உணர்ச்சி பொங்க கிளாராவை முத்தமிட்டு கொண்டு இருந்த பிரிட்டோ திடீரென அவள் தன் காலை மிதித்ததால்,
“ஆஆஆ! இன்னும் உன் டிராமா முடியலையா?
எதுக்கு டி இப்ப என் கால்ல மிதிச்ச?" என்று வலியில் தன் காலை பிடித்துக் கொண்டு கேட்க,
“சாரி சாரி, தெரியாம மிதிச்சிட்டேன்.
உனக்கு ரொம்ப வலிக்குதா?" என்று அக்கறையுடன் கேட்டாள் அவள்.
“ம்ம்.. உனக்கு ரொம்ப என் மேல ரொம்ப அக்கறை இருக்கிற மாதிரி நடிக்காத.
இந்த பாசத்தை எல்லாம் என்னோட அழகான face-ஐ அடிச்சு அசிங்கப்படுத்தி என் வாய கிழிச்சு ரத்தம் வர வைக்கும்போது காமச்சி இருக்கணும்.
நீ மிதிச்ச மிதியில என்னால என் கால தூக்கவே முடியல..!!”
என்று புலம்பிய பிரிட்டோ தன் காலை பிடித்துக் கொண்டு ஆஆஆ அம்மா என்று வலியில் கத்தினான்.
அவனால் கண்டிப்பாக இந்த வலியை எல்லாம் பொறுத்துக் கொள்ள முடியும் என்று அவளுக்கு தெரியும்.
ஆனால் எப்படியாவது அவன் தன்னை விட்டுப் போனால் போதும் என்று நினைத்து அவள் வெறி கொண்டு அவனை அடித்து உதைத்ததும் உண்மை தானே..
அதனால் அவனை கை தாங்களாக பிடித்துக் கொண்ட கிளாரா,
“எனக்கு உன்னை என்ன சொல்லி சமாளிக்கிறதுன்னு தெரியல.
அதான் வேற வழி இல்லாம அடிச்சிட்டேன்.
மத்தபடி நான் உன்னை ஹர்ட் பண்ணனும்னு நெனச்சு எதுவும் பண்ணல.
ஐ அம் சாரி பிரிட்டோ. நீ என்ன தப்பா நினைச்சுக்காத..
நீ வா, நான் உன்னை நம்ம காருக்கு கூட்டிட்டு போறேன்.
நம்ம சீஃப் கார்ல ஃபர்ஸ்ட் எய்ட் பாக்ஸ் வச்சிருப்பாரு.” என்று சொல்லி அவனை அழைத்துக் கொண்டு வெளியே சென்றாள்.
செல்லும்போது அர்ஜுனை பார்த்து பிரிட்டோ கண்ணடிக்க,
“போ டா போ டா... ரெண்டு பேரும் நல்லா இருங்க டா.
உங்களை யாரும் டிஸ்டர்ப் பண்ண மாட்டாங்க.” என்று உற்சாகமான குரலில் தமிழில் சொன்னான் அர்ஜுன்.
அவன் சொன்னது அவர்களுக்கு புரியவில்லை என்றாலும் தங்களை அர்ஜுன் வாழ்த்துகிறான் என்று மட்டும் அவனது முகபாவனைகளை வைத்து புரிந்து கொண்டு அவர்கள் இருவரும் வெளியே சென்றார்கள்.
அர்ஜுனை பார்த்தபடி அமர்ந்திருந்த தேன்மொழி “இவனோட பாதுகாப்புக்காக கூட வந்த பாடிகார்ட்சை போங்க போய் சந்தோஷமா இருங்கன்னு தனியா அனுப்பி வைக்கிறானே..
அவங்களுக்குள்ள என்ன பிரச்சனைன்னு இவனுக்கு ஆல்ரெடி தெரியும் போல..
அதான் நடுவுல போகாம இவ்ளோ நேரம் அமைதியா வெயிட் பண்ணிட்டு இருந்து இருக்கான்.
இது தெரியாம நான் இவனை தப்பா நினைச்சுட்டேன்.
எப்பயும் முதல இவன தப்பா நினைச்சுட்டு அப்புறம் அப்படி எல்லாம் இல்லைன்னு நினைக்கிறதே எனக்கு வேலையா போச்சு..
இந்த அண்டா வாயனும் வாய தொறந்து உண்மைய சொல்ல மாட்டேங்குறான்.
இவன் எல்லாத்தையும் என் கிட்ட frankஆ சொன்னா தானே இவன் நல்லவனா கெட்டவனானான்னு நான் ஒரு முடிவுக்கு வர முடியும்?
இப்படி எதுவுமே புரியாம பாதியில வந்து புதுசா படம் பாக்குற மாதிரி நான் எப்பயும் கன்ஃபியூஷன்லையே இருக்கணும்.. அதான் இவனுக்கு வேணும்!
சரியான மண்ட கோளாறு புடிச்சவன்!” என்று நினைத்துக் கொண்டாள்.
அப்போது அர்ஜுனுக்கு திடீரென்று பொறை ஏறி விட,
தன் நெஞ்சை பிடித்துக் கொண்டு லொக் லொக் என்று இரும்பினான்.
அதனால் அதிர்ந்த தேன்மொழி “ஐயையோ நான் இவனை திட்டுனதுனால தான் இவனுக்கு பொறை ஏறிடுச்சோ!” என்று நினைத்து பயந்து,
“ஒன்னும் இல்ல.. ஒன்னும் இல்ல..
பார்த்து.. பார்த்து.. இந்தாங்க தண்ணி குடிங்க..!!” என்று சொல்லி அவர்களுக்கு முன்னே இருந்த ஸ்னாக்ஸ்கள் அடங்கிய டேபிளில் இருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து திறந்து அவனிடம் கொடுத்தாள்.
“இவளுக்கு நம்ம மேல இவ்ளோ அக்கறையா?” என்று நினைத்து ஆச்சரியப்பட்ட அர்ஜுனுக்கு தானாகவே இரும்பல் நின்றது.
இருப்பினும் அவள் கொடுத்ததற்காக தண்ணீரை வாங்கி குடித்தான்.
அங்கே ஏ.கே பேலஸில் உள்ள தனது அறையில் அவளது குழந்தைகள் இருவரையும் அரும்பாடு பட்டு தொட்டிலில் போட்டு ஆட்டி தூங்க வைத்திருந்த ஜனனி
இப்போது தான் அப்பாடா என்று வந்து சோஃபாவில் அமர்ந்தாள்.
அவள் தன் கண்களை மூடி அதில் சாய்ந்து அமர்ந்திருக்க,
மெல்ல பூனை போல அவர்களது அறைக்குள் நுழைந்த சந்தோஷ் அவள் பின்னே சென்று தன் இரு கைகளாலும் அவளது கண்களை மூடினான்.
அவன் மீது இருந்து வந்த வாசத்தை வைத்தே தன்னிடம் இப்படி கண்ணாமூச்சி விளையாடுவது அவளது ஆசை கணவன் தான் என்று தெரிந்து கொண்ட ஜனனி,
“ஓய்.. என்ன பண்ணிட்டு இருக்க நீ?
நான் இப்ப தான் கஷ்டப்பட்டு நம்ம பேபிஸ் ரெண்டு பேரையும் தூங்க வச்சிருக்கேன்.
ஏதாவது பண்ணி சத்தம் போட்டு அவங்கள எழுப்பி விட்டுடாத.” என்று சொல்ல,
“எனக்கு மட்டும் என்ன அவங்கள டிஸ்டர்ப் பண்ணி எழுப்பி விட்டுட்டு என் பிளானை நானே கெடுத்துக்கணும்னு ஆசையா?” என்று மெல்லிய குரலில் அவளிடம் கேட்டான் சந்தோஷ்.
“பிளானா.. என்ன பிளான்?
முதல்ல கையை எடுத்துட்டு என் முன்னாடி வந்து நின்னு பேசு.” என்று ஜனனி சொல்ல,
“நோ, எடுக்க மாட்டேன். I have a surprise for you.
சத்தம் போடாம மெதுவா என் கூட வா.” என்றான் சந்தோஷ்.
உடனே எழுந்து நின்ற ஜனனி “தூங்கப் போற நேரத்துல என்னடா சர்ப்ரைஸ்?” என்று சலிப்புடன் கேட்க,
“இன்னிக்கி நான் உன்னை தூங்கவே விட மாட்டேன்.
அதான் நான் உனக்கு வெச்சிருக்கிற சர்ப்ரைஸ்.” என்று ஹஸ்கி வாய்ஸில் அவள் காதோரம் சொன்ன சந்தோஷ் அவளை அழைத்துக் கொண்டு வெளியே சென்றான்.
சில நொடிகள் நடந்ததில் எப்படியும் தாங்கள் தங்களுடைய அறையை விட்டு வெளியே வந்திருப்போம் என்று நினைத்த ஜனனி அங்கே குழந்தைகள் இருக்க மாட்டார்கள் என்பதால் உரத்த குரலில்
“டேய் இந்த நேரத்துல என்னை எங்க டா கூட்டிட்டு போற?
நான் தான் பேபிசை வீட்ல விட்டுட்டு எங்கயும் வெளிய போக முடியாதுன்னு மார்னிங்கே சொல்லிட்டேன்ல...
சும்மாவே இருக்க மாட்டியா நீ?
அவங்கள வீட்ல விட்டுட்டு நான் எங்கயும் வெளியே வர மாட்டேன் போ...” என்று சொல்ல,
“நான் உன்னை வெளிய கூட்டிட்டு போக போறேன்னு இப்ப உனக்கு யாரு சொன்னது?
கொஞ்ச நேரம் கம்முனு வா.” என்ற சந்தோஷ் அவளை அழைத்துக் கொண்டு கார்டன் ஏரியா பக்கம் சென்றான்.
ஒரு குறிப்பிட்ட இடம் வந்தவுடன் அவன் அவளது கண்களில் இருந்து கையை எடுத்துவிட்டு “சப்ரைஸ்” என்று அவள் காதோரம் கத்தினான்.
“எதுக்கு டா காதுக் கிட்ட வந்து கத்துற.. எரும மாடு!”
என்று சொல்லிவிட்டு அவனை விளையாட்டாக அடித்த ஜனனி அவள் நின்று கொண்டு இருந்த இடத்தை சுற்றி பார்த்தாள்.
அங்கே ஒரு பெரிய ஹார்ட் வடிவிலான பல வண்ண லைட்டுகளால் செய்யப்பட்ட டெகரேஷன் ஐட்டம் ஒன்று இருக்க,
அந்த இடம் முழுவதும் வெள்ளை நிறத்தில் சின்ன சின்ன தொங்கும் லைட்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
அங்கே ஒரு ஆள் உயரத்தில் வட்ட வடிவில் ஸ்ப்ரிங் ரோல் போல ஒரு பெரிய ரிங் லைட் வளைந்து வளைந்து சென்றபடி இருக்க,
அதற்குள் அவள் கையைப் பிடித்து அழைத்துச் சென்றான் சந்தோஷ்.
அங்கே டெம்பரவரியாக விண்வெளி போன்ற ஒரு செட்டப் போடப்பட்டிருந்தது.
அவர்களின் நாளா புறமும் எல்இடி ஸ்கிரீனில் யூனிவர்சில் அவர்கள் இருப்பதைப் போலவே 3D காட்சிகள் ஓடிக் கொண்டு இருக்க,
ஏ.ஐ தொழில் நுட்பத்தைக் கொண்டு அனைத்தையும் அவர்கள் பக்கமாக உருவாக்கி இருந்ததால் அந்த இடம் உண்மையாகவே அவர்கள் பிரபஞ்சத்தின் ஒரு பகுதியில் அந்தரத்தில் நின்று கொண்டு இருப்பதைப்போல அவர்கள் இருவருக்கும் ஒரு உணர்வை கொடுத்தது.
அந்த ஸ்கிரீனில் தூரத்தில் நிலா, நட்சத்திரங்கள், சூரிய குடும்பத்தில் உள்ள கோள்கள் என அனைத்தும் இருப்பது தத்ரூபமாக உருவாக்கப்பட்டு இருந்தது.
அதை பார்த்து தன் வாயை பிளந்த ஜனனி “வாவ் சந்தோஷ்.. நிஜமாவே சோலார் சிஸ்டமை எல்லாம் யுனிவர்ஸ்ல நின்னு பாக்குற மாதிரியே இருக்கு.
இதையெல்லாம் நீ நெஜமாவே எனக்காக பண்ணியா?
உனக்கு அந்த அளவுக்கு அறிவு இருக்கா என்ன?
என்னால நம்பவே முடியல டா.” என்று ஆச்சரியமாக சொல்ல,
ஒரு இதய வடிவிலான பலூனை அவளிடம் கொடுத்து
“ஹாப்பி வேலண்டைன்ஸ் டே wifey!
ஆக்சுவலி நான் உனக்காக ரெடி பண்ண சர்ப்ரைஸ் இதுதான்.”
என்று சொல்லிவிட்டு தனது சட்டையின் முதல் மூன்று பட்டனை திறந்து காட்டினான்.
அவனது இதயத்தில் ஜனனி என்ற அவளது பெயரை ஆங்கிலத்தில் பச்சை குத்தி வைத்திருந்தான் சந்தோஷ்.
அதை ஷாக்காகி பார்த்த ஜனனி அவன் அருகில் தரையில் மண்டியிட்டு அமர்ந்து அவன் நெஞ்சில் கை வைத்து தொட்டுப் பார்த்து,
“டேய் நெஜமாவே இதெல்லாம் நீயாடா பண்ற?
நீதான் சரியான பயந்தாங்கோலி ஆச்சே..
நம்ம பாப்பாவுக்கு இன்ஜெக்ஷன் போட்டாலே அதை பார்த்து நீ அழுவ..
டாட்டூ போடுவதற்கு நிறைய தடவை இன்ஜெக்ஷன் வச்சு குத்துவாங்களே..
அதை எல்லாம் எப்படி தாங்குன?” என்று நம்ப முடியாமல் கேட்டாள்.
“நீ எனக்காக ரொம்ப கஷ்டப்பட்டு 2 ஏஞ்சல்சை பெத்து குடுத்திருக்க..
உனக்காக என்னால என்ன பண்ண முடியும் சொல்லு?
நான் ஏதாவது உனக்கு வாங்கி குடுக்கனும்னு நெனச்சா கூட,
உங்க அண்ணா கிட்ட இருக்கிற வசதி வாய்ப்பை கம்பேர் பண்ணும்போது எப்படியும் அதெல்லாம் ஒண்ணுமே இல்லைன்னு ஆயிடும்.
You were born with a golden spoon.
ஆனா நான் அப்படி இல்லையே..
என் கிட்ட இருக்கிறதெல்லாம் உனக்காக என் மனசு முழுக்க இருக்கிற லவ்வும்,
உனக்காகவே வாழ்ந்து உனக்காகவே சாகணும்னு நினைக்கிற இந்த பாடியும் மட்டும் தான்.
அதான் என்னையே உனக்கு கிஃப்ட்டா குடுக்கிறேன்.
ஓனர் நீதானே.. அதான் உன் பேரையும் எழுதிட்டேன்.” என்ற சந்தோஷ் அவள் கண்களை நேருக்கு நேராக பார்த்து,
“ஐ லவ் யூ ஜானு! இந்த உடம்பு, உசுரு, மனசு எல்லாமே உனக்கு மட்டும் தான் டி.
இதே மாதிரியே நான் எப்பவும் உன்ன லவ் பண்ணிட்டே இருப்பேன்னு ப்ராமிஸ் பண்றேன்.” என்று கண்கள் கலங்கச் சொன்னான்.
உடனே தானும் கண்கள் கலங்க அவனை அணைத்துக் கொண்ட ஜனனி,
“ஐ லவ் யூ டு சந்தோஷ்.
நீ என்ன எவ்ளோ லவ் பண்றேன்னு எனக்கு நல்லா தெரியும்.
நான் உன்கிட்ட எதையும் எதிர்பார்த்து உன்ன லவ் பண்ணல.
ப்ளீஸ்.. இனிமே பைத்தியக்காரத்தனமா உன் லவ்வை ப்ரூவ் பண்றேன்னு எதுவும் இந்த மாதிரி பண்ணி தொலையாத..
எனக்கு உன்னை இப்படி பார்க்கவே கஷ்டமா இருக்கு.” என்றாள்.
அவள் முகத்தைப் பார்த்து அவள் கண்ணீரை துடைத்த சந்தோஷ்,
“உனக்காக நான் இது கூட பண்ண மாட்டேனா?” என்று கேட்டுவிட்டு கண்ணடிக்க,
“நீ இந்த டாட்டூ போட்டதெல்லாம் ஓகே...
பட் உண்மைய சொல்லு.. நீயா இந்த டெக்கரேஷன் எல்லாத்தையும் பிளான் பண்ண?
உனக்கு இந்த அளவுக்கு எல்லாம் கிரியேட்டிவ் சென்ஸ் இல்லைன்னு எனக்கு நல்லா தெரியும்.
அப்புறம் எப்படி இப்படி பண்ண? உனக்கு யார் ஹெல்ப் பண்ணது?” என்று அவனிடம் கேட்டாள் ஜனனி.
உடனே அவளைப் பார்த்து தனது அனைத்து பற்களும் தெரியும்படி சிரித்து வைத்த சந்தோஷ்,
“ஆக்சுவலி இது எல்லாமே அர்ஜுன் சாரோட ஐடியா..
அவர் தேன்மொழிக்காக இதை ரெடி பண்ணாரு.
என் கிட்ட திடீர்னு கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான் இதை பத்தி எல்லாம் சொன்னாரு.
நானும் ஆகாஷ் சாரும் சேர்ந்து தான் இது எல்லாத்தையும் ரெடி பண்ணினோம்.
என்ன தான் உங்க அண்ணன் தேன்மொழியை இம்ப்ரஸ் பண்றதுக்காக இதை ரெடி பண்ண சொல்லி இருந்தாலும்,
இத கஷ்டப்பட்டு ரெடி பண்ணது நான் தானே..
அதான் அவங்க ரெண்டு பேரும் இங்க வந்து பாக்குறதுக்குள்ள சும்மா இத உன் கிட்ட காமிச்சு சீன் போடலாம்னு கூட்டிட்டு வந்தேன்.
எப்படியும் அவங்க இங்க வர்றதுக்கு கொஞ்சம் டைம் ஆகும்..
அதுவரைக்கும் நம்மளோட இந்த தனி உலகத்துல நீயும் நானும் கொஞ்சம் என்ஜாய் பண்ணலாம்ல்ல..!!”
என்று சொல்லிவிட்டு அவளை இறுக்கமாக அணைத்துக் கொண்டு அவளுடன் சேர்ந்து தரையில் உருண்டான்.
சத்தமாக அவனைப் பார்த்து சிரித்த ஜனனி அவனது தோள்களில் விளையாட்டாக அடித்து,
“எனக்கு நல்லா தெரியும்.. உன் மூளைக்கு இந்த மாதிரி ஐடியா எல்லாம் வராதுன்னு..
எங்க அண்ணா அண்ணிக்காக போட்ட பிளான்ல நீ சைடு கேப்பில ஜல்சா பண்ணலாம்னு பாக்குறியா?
ஒழுங்கு மரியாதையா எந்திரி.. நம்ம ரூமுக்கு போகலாம்.
நீ எப்ப இதே மாதிரி எனக்கு பிரம்மாண்டமா ஏதாவது சப்ரைஸ் பண்றியோ,
அப்பதான் நீ எதிர்பார்த்தது எல்லாம் நடக்கும்.” என்று சொல்லிவிட்டு அவனை கீழே தள்ளி விட்டாள்.
அவள் இடுப்பை நன்றாக இறுக்கிப் பிடித்துக் கொண்ட சந்தோஷ்,
“எனக்கு அங்க இருந்து அவங்க எப்ப கிளம்புறாங்க வருவாங்கன்னு அப்டேட்ஸ் எல்லாம் வந்துகிட்டே தான் இருக்கும்.
அவங்க இங்க வர்ற வரைக்கும் நம்ம இங்க இருந்து போறதா இல்ல.” என்று பிடிவாதமாக சொல்ல,
“எவ்வளவு நேரம் வேணாலும் நீ இங்கேயே தனியா இரு.
யார் வேண்டாம்னு சொன்னது?” என்ற ஜனனி அவளது மொத்த பலத்தையும் பயன்படுத்தி அவன் நெஞ்சில் கை வைத்து அவனை தள்ளிவிட்டு எழுந்து அந்த இடத்தை விட்டு ஓடினாள்.
“ஏய்.. ஜானு நில்லு டி!” என்ற சந்தோஷ் அவளை பின் தொடர்ந்து ஓடினான்.
-மீண்டும் வருவாள் 💕

Author: thenaruvitamilnovels
Article Title: Chapter-39
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.