Chapter 38

Bhavani Varun

Member
Jan 23, 2025
45
0
6
சனந்தா மாலையில் ஸ்ரீனிவாசனை அழைத்துக் கொண்டு அவள் வாங்கி வந்த எக்யூப்மென்ட் அனைத்தும் கொண்டு சென்று சேஜ் இலைகள் மற்றும் பூக்களை வைத்து எப்படி பொருட்கள் தயாரிப்பது என்பதை கற்றுக் கொடுத்தாள்.

“ஐயா இதுக்கு தான் இந்த இலையும் பூவையும் பறிக்க சொன்னீங்களா??” என்று ஒருவர் கேட்க, “ஆமாம்பா இதில் இருந்து நம்ம பொருள் தயார் செஞ்சு விக்கலாம் ஊட்டிக்கு எடுத்துட்டு போய்” என்று ஸ்ரீனிவாசன் கூறவும், “இது நம்ம காட்டுல நிறையவே விளையுமே பறிச்சிட்டு வந்து செய்ய ஆரம்பிச்சிருவோமா??” என்று ஒருவர் கூற, “ஆமா சார்… ஆனா, இது கொஞ்சம் காயனும் எண்ணெய் எடுக்க கொஞ்ச நாள் ஆகும்” என்று சனந்தா கூறினாள்.

சனந்தா கூறிய அனைத்தையும் கவனமாக கேட்டுக் கொண்டனர். “இதுக்கு மேல உங்களுக்கு ஏதாவது டவுட் இருந்துதுன்னா என்னை கூப்பிடுங்க நான் வந்து உங்களுக்கு சொல்லிக் கொடுக்கிறேன்” என்ற சனந்தா கூற, அனைவரும் சரி என்றனர்.

அனைவரும் அவரவரின் வீட்டிற்கு செல்ல, “கவிதா ஒரு நிமிஷம்” என்று சனந்தா அழைக்க, கவிதா பெரிதாக எந்த உணர்ச்சியை முகத்தில் காட்டாமல், என்ன?? என்று மட்டும் கேட்க, “இது உங்களுக்காக வாங்கிட்டு வந்தேன்” என்று சனந்தா கொடுக்க, அதை கவிதா வாங்கிக் கொண்டு, “ரொம்ப தேங்க்ஸ்… ஆனா, அடிக்கடி இந்த மாதிரி வாங்கிட்டு வந்து கொடுக்காதீங்க… ஏன்னா என்கிட்ட கொடுக்க எதுவுமே இல்ல உங்களுக்கு” என்று கவிதா முகத்தில் அறைந்தார் போல் கூறினாள்.

“என்ன கவிதா இப்படி பேசுற…. சனா விருப்பப்பட்டு தானே வாங்கிட்டு வந்து கொடுக்கிறா… நீ எதுவும் திருப்பிக் கொடுக்கணும்ன்றதுக்காக எல்லாம் அவ குடுக்குல மா… நீ எதுக்கு அப்படி சொல்ற??” என்று ஸ்ரீனிவாசன் கேட்க, “அது தான் மாமா நானும் சொன்னேன்… என்கிட்ட எதுவும் இல்ல… என்கிட்ட இருக்குறத கொடுத்துட்டா நான் என்ன பண்ணுவேன்” என்று கவிதா எதையோ உணர்த்துவதைப் போல் பொடி வைத்து பேச, சனந்தாவிற்கு அவள் விக்ரமை குறிப்பிடுகிறாளோ என்ற சந்தேகம் வந்தது.

“ம்ம்… இல்ல அங்கிள் பரவாயில்ல…. அவங்க மனசுல இருக்கறத சொல்லிட்டாங்கல பரவால்ல அங்கிள்” என்று சனந்தா கூறவும், கவிதா சென்று விட்டாள். “நீ எதுவும் தப்பா எடுத்துக்காத சனா… வேலை ஜாஸ்தியா இருந்தா கூட அப்படி இருக்கும் அவளுக்கு” என்று ஸ்ரீனிவாசன் சமாதானம் கூற, பரவால்ல அங்கிள் என்று சனந்தா அமைதியாக விட்டாள்.

“சரி வீட்டுக்கு கிளம்பலாமா நம்ம??” என்று ஸ்ரீனிவாசன் கேட்க, “அங்கிள் நான் பாட்டியை பார்த்துட்டு வரேன்” என்று சனந்தா கூறவும், “சரி மா பத்திரமா வந்துரு… இல்லன்னா எனக்கு ஃபோன் பண்ணு… விக்ரம் இல்லேன்னா சரவணனுக்கு ஃபோன் பண்ணு நாங்க வந்து உன்னை கூட்டிட்டு போறோம்” என்று ஸ்ரீனிவாசன் கூறவும், “டார்ச் லைட் இருக்கு அங்கிள்…. முடிஞ்ச அளவுக்கு நானே வர பார்க்குறேன்….. முடியலைன்னா கண்டிப்பா நான் ஃபோன் பண்றேன்” என்று சனந்தா கூறி விடைபெற்றாள்.

ஸ்ரீனிவாசன் வீட்டுக்கு வந்து நடந்ததை கூறவும், “என்ன ஆச்சு கவிதாவுக்கு…. இன்னிக்கி ஒரு வாட்டி வந்தா பொருள்லாம் கொடுத்துட்டு போனா…. மறுபடியும் விக்ரம் கூட வந்தா…. மறுபடியும் சொல்லாம கொள்ளாம போயிட்டா…. இப்போ சனா கிட்ட வேற எப்படி நடந்துக்கிட்டா… என்ன ஆச்சு அவளுக்கு??” என்று வள்ளி யோசிக்கவும், “தெரியல மா… கவிதா அப்படி சொன்னதும் பாவம் சனாவோட முகம் வாடி போச்சு” இன்று ஸ்ரீனிவாசன் கூறினார்.

“யாருக்கா இருந்தாலும் இப்படி இருக்கும் தானங்க…. நான் கவிதா கிட்ட பேசுறேன் என்ன ஆச்சுன்னு” என்று வள்ளி கூறினார். “எனக்கென்னமோ கவிதா இன்னிக்கி உங்க ரெண்டு பேர பார்த்து தான் இப்படி இருக்கா போல…. இதுக்கு எல்லாத்துக்கும் நீ தான் சீக்கிரமா ஃபுல் ஸ்டாப் வைக்கணும் விக்கி… இல்லன்னா இப்படி கவிதாவோட ஃப்ரெண்ட்ஷிப் இருக்காது அப்படி சனாவும் உனக்கு கிடைக்க மாட்டா பார்த்துக்கோ” என்று சரவணன் அறிவுரை கூறினான். ம்ம் மட்டும் கொட்டினான் விக்ரம்.

“சனா எங்கங்க?” என்று வள்ளி கேட்க, “பாட்டியை பார்க்க போறேன்னு சொன்னா” என்று ஸ்ரீனிவாசன் கூறவும், “ஆமா பாட்டிக்கு என்ன வாங்குறதுன்னு இங்க இருந்து போகும் போதே என்கிட்ட கேட்டா…. எனக்கும் என்ன சொல்றதுன்னு தெரியல…. சரி ஒரு புடவை வேணா வாங்கிட்டு வந்து குடுன்னு சொன்னேன்…. அத தான் கொண்டு போய் இருப்பா போல” என்று வள்ளி கூறினார்.

“அந்த பொண்ணு நினைச்சா இங்க இருக்குற எல்லாருக்கும் ஏதாவது ஒன்னு
வாங்கிட்டு வந்து கொடுத்தா போதும்…. எல்லாரும் அந்த பொண்ண தூக்கி வெச்சுப்பாங்க…. ஆனா, அந்த புள்ள அப்படி பண்றது இல்ல அவ யார் கிட்ட பழகுறாளோ யார் கிட்ட பேசறாளோ அவங்களுக்கு மட்டும் தான் வாங்கிட்டு வரா….. அப்படி இருந்தும் கவிதா ஏன் இப்படி நடந்துக்கிட்டான்னு தெரியலையே” என்று ஸ்ரீனிவாசன் மீண்டும் முறையிட, “நான் தான் பேசுறேன்னு சொன்னேன் இல்லைங்க அவ என்ன யோசனையா இருந்தாளோ என்னமோ” என்று வள்ளி கூறவும், சரி என்று அமைதியாகினார் ஸ்ரீனிவாசன்.

சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தனர், பின் இருட்ட ஆரம்பிக்கவும், “என்ன இவ்வளவு நேரம் ஆகுது சனாவ காணோம்…. நான் ஃபோன் பண்ண சொன்னேனே” என்று ஸ்ரீனிவாசன் கேட்க, “அதான் உங்க கிட்ட கேட்க வந்தேன்… நீங்களே என்கிட்ட கேக்குறீங்க போய் கூட்டிட்டு வரீங்களா?” என்று வள்ளி கேட்க, “நீங்க எதுக்குப்பா போய்கிட்டு அதான் விக்ரம் இருக்கான்ல அவன் போய் கூட்டிட்டு வந்துடுவான்” என்று சரவணன் கூறினான்.

“அவன் சனான்னாலே கோபப்படுறானே பா அவன் கிட்ட நான் எப்படி கேட்பேன்” என்று மெல்லிய குரலில் சரவணனிடம் ஸ்ரீனிவாசன் கேட்க, “அதெல்லாம் போவாம் பா” என்று சரவணன் கூறி, “மச்சான் நீ போய் கூட்டிட்டு வா சனாவ” என்று சரவணன் கூறவும், விக்ரம் அமைதியாக சென்றான்.

“எப்படிப்பா போறான்” என்று ஸ்ரீனிவாசன் கேட்க, “அதெல்லாம் போவான்… ஏன் போக மாட்டான் எல்லாம் சொன்னா செய்யிற குழந்தை தானே விக்ரம்” என்று வள்ளி வக்காலத்து வாங்கவும் சரவணன் வள்ளியை பார்த்து அர்த்தமாக புன்னகைத்தான்.

விக்ரம் சனந்தாவை அழைக்க செல்லும் வழியில் சனந்தா மற்றும் முத்து, கவிதாவின் அப்பா, நின்று பேசிக் கொண்டு இருந்தனர். “இவங்க ரெண்டு பேரும் என்ன பேசிட்டு இருப்பாங்க??” என்று குழப்பத்துடன் விக்ரம் அவர்களை நெருங்க, “வாப்பா என்ன இந்த நேரத்துல இங்கே??” என்று முத்து கேட்க, “ஒன்னும் இல்ல மாமா இவங்கள கூட்டிட்டு வர சொல்லி அப்பா சொன்னாரு அதனால தான் வந்தேன்” என்று விக்ரம் கூறினான்.

“இவ்வளவு தூரம் வந்துட்ட நீ வீட்டுக்கு வந்துட்டு போ… அந்த பொண்ணு தனியா போவா…. அவ கைல டார்ச் எல்லாம் வெச்சிருக்கா” என்று முத்து கூறவும், சனந்தா என்ன நினைத்தாளோ என்னவோ, “ஆமா சார் நீங்க பேசிட்டு வாங்க… நான் போயிக்கிறேன்…. எனக்கு இப்போ இங்க வழியெல்லாம் தெரியும்” என்ற விக்ரம் முகத்தை பாராமல் கூறி சென்றாள்.

“அந்த பொண்ணுக்கு வந்த இடம் தெரியும் அவ இடத்துக்கே போயிடுவா நீ வாப்பா” என்று முத்து கூற, விக்ரமுக்கு இங்கே நடப்பதும், முத்து பேசியதும் சரியென்று படவில்லை. “மாமா நான்…” என்று விக்ரம் பேசுவதற்குள், “அப்புறம் விக்ரம்… எப்போ கல்யாணம் பண்ணிக்கலாம்னு இருக்க??” என்று முத்து கேட்க, “இப்போ எதுக்கு இவர் இதெல்லாம் பேசுறாரு??” என்று விக்ரம் மனதில் நினைத்துக் கொண்டு, “இன்னும் போகட்டும் மாமா கொஞ்ச நாள்” என்று விக்ரம் கூறினான்.

“உனக்கு சரிப்பா என் பொண்ணு எவ்வளவு நாள் காத்துக்கிட்டு இருப்பா??? அவளுக்கு வயசு ஆகுதுல” என்று முத்து கூற, “ப்ச்…. மாமா இத நான் கவிதா கிட்டயும் சொல்லி இருக்கேன் உங்க கிட்டயும் ஒரு வாட்டி சொல்லி இருக்கேன்…. எங்க அப்பா அம்மா கிட்ட கூட சொல்லி இருக்கேன்…. நான் இப்பவும் சொல்றேன் உங்க கிட்ட நல்லா கேட்டுக்கோங்க…. கவிதா எனக்கு ஒரு நல்ல ஃப்ரெண்ட் இன்னும் சொல்ல போனா எனக்கு அபர்ணா எப்படியோ அப்படித் தான் கவிதாவும் எனக்கு ஒரு தங்கச்சி தான்…. நீங்களா கற்பனையை வளர்த்துட்டு இருக்காதீங்க… கவிதா கிட்டயும் நிறைய வாட்டி சொல்லிட்டேன் நீங்களாவது சொல்லி புரிய வைங்க” என்று விக்ரம் கூறி, “நான் கிளம்புறேன் மாமா” என்று சென்றான்.

“நீ என்ன பேசினாலும் சரி நீ தான் என் பொண்ண கட்டிக்கணும் அப்பதான் நான் நிம்மதியா இருக்க முடியும்…. வெளியூருக்கு எல்லாம் அவளை அனுப்பிட்டு என்னால நிம்மதியா இருக்கவே முடியாது விக்ரம்” என்று முத்து மனதிற்குள் கூறிக் கொண்டுஅவருடைய வீட்டிற்கு சென்றார்.

அங்கே கவிதா இன்னும் சோகத்தில் மூழ்கி இருக்க, “இனிமே அந்த பொண்ணு உனக்கும் விக்ரமுக்கு நடுவுல வரமாட்டா” என்று முத்து கூறவும், கவிதா அவரை ஆச்சரியத்துடன் பார்க்க, “இது கூட புரியாம இல்லமா எனக்கு…. நான் அந்த பொண்ணு கிட்ட பேசிட்டேன் இனிமே அந்த பொண்ணு உங்களை தொந்தரவு பண்ண மாட்டா” என்று முத்து கூற,

“அப்பா ஒரு வேளை நீங்க பேசுனதெல்லாம் விக்ரம் கிட்டையோ இல்ல அத்தை மாமா கிட்ட சொல்லிட்டா என்னப்பா பண்றது??” என்று கவிதா கேட்க, “சொல்ல மாட்டா அப்படியே சொன்னாலும் அவளுக்கும் விக்ரம் என்ன உறவுன்னு கேட்பாங்க தானே எப்படிப் பார்த்தாலும் அவ சொல்ல மாட்டா நீ அதெல்லாம் நினைச்சு குழப்பிக்காத” என்று முத்து ஆறுதல் கூறவும் கவிதா சரி என்றாள்.

“இதெல்லாம் சரி ஆனா விக்ரமுக்கு என்னை பிடிக்கனுமே” என்று கவிதா கூற, “கல்யாணம் பண்ணி வெச்சா எல்லா சரி ஆகும் நீ எதுவும் யோசிக்காத” என்று முத்து கூறவும் சமாதானம் ஆனாள் கவிதா.

சனந்தா வீட்டிற்கு வந்து, “ஆன்ட்டி, பாட்டி எனக்கு சாப்பிட கொடுத்தாங்க அதனால நான் அங்கேயே சாப்பிட்டு வந்துட்டேன் தப்பா எடுத்துக்காதீங்க ஆன்ட்டி….. நான் போய் ரெஸ்ட் எடுக்கிறேன் ரொம்ப டயர்டா இருக்கு” என்று கூறி அவளுடைய அறைக்கு சென்று விட்டாள்.

“என்ன ஆச்சு இவளுக்கு ஏன் இப்படி இருக்கா??” என்று வள்ளி மனதில் நினைத்துக் கொண்டிருக்க, விக்ரமும் வந்தடைந்தான். “இவன் கிட்ட எப்படி கேட்குறது??” என்று வள்ளி யோசிக்க, “சனா எப்பவோ வந்துட்டா…. அப்புறம் தான் நீ வர??” என்று வள்ளி கேட்க, “முத்து மாமாவை பார்த்தேன் பேசிட்டு இருந்தேன் மா அதனால தான்” என்று விக்ரம் கூறினான்.

அனைவரும் உணவருந்தி விட்டு சரவணன் மற்றும் விக்ரம் மாடிக்கு சென்றனர். “என்ன ஆச்சுன்னு தெரியல டா ஏதோ பேசி இருக்கிறாருன்னு மட்டும் தெரியுது எனக்கு…. ஏன்னா அவர் என்கிட்ட கல்யாணத்த பத்தி பேசினாரு இப்போ…. ஏற்கனவே நான் அவர் கிட்டயும் சொல்லி இருக்கேன் திரும்ப இப்ப அவர் பேசுறாருன்னா அப்ப நான் போறதுக்கு முன்னாடி சனந்தா கிட்டயும் ஏதோ பேசி இருக்காருன்னு தானே அர்த்தம்” என்று விக்ரம் புலம்பினான்.

“என்ன பேசினாருன்னு சனா கிட்ட கேட்டா அவளே சொல்லுவா” என்று சரவணன் கூற, “எனக்கு அப்படி தோணல மச்சான்…. ஏன்னா மதியமும் கவிதா வந்தப்போ முகம் மாறிடுச்சு…. அதுக்கப்புறம் சாயந்திரம் கவிதாவும் தான் ஏதோ பேசி இருக்கா…. இப்போ கவிதாவோட அப்பாவும் பேசி இருக்காரு…. அதான் எனக்கு ஏதோ சரியா படல” என்று விக்ரம் கூறவும், “இதுக்கு தான் நீ உன்னுடைய ரிலேஷன்ஷிப்பை கன்ஃபார்ம் பண்ணனும்… அப்படி கன்ஃபார்ம் பண்ணிட்டேன்னா உங்க ரெண்டு பேர் நடுவுல யார் வந்தாலும் ஒன்னும் ஆகாது” என்று சரவணன் கூறினான்.

“அதுக்கு தான் நானும் ட்ரை பண்றேன் டா…. ஆனா, அவ இப்போ கண்டிப்பா இடம் கொடுப்பாளான்னு எனக்கு தெரியல” என்று விக்ரம் கூற, “அவளுக்கும் உன்னை புடிக்கும்னு சொல்ற, உனக்கும் அவளை பிடிக்கும்….. இதுக்கு மேல யார் நடுவுல வந்தா என்ன மச்சான்” என்று சரவணன் முறையிடவும்,

“சரிதான் டா… அவ கிட்ட பேசணும் டா…. ஒரு நாலு நாள் சந்தோஷமா இருந்தேன் அதுக்குள்ள ஏதாவது ஒன்னு வந்துடுது பாரு எனக்கு” என்று விக்ரம் சலித்துக் கொள்ள, “வாழ்க்கைன்னா அப்படித் தான் பல அடிகள் விழ தான் செய்யும் சரியா எதையும் யோசிக்காம தூங்கு…. நாளைக்கு பேசு சனா கிட்ட அவ்வளவு தானே” என்று சரவணன் அறிவுரை கூறி சென்றான்.

கருத்துக்கள் எதுவாயினும் வரவேற்கப்படும்
நன்றிகள் பல
 

Author: Bhavani Varun
Article Title: Chapter 38
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.