அர்ஜுன் இன்று தேன் மொழியுடன் ஜாலியாக வெளியில் கிளம்பி விட்டதால்,
ஆபீஸுற்க்கு சென்று சில முக்கியமான வேலைகளை முடித்துவிட்டு லேட்டாக வீட்டுக்கு வந்தான் ஆகாஷ்.
அவன் தனது அறைக்கு செல்லும்போது அவர்களது அறைக்குள் இருந்த மினி பெட்ரூமில் மகிழினை உறங்க வைத்துவிட்டு,
வெளியில் வந்து கட்டிலில் அமர்ந்திருந்த லிண்டா கையில் ஒரு புத்தகத்தை வைத்து சின்சியராக அதை படித்துக் கொண்டிருந்தாள்.
அவள் தொளதளவென்று இருந்த ஒரு சாம்பல் நிற டிஷர்டையும், பைஜாமா பேன்டையும் போட்டுக் கொண்டு புட்டி கண்ணாடியுடன் புக் படித்துக் கொண்டு இருப்பதை பார்த்த உடனேயே ஆகாஷிற்கு புஸ் என்று போய்விட்டது.
வேகமாக உள்ளே சென்றவன் தனது லேப்டாப் பேக்கை சோபாவில் வைத்துவிட்டு அவள் முன்னே சென்று மார்புக்கு குறுக்காக தன் கைகளை கட்டிக் கொண்டு அவளை முறைத்து பார்த்தான்.
சத்தம் கேட்டு நிமிர்ந்து பார்த்த லிண்டா,
“ஹாய் பேபி வந்துட்டியா?
எனக்கு செம தூக்கமா வந்துச்சு தெரியுமா?
அப்பயும் நான் உனக்காக தான் தூங்காம வெயிட் பண்ணிட்டு இருந்தேன்.
சாப்பாடு ரெடியா இருக்கு முதல்ல வந்து சாப்பிடு.” என்றபடி தன் கையில் இருந்த புத்தகத்தை மூடி வைத்துவிட்டு எழுந்தாள்.
அப்போதும் விடாமல் அவளை முறைத்து பார்த்த ஆகாஷ்,
“நீ சாப்பிட்டுட்டியா?” என்று கேட்க,
“ம்ம்.. மகிழுக்கு ஊட்டி விடும்போதே நான் சாப்பிட்டேன்.”
என்று சாதாரணமாக சொன்ன லிண்டா தனது கூந்தலை தூக்கி கொண்டை போட்டபடி அவனுக்கு சாப்பாடு எடுத்து வைப்பதற்காக அவர்கள் அறைக்குள் இருந்த மினி டைனிங் டேபிளை நோக்கி சென்றாள்.
அவள் கையைப் பிடித்து இழுத்த ஆகாஷ், “நான் உன் கிட்ட என்ன சொல்லிட்டு போனா,
நீ என்ன பண்ணிட்டு இருக்க?” என்று கடுப்புடன் கேட்க,
“நீ என்ன சொல்லிட்டு போன? நான் என்ன பண்ணேன்?” என்று எதுவும் தெரியாதவளை போல கேட்டு நடித்தாள் லிண்டா.
உடனே அவள் தாடையை லேசாக இருக்கி பிடித்த ஆகாஷ்,
“நான் அண்ணிக்காக அர்ஜுன் சொன்ன டெக்கரேஷனை பண்றதுக்கு வீட்டுக்கு வரும்போது,
உனக்கு ஒரு டிரஸ் வாங்கி குடுத்தேன்ல...
அதை போட்டுட்டு நைட் வெயிட் பண்ணு.
வேலன்டைன்ஸ் டே செலிப்ரேட் பண்றதுக்கு எல்லாத்தையும் ரெடி பண்ணி வை..
நான் வந்துடறேன்னு சொல்லிட்டுதானே போனேன்..
ஆனா நீ என்னடி இப்படி அசால்டா புக் படிச்சிட்டு இருக்க?” என்று கேட்க,
அவன் கையை தட்டிவிட்ட லிண்டா,
“இன்னைக்கு நீ எதுக்கு பிளான் பண்ணியோ, அது எதுவும் நடக்க போறது இல்ல.
அப்புறம் எதுக்கு நான் தேவை இல்லாம கஷ்டப்பட்டு ரெடியாகி உனக்காக வெயிட் பண்ணனும்?” என்று சாதாரணமாக கேட்டாள்.
உடனே டென்ஷனான ஆகாஷ், “ஏன்.. ஏன்.. ஏன் எதுவும் நடக்காது?
உனக்கு என் மேல ஏதாவது கோபமா?
நீ சொன்னத ஏதாவது நான் செய்யாம மறந்து விட்டுட்டேனா?
அதுக்குதான் என்னை பழிவாங்க இப்படி எல்லாம் பண்றியா நீ?
பட் உன்னை கடுப்பேத்துற அளவுக்கு நான் எதுவும் பண்ண மாதிரி எனக்கு ஞாபகம் இல்லையே..!!” என்று குழப்பமாக கேட்க,
“நீ எதுவும் பண்ணல. பட் நீ பண்றதுல நேச்சருக்கு விருப்பம் இல்லையே..
அதான் அது உன்னை பழிவாங்கிடுச்சு.” என்று சொல்லிவிட்டு அவனைப் பார்த்து சிரித்தாள் லிண்டா.
“நேச்சர் பழி வாங்கிருச்சா? என்னடி உளர்ற? எனக்கு ஒண்ணுமே புரியல.” என்று கடுப்பாகி ஆகாஷ் சொல்ல,
“இவனுக்கெல்லாம் நம்ம எப்படி சொன்னாலும் நம்ம சொல்ல வர்றது புரியாது.” என்று நினைத்த லிண்டா,
“இன்னைக்கு எனக்கு பீரியட்ஸ்.
அதுவும் ஈவினிங் தான் ஸ்டார்ட் ஆச்சு.
நானும் முதல்ல சும்மா அட்லீஸ்ட் கேக் வெட்டியாவது டான்ஸ் ஆடி உன் கூட சேர்ந்து அந்த டிரஸ் போட்டு வேலன்டைன்ஸ் டே செலிபரேட் பண்ணலாம்னு தான் நினைச்சேன்.
அப்புறம் எனக்கு உன்ன பத்தி தெரியாதா?
நீ எப்படியும் சும்மா இருக்க மாட்ட.. வேற வழி இல்லாம கண்ட்ரோல் பண்றதுக்கு எதையாவது பண்ணிட்டு இருப்ப..
அதான் எதுக்கு இந்த தேவையில்லாத வேலைன்னு யோசிச்சு நான் எதுவும் பண்ணாம விட்டுட்டேன்.
மகிழ் உள்ள நம்ப ரூம்ல தான் தூங்கிட்டு இருக்கான்.
சீக்கிரம் வா நம்மளும் சாப்பிட்டு தூங்கலாம்.” என்று சொல்லிவிட்டு கொட்டாவி விட்டாள்.
“அடிப்பாவி.. அநியாயமா இப்படி என் பிளான்ல மண்ணள்ளி போட்டுட்டியே டி..!!” என்றபடி ஆகாஷ் தன் கோட்டை கழட்டி கீழே போட்டுவிட்டு சென்று சோஃபாவில் பொத்தென்று விழுந்தான்.
வரும்போது பிரகாசமாக இருந்த அவனது முகம் இப்போது சுருங்கி போய் 0 வாட்ச் பல்பு போல மாறிவிட்டதை கண்ட லிண்டாவிற்கு அவனைப் பார்க்கவே பாவமாக இருந்தது.
அதனால் அவள் தானாக சென்று அவன் மடியில் அமர்ந்து,
“சரி விடு, இன்னும் ரெண்டு மூணு நாள் தானே..
அதுவரைக்கும் அட்ஜஸ்ட் பண்ண முடியாதா?” என்று அவனது குறுந்தாடியை பிடித்து விளையாடியபடி குழைவான குரலில் கேட்டாள் அவள்.
“முடியாது போடி. ஆல்ரெடி ஆபீஸ்ல இருந்து கிளம்புறதுக்கு முன்னாடியே நான் நிறைய யோசிச்சு என்னென்னமோ நெனச்சு மூடேத்திட்டு வந்தேன்...
இங்க வந்து பார்த்தா எல்லாம் புஸ்சுன்னு போச்சு..
உனக்கு தான் ஈவினிங்கே தெரியும் இல்ல..
அப்பயே என்கிட்ட ஒரு மெசேஜ் பண்ணியாவது இன்னைக்கு ஒன்னும் இல்லைன்னு சொல்லி தொலைஞ்சு இருக்க வேண்டியதுதானே..
நான் மெண்டலி எல்லாத்துக்கும் ரெடியாகி இவ்ளோ எக்ஸ்பெக்ட் பண்ணிட்டு வந்திருக்க மாட்டேன்ல...!!
இதுல என் மடியில வேற வந்து உட்கார்ந்து இன்னும் என்ன வேணும்னே டெம்ப்ட் பண்றியா?
நான் மைண்ட் சேஞ்ச்சாகி ஏதாவது பண்றதுக்குள்ள ஒழுங்கா எந்திரிச்சு போயிரு அந்த பக்கம்..”
என்று சொல்லிவிட்டு ஆகாஷ் தன் முகத்தை சுளிக்க,
“இதுக்கெல்லாம் இப்படி ஃபீல் பண்ணலாமா பேபி?
நீ மனசு வச்சா அந்த அளவுக்கு இல்லைனாலும் ஓரளவுக்கு பண்ணலாமே..!!” என்று கேட்டுவிட்டு அவனைப் பார்த்து கண்ணடித்தாள் லிண்டா.
அவன் என்னென்னமோ யோசித்து கற்பனை செய்து எதிர்பார்த்து வந்திருக்க,
இப்படி அவள் அது இல்லை என்றால் இது என்று பேசியவுடன் உடனே அவனுக்கு அவள் என்ன சொல்ல வருகிறாள் என்று ஒன்றும் புரியவில்லை.
அதனால் அப்போதும் அவன் தன் முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு,
“அதான் மொத்தமா முடியாதுன்னு சொல்லி முடிச்சு விட்டுட்டியே.. அப்புறம் என்ன?
எனக்கு பசிக்குது.. ஆசையா வந்ததுக்கு அட்லீஸ்ட் நிம்மதியா சாப்பிட்டுட்டாவது தூங்குறேன்.” என்று ஆகாஷ் ஒரேடியாக புலம்ப,
தன் கைகள் இரண்டையும் அவன் தோள்களில் மாலையாக போட்ட லிண்டா,
“கைக்கு எட்டுனது வாய்க்கு எட்டளைன்னு நினைச்சு ஃபீல் பண்றதுக்கு பதிலா இப்போதைக்கு கையையும், வாயையும் வச்சு நம்ம தான் ஏதாவது செஞ்சு சந்தோஷப்பட்டுக்கணும் பேபி..
உடனே எதுவும் நடக்காதுன்னு நீயா நெனச்சு ஃபீல் பண்ணா, ஒன்னும் நடக்காது.” என்று ஹஸ்கி வாய்ஸில் சொல்லிவிட்டு அவனைப் பார்த்து கண்ணடித்தாள்.
அவள் அப்படி பேசிய பிறகு தான் இவ்வளவு நேரமாக அவள் என்ன சொல்ல முயற்சிக்கிறாள் என்றே அவனுக்கு விளங்கியது.
அதனால் உடனே அவன் முகம் 1000 வாட்ஸ் பல்பு போல பிரகாசமாகி விட,
“வாவ் பேபி.. you are just unbelievable!
That's why I love you so much Lin.. my naughty wifeeee.” என்ற ஆகாஷ் உடனே அவள் பின் தலையில் கை வைத்து அவளை தன் பக்கம் இழுத்து அவள் இதழ்களை தனது இதழ்களால் சிறை செய்தான்.
பின் அப்படியே அவளை தூக்கிக் கொண்டு கட்டிலை நோக்கி நடக்க தொடங்கினான்.
அங்கே நிலாவை பார்த்தபடி கார்டன் ஏரியாவில் உள்ள புல் தரையில் தேன்மொழியுடன் அமர்ந்திருந்த அர்ஜுன் அவளை முத்தமிட்டு கொண்டிருந்தான்.
அப்படியே சில நிமிடங்கள் கடக்க, அவள் மூச்சு விட சிரமப்படுவதை கவனித்து அவளை விடுவித்த அர்ஜுன்,
“நீ இதுக்கு முன்னாடி யாரையாவது கிஸ் பண்ணி இருக்கியா?” என்று அவளிடம் கேட்க,
வெட்கத்தில் தலை குனிந்த தேன்மொழி இல்லை என்று தலையாட்டினாள்.
“அட ஆமா.. நீ தான் யாரையும் லவ் பண்ணது இல்லைன்னு சொல்லி,
என் கிட்ட நான் கோமால இருக்கும்போது புலம்பிட்டு இருந்தியே.. மறந்துட்டேன்.” என்ற அர்ஜுன்,
“உனக்கு புடிச்ச மாதிரி உன் லைஃப்ல எந்த பையனும் வரலையா?
ஏன் நீ யாரையும் லவ் பண்ணாம இருந்த?
உனக்கு எவனோ ஒருத்தன் பெஸ்ட் ஃபிரண்டா இருந்ததா கூட அவன பத்தி நிறைய சொன்னியே...
அவன் மேல கூட உனக்கு ஃபீலிங்ஸ் வரலையா?” என்று ஆர்வமான முகத்துடன் கேட்டான்.
அந்த கேள்வி அவளை நார்மலாக்க போதுமானதாக இருக்க அவன் கண்களை நேருக்கு நேராக பார்த்த தேன்மொழி,
“உதையா என் பெஸ்ட் ஃபிரண்ட்.
அவன் மேல எனக்கு எப்படி ஃபீலிங்ஸ் வரும்?
என் ஃபிரண்டை எல்லாம் நான் எப்பவும் லவ் பண்ண மாட்டேன் மிஸ்டர் அர்ஜுன்.
இதுவரைக்கும் எனக்கு யாரை பார்த்தும் லவ் பண்ணனும்னு ஒரு எண்ணம் வந்ததே இல்ல.
ஏன்னா, எங்க அம்மா நான் கொஞ்சம் வளர்ந்த உடனே தெரியாம கூட யாரையும் லவ் பண்ண கூடாதுன்னு என்ன சொல்லி சொல்லி வளர்த்தாங்க.
எனக்கு அப்பா இல்லை. எங்க அம்மா தான் என்னையும், என் தம்பியையும் பாத்துக்கிட்டாங்க.
நான் யாரையாவது லவ் பண்ணிட்டு வந்து நின்னா, எங்க ரிலேட்டிவ்ஸ் எல்லாரும் அப்பா இல்லாத பொண்ணை எங்க அம்மா ஒழுங்கா வளர்க்கலைன்னு பேசிடுவாங்க..
நான் எங்க அம்மாவுக்கு அந்த பேரை வாங்கி குடுக்க விரும்பல.” என்றாள்.
தமிழ்நாட்டில் சில கட்டுக்கோப்பான குடும்பங்களில் தங்கள் வீட்டு பெண்ணை இப்படித்தான் வளர்ப்பார்கள் என்று அறிந்திருந்த அர்ஜுன்,
“ஓகே அத விடு, உனக்கு மேரேஜ் ஆகறதுக்கு முன்னாடி யார் மேலயும் பீலிங்ஸ் வரல..
ஆனா இப்பதான் மேரேஜ் ஆகிடுச்சே..
அதுக்கப்புறமும் அப்படியே இருக்க முடியுமா?
இப்ப கூட உனக்கு என் மேல கொஞ்சம் கூட ஃபீலிங்ஸ் வரல?” என்று கேட்க,
அவனுக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் குழப்பத்துடன் அமர்ந்திருந்தாள் தேன்மொழி.
முதலில் அவனைப் பார்க்கும்போது அவளுக்கு பயமாக இருந்தது.
பின் அவன் கோமாவில் இருந்ததால் அவன் முகத்தை தினமும் பார்த்து பார்த்து தன்னுடன் வாழும் மனிதர்களில் இவனும் ஒருவன் என்று நினைத்து அவள் அர்ஜுனுடன் வாழ பழகி இருந்தாள்.
அவன் கோமாவில் இருந்து எழுந்தவுடன் சியாவை பற்றி பேசியதால், உடனே பயந்த தேன்மொழி அவனை விட்டு விலக நினைத்தாள்.
ஆனால் அவனும் விதியும் அவளை விடாமல் அவனுடன் சேர்த்து இறுக்கி பிடித்து வைத்திருக்க,
சில நிமிடங்களுக்கு முன் அவன் கொடுத்த முத்தம் கூட அவள் உடலிலும் மனதிலும் ஏற்படுத்திய ரசாயன மாற்றங்களை அவளால் மறுக்க முடியவில்லை.
ஆனால் எப்படி யோசித்துப் பார்த்தாலும் அவளுக்கு அவனைப் பிடித்து இருக்கிறதா? இல்லையா என்று தெரியவில்லை.
அவள் அந்த இரண்டு கேள்விகளுக்கு நடுவில் நின்று கொண்டு இருந்ததால்,
வெளிப்படையாகவே அவனிடம் “நிஜமாவே எனக்கு தெரியல.
நான் என்ன நினைச்சாலும் என்னால இந்த மேரேஜ் லைஃப்ல இருந்து தப்பிச்சு ஓட முடியாதுன்னு எனக்கு நல்லா தெரிஞ்சிருச்சு.
பட் நான் முழு மனசா இன்னும் உங்களை ஏத்துக்கல.
ஏன்னா என் மனசுக்குள்ள ஆயிரம் கேள்வி இருக்கு.
அதுக்கு எல்லாம் ஆன்சர் தெரியாம, உங்கள பத்தி தெரிஞ்சுக்கிட்டு முழுசா உங்கள புரிஞ்சுக்காம,
என்னால உங்க மேல ஃபீலிங்ஸ் வளத்துகிறத பத்தி எல்லாம் யோசிக்க முடியாது.
எனக்கு இப்பயும் கூட சம்டைம்ஸ் உங்கள பார்த்தா பயமா இருக்கு.”
என்று வெளிப்படையாக அப்படியே தன் மனதில் இருப்பதை அவனிடம் சொல்லிவிட்டாள் தேன்மொழி.
அவள் சொல்வதில் இருக்கும் நியாயம் அவனுக்கும் புரிந்தது.
அவள் தன்னுடன் சேர்ந்து வாழ வேண்டும் என்று அவன் ஆசைப்படுகிறான்.
அதற்கு முதலில் அவள் மனதிற்குள் இருக்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லி தெளிவுபடுத்த வேண்டியது தன் கடமை என்று நினைத்த அர்ஜுன் பெருமூச்சுவிட்டு,
“நானும் இப்போதைக்கு உன் கிட்ட இத பத்தி எல்லாம் பேச வேண்டாம்னு தான் நினைச்சேன்.
பட் நமக்குள்ள இருக்கிற இந்த ரிலேஷன்ஷிப்பை டெவலப் பண்றதுக்கு முதல்ல உனக்கும் எனக்கும் நடுவுல transparency இருக்கணும்னு எனக்கு புரியுது.
சோ இப்ப நான் எல்லாத்தையும் உன்கிட்ட சொல்லிடலாம்ன்னு முடிவு பண்ணிட்டேன்.
அது எல்லாத்தையும் தெரிஞ்சுக்கிட்டதுக்கு அப்புறம், என் கூட சேர்ந்து வாழனுமா வேண்டாமான்னு நீயே முடிவு பண்ணு.
நீ என்ன டிஸிசன் எடுத்தாலும் நான் அதை ரெஸ்பெக்ட் பண்ணுவேன்.
எனக்கு எதுவா இருந்தாலும் ஓகே தான், பட் நீ என்ன விட்டு போகணும்னு மட்டும் சொல்லிடாத...
என்னால எங்கயும் உன்னை அனுப்ப முடியாது.” என்றவன் தனது கடந்த கால வாழ்க்கையைப் பற்றி அவளிடம் சொல்ல தொடங்கினான்.
இதற்காகத்தானே இத்தனை நாட்கள் காத்திருந்தேன்.. என்பதைப் போல தேன்மொழி ஆர்வமான முகத்துடன் அவனைப் பார்க்கத் தொடங்கினாள்.
“ஆக்சுவலி சியாவும் உன்ன மாதிரி இந்தியாவுல இருந்து இங்க வந்தவ தான்.
நான் அவளை ஃபர்ஸ்ட் டைம் என் ஆபீஸ்ல நடந்த ஒரு மீட்டிங்ல தான் பார்த்தேன்.
அப்ப தான் அவ எங்க ஆபீஸ்ல ஜாயின் பண்ணி இருந்தா.
ஃபர்ஸ்ட் டைம் ப்ராஜெக்ட் பிரசன்டேஷன் பண்றதுனால பயத்துல தப்பு தப்பா உளறி என்னை ரொம்ப கோபப்படுத்திட்டா.
உடனே நான் கோபப்பட்டு அவளை வேலையை விட்டு துரத்திட்டேன்.
அவளும் என்கிட்ட எவ்ளவோ கெஞ்சி பார்த்தா..
ரொம்ப கஷ்டப்பட்டு நிறைய செலவு பண்ணி இந்தியாவுல இருந்து இங்க வந்து வேலை பார்க்கிறதாகவும், இந்த வேலை அவளுக்கு முக்கியம்னு சொன்னா..
ஆனா எனக்கு அவளை மாதிரி அரைகுறையா எதையும் ஒழுங்கா செய்ய தெரியாம வேலை செய்றவங்களை எல்லாம் சுத்தமா பிடிக்காது.
சோ அவ எவ்ளோ கெஞ்சியும் கேட்காம அவள வேலையில இருந்து துரத்தி விட்டுட்டேன்.
இதுக்கப்புறம் எப்பயும் அவ என் முகத்திலேயே முழிக்க கூடாதுன்னு எல்லாம் அவளை மிரட்டி அனுப்பி வச்சிட்டேன்.” என்று அர்ஜுன் பல வருடங்களுக்கு முன்பு நடந்த அனைத்தையும் ஞாபகப்படுத்தி அவளிடம் கதை சொல்வதைப் போல சொல்ல,
ஆர்வமாக கேட்டுக் கொண்டிருந்த தேன்மொழி,
“நீங்கதான் அவங்கள உங்க கண்ணு முன்னாடியே வரக் கூடாதுன்னு சொல்லி துரத்தி விட்டுட்டீங்களே..
அப்புறம் எப்படி நீங்களே அவங்கள லவ் பண்ணி கல்யாணம் பண்ணிருக்க முடியும்?” என்று கேட்டாள்.
“நம்ம எப்படி இருந்தாலும், என்ன பண்ணாலும் நமக்கானவங்கள விதி நம்மகிட்ட கொண்டு வந்து சேர்க்கும் ஹனி.
அப்படித் தான் அவ மூணு வருஷத்துக்கு அப்புறம் மறுபடியும் என் லைஃப்ல வந்தா.
என் ஃப்ரெண்ட் ஒருத்தன் அவன் சிஸ்டரோட ஃப்ரெண்ட் ஒரு ஸ்டார்ட் அப் கம்பெனி ஸ்டார்ட் பண்ணி இருக்கிறதாகவும், அவளுக்கு பினான்சியல் ஹெல்ப் பண்றதுக்கு
ஒரு இன்வெஸ்ட்டர் தேடிட்டு இருக்கிறதாகவும் என் கிட்ட சொன்னான்.
அப்பயும் எனக்கு ஐடியா புடிச்சிருந்தா மட்டும் தான், அவ கம்பெனில இன்வெஸ்ட் பண்ணுவேன்.
உனக்காக எல்லாம் என்னால காசு வேஸ்ட் பண்ண முடியாதுன்னு ஸ்ட்ரிக்ட்டா சொல்லிட்டேன்.” என்றான் அர்ஜுன்.
- மீண்டும் வருவாள் 💕

Author: thenaruvitamilnovels
Article Title: Chapter-41
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.