Chapter-38

thenaruvitamilnovels

The World of Words
Staff member
Dec 25, 2024
163
0
16
www.amazon.com
அர்ஜுன் தேன்மொழியை மற்றவர்களின் பிரச்சனையில் தலையிடாதே என்று சொல்லி விட்டதால்,

“இவனுக்காக வொர்க் பண்றவங்க மேல இவனுக்கே அக்கறை இல்லனா..

எனக்கு மட்டும் என்ன வந்துச்சு?

இவங்கள பத்தி நான் ஏன் யோசிக்கணும்?” என்று நினைத்து டான்ஸ் பெர்பார்மன்ஸில் தனது கவனத்தை செலுத்த தொடங்கினாள்.

தன் மனதை கல்லாக்கிக் கொண்டு பிரிட்டோவை கீழே உதைத்து தள்ளிய கிளாரா,

“என் கையால அடிபட்டு செத்துறாத.

நான் உன் முகத்தை கூட பார்க்க விரும்பல.

இனிமே எப்பயும் என் முன்னாடி வராத.” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து நகர,

தன் முன்னே கிடந்த chair-களை எல்லாம் தள்ளிவிட்டு தரையில் இருந்து எழுந்த பிரிட்டோ,

ஓடிச் சென்று மீண்டும் அவளை பின்னே இருந்து அணைத்துக் கொண்டான்.

எத்தனை தடவை தான் இவனை அடித்து துரத்துவது? என்று நினைத்து எரிச்சல் அடைந்த கிளாரா,

தனது கைகளாலும் கால்களாலும் அவனை. தொடர்ந்து தாக்க,

“நீ எத்தனை தடவை என்னை அடிச்சாலும், எனக்கு என்ன ஆனாலும், ஏன் நான் செத்து போய் பேயானா கூட..

மறுபடியும் மறுபடியும் உன்ன தேடி வருவேன் பேபி.‌

You are my love.. you are my everything..

உன்ன விட்டுட்டு போக சொன்னா நான் எங்க போவேன்?

உன்ன விட்டா எனக்கு யாருடி இருக்கா?” என்று உடைந்த குரலில் கேட்ட பிரிட்டோ,

இன்று தன் மனதில் இருப்பதை எல்லாம் அவளிடம் கொட்டி தீர்த்துவிட வேண்டும் என்று நினைத்து அவளை அசைய விடாமல் அவள் கைகள் இரண்டையும் நன்றாக பிடித்து லாக் செய்தான்.

அது இன்னும் அவளை கோபப்படுத்த, “என்னை விடுடா விடு.”

என்று சொல்லி தனது ஷூ கால்களால் தொடர்ந்து அவனது கால்களில் எட்டி உதைத்தாள் கிளாரா.

ஏற்கனவே முதல் முறை அவள் விட்ட ஒரு குத்திலேயே அவனது வாய் கிழிந்து ரத்தம் வந்து கொண்டிருக்க,

இன்று அவள் அவனை அடிக்கும் அடியில் என்றும் கனவிலும் கூட அவன் தன்னை பற்றி யோசித்து பார்க்க கூடாது என்று இருந்த கிளாரா

தன் கைகள் அவனிடம் மாட்டிக் கொண்டு இருந்ததால்,

சிறிதும் இரக்கமின்றி தனது கால்களால் அவனை தாக்கிக் கொண்டே இருந்தாள்.

“நீ என்ன பண்ணாலும் நான் உன்னை விட்டு போக மாட்டேன்.

இன்னைக்கு நம்ம ரிலேஷன்ஷிக்கு நீ பதில் சொல்லித்தான் ஆகணும்.

எனக்குன்னு இந்த வேர்ல்ட்ல இருக்கிறது நீ மட்டும் தான்.

என்ன ஆனாலும் நான் உன்ன இழக்க ரெடியா இல்ல கிளாரா.

3 வருஷத்துக்கு முன்னாடி இதே தியேட்டர்ல நீயும் நானும் வேலன்டைன்ஸ் டே எப்படி செலிபிரேட் பண்ணோம்ன்னு உனக்கு ஞாபகம் இல்லையா?

அப்ப நம்ம எவ்ளோ ஹாப்பியா இருந்தோம்...

எனக்கு மறுபடியும் என் கிளாரா வேணும்.

என்ன லவ் பண்ண கிளாராவை மறுபடியும் நான் பாக்கணும்.

எனக்காக என்ன வேணாலும் செய்ய ரெடியா இருந்த, என் உயிரை காப்பாத்துறதுக்கு எனக்காக எத்தனையோ தடவை புல்லட் சாட் வாங்கிருக்க என் கிளாரா எனக்கு வேணும்.‌

நானும் நீயா மனசு மாறி என்கிட்ட வருவேன்னு மூணு வருஷமா பொறுமையா வெயிட் பண்ணி பாத்துட்டேன்.

இதுக்கு மேலயும் நான் அமைதியா இருந்தா என்ன விட ஒரு முட்டாள் வேற எவனும் இருக்க மாட்டான்.

இனிமே ஒரு செகண்ட் கூட என்னால நீ இல்லாம இருக்க முடியாது கிளாரா ப்ளீஸ்..

Try to understand me.

உன் மனசுல நீ தேவை இல்லாம நிறைய யோசிக்கிற..

அது எல்லாத்தையும் விட்டுட்டு நீ உன்னையும் என்னையும் பத்தி மட்டும் யோசி.

நான் இல்லனா நீ இப்படியே திமிரா வைராக்கியமா உனக்கு யாரும் வேண்டாம்னு இருந்துருவ.

ஆனா என்னால அப்படி எல்லாம் நீ இல்லாம இருக்க முடியாது.

you are the beat of my heart..

You are my world.. you are my everything கிளாரா..!!

எனக்கு இவ்ளோ பெரிய பனிஷ்மென்ட் கொடுக்காத..

என்னால தாங்க முடியலடி.” என்று துக்கம் தன் தொண்டையை அடைக்க சொன்ன பிரிட்டோ அவளது பின் கழுத்தில் முகம் புதைத்து அழுதான்.

கிளாராவிற்கு பிரிட்டோவை பல வருடங்களாக தெரியும்.

இதுவரை வந்த எத்தனையோ சண்டைகளில் அவனுடைய நெருங்கிய நண்பர்கள் எல்லாம் மரணித்திருக்கிறார்கள்.

அப்போதும் கூட அவன் அழுது இவள் பார்த்ததில்லை.

ஆனால் இப்போது அவன் தனக்காக அழுவதை அவளால் பொறுத்துக் கொள்ளவே முடியவில்லை.

அவள் கண்களும் அவனுக்காக கலங்கியது.‌

அவன் சொன்னதைப் போலவே அவள் இதயமும் அவனுக்காக துடிக்க தொடங்கியது.

ஆனால் தன் பற்களை கடித்து அவளது உணர்ச்சிகள் அனைத்தையும் கட்டுப்படுத்திய கிளாரா,

“என்னமோ நான் இல்லைனா உனக்கு இந்த உலகத்துல எதுவுமே இல்லாத மாதிரி எதுக்கு பொய் பேசுற?

உனக்கு தான் அந்த தானியா இருக்காளோ..

‌ உன் பர்த்டே அன்னைக்கு நம்ம ரெண்டு பேரும் சேர்ந்து செலிப்ரேட் பண்ணலாம்னு ஆசையா நான் எல்லாமே ரெடி பண்ணி வச்சிட்டு உனக்காக வெயிட் பண்ணிட்டு இருக்கேன்னு தெரிஞ்சும்,

நீ என்னை விட்டுட்டு அவளை பாக்க அவ வீட்டுக்கு போனது,

அங்க உங்களுக்குள்ள நடந்தது எல்லாம் எனக்கு எதுவும் தெரியாதுன்னு நெனச்சியா?

பண்றது எல்லாத்தையும் பண்ணிட்டு இப்ப எதுக்கு நல்லவன் மாதிரி இங்க வந்து நடிக்கிற?

ச்சீ.. உன்னை மாதிரி ஒரு கேவலமானவன நான் பார்த்ததே இல்லை பிரிட்டோ.

உன்ன போய் லவ் பண்ணிட்டனேன்னு நெனச்சா ‌ எனக்கே என்ன பாக்கும்போது அப்படியே அசிங்கமா இருக்கு.”

என்று தனது வார்த்தைகளை அவன் நெஞ்சின் மீது ஆயிரம் ஈட்டிகளாக இறக்கினாள்.‌

அவள் அப்படி சொன்னவுடன் அவனால் தன் கோபத்தை இதற்கு மேலும் கட்டுப்படுத்திக் கொண்டு இருக்க முடியவில்லை.

இனிமேல் இவளிடம் கெஞ்சிக் கொண்டு இருந்தால் எல்லாம் வேலைக்கு ஆகாது.

எதுவாக இருந்தாலும் நேரடியாக பேசிவிட வேண்டும்.‌

இல்லை என்றால் எப்போதும் இவள் தன் வழிக்கு வர மாட்டாள் என்று நினைத்த பிரிட்டோ அவளை தன் பக்கம் திருப்பி அருகில் இருந்த சுவற்றில் வைத்து அழுத்தினான்.

அதை எதிர்பார்த்து இருக்காத கிளாரா திடுக்கிட்டு அவனை விழிகள் விரிய பார்க்க,

தன் மொத்த உடலையும் அவள் மீது போட்டு அவள் கைகள் இரண்டையும் அவளது தலைக்கு மேல் தூக்கி பிடித்து அவளை லாக் செய்தான் அவன்.

பின் தன் வாயில் இருந்த ரத்தத்தை கீழே துப்பி விட்டு அவள் கண்களை நேருக்கு நேராக பார்த்த பிரிட்டோ,

“என் கண்ண பாத்து இப்ப நீ சொன்னது எல்லாத்தையும் மறுபடியும் சொல்லு பார்க்கலாம்..

நான் அன்னைக்கி தானியா கூட படுத்ததை நீ பார்த்தியா?

சொல்லுடி நீ பாத்தியா?” என்று அவன் உச்சசுருதியில் கத்தி கேட்க,

பதில் சொல்ல முடியாமல் தன் பார்வையை அவனை விட்டு விளக்கிய கிளாரா,

“நீங்க அங்க என்னென்ன பண்ணிங்களோ..

எனக்கு என்ன தெரியும்? அதை எல்லாம் என் வாயால நான் சொல்ல விரும்பல.” என்று திக்கித் திணறி சொன்னாள்.

உடனே அவனுக்கு கோபம் வந்துவிட, அவளது இரு கைகளையும் தனது ஒரு கையால் பிடித்துக் கொண்ட பிரிட்டோ,

அவனது மற்றொரு கையால் அவளது தாடயை இறுக்கிப்பிடித்து,

“இப்போ நீ உண்மையை சொல்லித்தான் ஆகணும் கிளாரா.

அன்னைக்கு தானியா அவளுக்கு உடம்பு சரியில்லைன்னு பொய் சொல்லி என்ன அவ வீட்டுக்கு வர வச்சது உனக்கு தெரியாதா?

அவ என்ன ஒன் சைடா லவ் பண்ணது உனக்கு தெரியாதா?

அன்னைக்கு அவ என்ன டெம்ப்ட் பண்ண ட்ரை பண்ணி,

எனக்கு வந்த கோவத்துல நான் அவளை அடிச்சிட்டு அங்க இருந்து கிளம்பி வந்தது,

அதுக்கப்புறம் அவ ஹாஸ்பிடல் போய் அட்மிட் ஆனதுன்னு எதை பத்தியும் உனக்கு தெரியாதுல?” என்று அவன் தன் அடி தொண்டையில் இருந்து சிங்கமாய் கர்ஜிக்க,

அவனுக்கு இப்போது என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் தடுமாறிய கிளாரா,

“நான்தான் எனக்கு எதுவும் தெரியாதுன்னு சொல்றேன்ல..

அப்புறம் ஏன் திரும்பத் திரும்ப என்கிட்ட வந்து கொஸ்டின் பண்ணிட்டு இருக்க?

அங்க என்ன நடந்துச்சுன்றத பத்தி எல்லாம் எனக்கு கவலை இல்லை.

எனக்கு உன்ன புடிக்கல, அவ்ளோ தான்.

அதனால மட்டும்தான் நான் உன் கூட பிரேக்கப் பண்ணிக்கிட்டேன். போதுமா?” என்றவளின் கண்களின் ஓரத்தில் துளிர்த்து கண்ணீர்.‌

அதை தனது ஆள் காட்டி விரலால் துடைத்த பிரிட்டோ கண்கள் குளமாக அவள் கண்களை நேருக்கு நேராக பார்த்து,

“இதுக்கு மேலயும் உன் கிட்ட பேசி போராட எனக்கு ஸ்ட்ரென்த் இல்ல‌ கிளாரா.

நெஜமாவே அன்னைக்கு நான் தானியா கூட ஒண்ணா இருந்ததை பார்த்திருந்தா கூட நீ என் மேல நம்பிக்கை வச்சிருப்பண்ணு எனக்கு தெரியும்.

உன்னால என்னைக்கும் என்ன சந்தேகப்பட முடியாது.‌

அப்புறம் அந்த பொய்யான ரீசனை புடிச்சு வச்சுக்கிட்டு நீ ஏன் என்னை விட்டு தூரமா போகணும்னு நினைக்கிறன்னு நான் சொல்லட்டுமா?” என்று உடைந்த குரலில் கேட்டான்.

“அப்படின்னா இவனுக்கு எல்லா உண்மையும் தெரிஞ்சிருச்சா?

அதுக்கு வாய்ப்பே இல்லையே..!!” என்று நினைத்த கிளாராவின் கண்கள் ஆச்சரியத்தில் விரிய,

அவள் மனதில் இருந்ததை படித்தவனாக “என்ன டி எனக்கு எப்படி உண்மை தெரியும்னு யோசிக்கிறியா?

சீஃப் கோமாவுக்கு போறதுக்கு முன்னாடியே நடந்த எல்லாத்தையும் என்கிட்ட சொல்லிட்டாரு.

நம்ம அப்ப பண்ண மிஷின்ல என்ன காப்பாத்துறதுக்காக என் மேல பட இருந்த புல்லட்ஸ் உன் stomach and chest areaல பட்டதுனால..

இனிமே உன்னால ஒரு குழந்தைக்கு அம்மாவாக முடியாதுன்னு டாக்டர்ஸ் சொல்லிட்டாங்க.

அண்ட் உன் செஸ்ட்ல பட்ட புல்லட் உன் ஹார்டை உரசினதுனால அது பலவீனம் ஆயிடுச்சுன்னு சொல்லி,

இனிமே நீ எத்தனை வருஷம் உயிரோட இருப்பேன்னு யாராலையும் கணிச்சு சொல்ல முடியாதுன்னு சொல்லிட்டாங்க..

சோ மேடம் தியாகியாக முடிவு பண்ணி நீ என்ன விட்டுட்டு போயிட்டா, நான் வேற எவ கூடயாவது மேரேஜ் பண்ணி செட்டில் ஆயிடுவேன்னு நம்பி தானே இவ்ளோ டிராமா பண்றீங்க..!!

இங்க பாரு.. இப்ப நான் சொல்றத நல்லா கேட்டுக்கோ...

நீ நினைக்கிறது எதுவும் எப்பவும் நடக்காது.

நான் வாழ்ந்தாலும் செத்தாலும் அது உன் கூட தான்.

என்ன காப்பாத்துறதுக்கு நீ கிட்ட தட்ட உன் உயிரையே குடுத்திருக்க.

இனிமே உன்னால இன்னொரு உயிரையும் உருவாக்க முடியாதுன்னு ஆயிடுச்சு.

எது எப்படி இருந்தாலும், you are totally mine.. புரிஞ்சுதா உனக்கு?

நீ உயிரோட இருக்கிற கடைசி செகண்ட் வரைக்கும் நீ என் கூட தான் இருக்கணும்.

நம்ம லைஃப்ல எப்ப டி ரிஸ்க் இல்லாம இருந்திருக்கு?

நம்ம சீஃப்க்கே மோசமா எவ்வளவோ நடந்து இருக்கு..

நம்ம ரெண்டு பேரும் சாகறதுக்கு எவ்வளவு நேரம் ஆகும்?

இதுல இருக்கிற வரைக்கும் சந்தோஷமா வாழ்ந்துட்டு போகலாம்னு யோசிக்கிறதை விட்டுட்டு ஏண்டி இப்படி லூசுத்தனமா யோசிக்கிற?

இதனால நீயும் கஷ்டப்பட்டு, உன்ன நெனச்சு நானும் கஷ்டப்பட்டு...

கடைசி வரைக்கும் நம்ம ரெண்டு பேரும் சேர்ந்து சந்தோஷமா நிம்மதியா ஒரு நாள் கூட வாழாம செத்துப் போயிடனுமா?

அதுதான் வேணுமா உனக்கு?

சொல்லுடி.. வாயை திறந்து பேசு..

என்னை எப்பயும் சந்தோஷமா வாழவே விடக்கூடாதுன்னு டிசைட் பண்ணிட்டியா நீ?”

என்று சோகம் கலந்த கோபத்துடன் கண்களில் கண்ணீர் ததும்ப அவளிடம் கேட்டான் பிரிட்டோ.

அவனுக்காக தன் உயிரையே துட்ச்சமென நினைத்தவள் அவள்..

அவன் நன்றாக வேறு ஒரு பெண்ணுடன் எப்போதும் ஒரு நிறைவான வாழ்க்கையை வாழ வேண்டும் என்பதற்காக,

அவளது ஆழமான காதலை உயிருடன் தனக்குள் கொன்று இத்தனை நாட்களாக பொய்யான கோபத்துடன் அவனிடம் நடித்து தன்னையும் ஏமாற்றிக் கொண்டு அவனை விட்டு விலகியே நின்றாள்.

தன் மனதை கல்லாக்கி கொண்டு அவள் செய்த அனைத்தும் அவன் மீது இருந்த காதலால் மட்டுமே.

அதனால் இப்போது அவனே அவள் இல்லாமல் தன்னால் எப்போதும் சந்தோஷமாக இருக்க முடியாது என்று அனைத்து உண்மையும் தெரிந்து கொண்டு சொன்ன பிறகு,

அவளால் அதற்கு மேலும் நடித்துக் கொண்டு இருக்க முடியவில்லை.

உடனே கண்களில் கண்ணீருடன் அவனை இறுக்கமாக அணைத்துக் கொண்ட கிளாரா “ஐ அம் சாரி பிரிட்டோ.

எனக்கு என்ன பண்றதுனே தெரியல.

திடீர்னு நான் செத்துட்டா நான் இல்லாம நீ கஷ்டப்படக் கூடாதுன்னு நினைச்சுத்தான் இப்படி பண்ணேன்.

உனக்கு என் மேல கோபம் வர்ற மாதிரி நடந்துக்கிட்டா எப்படியும் நீ என்ன மறந்துட்டு உன்னை சின்சியரா லவ் பண்ற தானியாவை ஏத்துக்குவேன்னு நினைச்சேன்.

பட் இத்தனை வருஷம் ஆகியும், நீ அவளை திரும்பி கூட பார்க்கல.

‌ நீ சொன்ன மாதிரி உன்ன பத்தி எனக்கு நல்லா தெரிஞ்சி இருந்தும்,

நீ நல்லா இருக்கணும்னு நெனச்சு நானே உன்னை ரொம்ப கஷ்டப் படுத்திட்டேன்.

தயவுசெஞ்சு என்ன மன்னிச்சிடு.” என்றாள்.

அப்போது அவள் முகத்தை தன் கைகளில் ஏந்தி காதலுடன் அவளைப் பார்த்த பிரிட்டோ,

“போதும் இதுக்கு மேல எதுவும் பேசாத.” என்று சொல்லி தனது இதழ்களால் அவளது இதழ்களை சிறை செய்தான்.

மூன்று வருடங்களுக்கு பிறகு கிடைத்த அவனது முத்தம் அவள் மனதில் இருந்த அத்தனை வலிகளையும் ஒரே நொடியில் காணாமல் போக செய்துவிட,

தன் மூச்சு இருக்கும் வரை அவள் வாழ்வு இவனோடு தான் என்று நினைத்த கிளாரா அந்த முத்தத்தின் ஆழத்தை கூட்டினாள்.‌

ஓரக்கண்ணால் அவர்களைப் பார்த்து தனக்குள் சிரித்துக் கொண்ட அர்ஜுன்,

“பரவால்ல இவங்க டிராமாவுக்கு இன்னிக்கு ஒரு எண்டு வந்துருச்சு.” என்று நினைத்தவன்,

தேன்மொழியின் தோள்களில் தட்டி “அங்க பாரு!” என்றான்.

அங்கே பிரிட்டோவும், கிளாராவும் உணர்ச்சிகள் பொங்க ஒருவரை ஒருவர் பாம்பைப் போல இறுக்கமாக பின்னிக்கொண்டு ஆழமாக முத்தமிட்டு கொண்டிருந்தார்கள்.

அதை பார்த்து ஷாக்கான தேன்மொழி “இப்பதான் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி அவங்க ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் அடிச்சுகிட்டு அப்படி சண்டை போட்டுட்டு இருந்தாங்க..

அதுக்குள்ள சமாதானமாகி இப்படி பண்ணிட்டு இருக்காங்க!

இங்க இருக்கிற யாரையும் நம்மளால புரிஞ்சுக்க முடியல.”

என்று நினைத்து உடனே அர்ஜுன் பக்கம் திரும்பிக் கொண்டாள்.

அந்த ஹாட்டான காட்சியை பார்க்கவே அவளுக்கு ஒரே வெட்கம் வெட்கமாக வந்தது.

கிண்டலாக அவளைப் பார்த்து புன்னகைத்த அர்ஜுன்,

“என்ன நீ அவங்க கிஸ் பண்றதை பாத்ததுக்கே இப்படி வெட்கப்படுற..

நீயும் நானும் இப்படி எல்லாம் பண்ணா.. அப்படியே வெட்கப்பட்டு தலை குனிஞ்சு பூமிக்குள்ள போய் பதஞ்சுக்குவ போல..!!” என்றான்.

அவன் சொன்
னதைக் கேட்கவே அவளது வெட்கம் கூடிவிட,

அதை மறைக்க உடனே அவன் தோள்களில் விளையாட்டாக அடித்த தேன்மொழி “நம்ம எதுக்கு அப்படி எல்லாம் பண்ணனும்?

அதெல்லாம் ஒன்னும் தேவையில்லை.

எனக்கு இப்படி பண்றதெல்லாம் பிடிக்காது.” என்று சொல்லிவிட்டு தன் முகத்தை வேறு புறமாக திருப்பிக் கொண்டாள்.

- மீண்டும் வருவாள் 💕
 

Author: thenaruvitamilnovels
Article Title: Chapter-38
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.