CHAPTER-39

Oviya Blessy

Member
Jan 4, 2025
92
1
8
இங்கே மெதுவாய் உள்ளே நுழைந்த அமீரா, ப‌த‌ற்ற‌மாய் பார்வையை நிமிர்த்த‌, அந்த‌ ஜிம் அறையே காலியாக‌ இருந்த‌து. அதில் அவ‌ள் புரியாது சுற்றி பார்க்க‌, அப்ப‌டி ஒருவ‌ன் இருப்ப‌த‌ற்கான‌ த‌டைய‌மே இல்லாது இருந்த‌து. அதில்தான் ச‌ற்று நிம்ம‌தியாய் மூச்சுவிட்ட‌வ‌ள் வேக‌மாய் திரும்பி செல்ல‌ போக‌, ச‌ட்டென்று அவ‌ள் முன் இருந்த‌து அவ‌னின் அக‌ண்ட‌ மார்பு.

அதில் பட்டும் படாமல் மோதி வில‌கிய‌வ‌ள் அக‌ல‌ விழி விரிக்க‌, வெறும் க‌ருப்பு உள்ப‌னியனில் அட‌ங்காம‌ல் தெரிந்த‌ அந்த‌ வெண்ணிற‌ மார்பில் பூத்திருந்த‌ விய‌ர்வை துளிக‌ள் உடைந்து‌ வ‌ழிய‌வும் ப‌ட்டென்று த‌ன் ஒரு க‌ர‌த்தால் க‌ண்க‌ளை மூடி திரும்பிக்கொண்டாள் அமீரா.

அதில் அவ‌ன் மெல்ல‌ அடியெடுத்து வைத்து அவ‌ளை நெருங்க‌, அவ‌ள் முதுகை மொத்த‌மாய் உர‌சிய‌து அவ‌ன் தேகம். அதில் ச‌ட்டென்று இவ‌ளின் இத‌ய‌ம் அத்த‌னை ப‌ல‌மாய் துடிக்க‌, ப‌த‌ற்ற‌த்தில் அப்ப‌டியே அசையாது நின்றாள். அப்போது மெதுவாய் அவ‌ள் ஈர‌ கூந்த‌லுள் அவ‌ன் முக‌ம் நுழைக்க‌, அவ‌ளோ விர‌ல்க‌ளுள் இருந்த‌ விழியை இறுக்கி மூடினாள்.

அப்ப‌டியே அவ‌ளின் காதோர‌ம் அவ‌னின் சுவாச‌ம் சூடாய் ப‌ட‌ர‌, இவ‌ளுக்கோ சுவாச‌ வேக‌ம் வெகுவாய் அதிக‌ரிக்க‌, அங்கே அவ‌னின் முள் மீசையை மெல்லிய‌தாய் உர‌சிய‌வ‌ன், "இப்பிடியே நின்னா என்ன‌ அர்த்த‌ம்?" என்று அன‌ல் மூச்சாய் கேட்டான்.

அதில் ப‌ட்டென்று அவ‌ள் இத‌ய‌ம் எகுறி துடிக்க‌, அவ‌னோ அவ‌ள் க‌ர‌த்தின் இடையே அவ‌ள் வெற்றிடை உர‌ச‌ க‌ர‌த்தை உள்ளே நுழைக்க‌, இவ‌ள் க‌ர‌மோ ப‌த‌ற்ற‌மாய் க‌ப்பின் பிடியை இறுக்கி பிடித்த‌து. அத‌னுள் அவ‌ன் விர‌ல்க‌ள் மெதுவாய் நுழைய‌, இவ‌ளோ திடுக்கிட்டு பிடியை விட்டுவிட‌, இப்போது அவ‌ன் விர‌ல்க‌ள் அதை இறுக்கி பிடித்திருந்த‌து. அதில் அவ‌ள் ப‌த‌ற்ற‌மாய் க‌ர‌த்தை வில‌க்கி கீழே பார்க்க‌, இவ‌னோ அவ‌ள் காத‌ருகே த‌ன் நாசியை உர‌சி, "காஃபி குடுக்க‌த்தான‌ வ‌ந்த‌?" என்று மெல்லமாய் கேட்டான். அதில் இவ‌ளோ இறுக்கி விழி மூட, அவன் வியர்வை வாசம் முழுதாய் அவள் நாசிக்குள் புகுந்தது. "அப்ப‌ குடுக்காம‌லே நின்னா என்ன‌ அர்த்த‌ம்?" என்ற‌ப‌டி மெதுவாய் அவ‌ள் மார்புர‌ச‌ அந்த‌ காஃபியை அவன் உய‌ர்த்த‌, அதில் ப‌த‌ற்ற‌மாய் பின்னால் சாய்ந்த‌வ‌ள் முழுதாய் அவ‌னுள் புதைந்தாள்.

அதில் அவன் உடலிலிருந்த வியர்வை மொத்தமும் அவள் சேலைக்கு இடம்பெயர, அப்படியே வாகாய் அவ‌ன் தாடை அவ‌ளின் தோள்ப‌ட்டையில் ப‌திய‌, அவ‌ள் ஈர‌ கூந்த‌ல் அவ‌ன் முக‌த்தை உர‌சிய‌து. அதில் அவ‌ன் முக‌த்தில் பூத்திருந்த‌ விய‌ர்வை துளியொன்று உடைந்து அவளின்‌ ஈர கூந்த‌லில் விழ, அதன் நுனியில் விழ துடித்த நீர் மொட்டில் கலந்து பொத்தென்று அந்த‌ காஃபிக்குள் விழுந்த‌து.

அதை அப்ப‌டியே அவ‌ன் குடிக்க‌, அவ‌ன் இத‌ழுள் புகுந்து உமிழ் நீருட‌ன் க‌ல‌ந்து அவ‌ன் தொண்டைக்குள் இற‌ங்கிய‌து. அதில் இவ‌ள் தொண்டைக்குள் ஈர‌ம் வ‌ற்றி போக‌, க‌டின‌ப்ப‌ட்டு எச்சிலை கூட்டி விழுங்கினாள். அந்த‌ க‌ழுத்த‌ருகே மேலும் வாகாய் புகுந்தவ‌ன், அவ‌ள் வாச‌னையை ஆழ்ந்து உள்ளிழுத்த‌ப‌டியே அடுத்த‌ வாயையும் சுவைக்க‌, இவ‌ளோ ப‌த‌ற்ற‌த்தில் மெல்லியதாய் முக‌த்தை திருப்பினாள்.

அதில் வ‌ளைந்த‌ அவ‌ள் க‌ழுத்தில் அவ‌னின் சூடான‌ இத‌ழ்க‌ள் அழுத்தி ப‌திய‌, அந்த‌ சூடு அவ‌ள் உட‌லெங்கும் ப‌ர‌விய‌து. அதில் அவ‌ள் மெல்லிய‌தாய் வில‌க‌ முய‌ல‌, அவ‌ள் வெற்றிடையை இறுக்கி பிடித்தது அவ‌னின் ம‌று க‌ர‌ம்.

அதில் "ஸ்ஸ்" என்று அவ‌ள் முக‌த்தை குறுக்க‌, "என்ன‌ விட்டு நீ ஒரு இஞ்ச் ந‌க‌ர‌ணுன்னாலும், அத நாந்தா முடிவு பண்ணனும்." என்ற‌ அவ‌னின் வார்த்தை மீண்டும் அவ‌ள் காதுக்குள் ஒலித்த‌து. அதில் உள்ள‌ங்கையை இறுக்கி மூடி அவ‌ள் அசையாது நிற்க‌, ப‌த‌ற்ற‌த்தில் அவ‌ளின் மார்பு ம‌ட்டும் மெல்லிய‌தாய் ஏறி இற‌ங்கிய‌து. அந்த‌ மார்பை உர‌சிய‌ப‌டி க‌ப்பை வைத்திருந்தவ‌ன், மீண்டும் அடுத்த‌ வாயை சுவைக்க‌, இவ‌ளுக்கோ முழுதாய் மூச்சு முட்டிய‌து இப்போது.

அப்ப‌டியே அவ‌ளை த‌ன‌க்குள் பிடித்து வைத்த‌ப‌டியே அவ‌ன் முழு காஃபியையும் குடித்து முடிக்க‌, அது வ‌ரை அசையாது நின்றிருந்த‌வ‌ளின் தேக‌ம் உர‌ச‌ க‌ப்பை இற‌க்கினான். அதில்தான் இறுக்கி மூடியிருந்த‌ அவ‌ளின் இமைக‌ள் மெதுவாய் த‌ள‌ர்ந்து பிரிய‌, அவ‌ளின் வ‌யிற்றை உர‌சிய‌ப‌டி அங்கிருந்த‌ டேபிளில் க‌ப்பை வைத்தது அவ‌ன் க‌ர‌ம். அதில் அவ‌ள் வேக‌மாய் அதை எடுக்க‌ போக‌, அவ‌ளை திருப்பி அதே மேசையில் சாய்த்திருந்தான் ருத‌ன். அதில் அவ‌ள் திடுக்கிட்டு ப‌த‌ற்ற‌மாய் அவ‌ன் விழிக‌ளை பார்க்க‌, அவ‌ன் விழிக‌ளோ இர‌ச‌னையாய் அவ‌ள் முக‌மெங்கும் ப‌ட‌ர‌, அப்ப‌டியே அவ‌ளை நெருங்கினான்.

அதில் அவ‌ள் ப‌த‌ற்ற‌மாய் பின்னால் சாய‌, அவ‌னுமே அவ‌ள் தேக‌த்தோடு சாய்ந்து அவ‌ள் முக‌த்தில் ஒற்றை விர‌ல் வைக்க‌, அவ‌ளோ புரியா ப‌த‌ற‌லாய் அவ‌ன் விர‌லையே பார்த்தாள். அந்த‌ விர‌லை அப்ப‌டியே கொண்டு வ‌ந்து அவ‌ள் உச்சி வ‌குட்டில் வைத்த‌வ‌ன், "இங்க‌ ஒன்னு இருக்குமே." என்று புருவ‌த்தை சுழிக்க‌, அவ‌ளோ புரியாது விழித்த‌ப‌டி அவ‌னையே பார்க்க‌, "நேத்து நைட் ரெட் க‌ல‌ர்ல‌ ஒன்னு இருந்த‌தில்ல‌?" என்று அவ‌ள் விழி பார்த்து கேட்டான்.

அதில் திடுக்கிட்டு அவ‌ச‌ர‌மாய் த‌ன் வ‌குட்டை தொட்டு பார்த்த‌வ‌ள், குளித்துவிட்டு அப்ப‌டியே வ‌ந்துவிட்ட‌தில் குங்கும‌த்தை ம‌ற‌ந்திருக்க‌, ப‌த‌றி அவ‌னை பார்த்தாள். அவ‌னோ கேள்வியாய் புருவ‌த்தை நெளிக்க‌, "அ..அது நா ம‌ற‌ந்துட்டேன். இப்ப‌வே போய்.." என்று வேக‌மாய் ந‌க‌ர‌ போக‌, ப‌ட்டென்று இழுத்து அவ‌ள் இத‌ழ்க‌ளை க‌வ்வியிருந்தான் ருத‌ன்.

அதில் அவள் திடுக்கிட்டு அக‌ல‌ விழி விரிக்க‌, அவ‌னோ அவ‌ளின் இத‌ழ்க‌ளை அத்த‌னை வ‌ன்மையாய் அத்த‌னை வேக‌மாய் சுவைத்தான். அவ‌ன் வேக‌த்தில் த‌டுமாறி அவ‌ள் மேசையின் ஓர‌த்தை இறுக்கி பிடித்து அதில் மொத்த‌மாய் புதைய‌, அவ‌னோ அவ‌ளின் உமிழ் நீர் மொத்தத்தையும் உறிஞ்சி எடுத்து, இத‌ழ் இர‌ண்டும் வ‌ர‌ண்டு போகும் த‌ருவாயில்தான் மெதுவாய் பிரிந்தான்.

அவ‌ளோ அத்த‌னை ப‌த‌ற்ற‌மாய் மூச்சு வாங்க‌ பிரிய‌, அவள் இத‌ழ்க‌ள் மெல்லிய‌தாய் ந‌டுங்கிய‌து. ஈர‌மின்றி வ‌ர‌ண்டு கிட‌ந்த‌ அவ‌ள் இத‌ழின் கீழ் சுழை அவ‌ன் வ‌ன்மையில் மெல்லியதாய் கிழிந்து இர‌த்தம் க‌சிந்திருக்க‌, அதை த‌ன் க‌ட்டை விர‌லால் மெல்ல‌ துடைத்து எடுத்த‌வ‌ன், அதை புரியாம‌ல் பார்த்த‌ அவ‌ளின் மூக்குர‌ச‌ உய‌ர்த்தி அவ‌ளின் நெற்றி வ‌குட்டில் வைத்துவிட்டான்.

அதில் ச‌ட்டென்று அவ‌ள் புருவ‌ங்க‌ள் விரிய‌, "ந‌வ் ப‌ர்ஃபெக்ட்." என்றப‌டி க‌ர‌த்தை இற‌க்கி அவ‌ள் முக‌மெங்கும் இர‌ச‌னையாய் பார்வையை த‌ழுவிய‌வ‌ன், "மோர் பியூட்டிஃபுல்." என்றான் அத்த‌னை மென்மையாக‌. அதில் அவ‌னையே பார்த்த‌வ‌ளுக்கோ நேற்று ம‌ண‌மேடையில் அவ‌ன் கையை கிழித்து இர‌த்த‌த்தை குங்கும‌மாய் வைத்த‌து க‌ண்முன் வ‌ர‌, அன்னிச்சையாய் அவ‌ன் க‌ர‌த்தை பார்த்தாள்.

அத‌ற்குள் அதே க‌ர‌த்தை அந்த‌ டேபிளில் அழுத்தி ப‌தித்து அவ‌ளுள் அவ‌ன் புதைந்திருக்க‌, அவ‌ளோ அவ‌ன் ஈர‌ மார்பில் புதைந்து நிமிரும் முன் அவ‌ள் தாடையை பிடித்து த‌ன் இத‌ழ் நோக்கி இழுத்த‌வ‌ன், "வாட்ஸ் யுவ‌ர் நேம்?" என்று அத்த‌னை மென்மையாய் அவ‌ள் இத‌ழில் பார்வையை குவித்தான்.

அதில் அவ‌ள் திடுக்கிட்டு விழிக்க‌, அதில் பார்வையை நிமிர்த்தி அவ‌ள் விழி பார்த்தவ‌ன், "ம்ம்?" என்று விழியில் எதிர்பார்ப்பை கூட்டினான். அதில் இவ‌ள் விழிக‌ளில் நீர் துளிர்க்க‌, த‌ன் பெய‌ர்கூட‌ தெரியாம‌லா இவ்வ‌ள‌வும்.. என்று நினைத்து பார்க்க‌வே அவ‌ளுக்கு உட‌ல் எரிந்த‌து. இவ‌ன் தேவை வேறு ஒன்றாக‌ இருக்கும்போது பெய‌ரையெல்லாம் ஏன் தெரிந்து வைக்க‌ போகிறான் என்று விர‌க்தியாய் அவ‌னை ஒரு பார்வை பார்த்தாள்.

அவ‌னோ கேள்வியாய் புருவ‌த்தை விரிக்க‌, இவ‌ளும் விர‌க்தியாய் வ‌ளைந்த இத‌ழை பிரித்து, "அம்.." என்று கூற‌ வ‌ர‌, "அமீரா..!" என்று ச‌த்த‌மாய் அழைத்தார் விம‌லா.

அதில் திடுக்கிட்டு அவ‌ள் திரும்ப‌, அவ‌னோ ச‌ற்றும் பார்வையை வில‌க்காது அவ‌ளையே பார்த்த‌ப‌டி, "அமீரா!" என்று த‌ன‌க்குள் சொல்லி பார்க்க‌, மெதுவாய் அவ‌ன் முக‌த்தில் ஒரு மெல்லிய‌ இர‌ச‌னை பூத்த‌து.

"அம்மாடி!" என்ற‌ப‌டி அவ‌ர் வெளியிருந்து அழைக்க‌, இவ‌ளோ பதற்றமாய் திரும்பி இவனை பார்த்து, "அ..அத்த வர்றாங்க." என்று தயங்கி கூற, அதில் மேலும் அவளுள் புதைந்து நின்ற‌வ‌ன், "உள்ள வர மாட்டாங்க." என்றான் அழுத்தமாக.

அதில் இவள் புருவம் விரிக்க, இங்கே விமலாவுமே அந்த அறை வாசலுக்கு கூட வராமல் அவளை விட்டு சென்ற அந்த இடம் வரை மட்டுமே வந்து நின்று, "அமீரா!" என்று அழைத்துக்கொண்டு இருந்தார்.

அதில் இவ‌ளோ ப‌த‌ற்ற‌மாய் அவ‌னை பார்த்து, "ந..நான்.. போக‌ட்டுமா?" என்று அத்த‌னை ப‌வ்விய‌மாய் அனும‌தி கேட்டாள். எல்லாம் அவ‌ள் த‌ந்தையிட‌ம் பேசும் வித‌ம். அவ‌ர் கூறாம‌ல் துரும்பைக்கூட‌ அசைக்க‌ முடியாதே. இப்போது அந்த‌ இட‌த்தில் இவ‌ன் தெரிய‌ அவ‌னின் அனும‌தி வேண்டி நின்றாள்.

அதில் மெல்ல‌ இத‌ழ் வ‌ளைத்தவன், அவ‌ள் கூந்த‌லுள் விர‌ல்க‌ளை நுழைக்க, அவளோ பதற்றமாய் கழுத்தை குறுக்க, ப‌ட்டென்று அவ‌ளை த‌ன் ப‌க்க‌ம் இழுத்தான். அவ‌ளோ திடுக்கிட்டு அவன் மீது மோதி பொட‌பொட‌வென்று விழிக்க‌, அந்த‌ விழியில் மென்மையாய் ஒரு முத்த‌ம் வைத்தான். அதில் அவ‌ள் இரு விழிக‌ளும் முட‌, அவ‌ள் கூந்த‌லுள் இருந்த‌ விர‌ல்க‌ளை மேலும் நுழைத்து பிடித்து அவ‌ள் மூக்கில் மென்மையாய் இத‌ழ் ப‌தித்தான். அதில் அவ‌ள் ப‌த‌ற்ற‌மாய் விழி திற‌க்க, அவ‌ள் இரு விழி இடையே முத்த‌மிட்டான். அதில் அப்படியே விழி மூடியவளின் முக‌மெங்கும் சூடான‌ இத‌ம் ப‌ர‌வ, அவ‌ள் இரு புருவ‌ங்க‌ளிலும் முத்த‌ம் வைத்தான். அதில் கூச்ச‌மாய் அவ‌ள் நெற்றி குறுக‌, அந்த‌ நெற்றியில் அழுத்தி முத்த‌மிட்டான். அதில் அது மொத்த‌மாய் த‌ள‌ர‌, அப்ப‌டியே அவ‌ள் முக‌மெங்கும் மிக‌ மெதுவாய் அழுத்த‌மாய் மென்மையாய் முத்த‌ங்கள் வைத்தான்.

அதில் அவ‌ள் உட‌லெங்கும் பரவிய குளிர் அப்படியே சிலிர்த்து அட‌ங்க‌, த‌ன் சேலையோர‌த்தை இறுக்கி பிடித்தாள். அவ‌னோ இறுதியாய் அவ‌ள் காய‌ம்ப‌ட்ட‌ இத‌ழிலும் மெல்லிய‌தாய் ஒரு முத்த‌ம் வைத்து, "போ" என்றான் மெல்லிய‌ குர‌லில்.

அதில் அவ‌ள் விழியை திற‌ந்து அவ‌னை பார்க்க‌, அவ‌னோ கரத்தை விலக்கி செல் என்று க‌ண் அசைத்தான். அதில் அவ‌ளும் அவ‌ச‌ர‌மாய் அவ‌னை க‌ட‌ந்து சென்றுவிட்டாள்.

அதில் அப்ப‌டியே திரும்பி அந்த‌ மேசையில் சாய்ந்து அவ‌ளையே பார்த்த‌வ‌னின் முக‌த்தில் முழுதாய் இர‌ச‌னை பூச‌, சற்று முன் அவள் கைக்குள் சிறையாகியிருந்த அந்த கப்பை மெதுவாய் உயர்த்தி மிக மென்மையாய் அதில் இதழ் பதித்தான்.

இங்கே அவ‌ச‌ர‌மாய் வெளியில் வ‌ந்த‌ அமீரா, வேக‌மாய் விம‌லாவை தேட‌, பின்னிருந்து அவ‌ளின் தோள் ப‌ட்டையை த‌ட்டிய‌து ஒரு க‌ர‌ம். அதில் அவ‌ள் வேக‌மாய் திரும்ப‌, அவ‌ள் கையில் த‌ன் மொபைலை கொடுத்து, "உன் அப்பா லைன்ல‌ இருக்காரு." என்றார் விம‌லா.

அதில் ச‌ட்டென்று அவ‌ளின் மொத்த‌ உட‌லும் அதிர்ந்து விழிக‌ள் அக‌ல‌ விரிய‌, வேக‌மாய் வாங்கி காதில் வைத்து, "ஹ்..ஹ‌லோ அப்.." என்று கூற‌ வ‌ர‌, "இவ்ளோ நேர‌ம் என்ன‌ ப‌ண்ணிட்டிருந்த‌?" என்று கோப‌மாய் கேட்டார் லிங்கா.

அதில் த‌டுமாறி நிறுத்திய‌வ‌ள், "அது அங்.." என்று கூற‌ வ‌ர‌, "என்ன‌? வேற‌ வீட்டுக்கு போன‌தும் ப‌ய‌ம் போயிருச்சா?" என்று உரும‌லாய் கேட்டார்.

"இ..இல்ல‌" என்று அவ‌ள் ப‌த‌றி கூற‌ வ‌ர‌, அவ‌ள் தோளில் க‌ர‌ம் ப‌தித்து, "ரூமுக்கு போய் பொறுமையா பேசும்மா" என்றார் விம‌லா.

அதில் அவ‌ளும் த‌டுமாற்றமாய் மெல்ல‌ த‌லைய‌சைத்துவிட்டு வேக‌மாய் அங்கிருந்து ந‌க‌ர்ந்தாள். அதில் விம‌லாவும் அங்கிருந்து ந‌க‌ர்ந்துவிட‌, இங்கே இவ‌ள் பேசிய‌ப‌டியே அறை வாச‌லை வ‌ந்த‌டையும் முன்பே அவ‌ள் க‌ண்ணீர் மொத்த‌மும் வெளியில் வ‌ந்திருந்த‌து.

அந்த‌ இடைப்ப‌ட்ட‌ தூர‌த்திலேயே அவ‌ர் அவளை அழ‌ வைத்திருக்க‌, "அங்க‌ எல்லாரும் ந‌ல்லா ப‌ழ‌குறாங்க‌ன்னு, மொள‌கா அர‌ச்சிட்டு வெளிய‌ போற‌து, எவ‌னையாவ‌து பாக்க‌ முய‌ற்சி ப‌ண்ற‌துன்னு எதாவ‌து இருந்துச்சு.." என்று ப‌ல்லை க‌டித்த‌வ‌ர், "இங்க‌ இழுத்துட்டு வ‌ந்து தோல‌ உறிச்சு எடுத்திருவேன்." என்று அழுத்தி கூறினார்.

அதில் இவ‌ளோ வாயில் கை வைத்து க‌த‌றி அழ‌ ஆர‌ம்பிக்க‌, "அங்க‌ இருந்து என‌க்கு ஒரு க‌ம்ப்ளைன்ட்டும் வ‌ர‌ கூடாது. புரியுதா?" என்று அத‌ட்டி கேட்க‌, இவ‌ளும் அழுத‌ப‌டி வேக‌மாய், "ம்ம்" என்றாள்.

"நா திரும்ப‌ கால் ப‌ண்ணும்போது ஒட‌னே வாங்கி பேசுற‌." என்று அத்த‌னை அழுத்த‌மாய் கூறிய‌வ‌ர், "நீ என்ன‌ கிழிச்சுட்டு இருந்தாலும் ப‌ர‌வால்ல‌." என்றார்.

அதில் இவ‌ளோ மேலும் க‌த‌றி அழுத‌ப‌டி அறைக்குள் நுழைய‌, "அப்ற‌ம் கால் ப‌ண்றேன்." என்ற‌ப‌டி இணைப்பை துண்டித்தார்.

அதில் பொத்தென்று மெத்தையில் அம‌ர்ந்துவிட்ட‌வ‌ள், மொபைலை இற‌க்கிவிட்டு ச‌த்த‌மில்லாம‌ல் க‌த‌றி அழுதாள். சிறு வ‌ய‌திலிருந்து சிறு சிறு விஷயத்திலும் அவ‌ர் கூறிய‌தைதானே செய்துக்கொண்டிருக்கிறாள். திரும‌ண‌ம்கூட‌ அவ‌ர் கூறிய‌ப‌டி அவ‌ர் பார்த்த‌ மாப்பிளையுட‌ன்தானே ந‌ட‌ந்த‌து. இன்னமும் என் இஷ்ட‌த்திற்கு ஒருவ‌னுட‌ன் ப‌ழ‌கிகொண்டிருக்கிறேன் என்று எப்ப‌டித்தான் இவ‌ரால் ந‌ம்பிக்கொண்டு இருக்க‌ முடிகிற‌து? வெறும் க‌ற்ப‌னையிலேயே த‌ன்னை இவ்வ‌ள‌வு கேவ‌ல‌மாக‌ சித்தரித்து, இவ‌ர் கொடுக்கும் சித்திர‌வ‌தைக‌ளை நினைத்து நினைத்து அவ‌ள் க‌ண்ணீர் தாரை தாரையாய் வ‌ழிந்துக்கொண்டிருக்க‌, திடீரென்று அவ‌ள் முக‌த்தில் க‌ருப்பு ட‌வ‌ளை மூடி இழுத்துக்கொண்ட‌து ஒரு க‌ர‌ம்.

- நொடிக‌ள் தொட‌ரும்...
 

Author: Oviya Blessy
Article Title: CHAPTER-39
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.