Chapter-40

Oviya Blessy

Member
Jan 4, 2025
45
0
6
அனைத்தும் ஒரே நேர‌த்தில் ஞாப‌க‌ம் வ‌ந்த‌தால், அர்ஜுன் ம‌ய‌க்க‌ம் போட்டு கீழே விழுந்தான்.



சந்ரா அவன் அருகில் வந்து அமர்ந்து, ப‌ய‌ந்து,

ச‌ந்ரா : அர்ஜுன் !

அர்ஜுன் எழ‌வே இல்லை. ச‌ந்ரா மிக‌வும் ப‌ய‌ந்துவிட்டாள்.



ச‌ந்ரா : அர்ஜுன் ! க‌ண்ண‌ தெற‌ உன‌க்கு என்ன‌ ஆச்சு? மீரா அக்கா! மீரா அக்கா கொஞ்சோ சீக்கிர‌மா வாங்க‌ Please.

மீரா வேக‌மாக‌ ஓடிவ‌ந்தாள். அர்ஜுனை பார்த்து அதிர்ச்சியாக‌,



மீரா : அர்ஜுனுக்கு என்ன‌ ஆச்சு ச‌ந்ரா?

ச‌ந்ரா : (ப‌த‌ட்ட‌துட‌ன்) தெரிய‌ல‌ மீரா அக்கா. திடீர்னு ம‌ய‌ங்கி விழுந்துட்டா. என‌க்கு ரொம்ப‌ ப‌ய‌மா இருக்கு.

மீரா : க‌வ‌ல‌ப்ப‌டாத‌ இரு நா த‌ண்ணீ கொண்டுவ‌ர்றே.

மீரா த‌ண்ணீரை அர்ஜுன் முக‌த்தில் தெளித்தாள். ஆனால் அர்ஜுனுக்கு ம‌ய‌க்க‌ம் தெளிய‌வில்லை. அதை பார்த்து ச‌ந்ரா,

ச‌ந்ரா : (ப‌ய‌த்துட‌ன்) மீரா அக்கா, அர்ஜுனுக்கு ம‌ய‌க்கோ தெளிய‌வே மாட்டிங்குது. என‌க்கு ரொம்ப‌ ப‌ய‌மா இருக்கு மீரா அக்கா.

மீரா : மொத‌ல்ல‌ அர்ஜுன‌ தூக்கு. இவ‌ன‌ ரூமுக்கு கூட்டிட்டு போலா.

மீராவும் ச‌ந்ராவும் அர்ஜுனை ரூமுக்கு தூக்கி சென்ற‌ன‌ர். அவ‌னை bedல் ப‌டுக்க‌ வைத்தன‌ர்.



மீரா : நா டாக்ட‌ர்க்கு Call ப‌ன்றே.

ச‌ந்ரா : செரி மீரா அக்கா.

மீரா டாக்ட‌ருக்கு Call ப‌ண்ணிவிட்டு,

மீரா : ச‌ந்ரா, டாக்ட‌ருக்கு Call ப‌ண்ணீட்டே. இன்னு கொஞ்ச‌ நேரத்துல‌ டாக்ட‌ர் வ‌ந்திருவாரு. அர்ஜுனுக்கு ஒன்னு ஆகாது. நீ ப‌த‌ட்ட‌ப்ப‌டாம‌ இரு.

ச‌ந்ரா : அர்ஜுன் ந‌ல்லாதா இருந்தா. திடீர்னு எப்பிடி ம‌ய‌க்கோ போட்டான்னு தெரிய‌ல‌. அர்ஜுன் ரூமுல‌தான‌ இருந்தா,
எப்பிடி வெளிய‌ வ‌ந்தான்னே தெரிய‌ல‌யே.

மீரா : அர்ஜுன் ம‌ழ‌ வ‌ர‌ப்போகுதின்னு தெரிஞ்ச‌தும், நீ ம‌ழையில‌ ந‌னைய‌க்கூடாதின்னு உன்ன‌ தேடிதா வெளிய‌ வ‌ந்தா. ம‌ழையில‌ ந‌ன‌ஞ்சா உன‌க்கு ஒட‌ம்பு செரியில்லாம‌ போயிருன்னு அவ அப்பிடி பதறுறா.

ச‌ந்ரா : என்ன‌ தேடியா? என்ன‌ மீராக்கா இது? அவ‌னுக்குதா ஒட‌ம்பு செரியில்ல இல்ல‌? அப்றோ எதுக்கு இப்பிடியெல்லா ப‌ண்றா?

மீரா : என்ன‌ ப‌ண்ற‌து ச‌ந்ரா? அவ‌ உன்ன‌ அவ‌ளோ காத‌லிக்கிறா. உன‌க்கு ஒன்னுன்னா அவ‌னோட‌ நெல‌ம‌யெல்லா அவ‌னுக்கு ஞாப‌க‌மே இருக்கிற‌தில்ல‌.

ச‌ந்ரா : ஆமா மீராக்கா. நீங்க‌ சொல்ற‌து செரிதா.

மீரா : ச‌ந்ரா நா சொன்ன‌த‌ யோசிச்சு பாத்தியா?

ச‌ந்ரா : என்ன‌ மீரா அக்கா?

மீரா : வெறுப்ப‌விட‌ காத‌ல்தா பெருசின்னு சொன்னல்ல? . நீ ஒரே ஒரு தெட‌வ‌ அர்ஜுன‌ காத‌லிக்கிற‌ன்னு சொல்லு. ம‌த்த‌தெல்லா ம‌ற‌ஞ்சு போயுரும்.

ச‌ந்ரா : என்ன‌ மீரா அக்கா இந்த‌மாதிரி சூழ்நிலையில‌ இப்பிடி பேசுறீங்க‌.

மீரா : நீ ஒவ்வொரு தெட‌வையும் சூழ்நிலைய‌ கார‌ணோ காட்டி த‌ப்பிக்காத‌ ச‌ந்ரா. இந்த‌ தெட‌வ‌ நா விட‌மாட்டே. நீ அர்ஜுன‌ காத‌லிக்கிற‌ன்னு என‌க்கும் தெரியும், உன்னோட‌ ம‌ன‌சுக்கும் தெரியும். ஆனா உன‌க்குதா தெரிய‌ல‌?

ச‌ந்ரா : என‌க்கும் தெரியும்.

மீரா அதிர்ச்சியாக‌ ச‌ந்ராவை பார்த்து,

மீரா : என்ன‌ சொன்ன‌ ச‌ந்ரா? ம‌றுப‌டியு சொல்லு,

ச‌ந்ரா : நா அர்ஜுன‌ காத‌லிக்கிற‌ன்னு என‌க்கும் தெரியும்.

மீரா : என்ன‌? அப்றோ ஏ இவ்ளோ நாள் எங்கிட்ட‌ அப்பிடியெல்லா இல்ல‌ இல்ல‌ன்னு சொன்ன‌?

ச‌ந்ரா : என‌க்கு ப‌ய‌மா இருக்கு மீரா அக்கா.



மீரா : ப‌ய‌மா? எதுக்கு?

ச‌ந்ரா : என்னோட‌ காத‌ல் பொய் ஆயிருமோன்னு ப‌ய‌மா இருக்கு.

மீரா : என்ன‌ சொல்ற‌ ச‌ந்ரா? என‌க்கு புரிய‌ல‌.

ச‌ந்ரா : நா அர்ஜுன‌ காத‌லிக்கிற‌ன்னு சொன்ன‌துக்கு அப்றோ, அர்ஜுன் உதையாவா மாறுனா, நா அவ‌ன‌ வெறுத்திட்ட‌ன்னா அப்றோ என்னோட‌ காத‌ல் பொய் ஆயிரும் மீராக்கா.

மீரா : இதுக்காக‌ நீ உன்னோட‌ காத‌ல‌ க‌ட‌சிவ‌ரிக்கும் ம‌ற‌ச்சு வெப்பியா?

ச‌ந்ரா : வேற‌ வ‌ழியில்ல‌ மீரா அக்கா. நா காத‌லிக்கிற‌து அர்ஜுன‌தா. அவ‌னுக்குள்ள‌ இருக்கிற‌ உதையாவ‌ இல்ல‌.



மீரா : இது உன்னோட‌ பைத்திய‌க்கார‌த்த‌னோ ச‌ந்ரா. நீ வெறுக்கிற‌ உதையாவ‌ கார‌ணோ காட்டி, நீ காத‌லிக்கிற‌ அர்ஜுனோட மனச காய‌ப்ப‌டுத்துற‌. இது உன்னோட‌ காத‌லுக்கு நீ செய்யிற‌ துரோகோ.

ச‌ந்ரா : இது எப்பிடி துரோக‌மாகு மீரா அக்கா?

மீரா : முடிஞ்சு போன‌ ஒருத்த‌னுக்காக‌, அர்ஜுன் மேல இருக்குற காத‌ல நீ ம‌றைக்கிற‌யே, இது துரோகோ இல்லையா?

ச‌ந்ரா யோசித்தாள்.

மீரா : த‌ய‌வு செஞ்சு, அர்ஜுன‌ ஏமாத்தாத‌ ச‌ந்ரா. நா ஒவ்வொரு தெட‌வையும் அர்ஜுன‌ பாத்துக்கிட்டேதா இருக்கே. அர்ஜுன் உன்ன‌ அஞ்ஞாய‌த்துக்கு காத‌லிக்கிறா. அவ‌ன‌ க‌ஷ்ட்ட‌ப்ப‌டுத்தாத‌. அவ‌ங்கிட்ட‌ உன்னோட‌ காத‌ல‌ சொல்லீறு. அது ஒன்னு ம‌ட்டு போதும், அவ‌ ரொம்ப‌ ச‌ந்தோஷ‌ப்ப‌டுவா.



ச‌ந்ரா : இல்ல‌ மீரா அக்கா.....

மீரா : நா இவ்ளோ சொல்ற‌ல்ல‌ ச‌ந்ரா? உன‌க்கு ஒன்னு தெரியாது. அர்ஜுன் உங்கிட்ட‌ எதிர்ப்பாகுற‌தே, நீ அவ‌ங்கிட்ட‌ காத‌ல‌ சொல்ல‌னுன்னுதா. அதுக்காக‌தா அவ‌ உயிர் வாழ்றா.

ச‌ந்ரா : (அதிர்ச்சியுட‌ன்) என்ன‌ சொல்றீங்க‌ மீரா அக்கா?

மீரா: ஒவ்வொரு தெட‌வையும் நீ காத‌ல‌ சொல்ல‌வ‌ன்னு அர்ஜுன் எதிர்ப்பாக்கும்போதெல்லா, நீ தேங்க் யூன்னு சொல்லீட்டு போயிருவ‌. அப்ப‌ அவ எவ்ளோ ஒட‌ஞ்சு போனான்னு என‌க்குதா தெரியும். ஆனா உங்கிட்ட‌ அவ‌ காட்டிருக்க‌ மாட்டா.

ச‌ந்ரா : (அதிர்ச்சியுட‌ன்) அப்பிடியா? என‌க்கு ச‌த்திய‌மா தெரியாது மீரா அக்கா.

மீரா : நீ கொஞ்ச‌ங்கூட‌ காய‌ப்ப‌ட‌க் கூடாதின்னு அர்ஜுன் அவ‌னோட‌ வ‌லியெல்லா ம‌ற‌ச்சு, உன‌க்காக‌ என்ன‌ல்லா ப‌ண்றா, ஆனா நீ ஒரு சின்ன‌ கார‌ண‌த்துக்காக‌ அவ‌ன‌ ஒவ்வொரு நிமிஷ‌மு காய‌ப்ப‌டுத்துற‌. அவ‌ன‌ நீ உண்மையில‌யே காத‌லிச்சா, இனிமே அவ‌ன‌ காய‌ப்ப‌டுத்தாத‌.

அதை கேட்ட சந்ரா மிகவும் வருத்தப்பட்டாள்.

ச‌ந்ரா : அர்ஜுனுக்குள்ள இவ்ளோ வலி இருக்கின்னு எனக்கு இத்தன நாள் தெரியல. என்னால‌தா அர்ஜுன் ஒட‌ம்ப‌ள‌வுலையும் காய‌ப்ப‌ட்டிருக்கா, ம‌ன‌ச‌ள‌வுலையும் காய‌ப்ப‌ட்டிருக்கா. இதுக்குமேலையும் நா க‌ல் நெஞ்சுகாரியா இருக்க‌ மாட்டே. என்ன‌ ஆனாலு செரி மீரா அக்கா. அர்ஜுன் எந்திரிச்ச‌தும் நா என்னோட‌ காத‌ல‌ சொல்ல போறே.

மீரா, ச‌ந்தோஷ‌த்தில் ச‌ந்ராவை க‌ட்டிப்பிடித்துக்கொண்டாள்.



மீரா : அப்பாடா. இத‌ உன்னோட‌ வாயில‌ இருந்து வ‌ர‌ வெக்க‌ எவ்ளோ க‌ஷ்ட்ட‌ப்ப‌ட‌வேண்டிய‌தா இருக்கு. இப்ப‌வாவ‌து உனக்கு புத்தி வ‌ந்த‌தே. ச‌ந்தோஷோ.

டாக்ட‌ர் வ‌ந்துவிட்டார். அர்ஜுனை பரிசோதித்து பார்த்தார்.

ச‌ந்ரா : அர்ஜுனுக்கு என்ன‌ ஆச்சு டாக்ட‌ர்?

டாக்ட‌ர் : இவ‌ருக்கு திடீர்னு மூளையில‌ ஒரு பெரிய‌ அதிர்ச்சி ஏற்ப்ப‌ட்டிருக்கு. இவ‌ரு எதையோ பாத்து ரொம்ப‌ ரியேக்ட் ஆயிருக்காரு. அது என்ன‌ன்னு புரியாம‌தா இவ‌ருக்கு ம‌ய‌க்க‌ம் வ‌ந்திருக்கு. ஆனா ஒன்னும் பிர‌ச்ச‌ன‌ இல்ல‌. ஊசி போட்டிருக்கே, இன்னும் கொஞ்ச‌ நேர‌த்துல‌ க‌ண் முழிச்சிருவாரு.

ச‌ந்ரா : தேங்க்ஸ் டாக்ட‌ர்.

டாக்ட‌ர் : செரி நா கெள‌ம்புறே.

மீரா : ச‌ந்ரா நீ அர்ஜுன‌ பாத்துக்கோ. நா டாக்ட‌ர‌ வ‌ழிய‌னுப்பீட்டு வ‌ர்றே.

ச‌ந்ரா : செரிங்க‌ மீராக்கா.

மீராவும் டாக்ட‌ரும் சென்றுவிட்ட‌ன‌ர். ச‌ந்ரா, அர்ஜுன் அருகில் அம‌ர்ந்து, அர்ஜுனைப் பார்த்துக்கொண்டே இருந்தாள்.



ச‌ந்ரா : அர்ஜுன், சீகிர‌மா க‌ண்ண‌ தெற‌ந்து பாரு. நீ எதிர்ப்பாக்குற‌த‌ நா சொல்ல‌னும். சீக்கிற‌மா க‌ண்ண‌ தெற‌ அர்ஜுன். வ‌ழ‌க்க‌ம்போல‌ க‌ண்ண‌ தெற‌ந்தவொட‌னே, ச‌ந்ரான்னு சொல்லு. அத‌ நா கேக்க‌னும்.

ச‌ந்ரா, அர்ஜுனின் கையை பிடித்து,

ச‌ந்ரா : அர்ஜுன் ! க‌ண்ண‌ தெற‌.



அர்ஜுனுடைய‌ கை அசைந்த‌து. அதை பார்த்த‌ ச‌ந்ரா,

ச‌ந்ரா : அர்ஜுன் !

அர்ஜுனுக்கு சுய‌ நினைவு வ‌ந்து, அவ‌ன் மெதுவாக‌ க‌ண்க‌ளை திற‌ந்தான். ச‌ந்ரா மிக‌வும் ச‌ந்தோஷ‌ப்ப‌ட்டாள். க‌ண்விழித்த அர்ஜுன், ச‌ந்ராவை பார்த்த‌தும்,

அர்ஜுன் : அமிர்த்தா !

ச‌ந்ரா அதிர்ச்சி ஆனாள்.

தொட‌ரும்...
 

Author: Oviya Blessy
Article Title: Chapter-40
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.