CHAPTER-42

Oviya Blessy

Member
Jan 4, 2025
45
0
6
த‌ரையில் இருந்த‌ இர‌த்த‌தை பார்த்து ச‌ந்ரா மிக‌வும் அதிர்ச்சி ஆனாள். ப‌ய‌ந்து போனாள். ப‌ய‌த்துட‌ன்,

ச‌ந்ரா : அர்ஜுனுக்கு என்ன‌ ஆச்சு? த‌ரையெல்லா ஒரே இர‌த்த‌மா இருக்கு? அர்ஜுனுக்கு ஒன்னு ஆக‌ கூடாது.



சந்ரா ப‌ய‌த்துட‌னும் ந‌டுக்க‌த்துட‌னும் அறைக்குள் சென்று, அர்ஜுனை தேடினாள். திடீரென‌ அந்த‌ இர‌த்த‌த்தில் கால் வைத்தாள். உட‌னே வ‌ழுக்கிவிட்ட‌து. ச‌ந்ரா வழுக்கியதும் ப‌ய‌த்தில் க‌ண்ணை மூடிக்கொண்டு விழப்போனாள். ஆனால் அவ‌ள் நினைத்த‌து போல் ச‌ந்ரா விழ‌வில்லை. அதை உணர்ந்து அவ‌ள் க‌ண்க‌ளை திற‌ந்தாள். அப்போது ச‌ந்ரா மிக‌வும் அதிர்ச்சி ஆனாள். அர்ஜுன் அவ‌ளை கீழே விழாம‌ல் பிடித்த‌ப‌டி நின்றுக் கொண்டிருந்தான்.



ச‌ந்ரா அதிர்ச்சியுட‌ன்,

ச‌ந்ரா : அர்ஜுன் !

அர்ஜுன், ச‌ந்ராவை மேலே தூக்கிவிட்டான்.

அர்ஜுன் : ச‌ந்ரா ! நீ ந‌ல்லா இருக்க‌ல்ல‌?

ச‌ந்ரா அதை கேட்ட‌வுட‌ன் அர்ஜுனை க‌ட்டிப்பிடித்துவிட்டாள்.



அர்ஜுன் ப‌ய‌ங்க‌ர‌ அதிர்ச்சியில் நின்றான்.



ச‌ந்ரா க‌ட்டிப்பிடித்த‌ப‌டியே,

ச‌ந்ரா : ந‌ல்ல‌வேள‌ உன‌க்கு ஒன்னு ஆக‌ல‌.

அர்ஜுன் : என‌க்கு என்ன‌ ஆக‌ப்போகுது?

ச‌ந்ரா : (ப‌த‌ட்ட‌த்துட‌ன்) இந்த‌ இர‌த்த‌த்த‌ பாத்த‌தும் நா ரொம்ப‌ ப‌ய‌ந்திட்டே.



அர்ஜுன் : இர‌த்த‌மா? எங்க‌?

ச‌ந்ரா : (ப‌த‌ட்ட‌மாக‌) த‌ரையில‌.

அர்ஜுன் த‌ரையை பார்த்தான். உட‌னே சிரிக்க‌ ஆர‌ம்பித்தான். ச‌ந்ரா அர்ஜுனை ஒன்றும் புரியாம‌ல் பார்த்தாள். அர்ஜுன் சிரித்துக்கொண்டே இருந்தான்.

ச‌ந்ரா : நீ எதுக்கு சிரிக்கிற‌?

அர்ஜுன் : சிரிக்காம‌ என்ன‌ ப‌ண்ற‌து? உன‌க்கு பெய்ன்ட்டுக்கும், இர‌த்த‌துக்கும்கூட‌வா வித்தியாசோ தெரிய‌ல‌?

ச‌ந்ரா : பெய்ன்ட்டா?

அர்ஜுன் : (சிரித்த‌ப‌டி) ஆமா.

ச‌ந்ரா : அது ஏ கீழ‌ கொட்டி இருக்கு?

அர்ஜுன் : என‌க்கு இப்ப‌தான‌ பூர்வ‌ ஜென்மோ ஞாப‌கோ வ‌ந்திருக்கு, அத‌னால‌தா வரைய முயற்சி ப‌ண்ணே.

ச‌ந்ரா : என‌க்கு புரிய‌ல‌.

அர்ஜுன் : போன‌ ஜென்ம‌த்துல‌ உன்ன‌ நா மொத‌ல் மொத‌ல்ல‌ பாத்த‌து ஞாப‌கோ இருக்கா?

ச‌ந்ரா யோசித்தாள்.



ச‌ந்ராவுக்கு அருவியின் அருகில் ந‌ட‌ந்த‌து ஞாப‌க‌ம் வ‌ருகிற‌து.

ச‌ந்ரா : இருக்கு. அந்த‌ அருவிக்கு ப‌க்க‌த்துல‌.

அர்ஜுன் : ஆமா. அப்போ நா உங்கிட்ட‌ பேசிட்டு போன‌துக்கு அப்றோ, என்ன‌ ந‌ட‌ந்த‌துன்னு தெரியுமா?

ச‌ந்ரா : என்ன‌ ந‌ட‌ந்த‌து?

அர்ஜுன் : அன்னிக்கு நா வீட்டுக்கு போன‌துக்கு அப்றோ,

....பிளாஷ் பேக்....
உதையா வீட்டில் ஒரு தாம‌ரை இலையை எடுத்து அதில் வ‌ரைய‌ ஆர‌ம்பித்தான்.



இறுதியில் அவ‌னுடைய‌ ம‌ன‌தில் இருக்கும் அழ‌கிய‌ முக‌த்தை வ‌ரைந்து முடித்தான். அந்த‌ அழ‌கிய‌ முக‌ம் அமிர்த்தாதான்.



வ‌ரைந்து முடித்த‌தும்,

உதையா : ஒரு சாத‌ர‌ண‌ தாம‌ர‌ இலைக்கு கூட‌ உன்னோட‌ அழ‌கால‌ இப்போ உயிர் வ‌ந்த‌ மாதிரி இருக்கு அழ‌கி ! என்னோட அழகி.

அதை பார்த்து ர‌சித்துக்கொண்டே இருந்தான்.
.... பிளாஷ் பேக் முடிந்த‌து....

இதை கூறிமுடித்த அர்ஜுன்,

அர்ஜுன் : அத‌னால‌தா வ‌ரையலான்னு பெய்ன்ட்ட தேடி க‌ண்டு புடிச்சு எடுத்தே, ஆனா செகப்பு க‌ல‌ர் ம‌ட்டும் கீழ‌ கொட்டிருச்சு.

ச‌ந்ரா : அப்போ உன‌க்கு வ‌ரைய‌ வ‌ருமா? உன‌க்கு பெய்ன்ட்டிங் தெரியுன்னு நீ என்கிட்ட‌ சொல்ல‌வே இல்ல‌?

அர்ஜுன் : இல்ல‌ என‌க்கு பெய்ன்ட்டிங் ப‌ண்ண‌ வராது.

ச‌ந்ரா : என்ன‌?

அர்ஜுன் : என‌க்கு இப்ப‌ ம‌ட்டு இல்ல‌, போன‌ ஜெத்துலையும் பெய்ன்ட்டிங் ப‌ண்ண‌ தெரியாது.

ச‌ந்ரா : அப்றோ எப்பிடி என்ன‌ வ‌ர‌ஞ்ச‌?

அர்ஜுன் : உன்ன‌ வ‌ரைய‌னுன்னா, பெய்ன்ட்டிங் தெரியுனுன்னு அவ‌சியோ இல்ல‌.

ச‌ந்ரா : அப்றோ?

அர்ஜுன், ச‌ந்ராவின் அருகில் வ‌ந்து, மெல்லிய‌ குர‌லில்,



அர்ஜுன் : காத‌ல்.

ச‌ந்ரா : என்ன‌?

அர்ஜுன் : க‌ண்ணுல‌ நீயும், ம‌ன‌சுல‌ காத‌லும் ப‌திஞ்சா போதும்.

ச‌ந்ரா : நீ என்ன‌ அந்த‌ அள‌வுக்கு காத‌லிச்சியா?

அர்ஜுன் : அப்ப‌ ம‌ட்டு இல்ல‌. இப்ப‌வும் நா உன்ன‌ எந்த‌ அள‌வு காத‌லிக்கிற‌ன்னா, இந்த‌ உல‌க‌த்துலையே என்னோட‌ அள‌வுக்கு உன்ன‌ யாராலையும் காத‌லிக்க‌வே முடியாது.

ச‌ந்ரா திடீரென‌, பூர்வ‌ ஜென்ம‌த்தில் உதைய‌ கூறிய‌ இதே வார்த்தைக‌ளை நினைத்து பார்த்தாள்.

அர்ஜுன் : (மெல்லிய‌ குர‌லில்) உண்ம‌தான‌?

ச‌ந்ரா, அர்ஜுனின் முக‌த்தை நேருக்கு நேராக‌ பார்த்ததும்,



ச‌ந்ரா : உண்ம‌தா? என்ன‌ மாதிரி.

என்று த‌ன்னை ம‌ற‌ந்து கூறிவிட்டாள்.



அர்ஜுன் அதை கேட்ட‌தும், மிக‌வும் அதிர்ச்சி ஆனான். அவ‌ன் எதிர்ப்பாத்த‌து ச‌ந்ராவின் வாயில் வ‌ந்த‌துப்போல் பார்த்தான்.

அர்ஜுன் : (அதிர்ச்சியில்) என்ன?

உடனே சந்ரா சுய நினைவிற்கு வந்து,

ச‌ந்ரா : அது...... என‌க்கு கிச்ச‌ன்ல‌ கொஞ்சோ வேல‌ இருக்கு, நா இப்போ வ‌ந்த‌ர்றே.

என்று கூறி ச‌ந்ரா செல்ல‌ முய‌ற்ச்சிக்கும்போது, அர்ஜுன் ச‌ந்ராவின் கையை பிடித்துவிட்டான். ச‌ந்ர‌ாவை அவ‌ன் ப‌க்க‌மாக‌ இழுத்து, அர்ஜுன் மிகுந்த‌ எதிர்ப்பார்ப்புட‌ன் ச‌ந்ராவின் க‌ண்க‌ளை பார்த்து,

அர்ஜுன் : (மெல்லிய‌ குர‌லில்) நீ இப்ப‌ என்ன‌ சொன்ன‌?



ச‌ந்ரா : நா ஒன்னு சொல்ல‌ல‌.

அர்ஜுன் : (எதிர்ப்பார்ப்புட‌ன்) இல்ல‌ நீ இப்ப‌ ஒன்னு சொன்ன‌. அத‌ ம‌றுப‌டியும் சொல்லு.

ச‌ந்ரா அர்ஜுனின் க‌ண்க‌ளை பார்க்க‌ம‌லே,

ச‌ந்ரா : நா எதுவும் சொல்லல. இப்ப‌ நா கிச்ச‌னுக்கு போக‌னு, என‌க்கு வேலை இருக்கு. என்ன‌ விடு.

அர்ஜுன் ச‌ட்டென‌ ச‌ந்ராவின் கையை விட்டுவிட்டான். உட‌னே அதை பார்த்த‌ ச‌ந்ரா, அதிர்ச்சியாக‌,

ச‌ந்ரா : (ம‌ன‌திற்க்குள்) என்ன‌ சொன்ன‌தும் விட்டுட்டா?

ச‌ந்ரா, அர்ஜுன் அருகிலிருந்து மெதுவாக‌ வில‌கினாள். அர்ஜுன் திடீரென‌ வேறு ப‌க்க‌ம் திரும்பி, மிகுந்த‌ வேத‌னையுட‌ன்,

அர்ஜுன் : உன‌க்கு இன்னு என்மேல‌ காத‌ல் வ‌ர‌லையா ச‌ந்ரா? இன்னு நா எத்த‌ன‌ ஜென்மோ காத்துகிட்டிருக்க‌னும்?

ரூம் கதவின் அருகில் சென்று ச‌ந்ரா, அர்ஜுனை திரும்பி பார்த்தாள். அர்ஜுன் அந்த பக்கமாக திரும்பி நின்றுக்கொண்டிருந்தான். அவ‌னுடைய‌ வேத‌னை இவ‌ளுக்கு தெறிய‌வில்லை. அர்ஜுனை பார்த்து,

ச‌ந்ரா : (ம‌ன‌திற்க்குள்) விடுன்னு சொன்னா விட்டிருவையா?

பிற‌கு கிச்ச‌னுக்கு சென்றுவிட்டாள். அங்கு மீரா வ‌ந்தாள்.

மீரா : ச‌ந்ரா!

ச‌ந்ரா : சொல்லுங்க‌ மீரா அக்கா.

மீரா : நா ரூம்ல‌ ந‌ட‌ந்த‌ எல்லாத்தையும் பாத்தே.

ச‌ந்ரா : (ப‌த‌ட்ட‌த்துட‌ன்) என்ன‌ பாத்தீங்க‌?

மீரா : உன்னோட‌ க‌ண்ணுல‌ அவ்ளோ காத‌ல் தெறிஞ்ச‌துன்னு.

ச‌ந்ரா : நீங்க‌ ம‌றுப‌டியும் என்ன‌ கொழப்ப‌ போறீங்களா?

மீரா : இல்ல‌. உன்னோட‌ கொழ‌ப்ப‌த்த‌ தீக்க‌ போறே.

ச‌ந்ரா : மீரா அக்கா பிலீஸ்.

மீரா : நா பேசுற‌து கேக்க‌வே கூடாதின்னு முடிவு ப‌ண்ணியிருக்கியா?

ச‌ந்ரா : இல்ல‌ மீரா அக்கா, நீங்க‌ த‌ப்பா நெனைக்காதீங்க‌.

மீரா : அப்போ த‌ய‌வு செஞ்சு நா சொல்ற‌த‌ கேளு.



ச‌ந்ரா : செரி மீரா அக்கா. ஆனா த‌ய‌வு செஞ்சு என்ன‌ இன்னும் கொழ‌ப்பாத்தீங்க‌.

மீரா : செரி. இப்ப‌ நா கேக்குற‌ கேள்விக்கு ப‌தில் சொல்லு.

ச‌ந்ரா : என்ன‌ மீரா அக்கா?

மீரா : என்னோட‌ மொத‌ல் கேள்வி. இப்போ நீ உதையான்னு சொல்ற‌, இந்த‌ அர்ஜுன் உன்ன‌விட்டு பிரிஞ்சுட்டா, நீ ச‌ந்தோஷ‌மா இருந்திருவியா?


தொட‌ரும்...
 

Author: Oviya Blessy
Article Title: CHAPTER-42
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.