“என்னடா நடக்குது இங்க… அவன் என்னடா அப்படி பேசிட்டு போறான்… இவளும் அமைதியா இருக்கா” என்று கோபத்தில் விக்ரம் பேச, “கார்த்திக் என்ன பேசினான் சொல்லு…. அவன் ஒன்னும் பேசல சரியா, நீ ஏதாவது குழப்பத்துல இருக்காத”.
“அதுவும் இல்லாம நீ எவ்ளோ கோவப்பட்டாலும் சரி, அபி மூஞ்சிய தூக்கி வெச்சிட்டே போனாலும் சரி சனா இப்படித் தானே உங்க கிட்டயும் இருந்தா… அவ எல்லார் கிட்டயும் ஒரே மாதிரி தான் பழகுறா… அதனால கார்த்திக் கிட்ட மட்டும் தனியா ஒன்னும் புதுசா அவ பழகல அத ஞாபகம் வெச்சுக்கோ…. இந்த கோபத்தை எடுத்துட்டு போய் திருப்பி அவ மேல காட்டாத… அவளே பாவம் நொந்து போய் இருக்கா” என்று சரவணன் கூறவும், விக்ரம் அமைதியாகி விட்டான்.
“ப்ச்…. என்னவோ போடா… சரி அவ கிட்ட பேசுறேன்னு சொன்னியே என்ன சொன்னா??” என்று விக்ரம் கேட்க, “எதுவுமே சொல்லல நான் பேசுனதுக்கெல்லாம் அழுதுட்டு தான் நின்னா” என்று சரவணன் கூற,
“என்ன மச்சான் சொல்ற… ஏன் அழுவுறா??” என்று வருத்தத்துடன் விக்ரம் கேட்க, “அதை நீங்க ரெண்டு பேரும் பேசினா சரியாவும் டா…. நான் விகாஷ் கிட்டயும் கேட்டேன் சனாவை பத்தி…. நான் சொன்னதெல்லாம் வெச்சு விகாஷ் சொன்னதும் அது தான்… “ஒரு வேலை சனாவுக்கு விக்ரமை பிடிச்சிருக்கு போலன்னு” தான் சொல்றான் அவனும்…. நீங்க ரெண்டு பேரும் பேசினாலே சரியாகிடும் டா பிரச்சனை, ஏன் தான் ரெண்டு பேரும் இப்படி படுத்துறீங்களோன்னு தெரியல எங்கள” என்று சரவணன் சலித்துக் கொண்டான்.
“அப்புறம் விகாஷ் சொன்னான், “இந்நேரம் சனா எப்பயோ அடுத்தவங்களுக்காக யோசிச்சிட்டு அதுக்கு என்ன பண்ணனும்னு முடிவு கூட எடுத்துட்டு இருப்பா… அதுக்கு தான் இந்த அமைதி… அவ அமைதியா இருந்திட்டு கொஞ்சம் கொஞ்சமா சரியாகி வந்தா முடிவு எடுத்திட்டான்னு தான் அர்த்தம்” அப்படின்ற மாதிரி சொன்னான்… ஒன்னு, முதல்ல நீ போய் பேசு… இல்லன்னா உனக்கும் கவிதாக்கும் கல்யாணம் பண்ணி வெச்சிட்டு இந்த ஊரை விட்டு போயிடுவா பார்த்துக்கோ” என்று சரவணன் கூறினான்.
“மச்சான் என்ன பேசுற நீ???? நீ சொன்னத என்னால யோசிச்சு கூட பார்க்க முடியல” என்று விக்ரம் ஆதங்கத்துடன் கூற, “இத நீ என்கிட்ட பேசுறதை விட அவகிட்ட போய் பேசுடா நேரத்தை வீணாக்காத” என்று சரவணன் கூறினான்.
“நடுவுல இப்ப கார்த்திக்…. இவன் வேற வந்து ஏன் சனா கிட்ட அப்படி நடந்துக்கிறான்னு தெரியல” என்று விக்ரம் கூற, “அவன் என்னடா பண்றான்? நீ எல்லாத்துக்கும் இப்படி ரியாக்ட் பண்ற விக்கி” என்று சரவணன் கூற, “உனக்கு தெரியலையா??? கார்த்திக் அவளை பார்த்து பேசினதும் சரி… கை கொடுத்துட்டு சிரிச்சிட்டே நின்னதும் சரி… சனான்னு உரிமையா கூப்பிடறதும் சரி… எனக்கு அது ஏதோ பண்ணுது எனக்கு சொல்ல தெரியல” என்று விக்ரம் கூறினான்.
“டேய் முதல்ல முக்கியமான பிரச்சனை எதுவோ அதுக்கு வழிய தேடு…. அத விட்டுட்டு இந்த கார்த்திக் பையன் எல்லாம் ஒரு விஷயமும் இல்லை… அவன் சும்மா கூட அப்படி பண்ணலாம்… அப்படியே அவன் சனா கிட்ட ஃபிளர்ட் பண்ணாலும் அவளே அதுக்கு இடம் கொடுக்க மாட்டா…. நீ ஏன் இவ்வளவு யோசிக்கிற” என்று சரவணன் கூறினான.
“எல்லாமே எனக்கும் புரியுது மச்சான் ஆனா அவ விஷயத்துல என்னால தரையிலேயே நிக்க முடியல அப்படி இருக்கு எனக்கு” என்று விக்ரம் கூறவும், “அதான் தெரியுதே பைத்தியம் மாதிரி சுத்தின்னு இருக்கேன்னு” என்று சரவணன் முணுமுணுக்க, “நீ சொன்னது என் காதுல கேட்டுச்சு இன்னும் கொஞ்ச நாள் போனா பைத்தியம் தான் ஆயிருவேன் போல” என்று கூறினான் விக்ரம்.
“சனா ஒரு நிமிஷம்” என்று அபிலாஷ் அழைக்க, “அங்கிள் நீங்க போயிட்டு இருங்க நான் பேசிட்டு வரேன்” என்று ஸ்ரீனிவாசன் மட்டும் கார்த்திகை அனுப்பிவிட்டு, அபிலாஷிடம் சென்று, “சொல்லுங்க டாக்டர்” என்று சனந்தா கேட்கவும், “உங்க டிஸ்சார்ஜ் சம்மரி கிடைச்சிருச்சு…. நான் ஊட்டிக்கு போய் இன்னிக்கு வாங்கிட்டு வந்தேன்… அதுலயும் பெருசா நான் சொன்ன எந்த மெடிசனும் போடல… அதெல்லாம் போக ஹார்ட் வால்வு ரீப்ளேஸ் பண்ணது பத்தி மட்டும் தான் டீடையில்டு ரிப்போர்ட் இருக்கு மத்தபடி வேற எதுவும் இல்ல” என்று அபிலாஷ் கூறினான்.
“ம்ம்… நான் தான் சொன்னேன்ல டாக்டர் அந்த மெடிசன் நான் யூஸ் பண்ண ஞாபகமே இல்ல…. நான் செக்கப் போகும் போதும் கார்டியாக் டாக்டர் கிட்ட தான் போவேன்…. அது போக ஸ்கின் டாக்டர் கிட்ட போவேன் அவ்வளவு தான்” என்று சனந்தா கூறவும்,
“ப்ச்… இவளுக்கு ஏதுவும் ஞாபகம் இல்ல நம்ம ஏதாவது பேசி அவளை குழப்பி வைக்க போறோம்…. ஏதாவது வேணும்னா சரவணன் கிட்டயோ இல்ல விக்ரம் கிட்டயோ பேசி அவங்க வீட்டு ஆளுங்க கிட்ட பேசி விஷயம் தெரிஞ்சிக்கலாம்…. அத விட்டுட்டு இப்ப இவகிட்ட கேட்டு குழப்ப வேண்டாம்” என்று அபிலாஷ் மனதில் நினைத்துக் கொண்டு,
“இதுக்கு தான் சனா கூப்பிட்டேன்… நானும் ரிப்போர்ட்ஸ் வந்துருச்சுன்னு இப்ப நான் ஃபைல் பண்ணிடுவேன்னு சொல்றதுக்காக தான் கூப்பிட்டேன் வேற ஒன்னும் இல்ல” என்று அபிலாஷ் கூறினான்.
“ம்ம்… ஓகே… அப்புறம் டாக்டர் எனக்கு ஒரு ஹெல்ப் பண்ணனும்…. உங்க இன்டர்ன் இல்ல நர்ஸ் யாராவது ஒருத்தங்க வந்து பசங்களுக்கு சேஃப்டி மேஷர்ஸ் சொல்லிக் கொடுத்தா கொஞ்சம் நல்லா இருக்கும் பசங்களுக்கு…. எப்படியும் வாரத்துல ஒரு நாள் ஸ்போர்ட்ஸ் ஆக்டிவிட்டீஸ்காக இங்கே கீழே தான் வருவோம் நாங்க… அப்போ ஏதாவது பண்ண முடியுமான்னு பாருங்க… ரொம்ப நேரம் இல்லனாலும் ஒரு அரை மணி நேரம் ஏதாவது சொல்லிக் கொடுக்க முடியுமான்னு பாருங்க” என்று சனந்தா கூற, “ம்ம் சரி நான் பார்த்துட்டு சொல்றேன் உங்களுக்கு” என்று அபிலாஷ் கூறினான்.
“ரொம்ப நன்றி … நான் கிளம்புறேன் டாக்டர்” என்று சனந்தா கூற, “வெயிட் பண்றீங்களா நான் இப்ப எப்படியும் மேல தான் போகணும் மருந்து மாத்திரை எல்லாம் வந்து இருக்கு அத கொடுக்கணும்…. நானே உங்கள கூட்டிட்டு போறேன்” என்று அபிலாஷ் தயக்கத்துடன் கூற,
“பரவால்ல டாக்டர் நடந்து பழகிட்டேன் அதனால நான் போறேன்” என்று சனந்தா கூற, “எப்படியும் அங்க தான் போறேன்…. பரவால்ல வெயிட் பண்ணுங்க ஒரு பத்து நிமிஷம் தான் நான் உன்னை கூட்டிட்டு போறேன்” என்று அபிலாஷ் கூறவும், மறுக்க மனமின்றி சரி என்று ஹாஸ்பிடலில் வாயிலில் அமர்ந்து கொண்டாள் சனந்தா.
அபிலாஷ் அவன் வேலையை முடித்துக் கொண்டு மருந்து மாத்திரைகளை எடுத்துக் கொண்டு விக்ரமிடம் சென்று சாவியை கேட்க, “நாங்க ரெண்டு பேரும் இப்ப மேல தான்டா போக போறோம் வா” என்று மூவரும் பேசிக் கொண்டே ஆஃபீஸில் இருந்து வெளியே வந்தனர்.
“இவர் கூட எங்க என்னை கோர்த்து விட்டுடுவாங்களோ” என்ற பயத்தில் சனந்தா அங்கே போடப்பட்டிருக்கும் திரைக்குப் பின்னால் வேறு திசையில் எதையோ பார்ப்பது போல் நின்று கொண்டாள்.
“மருந்து மாத்திரை கொண்டு போறியா…. சரி குடு நாங்களே கொடுத்திடுரோம்” என்று சரவணன் கூறி, “நீங்க குடுத்துருவீங்க அதுக்கப்புறம் நாப்பது வாட்டி நான் மேல ஏறி இறங்கனும்… ஒவ்வொருத்தருக்கும் இது எப்படி போடணும்…சாப்பிட்டதுக்கு முன்னாடியா சாப்பிட்டதுக்கு அப்புறமா.. இதெல்லாம் நான் வந்தா தெளிவா சொல்லிடுவேன்” என்று அபிலாஷ் சலித்துக் கொள்ள,
“அதுவும் சரிதான் எங்களுக்கும் வேலை இருக்கு வா நம்ம மூணு பேரும் போயிருவோம்…. ட்ரிபிள்ஸ் போலாம்” என்று விக்ரம் கூற, “அடேய் நான் மட்டும்னா உங்க கூட வந்துருவேன்…. சரி அப்ப நீங்க கிளம்புங்க” என்று அபிலாஷ் கூறினான்.
“வேற யார்ரா உன் கூட வரா” என்று சரவணன் கேட்கவும், “அதோ சனா…. அங்க வெயிட் பண்ணிட்டு இருக்கா… நான் தான் வெயிட் பண்ண சொன்னேன் அவளோட டிஸ்சார்ஜ் சம்மரி வந்துருச்சு அத பத்தி பேசிட்டு இருந்தோம்…. சரி எப்படியும் நான் போகணும் அதனால வெயிட் பண்ணு, நான் கூட்டிட்டு போறேன்னு சொன்னதுனால தான் வெயிட் பண்றா அவளும்” என்று அபிலாஷ் கூறினான்.
“இல்லன்னா ஒன்னு பண்ணு விக்கி, நீ அவளை கூட்டிட்டு போ நான் பேசுறேன் சனா கிட்ட” என்று அபிலாஷ் கூற, “நீ சொல்லுவ டா ஆனா, அவ வரணும்ல” என்று சரவணன் எரிகிற நெருப்பில் எண்ணெயை ஊற்றினான். “ஏன்டா நீ வேற இப்படி பண்ற அவனே பாவம்” என்று அபிலாஷ் விக்ரமுக்கு வக்காலத்து வாங்கினான்.
“இல்ல நானே கூட்டிட்டு போறேன் டா அப்படியாவது அவகிட்ட பேச முயற்சி பண்றேன்’ என்று விக்ரம் கூறவும், கவிதா வந்து நின்றாள். “விக்ரம் உன்ன தான் தேடிட்டு வந்தேன் நானு” என்று கவிதா கூற, “இவளுக்கு எப்படி தான் கரெக்டா இந்த நேரத்துல வரணும்னு தெரியுதோ” என்று சரவணன் மனதில் புலம்பி கொண்டான்.
கவிதாவின் குரலை கேட்டதும் சனந்தாவுக்கு அங்கு இருக்க முடியவில்லை. சனந்தா அவர்களிடம் வந்து, “டாக்டர் நான் கிளம்புறேன் நீங்க வேணா பேசிட்டு வாங்க” என்று சனா கூற, “இல்ல நான் தான் உங்களை வெயிட் பண்ண சொன்னேன்…. நானே உங்க கூட வரேன் வாங்க நம்ம நடந்து போவோம்…. தப்பா எடுத்துக்காதீங்க உங்கள வெயிட் பண்ண வெச்சதுக்கு” என்று அபிலாஷ் கூற, “பரவால்ல டாக்டர் வாங்க போலாம்” என்று விக்ரம் சரவணன் கவிதா மூவரையும் திரும்பி கூட பார்க்காமல் சனந்தா அமைதியாக சென்று விட்டாள்.
“பரவாயில்லையே அப்பா நல்லா தான் டோஸ் குடுத்து இருக்காரு போல… அவ திரும்பி கூட பார்க்கல…. என்னை கூட பார்க்கலையே அவ” என்று கவிதா மனதில் நினைத்துக் கொண்டு சந்தோஷப்பட்டாள்.
“ப்ச்…. என்ன வேணும் உனக்கு??” என்று விக்ரம் உணர்ச்சியற்ற குரலில் கேட்க, “இல்ல நாளைக்கு மாமா காட்டுக்குள்ள போகணும்னு சொன்னாரு அதான் நாளைக்கு நீ வருவியான்னு கேட்க தான் வந்தேன்” என்று கவிதா கூற,
“அதுக்கு இப்ப தான் வரணுமா?? சாயந்திரம் நான் வீட்டுக்கு வந்துருவேன் அப்ப கூட கேட்கலாம்ல…. இல்ல ஒரு ஃபோன் பண்ணி கூட கேட்கலாம்… இப்ப எதுக்கு வந்த” என்று விக்ரம் கொந்தளிக்க, சரவணன் விக்ரமின் கையை பிடித்து, “மச்சான் உன் கோபத்தை இஷ்டத்துக்கு காட்டாத” என்று பல்லை கடித்துக் கொண்டு மெல்லிய குரலில் கூறினான்.
“ஏன் விக்ரம் இப்போ இப்படி கோபப்படுற??” என்று கவிதா கேட்க, “எங்களுக்கு வேலை இருக்கு நாங்க ரெண்டு பேரும் இப்போ போகணும் அது தான் டென்ஷனா இருக்கான்” என்று சரவணன் ஏதோ காரணத்தை கூறி, சரவணன் மற்றும் விக்ரம் வண்டியில் சென்றனர்.
“விக்ரமுக்கு உண்மையிலேயே என்னை பிடிக்கல தான் போலயே…. அப்பா சொன்ன மாதிரி கல்யாணம் ஆயிட்டா எல்லாம் சரியாகிடும் தானே…. ஒரு வேளை ஆகலன்னா என்ன பண்றது….. எனக்கு இவ்வளவு குழப்பமா இருக்கே… அவனுக்கு என்னை பிடிக்கும்னு நம்பிட்டு இருந்தேனே… அவனுக்கு என்னை பிடிக்காதுன்னா நான் எப்படி சந்தோஷமா இருப்பேன்… விக்ரமும் எப்படி சந்தோஷமா இருப்பான்” என்று கவிதா குழப்பத்தில் இருந்தாள்.
சரவணன் மற்றும் விக்ரம், அபிலாஷ் மற்றும் சனந்தாவை தாண்டி செல்லவும், சரவணன் வண்டியை ஓட்டி கொண்டு இருக்க, விக்ரம் பின்னால் அமர்ந்திருந்தான். அவர்களை தாண்டி செல்லும் பொழுது விக்ரம் திரும்பி சனந்தாவை பார்க்க சனந்தாவும் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள். அந்த மொழியில்லா பார்வைக்கான அர்த்தம் இருவருக்கு மட்டுமே சொந்தமானது.
அபிலாஷ் மற்றும் சனந்தா இருவரும் நடந்த செல்ல, அவளை டைவர்ட் செய்து கொள்ள அபிலாஷிடம் பேசிக் கொண்டே வந்தாள்.
“நீங்க இங்க வாலண்டியரா வந்த டாக்டர் தானா?? எப்படி இங்கே தங்கிட்டீங்க” என்று சனந்தா கேட்க, “தெரியல எனக்கு இங்க புடிச்சிருந்தது அதனால தங்கிட்டேன்” என்று அபிலாஷ் கூறவும், “எனக்கு ஒன்னு தோணுது கேட்கலாமா?? கேட்டா தப்பா எடுத்துக்க மாட்டீங்களே??” என்று சனா கேட்க, “கேளுங்க நீங்க கேட்டதுக்கு அப்புறமா பார்க்கலாம்” என்று அபிலாஷ் கூறவும், “அப்படின்னா வேண்டாம்” என்று சனந்தா கூற, “இல்ல பரவால்ல கேளுங்க” என்று அபிலாஷ் கூற, “அபர்ணாவ லவ் பண்றீங்களா??” என்று சனந்தா கேட்டாள்.
கருத்துக்கள் எதுவாயினும் வரவேற்கப்படும்
நன்றிகள் பல

Author: Bhavani Varun
Article Title: Chapter 41
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.