Chapter-4

thenaruvitamilnovels

The World of Words
Staff member
Dec 25, 2024
163
0
16
www.amazon.com
அத்தியாயம் 4: அவ்ளோ தான் சோலி முடிஞ்சுது

“என்னை கடத்திக் கொண்டு வந்து கட்டாயப்படுத்தி கல்யாணம் பண்ணி வைக்க பார்க்கிறாங்க. ஆனா இன்னும் அந்த மாப்பிள்ளை யாருன்னே தெரியவில்லையே!

இத்தனை நாளா எங்க அம்மா எனக்கு சீக்கிரம் கல்யாணம் ஆகணும்னு மாப்பிள்ளை பார்த்துட்டு கோவில் கோவிலா ஏறி இறங்கி அலைஞ்சிட்டு இருந்தாங்க.

இப்ப என் விருப்பமே இல்லாம எனக்கு யாரோ ஒரு ஸ்ட்ரேஞ்சர் கூட மேரேஜ் நடக்க போகுது. ஆனா அதை பார்க்கக் கூட என் ஃபேமிலியில இருந்து யாரும் இல்லையே! இந்நேரம் என்ன காணோம்னு அவங்க பாவம் பயந்து போய் தேடிட்டு இருப்பாங்க. இந்த கூட்டத்துக்கு கிட்ட இருந்து நான் எப்படி தப்புச்சு மறுபடியும் என் வீட்டுக்கு போக போறேனோ தெரியல!“ என்று நினைத்த தேன் மொழியின் கண்கள் மீண்டும் கண்ணீரை சிந்தியது.

அப்போது அவளது வீல் சேரை தள்ளிக் கொண்டு வெளியே இருந்த பல வண்ணமயமான மலர்கள் பூத்துக் குலுங்கிய கார்டன் ஏரியாவிற்கு சென்றாள் லிண்டா. மற்றவர்களும் அவர்களை பின் தொடர்ந்து சென்றார்கள். பார்ப்பதற்கு சொர்க்கலோகத்தில் குறிப்பிடப்படும் நந்தவனம் போல இருந்த அந்த அழகிய தோட்ட பகுதியில் ஒரு பெரிய மலர் வளையம் இருக்க, அதற்குள் அனைவரும் நுழைந்தார்கள்.

அங்கே நேராக சிவப்பு கம்பளம் விரிக்கப்பட்டு இருந்தது. அதைத் தொடர்ந்து உள்ளே சென்றால், ஒரு பிரம்மாண்டமான தங்க கோவில் அந்த இரவு நேரத்திலும் அதில் இருந்த பலவண்ண லைட்டுகளின் உதவியோடு அழகாக ஜொலித்துக் கொண்டு இருந்தது.

அவர்கள் அனைவரும் இருபுறமும் இருந்த பெரிய கனமான தங்க கதவை தாண்டி உள்ளே செல்ல, சாமி படங்களில் காட்டப்படும் சொர்க்கலோகத்தில் என்னென்ன இருக்கும் என்று மனிதர்கள் தாங்களாகவே கற்பனை செய்து செட்டிங் போட்டிருப்பார்களோ, அவை அனைத்தும் அங்கே உண்மையாகவே இருந்தது.

அந்த இடம் முழுவதும் உண்மையான பிரஷ் ஆன மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்ததால், அந்த தங்க நிறத்தின் தகதகத்திபிலும், ஆங்காங்கே பதிக்கப்பட்டு இருந்த பளிங்கு கற்களில் அது எதிரொளித்து ஏற்படுத்திய பிரகாசமான ஒளியின் பிம்பங்களும், அலங்காரத்திற்காக வைக்கப்பட்டிருந்த தெய்வீக பொருட்களும், அந்த இடத்தில் வீசிய நறுமணமும் தேன் மொழியை தான் ஏதோ செத்துப் போய் சொர்க்கத்திற்கு வந்துவிட்டோம் போல! என்று யோசிக்க வைத்தது.

அந்த ஆச்சரியத்தில் அதுவரை அவள் கண்களில் கசிந்தோடிய கண்ணீர் துளிகள் எல்லாம் காணாமல் போயிருந்தது.

அங்கே கருவறையில் ஒரு பெரிய வெங்கடாஜலபதி சிலை இருந்தது. அதன் அருகில் ஆங்காங்கே கோவில்களில் இருப்பதைப் போலவே மற்ற சில தெய்வங்களின் சிலைகளும் அதற்கான கருவறையில் வைக்கப்பட்டு இருந்தது.

அதை எல்லாம் ஆச்சரியம் நிறைந்த கண்களுடன் தேன்மொழி பார்த்துக் கொண்டு இருக்க, அவள் திரும்பும் திசை எல்லாம் ஜாலி ஜொலித்த தங்கம் அவள் கண்களை கூசியது.

அங்கே நடுவில் நான்கு புறமும் படிகள் கொண்ட ஒரு பெரிய மேடை ஒன்று அமைக்கப்பட்டு இருந்தது. அதில் யாகசாலையும் அமைந்திருக்க, ஏற்கனவே அங்கே ஒரு ஐயர் அமர்ந்து திருமண சடங்குகளை செய்வதற்கான சில மந்திரங்களை சொல்லி அக்னியில் பூஜை பொருட்களை போட்டு பூஜை செய்து கொண்டு இருந்தார்.

அதை பார்த்தவுடன் மீண்டும் தேன்மொழிக்கு அந்த கட்டாய திருமணத்தைப் பற்றிய ஞாபகம் வர, அவள் முகம் வாடியது. தன் அருகில் இருந்த லிண்டாவிடம் “மாலை இல்லாம கல்யாணம் எப்படி நடக்கும்? பிரிட்டோ கிட்ட எல்லாத்தையும் ரெடியா எடுத்து வைக்க சொல்லி இருக்கேன்.

நீ போய் அத வாங்கிட்டு கையோட அண்ணாவையும் அவன இங்க கூட்டிட்டு வர சொல்லு. நம்ம பாடிகார்ட்ஸ் எல்லாரையும் ஒன்ஸ் அலர்ட் பண்ணிடு. இந்த மேரேஜ் நல்லபடியா நடந்து முடியிற வரைக்கும் வெளியே இருந்து யாரும் நம்ம பேலஸ்குள்ள வரக் கூடாது.“ என்று கட்டளையிட்ட ஆகாஷ் அவளுடன் கிளாராவையும் அனுப்பி வைத்தான்.

அப்போது கையில் தனது குழந்தையை தூக்கிக் கொண்டு அவசர அவசரமாக தன் கணவனுடன் அங்கே வந்த ஜனனி “அண்ணாவுக்கு மேரேஜ் முடிஞ்சிருச்சா? நான் வர்றத்துக்குள்ளையே எல்லாம் பண்ணி முடிச்சிட்டீங்களா?” என்று கோபம் கலந்த வருத்தத்துடன் மூச்சு வாங்க கேட்டாள்.

தானும் கையில் ஒரு குழந்தையுடன் “ஹே ஜானு மெதுவா போ பேபி..!! உனக்கு புடவை கட்டிக்கிட்டு நடக்கவே தெரியாது. அதை மறந்துட்டு நீ வேகமா போயிட்டு இருக்க.. பார்த்துப் போ..” என்றபடி அவளது கணவன் சந்தோஷ் அவளை பின் தொடர்ந்து வந்தான்.

“இப்ப தான் கல்யாண பொண்ணையே கூட்டிட்டு வந்திருக்கோம். நீ ஏன் அதுக்குள்ள கோச்சுக்கிற? இன்னைக்கு உங்க அண்ணனுக்கு மேரேஜ்ன்னு உனக்கு தெரியும்ல! அப்புறம் நீ ஏன் லேட்டா வர?” என்ற அவள் அம்மா ஜானகி அவள் கையில் இருந்த ஏழு மாத குழந்தையான வர்ணிகாவை வாங்கிக் கொண்டாள்.

ஜனனியின் கணவனான சந்தோசின் கையில் இருந்த மற்றொரு ட்வின்ஸ் குழந்தையான அங்கிதா உடனே அழைத் தொடங்கி விட, அந்தக் குழந்தையை வாங்கி தன் தோள்களில் போட்டு தட்டிக் கொடுத்து சமாதானப்படுத்திய ஜனனி “நான் தான் நேத்தே சொன்னேன்ல்ல மாம்.. என் பேபிஸ் ரெண்டு பேருக்குமே வேசினேஷன் போட்டதுல இருந்து ஃபீவர் குறையவே இல்ல.

ஒருத்தி அழுதா அந்த சத்தத்தை கேட்டு இன்னொருத்தியும் அழகுறா. இவங்க ரெண்டு பேரையும் சமாளிக்கிறதே எனக்கு பெரிய டாஸ்கா இருக்கு. இன்னைக்கு அண்ணாவுக்கு மேரேஜ் என்றதுனால சந்தோஷ் என் கூடவே இருக்கான். இல்லைனா இவங்கள என்னால சமாளிக்கவே முடியாம போயிருக்கும்.” என்றாள்.

அவள் கையில் இருந்த குழந்தையை வாங்கி சமாதானப்படுத்த தொடங்கிய பாட்டி “உங்க தாத்தாவுக்கு தான் உடம்பு சரியில்ல. உங்க அப்பா வேலை வேலைன்னு எப்பயும் பிஸியா சுத்திட்டு இருக்கான். இன்னைக்கு பையனோட கல்யாணம்னு தெரிஞ்சும் அதுக்கு கூட வரல.

ஆனா நானும் உங்க அம்மாவும் இங்கயே தானே இருக்கோம்.. எங்களுக்கு உங்க எல்லாரையும் பத்திரமா பார்த்துக்கிறது தான் வேலையே..

உன்னால குழந்தையை பார்த்துக்க முடியலைன்னா கொண்டு வந்து எங்க கிட்ட குடுன்னு நாங்க கேட்டாலும், நீ தான் குழந்தைகளை விட்டுட்டு என்னால இருக்க முடியாதுன்னு உன் கிட்டையே வச்சுக்கிற. இப்ப குழந்தையை வளர்க்க உனக்கு யாருமே ஹெல்ப் பண்ணல என்ற மாதிரி ஏன் பேசுற?” என்று கேட்டார்.

அதற்கு என்ன பதில் சொல்லி சமாளிப்பது என்று தெரியாமல் “அண்ணி வந்துட்டாங்கள்ல.. நான் போய் முதல்ல அவங்கள பாத்துட்டு வரேன். அவங்கள ரொம்ப நாள் கழிச்சு நேர்ல பாக்க போறோம்னு நினைச்சு 2 டேசா நான் சரியா தூங்க கூட இல்லை.

அவங்களுக்காகவும் அண்ணனுக்காகவும் தான் காய்ச்சலோட இருக்கிற என் பேபிஸ் ரெண்டு பேரையும் தூக்கிட்டு இங்க வந்தேன். நான் போய் அவங்க கிட்ட பேசிட்டு வரேன் பாட்டி.” என்று சொல்லிவிட்டு தேன் மொழியை நோக்கி நடந்தாள்.

தேன்மொழியின் முகத்தை பார்த்தவுடன் அதுவரை சந்தோஷத்தில் பிரகாசமாக இருந்த ஜனனியின் முகம் சட்டென சோகமாக மாறியது. இவள் ஏன் வீல்சேரில் அமர்ந்து இருக்கிறாள் என்று அவளுக்கு தெரியவில்லை.

ஆனால் அதைப் பற்றி எல்லாம் அப்போது அவளால் யோசிக்க முடியவில்லை. தரையில் மண்டியிட்டு அமர்ந்து தேன்மொழியின் கைகளைப் பிடித்துக் கொண்டு “உங்கள மறுபடியும் பாப்பேன்னு நான் நினைச்சு கூட பாக்கலை அண்ணி.

கண்டிப்பா உங்கள பாக்கும்போது அண்ணனும் ரொம்ப சந்தோஷப்படுவாரு. நீங்க எப்பயும் இருக்கிறதை விட இன்னிக்கு ரொம்ப அழகா இருக்கீங்க.” என்று சொல்லிவிட்டு அவளை அணைத்துக் கொண்டாள்.

ஏதோ பேயை பார்ப்பதைப் போல ஜனனியை பார்த்துக் கொண்டிருந்த தேன்மொழி “இவ யாருன்னே எனக்கு தெரியல. இவ அண்ணன் யாருன்னும் எனக்கு தெரியாது. என்னமோ இவளுக்கு என்னை நல்லா தெரிஞ்ச மாதிரி வந்து ‌ சாதாரணமா என் கிட்ட பேசிட்டு இருக்கா?

இவங்க பார்க்க எல்லாரும் பணக்காரங்களா டீசன்ட்டா நல்லா படிச்சவங்க மாதிரி தான் இருக்காங்க. ஆனா இவங்க பண்றத எல்லாம் பாத்தா சந்தேகமா இருக்கே..

இவங்க எல்லாரும் பைத்தியக்காரங்களா? இல்ல இவங்க எல்லாரும் சேர்ந்துக்கிட்டு என்னை பைத்தியமாக்க ட்ரை பண்றாங்களா?” என்று நினைத்தாள்.

அந்த விசாலமான இடம் முழுவதிலும் சென்ட்ரலைஸ்ட் ஏசி ஓடியும் அவளுக்கு பயத்தில் வேர்த்து கொட்டியது. அப்போது ஆகாஷ் “அண்ணா வந்துட்டாரு. நீதான் அண்ணிய கூட்டிட்டு போய் மணமேடையில உட்கார வச்சு அண்ணா செய்ய வேண்டிய எல்லாத்தையும் செய்யணும் ஜனனி.” என்றான்.

அதனால் உடனே தன் கண்ணீரை துடைத்துவிட்டு ஜனனி எழுந்து நின்று திரும்பி பார்க்க, முன்னே கருப்பு நிற யூனிபார்ம் அறிந்திருந்த கிளாரா ஒரு அழகிய தட்டில் இரு மாலைகளை வைத்து கொண்டு வர, அவர்களை பின் தொடர்ந்து பிரிட்டோ ஒரு நடுத்தர வயது ஆண் மகனை திருமண கோலத்தில் அலங்கரித்து வீல் சாரில் தள்ளிக்கொண்டு அங்கே வந்தான்.

வீல் சேரில் அமர்ந்திருந்த தன் அண்ணனை கண் கலங்க பார்த்த ஆகாஷ் “அவங்க ரெண்டு பேரும் எங்க? மார்னிங்ல இருந்து நான் அவங்கள பார்க்கவே இல்லை.” என்று கேட்டான்.

உடனே தன் பின்னே திரும்பிப் பார்த்த கிளாரா “அவங்க ரெண்டு பேரும் சீஃப் கூட தான் இருந்தாங்க பாஸ். எங்க பின்னாடி தான் வந்துட்டு இருந்தாங்க.” என்றாள்.

திருமண கோலத்தில் தன் கண்களை மூடி மயக்க நிலையில் இருப்பவனை போல இருந்த அந்த 40 வயது மதிக்கத்தக்க அழகிய ஆண் மகனை வீல் சேரில் அமர வைத்து அழைத்து வந்திருந்த பிரிட்டோ “நான் போய் அவங்க ரெண்டு பேரும் என்ன பண்றாங்கன்னு பார்த்து கூட்டிட்டு வரட்டுமா பாஸ்?” என்று கேட்டபடி அவர்கள் வந்த பாதையை நோக்கி திரும்பினான்.

அப்போது ஆகாஷ் “வேண்டாம் அவங்களே வந்துட்டாங்க.” என்று சொல்ல, அங்கே அழகாக தயாராகி கையில் ஆளுக்கு ஒரு பூங்கொத்தை வைத்துக் கொண்டு 12 வயது மதிக்கத்தக்க சிறுவனும், எட்டு வயது மதிக்கத்தக்க சிறுமியும் தயக்கத்துடன் அங்கே வந்தார்கள்.

அவர்கள் முகத்தில் தெரிந்த கலவையான உணர்வுகளை கண்ட ஆகாஷுற்க்கு கஷ்டமாக இருந்தது. அதனால் அவர்கள் அருகில் சென்று இருவரின் கைகளையும் பிடித்துக் கொண்டு “இங்க பாருங்க உங்க மம்மி வந்துட்டாங்க. டாடியும் சீக்கிரம் சரியாயிடுவாரு. இனிமே நம்ம எல்லாரும் ஹாப்பியா இருக்கலாம்.” என்று சொல்லி தேன் மொழியின் அருகே அழைத்துச் சென்றான்.

பல நாட்களுக்கு பிறகு தன் தாயை கண்ட சந்தோஷத்தில் கண் கலங்கிய அந்த சிறுமி ஆகாஷின் கையை விட்டுவிட்டு ஓடிச் சென்று தேன் மொழியை அணைத்துக் கொண்டு “நான் உங்கள எவ்வளவு மிஸ் பண்ணேன் தெரியுமா மம்மீ? நீங்களும் என்னை மிஸ் பண்ணீங்களா?

நீங்க எனக்காக தான் திரும்பி வந்து இருக்கீங்கன்னு எனக்கு தெரியும். டாடி உங்கள பாக்குற வரைக்கும் எந்திரிக்கவே மாட்டேன்னு ரொம்ப நாளா தூங்கிட்டே இருக்காரு.

நீங்க தான் அவரை எழுப்பனும். எனக்கு உங்க ரெண்டு பேர் கூடையும் சேர்ந்து விளையாடனும்னு ஆசையா இருக்கு.” என்று சொல்லிவிட்டு அழுதாள்.

அவள் டீச்சர் என்பதால் இயற்கையாகவே குழந்தைகளுடன் நன்றாக பழகும் குணம் தேன்மொழிக்கு இருந்தது.

ஆனால் ஏற்கனவே அவளுக்கு திருமணம் என்று சொல்லி ஏதோ வயதான ஒருவனை வீழ்ச்சாரில் வைத்து தள்ளிக் கொண்டு வந்து இங்கே அமர வைத்திருக்கிறார்கள்.

இதில் ஒரு சிறுமி வேறு வந்து தன்னை அம்மா என்று அழைப்பதால், “எனக்கு 25 வயசாகவே இன்னும் ரெண்டு மாசம் இருக்கு.

இன்னும் ஒரு தடவை கூட கல்யாணம் ஆகல. அதுக்குள்ள இவ்வளவு பெரிய பொண்ணு என்ன மம்மீன்னு கூப்பிடுதே!” என்று நினைத்து தனது நிலையை நினைக்கும் போது அவளுக்கே பாவமாக இருந்ததால் அவள் கண்களும் கலங்கியது.

இருப்பினும் தேன்மொழி “நான் உன் அம்மா இல்ல பாப்பா. நீ வேற யாரோன்னு நினைச்சு என் கிட்ட பேசிட்டு இருக்க.” என்று சொல்ல அவள் தன் வாயை திறக்க, அவள் பேசுவதற்கு முன்பாகவே சரியாக அதை கவனித்துவிட்ட ஆகாஷ் “அண்ணி.. நான் சொன்னது உங்களுக்கு ஞாபகம் இருக்கும்னு நினைக்கிறேன்.

குழந்தைங்க கிட்ட பார்த்து பக்குவமா நடந்துக்கோங்க. முக்கியமா ஆருத்ரா கிட்ட. அவளுக்கு உங்களை ரொம்ப பிடிக்கும்.” என்றான்.

அதனால் அவனையும் ஆருத்ராவையும் மாறி மாறி பார்த்த தேன் மொழி எதுவும் புரியாமல் திருதிருவென விழித்தாள்.

தொடரும்..

SNK Booksஇன் புதிய நாவல்களை இலவசமாக எங்களது வெப்சைட்டில் படிக்க இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

 

Author: thenaruvitamilnovels
Article Title: Chapter-4
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.