குருஜி : நாம் நினைப்பதுதான் நடக்கும் என்றால், அந்த இறைவன் எதற்க்கு?
சந்ரா : என்ன சொல்றீங்க குருஜி? அர்ஜுனுக்கு ஞாபகம் வந்ததுக்கு அப்றோ, கெட்டவனாவானா இல்லையா? நீங்க சொல்றதுக்கு அர்த்தோ என்ன?

குருஜி : இதற்க்கான அர்த்தம் உனக்கு கூடிய விரைவில் புரியும்.
சந்ரா : ஆனா குருஜி, அர்ஜுன் அந்த உதையா மாதிரி கெட்டவனா மாறவே கூடாது. அது மட்டுந்தா என்னோட வேண்டுதல்.
குருஜி : ஏன்?
சந்ரா : என்ன குருஜி?
குருஜி : ஏன் அர்ஜுன் கெட்டவனாவதை நீ விரும்பவில்லை?
சந்ரா : ஏன்னா அர்ஜுன் ரொம்ப நல்லவ குருஜி.
குருஜி : இதற்க்கான பதில் இது அல்ல. அவன் கெட்டவனாவதால் உனக்கு என்ன பிரச்சனை?
சந்ரா : நா உதையாவ ரொம்ப வெறுக்கிறே.

குருஜி : அப்படியென்றால் நீ அர்ஜுனையும் அதேப்போல் வெறுக்க விரும்பவில்லை. அதானே?
சந்ரா : ஆமா குருஜி.
குருஜி : அப்படியென்றால் நீ அர்ஜுனை இப்போது வெறுக்கவில்லை.
சந்ரா : ஆமா குருஜி. நா அர்ஜுன வெறுக்கல. உதையாவதா வெறுக்கிறே.
குருஜி : அப்போது, நீ வெறுக்கின்ற உதையா மீது உனக்கிருக்கும் உணர்வு வெறுப்பு என்றால், நீ வெறுக்காத அர்ஜுன் மீது உனக்கிருக்கும் உணர்வு என்ன?

சந்ரா : இந்த கேள்விக்கு நா எப்பிடி பதில் சொல்றதின்னு தெரியல குருஜி.
குருஜி : இது நான் கேட்க்கவேண்டிய கேள்வி அல்ல. உனக்கு நீயே கேட்டுக்கொள்ள வேண்டிய கேள்வி.
சந்ரா : (அதிர்ச்சியில்) என்ன சொல்றீங்க குருஜி?
குருஜி : ஆம் சந்ரா. இதற்க்கான பதிலை நீ கண்டுப்பிடித்தாலே, உன்னுடைய இந்த மறுபிறவி எதற்க்கு என்று உனக்கே புரியும். இதை நான் கூறவில்லை. அந்த ஆதி சிவன் கூறுகிறான்.
சந்ரா : அந்த பதில்லதா என்னோட மறுப்பிறவிக்கான அர்த்தமே இருக்கா?
குருஜி : ஆம் சந்ரா. என்னால் இவ்வளவுதான் கூறமுடியும். இதற்க்கு பின்னால் உள்ள உண்மை உனக்கு கூடிய விரைவில் புரியும்.
சந்ரா : செரிங்க குருஜி. அப்போ நா கெளம்புறே.
குருஜி : சென்றுவா சந்ரா.
சந்ரா அங்கிருந்து சென்றுவிட்டாள். வீட்டிற்க்கு வரும் வழியில், சந்ரா யோசித்துக்கொண்டே வந்தாள்.

சந்ரா : அர்ஜுன் மேல எனக்கு வெறுப்பு இல்லன்னா, அவமேல எனக்கு என்ன உணர்வு இருக்கு? அத நா கண்டுப்பிடிச்சாதா இந்த மறுப்பிறவியோட அர்த்தமே கெடைக்குன்னு குருஜி சொல்றாரு. எனக்கு அர்ஜுன் மேல ரொம்ப அதிகமா பாசோ இருக்கு. அர்ஜுன் உதையாவா மாறக்கூடாதுன்னு நா ஆசப்படுறே. ஆனா ஏ? எனக்கே தெரியலையே. அர்ஜுனவிட்டு பிரியக்கூடாதுன்னு நெனைக்கிறே. அவ என்ன மறந்தரவே கூடாதின்னு ஆசப்பட்டே. அன்னிக்கு அவ என்ன மறந்துட்டன்னு சொன்னதும் எனக்கு ஏ அவ்ளோ கஷ்ட்டமா இருந்தது? இத பத்தி மீரா அக்காகிட்ட பேசனும். அப்பதா எனக்கு ஒரு தெளிவு கெடைக்கும்.
சந்ரா வீட்டிற்க்கு சென்றாள். அங்கு அர்ஜுன் ஹாலில் சந்ராவுக்காக காத்துக்கொண்டிருந்தான். சந்ரா உள்ளே சென்றாள். அர்ஜுன், சந்ராவை பார்த்ததும்,

அர்ஜுன் : சந்ரா !
சந்ரா : என்ன அர்ஜுன் நீ இங்க நின்னுட்டு இருக்க?
அர்ஜுன் : நாந்தா சொன்னனே ஸ்வீட் ஹார்ட், நா உனக்காக காத்துகிட்டிருக்கேன்னு. அதா வெய்ட் பண்ணி, வெய்ட் பண்ணி பாத்து இங்கயே வந்துட்டே.
சந்ரா : ஏ என்ன விஷியோ?

அர்ஜுன் : என்ன இப்பிடி கேட்டுட்ட? நாந்தா ஆப்பீஸ் போகப்போறதில்லையே, அதா உன்க்கூட எதாவது பேசிட்டே இருக்கலான்னு தோனுச்சு. செரி வா உன்க்கூட பேசுறதுக்கு நெறைய விஷியோ இருக்கு. நாம போய் பேசலா.
சந்ரா : இல்ல அர்ஜுன் நா மீரா அக்காக்கூட பேசிட்டு அப்றமா வர்றே. நீ ரூமுக்கு போ.
அர்ஜுன் : (நகைச்சுவையாக) உங்க அக்கா வந்ததுல இருந்து நீ என்ன கண்டுக்கறதே இல்ல, கொஞ்சோ உன்னோட புருஷ என்னையும் கண்டுக்கலால்ல?
மீரா : அவ என்கிட்ட வந்து அவளோட புருஷன பத்திதான பேசப்போறா?
மீரா அங்கு வந்தாள்.
அர்ஜுன் : என்ன? என்ன பத்தியா?
மீரா : ஆமா அர்ஜுன். எங்கிட்ட வந்தாலே உன்னோட பொன்டாடி உன்ன பத்தியேதா பேசுவா. இப்போ கூட உன்ன பத்தி பேசதா எனக்கூட பேசனுன்னு சொல்றா.
சந்ரா : (மெதுவாக) மீரா அக்கா சும்மா இருங்க.
அர்ஜுன் : (சந்தோஷமான அதிர்ச்சியில்) என்ன பொன்டாட்டி அப்பிடியா? என்ன தவற எல்லார்கிட்டையும் என்ன பத்தி பேசுவ போலயிருக்கே.

சந்ரா : அப்பிடியெல்லா ஒன்னு இல்ல.
மீரா : நம்பாத அர்ஜுன். நம்பாத.
அர்ஜுன் : (சிரித்துக்கொண்டே) செரி செரி நா ரூமுக்கு போறே. நீங்க பேசிட்டு வாங்க சாப்படலா.
மீரா : செரி அர்ஜுன்.
என்று கூறிவிட்டு, அர்ஜுன் அங்கிருந்து செல்லும்போது, மீண்டும் திரும்பி மீராவை பார்த்து,
அர்ஜுன் : மீரா!
மீரா : சொல்லு அர்ஜுன்.

அர்ஜுன் : சந்ராகிட்ட என்ன பத்தி கொஞ்சோ பெருமையா சொல்லு.
மீரா : (சிரித்துக்கொன்டே) செரி அர்ஜுன்.
அர்ஜுன் : (சிரித்துக்கொண்டே) தேங்க் யூ மீரா.
என்று கூறிவிட்டு, அர்ஜுன் சென்றுவிட்டான். சந்ராவும் மீராவும் ரூமுக்குள் சென்று அமர்ந்தனர்.
மீரா : சொல்லு சந்ரா. என்ன விஷியோ?
சந்ரா : இல்ல மீரா அக்கா..... எனக்கு ஒரு சின்ன கொழப்போ, அதா உங்ககிட்ட பேசி தெளிவுப்பண்ணிட்டு போலான்னு வந்தே.
மீரா : என்ன கொழப்போ?
சந்ரா : சொன்னா நீங்க கின்டல் பண்ணக்கூடாது.
மீரா : அப்போ கின்டல் பண்றமாதிரி எதோ சொல்ல போற.
சந்ரா : கின்டல் பண்ண மாட்டன்னு சொல்லுங்க மீரா அக்கா.
மீரா : செரி கின்டல் பண்ண மாட்டே. சொல்லு.
சந்ரா : உங்களுக்கே தெரியும். எனக்கு அர்ஜுன ரொம்ப புடிக்கும். அவன நா ரொம்ப கேர் பண்றே.

மீரா : (சிரித்தபடி) நா சொன்னல்ல? நீ அர்ஜுன பத்திதா பேசப்போறன்னு. சொன்ன மாதிரியே பண்ணீட்டயா?
சந்ரா : சொல்றத கேளுங்க மீராக்கா.
மீரா : செரி சொல்லு.
சந்ரா : அவனுக்கு அடிப்பட்டா, நா ஏ வேதனப்பட்டே? அன்னிக்கு அர்ஜுன் என்ன மறந்திட்டன்னு சொன்னதும், நா ரொம்ப ஒடஞ்சு போய்ட்டே மீராக்கா. இதெல்லா ஏன்னு எனக்கு தெரியல. அதா உங்ககிட்ட இத பத்தி கேக்கலான்னு வந்தே.
மீரா : (மனதிற்க்குள்) இத பத்தி எங்கிட்ட கேட்டா நா அத காதல்னு சொல்லுவன்னு தெரிஞ்சும், நீ என்ன அர்த்தோன்னு தெரியாத மாதிரியே கேக்கிறயா?
சந்ரா : (மனதிற்க்குள்) என்ன? மீரா அக்கா இப்பிடி யோசிக்கிறாங்க? எப்பவும் போல இது காதல்னு சொல்லவேண்டியதுதான? அதுக்கு எதுக்கு இப்பிடி யோசிக்கிறாங்க?
மீரா : அதுக்கு அர்த்தோ....
சந்ரா : அதுக்கு அர்த்தோ?
மீரா : அதுக்கு அர்த்தோ உனக்கு அர்ஜுன புடிக்கும் அவ்ளோதா.
சந்ரா : என்ன மீராக்கா? இப்பிடி சொல்லீட்டீங்க? அவ்ளோதானா?

மீரா : என்ன சந்ரா? எதோ நீ நெனைக்கிறத நா சொல்லனுன்னு நீ எதிர்பாக்குற மாதிரி தெரியுது?
சந்ரா : அதெல்லா இல்ல மீரா அக்கா.
மீரா : அப்றோ என்ன அவ்ளோதானான்னு கேக்குற?
சந்ரா : நீங்க பொய் சொல்றமாதிரி தெரிஞ்சது, அதா அப்பிடி சொன்னே. செரி மீராக்கா, நா கெளம்புறே. (சோகமாக)
சந்ரா எழுந்து, செல்லும்போது,
மீரா : ஏய் சந்ரா ! ஒரு நிமிஷோ.
சந்ரா : சொல்லுங்க மீராக்கா.
மீரா : நீ மனசுல நெனச்சிட்டு இருக்கிற அந்த காரணந்தா இதுக்கு அர்த்தோ.
சந்ரா : நா மனசுல நெனச்சிட்டு இருக்கனா? என்ன?
மீரா : காதல்.
சந்ரா அதிர்ச்சி ஆனாள்.
தொடரும்...

Author: Oviya Blessy
Article Title: CHAPTER-38
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.