பின் அவன் சொன்னதை வைத்து ஏதோ யோசித்த தேன்மொழி,
“நீங்க சொல்றத வச்சு பார்த்தா , அந்த சீக்ரெட் சொசைட்டில நீங்க ஒரு இம்பார்டன்ட் பொசிஷன்ல இருக்கணும்.
அத பத்தி தெரிஞ்சுகிட்ட உங்க ஃபிரண்ட் உங்களுக்கு துரோகம் பண்ணி அந்த பொசிஷனை சொந்தமாகிக்க நினைச்சிருக்கணும்.
அப்ப உங்களுக்கும் அவனுக்கும் நடந்த சண்டையில தான் சியாவுக்கு ஏதோ ஆயிருக்கு. நான் சொல்றது கரெக்டா?” என்று கேட்க,
ஆமாம் என்று தலையாட்டிய அர்ஜுன் மீண்டும் அவளிடம் பேச தொடங்கினான்.
“அந்த சீக்ரெட் சொசைட்டில நிறைய ப்ராஜெக்ட்ஸ் குடுப்பாங்க.
அது ஒவ்வொன்னையும் நம்ம சக்சஸ்ஃபுல்லா செஞ்சு முடிக்கும்போது, நமக்குன்னு ஒரு டீம் கிடைக்கும்.
அப்புறம் அதுல இருந்து ஒவ்வொரு லெவலா டெவெலப்பான கடைசியா அந்த மொத்த சீக்ரெட் சொசைட்டிக்கும் சீஃப் ஆகலாம்.” என்று அர்ஜுன் சொல்ல,
அவனை பிரிட்டோவும், கிளாராவும் எப்போதும் சீஃப் என்று சொல்லி அழைப்பது இப்போது அவளுக்கு ஞாபகம் வர,
உடனே கலவரமான முகத்துடன் அவனைப் பார்த்த தேன்மொழி “அப்ப நீங்க தான் அந்த சீக்ரெட் சொசைட்டிக்கு இப்ப சீஃப் ஆ?” என்று நேரடியாக கேட்டாள்.
அதற்கு அவனும் ஆமாம் என்று தலையாட்ட,
குழப்பமாக அவனைப் பார்த்த தேன்மொழி “நீங்க அந்த சீக்ரெட் சொசைட்டில இருக்கிறதே யாருக்கும் தெரியாதுன்னு சொல்றீங்க..
அப்புறம் எப்படி உங்களை பத்தி தெரிஞ்சுக்கிட்டு உங்கள கிளாராவும் பிரிட்டோவும் சீஃப்ன்னு கூப்பிடுறாங்க?
நீங்க நேத்து ரிட்டன் வரும்போது கூட அவங்க கூட தானே வந்தீங்க..
லாஸ்ட் 2 டேஸா நீங்க எல்லாரும் எங்க போனீங்க?” என்று அவனிடம் அடுக்கடுக்காக கேள்விகள் கேட்க தொடங்கினாள் தேன்மொழி.
“நீ இப்படி லைனா கொஸ்டின் கேட்டுக்கிட்டே இருந்தா நான் எப்படி ஆன்சர் பண்றது?
கொஞ்சம் கேப் விடுடி.” என்று அர்ஜுன் சொல்ல,
“எப்படியும் நீங்க உங்களுக்கு துரோகம் பண்ணவன சும்மா விட்டிருக்க மாட்டீங்கன்னு எனக்கு தெரியும்.
அவனுக்கு என்ன ஆச்சு, நீங்க எங்க போனீங்கன்னு எதையும் மறைக்காம ஒழுங்காக இப்பயே சொல்லுங்க.” என்று அவனை மிரட்டும் தோரணையில் சொன்னாள் தேன்மொழி.
ஆனால் அதை கண்டுகொள்ளாமல் மீண்டும் பேச தொடங்கிய அர்ஜுன்,
“நான் சீஃப் ஆனதுக்கு அப்புறம் தான் ஆகாஷ், கிளாரா, பிரிட்டோ, என் ஃப்ரெண்ட் நிரஞ்சன் எல்லாரும் என்ன மாதிரியே அதே சீக்ரெட் சொசைட்டியில இருக்காங்கன்னு நான் கண்டுபிடிச்சேன்.
பட் அப்பக் கூட என்ன பத்தி நான் அவங்க கிட்ட எதுவும் சொல்லல.
எனக்கும் அவங்களை பத்தின உண்மை தெரிஞ்ச மாதிரி நான் காட்டிக்கல.
ஆனா எப்படியோ அந்த ### பையன் நிரஞ்சன் நான்தான் அந்த சீக்ரெட் சொசைட்டியோட சீஃப்ன்னு கண்டுபிடிச்சிட்டான்.
சோ என்ன போட்டு தள்ளிட்டா எனக்கு அடுத்த பொசிஷன்ல இருக்கிற அவன் ஈஸியா சீஃப் ஆகிடலாம்னு பிளான் பண்ணி எனக்கு கட்டம் கட்டிட்டு இருந்திருக்கான்.
அது தெரியாத முட்டாளா இருந்திருக்கேன் நான்.
ஒரு நாள் நாங்க எல்லாரும் ஒரு கன்றியோட மினிஸ்டர் ஒருத்தன் இல்லிகளா ஒரு டெரரிஸ்ட் கூட்டத்துக்கு ஹெல்ப் பண்றதையும்,
அவனுங்க ஒரே டைம்ல நாலு கண்ட்ரில பாம் ப்ளாஸ்ட் பண்ணப்போறதையும் கண்டுபிடிச்சோம்.
ஆல்ரெடி எனக்கு தெரிஞ்சவங்க இந்த சொசைட்டில இருக்குறாங்கன்னு நான் கண்டுபிடிச்சதுனால,
அந்த மினிஸ்டரை போடறதுக்கு நான் கிரியேட் பண்ண டீம்ல அவங்களுக்கே தெரியாம ஆகாஷ், கிளாரா, பிரிட்டோ, நிரஞ்சன் அண்ட் நல்ல ப்ரொபைல் இருக்கிற இன்னும் 20 பேரை சேர்த்து நான் ஒரு டீம் கிரியேட் பண்ணி நாங்க எல்லாரும் அந்த மினிஸ்டரை அட்டாக் பண்ண போனோம்.
மிஷன் சக்சஸ்ஃபுல் தான். பட் அந்த கேப்ல நிரஞ்சன் என்ன போட்டுத்தள்ள ட்ரை பண்ணான்.
அது எனக்கு அப்ப ஷாக்கிங்கா தான் இருந்துச்சு. இருந்தாலும் நான் கொஞ்சம் உஷாரா இருந்ததுனால அவன்கிட்ட இருந்து அப்ப தப்பிச்சிட்டேன்.
அப்பயே என் இடத்தை பிடிக்க அவன் ஆசைப்படுறான்னு எனக்கு புரிஞ்சது.
ஆனா அவனுக்கு நான் யாருன்னு தெரியாது. அதனால தானே இப்படி பண்றான்..
ஒருவேளை நான் அவனோட க்ளோஸ் ஃப்ரெண்ட்ன்னு தெரிஞ்சிருந்தா கண்டிப்பா அவன் அப்படி பண்ணிருக்க மாட்டான்னு நானா நினைச்சு,
அவன் என்னை கொல்ல வந்தவன்னு தெரிஞ்சும் மன்னிச்சு விட்டுட்டேன்.
அதுதான்.. அதுதான் நான் செஞ்ச தப்பு.
என்ன மாதிரி அவனும் இருப்பான்னு நான் நம்புனது என் தப்பு.
அந்த தப்புக்கு தண்டனையை கடைசியில என் சியா அனுபவிச்சா.” என்று குரல் தழுதழுக்க சொன்னான்.
“குத்துனது நண்பனா இருந்தா செத்தாலும் வெளிய சொல்ல கூடாதுன்னு ஒரு படத்துல சொல்லுவாங்களே..
அந்த மாதிரி இவன் அவன மன்னிச்சுட்டு இருக்கான்.
ஆனா அவன் இவனுக்கு போய் இப்படி ஒரு துரோகத்தை பண்ணிட்டானே..!!” என்று நினைத்து அர்ஜுனுக்காக வருத்தப்பட்ட தேன்மொழி,
“அப்புறம் என்ன ஆச்சு? அந்த நிரஞ்சன் மறுபடியும் ஏதாவது பண்ணானா?” என்று சோகமாக கேட்டாள்.
“அவனுக்கு தான் என் சீட் மேல ஆசை வந்துருச்சே..
அப்புறம் எப்படி அவன் சும்மா இருப்பான்?
ஆனா அவன் பண்ணத நினைச்சா இன்னும் எனக்கு என் மேலயே தான் கோபம் வருது.
நான் மட்டும் கொஞ்சம் எமோஷனலா யோசிக்காம கரெக்டா இருந்திருந்தா, இப்ப இவ்ளோ பிரச்சனை நடந்திருக்காது.
சித்தார்த்தோட 9th birthdayஐ நாங்க ஃபேமிலியோட அமெரிக்கா போய் செலிப்ரேட் பண்ணலாம்னு பிளான் பண்ணி இருந்தோம்.
பட் அப்பா ஆபீஸ்ல வொர்க் இருக்குனு வரமாட்டேன்னு சொல்லிட்டாரு.
தாத்தாவுக்கு உடம்பு சரியில்லாததுனால பாட்டி அவர் கூட இருந்து பாத்துக்கணும்ன்னு வர முடியாதுன்னு சொல்லிட்டாங்க.
சந்தோஷும் ஜனனியும் லவ் பண்ண விஷயம் எனக்கு தெரியாது.
திடீர்னு ஜனனி சந்தோஷை பத்தி அப்ப என் கிட்ட பேசவும், கோபப்பட்டு அவனை நான் Prasad groupsல இருந்து fire பண்ணி மறுபடியும் ஜனனிய பாக்கணும்னு நெனச்சா கொன்னுடுவேன்னு மிரட்டி அனுப்பிட்டேன்.
ஏன்னா என்ன தவிர எங்க வீட்ல இருக்குற எல்லாருக்கும் அவங்க லவ் மேட்டர் தெரிஞ்சு இருக்கு.
அப்பா கூட அவங்க லவ்வுக்கு ஓகே சொல்லி இருக்காரு.
எனக்கு மட்டும் தெரியாம எல்லாரும் சேர்ந்து மறைச்சிட்டாங்கன்னு எனக்கு கோபம்.
நான் சந்தோஷை துரத்தி விட்டதனால, என் தங்கச்சிக்கு என் மேல கோபம்.
சோ அவளும் அமெரிக்கா வர மாட்டேன்னு சொல்லிட்டா.
மகிழன் அப்பதான் பொறந்தான். அதனால லிண்டா, ஆகாஷ் ரெண்டு பேரும் இப்ப டிராவல் பண்ற ஐடியா இல்லைன்னு சொல்லிட்டாங்க.
சோ நானு, அம்மா, சியா, சித்தார்த், ஆருத்ரா அஞ்சு பேரும் அமெரிக்கா போனோம்.
ஒரு வாரம் சித்தார்த் பர்த்டேவை செலிப்ரேட் பண்ணி அமெரிக்கா ஃபுல்லா சுத்தி ஜாலியா இருந்தோம்.
அப்போ சித்தார்த் தீம் பார்க் போகணும்னு அடம் புடிச்சான்.
அந்த டைம்ல ஆருத்ராவுக்கு ரொம்ப பீவர்.
சோ நாங்க ஊருக்கு கிளம்பலாம்னு இருந்தோம்.
அப்பயும் சித்தார்த் நாங்க சொல்றத கேட்கவே இல்லை.
அதனால நாங்க ஸ்டே பண்ணி இருந்த பங்கலால அம்மாகிட்ட ஆருத்ராவை விட்டுட்டு நாங்க மூணு பேரும் தீம் பார்க் போனோம்.
நைட் வரைக்கும் ஜாலியா விளையாடிட்டு இருந்தோம்.
ஆனா அதுதான் சியா கடைசியா எங்க கூட சந்தோஷமா இருக்கிற மொமென்ட்டுன்னு எனக்கு அப்ப தெரியாது.
நிரஞ்சன் அவனோட ஆளுங்களோட அங்க வந்து கூட்டத்தோட கூட்டமா எங்களுக்கே தெரியாம எங்களை அட்டாக் பண்ண ட்ரை பண்ணான்.
அதையும் எப்படியோ கிளாரா கண்டுபிடிச்சிட்டா.
அவனுங்களுக்கும் அவளுக்கும் நடந்த சண்டையில அவளை சுட்டுட்டாங்க.
அந்த புல்லட் சவுண்ட் கேட்டதுக்கு அப்புறம் தான் நான் அலர்ட் ஆனேன்.
நிரஞ்சன் என்னை கொல்ல வந்தான்.
அந்த சுச்சுவேஷன்லையும் கிளாராவ சின்சியரா லவ் பண்ண பிரிட்டோ அவளை காப்பாத்தாம என்ன ப்ரொடெக்ட் பண்ண வந்தான்.
சியா கூட சித்தார்த்தை அனுப்பி எப்படியாவது அவங்கள பத்திரமா வெளியே அனுப்பிடனும்னு நாங்க எல்லாருமே ரொம்ப ட்ரை பண்ணோம்.
அதுல ரெண்டு பக்கமும் பெரிய ஃபைட் நடந்துச்சு. என் மேலயும் நிறைய புல்லட்ஸ் பட்டுச்சு.
கீழ விழுந்து தலையில அடி..
அப்பயும் எப்படியோ போராடி சியாவையும், சித்தார்த்தையும் வெளிய அனுப்பி வச்சிட்டேன்.
ஆனா அந்த பைத்தியக்காரி சித்தார்த்தை மட்டும் கார்ல உட்கார வச்சுட்டு எனக்கு என்ன ஆச்சுன்னு பாக்குறதுக்காக திரும்பி அங்க வந்துட்டா.
அத நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கல.
அப்ப எனக்கு ஆப்போசிட்ல இருந்த நிரஞ்சனை எப்படியாவது நான் சாகறதுக்குள்ள கொன்னுடனும்னு நான் ட்ரை பண்ணும் போது,
அவன் கரெக்டா அந்த இடத்த விட்டு மூவாகி எஸ்கேப் ஆகிட்டான்.
அந்த புல்லட் டைரக்டா என் சியாவோட ஹார்ட்ல பட்டு அங்கயே என் கண்ணு முன்னாடியே நான் சுட்டதனால அவ செத்துட்டா.
நான் அவகிட்ட ஓடிப்போய் அவள பாக்கும்போது,
அழுதுகிட்டே ஐ லவ் யூ அர்ஜுன்னு சொல்லிட்டு அவ செத்துட்டா.
நான் கடைசியா கேட்டது அதுதான். அதோட மயங்கி விழுந்து நான் கோமாவுக்கு போயிட்டேன்.
அன்னைக்கு சியா செத்தது ஆக்சிடென்ட் தான்.
ஆனா அதுக்கு நானும் ஒரு காரணம்தானே..
நான் மட்டும் அந்த நிரஞ்சனை ஃபிரண்ட்ன்னு நெனச்சு உயிரோட விட்டு வைக்காம இருந்திருந்தா..
என் சியாவுக்கு அந்த நிலைமை வந்திருக்காது.
நானே தான் அவளை கொன்னுட்டேன்.
என்னால தான் அவ செத்தா..” என்ற அர்ஜுன் தன் முகத்தை மூடிக்கொண்டு அழுதான்.
அவனைக் கட்டி அணைத்து ஆறுதல் படுத்த முயற்சி செய்த தேன்மொழி,
“சியா அங்க வந்தது அவங்களோட டிஷன் மிஸ்டர் அர்ஜுன்.
அந்த டைம்ல அங்க இருக்கிறது ரிஸ்க்ன்னு தெரிஞ்சும், உங்களுக்காக தான் அவங்க வந்துருக்காங்க.
கண்டிப்பா இந்த விஷயத்துல அவங்க உங்க மேல கோவப்பட்டு இருக்க மாட்டாங்க.
அதனால தான் சாகப் போற அந்த லாஸ்ட் மொமென்ட்ல கூட,
நீங்க அவங்கள நினைச்சு கில்டி பீலிங்க்ல இருக்க கூடாதுன்னு உங்கள லவ் பண்றதா சொல்லிட்டு செத்துப் போயிருக்காங்க.
நீங்க சொன்னது உண்மைதான்னு எனக்கு இப்ப புரியுது.
ஃபர்ஸ்ட் அவங்கள லவ் பண்ண ஸ்டார்ட் பண்ணது நீங்களா இருந்தாலும்,
உங்களை விட அதிகமா அவங்க தான் உங்களை ரொம்ப லவ் பண்ணி இருக்காங்க.
அந்த லவ் தான் அவங்கள உங்களுக்காக அங்க வர வச்சிருக்கு.
நீங்க சொன்ன மாதிரி சியா உங்களுக்குள்ள கடவுளா இருப்பாங்க.
நீங்க எப்பயும் சந்தோஷமா இருக்கணும்னு தான் அவங்க ஆசைப்படுவாங்க.
ப்ளீஸ் அழுகாதீங்க அர்ஜுன்..!!” என்றாள்.
அவள் பேச பேச சியாவின் குரல் தனது காதுகளில் இனிமையாக வந்து பாய்வதை உணர்ந்து நார்மலான அர்ஜூன்,
அவனது சியா தான் அவள் இல்லாமல் அவன் கஷ்டப்படக்கூடாது என்பதற்காகவே இந்த தேன்மொழியை தனக்காக அனுப்பி வைத்திருப்பதாக நினைத்தான்.
அதனால் இனி ஒருபோதும் அவளை விட்டுப் பிரியக்கூடாது என்று நினைத்து இறுக்கமாக அவளை அணைத்துக் கொண்டு,
“நான் ரொம்ப நல்லவன்னு எல்லாம் பொய் சொல்ல விரும்பல தேன்மொழி.
பட் எனக்கு தெரிஞ்ச வரைக்கும், என் மனசுக்கு தப்புன்னு பட்டத இதுவரைக்கும் நான் எப்பயும் செஞ்சது இல்ல.
முக்கியமா நான் யாரையும் நம்ப வச்சு ஏமாத்தினது இல்லை.
என்ன பத்தி நீ என்ன நினைக்கிறன்னு எனக்கு தெரியல.
பட் நீதான் என் லைஃப்னு நான் நினைக்கிறேன்.
என் சியா என்னை விட்டு போன மாதிரி நீயும் என்னை விட்டுப் போய்ட மாட்டியே?” என்று கண்ணீருடன் அவள் கைகளைப் பிடித்துக் கொண்டு கேட்டான்.
அவன் அப்படி கேட்கும்போது, அவனைப் பார்க்கவே அவளுக்கு பாவமாக இருந்தது.
இதுவரை குழந்தைகளுக்காக மட்டுமாவது இந்த வீட்டில் உயிருடன் இருக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்த தேன்மொழிக்கு,
முதன்முறையாக அவனைப் பற்றி தெரிந்து கொண்ட பிறகு, அவனுக்கும் சியாவிற்கும் இருந்த காதலை புரிந்து கொண்ட பிறகு,
சியா விட்டுப்போன காலியான இடத்தை நிரப்பி அவனுடன் இங்கேயே இருந்து விட வேண்டும் என்று அவளுக்கு தோன்றியது.
அதனால் கலங்கிய கண்களுடன் அவனைப் பார்த்த தேன்மொழி அவள் இதயத்தில் இருந்து,
“போக மாட்டேன்.. எப்பயும் உங்கள விட்டுட்டு போக மாட்டேன் மிஸ்டர் அர்ஜுன்.
நீங்க அழாதீங்க ப்ளீஸ்!” என்றாள்.
அப்போது அவள் கண்களில் இருந்து வழிந்த கண்ணீர் துளி அவள் கன்னத்தை தொட,
அதை அவள் முகத்தை ஏந்தி தன் கட்டை விரலால் அழுத்தி தடைத்த அர்ஜுன் அவள் கண்களை பார்த்து,
“இத்தனை வருஷமா நான் லவ் பண்ணி என் கூட என் பொண்டாட்டியா வாழ்ந்த சியாவை விட இந்த செகண்ட் எனக்கு உன்ன ரொம்ப புடிச்சிருக்குன்னு நான் சொன்னேன்.
அது ஏன்னு தெரியுமா?” என்று அவளிடம் கேட்டான்.
தெரியாது என்று தலையாட்டினாள் அவள்.
“உனக்கும் சியாவுக்கும் நிறைய விஷயம் ஒத்துப்போகும்.
கேரக்டர் வைஸ் நீங்க ரெண்டு பேரும் ஒரே மாதிரி தான்.
ஆனா நீ அவளை மிஞ்சின விஷயம் என்ன தெரியுமா..??
உன்கிட்ட இருக்கிற நல்ல மனசு.
உனக்கு பிடிக்காத மாதிரி நீ வந்ததுல இருந்து இங்க எவ்ளோ நடந்திருந்தாலும்,
என் ஃபேமிலில இருக்கிறவங்களையும், என் குழந்தைகளையும் கஷ்டப்படுத்துற மாதிரி நீ எதுவுமே செய்யல.
என் புள்ளைங்க உன்னை அம்மாவா பாத்ததனால, உனக்கு பிடிக்கலைனாலும் நீ நெஜமாவே அவங்களுக்கு அம்மாவா இருந்த.
நீ முதல்ல பேருக்கு அவங்களுக்கு அம்மா மாதிரி நடிச்சிட்டு இருந்தாலும், கடைசில சூசைட் அட்டெம்ப்ட் பண்ணலாம்னு நினைச்சும்,
என் குழந்தைகளுக்காக நீ வாழனும்னு நினைச்சியே..
அந்த மனசு ஒரு அம்மாவுக்கு தான் வரும்.
அங்கதான் என் குழந்தைகளுக்கு அம்மாவா நான் உன்னை பார்த்தேன்.
ஒருவேளை உன் இடத்துல சியா இருந்திருந்தா கூட,
அவளுக்கு இருக்கிற கோபத்துக்கும், பிடிவாதத்துக்கும், திமிருக்கும் அவ இதையெல்லாம் பொறுத்துக்கிட்டு என்ன மாதிரி ஒரு வயசானவன கல்யாணம் பண்ணிக்கிட்டு அவன் குழந்தையை தன் குழந்தையா நினைச்சு பார்த்துக்க மாட்டா.
எனக்கு அவளை பத்தி தெரியும்.
உன்ன பத்தியும் இந்த கொஞ்ச நாளிலயே தெரிஞ்சுக்கிட்டேன்.
நீ நெஜமாவே ரொம்ப நல்ல பொண்ணு தேன்மொழி.” என்று உணர்ச்சிகள் பொங்க சொன்னான்.
அதிர்ச்சியான முகத்துடன் அவனைப் பார்த்த தேன்மொழி,
“நான் ஜெனரல் மேல ஏறி கீழ குதிக்க ட்ரை பண்ணது எல்லாம் உங்களுக்கு எப்படி தெரியும்?
இத பத்தி இதுவரைக்கும் நான் யார்கிட்டயும் சொன்னதே இல்லையே!” என்று நம்ப முடியாமல் கேட்க,
“சிசிடிவி ஃபுட்டேஜ்ல பார்த்தேன். நீ இங்க வந்ததுல இருந்து, இங்க உனக்கு நடந்த எல்லாத்தையும் நான் பார்த்தேன்.
நீ எவ்ளோ நேரம் உன் ஃபேமிலிய நினைச்சு அழுதுட்டு இருந்தன்னு கூட எனக்கு தெரியும்.” என்றான் அர்ஜுன்.
உடனே அவனைப் பார்த்து விரக்தியுடன் புன்னகைத்த தேன்மொழி
“அது சரி, இது உங்க வீடு. இங்க உங்களுக்கு தெரியாம ஏதாவது நடக்குமா?” என்று கேட்டவளுக்கு,
“அந்த நிரஞ்சனை இவன் என்ன பண்ணான்னு இன்னும் சொல்லவே இல்லையே!" என்று ஞாபகம் வந்தது.
அதனால் உடனே “ஆமா அவன என்ன பண்ணிங்க?
நீங்க கோமாவுல இருந்து எந்திரிச்ச உடனே சியா சாகறதுக்கு ரீசனா இருந்த நிரஞ்சன பழிவாங்கணும் தான் உடனே கிளம்பி எங்கயோ போனீங்களா..??” என்று அவசரமான குரலில் அவனிடம் கேட்டாள் தேன்மொழி.
-மீண்டும் வருவாள் 💕

Author: thenaruvitamilnovels
Article Title: Chapter-43
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.