அத்தியாயம்: 4
விக்ரமின் ஆத்மா ரதியின் பின்னே அமர்ந்து அவளது ஸ்கூட்டியில் அவளுடனே பயணிக்கிறது. அது தெரியாமல் ரதி தொடர்ந்து பயணித்தாள். ஒரு ட்ராபிக் சிக்னலில் வந்து நின்ற ரதி, தன் முன்னே இருந்த ஏராளமான வாகனங்களை பார்த்து எரிச்சல் அடைந்தாள். அப்போது திடீரென அவள் பின்னே ஒரு பைக்காரன் வந்து அவளது ஸ்கூட்டியின் மீது தெரியாமல் இடித்துவிட, முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்க திரும்பி அவனை பார்த்து முறைத்தாள் ரதி.
அவள் பின்னே அமர்ந்திருந்த விக்ரமை அவளால் காண முடியவில்லை. ஆனால் தன் முகத்திற்கு அருகே தெரிந்த அவளது முகத்தை கண்கள் விரிய பார்த்து கொண்டிருந்தான் அவன். அவள் போட்டிருந்த perfumeமின் Smell அவளது வியர்வை Smell உடன் கலந்து ஒரு போதை ஏற்றும் புதுவித நறுமணமாக வீச, அது அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது. அதனால் ஒருபுறம் விக்ரம் அவளை பார்த்து ரசித்துக் கொண்டிருக்க, தன்னை இடித்தவனை பார்த்து, “யோவ்... என்ன குடிச்சிட்டு வண்டி ஓட்டுறியா? அப்படியே எருமை மாடு மாதிரி மேல கொண்டு வந்து இடிக்கிற? நீ எல்லாம் சோத்தை தானே திங்குற...!!" என்று தனக்கு இருந்த கடுப்பில் இன்னும் சில பல மானே தேனே எல்லாம் போட்டு அவனை திட்டிக் கொண்டிருந்தாள்.
பணக்கார வீட்டில் பிறந்து வசதி படைத்தவர்களுடன் மட்டுமே பழகி இருந்த விக்ரமுக்கு இப்படி எல்லாம் ஒரு பெண் நடுரோட்டில் பேசி சண்டை போடுவாளா.. என்று இருந்தது. அவள் பேசியதை கேட்டு கடுப்பான பைக்கில் அமர்ந்திருந்த இளைஞன், “ஏதோ தெரியாம இடிச்சிட்டா உன் இஷ்டத்துக்கு பேசுவியா நீ? நீ நல்லா தின்னு தின்னு நல்லா யானை குட்டி மாதிரி இருந்துட்டு என்ன சோறு தான் திங்கறியான்னு கேக்குறியா? நீ என்னத்தடி திங்கற?" என்று அவனும் அவளுக்கு சமமாக வாயாடினான்.
அவன் பேசியதில் எரிச்சல் அடைந்த ரதி, “டேய்... எவ்வளவு கொழுப்பு இருந்தா நீ என்ன டி போட்டு பேசுவ? இருடா நீ என்கிட்ட பிரச்சினை பண்றேன்னு உன்ன போலீஸ்கிட்ட பிடிச்சு கொடுக்கிறேன்." என்று கத்த, “எது.. நான் உன்கிட்ட பிரச்சனை பண்றனா? நீ தான்டி என்கிட்ட பிரச்சனை பண்ணிட்டு இருக்க. ஏதாவது அழகான figureஆ இருந்தா கூட பேசி வம்பு இழுத்து என்ஜாய் பண்ணலாம். நீ எல்லாம் ஒரு ஆளுன்னு நான் போய் உன் கிட்ட பிரச்சனை பண்றனா?" என்று ரதியின் உருவத்தை வைத்து அவளை கிண்டல் செய்து பேசிய அந்த இளைஞன் ஏளனமாக அவளை பார்த்து புன்னகைத்தான்.
அதை கவனித்துவிட்டு அவளை சுற்றி இருந்த அனைவரும் அவளை கிண்டலாக பார்த்து புன்னகைத்தார்கள். அதனால் ரதியின் முகம் வாடிவிட்டது. அப்போது சரியாக சிக்னல் லைட் சிவப்பில் இருந்து பச்சையாக மாற, அங்கிருந்து தன் ஸ்கூட்டியை ஸ்டார்ட் செய்து முன்னோக்கி ரதி செல்ல, அவளைப் பார்த்து “போடி குண்டம்மா..!!" என்றுவிட்டு அவளை மோதிய அந்த இளைஞன் வேகமாக சென்றுவிட்டான். அதனால் ரதிக்கு கோபம் கோபமாக வர, அதை போய் இனி அவளால் எங்கே அவனிடம் காட்ட முடியும்? அதனால் கோபம் கண்ணீராக மாறி, கலங்கிய கண்களுடன் Beachக்கு சென்றாள் ரதி.
அப்போது மணி கிட்டத்தட்ட 9:45 ஆகியிருந்தது. அவளுடன் வேலை பார்க்கும் மீரா அவளுக்கு கால் செய்து “ஒய்.. எங்கடி இருக்க? இன்னும் ஆபீஸ் வராம என்ன பண்ற? அந்த மேனேஜர் இதோட நாலு தடவை நீ ஏன் இன்னும் ஆபீஸ் வரலையான்னு கேட்டுட்டான்." என்று சொல்ல, “எனக்கு ஆபிஸ் வரவே புடிக்கல மீரா. அந்த ஆள் கிட்ட நான் இன்னைக்கு லீவ்ன்னு சொல்லிடு." என்று சோகமாக சொன்னாள் ரதி.
அவள் குரலை வைத்து ஏதோ சரி இல்லை என்று நினைத்த மீரா, “என்ன... உங்க வீட்ல மறுபடியும் உனக்கு மாப்பிள்ளை பாக்க ஸ்டார்ட் பண்ணிட்டாங்களா? இதெல்லாம் டெய்லியும் நடக்கிறது தானே.. இதுக்கெல்லாம் ஏன் Feel பண்ற? விட்டு தள்ளுடி. உனக்குன்னு ஒருத்தன் இனிமேயா பொறுக்க போறான்? நீ கிளம்பி ஆபிஸ் வா." என்று சொல்ல, “ஆமா எனக்காக ஒருத்தன் பிறந்து கிழிச்சான். நீ போய் பார்த்த..!! அப்படியெல்லாம் எவனும் வரமாட்டான்டி. இதெல்லாம் என்ன வாழ்க்கைன்னு நினைச்சாலே எரிச்சலா இருக்கு. இன்னைக்கு என்ன விட வயசான ஒரு வழுக்கை மண்டையன் வந்து என்ன புடிக்கலைன்னு சொல்லிட்டு போய்ட்டான் தெரியுமா...?? ஏண்டி ஒரு பொண்ணு குண்டா இருக்கிறது அவ்வளவு பெரிய குத்தமா?" என்று சலிப்பாக கேட்டாள் ரதி.
மீராவிற்கு சிறிது நேரம் ரதியிடம் பேசி அவளுக்கு ஆறுதல் சொல்ல வேண்டும் என்று தான் இருந்தது. ஆனால் இப்போது தான் ஆபீஸ் தொடங்கி இருக்கும் நேரம் என்பதால் சிசிடிவி கேமராவில் தான் போனில் பேசிக் கொண்டிருப்பதை மேனேஜர் கவனித்து விட்டால் அவனிடம் திட்டு வாங்க வேண்டும் என்று நினைத்த மீரா, “நீ சொல்லாம கொள்ளாம திடீர்னு லீவ் போட்டா அந்த சைக்கோ சும்மா விட மாட்டான்டி. Properஆ Apply பண்ண மாட்டீங்களான்னு ரூல்ஸ் பேசுவான். அப்புறம் appraisal meetingல இதையெல்லாம் ஒரு ரீசன்னு குறையா சொல்லுவான். நீ ஒரு 2 Hours பர்மிஷன் கேட்டு இருக்கேன்னு நான் அவன்கிட்ட inform பண்றேன். நீ அதுக்குள்ள ஆபீஸ் வந்துரு. Bye." என்றுவிட்டு அந்த அழைப்பை துண்டித்தாள்.
அவள் பேசியது அனைத்தையும் கேட்டுக் கொண்டு அவள் அருகில் தான் நின்று கொண்டிருந்தான் விக்ரம். அவள் பேசியதை வைத்து அவளுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. மற்றும் இவளை ஏராளமானவர்கள் ரிஜெக்ட் செய்திருக்கிறார்கள் என்று புரிந்து கொண்டவன் “இவளுக்கு என்ன....!! நல்லா புசுபுசுன்னு டெடி பியர் மாதிரி க்யூட்டா தானே இருக்கா..!! என்ன கொஞ்சம் வாய் தான் ஓவர். அதுவும் இவ ஏதோ டென்ஷன்ல இருந்ததுனால அப்டி தான் கத்திருக்கா. இல்லனா, இவ ஓகே தான். மேக்கப் போட்டு மினுக்கிட்டு fakeஆ இருக்கிற ஸ்டைலிஷ் ஆனா பொண்ணுங்களுக்கு இவ எவ்வளவோ பரவாயில்லை." என்று நினைத்தான்.
தனது ஸ்கூட்டியை ஓரமாக நிறுத்திவிட்டு கையில் தன் ஹேண்ட்பேக் உடன் கடல் அலைகளை நோக்கி சென்றாள் ரதி. அவளது வாழ்க்கையை பற்றி நினைக்கும் போது “இதெல்லாம் என்ன வாழ்க்கை..!! இவ்ளோ கஷ்டப்பட்டு வாழ்றதுக்கு நான் பொறக்காம இருந்திருந்தா ரொம்ப நல்லா இருந்திருக்கும்." என்று நினைத்து கலங்கிய கண்களுடன் வேகமாக கடலை நோக்கி அவள் சென்று கொண்டிருந்தாள். அதனால் பதறிய விக்ரம் “என்ன இவ.. இவளுக்கு கல்யாணமே ஆகாதுன்னு நினைச்சு சூசைட் பண்ணிக்க போறாளா? இவ என்ன காப்பாத்த ட்ரை பண்ணா.. இப்போ இவளை நான் எப்படி காப்பாத்துறது?" என்று நினைத்து தானும் வேகமாக அவள் பின்னே சென்றான்.
வேகமாக கடலை நோக்கி சென்று கொண்டு இருந்த ரதி தண்ணீருக்குள் கால் வைக்கப் போனவள் “வேண்டாம். செருப்பு ஈரம் ஆகிட்டா கால்ல மண்ணு ஒட்டிக்கும்." என்று நினைத்து அப்படியே கரையோரமாக நடக்க தொடங்கியவள், எதிரில் இருந்த ஒரு பானி பூரி கடையை பார்த்தாள். அதைப் பார்த்தவுடன் காலையில் அவள் சாப்பிடாமல் வந்தது அவளுக்கு ஞாபகம் வந்துவிட, சாப்பாடு போடச்சொல்லி அவளது வயிறு கூப்பாடு போட தொடங்கியது. அதனால் வேகமாக அந்த கடைகள் இருக்கும் பகுதிக்கு சென்றாள். சவுட்டுமேனிக்கு தனக்கு பிடித்த உணவுகள் அனைத்தையும் வாங்கி மனமாற உண்டாள்.
அவள் அப்படி சாப்பிடுவதை பார்த்து சத்தமாக சிரித்த விக்ரம் “அடிப்பாவி.. நீ சாகப் போறேன்னு நெனச்சா.. என்னமோ சாப்பிட்டு பல நாள் ஆனவ மாதிரி இங்க வந்து இப்படி தின்னுட்டு இருக்க..!! அங்க அப்படி feel பண்ணிட்டு இப்போ இங்க வந்து அதுக்கு உனக்கும் சம்பந்தமே இல்லாத மாதிரி நீ கொட்டிக்குறத பாத்தா இப்ப நீ எதையுமே பெருசா எடுத்துக்கவே இல்லை என்ற மாதிரி இருக்கு." என்று நினைக்க, திடீரென ரதிக்கு பொறை ஏறியது. அப்போதும் தன் வாயில் இருந்ததை மென்று கொண்டே ரதி கடைக்காரரிடம் சைகை செய்து தனக்கு தண்ணீர் வேண்டும் என்று கேட்க, “விக்கி கிட்டு செத்துடாத மா. பொறுமையா சாப்பிடு." என்று சொல்லிவிட்டு அவளிடம் ஒரு கிளாஸ் தண்ணீரை கடைக்காரர் நீட்ட, அதை வாங்கி குடித்த ரதி “சாவரத்துக்குன்னாலும் ஒரு அதிர்ஷ்டம் வேணும் அண்ணா. அது கூட எனக்கு இல்லை." என்றுவிட்டு விரத்தியுடன் புன்னகைத்தாள்.
அதனால் அந்த வயதானவரின் முகம் மாறிவிட, “ஏன் மா இந்த சின்ன வயசுல இப்படி எல்லாம் பேசுற?" என்று அவர் கேட்க, “எனக்கு இப்போ சின்ன வயசுன்னு சொன்ன முதல் ஆள் நீங்க தான் அண்ணா. எனக்கு 27 தான் வருது. ஆனா எல்லாரும் வேணும்னே 30ஆ 35 வயசான்னு கிண்டலா கேட்பாங்க. இந்த உலகத்துல பொண்ணா பொறுக்குறதே பெரிய பாவம். அதுல குண்டா வேற பொறந்துட்டா அவங்களுக்கு எல்லாம் வாழவே தகுதி இல்லை என்ற மாதிரி தான் இந்த உலகம் பார்க்கும். என்னமோ.. நான் ஒருத்தி.. உங்ககிட்ட தேவையில்லாம பேசி உங்க timeஜ வேஸ்ட் பண்ணிட்டு இருக்கேன். இந்தாங்க காசு." என்றவள் அவரிடம் பணத்தை கொடுத்துவிட்டு அங்கிருந்து அவள் தன் ஸ்கூட்டியை பார்க் செய்திருந்த இடத்திற்கு சென்றாள்.
அவள் தனது ஸ்கூட்டியில் ஏறி அமர, தானும் அவள் பின்னே அமர்ந்த விக்ரம் சைடு மிரரில் தெரிந்த அவளது முகத்தை பார்த்து “நீ குண்டா இருந்தாலும் க்யூட்டா தான் இருக்க ரதி. உன்கிட்ட இப்ப வரைக்கும் இத யாரும் சொன்னது இல்லைன்னு நினைக்கறேன். அதான் உனக்கே உன்ன பத்தி தெரியல. You deserve all the happiness in your life." என்று மனதார சொன்னான். ஆனா
ல் அவன் பேசியது அவளுக்கு கேட்கவில்லை.
தொடரும்..
அமேசானில் படிக்க,

Author: thenaruvitamilnovels
Article Title: Chapter-4
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.