உங்களை போய் எப்படி தான் அம்மா காதலிச்சு கல்யாணம் செய்து கொண்டார்களோ என்று சலித்துக் கொண்டான் மாறன்.....😒

மாறா என்ன ஓவரா பேசுற இப்ப, மட்டும் என்ன கோடீஸ்வர வீட்டுக்கு தானே மாப்பிள்ளையா ஆக போற பணத்திலும் அந்தஸ்தையும் அன்பரசு நமக்கு நிகரான ஆள் தான்.

ஏதோ ஒண்ணுமில்லாத குடும்பத்துல பொண்ணு கட்டி வைக்கிற மாதிரி பேசுற.....என்றார் அசோக்...

ம்ம்.... உங்களுக்கு தெரிஞ்சது எல்லாம் பணம் காசு தானே என்றான் மாறன்....

மாறா எல்லாம் எதுக்காக டா என்னோட ஒற்றை வாரிசு உனக்காக தானே.... என்றதும் சத்தமாக சிரித்து விட்டான் மாறன் 😂

என்ன எனக்காகவா இப்படி ஓடி ஓடி சம்பாதிக்கிறீங்க....? என்று ஆச்சரியமாக கேட்பதைப் போல் நக்கல் அடித்தான் மாறன்....

ம்ம்... எனக்கு தெரியும் பா எல்லாமே உங்க சுயநலத்துக்கு ஆக தான், உலக பணக்கார வரிசையில் உங்க பேரு வரணும் என்பதுதான் உங்களோட லட்சியம் அதுக்காக நீங்க என்ன வேணா செய்வீங்க .... என்று மாறன் கூறவே அதிர்ந்து போனார் அசோக்....

நீங்க மட்டும் எங்க அம்மாவ நல்லபடியா அன்பா பார்த்து இருந்தா எங்க அம்மா என்னை விட்டு இந்த உலகத்தை விட்டும்... போயிருக்க மாட்டாங்க எல்லாம் உங்க சுயநலம் பற்களை இறுக கடித்தவாரே கூறினான் தமிழ் மாறன் .

சரி நடந்து முடிஞ்சத பத்தி பேசி என்ன ஆகப்போகுது,

வா அன்பரசு வீட்டுக்கு கிளம்பலாம் நமக்காக வெயிட் பண்ணிட்டு இருப்பாங்க என்றார் அசோக்.

அன்பரசு வித்யாவின் தந்தை பெரிய செல்வந்தன் தொழிலதிபர் எப்படியாவது வித்யாவை மாறனுக்கு திருமணம் செய்து வைத்துவிட்டால் 1000 கோடி ப்ராஜெக்ட் அசோக்கிற்கு கிடைக்கும் என்பதாலும் வித்தியாவின் ஷார் கிடைக்கும் என்பதாலும் தான் இந்த தந்திரமான ஒப்பந்தம் அசோக் கால் போடப்பட்டது.

அன்பரசுக்கோ வித்யாவை யார் தலையிலாவது கட்டி வைக்க வேண்டும் என்ற எண்ணம் தன் மகளைப் பற்றி அவருக்கு தானே தெரியும்

வித்யாவின் வீட்டில் தட புடலாக விருந்துஏற்பாடு நடந்து கொண்டு இருக்க..

கோகிலா எங்க வித்யா ரெடியாயிட்டாளா? இன்னும் கொஞ்ச நேரத்துல மாப்ள வீட்ல இருந்து வந்திடுவாங்க என்றார் மாதங்கி வித்யாவின் அன்னை

இன்னும் மேடம் ரெடியாகல மா, இப்போதான் கொஞ்சம் நேரத்துக்கு முன்னாடி எழுந்தாங்க மா என்றதும் சரி நான் பாத்துக்கிறேன் நீங்க வேலையை கவனிங்க என்ற படி வித்யாவின் அறைக்குச் சென்றார் மாதங்கி.

நங்கை.... எல்லா வேலைகளையும் முடித்துவிட்டால் அதற்குள்

நங்கை மாப்பிள்ளை வீட்டில் இருந்து இன்னும் கொஞ்சம் நேரத்துல வந்துடு வாங்கலாம் எல்லாம் டேபிள்ல வச்சிடுமா என்றார் கோகிலா.

சரிங்க அக்கா என்ற படி... சமைத்த உணவுகள் அதனுடன் கொஞ்சம் இனிப்பு வகைகள் கொஞ்சம் பழங்கள் என அனைத்தையும் டைனிங் டேபிளில் அழகாக வைத்தவள் அங்கிருந்து கிளம்பிவிட்டாள்.

வித்யா தான் ஏற்கனவே சொல்லி இருக்கிறாளே யார் கண்ணிலும் படக்கூடாது என்று மேலும் அவளுக்கு அங்கே இருக்கவும் விருப்பமில்லை.

மேலே வித்தியாவின் அறைக்குள் நுழைந்த மாதங்கிக்கு பேரதிர்ச்சி..

ஏ.... வித்தியா இன்னைக்கும் இந்த கருமத்தை குடிச்சு தொலச்சிட்டியா.. மாப்பிள்ளை வீட்ல இருந்து எல்லாரும் வந்திடுவாங்க போய் ரெடி ஆகு உங்க அப்பாவுக்கு தெரிந்தால் அவ்வளவுதான் என்ற மாதங்கி.... போதையில்,🍾 படுத்திருந்த தன் மகளை வலுக்கட்டாயமாக இழுத்து குளியல் அறைக்குள் நுழைத்தார்....

ச்..... ச் என்று சிணுங்கி கொண்டே...குளியலறைக்குள்... சென்றால்.... வித்தியா... தண்ணீர் குழாயை திறந்து விட்டு அதற்கு கீழே வித்தியா வை நிற்க வைத்து நனைய விட்டு போதையை.... தெளிய வைத்தார் மாதங்கி....

வித்யா ஸ்கூல் படிக்கும் போதே போதைக்கு அடிமை
அவள் அன்னை மாதங்கி எத்தனை முறை கூறியும் கேட்டதே இல்லை... மேலும் தகாதவார்களின் நட்பும் கூட...
இது அன்பரசுக்கும் தெரியும் ... வித்யாவின் இந்த நிலை அறிந்து யார் இவளை திருமணம் செய்து கொள்வார் என்பதாலே தான் இப்படிப்பட்ட ஒரு கான்ட்ராக்ட்டை போட்டிருக்கிறார் அன்பரசு.....

""இதுக்கு எல்லாம் எதுக்கு கல்யாணம்... நல்ல பையன் வாழ்க்கையை கெடுக்க "" தகர டப்பா....
இது நான் 😁



சிறிது நேரத்தில் வித்யா வீட்டின் முன்னே பெரிய கார் ஒன்று வந்து நிற்க அதிலிருந்து மாறனும் அசோக்கும் இறங்கினார்கள்....
இதை வெளியே தோட்ட வேலை பார்த்துக் கொண்டிருந்த ராமசாமி சோமு கண்டு அருகில் வந்து வணக்கம் வைக்க மாறனும் அவர்களுக்கு திரும்ப வணக்கம் என்றான் ஆனால் அசோக்கோ சற்றும் அலட்டிக் கொள்ளவில்லை.

மெதுவாக அசோக் மாறா நீ ஏன் இவங்களுக்கு எல்லாம் வணக்கம் வைக்கிற உன் கூட வந்தா என் இமேஜ் தான் ஸ்பாயில் ஆகும் போல என்றதும் கண்களில் கோபம் கொப்பளிக்க தந்தையை முறைத்தான் மாறன்.


அவன் முறைப்பின் அர்த்தம் உணர்ந்த அசோக் பின் ஒரு வார்த்தை கூட மாறனிடம் பேசவில்லை. பேசினால் என்ன விபரீதம் நடக்கும் என்பதை அசோக் அறிவார்.

மாதங்கி மற்றும் அன்பரசு வாசலுக்கு வந்து இருவரையும் வரவேற்றனர்.
மாதங்கி வாங்க மாப்ள வாங்கன்னா நல்லா இருக்கீங்களா என்று வணக்கம் வைக்க மாறனும் வணக்கம் ஆண்ட்டி நல்லா இருக்கேன் எங்க அன்பரசன் அசோக்கும் கைகளை குலுக்கி கொண்டனர்


பின் அனைவரும் வீட்டுக்குள் செல்ல அன்பரசு, உட்காருங்கள் என்று சோபாவில் அமரச் செய்து தானும் எதிர் சோபாவில் அமர்ந்தார்.. கோகிலா குடிப்பதற்கு குளிர்பானம் கொண்டு வந்து கொடுக்க

நோ தேங்க்ஸ் என்றான் மாறன்
அசோக் பானத்தை எடுத்துக்கொண்டு ஒருமுறை அருந்தி விட்டு மீதியை டேபிளில் வைத்து

ம்ம்... சரி சொல்லுங்க அன்பரசு இவர்தான் என் பையன் தமிழ் மாறன் மாடலிங் அண்ட் டைரக்க்ஷன் பன்றாரு.... பெரிய கம்பனி adds எல்லாம் இவர் தான் பண்ணி கொடுக்கராரு...


என்னோட பிசினஸ் எதனையோமுறை எடுத்து நடத்த சொல்லியும் கேக்காம தனக்கான அடையாளம் வேணும்னு தனியாவே கம்பெனி ரன் பண்ணிட்டு இருக்கான்.... அவங்க கம்பெனில 2000 கும் மேல வேலை பாக்குறாங்க அது மட்டும் இல்லாம லண்டன் ல பெரிய மாடல் என்றதும் அன்பரசு ஓ அப்படியா அசோக்.... வெரி குட் இந்த காலத்து பிள்ளைகள் எல்லாம் இப்படித்தான் இருக்காங்க அப்பாவோட பிசினஸ் எடுத்து நடத்தரது அவமானமா நினைக்கிறாங்க என்று சிரித்தார் அன்பரசு.....

மாறனுக்கோ... இவர்களின் உரையாடல் எரிச்சலை கொடுத்தது....

சரி அன்பரசு நீங்க உங்க பொண்ண வர சொல்லுங்க... ரெண்டு பேரும் தனியா பேசி கட்டும் என்றதும் மாதங்கி அன்பரசு க்கு கண்ணால் சைகையை காட்ட நிலமையை புரிந்து கொண்ட அன்பரசு முதல்ல சாப்பிடலாமே அப்புறம் பேசிக்கலாம் என்றதும் மாறன் இல்ல அங்கிள் இன்னொரு நாள் மீட் பண்ணிக்கிறேன் என்று எழ... அசோக் தடுத்து நிறுத்தினார்...

ஃபர்ஸ்ட் டைம் வீட்டுக்கு வந்துட்டு சாப்பிடாம போகக்கூடாது பா என்றார் அன்பரசு ஆமாம் மாப்பிள்ளை வந்து சாப்பிடுங்க என்று கட்டாய ப்படுத்தவே வேறு வழியில்லாமல் சாப்பிட அமர்ந்தான் மாறன்...

கோகிலாவிடம் சைகை காட்டி பரிமாறச் சொல்லிவிட்டு வித்யாவை அழைக்கச் சென்றார் மாதங்கி.

பாவி மக இன்னைக்கு கூட இப்படி ஃபுல் போதையில இருக்காலே... இத எப்படி தான் கரையேத்த போறேன்னோ என்று புலம்பிய படி வித்யா அறைக்கு ச் சென்றார் மாதங்கி.




வித்யா குளித்த உடன் சற்று போதை குறைந்தது...மாடர்ன் உடையை அணிந்து மேக்கப் அதிகம் போட்டுக் கொண்டு அதிலும் உதட்டிற்கு அதிக லிப்ஸ்டிக் போட்டுக் கொண்டு இருந்தால் வித்தியா.

இதை கண்டதும் மாதங்கி...
ஏய்.... என்னடி டிரஸ் இது மாப்பிள்ளை ஃபேமிலி ட்ரெடிஷனல் இப்படி வந்தா எப்படி உன்ன மாப்பிள்ளைக்கு பிடிக்கும்

இந்தா இந்த சேலையை கட்டிட்டு பூ வச்சுட்டு குங்குமம் வச்சுட்டு வா. இன்னைக்கு அவங்க போற வரை ஆச்சும் கொஞ்சம் அடக்கமா நடந்துக்க.. மானத்தை வாங்கி தொலைச்சுடாத.. இந்த வரன் அமைய உங்க அப்பா ரொம்ப கஷ்ட ப்பட்டு இருக்கார்...
என்று கூறிவிட்டு கீழே சென்று விட்டார் மாதங்கி.....


கோகிலா உணவை பரிமாற ஒற்றை வாய் சாப்பிட்ட மாறனுக்கு கண்கள் கலங்கியது.

மா என்று தன்னுள்ளே அழைத்தவன் கண்கள் கலங்க
ஆன்ட்டி இத யார் சமைத்தது நீங்களா எங்க அம்மா கை பக்குவம் அப்படியே இருக்கு.... 12 வருஷத்துக்கு அப்புறம் சாப்பிதரேன்.... இப்படி ஒரு சாப்பாட்ட... என்று கண்கள் கலங்க சொல்லிக் கொண்டு அடுத்த வாய் எடுத்து வைத்தான் மாறன்.... கோகிலா சாப்பிடுங்க தம்பி என்று இன்னும் சாப்பாட்டை மாறனுக்கு அள்ளி வைத்தாள்....

ஆனால் கோகிலாவோ தான் சமைக்க வில்லை நங்கை தான் சமைத்தால் என்பதை கூறவி
ல்லை ஏனென்றால் கோகிலாவிற்கு அந்தப் பாராட்டு தேவைப்பட்டது... சுயநலவாதி தான் ஆனால் கெட்டவள் இல்லை.....

தொடரும்...
அன்புடன்
Shahiabi.writter ✍🏻
 

Author: shahiabi தனிமையின் காதலி
Article Title: Chapter -4
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.