CHAPTER-39

Oviya Blessy

Member
Jan 4, 2025
45
0
6
மீரா : நீ மனசுல நெனைக்குறதுதா இதுக்கு அர்த்தம்.

சந்ரா : நா மனசுல நெனைக்கிறதா? என்னது?

மீரா : காதல்.

சந்ரா அதிர்ச்சி ஆனாள்.

ச‌ந்ரா : (ம‌ன‌திற்க்குள்) நா ம‌ன‌சுல‌ நென‌ச்ச‌து மீரா அக்காக்கு எப்பிடி தெரிஞ்ச‌து?

மீரா : என்ன‌ ச‌ந்ரா யோசிக்கிற‌? நா எப்பிடி க‌ண்டு புடிச்ச‌ன்னா? அதா உன்னோட‌ மொக‌மே அர்ஜுன் மேல‌ இருக்கிற‌ காத‌ல‌ சொல்லுதே. ஆனா உன்னோட‌ வாய் ம‌ட்டு ஒத்துக்க‌மாட்டிங்குது.

ச‌ந்ரா : சும்மா இருங்க‌ மீரா அக்கா. நானே கொழ‌ம்பி போய் இருக்கே, நீங்க‌வேற‌ என்ன‌ இன்னு கொழ‌ப்பாதீங்க‌.

மீரா : நீ இப்போ கொழ‌ப்ப‌த்துலையே இல்ல‌ ச‌ந்ரா. நீ அர்ஜுன‌ காத‌லிக்கிற‌ன்னு உன்னோட‌ ம‌ன‌சு உண‌ர்ந்திருச்சு. ஆனா நீதா இன்னு உண‌ர‌ல‌. அதுதா உன்னோட‌ பிர‌ச்ச‌ன‌. அதுக்கு நீ வெச்ச‌ பேருதா கொழ‌ப்போ.

ச‌ந்ரா யோசித்தாள்.

மீரா : நீயே யோசிச்சு பாரு. அர்ஜுன் உதையாவா மாற‌க்கூடாதின்னு நீ ஆச‌ப்ப‌டுற‌ல்ல‌?

ச‌ந்ரா : ஆமா மீராக்கா.

மீரா : அதுக்கான‌ கார‌ணோ என்ன‌ன்னு யோசிச்சு பாரு. அர்ஜுன் உதையாவா மாறிட்டான்னா, நீ அவ‌ன‌ வெறுத்திருவையோன்னு ப‌ய‌ப்ப‌டுற‌. அதோட‌ அவ‌ன‌ நீ வெறுக்க‌க்கூடாதுன்னு நெனைக்கிற‌. இதுக்கு கார‌ணோ காத‌ல்தான‌?

ச‌ந்ரா திரும்ப‌வும் யோசிக்க‌ ஆர‌ம்பித்தாள்.

மீரா : இன்னு ஏ யோசிக்கிற‌ ச‌ந்ரா? நீ அர்ஜுன‌ காத‌லிக்கிற‌. அத‌ ஏ ம‌றைக்கிற‌?

ச‌ந்ரா : இல்ல‌ மீரா அக்கா. உங்க‌ளுக்கே தெரியும். அர்ஜுன்தா உதையா. அர்ஜுன‌ என‌க்கு எவ்ளோ புடிக்குமோ, அதே அள‌வு அந்த‌ உதையாவ‌ என‌க்கு புடிக்காது. அவ‌ ரொம்ப‌ கெட்ட‌வ‌. என்னால‌ எப்பிடி வெறுக்கிற‌வ‌னையே காத‌லிக்க‌ முடியும்?

மீரா : இதுதா ச‌ந்ரா உன்னோட‌ பிர‌ச்ச‌ன‌. இப்ப‌ அவ‌ உதையா இல்ல‌ அர்ஜுன். ஒரே ஒரு தெட‌வ‌ அர்ஜுன‌ நீ காத‌லிக்க‌ற‌ன்னு ஒத்துக்கோ, அப்றோ பாரு உதையா மேல‌ இருக்கிற‌ உன்னோட‌ வெறுப்பு அர்ஜுனோட‌ காத‌ல்ல‌ ம‌ற‌ஞ்சு போயிரும். ஏன்னா, வெறுப்ப‌விட‌ காத‌ல்தா பெருசு. நீ ந‌ல்லா யோசிச்சு முடிவெடு.

ச‌ந்ரா : செரி மீரா அக்கா நா இத‌ப்ப‌த்தி யோசிக்கிறே.

மீரா : செரி வா ந‌ம்ப‌ சாப்ப‌ட‌ போலா.

ச‌ந்ரா : செரி மீராக்கா. நா போய் சாப்பாடு எடுத்து வெக்கிறே. நீங்க‌ போய் அர்ஜுன‌ கூப்பிட்டு வாங்க‌.

மீரா : செரி.

மீரா அர்ஜுனை சாப்பிட‌ அழைத்தாள். மூவ‌ரும் சாப்பிட்டு அவ‌ர‌வ‌ர் அறைக்கு சென்ற‌ன‌ர். அர்ஜுனும் ச‌ந்ராவும் அறைக்கு சென்றன‌ர். அறைக்குள் சென்று, ச‌ந்ரா யோசித்துக்கொண்டே இருந்தாள்.

அர்ஜுன் : என்ன யோசிக்கிற‌?

ச‌ந்ரா : ஹா. ஒன்னு இல்ல‌ அர்ஜுன். நீ மாத்த‌ர‌ போட‌னுல்ல‌? வா.

ச‌ந்ரா மாத்திரையை எடுத்து அர்ஜுனுக்கு கொடுத்தாள். அர்ஜுன் அதை போட்டுவிட்டு ப‌டுத்துக்கொண்டான். ச‌ந்ரா க‌ட்டிலில் இருந்து எழுந்தாள். அர்ஜுன் அவ‌ள் கையை பிடித்து,

அர்ஜுன் : நீ எங்க‌ போற‌?

ச‌ந்ரா : நா எங்க‌யும் போல‌. மாத்தரைய‌ வெக்க‌ போறே.

அர்ஜுன் : நா தூங்குற‌ வ‌ரிக்கும் நீ இங்கியே இரு.

ச‌ந்ரா : செரி நா இங்க‌யே இருக்கே.

அர்ஜுன் ச‌ந்ராவின் துப்பாட்டாவை பிடித்துக்கொண்டே தூங்கிவிட்டான். அர்ஜுன் தூங்கிய‌தும்,

ச‌ந்ரா அர்ஜுனை பார்த்து,

ச‌ந்ரா : (அர்ஜுனை ந‌ன்றாக‌ பார்த்து) ஒருவேள‌ இந்த‌ உதையாங்குற‌ பிர‌ச்ச‌ன‌ இல்ல‌ன்னா, நா அர்ஜுன‌ காத‌லிச்சிருப்ப‌ல்ல‌? ஆமா க‌ண்டிப்பா காத‌லிச்சிருப்பே. ஏன்னா அர்ஜுன் அவ்ளோ ந‌ல்ல‌வ‌.

அர்ஜுனை பார்த்துக்கொண்டே அம‌ர்ந்திருந்தாள். திடீரென‌ இடி இடித்த‌து. காற்று அடித்த‌து. ச‌ந்ரா உட‌னே,

ச‌ந்ரா : ம‌ழ‌ வ‌ர்ற‌ மாதிரி இருக்கு. மாடில‌ துணி காய‌ப்போட்டிருந்த‌னே, ஒட‌னே எடுக்க‌ல‌ன்னா, ந‌ன‌ஞ்சிரும்.

என்று கூறிவிட்டு பெட்டில் இருந்து வேக‌மா எழுந்தாள். ஆனால் அவ‌ளால் செல்ல‌ முடிய‌வில்லை. ஏனென்றால் அர்ஜுன் ச‌ந்ராவின் துப்ப‌ட்டாவை பிடித்துக்கொண்டு தூங்கிகொண்டிருந்தான். ச‌ந்ரா அதை பார்த்து, மெதுவாக‌ அவ‌ளுடைய‌ துப்ப‌ட்டாவை எடுத்துக்கொண்டாள். பிற‌கு அங்கிருந்து சென்று, மாடியில் காய‌ப்போட்டிருந்த‌ துணிக‌ளை எடுத்துக்கொண்டு இருந்தாள்.

அங்கு அர்ஜுன் தூங்கிக்கொண்டிருந்தான். அவ‌னுடைய க‌ன‌வில் திரும்ப‌ அவ‌னுடைய‌ பூர்வ‌ ஜென்ம‌ம் அரைக்குறையாக‌ தெறிகிற‌து. இறுதியில் அவ‌னுடைய‌ ம‌ர‌ண‌மும் தெரிகிற‌து. அவ‌னுடைய‌ ம‌ர‌ண‌த்தை பார்த்த‌ அர்ஜுன், திடீரென‌ எழுந்து,

அர்ஜுன் : என்ன‌ க‌ன‌வு இது? என்ன‌ தொர‌த்திகிட்டே இருக்கு. என்ன‌ யாரு க‌த்தில‌ குத்துனாங்க‌? என‌க்கு என்ன‌ ந‌ட‌க்குது?

அர்ஜுன் யோசித்துக்கொண்டே,
அர்ஜுன் திடீரென‌ ஜென்ன‌லை பார்த்தான்.

அர்ஜுன் : ம‌ழ‌ வ‌ர்ற மாதிரி இருக்கு? இந்த‌ நேர‌ம் பாத்து ச‌ந்ரா எங்க‌ போனா? ஒருவேள‌ அவ‌ ம‌ழையில‌ ந‌ன‌ஞ்சுட்டானா? அவ‌ளுக்கு ஜல‌தோஷ‌ம் புடிச்சிருமே.

வேக‌மாக‌ அர்ஜுன் ச‌ந்ராவை தேடினான். தேடிக்கொண்டே அறையிலிருந்து கீழே வ‌ரும்போது,

மீரா : அர்ஜுன் என்ன‌ ஆச்சு? ஏ இவ்ளோ ப‌த‌ட்ட‌மா இருக்க‌?

அர்ஜுன் : ச‌ந்ராவ‌ பாத்தியா மீரா?

மீரா : கார்ட‌ன்ல‌ இருப்பான்னு நெனைக்கிறே. வ‌ந்திருவா.

அர்ஜுன் : (பதறியபடி) கார்ட‌ன்லையா? ம‌ழ‌ வ‌ர்ற‌ மாதிரி இருக்கு. அவ‌ ம‌ழையில‌ மாட்டிகிட்டானா ஒட‌ம்பு செரியில்லாம‌ போயிரும். நீ இரு நா போய் அவ‌ள‌ கூட்டிட்டு வ‌ர்றே.

அர்ஜுன் ப‌த‌ட்ட‌மாக‌ ஓடினான்.

மீரா : இவ‌ என்ன‌ அஞ்ஞாய‌த்துக்கு சந்ராவ காத‌லிக்கிறா? உல‌க‌த்துலையே இவ‌ன‌ மாதிரி யாராலையும் காத‌லிக்க‌வே முடியாது.

மீரா சிரித்துக்கொண்டே சென்றுவிட்டாள். அர்ஜுன் வேக‌மாக‌ வெளியே கார்டனுக்கு சென்றான். ச‌ந்ரா மாடியில் துணிக‌ளை எடுக்கும்போது ஒரு துணி மாடியில் இருந்து கீழே விழிந்துவிட்ட‌து. அது ச‌ந்ராவின் துப்ப‌ட்டா. அது கீழ இருந்த‌ அர்ஜுன் மீது விழுந்த‌து.

அர்ஜுனுக்கு திரும்ப‌ ஏதோ ஞாப‌க‌ம் வ‌ந்த‌து. பூர்வ‌ ஜென்ம‌த்தில் அருவியின் அருகில் அமிர்த்தாவின் தாவ‌ணி காற்றிற்க்கு அவ‌ன் முக‌த்தின் மீது விழுந்த‌து ஞாப‌க‌ம் வ‌ருகிற‌து. அர்ஜுன் அந்த‌ துப்ப‌ட்டாவை எடுத்துவைத்து,

அர்ஜுன் : என்ன‌ இது? இதுக்கு முன்னாடியே இதே ச‌ம்ப‌வம் ந‌ட‌ந்த‌ மாதிரி இருக்கு? ஆனா எப்போ?

அர்ஜுனுக்கு திரும்ப‌ பூர்வ‌ ஜென்ம‌ம் நினைவிற்க்கு வ‌ந்து, அவ‌னுக்கு த‌லை வ‌லிக்கிற‌து. அப்ப‌டியே அவ‌ன் யோசிக்கும்போது, அங்கு ச‌ந்ரா எல்லா துணிக‌ளையும் எடுத்துவிட்டு கீழே விழுந்த‌ துப்ப‌ட்டாவை எடுக்க‌ வெளியே வ‌ந்தாள். அங்கு அர்ஜுன் அவ‌னுக்கு நினைவுக்கு வ‌ந்த‌ விஷித்தை யோசித்துக்கொண்டிருந்தான். ச‌ந்ரா துப்ப‌ட்டா விழுந்த‌ இட‌த்திற்க்கு வ‌ரும்போது, த‌டுக்கிவிட்டு சேற்றில் விழுந்துவிட்டாள்.

அந்த‌ ச‌த்த‌த்தை கேட்ட‌ அர்ஜுன் உட‌னே திரும்பி பார்த்தான். ச‌ந்ரா விழுந்திருப்ப‌தை பார்த்து அதிர்ச்சியில்,

அர்ஜுன் : ச‌ந்ரா !

ச‌ந்ரா : அர்ஜுன் ! என்ன‌ தூக்கு.

அர்ஜுன் : இரு வரறே.

அர்ஜுன் ச‌ந்ராவை தூக்கினான்.

அர்ஜுன் : உனக்கு அடி எதுவும் படலல்ல?

சந்ரா : இல்ல.

அந்த‌ ச‌ம‌ய‌ம் ம‌ழை வ‌ந்துவிட்ட‌து. ச‌ந்ரா முக‌த்தில் இருந்த‌ சேறு ம‌ழையில் க‌ழுவிக்கொண்டு போன‌து. அப்போது ச‌ந்ராவின் முக‌ம் முழுவ‌தும் சுத்த‌மான‌து. இதை பார்த்த‌ அர்ஜுனுடைய‌ மூளையில், பூர்வ‌ ஜென்ம‌த்தில் அமிர்த்தா அருவியில் சேற்றை க‌ழுவும்போது, முத‌ல் முத‌லாக‌ உதையா அமிர்த்தாவின் முக‌த்தை பார்த்தான். அது ஞாப‌க‌ம் வ‌ருகிற‌து. அனைத்தும் ஒட்டுமொத்த‌மாக‌ ஞாப‌க‌ம் வ‌ந்த‌தால், அர்ஜுன் ச‌ந்ராவை கீழே விட்டுவிட்டு, த‌லையை பிடித்து த‌ன‌க்கு என்ன‌ ஞாப‌க‌ம் வ‌ருகிற‌தென்று தெரியாம‌ல், ம‌ய‌ங்கி கீழே விழுந்தான்.

தொட‌ரும்...
 

Author: Oviya Blessy
Article Title: CHAPTER-39
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.