CHAPTER-41

Oviya Blessy

Member
Jan 4, 2025
45
0
6
அர்ஜுன் க‌ண்விழித்து ச‌ந்ராவை பார்த்தான்.



அர்ஜுன் : அமிர்த்தா !

ச‌ந்ரா அதிர்ச்சி ஆனாள்.

ச‌ந்ரா : அமிர்த்தாவா?

அர்ஜுன் : (சோர்வுட‌ன்) என‌க்கு நீ யாருன்னு தெரிஞ்சிரிச்சு. நா யாருன்னும் தெரிஞ்சிருச்சு. நா உன‌க்காக‌தா ம‌றுப‌டியும் பொற‌ந்திருக்கே. (அர்ஜுனுக்கு பூர்வ‌ ஜென்ம‌ம் அனைத்தும் ஞாப‌க‌ம் வ‌ந்துவிட்ட‌து)

ச‌ந்ரா அதிர்ச்சியில் அவ‌ள் பிடித்திருந்த‌ அர்ஜுனின் கையை விட்டுவிட்டாள்.

ச‌ந்ரா : (ம‌ன‌திற்க்குள்) நா எது ந‌ட‌க்க‌க்கூடாதின்னு நென‌ச்ச‌னோ அது ந‌ட‌ந்திரிச்சு.

அர்ஜுன் : அதோட‌ நீயும் என‌க்காக‌தா ம‌றுப‌டியும் பொற‌ந்திருக்க‌. வேற‌ யார்க்காக‌வும் இல்ல‌. என‌க்காக‌ ம‌ட்டுந்தா.

ச‌ந்ரா : (ம‌ன‌திற்க்குள்) அந்த‌ உதையா எப்பிடி பேசுவானோ அதே மாதிரி பேசுறா.

அர்ஜுன் : பூர்வ‌ ஜென்ம‌த்துல‌ உன்ன‌ நா மிஸ் ப‌ண்ணீட்டே, ஆனா இந்த‌ ஜென்மோ என‌க்கு கெட‌ச்ச‌ இன்னொரு வாய்ப்பு. இதுல‌ நீ என‌க்கு சொந்த‌மாய்ட்ட‌. திரும்ப‌ ஆதியோ அபியோ, யாராலையும் என்ன‌ உங்கிட்ட‌ இருந்து பிரிக்க‌ முடியாது.

ச‌ந்ரா : (ம‌ன‌திற்க்குள்) (மிக‌வும் ப‌ய‌த்துட‌ன்) இப்ப‌ எங்கிட்ட‌ பேசிட்டிருக்கிற‌து, முழு உதையாவேதா.

அர்ஜுன் : அழ‌கி !

ச‌ந்ரா அதிர்ச்சியாக‌ அர்ஜுனை பார்த்தாள்.

அர்ஜுன் : உன்ன‌ பூர்வ‌ ஜென்ம‌த்துல‌ நா இப்பிடித்தான‌ கூப்பிடுவே?

ச‌ந்ரா : (ப‌ய‌த்துட‌ன்) ஆமா.

அர்ஜுன் : இப்போ நா உன்ன‌ அழ‌கின்னு கூப‌ட‌ற‌தா? இல்ல‌ ஸ்வீட் ஹார்ட்னு கூப்ப‌டுற‌தா? ஒரே கொழ‌ப்ப‌மா இருக்கு.

ச‌ந்ரா ப‌ய‌ம் நிறைந்த‌ க‌ண்க‌ளால், அர்ஜுனை பார்த்துக்கொண்டிருந்தாள்.

அர்ஜுன் : நீ ஏ பேய‌ர‌ஞ்ச‌ மாதிரி இருக்க‌?

ச‌ந்ரா : இல்ல‌. ஒன்னு இல்ல‌.

அர்ஜுன் : இந்த‌ ஜென்ம‌த்துல உன்னோட‌ மொக‌ம் மாறுனாலும் உன்னோட‌ அழ‌கு மாற‌ல‌. அப்பிடியேதா இருக்கு. பேர‌ழ‌கு.

உட‌னே மீரா அங்கு வ‌ந்தாள்.

மீரா : அர்ஜுன் ! நீ ந‌ல்லா இருக்க‌ல்ல‌?

அர்ஜுன் : யா, மீரா அயம் Fine. நா ந‌ல்லா இருக்கே.

ச‌ந்ரா வேக‌மாக‌ பெட்டில் இருந்து எழுந்து,

ச‌ந்ரா : நா போய், உன‌க்கு குடிக்க‌ எதாவ‌து கொண்டுவ‌ர்றே.

என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டாள்.

மீரா : நீ ந‌ல்லா ரெஸ்ட் எடு அர்ஜுன். நா ச‌ந்ராவுக்கு உதவி ப‌ண்ண‌ கிச்ச‌னுக்கு போறே.

அர்ஜுன் : Ok.

மீராவும் அங்கிருந்து சென்றாள். மீரா கிச்ச‌னுக்கு சென்றாள். அங்கு ச‌ந்ராவிட‌ம்,

மீரா : ச‌ந்ரா !

ச‌ந்ரா : சொல்லுங்க‌ மீரா அக்கா. எதாவ‌து வேணுமா?

மீரா : என‌க்கு எதுவும் வேண்டா, நீ அர்ஜுங்கிட்ட‌ சொல்லீட்டியா?

ச‌ந்ரா வேலை பார்த்துக்கொண்டே,

ச‌ந்ரா : என்ன‌ சொல்லீட்டியா?

மீரா : வெளையாடாத‌ ச‌ந்ரா. உன்னோட‌ காத‌ல‌ அர்ஜுங்கிட்ட‌ சொல்லீட்டியா?

ச‌ந்ரா : இல்ல‌ மீரா அக்கா.




மீரா : ஏ ச‌ந்ரா? ஓ...அதுக்குள்ள‌ நா வ‌ந்துட்ட‌னோ? செரி விடு, இப்ப‌வாவ‌து இந்த‌ ஜூச குடுத்திட்டு போய் சொல்லு. நா திரும்ப‌ வ‌ந்து உங்க‌ள டிஸ்டர்ப் ப‌ண்ண‌ மாட்டே.

ச‌ந்ரா : இல்ல‌ மீரா அக்கா. நா அவ‌ங்கிட்ட‌ சொல்ல‌ போற‌து இல்ல‌.

மீரா : (அதிர்ச்சியாக‌) ஏ? திரும்ப‌ என்ன‌ ஆச்சு?

ச‌ந்ரா : நா ரொம்ப‌ லேட் ப‌ண்ணீட்டே.

மீரா : என்ன‌ சொல்ற‌ ச‌ந்ரா? என‌க்கு புரிய‌ல‌.

ச‌ந்ரா : நா அர்ஜுன்கிட்ட‌தா காத‌ல‌ சொல்ல‌னுன்னு நென‌ச்சே. ஆனா அது முடியாம‌ போச்சு.

மீரா : ஏ முடிய‌ல‌?

ச‌ந்ரா : இப்போ இங்க‌ இருக்கிற‌து, அர்ஜுன் இல்ல‌ மீராக்கா, உதையா.

மீரா : (அதிர்ச்சியாக‌) என்ன‌?

ச‌ந்ரா : அர்ஜுனுக்கு எல்லா ஞாப‌கோ வ‌ந்திரிச்சு.

மீரா : நீ பைத்திய‌ம் மாதிரி பேசாத‌ ச‌ந்ரா. உதையா முடிஞ்சு போன‌ ஒரு விஷியோ. அர்ஜுன்தா உண்ம‌. நீ உண்மைய‌ விட்டுட்டு முடிஞ்சு போன‌ ஒரு விஷிய‌த்துக்காக‌ திரும்ப‌ அர்ஜுன‌ காய‌ப்ப‌டுத்த‌ போறியா?



ச‌ந்ரா : இல்ல‌ மீரா அக்கா. இப்போ அவ‌ அர்ஜுன் இல்ல‌, உதையா. நா அர்ஜுன‌ காத‌லிக்கிற‌ அள‌வுக்கு உதையாவ‌ வெறுக்கிறே.

மீரா : திரும்ப‌ திரும்ப‌ அதையே சொல்லாத‌ ச‌ந்ரா. உதையாத‌ அர்ஜுன். அர்ஜுன்தா உதையா. அதுதா உண்ம‌. நீ எதுக்காக‌ அவ‌ன‌ பிரிச்சு பாக்குற‌?

ச‌ந்ரா : என்ன‌ பொறுத்த‌வ‌ரிக்கும் ரெண்டு பேரும் வேற‌தா மீரா அக்கா.

மீரா : பிலீஸ் ச‌ந்ரா. திரும்ப‌ அதையே சொல்லாத‌. இப்ப‌வும் அவ‌ உன்னோட‌ அர்ஜுன்தா. நீ இத‌ மொத‌ல்ல‌ சொல்லு. அர்ஜுன‌ நீ இப்ப‌வும் காத‌லிக்கிற‌ல்ல‌?



ச‌ந்ரா : ஆமா மீரா அக்கா. நா அர்ஜுன‌ இப்ப‌வும் ரொம்ப‌ காத‌லிக்கிறே. ஆனா நா காத‌ல‌ சொல்ல‌ வ‌ரும்போது இப்பிடி ஆகுன்னு நா நெனைக்க‌வே இல்ல‌ மீரா அக்கா.

மீரா : இப்ப‌ என்ன‌ ஆயிரிச்சின்னு நீ இப்பிடி பேசுற‌? ஒன்னு ஆக‌ல‌. அர்ஜுனுக்கு பூர்வ‌ ஜென்மோ ஞாப‌கோ வ‌ந்திருக்கு அவ்ளோதா. அர்ஜுன் என்ன‌ செத்தா போய்ட்டா?

ச‌ந்ரா திடீரென‌ அதிர்ந்து போனாள்.

ச‌ந்ரா : பிலீஸ் மீரா அக்கா, அப்பிடி ம‌ட்டு சொல்லாதீங்க‌. அத‌ என்னால‌

மீரா : அத‌ உன்னால‌ தாங்க‌ முடியாது அதுதான? என‌க்கு தெரியும் ச‌ந்ரா, நீ அர்ஜுன‌ எவ்ளோ காத‌லிக்கிற‌ன்னு. ஆனா நீதா கொழ‌ப்ப‌த்தோட‌வே சுத்திகிட்டு இருக்க‌.

ச‌ந்ரா : பிலீஸ் மீரா அக்கா. நீங்க‌ளும் என்ன‌ கொழ‌ப்ப‌ாதீங்க‌. நா அர்ஜுனுக்கு ஜூஸ் குடுக்க‌ போக‌னும்.

ச‌ந்ரா அங்கிருந்து சென்றாள்.



மீரா : இவ‌ ஏ இப்பிடி ப‌ண்றா? அர்ஜுன‌ காத‌லிக்கிற‌ன்னு சொல்லீட்டு, இப்போ அது அர்ஜுனே இல்ல‌ன்னு சொல்றா. இவ‌ள‌ புரிஞ்சுக்க‌வே முடிய‌ல‌. ஆனா இத‌ இப்பிடியே விட‌க்கூடாது. அர்ஜுன் இவ‌ள‌ எப்பிடி காத‌லிக்கிறான்னு இவ‌ளுக்கு புரிய‌ வெச்சே ஆக‌னும். அதோட இவ‌ளும் அர்ஜுன‌ காத‌லிக்கிறா. அவ்ளோட‌ காத‌ல் எந்த‌ ஒரு கார‌ண‌த்துக்காக‌வும் அழியாது. ஒரு தெட‌வ‌ காத‌ல் அவ‌ளோட‌ இதைய‌த்துக்குள்ள‌ வ‌ந்திரிச்சு. இனி அவ‌ளே நென‌ச்சாலும் அத ம‌றச்சு வெக்க‌ முடியாது. அது வெளில‌ வ‌ந்தே தீரும்.

சந்ரா ஜூசை எடுத்துக்கொண்டு அர்ஜுனுடைய‌ அறைக்குள் சென்றாள். க‌தவை திற‌ந்தாள். ஆனால் உள்ளே அர்ஜுன் இல்லை.

ச‌ந்ரா : அர்ஜுன் எங்க‌ போனா?

ந‌ன்றாக‌ தேடி பார்த்தாள். ஆனால் அர்ஜுனை காண‌வில்லை. த‌ரையில் ஒரே இர‌த்த‌மாக‌ இருந்த‌து. அதை பார்த்த‌ ச‌ந்ரா மிக‌வும் ப‌ய‌ந்துவிட்டாள். ச‌ந்ரா ப‌த‌ட்ட‌த்துட‌ன்,

ச‌ந்ரா : என்ன‌ இது? ஒரே இர‌த்த‌மா இருக்கு? அர்ஜுனுக்கு என்ன‌ ஆச்சு?

ச‌ந்ரா மிக‌வும் ப‌ய‌ந்து போனாள்.


தொட‌ரும்...
 

Author: Oviya Blessy
Article Title: CHAPTER-41
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.