Chapter-37

thenaruvitamilnovels

The World of Words
Staff member
Dec 25, 2024
163
0
16
www.amazon.com
முதன் முறையாக ரஷ்யாவிற்கு செல்பவர்கள் தங்களது காதலியுடனோ, காதலனுடனோ, தங்களது ரொமான்டிக் நைட்டை ‌ செலவிடுவதற்காக தவறாமல் செல்லும் இடம் மாஸ்கோவில் உள்ள போல்ஷோய் தியேட்டர்.‌

முதலில் தேன்மொழியுடன் அங்கே தான் சென்றான் அர்ஜுன்.‌

அந்த தியேட்டர் அதன் தனித்துவமான கட்டிட கலைக்கும்,

அங்கே நடக்கும் உலக புகழ்பெற்ற டான்ஸர்களின் பாலே மற்றும் ஓபரா நிகழ்ச்சியைகாக மிகவும் ஃபேமஸானது.

அர்ஜுனை பார்த்தவுடன் அவனையும் அவனுடன் வந்தவர்களையும் வரவேற்பதற்காக அந்த தியேட்டரின் மேனேஜர் அங்கே வந்தார்.

அவர்கள் உள்ளே செல்லும் வரை ‌ ஆயிரக்கணக்கான மக்கள் கூடி இருந்த அந்த இடம்,

அவர்கள் நுழைத்தவுடன் ஒரே நொடியில் நீ சத்தம் ஆகிவிட்டது.

அங்கே இருந்த பார்வையாளர்கள் அனைவரும் அந்த இடத்தை விட்டு அந்த தியேட்டரின் ஊழியர்களால் வெளியேற்றப்பட்டார்கள்.

ஏனென்றால் ‌ அர்ஜுன் தேன் மொழியை முதலில் ஒரு ரெஸ்டாரண்டிற்கு அழைத்து சென்று அவளுடன் சேர்ந்து டின்னர் சாப்பிடலாம் என்று தான் திட்டமிட்டு இருந்தான்.

அதற்காகத்தான் அவளை அழைத்துக் கொண்டு இங்கே வந்திருந்தான்.‌

அந்த தியேட்டரின் மேல் மாடியில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டே அங்கே நடக்கும் இசை நிகழ்ச்சிகளை பார்த்து ரசிக்க இரு கண்கள் போதாது.

ஆனால் இங்கே வரும் வழியில் அவனது பிளானில் ஒரு சேஞ்ச் ஏற்பட்டது.

அவன் முதன் முதலில் தேன்மொழியுடன் இப்போது வெளியில் வந்திருப்பதால்,

அவளுக்காக ஸ்பெஷலாக ஏதேனும் செய்ய வேண்டும் என்று நினைத்த அர்ஜுன் வரும் வழியில் தான் ஆகாஷிற்கு மெசேஜ் செய்து,

“இந்த தியேட்டர் ஃபுல்லா எங்களைத் தவிர வேற யாரும் இருக்கக் கூடாது.

கூட்டத்தோட கூட்டமா நானும் என் வைஃப் கூட இங்க வந்துட்டு போனா,

‌ இங்க வந்திருக்கிற மத்தவங்களுக்கும் எனக்கும் என்ன வித்தியாசம் இருக்கப்போகுது?

சோ இன்னும் 10 மினிட்ஸ்ல நாங்க அங்க ரீச் ஆயிடுவோம்.

அதுக்குள்ள நீ என்ன பண்ணுவியோ ஏது பண்ணுவியோ எனக்கு தெரியாது.

அந்த தியேட்டர் முழுக்கவும் இன்னைக்கு நைட் ஃபுல்லா புக் பண்ணிடு.”

என்று ஒரு அவசர கட்டளையை பிறப்பித்தான்.

அங்கே ஒரு டிக்கெட் வாங்க வேண்டும் என்றாலே எத்தனை டாலர் செலவாகுமோ..

இவன் என்னவோ இன்று இரவு முழுவதும் முழு தியேட்டரையும் அவளுக்காக புக் செய்யச் சொல்கிறானே..

என்று நினைத்து ஆச்சரியப்பட்ட ஆகாஷிற்கு,

“இந்த அண்ணனுக்கு பைத்தியம் தான் புடிச்சிருக்கு.

தேன்மொழி அண்ணிக்காக ஏதாவது செய்யணும்னு ஆசைப்பட்டா,

அவர் தாராளமா செய்யட்டும். ஆனா அதுக்காக இதெல்லாம் ஓவரா இல்லையா?

அங்க எத்தனை பேர் ரொம்ப நாளைக்கு முன்னாடியே சீட் புக் பண்ணி ஆசை ஆசையா வந்திருப்பாங்க..

இப்ப இந்த தியேட்டரை லாஸ்ட் மினிட்ல புக் பண்றதுக்கு ஆகுற செலவு மட்டும் இல்லாம,

ஆல்ரெடி அங்க இருக்கிறவங்க எல்லாருக்கும் சேர்த்து அவங்கள லாஸ்ட் மினிட்ல வெளிய அனுப்புறதுக்காக காம்பன்ஷேசன் அமௌன்ட் வேற குடுக்கணும்.

ஒரு மனுஷனுக்கு லவ் வந்தாலே அவன் எப்படியாப்பட்டவனா இருந்தாலும் கிறுக்கனாகி தான் சுத்தணும் போல..!!”

என்று புலம்பிவிட்டு அவன் சொன்னதை செய்தான்.

அவர்கள் இருவரும் உள்ளே வந்தவுடன் அனைவரும் வெளியே செல்வதை கவனித்த தேன்மொழி,

“என்ன ஆச்சு? ஏன் எல்லாரும் வெளிய போறாங்க?

இங்க சுனாமி நிலநடுக்கம் மாதிரி ஏதாவது நேச்சுரல் டிசாஸ்டர் வரப்போகுதா?

அப்படி ஏதாவது அலர்ட் வந்து இருந்தா அவங்க எல்லாருக்கும் கேட்கிற மாதிரி தானே அதை பத்தி அனௌன்ஸ் பண்ணனும்..

அவசர அவசரமா guardsஐ வச்சு ஏன் இங்க இருக்கிறவங்க எல்லாரையும் சைடு எக்ஸிட் வழியா வெளிய அனுப்புறாங்க?” என்று பதட்டத்துடன் கேட்க,

அவள் சொன்னதைக் கேட்டு கிண்டலாக சிரித்த கிளாரா,

“இங்க எந்த நேச்சுரல் டிஸாஸ்டர்ரும் வரல பயப்படாதீங்க மேடம்.

சீஃப் தான் ‌ உங்க கூட அவர் இங்க பர்சனலா டைம் ஸ்பென்ட் பண்ணும்போது உங்களை யாரும் டிஸ்டர்ப் பண்ண கூடாதுன்னு நினைச்சு,

இந்த மொத்த தியேட்டரையும் உங்களுக்காக இன்னைக்கு நைட் ஃபுல்லா புக் பண்ணி இருக்காரு.

இங்க எக்ஸ்ப்ளோர் பண்ணி பார்க்க நிறைய இருக்கு.

பொறுமையா இங்கே நடக்கிற ஷோ எல்லாத்தையும் பாத்துட்டு,

நீங்க இந்த இடம் முழுக்கையும் சுத்தி பாத்தீங்கன்னா விடிஞ்சிடும்.‌‌

அப்புறமா நம்ம வீட்டுக்கு போலாம்.” என்று சொல்ல,

வட்ட வடிவில் தன்னை சுற்றி இருந்த தியேட்டரை ஒரு முறை சுற்றிப் பார்த்த தேன்மொழிக்கு,

“இவ்ளோ பெரிய தியேட்டர இவன் எனக்காக புக் பண்ணிருக்கானா?

கண்டிப்பா இங்க ஒரு டிக்கெட் வாங்கணும்னாலே அதுக்கே இந்தியன் மணில கால்குலேட் பண்ணா ஆயிரக்கணக்கில ஆகும்.

அப்ப இங்க இருக்கிற இத்தனை சீட்டையும் புக் பண்ணனும்னா, கோடிக்கணக்குல ஆகியிருக்குமே!

இப்ப எனக்காக எதுக்கு இவன் இதெல்லாம் பண்ணிட்டு இருக்கான்?” என்று நினைக்கும் போதே அவளுக்கு தலையே சுற்றுவதை போல இருந்தது.

‌ பல அடுக்குகள் கொண்ட அந்த தியேட்டரில் ஆயிரக்கணக்கான சீட்டுகள் இருந்தது.

அதை உற்றுப் பார்த்த தேன்மொழி, “இதெல்லாம் உங்களுக்கே கொஞ்சம் ஓவரா இல்லையா?

நீங்க பெரிய பணக்காரருன்னு எனக்கு நல்லா தெரியும்.

அத எனக்கு ப்ரூவ் பண்றதுக்காக நீங்க இவ்ளோ பண்ணனும்னு அவசியம் இல்ல.” என்று கோபமாகவே கேட்க,

“இதெல்லாம் எனக்கு ஒன்னும் ஓவரா தெரியல.

ஆக்சுவலி ‌ உன்னை ஃபர்ஸ்ட் டைம் இங்க கூட்டிட்டு வர்றதுனால இந்த மொமென்டை மெமோரப்பில் ஆக்கணும்னு நினைச்சு,

முதல்ல நான் இந்த தியேட்டரை வாங்கலாம்ன்னு தான் நினைச்சேன்.

பட் அதுக்கான ப்ரோசீஜர்ஸ் எல்லாத்தையும் முடிச்சு பிராசஸ் பண்றதுக்கு டைம் ஆகும்.

சோ முதல்ல உன்ன இங்க கூட்டிட்டு வந்து இந்த இடம் உனக்கு புடிச்சிருக்கான்னு பார்த்துட்டு,

அப்புறமா வாங்கிக்கலாமா வேண்டாமான்னு உன் கிட்டயே கேட்டு டிசைட் பண்ணிக்கலாம்னு விட்டுட்டேன்.

இன்னும் கொஞ்ச நேரத்துல ஷோ ஸ்டார்ட் ஆயிடும்.

அது முடிஞ்சதுக்கு அப்புறம் கிளாரா சொன்ன மாதிரி நீ இந்த இடத்தை நல்லா சுத்தி பாரு.

பக்கத்துல இன்னும் நிறைய பிளேசஸ் இருக்கு.‌

இன்னிக்கி நம்ம அந்த எல்லா ப்ளேஸுக்கும் போய் சுத்தி பாக்கலாம்

உனக்கு எந்த இடம் பிடிச்சிருக்குன்னு சொல்றியோ, அதை உடனே வாங்கி நான் உன் பேர்ல ரிஜிஸ்டர் பண்ணி குடுத்துடுறேன்.

இது நான் உனக்கு கொடுக்கிற மேரேஜ் கிஃப்டா வச்சுக்கோ!”

என்று சொல்லிவிட்டு அவளைப் பார்த்து அழகாக புன்னகைத்தான் அர்ஜுன்.

அவனது சீரியஸான முகத்தை பார்க்கும்போது கண்டிப்பாக அவன் தன்னிடம் பொய் சொல்லி விளையாடுவதாக அவளுக்கு தோன்றவில்லை.

அப்படி என்றால் நிஜமாகவே அவள் என்ன கேட்டாலும் அதை அவன் வாங்கி கொடுக்க தயாராக இருக்கிறானா?

என்று நினைத்து வாயடைத்துப் போன தேன்மொழி,

“இதையெல்லாம் எதுக்கு பண்றீங்க?” என்று கேட்க,

அவள் தோள்களில் கை போட்ட அர்ஜூன் “எல்லாம் உனக்காக தான் பண்றேன்.

என் ஓய்ஃபை சந்தோஷப்படுத்துவதற்காக இந்த மாதிரி நான் தானே ஏதாவது பண்ணனும்..!!” என்றான் அவன்.

“இது எல்லாம் என்ன சந்தோஷப்படுத்தும்னு நான் உங்க கிட்ட சொல்லவே இல்லையே..”

என்று அப்போதும் அவள் கடுப்படிக்க,

“அப்ப உன்னை எது சந்தோஷப்படுத்தும்னு சொல்லு.

அதையே செஞ்சிடலாம்! நீ எதை ஆசைப்பட்டாலும்,

உன் புருஷனா அத நிறைவேத்தி வைக்கிறது என் கடமை பேபி!”

என்ற அர்ஜூன் அவள் கன்னத்தைக் கிள்ளி முத்தம் வைத்தான்.

அப்போது தேன்மொழி அவளிடம் ஏதோ சொல்வதற்காக தன் வாயை திறக்க,

அங்கே ஸ்டேஜுல் டான்ஸ் பெர்பார்மன்ஸ் தொடங்கியது.

அதனால் திடீரென வந்த மியூசிக்கின் ஒலி அந்த அரங்கம் முழுவதும் எதிரொலிக்க,

அவனிடம் தான் சொல்ல வந்ததை மறந்துவிட்டு ஸ்டேஜில் தோன்றிய டான்ஸர்களை பார்க்கத் தொடங்கினாள் தேன்மொழி.

அவர்களை எல்லாம் பார்க்க அந்தக் காட்சி அவளுக்கு ஹாலிவுட் படத்தில் வருவதை போல இருக்க,

அவள் அனைவரையும் வியந்து பார்த்தாள்.

அவளை அழைத்து சென்று தங்களுக்கான இருக்கையில் அமர்ந்தான் அர்ஜுன்.

அப்போது அவர்களுக்கு தனிமையை கொடுக்க நினைத்து இரண்டு வரிசை தள்ளி சென்று கிளாரா அமர்ந்துக் கொள்ள,

அவர்களது பாதுகாப்பிற்காக வந்திருந்த பாடிகார்டுகள் அனைவரும் கைகளில் துப்பாக்கியுடன் ஓரமாக நின்று இருந்தார்கள்.

அனைத்தும் சரியாக இருக்கிறதா என்று ஒரு முறை சோதித்துப் பார்த்துவிட்டு வந்த பிரிட்டோ,

அந்த தியேட்டரின் ஜெனரல் மேனேஜரிடம் ‌ அர்ஜுன் அந்த இடத்தை விட்டு வெளியேறும் வரை யாரையும் உள்ளே அனுமதிக்க கூடாது என்று கட்டளையிட்டான்.

அதோடு நிற்காமல் தங்களது ஆட்களையும் மெயின் கேட்டின் முன்னே அணிவகுத்து நிற்க வைத்துவிட்டு,

எல்லாம் அவனது கண்ட்ரோலில் இருக்கிறது என்று உறுதி செய்த பிறகு உள்ளே வந்தான்.

அர்ஜுனும், தேன்மொழியும் ஜோடியாக ஒரு பக்கம் அமர்ந்திருக்க,

ஏதோ ஒரு மூலையில் யார் கண்ணிலும் படாமல் அமர்ந்திருந்தாள் கிளாரா.

அவளை கவனித்த பிரிட்டோ உடனே அவள் அருகில் சென்று அமர,

“நான் எங்க போனாலும் அங்க வந்து என்ன டிஸ்டர்ப் பண்றத தான் நீ வேலையா வச்சிருக்கியா?

நீ இப்படியே பண்ணிட்டு இருந்தா நான் உன்ன பத்தி சீஃப் கிட்ட கம்ப்ளைன்ட் பண்ண வேண்டியது இருக்கும்.”

என்று கோபமாக சொல்லிவிட்டு ‌ அங்கிருந்து எழுந்து தூரமாக நடந்து சென்றாள்.

அவளை பின் தொடர்ந்து வேகமாக சென்று அவள் கையைப் பிடித்து தடுத்த பிரிட்டோ,

“நான் உன்ன லவ் பண்றது தப்புன்னு சீஃப் நெனச்சாருன்னா இப்பவே அவரைக் கூப்பிட்டு எனக்கு எந்த பனிஷ்மென்ட் வேணாலும் குடுக்க சொல்லு.

நான் அக்செப்ட் பண்ணிக்கிறேன்.

உனக்கு என் மூஞ்சிய பார்க்கவே பிடிக்கலைன்னா கூட பரவால்ல..

இந்தா..

இந்த பிஸ்டலை வச்சு இங்கயே என்ன சுட்டு கொன்னுடு.

நான் நிம்மதியா செத்தாவது போறேன்.

நான் உன்னை எவ்வளவு லவ் பண்றேன்னு உனக்கு நல்லா தெரியும் கிளியரா.

அது தெரிஞ்சும் ஏன் என்ன ஒவ்வொரு செகண்டும் இப்படி டார்ச்சர் பண்ற?

நமக்குள்ள எல்லா நல்லா தானேடி போயிட்டு இருந்துச்சு..

நான் பண்ண அந்த ஒரு சின்ன விஷயத்துக்காகவா? நீ இந்த அளவுக்கு என் மேல கோவப்படுற?”

என்று துக்கம் தொண்டையை அடைக்க கேட்டவன், அவனிடம் இருந்த துப்பாக்கியை எடுத்து கிளாராவின் கைகளில் திணித்தான்.

அவன் கொடுத்த துப்பாக்கியை தூக்கி தூர எறிந்த கிளாரா,

“ஏற்கனவே இந்த கையில நிறைய ரத்தக்கரை படிஞ்சிருக்கு.

அப்போ நான் செஞ்ச கொலை எல்லாத்தையும் கூட கடமைக்காக செஞ்சதா வச்சுக்கலாம்.

இப்ப உன்ன கொன்னுட்டு அந்த பாவத்தை நான் எங்க போய் தொலைக்கிறது?

நீ பண்ணது உனக்கு வேணா சின்ன தப்பா இருக்கலாம்.‌

ஆனா என்னால அதை அப்படி எடுத்துக்க முடியாது பிரிட்டோ.

மறுபடியும் என்னால உன்னை எப்பவும் லவ் பண்ண முடியாது.

நம்ம ரெண்டு பேரும் ஒரே இடத்துல வொர்க் பண்றோம்.

சோ நீ ஜஸ்ட் எனக்கு colleague மட்டும் தான்.

அதை தாண்டி நமக்குள்ள எந்த ரிலேஷன்ஷிப்பும் இல்ல.

உனக்கு புரியுதா?

இன்னொரு தடவை நீ இப்படி ஃபீலிங்ஸ் மண்ணாங்கட்டின்னு என் முன்னாடி பேசிட்டு வந்து நின்னினா,

உன்னை எதுவும் பண்ண மாட்டேன்.

உன்னோட இந்த மெண்டல் டார்ச்சரை எல்லாம் அனுபவிக்கிறதுக்கு நான் உயிரோட இருக்க மாட்டேன்.

நான் உயிரோட இருக்கணும்னு உனக்கு தோணுச்சுன்னா,

Just stay away from me!” என்று ஆத்திரம் பொங்க கண்கள் சிவக்க சொன்னவள்,

வேகவேகமாக அந்த இடத்தை விட்டு நடந்து செல்ல தொடங்கினாள்.

இந்த பக்கம் திரும்பியவுடன் அவள் கண்கள் குளமாகிவிட,

வாடிய முகத்துடன் இருந்த கிளாரா “ஐ அம் சாரி பிரிட்டோ” என்று முனுமுனுத்தபடி அவனை விட்டு தூரமாக சென்று கொண்டு இருந்தாள்‌.

ஆனால் என்ன ஆனாலும் இன்று அவளை இழந்து விடக்கூடாது என்று நினைத்த பிரிட்டோ,

ஓடிச் சென்று அவளைப் பின்னே இருந்து அணைத்துக் கொள்ள,

அந்த அனைப்பால் திடுக்கிட்டு நின்ற கிளாரா அவனுக்கு தெரியாமல் தன் கண்ணீரை துடைத்துக் கொண்டு,

தனது முழங்கையால் அவனது முகத்தில் ஒரு பன்ச் விட்டு அவன் பக்கம் திரும்பி,

“நான் எத்தன தடவ சொன்னாலும் உனக்கு அறிவே வராதா?

என்னை டிஸ்டர்ப் பண்ணாதன்னு சொன்னா கேக்க மாட்டியா?”

என்று தனது அடித் தொண்டையில் இருந்து கத்திய கிளாரா,

அவனது வயிற்றில் எட்டி உதைத்து அவனை கீழே தள்ளினாள்.

பிரிட்டோ இரண்டு சார்களை தள்ளிக் கொண்டு கீழே சென்று விழ,

அந்த சத்தம் கேட்டு அவர்கள் பக்கம் திரும்பி பார்த்த தேன்மொழி பதட்டமான குரலில்,

“அவங்க ரெண்டு பேரும் சண்டை போட்டுக்குறாங்க.

நீங்க என்னன்னு போய் பாருங்க.

அவங்களுக்குள்ள ஏதோ ப்ராப்ளம்னு நினைக்கிறேன்.

அது என்னன்னு கேட்டு நீங்க சரி பண்ண ட்ரை பண்ணலாம் இல்ல?” என்று கேட்க,

அவள் முகத்தை தன் ஒற்றை கையால் ஸ்டேஜ் பக்கம் திருப்பிய அர்ஜுன்,

“அது அவங்களோட பிராப்ளம்.

அத அவங்களே பேசி சரி பண்ணிட்டாங்களோ,

இல்லை ஒருதர ஒருத்தர் அடிச்சு தூக்கி போட்டு மிதிச்சு சண்டை போட்டு சரி பண்ணிப்பாங்களோ..

அது அவங்க விருப்பம். இதுக்குள்ள நம்ம interfere ஆகுறது நல்லா இருக்காது.

நீ அவங்களை கண்டுக்காத.” என்றான்.

அதனால் அவனை முறைத்து பார்த்த தேன்மொழி,

“அவங்க ரெண்டு பேரும் இவனுக்காக என்ன வேணாலும் செய்ய ரெடியா இருக்காங்க..

ஆனா இவன் என்ன இப்படி இருக்கான்?

ஏன் அவங்களுக்காக ஏதாவது செஞ்சா குறைஞ்சு போயிடுவானா இவன்?

சரியான செல்ஃபிஷ்!
இவனுக்கெல்லாம் இதயம்னு ஒன்னு இருக்கா இல்லையா என்று தெரியவில்லை..

Heartless fellow!” என்று நினைத்தாள்.

-மீண்டும் வருவாள் 💕
 

Author: thenaruvitamilnovels
Article Title: Chapter-37
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.