பாகம் -43

எங்க அக்காவ இழந்த வரைக்கும் போதும் இனி எதுவா இருந்தாலும் நாங்க பார்த்துக்கிறோம் நீங்க இந்த விஷயத்துல இனி தலையிடாதீங்க.

என்று ஆவேசமாக ஷாம் அசோக்கை பார்த்து கூற அசோக் தலை கவிழ்ந்து செயலற்று நின்றார்.

மாறனை கோர்ட்டில் ஒப்படைப்பதற்காக சிறையில் வைத்திருந்தனர்.

அங்கே பார்க்க போன லலிதா மற்றும் ஷ்யாம்மோடு கூட ஏதும் பேசவில்லை மாறன்.


நீ ஏதும் கவலைப்படாத தமிழ் எப்படி ஆச்சும் உன்னைய நாங்க வெளியே எடுத்துடுவோம் நம்பிக்கையா இரு தமிழு.

என்றார் சீதாவின் அன்னை லலிதா.

இதோ பாருங்க சார் எங்களால ஒன்னும் செய்ய முடியாது கேஸ் ரொம்ப ஸ்ட்ராங்கா இருக்கு.

நீங்க ஒரு நல்ல வக்கீலா பாருங்க அப்புறம் அந்த பையன் கூட்டிட்டு வந்ததுல இருந்து பச்ச தண்ணி குடிக்கல சாப்பிடவும் இல்லை இப்படியே இருந்தா எப்படி சார் கொஞ்சம் சொல்லுங்க.

ஓகே சார் நான் சொல்றேன்.

இப்படியே நடந்ததை யோசிச்சிட்டு இருக்காத மாற.

நடந்தது நடந்து போச்சு இதுல எதையும் நம்மளால மாத்த முடியாது.

எல்லாமே விதி.

நீ எதுக்கும் கவலைப் படாத உனக்கு இனிமே நாங்க இருக்கோம். என்றான் ஷ்யாம்.

அவன் எந்த பதிலும் கூறவில்லை.

சற்று அவனையே வெறிக்க பார்த்த ஷியாம்.

வாங்கம்மா நாம போயிட்டு வக்கீல் பார்க்கலாம் என்ற படி செல்ல.

மாமா......

உடனே ஷியாம் திரும்பி ஓடினான் மாறனை நோக்கி.

சொல்லு மாறா.

அம்மா நல்லா இருக்காங்கள.

அவங்கள பத்திரமா பாத்துக்கோங்க.

என்ன நினைச்சு கவலை பட வேண்டாம்னு சொல்லுங்க.

வியப்பின் உச்சியில் ஷ்யாம்.

🥺😳

அன்று இரவு....

மாறா...... வா அம்மாகிட்ட.....

நான் இங்கே தனியா இருக்கேன் டா.

நீ இல்லாம எனக்கு இருக்கவே பிடிக்கல.

நீயும் என்கிட்ட வந்துடு மாறா.

என்ற சீதாவின் குரல் மாறனின் காதில் ஒழித்துக் கொண்டே இருந்தது.

மா நான் வரேன் மா.

நீ பயப்படாத மா நானும் சிக்கிரம் வந்துறேன்

எனக்கும் நீ இல்லாம இருக்கவே முடியல மா.

நானும் உன் கூடவே வந்துடறேன்.

என்றபடி....

சிறையில் வைத்திருந்த ஒரு தண்ணிர் குவலையை உடைத்து ஒரு பகுதியின் முனையை எடுத்து உடைத்து தன் கழுத்தை அறுத்துக் கொள்ள.....

கையை கழுத்தில் வைக்க

டேய் என்னடா பண்ற....

கான்ஸ்டபிள் சீக்கிரம் செல்ல தொறங்க.

அவசர அவசரமாக சிறையைத் திறந்தவர்கள் மாறனின் கையில் இருந்த அந்த சிறிய கூர்மையான பொருளை வாங்கி தூரே எரிந்தன.

அவன் அப்பொழுதும் அடங்கவில்லை.

என்ன விடுங்க நான் என் அம்மாகிட்ட போகணும்.

எங்க அம்மா தனியா இருக்காங்க.

எங்க அம்மாவுக்கு நான் இல்லாம இருக்க முடியாது.

என்ற படி அனைவரையும் தாக்கினான்

ஒரு வழியாக மாறனை இரும்பு சங்கிலியால் இரண்டு கைகளையும் கட்டி கால்களையும் கட்டி சிறையில் பூட்டி வைத்தனர்.

காலை விடிந்ததும் ஷ்யாமிற்க்கு தகவல் கொடுக்கப்பட்டது.

இத பாருங்க ஷாம் கோர்ட்ல ஆஜர் படுத்துவதற்கு முன்னாடி

இது மாதிரி தற்கொலை முயற்சி பண்ணிக்கிட்டா நாங்க என்ன பண்ண முடியும் சொல்லுங்க.

அதுலயும் நைட்டு கட்டுப்படுத்துவது ரொம்ப பெரிய கஷ்டமா போச்சு.

கொஞ்சம் அட்வைஸ் பண்ணிட்டு போங்க சார்.

ரெண்டு நாள் கவர்மெண்ட் ஹாலிடே சோ அதனாலதான் நாங்க கோர்ட்ல இன்னும் ஆஜர் பண்ணாம வச்சிருக்கோம்

நாளைக்கு கண்டிப்பா கோட் ல ஆஜர் படுத்திடுவோம். அதுக்குள்ள இப்படி பண்றான் சார்.

ஏதாவது பண்ணிக்கிட்டா .

அப்பறம் எங்க தல வீணா உருளும் சார்.

மாறா உனக்கு என்ன பிரட்சன ஏன் இப்படி எல்லாம் நடந்துக்கிற.

அம்மா என்ன கூப்பிட்டாங்க மாமா.

அம்மாக்கு தனியா இருக்க பயமா இருக்கும்

நான் இல்லாம சாப்பிட கூட

மாட்டாங்க மாமா.

அதான் அம்மாட்ட போக போறேன் என்று கூற அதிர்ந்தான் ஷ்யாம்.

மாறா உன் அம்மா இப்போ உயிரோட
இல்லே அதை மொதல்ல புறிஜிக்கோ.

ஷ்யாம் சொல்வது ஏதும் காதில் விழவில்லை மாறனுக்கு.

அம்மாட்ட போகனும்

அம்மாட்ட போகனும் என்று

சிறு குழந்தை போலே அடம் பிடிக்கும் ஷ்யாம்மிற்க்கு எப்படி புரிய வைக்கப் போகிறோம்.

அவன் அன்னை இருக்கும் இடம் இவ்வுலகம் இல்லை என்று....

சீதா இறைவனின் தோட்டத்தில் மலராய் மலர்ந்து விட்டாள் என்று யார் மாறனுக்கு சொல்வது.

சார் மாறன் பேசறது எல்லாம் பார்த்தா அப்னோர்மலா தெரியுது.

கண்டிப்பா டாக்டர்ர கன்சல் பண்ணனும்.இல்லே நா எந்த அசம்பாவிதம் வேணாலும் நடக்கலாம்.

ஓகே நாங்க இமிடியட்டா ஏற்பாடு பண்றோம்.

எஸ் மிஸ்டர் ஷ்யாம்

நீங்க நினச்சது கரெக்ட் தான்.

அவர் நார்மலா இல்லே.

கொஞ்சம் கொஞ்சமா அவர் சுயத்தை இலந்துட்டு இருக்காரு .

என்ன சொல்றீங்க டாக்டர்.

எஸ் இப்படி இவர விட்டுடோம்னா

ஐ ஆம் சாரி

மாறனுக்கு பைத்தியம் பிடிட்சிரும்

ஷ்யாம்மிற்கு உலகமே சுற்றுவதை நிருத்திக்கொண்டதை போலே தோன்றியது.

ஆம்மாம் ஷ்யாம் இப்போ மாறனோட நிலை இதுதான்.

அவருக்கு வந்திருக்க நோயோட பேரு.

Post -traumatic stress disorder
Post - ட்ரவுமாடிக் ஸ்ட்ரெஸ் டிசோர்ட்டர்

அதிர்ச்சிக்கு பிறகான மனஅழுத்தம் குறைபாடு.

சார் இத சரி பண்ண முடியாதா.

முடியும்.

ஆனா இது மருந்தாலையோ மாதிரைகளாலையோ சரி பண்ண முடியாது.

அவர்க்கு இனி தேவை எல்லாம் அவங்க அம்மா மட்டும் தான்.

டாக்டர் .....!!!!!??!!!!!

புரியுது மிஸ்டர் ஷ்யாம்.

அப்போ இதுக்கு வேற மாற்று என்று அசோக்கின் நண்பர் Dr கிருஷ்ணா கேட்க.

இருக்கு டாக்டர் அவர் இத எல்லாத்தையும் மறக்கணும்.

இந்த விசயம் துளிக்கூட ஞாபகம் வராத தூரமான இடத்துக்கு போகணும்.

அவருக்கு தேவை நிம்மதியான தூக்கம் அன்பான நாலு வார்த்தை கூட நான் கொடுக்கற மருந்து தொடர்ந்து சாப்பிட்டுக்கிட்டே வரணும்.

எத்தனை நாளைக்கு டாக்டர்.

புன்னகைத்தவர்.

இது நாளைக்கு இல்ல எத்தனையோ வருஷத்துக்கு தொடரும்.

எப்போ மாறனுக்கு அவங்க அம்மா தேவ படமா போறாங்களோ அப்பதான் அவருக்கு முழுசா குணமாகும்.

மாறனுக்கு ஆள் மனசுல அவங்க அம்மாவோட ஏக்கம் இருந்துகிட்டே இருக்கு அந்த ஏக்கம் என்னைக்கு காணாமல் போகுதோ அன்னைக்கு தான் இந்த நோய் அவரை விட்டு முழுமையா போகும்.


அதுவரை இதே போல பிஹெவியர் அடிக்கடி மாறிக்கிட்டே இருக்கும்

ஒரு நேரம் சிரிப்பாங்க

ஒரு நேரம் ரொம்ப கோபப்படுவாங்க சில நேரம் அழுவாங்க சில நேரம் ரொம்ப காம் மா இருப்பாங்க.

சின்ன சின்ன விஷயத்துக்கு கூட ரொம்ப அஃபெக்ட் ஆவாங்க.

😳

இப்போ இருக்க ஒரே ஆப்ஷன் இந்த ஊரை விட்டு நீங்க கூட்டிட்டு போறதுதான்.

இந்த ஊர்ல நடந்த எந்த சம்பவமும் அவர்க்கு நினைவு வரக்கூடாது அதை மட்டும் நீங்க கரெக்டா பண்ணிட்டீங்கன்னா

அவருக்கு அங்க அம்மாவோட குரல் கேட்காமல் போகும்.

அவங்க அம்மா குரலுக்கு பதிலா வேற ஒருத்தவங்களோடகுரலும் முகம்மும் எப்போ வருதோ அப்போ தான் அந்தப் பிரச்சினை இருந்து மீண்டு வந்துட்டு இருக்காங்கன்னு அர்த்தம்.


இன்ஜெட் போட்டு இருக்கிறது இவர் உடம்பு அமைதியாக இருக்கத்தானே தவிர

அவர் மனசுக்குள்ள இருக்க வலிக்கு எங்ககிட்ட மருந்தில்லா.

நீங்க மாறன பத்திரமா பாத்துக்கணும் அப்படி இல்லைன்னா அவரு மீண்டும் சூசை ட் கண்டிப்பா ட்ரை பண்ணுவாரு.

ஓகே டாக்டர் நாங்க பாத்துக்கிறோம் ரொம்ப தேங்க்யூ.

ஓகே தேங்க் யூ என்றபடி டாக்டர் கிளம்பினார்.

தொடரும்
Shahiabi. Writter ✍🏼
 

Author: shahiabi தனிமையின் காதலி
Article Title: Chapter -43
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.