போல்சாய் தியேட்டரில் டான்ஸ் பெர்பாஃர்மன்ஸ் முடிந்தவுடன் தேன்மொழியை அருகிலுள்ள ஒரு sea facing restaurant-ற்க்கு அழைத்துச் சென்றான் அர்ஜுன்.
அங்கே இருந்த தனித்துவமான வண்ண விளக்குகளின் வேலைப்பாடுகளால் அவர்களின் முன்னே இருந்த சிறிய கடல் அந்த இரவு நேரத்திலும் அழகிய ப்ளூ நிறத்தில் ஜொலித்தது.
அதன் அருகில் இருந்த அக்வாரியமில் உள்ள பெரிய மீன் தொட்டியில் திமிங்கலங்கள் அங்கும் இங்கும் நீந்தி சென்று கொண்டே இருக்க,
உண்மையான கடல் கன்னியை போலவே தன்னை அலங்கரித்துக் கொண்டு இருந்த பெண் ஒருத்தி அதற்குள் நீச்சல் அடித்து காண்போரை மகிழ்வித்து கொண்டு இருந்தாள்.
அந்த காட்சியை தங்கள் முன்னே இருந்த பெரிய எல்.இ.டி ஸ்க்ரீன் மூலமாக அர்ஜுனும் தேன்மொழியும் கண்டு கழித்தார்கள்.
அர்ஜுன் தேன்மொழிக்காக அவளுக்கு பிடித்த இந்திய உணவுகளை ஆர்டர் செய்து வரவழைத்தான்.
இருப்பினும் அவள் பாரம்பரிய ரஷ்ய உணவுகளை ருசித்து பார்க்க விரும்பினால் வசதியாக இருக்கட்டும் என்று நினைத்து,
அவனுக்கு மிகவும் பிடித்த ஸ்டார்ட்டர் முதல் beverages வரை கொண்டு வந்து அடுக்கச் சொன்னான்.
இதற்கு முன்னே அங்கே இருந்த இந்தியா உணவுகளில் பாதியை கூட தேன்மொழி தன் கண்களில் கண்டதில்லை.
அவர்களின் முன்னே இருந்த 10 பேர் உக்காந்து சாப்பிடும் டேபிள் முழுவதும் அவர்கள் இருவரும் சாப்பிட விதவிதமான உணவுகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது.
அதைப் பார்த்தாலே ஒரு பக்கம் இப்போது அனைத்தையும் சாப்பிட்டு முடிக்க வேண்டும் என்று அவளுக்குள் ஆர்வம் ஏற்பட்டாலும்,
ஓரிரு உணவுகளை டேஸ்ட் செய்த பிறகு அனைத்தையும் பார்க்க அவளுக்கு மிரட்சியாகவே இருந்தது.
அதனால் லைட்டாக அங்கே இருந்த பிரியாணியை சுவைத்து பார்த்த தேன்மொழி,
அவளுக்கு முன்னே இருந்த ஐஸ்கிரீமை ஆசையுடன் பார்த்தாள்.
அவள் அதை உடனே சாப்பிடாவிட்டால் உருகிப் போய்விடும் அல்லவா?
அதனால் முதலில் அதை தன் வாய் வழியாக வயிற்றுக்குள் கொட்டி வயிற்றை சமாதானப்படுத்தியவள்,
“பணக்காரங்களுக்கு காசு நிறைய இருந்தா அதை எப்படி செலவு பண்றதுன்னு தெரியாது போல..
அதான் இப்படி என்னென்னமோ பண்ணிட்டு இருக்கான் இவன்..
ரெண்டு பேர் சாப்பிடுறதுக்கு எதுக்கு இவ்ளோ வாங்கணும்?
என் கிட்ட இவ்வளவு காசு இருந்தா, இந்நேரம் அத வச்சு சாப்பிட முடியாம கஷ்டப்படுற எத்தனையோ பேருக்கு சாப்பாடு வாங்கி குடுத்திருப்பேன்.
இதே ஊர்ல எத்தனையோ பேர் இப்போ சாப்பிட காசு இல்லாம பசியோட தூங்கிட்டு இருப்பாங்க.
அவங்களுக்கு இதுல கொஞ்சம் கிடைச்சாலும் எப்படி இருக்கும்?
ஆனா இவனுக்கு எங்க அந்த மாதிரி எல்லாம் தோனப் போகுது!
இவன்தான் சரியான செல்பிஷ் ஆச்சே!”
என்று மனதார உள்ளுக்குள் அவனைத் திட்டி மனதையும் திருப்தி படுத்திவிட்டு ஒரு வழியாக சாப்பிட்டு முடித்தாள்.
அவளது திருப்தியான முகத்தை பார்த்தவுடன்,
“இங்க ஒரு ஸ்பெஷல் சிக்கன் சூப் இருக்கு.
சாப்ட்டு முடிச்ச உடனே அதை குடிச்சா நல்ல டைஜஸ்ட் ஆகும்.
கொண்டு வர சொல்லவா?” என்று அவளிடம் கேட்டான் அர்ஜுன்.
“அச்சச்சோ அதெல்லாம் வேண்டாம்.
இதுக்கு மேல தண்ணி குடிக்க கூட என் stomachல இடம் இல்லை...
இந்த குட்டியூண்டு வைத்துக்குள்ள எவ்வளவு சாப்பாட கொட்டுறது?
இதுக்கு மேல என்னால முடியாது.
உங்களுக்கு வேணும்னா நீங்க வாங்கி சாப்பிடுங்க.” என்ற தேன்மொழி தனக்கு இனி எதுவும் வேண்டாம் என்று தலையை இடவலமாக ஆட்டினாள்.
அவள் குழந்தை போல அப்படி செய்வதை ரசித்த அர்ஜுன்,
வெயிட்டரை அழைத்து அவன் கொண்டு வந்த மிஷினில் தன் கார்டை ஸ்வைப் செய்து அவன் வாங்கிய அனைத்து உணவுகளுக்கும் பே செய்தான்.
உடனே குனிந்து அவனுக்கு நன்றி சொல்லி மரியாதை செலுத்திய அந்த வெயிட்டர் ஆங்கிலத்தில்,
“சார் பேலன்ஸ் இருக்கிற ஃபுட் ஐட்டம்ஸ் எல்லாத்தையும் வழக்கம் போல பக்கத்துல இருக்கிற ஃபுட் கோர்ட்ல மத்தவங்க freeஆ சாப்பிடறதுக்கு வெச்சிடலாமா?
இல்ல நீங்க இதையெல்லாம் பேக் பண்ணி எடுத்துட்டு போறீங்களா?
உங்க கூட வந்தவங்க எல்லாரும் சாப்பிட்டாங்க.
As usual, உங்க அசிஸ்டன்ட் அதுக்கு தனியா பே பண்ணிட்டாரு.” என்று சொல்ல,
“இல்ல.. இத வாங்கிட்டு போய் நாங்க என்ன பண்ண போறோம்?
நீங்க எப்பயும் போல இதை டொனேட் பண்ணிருங்க.” என்று ஆங்கிலத்தில் சொன்ன அர்ஜுன் கிளம்புவதற்காக எழுந்து நின்றான்.
அதனால் தேன்மொழியும் எழுந்து நிற்க, அவர்கள் கிளம்ப போவதை உறுதி செய்து கொண்ட அந்த ரெஸ்டாரண்டின் மேனேஜர்,
அர்ஜுன் அவர்களது ரெஸ்டாரன்ட்டின் ரெகுலர் எலைட் கஸ்டமர் என்பதால்,
வழக்கம்போல அவர்களுக்கு தங்கள் அன்பையும் மரியாதையையும் தெரிவிக்கும்படி ஒரு கிஃப்ட் போக்கை கொண்டு வந்து மரியாதையுடன் அவனிடம் கொடுத்து “thanks for coming.” என்றார்.
அதை ஒரு தலை அசைவுடன் பெற்றுக் கொண்ட அர்ஜுன் அவன் கொடுத்த காம்ப்ளிமெண்டரி கிஃப்டை தேன்மொழியிடம் கொடுத்து,
“இத புடி.. இங்க காசு குடுத்து வாங்குற டிஷ்ஷை விட இவனுங்க காம்ப்ளிமென்ட்ரியா குடுக்குற இந்த சாக்லேட் பாஸ்ட்ரி செம டேஸ்டா இருக்கும்.
நம்ம வீட்ல போய் சாப்பிடலாம். ஆருத்ராவுக்கு இது ரொம்ப பிடிக்கும்.” என்றான்.
அதை வாங்கி பத்திரமாக வைத்துக் கொண்ட தேன்மொழி அவனுடன் நடந்து வெளியில் சென்றவாறு,
“என்னால இவன புரிஞ்சிக்கவே முடியலையே..
இன்னும் பத்து பேர் சாப்பிட்டா கூட தீராத அளவுக்கு காசு போட்டு வாங்கின அவ்வளவு சாப்பாட்டை யாருக்கோ ப்ரீயா குடுக்க சொல்லிட்டான்.
அவனுங்க காம்ப்ளிமென்ட்ரியா குடுத்த இந்த கேக்கை போய் நல்லா இருக்கும்னு ஆருத்ராவுக்கு வாங்கிட்டு போறான்..!!
இது அவ்ளோ நல்லா இருக்கும்னா தேவையானதை மட்டும் காசு கொடுத்து வாங்கிட்டு வீட்டிற்கு போய் இருக்கலாம் இல்ல!
ஏன் சும்மா குடுக்குறத காசு கொடுத்து வேணும்னு கேட்டா குடுக்க மாட்டாங்களா?
சரியான மண்ட கோளாறு புடிச்சவன்!” என்று வழக்கம்போல அவனை திட்டி தீர்த்தாள்.
வர வர அவனை தன் மனதிற்குள் வசைப்பாடுவது அவளுடைய hobbyஆகி விட்டது.
ஆனால் பாவம் அதைக்கூட உணராத அளவிற்கு அவள் அவனை திட்டுவதில் பிஸியாக இருந்தாள்.
சில நிமிட பயணத்திற்கு பிறகு அவர்கள் அனைவரும் ஏ.கே பேலஸுற்க்கு வந்து சேர்ந்தார்கள்.
அவர்கள் உள்ளே நுழையும்போதே கார்டன் ஏரியாவில் விசித்திரமாக ஏராளமான லைட்டுகள் புதிதாக எரிவதை கண்ட தேன்மொழி,
“என்ன நடக்குது இங்க?
ஏதோ பங்க்ஷனுக்கு அரேஞ்ச் பண்ற மாதிரி நிறைய லைட் டெக்கரேஷன் பண்ணி வச்சிருக்காங்க!” என்று குழப்பமாக சுற்றி முற்றி பார்க்க,
அவள் கையைப் பிடித்து சந்தோஷ் ஜனனியை அழைத்து சென்றதைப் போல,
அந்த வட்ட வடிவிலான ஸீபிரிங் லைட்களுக்குள் அவளை அழைத்து சென்ற அர்ஜுன் அங்கே அவளுக்காக அவன் உருவாக்கிய டிஜிட்டல் பிரபஞ்சத்தை அவளிடம் காட்டினான்.
இது மாதிரி எல்லாம் தேன்மொழி படத்தில் கூட பார்த்ததில்லை என்பதால் இப்போது,
“இது அந்த படத்துல வந்த மாதிரியே இருக்குல்ல!” என்று யோசித்துக் கூட அவளால் ஆச்சரியப்பட முடியவில்லை.
அவள் கண்களுக்கு முன்னே தெரிந்த காட்சி அவளது கற்பனைக்கும் அப்பாற்பட்டதாக இருந்தது.
அதனால் தன்னை மீறி நடந்து சென்று முன்னே இருந்த எல்.இ.டி ஸ்கிரீனில் இருந்த வெண்ணிற டிஜிட்டல் நிலவை அவள் தொட்டுப் பார்க்க,
உடனே அந்த நிலா சுர்ரென்ற சத்தத்துடன் சுற்றத் தொடங்கியது.
அதுவரை சாதாரணமாக இருந்த அனைத்தும் இப்போது தனது பாணியில் இயங்க தொடங்கி விட,
ஒரு நொடி எங்கேயோ இந்த பிரம்மாண்ட பிரபஞ்சத்தின் ஒரு பகுதியில் தொலைந்துவிட்டதை போல உணர்ந்து இரண்டடி பின்னே வந்தாள்.
அவள் முகத்தில் அப்பட்டமாக பயம் தெரிய, அந்த இடம் முழுவதும் ஒரு விசித்திரமான மெல்லிய ஒலி பரவ தொடங்கியது.
அவள் அருகில் சென்று அவளது தோள்களில் கை போட்டு தன்னுடன் சேர்த்து அணைத்துக் கொண்ட அர்ஜுன்,
“இப்படி கேட்கிறது நிஜமாவே யுனிவர்ஸ்ல கேட்கிற ஸ்பேஸ் சவுண்ட்.
என் ஃப்ரெண்ட் அங்க இருந்து ரெகார்ட் பண்ணி எனக்கு அனுப்பி வச்சான்.
இந்த மாதிரியான ஒரிஜினல் ரெக்கார்டிங்கை அங்க ஒர்க் பண்றவங்களுக்கு அப்புறம் இப்போ நீயும், நானும் தான் ஃபர்ஸ்ட் டைம் கேட்கிறோம்.
உனக்கு இந்த வேலண்டைன்ஸ் டே அதுவுமா ஸ்பெஷலா ஏதாவது பண்ணனும்னு நெனச்சேன்.
ஆனா நான் பார்த்த வரைக்கும் நீ ரொம்ப சிம்பிளா இருக்க.
உனக்கு நான் எவ்ளோ ஜுவல்லரி வாங்கி கொடுத்தாலும்,
இல்ல ப்ரோபெர்ட்டீஸ் வாங்கி குடுத்தாலும் நீ சந்தோஷப்படுவியான்னு எனக்கு தெரியல.
சோ உன் கூட டைம் ஸ்பென்ட் பண்ணி என்னால முடிஞ்ச வரைக்கும் உன்ன சந்தோஷமா வச்சுக்கணும்னு நினைச்சேன்.
And finally this is my last surprise..
உன் பேர்ல நிலால இருக்கிற பாதி இடத்த வாங்கிட்டேன்.
ஃபுல்லாவே வாங்கிடலாம்னு தான் பார்த்தேன்.
ஆனா அதுல கொஞ்சம் லீகல் இஷ்யூஸ் இருக்கு.
சோ வேற ஏதாவது பெட்டரா யோசிக்கலாம்னு விட்டுட்டேன்.
இனிமே உனக்கு அந்த நிலாவ பார்க்கும்போதெல்லாம்,
அது உனக்கு சொந்தம்னு ஞாபகம் வரணும்.
கூடவே நீ எனக்கு சொந்தம்ன்னும் ஞாபகத்துல வச்சுக்கோ.
Happy valentine's day my dear wife!” என்று சொல்லி அவனது கோட் பாக்கெட்டில் இருந்த ரிஜிஸ்ட்ரேஷன் டாக்குமெண்டை எடுத்து அவளிடம் கொடுத்தான்.
அதில் உண்மையாகவே தேன்மொழி அர்ஜுன் பிரசாத் குமார் என்ற பெயரில் நிலவின் பெரும்பான்மையான இடத்தை ரிஜிஸ்டர் செய்யப்பட்டுள்ளதாக போட்டு இருந்தது.
அதை நம்ப முடியாமல் பார்த்த தேன்மொழி தன் முன்னே இருந்த ஏ.ஐ தொழில் நுட்பத்தால் உருவாக்கப்பட்ட டூப்ளிகேட் நிலவை பார்த்தாள்.
அவள் பெயரில் இந்த பூமியில் சொந்தமாக ஒரு வீடு கூட இல்லை..
என்று நினைத்து சாதாரண நடுத்தர குடும்பத்தினை சேர்ந்தவளாக அவள் எத்தனையோ முறை வருத்தப்பட்டு இருக்கிறாள்.
இறப்பதற்கு முன் அவளே சம்பாதித்து சொந்தமாக ஒரு வீட்டையும் வாங்க வேண்டும் என்று குறிக்கோளும் வைத்துக்கொண்டு இருந்தாள்.
ஆனால் இப்போது அவளுக்கு வானில் உள்ள நிலவே சொந்தமாகி இருக்கிறது என்பதை அவளால் நம்பவே முடியவில்லை.
ஆனால் அர்ஜுனின் குடும்பத்தோடு பழகிய இத்தனை நாட்களில் அவர்களால் செய்ய முடியாதது என்று எதுவும் இல்லை என்று அவளுக்கு நன்றாக தெரிந்திருக்க,
“இவர் எனக்காக இதை பண்ணி இருக்காருன்னா..
கண்டிப்பா அவரோட வைஃப் சியாவுக்காக கூட இதுக்கு முன்னாடி அவர் இதை பண்ணலைன்னு அர்த்தம்.
அப்போ அந்த பொண்ண விட இவருக்கு நான் ஸ்பெஷலா?
எனக்காக அப்பப்ப என்ன வேணாலும் செய்வேன் செய்வேன்னு இவர் சொல்லுவாரே...
அது உண்மைதான் போல..
நிஜமா இவருக்கு அந்த ஸ்கை கூட லிமிட்டே இல்ல..!!” என்று நினைத்த தேன்மொழிக்கு இப்போது அவள்தான் இவை அத்தனையையும் செய்யக்கூடியவனின் மனைவி,
அதாவது மிஸஸ் அர்ஜுன் என்று நினைக்கும்போதே உள்ளுக்குள் அவளுக்கு கொஞ்சம் பெருமையாக இருந்தது.
நான்சியை அவள் முதன் முதலில் பார்க்கும்போது “நீங்க மிஸ்ஸஸ் அர்ஜுனா இருக்கிறத நினைச்சு சந்தோஷப்படணும்.
இப்படி ஒரு சான்ஸ் கனவிலயாவது கிடைக்காதான்னு இந்த உலகத்தில இருக்கிற பல பேர் ஏங்கிட்டு இருக்காங்க மேடம்..
உங்களுக்கு அது இன்னும் புரியல.
அது புரியும்போது, நெஜமாவே நீங்க யாரு, அர்ஜுன் சாரால உங்களுக்காக என்னென்னலாம் செய்ய முடியும்னு உங்களுக்கு தெரியும்.” என்று சொன்னது இப்போது அவளுக்கு ஞாபகம் வந்தது.
ஆம், உண்மையாகவே அர்ஜுனனை பற்றி இன்று ஓரளவிற்கு தான் புரிந்து கொண்டதாகவே தேன்மொழி உணர்ந்தாள்.
இவன் மற்றவர்கள் பார்த்து வியக்கத்தக்க மற்றும் மரியாதை செலுத்தக்கூடிய நபராக இருக்கிறான் என்று நினைத்த தேன்மொழி,
“ஜஸ்ட் எனக்கு வேலன்டைன்ஸ் டே விஷ் சொல்றதுக்காக இவ்ளோ பண்ணீங்களா?” என்று ஆச்சரியமாக அவனிடம் கேட்க,
அவளுடன் அப்படியே அந்த இடத்தை விட்டு வெளியே வந்து கீழே கார்டன் ஏரியாவில் உள்ள புல் தறையில் அமர்ந்து,
வானத்தில் தெரிந்த நிலாவை பார்த்த அர்ஜுன் “உனக்காக பண்ணாம வேற யாருக்கு பண்ண போறேன் சொல்லு?” என்று அன்புடன் கேட்டான்.
தன்னை அறியாமல் அவன் தோள்களில் சாய்ந்து கொண்டு வானில் உள்ள நிலவைப் பார்த்த தேன்மொழி,
“ஏன் எனக்காக இவ்ளோ செய்றீங்க?
அப்ப நான் உங்களுக்கு அந்த அளவுக்கு ஸ்பெஷலா?” என்று ஆர்வமாக கேட்க,
“ஆமா, என் பொண்டாட்டி எனக்கு ரொம்ப ஸ்பெஷல் தான்.” என்ற அர்ஜுன் அவள் நெற்றியில் முத்தமிட்டான்.
உடனே அவன் கண்களை நேருக்கு நேராக பார்த்த தேன்மொழி,
“அப்ப மத்த எல்லாரையும் விட உங்களுக்கு நான் தான் ரொம்ப இம்பார்ட்டெண்ட்னு சொல்ல வரீங்களா?
என்ன அந்த அளவுக்கு உங்களுக்கு புடிச்சிருக்கா என்ன?” என்று கேட்க,
“ம்ம்.. இதுவரைக்கும் என் லைஃப்ல எனக்கு யாரையெல்லாம் தெரியுமா,
அவங்க எல்லாரையும் விட அதிகமா எனக்கு உன்ன தான் புடிச்சிருக்கு.”
என்று அவள் கண்களை பார்த்து உணர்ச்சிகள் பொங்க சொன்னான் அர்ஜுன்.
இதே வார்த்தையை அவள் இதற்கு முன் சென்னையில் இருக்கும்போது,
அவள் சாலையில் நடந்து செல்லும் வழியில் எல்லாம் இருக்கும் ரோட் சைட் ரோமியோக்கள் வேறு வேறு மாடுலேஷனில் சொல்லி அவள் பல முறை கேட்டிருக்கிறாள்.
ஆனால் அப்போதெல்லாம் தன்னை கரெக்ட் செய்வதற்காக இவர்கள் எல்லாம் பொய் சொல்கிறார்கள் என்றே அவளுக்கு தோன்றும்.
ஆனால் அர்ஜுனின் கண்களிலும் வார்த்தைகளிலும் கொஞ்சம் கூட அவளால் கலப்படத்தை காண முடியவில்லை.
அவன் ஒரு சுத்தமான மனிதனாக பிரகாசமான கண்களுடன் அவளை அன்புடன் பார்க்க,
அவனிடம் எந்த குறையும் அவளுக்கு தெரியவில்லை.
அதனால் முழு மனதாக அவனையும் அவன் வார்த்தைகளையும் நம்பிய தேன்மொழி,
அப்போதும் தன் வாயை வைத்துக் கொண்டு சும்மா இருக்காமல் ஏதோ ஆர்வக்கோளாறில்
“உங்களுக்கு உங்க ஃபேமிலியை ரொம்ப பிடிக்கும்னு எனக்கு தெரியும்.
அப்புறம் எப்படி இதுவரைக்கும் நீங்க பார்த்து பழகுன எல்லாரையும் விட என்னதான் பிடிக்கும்னு சொல்லுவீங்க?
உங்க குழந்தைங்க ஆருத்ரா சித்தார்த்தை கூட எனக்கு அப்புறம் தான் வைப்பீங்களா நீங்க?
இதெல்லாம் கொஞ்சம் கூட நம்பற மாதிரியே இல்ல மிஸ்டர் அர்ஜுன்.
இன்னைக்கு ஃபுல்லா என்னை இம்ப்ரஸ் பண்றதுக்கு நீங்க நிறைய பண்ணிட்டீங்க.
நான் இம்ப்ரஸ் ஆனேனான்னு தெரியல.
பட் எனக்கு இதெல்லாம் புடிச்சிருந்துச்சு.
இதுவே போதுமே.. தேவை இல்லாம பொய்யான ஆசை வார்த்தை எல்லாம் பேசி என்னை ஏமாத்த ட்ரை பண்ணாதீங்க.” என்றாள்.
உடனே அவள் கன்னங்களை தன் கைகளால் ஏந்தி,
“பொதுவா எல்லாரும் பொய் சத்தியம் பண்ணனும்னா செத்துப்போனவங்க மேல தான் பண்ணுவாங்க.
ஆனா நான் அவங்க எல்லாரையும் கடவுளா பாக்குறேன்.
அதுவும் முக்கியமா என் சியாவ.. அவ எனக்குள்ள தெய்வமா இருந்து என்னை வாழ வச்சுட்டு இருக்கான்னு நான் நம்புறேன்.
அவ மேல ப்ராமிஸ்சா சொல்றேன், எனக்கு என்ன விட, என் ஃபேமிலி, என் பசங்க, எல்லாரையும் விட.. நீ தான் முக்கியம்.
அதுக்காக அவங்க எனக்கு முக்கியமில்லைன்னு நான் சொல்ல வரல.
பட் இந்த செகண்ட் நான் சத்தியமா சொல்றேன் டி, அவங்க எல்லாரையும் தாண்டி என் ஹார்டுக்கு நீதான் க்ளோசா இருக்க.
I really really love you honey!
நீ நம்பவியானு எனக்கு தெரியல.. சியாவ கூட நான் இவ்ளோ சீக்கிரம் லவ் பண்ணல.
உன்ன பார்க்கும்போதெல்லாம், என்னமோ தெரியல நீயும் நானும் ஒன்னுன்னு எனக்கு தோணுது.
உன்ன என்னால என்கிட்ட இருந்து பிரிச்சு பார்த்து யோசிக்க கூட முடியல.” என்றான்.
அவளது கேள்விக்கு அவன் சொன்ன பதில் சத்தியமாக அவனது இதயத்தில் இருந்து நேரடியாக வந்தது என்று அவளே மற்றவர்களிடம் அடித்து சொல்வாள்.
அந்த அளவிற்கு அவனது பார்வை, முக பாவனைகள், உடல் மொழி என அனைத்தும் அத்தனை நேர்மையாக நேரடியாக அவன் மனதில் இருக்கும் அவளுக்கான காதலை அப்பட்டமாக பிரதிபலித்தது.
அவனுடைய அந்த வார்த்தைகள் நேரடியாக அவளது இதயத்தையும் தாக்க,
தன்னை மறந்து அவனையே பார்த்துக் கொண்டு இருந்தாள் தேன்மொழி.
அப்போது நிலவெளியில் அவளது முகம் பிரகாசிக்க, அவளது நீண்ட கூந்தல் காற்றில் நாலா திசைக்கும் பறந்து அவள் முகத்திலும் வந்து விழுந்தது.
அதை மெதுவாக தன் ஒற்றை விரலை பயன்படுத்தி அவள் காதுக்கு பின்னே அவன் நகர்த்த,
அவனது திடீர் தொடுகையால் சிலிர்த்தது அடங்கியது அவள் உடல்.
அவளது இதயம் படபடவென துடிக்க, அதனோடு சேர்ந்து குளிரில் அவளது பின்க் நிற உதடுகளும் துடித்துக் கொண்டிருந்தது.
அதைக் கண்ட ஆண் மகன் அவனின் ஆன்மை தூண்டப்பட்டுவிட,
அவர்கள் இருவரின் துடிப்பையும் அடக்க நினைத்து அவளது இதழ்களை தனது இதழ்களால் சிறை செய்தான் அர்ஜுன்.
-மீண்டும் வருவாள் 💕

Author: thenaruvitamilnovels
Article Title: Chapter-40
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.