்” என்ற தேன்மொழி சமத்துப் பிள்ளையாக சென்று அவன் அருகில் படித்துக் கொண்டு அருகில் இருந்த லைட் சுவிட்ச்சை ஆப் செய்தாள்‌.

அவளை அணைத்துக் கொண்ட அர்ஜுன் அவள் முகத்தை தன் பக்கம் திருப்பி அவள் கண்களை பார்த்து,

“இப்ப சொல்லு.. என்ன பத்தி இனிமே நான் மறைக்கிறதுக்கு எதுவும் இல்லை.

நான் எல்லாத்தையும் உன்கிட்ட சொல்லிட்டேன்.

இனிமே நீ என்னை விட்டுப் போகணும்னு யோசிப்பியா?”

என்று காதல் ஏக்கங்களை தன் கண்களில் தேக்கி வைத்து அவளிடம் கேட்க,

அவள் தலை தானாக அவளது கட்டுப்பாட்டையும் மீறி போக மாட்டேன் என்று சொல்வதைப்போல இடவலமாக அசைந்தது.

இருப்பினும் அவள் வாயால் அந்த வார்த்தைகளை கேட்டால் தான் நிம்மதியாக இருக்கும் என்று நினைத்த அர்ஜுன்,

“இப்படி சும்மா தலையாட்டுறதை எல்லாம் நான் ஒத்துக்க முடியாது.‌

வாய தொறந்து, உனக்கு என் கூட இருக்க புடிச்சிருக்குன்னு சொல்லு.

அப்பதான் நான் நம்புவேன்.” என்றவன் அவள் அருகில் நெருங்கி சென்றான்.

அவனது சூடான மூச்சுக்காற்று அவள் முகத்தின் மீது பட்டுக்கொண்டிருக்க,

“இப்படி குளோசப்ல வந்து பயமுறுத்துற மாதிரி என்ன புடிச்சிருக்குன்னு சொல்லுன்னு சொன்னா,

யாரு தாண்டா உன்ன பிடிக்கலைன்னு சொல்லுவாங்க?

இவனுக்கு எங்கிட்ட எப்படி பேசினா வேலை ஆகும்னு நல்லா தெரிஞ்சிருக்கு.”

என்று நினைத்த தேன்மொழி “எனக்கு.. எனக்கு உங்க கூட இருக்கிறது புடிச்சிருக்கு மிஸ்டர் அர்ஜுன்.” என்று திக்கி திணறி சொன்னாள்.

உடனே தனது ஒற்றை விரலால் அவள் முகத்தை வருடியபடி அவளது முகத்தில் விழுந்து கிடந்த கூந்தலை ஓரமாக நகர்த்திய அர்ஜுன்,

“அதான் உனக்கு என்னை புடிச்சிருக்குல?

அப்புறம் ஏன் யாரோ ஸ்டேஞ்சர் கிட்ட பேசுற மாதிரி என்ன மிஸ்டர் அர்ஜுன்னு கூப்பிடுற?

யாராவது கட்டுண புருஷனை இப்படித்தான் கூப்பிடுவாங்களா?

அதுவும் நம்ம இவ்ளோ க்ளோசா.. ஒருத்தரை ஒருத்தர் கட்டிப்பிடிச்சிட்டு படுத்து இருக்கும் போது!" என்று ஹஸ்கி வாய்ஸில் கேட்டான்.

அவனது கவர்ச்சியான ஆளை மயக்கும் குரலும், வசீகரமான முகமும் அவளுக்குள் ஒரு குறுகுறுப்பை ஏற்படுத்த,

இன்னும் இதற்கெல்லாம் சரிவர பழகி இருக்காத தேன்மொழி அவன் தோள்களை இறுக்கமாக பிடித்துக் கொண்டு,

“எனக்கு உங்கள வேற எப்படி கூப்பிடுறதுன்னு தெரியல.” என்று சொல்ல,

அவளது இதயம் படபடவென வேகமாக துடித்துக் கொண்டிருந்தது.

“தெரியலனா யோசி. இப்போ நீ என்ன செல்லமா ஆசையா ஏதாவது ஒரு நிக் நேம் வச்சு கூப்பிடுற..‌

அதுவரைக்கும் நான் தூங்க மாட்டேன். உன்னையும் தூங்க விட மாட்டேன்.”

என்ற அர்ஜுன் தன் பற்களால் லேசாக அவளது கீழ் உதட்டை கடித்து இழுத்தான்.

அதில் சிலையாய் சமைந்துப்போன அவள் உடல் குங்குமமாய் சிவக்க,

அவளது ‌ கழுத்து வளைவில் தனது அடுத்த முத்தத்தை பதித்தான் அவன்.

அவ்வளவுதான், அதற்கு மேல் அவளால் அந்த இன்ப வேதனையை பொறுத்துக் கொள்ள முடியவில்லை.

அவள் கைகள் இரண்டும் அவனது தோள்களில் தன் அழுத்தத்தை கூட்ட,

அவன் அங்கே அவள் மீது தனது முத்தங்களின் எண்ணிக்கையை கூட்டிக்கொண்டே சென்றான்.

அவனிடம் செயலற்று கைப்பாவையாய் எதுவும் செய்ய முடியாமல் அசைவின்றி கிடந்த தேன்மொழியின் மூளை‌,

“ஏய்... தேன்மொழி சீக்கிரம் ஏதாவது யோசி.. நீ அவனோட நிக் நேம் என்னன்னு டிசைட் பண்ணி சொல்ற வரைக்கும் அவன் ஸ்டாப் பண்ண மாட்டான்.

‌ இன்னும் கொஞ்ச நேரம் நீ அப்படியே சும்மா இருந்தா, கழுத்துல இருந்து அப்படியே அவன் கீழே போயிடுவான்.

அப்புறம் அவ்வளவு தான், சோலி முடிஞ்சுது.. உன்னால எதுவும் பண்ண முடியாதுடி.”

என்று‌ உடனே அபாய மணி அடுத்து சொல்லி அவளை அலர்ட் செய்தது.

அதனால் சுயநினைவிற்கு திரும்பிய தேன்மொழி “ஐயோ யோசி ‌டி யோசி..

சீக்கிரமா ஏதாவது யோசி..” என்று தனக்குள் சொல்லிக் கொண்டிருந்தவள்,

திடீரென “அர்ஜு” என்று சத்தமாக கத்திச் சொன்னாள்.

அதனால் அதுவரை தன் வேலையில் பிஸியாக மெய்மறந்து ஈடுபட்டிருந்த அர்ஜுன்,

அவன் அருகில் படுத்திருந்த தேன்மொழி அவன் காது ஜவ்வு கிழியும் அளவிற்கு கத்தியதால் சட்டென அவளை விட்டு கொஞ்சம் விலகி,

தன் காதை ஒற்றைக் கையால் அடைத்துக் கொண்டு “அட எருமை... எதுக்குடி இப்படி கத்துற?

இன்னும் கொஞ்சம் ஹை பீட்ச்சில கத்தி இருந்தினா, எனக்கு உன்னால காதே கேட்காம போயிருக்கும்.” என்றான்.

அதனால் உடனே இதற்கும் அவன் வேறு விதமாக ஏதேனும் தண்டனை கொடுத்து விடுவானோ? என்று யோசித்து பயந்த தேன்மொழி,

“சாரி சாரி தெரியாம உணர்ச்சிவசப்பட்டு கத்திட்டேன்.

எனக்கு தூக்கம் வருது. நான் தூங்குறேன் பாய்.. குட் நைட்.” என்று சொல்லிவிட்டு தப்பித்தோம் பிழைத்தோம் என்பதைப் போல அவசர அவசரமாக வேறு புறமாக திரும்பி படுத்து தன் கண்களை மூடிக் கொண்டாள்.‌

அவளது பின்புறத்தை பார்த்து குறுநகை சிந்திய அர்ஜுன் அவள் பக்கம் திரும்பி படித்துக் கொண்டு வழக்கம்போல் அவள் வயிற்றில் கை போட்டு அவளை தன் பக்கம் இழுத்து இறுக்கமாக அணைத்துக் கொண்டு தன் கண்களை மூடினான்.

ஏனோ இத்தனை நாட்களாக அவன் மனதில் இருந்து அவனை அழுத்திக் கொண்டு இருந்த அனைத்து பாரத்தையும் இப்போது அவன் அவளிடம் இறக்கி வைத்துவிட்டு,

மனதளவில் தூய்மையானவனாக மாறி தன் மனம் இரகைப்போல் லேசானதாக உணர்ந்தான் அர்ஜுன்.‌

மறுநாள் காலை சீக்கிரமாக தூங்கி எழுந்த உதையா ‌ அவசர அவசரமாக கிச்சனுக்கு சென்று சமைத்து உணவுகளை ஹாட் பாக்சில் எடுத்துக்கொண்டு தன் பைக்கில் ஹாஸ்பிட்டலை நோக்கி விரைந்தான்.

அங்கே விஜயா கவர்மெண்ட் ‌ஹாஸ்பிடலில் அட்மிட்டாகி இருக்க,

வழக்கம்போல் இன்றும் தூங்காமல் தன் அம்மாவை பார்த்தபடி அப்படியே சோகமே உருவாக அமர்ந்திருந்தான் ஆதவன்.

காலையில் டியூட்டிக்கு செல்வதற்கு முன்பாக அவர்களை பார்த்துவிட்டு செல்லலாம் என்று நினைத்திருந்த சப்இன்ஸ்பெக்டர் சதீஷ் அங்கே சென்றான்.

அவனைப் பார்த்தவுடன் எழுந்து வேகமாக அவன் அருகில் சென்று அவனை அணைத்துக் கொண்ட ஆதவன்,

“ஏன் அண்ணா எங்களுக்கு மட்டும் இப்படி எல்லாமே தப்பு தப்பா நடக்குது?

முதல்ல தேனு காணாம போனா. நம்ம எவ்ளோ ட்ரை பண்ணியும் இன்னும் அவளை கண்டுபிடிக்க முடியல.

அவ காணாம போய் ரொம்ப நாளாச்சு. அவளுக்கு என்ன ஆச்சுன்னு ஒன்னும் தெரியல.

இப்ப அம்மாவுக்கும் இப்படி ஆயிடுச்சு.

எனக்கு என்ன பண்றதுன்னே தெரியல அண்ணா!” என்று அழுது புலம்ப,

எடுத்துக்கொண்ட மருந்தின் வீரியத்தின் காரணமாக நன்றாக உறங்கிக் கொண்டிருந்த விஜயாவை பார்த்த சதீஷ்,

ஆதவனை வெளியே அழைத்து சென்று “திடீர்னு அம்மாவுக்கு எப்படி ஆக்சிடென்ட் ஆச்சு?

நேத்து நைட்டு தான் உதையா என்கிட்ட இதை பத்தி சொன்னான்.

அதான் உங்களை பாத்துட்டு போலாம்னு காலையிலேயே கிளம்பி வந்துட்டேன்.” என்றான்.

“எங்க அம்மாவுக்கு இன்னும் புதுசா என்ன ஆகணும் அண்ணா?

எங்க அக்கா எப்ப காணாம போனாளோ, அப்பயே அம்மா ஒரு வழி ஆயிட்டாங்க.

சரியா சாப்பிடாம தூங்காம இருந்து அப்படியே பைத்தியம் புடிச்ச மாதிரி மாறிட்டாங்க.

வீட்ல இருந்து சொல்லாம கொள்ளாம திடீர்னு அவங்களாவே நான் தேன்மொழிய தேடி போறேன்..

என் பொண்ணை கண்டுபிடிச்சு கூட்டிட்டு வரேன்னு கிளம்பி போய்டுறாங்க...

அப்படி எனக்கே தெரியாம அவங்க வெளியே போய் ரோட்ல நடந்து போகும்போது மயக்கம் வந்து ஆப்போசிட்ல வந்த கார் மேல போய் விழுந்து ஆக்சிடன்ட் ஆயிடுச்சு.

நானும் உதையா அண்ணாவும் தான் ‌ அவங்கள இங்க கொண்டு வந்து அட்மிட் பண்ணோம்.” என்று ஆதவன் சொல்லிவிட்டு அழ,

அவனுக்கு ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தான் சதீஷ்.

அப்போது ‌ தேன்மொழியின் வீட்டில் தங்கி இருக்கும் உதையா அவர்களுக்காக அவன் சமைத்த உணவுடன் அங்கே வந்தான்.‌

சதிசை நேரில் பார்த்தவுடன் ‌“தேன்மொழிய பத்தி உங்களுக்கு ஏதாவது தெரிஞ்சதா ப்ரோ?

அவ கெடச்சிட்டாலே அம்மா சீக்கிரம் சரியாயிடுவாங்க.

அவளுக்கு இந்நேரம் என்ன ஆகியிருக்குமோன்னு நெனச்சா எனக்கே பயத்துல என்னென்னமோ தோணுது.‌

பாவம் அவங்க... அவங்க பொண்ணுக்கு இப்படி ஆனதை அவங்களால எப்படி தாங்க முடியும்?” என்று உதையா கலங்கிய கண்களுடன் கேட்க,

“என்னால என்ன முடியுமோ அது எல்லாத்தையும் தாண்டி ஒரு படி மேல போய் நான் தேன்மொழியை தேடி பாத்துட்டேன் உதையா.

நான் இத்தனை மாசமா தேடினதுக்கு தேன்மொழி இந்தியாவுக்குள்ள இருந்திருந்தா கண்டிப்பா கிடைச்சிருப்பா.

எனக்கு தெரிஞ்சு அவளை இந்நேரம் வேற கண்ட்ரிக்கு யாரோ கடத்திட்டு போயிருக்கணும்.‌

ஆனா இவ்ளோ பெரிய உலகத்துல அவ எந்த மூலையில இருக்கான்னு தெரியாம நம்ம எப்படி போய் தேடுறது?

அட்லீஸ்ட் அவ எந்த கண்ட்ரில இருக்கான்னு தெரிஞ்சா கூட, அங்க இந்தியாவில இருந்து வொர்க் பண்ற நெட்வொர்க்கை கொஞ்சம் கொஞ்சமா புடிச்சு டிராக் பண்ணி போய் அவ எங்க இருக்கான்னு கண்டுபிடிக்கிறதுக்கு ஒரு சான்ஸ் இருக்கு.

அதுக்கும் நான் ட்ரை பண்ணிட்டு தான் இருக்கேன்.

பட் நான் என்ன பண்ணாலும் என்னால தேன்மொழியே ரீச் பண்ண முடியல.

பக்காவா ஸ்கெட்ச் போட்டு யாரோ பெரிய ஆளுங்க தான் அவளை தூக்கி இருக்காங்க.

ஒருவேளை அவ எங்க இருக்கான்னு நம்ம கண்டுபிடிச்சா கூட, அவளை நம்மளால காப்பாத்தி இங்க கொண்டு வர முடியுமான்னு எனக்கு தெரியல.”

என்று சோகம் கலந்த குரலில் நிதர்சனத்தை அவர்களுக்கு போலியான நம்பிக்கையை கொடுக்க வேண்டாம் என்பதற்காகவே வெளிப்படையாக சொல்லிவிட்டான் சதீஷ்.

உடனே சோகத்தின் எல்லைக்கே சென்றுவிட்ட ஆதவன் தன் முகத்தை மூடிக்கொண்டு சேரில் அமர்ந்து அழுது கதற தொடங்கி விட்டான்.

இப்போது தேன்மொழியை நினைத்து வருத்தப்படுவதா?

இல்லை ஹாஸ்பிடலில் இப்படி கை கால்களில் அடிபட்டு வந்து படுத்து கிடக்கும் தன் அம்மாவை நினைத்து வருத்தப்படுவதா?

இவர்களுக்கு நடுவில்
தனது கல்லூரி வாழ்க்கை கானல் நீராக கரைந்து கொண்டு இருக்கிறதே.. என்று எண்ணி தன்னை நினைத்து வருத்தப்படுவதா? என்றே அவனுக்கு தெரியவில்லை.

இருப்பினும் அந்த நிலையில் அவனுக்கு ஆறுதலாக எப்போதும் அவனுடன் உதையாவும், தன்னால் முடியும்போது சதீஷும் அவனுடன் இருந்தார்கள்.

- மீண்டும் வருவாள் 💕
 

Author: thenaruvitamilnovels
Article Title: Chapter-44
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.