CHAPTER-4

Oviya Blessy

Member
Jan 4, 2025
45
0
6
அர்ஜுன் த‌ன் கைக‌ளாளேயே தீயை அணைக்க‌ முய‌ற்சித்தான். ஆனால் தீ அதிக‌மாக‌ இருக்க‌ அவ‌ன் இரு கைக‌ளும் ப‌த்தாம‌ல் போக‌, உட‌னே தீ ப‌ர‌விய‌ அவ‌ளின் சேலையின் அந்த‌ ப‌குதியை ம‌ட்டும் வேக‌மாக‌ கிழித்து எறிந்து அவ‌ளை காப்பாற்றினான். அதில் நிம்ம‌திய‌டைந்த‌வ‌ன் அப்போதுதான் த‌ன் முன் அறைகுறை புட‌வையில் நிற்கும் அவ‌ளை பார்த்து உட‌னே த‌ன் ஓவ‌ர் ஜேக்கெட்டை க‌ழ‌ற்றி அவ‌ளுக்கு போட்டுவிட, அடுத்த‌ நொடி அவ‌னை இறுக‌ அணைத்துக்கொண்டாள் ச‌ந்ரா.

அதில் ஒரு நிமிட‌ம் அவ‌ன் திடுகிட்டாலும், த‌ன்னை அணைத்திருக்கும் அவ‌ளின் உட‌லின் ந‌டுக்க‌த்தை ந‌ன்றாக‌ உண‌ர‌, ஆறுத‌லாக‌ அவ‌ளை அணைத்துக்கொண்ட‌வ‌ன், அவ‌ள் த‌லைமுடியை அழுந்த‌ கோதிய‌ப‌டி, "ரிலேக்ஸ். ரிலேக்ஸ்" என்று கூறி அவ‌ளை ச‌ம‌ன்ப‌டுத்தினான்.

அவ‌ளோ விய‌ர்வையும் க‌ண்ணீரும் த‌ன் முக‌த்தை நிறைத்திருக்க, அவ‌ன் மார்ப்புக்குள் புதைந்த‌ப‌டி, ப‌ய‌த்துட‌ன் அவ‌னை இறுக‌ க‌ட்டிக்கொண்டு நிம்ம‌தியை தேடினாள்.

அப்போது ப‌த‌றிய‌ப‌டி அவ‌ள் அருகில் வ‌ந்த‌ அவ‌ளின் த‌ந்தை லிங்கேஷ்வ‌ர‌ன், "ச‌ந்ரா உன‌க்கு ஒன்னும் ஆக‌ல‌ல்ல‌ம்மா?" என்று ப‌த‌ற்ற‌த்துட‌ன் ப‌ய‌ந்து கேட்க‌, உட‌னே அர்ஜுனிட‌மிருந்து வில‌கி த‌ன் த‌ந்தையை க‌ட்டிக்கொண்டு க‌ண்ணீர்விட்டாள் ச‌ந்ரா.

அவ‌ரும் அவ‌ளை அணைத்துக்கொண்டு, "ஒன்னும் இல்ல‌ம்மா. ஒன்னும் இல்ல‌." என்று கூறி அவ‌ளின் த‌லையை அழுந்த‌ கோதிய‌ப‌டியே அர்ஜுனிட‌ம் ந‌ன்றி என்று க‌ண்க‌ளாலே கூறினார். அத‌ற்கு அவ‌னும் ப‌ராவாயில்லை என்று க‌ண்காட்டினான்.

அப்போது ப‌ண்டித‌ர், "அவ‌ச‌குண‌ம் ஆயிடுத்து. இனி இந்த‌ பூஜைய‌ இன்னிக்கு ந‌ட‌த்துனா செரியா வ‌ராது. நாம‌ இன்னொரு நாள் வெச்சுக்க‌லாம்." என்று லிங்கேஷ்வ‌ர‌னை பார்த்து கூற‌,

அத‌ற்கு ப‌ண்டித‌ரின் ப‌க்க‌ம் திரும்பிய‌ லின்கேஷ்வ‌ர‌ன், "இல்ல‌ அதுக்கு இனி அவ‌சிய‌ம் இல்ல‌ ப‌ண்டித‌ரே." என்று கூறிய‌ கையோடு, த‌ன் ம‌க‌ளை அழைத்துக்கொண்டு அங்கிருந்து சென்றார்.

அப்போது த‌ண்ணீருட‌ன் அங்கு வ‌ந்த‌ அர்ஜுனின் ந‌ண்ப‌ர்க‌ள் நால்வ‌ரும், "டேய் அர்ஜுன்! என்ன‌டா ஆச்சு? எங்க‌டா பாஸும், ச‌ந்ராவும்?" என்று கேட்க‌,

அர்ஜுன், "அவ‌ங்க‌ போயிட்டாங்க‌. வாங்க‌ போலாம்." என்று கூறி வெளியில் சென்றான்.

அதை கேட்டு குழ‌ம்பி நின்ற‌ நால்வ‌ரும், ஒருவ‌ரையொருவ‌ர் புரியாம‌ல் பார்த்துவிட்டு பிற‌கு திரும்பி அர்ஜுனின் பின்னே சென்ற‌ன‌ர்.

பிற‌கு அனைவ‌ரும் லிங்கேஷ்வ‌ர‌னின் வீட்டிற்கு வ‌ந்து சேர‌, ச‌ந்ராவை பார்த்து, "நீ போய் ஒட‌னே ட்ரெஸ் சேஞ் ப‌ண்ணிக்கோம்மா." என்றார் லிங்கேஷ்வ‌ர‌ன்.

அவ‌ளும் ச‌ரியென்று த‌லைய‌சைத்து அவ‌ள் அறைக்கு சென்றாள். அப்போது லிங்கேஷ்வ‌ர‌ன் அருகிலிருந்த‌ சோபாவில் அம‌ர்ந்த‌ப‌டி நட‌ந்த‌வ‌ற்றையே நினைத்துக்கொண்டிருக்க‌, அப்போது உள்ளே நுழைந்த‌ அர்ஜுனும் அவ‌ன் ந‌ண்ப‌ர்க‌ளும், அவ‌ரை பார்த்து வ‌ருந்தின‌ர். இப்போதுதான் ம‌க‌ள் வ‌ந்த‌ ச‌ந்தோஷ‌த்தில் அவ‌ளுக்காக‌ விஷேஷ‌ பூஜையெல்லாம் த‌யார் செய்தார். அத‌ற்குள் இவ்வாறு ஒரு அசம்பாவித‌ம், அதுவும் த‌ன் ஆசை ம‌க‌ளுக்கே நேர்ந்த‌து, அவ‌ருக்கு எந்த‌ அள‌வு வேத‌னையை கொடுக்கும் என்று அனைவ‌ருக்கும் புரிய‌தான் செய்த‌து. அவ‌ர் நிலையை பார்த்து வ‌ருந்திய‌ ஐவ‌ரும் அவ‌ர் அருகில் சென்று அம‌ர்ந்து, அவ‌ருக்கு ஆறுத‌ல் கூற‌ முய‌ற்சித்த‌ன‌ர்.

அப்போது உடை மாற்றி வெளியில் வ‌ந்த‌ ச‌ந்ரா, நேராக‌ அர்ஜுனின் அருகில் வ‌ந்து, "இந்தாங்க‌ உங்க‌ ஜேக்கெட். தேங்க் யூ." என்று நீட்ட‌, அவ‌ற்றை சிறு புன்ன‌கையுட‌ன் வாங்கிக்கொண்ட‌வ‌ன், திடீரென‌ "ஸ்ஸ்" என்று துடித்தான்.

அதை பார்த்து ப‌த‌றிய‌ ச‌ந்ரா, அவ‌ன் கைக‌ளை அப்போதுதான் க‌வ‌னித்தாள். தீயை த‌ன் வெறும் கைக‌ளால் அணைக்க‌ முய‌ற்சித்த‌ அவ‌னின் உள்ள‌ங்கைக‌ள் இர‌ண்டும் தீயால் வெந்துப்போய் இருந்த‌து. அதை பார்த்த‌ ச‌ந்ரா ப‌த‌றி அவ‌ன் அருகில் அம‌ர்ந்து, "என்ன‌ ஆச்சு? உங்க‌ கைய‌ குடுங்க‌." என்று அவ‌ன் கைக‌ளை எடுத்து பார்க்க‌, "ஸ்ஸ்" என்று மீண்டும் துடித்தான் அர்ஜுன்.

அதை பார்த்த‌ லிங்கேஷ்வ‌ர‌ன், "என்ன‌ ஆச்சு அர்ஜுன்?" என்று கேட்க‌,

அத‌ற்கு அர்ஜுன் ப‌தில் கூறுவ‌த‌ற்குள் ச‌ந்ரா, "அப்பா கையில‌ ப‌ய‌ங்க‌ர‌மா தீ காய‌ம் ப‌ட்டிருக்கு." என்று ப‌த‌றி கூறினாள்.

அதை கேட்ட‌ லிங்கேஷ்வ‌ர‌ன் உட‌னே எழுந்து வ‌ந்து அவ‌னின் கைக‌ளை பார்த்தார். "என்ன‌ அர்ஜுன்? இப்பிடியா தீய‌, வெறும் கையால‌ அணைப்ப‌? பாரு எப்பிடி வெந்து போயிருக்குன்னு." என்று ப‌த‌றி கூறிய‌ப‌டி, "ச‌ந்ரா நீ போய் ஃப‌ஸ்ட் எயிடு பாக்ஸ் எடுத்துட்டு வாம்மா." என்று கூற‌, அதை கேட்ட‌ ம‌ற்ற‌ அனைவ‌ரும் ப‌த‌றி அவ‌ன் கைக‌ளை வாங்கி பார்த்த‌ன‌ர்.

"டேய் என்ன‌டா இது இப்பிடி காய‌ம் ப‌ட்டிருக்கு?" என்று அனைவ‌ரும் ப‌த‌ற‌, அத‌ற்குள் அங்கு ம‌ருந்துட‌ன் வ‌ந்து நின்றாள் ச‌ந்ரா.

"சீக்கிர‌ம் போட்டு விடும்மா." என்றார் லிங்கேஷ்வ‌ர‌ன்.

ஆனால் அர்ஜுன், "இல்ல‌ இல்ல‌ பாஸ். சின்ன‌ காய‌ம்தா. நா பாத்துக்குறேன் விடுங்க‌." என்றான்.

லிங்கேஷ்வ‌ர‌ன், "சின்ன‌ காய‌ம்னு சொன்ன‌, ம‌ண்டையில‌யே கொட்டுவேன். பேசாம‌ உக்காரு." என்று அக்க‌றையுட‌ன் அத‌ட்டிய‌வ‌ர், "நீ போட்டுவிடு ச‌ந்ரா." என்று ச‌ந்ராவை பார்த்து கூறினார்.

பிற‌கு ச‌ந்ராவும் அவ‌ன் அருகில் நெருங்கி அம‌ர்ந்து, அவ‌ன் கைக‌ளை ப‌ற்ற‌, அர்ஜுனுக்குதான் அவ‌ளின் நெருக்க‌ம் உள்ளுக்குள் ஏதோ செய்த‌து. என‌வே மெல்ல‌ அவ‌ளிட‌மிருந்து வில‌கி அம‌ர‌, அவ‌ளோ த‌ன்னிச்சையாக‌ ம‌ருந்தை கையில் எடுத்த‌ப‌டி மேலும் நெருங்கி அம‌ர்ந்தாள். அத‌னால் அவ‌ன் மேலும் வில‌கி அம‌ர‌ முய‌ற்சிக்க‌, அதை க‌வ‌னித்த‌ லிங்ஜேஷ்வ‌ர‌ன், "அர்ஜுன் ஆடாம‌ உக்காரு. அப்ப‌தா ம‌ருந்து போட‌ முடியும்." என்றார்.

அதை கேட்ட‌ அர்ஜுன் அமைதியாக‌ அம‌ர்ந்துக்கொண்டான். பிற‌கு ச‌ந்ரா அவ‌ன் காய‌த்திற்கு ம‌ருந்து போட‌, "ஸ்ஸ்" என்று மீண்டும் துடித்தான்.

அதை பார்த்து ப‌த‌றிய‌வ‌ள், "சாரி சாரி." என்று கூறி மெதுவாக‌ ஊதி ஊதி அவ‌னுக்கு ம‌ருந்திட்டாள்.

அவ‌ள் இத‌ழ் காற்றின் குளுமையாலோ, இல்லை அவ‌ளின் அக்க‌றையாலோ தெரிய‌வில்லை அவ‌னின் வ‌லி காணாம‌ல் போயிருக்க‌, அவ‌னின் க‌ண்க‌ளோ அவ‌ளின் த‌விப்பை ம‌ட்டுமே இர‌சித்துக்கொண்டிருந்த‌து. அவ‌ற்றை ச‌ந்ராவும் ம‌ற்ற‌ அனைவ‌ரும் க‌வ‌னிக்காம‌ல் இருக்க‌லாம், ஆனால் லிங்கேஷ்வ‌ர‌ன் ந‌ன்கு க‌வ‌னித்தார்.

பிற‌கு ச‌ந்ரா ம‌ருந்து போட்டு க‌ட்டுப்போட்டு முடித்த‌வுட‌ன், "முடிஞ்ச‌து." என்று கூறிய‌தும்தான் த‌ன்னிலைக்கே வ‌ந்த‌ அர்ஜுன், பிற‌கு த‌ன் எண்ண‌ங்க‌ளை க‌ட்டுப்ப‌டுத்திய‌ப‌டி, "அ..அப்ப செரி பாஸ் நா கெள‌ம்புறேன்." என்று கூற‌, அத‌ற்கு ம‌ற்ற‌வ‌ர்க‌ளும், "ஆமா பாஸ் நாங்க‌ளும் கெள‌ம்புறோம்." என்று கூறி எழுந்த‌ன‌ர்.

அத‌ற்கு லிங்கேஷ்வ‌ர‌ன், "செரி போயிட்டு வாங்க‌." என்றார்.

அப்போது அர்ஜுனும் எழுந்து ச‌ந்ராவை பார்த்து த‌லைய‌சைத்துவிட்டு செல்ல‌, "அர்ஜுன்!" என்று அழைத்தார் லிங்கேஷ்வ‌ர‌ன்.

அர்ஜுன், "சொல்லுங்க‌ பாஸ்." என்று அவ‌ரை பார்த்தான்.

லிங்கேஷ்வ‌ர‌ன், "நீ கொஞ்ச‌ம் உள்ள‌ வா. நா உங்கிட்ட‌ பேச‌ணும்." என்று கூறிவிட்டு த‌ன் அறைக்கு சென்றார்.

அதை கேட்ட‌ அர்ஜுனும் எதுவும் யோசிக்காம‌ல் அவ‌ர் பின்னே சென்றான். இருவ‌ரும் உள்ளே நுழைந்த‌தும் த‌ன் அறை க‌த‌வை சாற்றி தாழிட்டார் லிங்கேஷ்வ‌ர‌ன்.

அதை பார்த்த‌ அர்ஜுன், "சொல்லுங்க‌ பாஸ். வேற‌ எதாவ‌து வேல‌ இருக்கா?" என்று கேட்க‌,

லிங்கேஷ்வ‌ர‌ன், "இருக்கு." என்று கூறிய‌ப‌டி அவ‌ன் ப‌க்க‌ம் திரும்பினார்.

அத‌ற்கு அர்ஜுன் த‌யாராக‌, "சொல்லுங்க‌ பாஸ்" என்றான்.

லிங்கேஷ்வ‌ர‌ன், "அதுக்கு முன்னாடி என‌க்கு இதுக்கு ப‌தில் சொல்லு." என்று கூற‌,

"என்ன‌ பாஸ்?" என்று அர்ஜுன் கேட்க‌,

"உன‌க்கு என் பொண்ண‌ புடிச்சிருக்கா?" என்று ப‌ட்டென்று கேட்டுவிட்டார் லிங்கேஷ்வ‌ர‌ன்.

அதை கேட்டு அதிர்ந்து நின்ற‌ அர்ஜுன், "எ..என்ன‌ பாஸ்?" என்று கேட்க‌,

லிங்கேஷ்வ‌ர‌ன், "என் பொண்ண‌ உன‌க்கு புடிச்சிருக்கான்னு கேட்டேன்." என்றார்.

அதை கேட்டு த‌டுமாறிய‌ அர்ஜுன், "எ..ஏ பாஸ் இப்பிடியெல்லா கேக்குறீங்க‌?" என்று த‌ன் பார்வையை திருப்பி திரும்பி நின்ற‌ப‌டி த‌ன் இத‌ய‌த்தின் வேக‌த்தை உண‌ர்ந்தான்.

அப்போது அவ‌ன் முன்பு வ‌ந்து நின்ற‌ லிங்கேஷ்வ‌ர‌ன், "என‌க்கு தெரியும் அர்ஜுன். உன‌க்கு என் பொண்ண‌ புடிச்சிருக்கு." என்று கூற‌,

அதை கேட்டு திடுக்கிட்ட‌வ‌ன், "ஐயோ பாஸ்! அப்பிடியெல்லா இல்ல‌. நீங்க‌ எதோ த‌ப்பா புரிஞ்சுகிட்டிருக்கீங்க‌ன்னு நெனைக்கிறேன்." என்று கூறி ச‌மாளித்தான்.

அதை கேட்டு அவ‌ன் தோள்க‌ளை ப‌ற்றிய‌வ‌ர், "இங்க‌ பாரு அர்ஜுன்." என்று அவ‌ன் க‌ண்க‌ளை பார்த்து, "என‌க்கு ஏற்க‌ன‌வே ரெண்டு மேஜ‌ர் அட்டேக் வ‌ந்திருக்கு. அது உன‌க்கும் தெரியும். அப்பிடி இருக்குற‌ப்ப‌ என‌க்கு எந்த‌ நேர‌த்துல‌ என்ன‌ ஆகும்னே தெரியாது." என்று கூற‌,

அர்ஜுன், "பாஸ்! ஏ பாஸ் இப்பிடியெல்லா பேசுறீங்க‌?" என்று ப‌த‌றி கேட்க‌,

லிங்கேஷ்வ‌ர‌ன், "நா உண்மைய‌தான‌ சொல்றேன் அர்ஜுன். திடீர்னு அட்டேக் வ‌ந்து நா போயிட்ட‌ன்னா, என் பொண்ணு த‌னி ம‌ர‌ம் ஆயிருவா." என்று கூற‌,

அர்ஜுன், "பாஸ் அப்பிடியெல்லா ஒன்னும் ஆகாது. நீங்க‌ மொத‌ல்ல‌ இப்பிடி பேசுற‌த‌ நிறுத்துங்க‌." என்று அவ‌னைவிட்டு வில‌கி நின்று திரும்பி த‌ன் க‌ண்க‌ளை துடைத்துக்கொண்டான்.

அப்போது லிங்கேஷ்வ‌ர‌ன், "என் பொண்ணுக்கு இருக்குற‌ ஒரே சொந்த‌ம் நா ம‌ட்டுந்தா. இப்போ நா போற‌துக்குள்ள‌ அவ‌ள‌ ஒருத்த‌ன் கையில‌ புடிச்சு குடுத்த‌ர‌ணுன்னு நெனைக்கிறேன்." என்று கூறி மீண்டும் அவ‌ன் முன்பு வ‌ந்து நின்ற‌வ‌ர், "அவ‌ள‌ க‌ல்யாண‌ம் ப‌ண்ணிக்க‌ போற‌வ‌ன், எப்பிடியெல்லா இருக்க‌ணுன்னு நா நென‌ச்ச‌னோ, அப்பிடியெல்லா நீ இருக்க‌. நிச்ச‌ய‌மா அவ‌ள‌ நீ என்ன‌விட‌ ந‌ல்லா பாத்துப்ப‌. இது என‌க்கு இப்ப‌ தோணுன‌தில்ல‌. எப்ப‌வோ நீதா என் பொண்ணுக்கு ச‌ரியான‌வ‌ன்னு நா முடிவு ப‌ண்ணிட்டேன்." என்று கூற‌,

அர்ஜுன், "நா எப்பிடி பாஸ்? நா ஜ‌ஸ்ட் உங்க‌ க‌ம்ப‌னியில‌ வேல‌ பாக்குற‌வ‌ன். அவ்ளோதா. ஆனா நீங்க‌ என்னோட‌ பாஸ். உங்க‌ பொண்ணுக்கு நா எப்பிடி பொறுத்த‌மாவேன்?" என்று கேட்க‌,

லிங்கேஷ்வ‌ர‌ன், "நீ வெறும் என் க‌ம்ப‌னியில‌ வேல‌ பாக்குற‌வ‌ன் ம‌ட்டும் இல்ல‌. என‌க்காக‌ உயிரையே குடுக்க‌ த‌ய‌ங்காத‌ என்னோட‌ குடும்ப‌த்துல‌ ஒருத்த‌ன். உன்ன‌ நா என்னிக்குமே ஒரு எம்லாயா பாத்த‌தில்ல‌. என் ம‌க‌னா ம‌ட்டுந்தா பாக்குறேன். அது உனக்கும் தெரியும்." என்றார்.

அர்ஜுன், "அது உங்க‌ பெரிய‌ ம‌ன‌சு பாஸ். அதுக்காக‌ நா அட்வான்டேஜ் எடுத்துக்குற‌து ரொம்ப‌ த‌ப்பு. ஏன்னா என் லிமிட் என்ன‌ன்னு என‌க்கு தெரியும்." என்றான்.

லிங்கேஷ்வ‌ர‌ன், "என்ன லிமிட்? இங்க‌ பாரு, என் பொண்ண ம‌ட்டும் இல்ல‌. என‌க்க‌ப்ற‌ம் என் பிஸ்ன‌ஸையும் பாத்துக்குற‌துக்கு ச‌ரியான‌ ஆள் நீதான்னு நா எப்ப‌வோ முடிவு ப‌ண்ணிட்டேன்." என்றார்.

அர்ஜுன், "ஐயோ அந்த‌ அள‌வு என‌க்கு த‌குதி இல்ல‌ பாஸ்." என்று கூற‌,

லிங்கேஷ்வரன், "உனக்கு எல்லா தகுதியும் இருக்கு. அது உனக்கே தெரியும்." என்று அழுத்தமாக கூறியவர், "அதனால‌தா நா என் பொண்ணுக்கு உன்ன‌ செல‌க்ட் ப‌ண்ணேன். ஆனாலும் உன் ம‌ன‌சுல‌ என்ன‌ இருக்குன்னு தெரியாம‌ எதுவும் ப‌ண்ண‌க்கூடாதுன்னுதா, இத்த‌ன‌ நாள் அமைதியா இருந்தேன். ப‌ட் இன்னிக்கு கோவில்ல‌ அதையும் தெளிவா தெரிஞ்சுகிட்டேன்." என்று கூற‌, "இல்ல‌ பாஸ் அங்க‌ நா.." என்று கூற‌ வ‌ருவ‌த‌ற்குள், "என‌க்கு தெரியும் அர்ஜுன்." என்றார் லிங்கேஷ்வ‌ர‌ன்.

"உன்னையே அறியாம‌ நீ என் பொண்ண‌ விரும்ப‌ ஆர‌ம்பிச்சுட்ட‌. அதுக்கான‌ அடையாள‌ந்தா இந்த‌ காய‌ம்." என்று அவ‌னின் க‌ர‌ங்க‌ளை பார்த்து கூறிய‌வ‌ர், "ஆனா என்னோட‌ பொண்ணுங்குற‌தால‌, உன் ம‌ன‌சு அத‌ ஏத்துக்க‌ மாட்டிங்குது." என்றார்.

அர்ஜுன், "இல்ல‌ பாஸ் அப்பிடி எதுவும் இல்ல‌." என்று ச‌மாளிக்க‌ முய‌ற்சிக்க‌, அவ‌ன் க‌ர‌ங்க‌ளை ப‌ற்றிய‌வ‌ர், "ப்ளீஸ் அர்ஜுன். நீ த‌ய‌ங்க‌ வேண்டிய‌ அவ‌சிய‌மே இல்ல‌. நா எவ்ளோ தேடுனாலும் உன்ன‌விட‌ ஒரு ந‌ல்ல‌ பைய‌ன் என் பொண்ணுக்கு கெடைக்க‌ மாட்டான். ப்ளீஸ் என் பொண்ண‌ க‌ல்யாண‌ம் ப‌ண்ணிக்கோ." என்று கூற‌,

"ஆனா பாஸ்" என்று அவ‌ன் ஏதோ கூற‌ வ‌ருவ‌த‌ற்குள் அவ‌ன் வாயில் கை வைத்த‌வ‌ர், "இது என் க‌டைசி ஆச‌ அர்ஜுன்." என்று கூறினார்.

அதை கேட்ட‌ அடுத்த‌ நொடி அதிர்ந்த‌வ‌ன், "என்ன‌ பாஸ் இப்பிடியெல்லா பேசுறீங்க‌?" என்று ப‌த‌றி கூற‌,

லிங்கேஷ்வ‌ர‌ன், "ப்ளீஸ் அர்ஜுன். என்னோட‌ இந்த‌ ஆசைய‌ நெற‌வேத்து." என்று கெஞ்ச‌லாக‌ கூறினார்.

இன்று வ‌ரை அர்ஜுன் என்றுமே லிங்கேஷ்வ‌ர‌னின் பேச்சுக்கு ம‌று பேச்சு பேசிய‌தில்லை, எந்த‌ வேலையையும் செய்யாம‌ல் ம‌றுத்த‌தில்லை. ஆனால் இந்த‌ விஷ‌ய‌ம் ம‌ட்டும் அவ‌னுக்கு ஒருவித‌ த‌ய‌க்க‌த்தை கொடுத்த‌து. அவ‌ன் ம‌ன‌திலும் அவ‌ள் மீது ஒரு ஈர்ப்பு இருப்ப‌து த‌ன‌க்கு தெரிந்த‌துதான், ஆனால் த‌ன்னுடைய பாஸிற்கு துரோக‌ம் இழைக்க‌ ம‌ன‌ம் வ‌ராம‌ல்தான் இப்போது வ‌ரை அவ‌ற்றை வெளியில் காட்டிக்கொள்ளாது அமைதியாக‌ இருந்தான். ஆனால் இப்போது அவ‌ரே த‌ன் முன்பு இவ்வாறு கெஞ்சிக்கொண்டிருப்ப‌தை பார்த்த‌தும், அவ‌னுக்கு ம‌றுப்பு கூற‌ ம‌ன‌ம் வ‌ர‌வில்லை. த‌ன் வாழ்நாளில் இவ‌ர் யாரிட‌முமே இவ்வாறு கெஞ்சி பாராத‌ அர்ஜுனுக்கு, த‌ன்னிட‌ம் இன்று இவ்வாறு கெஞ்சி நிற்ப‌து ஏனோ குற்ற‌ உண‌ர்வாக‌ இருந்த‌து. இத‌ற்குமேல் அவ‌ரை இந்நிலையில் என்றும் பார்க்க‌வே கூடாது என்று முடிவெடுத்த‌வ‌ன், "நீங்க‌ என்ன‌ சொன்னாலும் நா செய்வேன் பாஸ். நீங்க‌ ப்ளீஸ் இப்பிடியெல்லா பேசாதீங்க‌." என்று அவ‌ன் க‌ர‌ங்க‌ளை த‌ன் காய‌ம் வ‌லிக்காத‌வாறு மித‌மாக‌ ப‌ற்றினான்.

அத‌ன் பிற‌கே பெரும் சுமை இற‌ங்கிய‌துப்போல் நிம்ம‌திய‌டைந்த‌வ‌ர், "செரி அப்போ என‌க்கு ச‌த்திய‌ம் ப‌ண்ணி குடு." என்று த‌ன் கையை அவ‌ன் முன் நீட்டி, "எந்த‌ சூழ்நிலையிலையும், என் பொண்ண‌விட்டு போமாட்ட‌ன்னு, என்னிக்குமே அவ‌க்கூட‌வே இருப்ப‌ன்னு ச‌த்திய‌ம் ப‌ண்ணி குடு." என்றார்.

அதை கேட்ட‌ அர்ஜுன், அவ‌ரின் விழி நோக்கி, "என்ன‌ ந‌ம்புங்க‌ பாஸ். உங்க‌ ந‌ம்பிக்கைய‌ நா எப்ப‌வும் காப்ப‌த்துவேன். எந்த‌ சூழ்நிலையும் நா அவ‌ள‌ விட்டு போக‌ மாட்டேன். எல்லாத்துலையும் நா அவ‌ளுக்கு தொணையா இருப்பேன். இது உங்க‌ மேல‌ ச‌த்திய‌ம்." என்று அவ‌ர் த‌லையில் க‌ர‌ம் ப‌தித்து ச‌த்திய‌ம் செய்தான். அடுத்த‌ நொடி அவ‌னை இழுத்து அணைத்துக்கொண்டார் லிங்கேஷ்வ‌ர‌ன்.

- ஜென்மம் தொட‌ரும்....
 

Author: Oviya Blessy
Article Title: CHAPTER-4
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.