Chapter-42

thenaruvitamilnovels

The World of Words
Staff member
Dec 25, 2024
163
0
16
www.amazon.com
“என் புருஷனுக்கு தான் என் மேல அக்கறை இல்ல. ஆனா சங்கர் அப்படி இல்ல. நான் காலை அட்டென்ட் பண்ணலனா, எனக்கு என்னமோ ஏதோன்னு நினைச்சு பயந்துருவாரு. அவன் மேல இருக்கிற கோவத்துல நான் இவர் கிட்ட பேசாம இருக்கறது நல்லா இருக்காது.” என்று நினைத்த சுவாதி தன் கண்ணீரை துடைத்து விட்டு சங்கரின் காலை அட்டென்ட் செய்து உடைந்த குரலில் “ஹலோ!” என்றாள். அவள் குரலில் அத்தனை சோகம்.



“என்னாச்சு உனக்கு? ஏன் வாய்ஸ் ஒரு மாதிரி இருக்கு? அழுதியா? நீ நல்லா தானே இருக்க!” என்று பதட்டமான குரலில் சங்கர் கேட்க, “இல்ல சங்கர். நான் கொஞ்சம் கூட நல்லா இல்ல. எனக்கு இருக்கிற டென்ஷனுக்கு இந்த வாழ்க்கையை எதுக்கு வாழனும்? எதுக்கு உயிரோட இருக்கணும்னு தோணுது. எனக்கு யாரையும் பிடிக்கல. எதுவும் பிடிக்கலை. எனக்கு சத்தியமா என்ன பண்றதுன்னே தெரியல சங்கர்.” என்று படபடவென சொன்ன சுவாதி அவள் கையில் இருந்த ஃபோனை இறுக்கிப் பிடித்துக் கொண்டு கதறி அழுதாள்.



“ஏய்.. என்ன டி ஆச்சு எதுக்கு இப்படி அழுகிற? உனக்கும் தினேஷுக்கும் ஏதாவது சண்டையா? நான் வேணா அவர் கிட்ட பேசி பார்க்கவா? முதல்ல அழுகாத சுவாதி.. நீ வாய திறந்து பேசுனா தான் என்னால ஏதாவது பண்ண முடியும்.” என்று அவன் பதட்டமான குரலில் சொல்ல, “இதுக்கு மேல யாராலயும் எதுவும் பண்ண முடியாது சங்கர். நான் தான் ஏதாவது டிசைட் பண்ணி ஆகணும். அவ்ளோ தான் என் லைஃப் முடிஞ்சிடுச்சு. இதுக்கு மேல யோசிக்கிறதுக்கு ஒன்னும் இல்ல. நான் ஆல்ரெடி என்ன பண்ணனும்னு முடிவு பண்ணிட்டேன். வேற யார் கிட்ட நான் இத பத்தி பேசினாலும், அவங்க கண்டிப்பா என்ன புரிஞ்சிக்க மாட்டாங்க. ஆனா நீங்க அப்படி இல்லன்னு எனக்கு தெரியும். எனக்காக ஒன்னே ஒன்னு மட்டும் பண்றீங்களா ப்ளீஸ்?” என்று கண்ணீருடன் உடைந்த குரலில் கேட்டாள் சுவாதி.



“என்ன.. என்ன பண்ணனும்னு சொல்லு. எதுவா இருந்தாலும் பண்றேன்.” என்று அவன் சொல்ல, “நான் ஹாஸ்பிடல் போகணும். என் கூட வரீங்களா? என்னால முடியல சங்கர். உடனே டாக்டரை பாக்கணும் எனக்கு வாமிட் வந்துகிட்டே இருக்கு. எதை சாப்பிட்டாலும் வாமிட் வருது. டாக்டர் நாலு மணிக்கு ஹாஸ்பிடல் வர சொன்னாங்க. நான் தினேஷ் கிட்ட சொன்னேன். அவர் வரமாட்டேன்னு சொல்லிட்டாரு. ப்ளீஸ் எனக்காக என் கூட வரீங்களா? இது தான் நீங்க எனக்கு பண்ற லாஸ்ட் ஹெல்ப்ன்னு நினைச்சுக்கோங்க.

சத்தியமா இதுக்கு மேல நான் உங்க கிட்ட வேற எதுவும் கேக்க மாட்டேன். எனக்கு தனியா போக பயமா இருக்கு. அதான் உங்களை கூப்பிடுறேன்.” என்று சுவாதி எமோஷனலாகி பேச, “என்ன உனக்கு இப்ப.. ஹாஸ்பிடல் போகணும் அவ்ளோ தானே.. நீ வான்னு சொன்னா, நான் வரப்போறேன். அதுக்கு ஏன் இப்படி எல்லாம் பேசுற? நீ எதை பத்தியும் யோசிக்காம ரெஸ்ட் எடு. நான் தினேஷ் கிட்ட பர்மிஷன் கேட்டுட்டு அங்க கிளம்பி வரேன்.” என்றான் சங்கர்.‌



“நீங்க எனக்காகன்னு கேட்டீங்கன்னா அந்த கல்நெஞ்சகாரன் பர்மிஷன் குடுக்க மாட்டேன்னு சொன்னாலும் சொல்லுவான். நீங்க பொதுவா கேட்கிற மாதிரி கேளுங்க. அவனைப் பத்தி நினைச்சாலே எனக்கு ஆத்திர ஆத்திரமா வருது சங்கர். அவன் பேர கூட நான் கேட்க விரும்பல. நீங்க இங்க வந்துட்டு எனக்கு கால் பண்ணுங்க. எனக்கு அகைன் வாமிட் வர்ற மாதிரி இருக்கு நான் வைக்கிறேன் பாய்.” என்ற சுவாதி வேகமாக பாத்ரூமிற்க்கு ஓடி சென்று வாந்தி எடுத்தாள்.



தினேஷிடம் எந்த காரணமும் சொல்லாமல் பர்மிஷன் மட்டும் கேட்டுவிட்டு ஒரு கேப் பிடித்து தனது அப்பார்ட்மெண்ட் வீட்டிற்கு வந்த சங்கர் வெளியில் நின்று காலிங் பெல்லை அடித்தான். தன் வயிற்றைப் பிடித்துக் கொண்டு மெல்ல நடந்து சென்ற சுவாதி கதவை திறந்துவிட்டு அவனை பார்த்தாள். அவள் ஒரே நாளில் இளைத்து போனதைப் போல துவண்டு போய் பாதி உடலாக இருப்பதாய் நினைத்த சங்கர் வேகமாக உள்ளே சென்று அவளது தோள்களை பற்றிக் கொண்டு “என்ன மா ஆச்சு உனக்கு? ஏன் தினேஷ் மேல இவ்வளவு கோபம்? இங்க பாரு அழுது அழுது முகமெல்லாம் வீங்கி போய் இருக்கு. எதுக்காக உன்னை நீயே இப்படி கஷ்டப்படுத்துகிற? நீ எதுவா இருந்தாலும் என் கிட்ட சொல்லு. நான் கண்டிப்பா உனக்காக தினேஷ் கிட்ட பேசுறேன். உங்களுக்குள்ள எந்த பிரச்சனை இருந்தாலும் நான் அதை சால்வ் பண்ண ட்ரை பண்றேன்.” என்றான் சங்கர்.



எனக்கென யாரும் இல்லையே என்று நினைத்து மனமுடைந்து அவ்வளவு நேரம் அழுது கொண்டு இருந்த சுவாதிக்கு ஷங்கரின் ஆறுதலான வார்த்தைகள் “நமக்காக யோசிக்கவும் இந்த உலகத்துல ஒருத்தர் இருக்காரு.” என்ற நிம்மதியை அவளுக்கு கொடுக்க, உடனே தாவி அவனை இறுக்கமாக அணைத்துக் கொண்ட சுவாதி “நான் 3 months pregnantஆ இருக்கேன் சங்கர். எனக்கு இந்த குழந்தை வேணும். இந்த குழந்தைக்காக நான் என்ன வேணாலும் பண்ண ரெடியா இருக்கேன். தினேஷ் என் குழந்தையை அபார்ஷன் பண்ண சொல்றாரு. நான் செத்தாலும் என்னால அப்படி பண்ண முடியாது. இது என் ரத்தம். என் குழந்தை. என்னால இதை யாருக்காகவும் எதுக்காகவும் கொல்ல முடியாது சங்கர். இத சொன்னா என்னை அவன் புரிஞ்சிக்கவே மாட்டேங்கிறான். உனக்கு குழந்தை வேணும்னா என்னை டிவர்ஸ் பண்ணிட்டு போனு சொல்றான்.” என்று சொல்லிவிட்டு கதறி அழுதாள்.

அவள் பேச பேச சங்கரின் இதயம் வேகமாக துடிக்கத் தொடங்கியது. யாழினியிடம் தங்களுக்கு என்று ஒரு குழந்தை வேண்டும் என பிச்சை எடுக்காத குறையாக அவன் பல வருடங்களாக கேட்டுக் கொண்டிருக்கிறான். ஆனால் அவளோ “இப்ப எல்லாம் எனக்கு குழந்தை பெத்துக்குற இன்ட்ரஸ்ட்டே இல்ல சங்கர். எனக்கு அம்மா அப்பான்னு யாருமே இல்ல. ஏதோ எங்க அத்தை ஹெல்ப் பண்ணதுனால நான் படிச்சு இந்த இடத்துக்கு வந்து இருக்கேன். நான் படித்து முடிச்சதுக்கு அப்புறம், இதுக்கு மேல நான்தான் என்னை பாத்துக்கணும்ன்னு ஒரு நிலைமை வரும்போது; எனக்காகன்னு யாராவது இருந்தா நல்லா இருக்கும்னு தோணுச்சு.

அதான் உன்ன லவ் பண்ணி முழுசா ஆறு மாசம் கூட ஆகாம உன் கூட சேர்ந்து வாழணும்ன்ற ஆசையில நான் உன்ன உடனே கல்யாணம் பண்ணிக்கிட்டேன். அதுக்காக என்னால அவசரப்பட்டு குழந்தை எல்லாம் பெத்துக்க முடியாது. எனக்குன்னு நிறைய ட்ரீம்ஸ் இருக்கு. நான் ஒரு stable family background இல்லாம எவ்ளோ கஷ்டப்பட்டு இருக்கேன் தெரியுமா? நீயும் அப்படித்தானே கஷ்டப்பட்ட.. உங்க அம்மா உன் சின்ன வயசுலயே இறந்துட்டாங்க.

உன் அப்பா வேற பொண்ண வச்சுக்கிட்டு அவங்க குடும்பத்தோட போயிட்டாரு. அவரா உன்ன கஷ்டப்பட்டு வளத்துனாரு? நீயா part job பார்த்து கஷ்டப்பட்டு தானே படிச்ச.. நம்ம குழந்தைக்கு அந்த மாதிரி எந்த கஷ்டமும் வரக் கூடாதுன்னு நான் நினைக்கிறேன் சங்கர். இப்போ நம்ம கிட்ட இருக்கிற சேவிங்ஸ குழந்தைக்கு டெலிவரி செலவு பேனா பார்க்கலாம். Futureல அதை எப்படி நம்ம ஆசைப்படுற மாதிரி வளர்த்த முடியும்? நம்ம கரியர்ல கொஞ்சம் செட்டில் ஆகி, சேவிங்ஸ் எல்லாம் வெச்சிக்கிட்டு, முதல்ல சொந்தமா ஒரு வீடு வாங்குனதுக்கு அப்புறமா தான் என்னால குழந்தையை பத்தி எல்லாம் யோசிக்க முடியும். அதுவரைக்கும் இதை பத்தி எல்லாம் என் கிட்ட பேசவே பேசாத ப்ளீஸ்.. எனக்கு டென்ஷன் ஆகுது.” என்று சொல்லி அவனை ஆஃப் செய்து விடுவாள்.

தொடரும்..

அமேசானில் முழு புத்தகத்தையும் படிக்க:

இதழ் அமுதங்களால் நிறைந்தேன் | Idhal Amuthangalal Nirainthen by SNK Books [Tamil Edition] : Tamil adult Romantic novel https://amzn.in/d/9PbpXaN

எங்களது பேஸ்புக் குரூப்பில் இணைய:

 

Author: thenaruvitamilnovels
Article Title: Chapter-42
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.