“என்ன பாட்டி இந்த நேரத்துல… இருட்டுருச்சு வேற… நாங்க வேணா உங்கள ஜீப்ல கூட்டிட்டு போவா வீட்டுக்கு?” என்று சரவணன் கேட்க, “அதெல்லாம் ஒன்னும் வேணாம் பா… சும்மா அப்படியே நடந்து போயிடுவேன், என்ன ஒரு இருபது முப்பது நிமிஷம் ஆகும் அவ்வளவு தானே… இந்த இடம் எல்லாம் எனக்கு உங்களுக்கு முன்னாடியே ரொம்ப பழக்கப்பட்டது தான்…. அதுவும் கையில டார்ச் கூட வெச்சிருக்கேனே நானு…. அப்படியே நடந்து போயிக்குவேன்” என்று பாட்டி கூறினார்.
“சரி வாங்க… நாங்களும் வீட்டுக்கு தான் போறோம் எல்லாரும் ஒன்னாவே போலாம் வாங்க” என்று விக்ரம் கூற, சரவணன் பாட்டி விக்ரம் மூவரும் ஒன்றாக நடத்து சென்றனர்.
“நான் உங்களை ஒன்னு கேட்டா தப்பா நினைச்சுக்க மாட்டீங்களே?” என்று விக்ரம் தயக்கத்துடன் கேட்க, என்னப்பா கேளு?? என்று பாட்டி கூறினார். “நீங்க சொல்றத எங்களால நம்பாம இருக்க முடியல முழுசா நம்பவும் முடியல…. நீங்க இப்படித் தான் அபர்ணா விஷயத்துல சொன்னீங்க இப்ப அவ எங்க கூட இல்ல…. எங்களுக்கு எப்படி இத நாங்க கடந்து வரப் போறோம்னு எங்களுக்கு தெரியல…. ஏன் இப்படி எல்லாம் நடக்குது” என்று குறல் உடைய ஆதங்கத்துடன் விக்ரம் கேட்டான்.
“ஏன் நடக்குதுன்னு கேட்டா அது என் கையில இல்ல நம்மள படைச்சவனுக்கு தான் தெரியும்…. அவன் சொல்றத தான் நான் உங்களுக்கு சொல்றேன்…. அவ உங்களை முழுசா விட்டு போயிட மாட்டான்றதையும் நான் சொன்னேன் அதே மாதிரி தானே இப்ப நடந்துது…. அவளுடைய உறுப்புகளை வேற யாருக்கோ கொடுத்து அது வழியாக அபர்ணா உயிர் வாழ்ந்துட்டு தானே இருக்கா” என்று பாட்டி கேட்கவும், “ஆமா தான் பாட்டி…. ஆனா, அவ கூட இருக்குறதும், இப்படி வாழ்றதும் ஒன்னா??” என்று விக்ரம் கேட்டான்.
“உங்க அப்பா அம்மா வந்து கேட்டதுக்கு இதே தான் சொன்னேன்…. அவ போனாலும் ஏதோ ஒரு ரூபத்துல வாழ்ந்துட்டு தான் இருப்பா… போனவ அப்படியே கண்டிப்பா போயிட மாட்டா… அவ இங்க தான் வந்து வாழ்வா அதுல மாற்றமே இல்ல…. அதுலயும் உங்க வீட்டுக்கும் ஒரு பொண்ண காட்டிட்டு தான் போவான்னு சொன்னேன்…. அதுவும் நடக்கும் கூடிய சீக்கிரமே” என்று உறுதி அளித்தார் பாட்டி.
“வேற யாரு நம்ம கவிதா தானே பாட்டி?” என்று சரவணன் கேலியாக கேட்க, “கவிதா எத்தனை வாட்டியோ வந்து கேட்டுட்டா…. அப்பவும் இப்பவும் எப்பவும் ஒரே பதில் தான் அவ உங்க வீட்டுக்கு வர போற பொண்ணு கிடையாது…. அதுவும் இல்லாம அவ இந்த ஊருலயே இருக்க மாட்டா” என்று பாட்டி கூறினார் உறுதியாக.
“என்ன பாட்டி இப்படி சொல்லிட்டீங்க…. கவிதாவோட அப்பாவும் நம்பிக்கையா இருக்காரு…. விக்ரமோட அப்பா அம்மாவுக்கும் சின்ன வயசுல இருந்து பார்க்குறதனால அவள புடிக்கும் தான்…. இவங்க ரெண்டு பேரும் சின்ன வயசுல இருந்து ஒன்னா வளர்தாங்க….” என்று சரவணன் பேச, “மச்சான் நான் உனக்கு பல வாட்டி சொல்லிட்டேன் அவளும் எனக்கு அபர்ணா மாதிரி தான்… என்னால அவளை என்னுடைய லைஃப் பார்ட்னரா பார்க்கவே முடியாது சும்மா இரு” என்று விக்ரம் கறாராக கூற, பாட்டி புன்னகைத்தார்.
“ஆமா, அதென்ன விக்ரம் வீட்டுல யாரு எப்ப வந்து கேட்டாலும் பதில் சொல்லுறீங்க… வேற யாராவதுன்னா மட்டும் முடியாதுன்னு சொல்லிடுறீங்க… அவ்வளவு ஏன் நானே எங்க அம்மாவ ஒரு வாட்டி கூட்டிட்டு வந்தப்போ அப்புறம் பேசலாம்னு சொல்லிட்டீங்க… அது ஏன்???” என்று சரவணன் கேட்க, “அது எனக்கு தெரியாது பா…. எனக்கு எப்ப தோணுதோ அப்ப தான் பேசுவேன்… இல்லேன்னா இல்ல… அபர்ணா பொறந்த அப்புறம் தான் அவங்க அம்மா அப்பா எப்போ வந்தாலும் பதிலே சொல்லுவேன் அது ஏன்னு கேட்டா என்கிட்ட பதிலே இல்ல” என்று பாட்டி கூறினார்
“அது சரி…. இப்ப சொல்லுங்களேன்… என்னை பத்தி என்ன நினைக்குறீங்க” என்று சரவணன் கேட்க, “என்னோட வீடு அந்த பக்கம் பா…. நான் வரேன்” என்று கூறி பாட்டி புறப்பட்டார். “இந்த பாட்டி என்னடா என்னை இப்படி பங்கம் பண்ணிட்டு போறாங்க” என்று சரவணன் கேட்க, “மூஞ்சு டா மூஞ்சு” என்று விக்ரம் கூற, “நீ பேசுவ டா… ஏன் பேச மாட்ட” என்று சரவணன் சலித்துக் கொண்டான். இப்படி பேசிக் கொண்டே அவர் அவர்களின் வீட்டிற்கு சென்றனர்.
“இங்க என்ன பண்ணிட்டு இருக்க அதுவும் இந்த நேரத்துல உனக்கு என்ன வேணும்” என்று பாட்டி கவிதாவை பார்த்து கேட்க, “உங்க கிட்ட பேசலாம்னு தான் வந்தேன்” என்று கூறினாள் கவிதா.
“என்ன வேணும்?” என்று பாட்டி கவிதாவை பார்த்து பட்டும் படாமலும் கேட்க, “நீங்க ஒரு வாட்டி அபர்ணா பத்தி சொல்லி இருந்தீங்கல…. அதே மாதிரி அவ ரொம்ப நாள் உங்க கூட இருக்க மாட்டா, ஆனா எப்படியும் இங்க தான் வருவா… அவ வேற ஒரு ரூபத்துல வாழ்வான்னு சொல்லி இருந்தீங்க…. அதுவும் இல்லாம எப்படியும் உங்க வீட்டுக்கு ஒரு பொண்ண காட்டிட்டு தான் போவான்னு சொன்னீங்கல… அபர்ணா இங்க இருந்து போறதுக்கு முன்னாடி என்கிட்ட தான் பேசிட்டு போனா அவ…. அப்போ என்னை தானே சொல்லிருக்கா அவ…. அப்ப நீங்க ஏன் நான் விக்ரம் வீட்டுக்கு வாழ போக மாட்டேன்னு சொன்னீங்க” என்று கவிதா கேட்டாள்.
“நீ என்கிட்ட எத்தனை தடவை வந்து கேட்டாலும் ஒன்னே ஒன்னு தான் நான் சொல்லுவேன்…. அந்த வீட்டுக்கு போக போற பொண்ணு நீ கிடையாது… நீ ஆசைய வளர்த்துக்காதே அதுக்காக தான் நான் உனக்கு பல வாட்டி சொல்லிட்டு இருக்கேன்… இன்னும் சொல்ல போனா நீ இந்த கிராமத்துலயே இருக்க மாட்ட வேற ஊருக்கு தான் போவ… ரொம்ப யோசிக்காத, வீட்டுக்கு போ ரொம்ப இருட்ட ஆரம்பிச்சிடுச்சு” என்று பாட்டி கூறி வீட்டிற்குள் சென்று விட்டார்.
“ப்ச்…. இந்த பாட்டி ஏன் இப்படி பண்றாங்க… இந்த பாட்டி சொல்றத தான் வேற இங்க இருக்கிற எல்லாரும் நம்பவும் செய்றாங்க…. இவங்க என்னமோ எனக்கு பச்சை கொடி காட்ட மாட்டேன்றாங்க…. இவங்க சரின்னு சொன்னாலாச்சும் கூட எப்படியாவது விக்ரம் கிட்ட பேசி கன்வின்ஸ் பண்ணலாம்னு பார்த்தா… நான் இங்கேயே இருக்க போறதில்லன்னு சொல்றாங்க… என்னடா இது” என்று மனதிற்குள் புலம்பி கொண்டு வீட்டிற்கு சென்றாள் கவிதா.
“சனா!!! நான் டாக்டர் கிட்ட பேசிட்டேன் டா…. இன்னும் ரெண்டு நாள்ல டிஸ்சார்ஜ் பண்றேன்னு சொல்லி இருக்காங்க செக்கப் மட்டும் ரெண்டு நாளைக்கு ஒரு வாட்டி வர சொல்லி இருக்காங்க….. அதுக்கப்புறம் உனக்கு எப்படி ப்ரோக்ரஸ் இருக்குன்னு பார்த்துட்டு அதுக்கு ஏத்த மாதிரி பத்து நாளுக்கு ஒரு வாட்டி மாத்திக்கலாம்னு சொல்லி இருக்காங்க டா” என்று சந்திரசேகர் கூற, “ஹப்பாடா எப்ப தான் வீட்டுக்கு போவோம்னு இருக்கு… எப்படியோ ரெண்டு நாள்ல வீட்டுக்கு போயிடுவோம்” என்று சனந்தா கூறினாள்.
“சரி…. என்னங்க… இனிமேலாவது இவள அந்த வேலை எல்லாம் பண்ண வேணாம்… ஒழுங்கா வேலைக்கு போக சொல்லுங்க இல்லேன்னா உங்க கூட கூட்டிட்டு போங்க” என்று லக்ஷ்மி முறையிட்டார்.
“இப்ப நாங்க பண்றதுல என்னம்மா தப்பு இருக்கு…. இது ஒன்னும் நாங்க புதுசா எல்லாம் பண்ணலையே…. எங்க காலேஜ் சீனியர்ஸ் பண்ணிட்டு இருந்தாங்க அந்த டீம்ல, நானும் உங்க கிட்ட சொல்லிட்டு தானே சேர்ந்து இருக்கேன்…. நாங்க என்ன தேவையில்லாததோ இல்ல தப்பான விஷயமா பண்றோம் சொல்லுங்க…. ஒரு சில விஷயங்கள் ஒரு சில இடத்தில கவர்மெண்டுக்கு போய் சேர முடியாத தகவலா இருக்கட்டும் இல்ல சேர்ந்தாலும் எந்த ஆக்ஷனும் எடுக்க முடியாத இடத்தில எல்லாம் அந்த ஃபுட் இன்ஸ்பெக்ஷனுக்கு போறோம்…. அங்க இருந்து எங்களுக்கு இன்ஃபர்மேஷன் வந்தா நாங்க போய் அதை செக் பண்ணிட்டு முடிஞ்ச அளவுக்கு சரி பண்றோம்… என்ன கவர்மெண்ட்னா அவங்களுக்குள்ளயே வெச்சிருப்பாங்க நாங்க எல்லாத்தையும் மீடியால சொல்லிடுவோம் அவ்வளவு தான் வித்தியாசம்… அதுவும் எங்க சீனியர்ஸ் தான் பேசுவாங்க… எங்க டீம்ல இருக்குற பொண்ணுங்க யாரும் வீடியோல பேச மாட்டோம்… அதுக்கு அப்புறம் கவர்ன்மெண்ட் தான் டேக் ஓவர் பண்ணுவாங்க…. அதுக்கு நீங்க ஏன் பயப்படுறீங்க” என்று சனந்தா அவள் பக்கம் உள்ள நியாயத்தை கூறினாள்.
“உனக்கு என்னன்னு சொல்லி புரிய வைக்கிறதுன்னு தெரியல சனா… இத நீங்க ஒரு சேவையா செய்றீங்க அது உனக்கும் உங்க டீம்ல உள்ள ஆளுங்க வரைக்கும் ஓகே…. ஆனா, எங்க நிலைமையை யோசிச்சு பாரு… உன் தம்பி படிச்சிட்டு இருக்கான் அவன் வந்து உங்க அப்பா கூட பிசினஸ்ல இறங்கிடுவான்… நீ என்ன பண்ண போற” என்று லக்ஷ்மி கூறவும் சந்திரசேகர் குறுக்கிட்டு, “இது எல்லாத்தையும் நம்ம வீட்டுக்கு போய் பொறுமையா பேசிக்கலாம் இங்க எதும் பேச வேண்டாம்” என்று கூற இருவரும் அமைதி ஆயினர்.
“நீ வீட்டுக்கு போ லக்ஷ்மி …. இன்னிக்கு நைட் நான் சனா கூட இருக்கேன்” என்று சந்திரசேகர் கூற, லக்ஷ்மி அமைதியாக புறப்பட்டார்.
“என்னப்பா அம்மா இப்படி பேசுறாங்க….. நான் அங்க படிக்கும் போதே சொன்னது தானே…. நான் ஒரு இடத்துல போய் வேலை செய்யுற வரைக்கும் எனக்கு இது பிடிச்சிருக்கு என்னோட சீனியர்ஸ் எல்லாருமே ஒரு டீம் மாதிரி ஒன்னு ஃபார்ம் பண்ணி அதுல இருந்து அவங்களால முடிஞ்ச சர்வீஸ பண்ணிட்டு இருக்காங்க….. அந்த மாதிரி பண்ணி நிறைய ஸ்கூல்ஸ்ல ஹோட்டல்ஸ்ல அவங்க சக்சஸ் ஆயிருக்காங்க….. நிறைய ஸ்கூல்ஸுக்கு எல்லாம் எங்க டீம் போயி நாங்க பண்ண ஒரு சின்ன சின்ன விஷயத்தினால நிறைய சேஞ்சஸ் ஆகி அவங்க இப்ப நல்ல சாப்பாடு சாப்பிடுற நிலைமைக்கு வந்து இருக்காங்க…. எனக்கு அது புடிச்சு தானே நான் அதை பண்றேன் இப்ப என்னப்பா அம்மா இப்படி பேசுறாங்க” என்று சமந்தா சந்திரசேகரிடம் கவலையாக கூறினாள்.
“உனக்கு உன்னோட நியாயம் டா உங்க அம்மாக்கு அவளோட நியாயம்… அவளுக்கு, ஒன்னு நீ வேலைக்கு போகணும் இல்ல ரீசர்ச் சொன்னல அதையாவது பண்ணனும்…. இந்த ரெண்டுத்தையும் முடிச்சுட்டு உனக்கு கல்யாணம் பண்ணி வெக்கணும் இது தான் அம்மா யோசிப்பா…. எனக்குமே இன்னும் கொஞ்ச நாள் போச்சுன்னா அந்த ஆசை எனக்கும் வரும் தான் டா.. அந்த ஆசை வர்றதுல தப்பில்லையே எங்களுக்கு” என்று சந்திரசேகர் கேட்க, சனந்தா அமைதி ஆகிவிட்டாள்.
“உன் கூட படிச்ச எல்லாரும் இப்போ ஒரு ஹாஸ்பிடலையோ ஹோட்டலயோ டயட்டீஷியனா இல்ல நியூட்ரிஷியனா இருக்காங்க… ஒரு சிலருக்கு கல்யாணம் கூட ஆகிரிச்சு… அப்ப அதெல்லாம் பார்க்கும் போது உங்க அம்மாக்கு தோணும் தானே இப்படி ஒரு வேலைக்கு போகணும் அப்படின்னு…. அப்படி இல்லன்னா அட்லீஸ்ட் படிக்கவாவது போகணும் அதுவும் இல்ல இதுவும் இல்லன்னா எப்படி?” என்று சந்திரசேகர் கேட்டார்.
“நான் ரெக்கவர் ஆனதும், நானும் கௌதம் சேர்ந்து தான் ரீசர்ச் ஆரம்பிச்சோம்ல நான் அந்த வேலையாவது பார்க்கிறேன் பா” என்று சனந்தா கூற, “ஹய்யோ!! இவ கிட்ட எப்படி சொல்ல போறேன்னு தெரியலையே… இன்னும் ரெண்டு மாசத்துல அந்த கிராமத்துக்கு வேற இவள அனுப்பனும்…. என்ன நடக்க போகுதுன்னு தெரியலையே” என்று சந்திரசேகர் மனதிற்குள் போராட்டம் நடத்திக் கொண்டிருக்க, “என்னப்பா இப்ப தானே சொன்னேன் ரீசர்ச் பண்ணி முடிச்சிடுறேன்னு… நீங்க ஒன்னுமே சொல்லலையே” என்று சனந்தா கேட்க, “ம்ம்… சரிமா” சந்திரசேகர் தலையை அசைத்தார்.
கருத்துக்கள் எதுவாயினும் வரவேற்கப்படும்
நன்றிகள் பல

Author: Bhavani Varun
Article Title: Chapter 4
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.